ராசா ராசா என்று ஏகப்பட்ட படங்கள் வந்த நேரம். அதில் ஒன்று ராசாவே உன்னை நம்பி.. மறைமுகமாகா இளையராஜாவைக் கொண்டாடி ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவரும் குறை வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நிஜமாகவே அப்போது ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லைதான்!
விஜயகாந்த், ராமராஜன், மோகன், சரவணன்,போன்ற பல நடிகர்களுக்கு இளையராஜா வரப்பிரசாதம். அவர்கள் படங்களில் இளையராஜா இசை தாலாட்டும். அதிகாலை கிளம்பி வெளியூருக்கு ஆபீஸ் போகவேண்டிய எனக்கு அந்த பயண நேரங்களில் அழகான, தரமான ஸ்பீக்கர்களில் அளவான சவுண்டுடன் ஜெயவிலாஸிலும் விவிஆரிலும் போட இந்தப் பாடல்கள் மிக உதவின!
இதுவரை நான் பகிர்ந்த பாடல்களில் அதிகம் பகிராதது மனோ பாடிய பாடல்கள்தான். மிகவும் சொற்பமாகவே பகிர்ந்திருப்பேன். ஆனால் ஏராளமான நல்ல பாடல்களை பாடி இருக்கிறார் மனோ என்னும் நாகூர் பாபு.. ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார் இந்த ஏழைகளின் எஸ் பி பாலசுப்ரமணியம். நடிகராகவும் பரிமளித்திருக்கிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் தோன்றி இருக்கிறார். முத்து படம் முதல் தெலுங்கில் ரஜினிக்கு டப்பிங் குரல் இவர்தான். ஆல் இந்தியா ரேடியோவில் இசைக்கலைஞரான அப்பாவுக்கும், பாடி, நடிக்கும் அம்மாவுக்கும் பிறந்த மனோ பாடுவதில் வியப்பே இல்லை. இவர் நெதுனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் இசை பயின்றவர் என்பது எனக்கும் செய்தி. அதே போல நான் நினைத்திருந்ததற்கு மாறாக இவரது முதல் படப்பாடல் எங்க ஊரு பாட்டுக்காரன் அல்ல, பூவிழி வாசலிலே என்பதும், அதற்குப் பின் வேலைக்காரன் படத்திலும் பாடிய பாடல்தான் இதற்கு முந்தையது என்றும் அறிந்தேன்.
ராசாவே உன்னை நம்பி படம் ராமராஜன், ரேகா, ராதாரவி நடித்தது. இரண்டு மனோ பாடல்கள் இதில் பிரபலம். இரண்டுமே இனிமை. டி கே போஸ் இயக்கத்தில் 1988 ஆம் வருடம் வெளியான படம். 100 நாட்கள் ஓடியதாம்.
முதலாவது பாடல் சீதைக்கொரு ராவணன்தான் தீக்குளிக்க தேதி வச்சான் என்னும் கங்கை அமரன் பாடல். சீதை தீக்குளிக்க ராவணன் தேதி வைத்தானா? ஆனாலும் மனைவிமேல் சந்தேகப்படும் கணவனைப்பற்றி தம்பி பாடும் பாடல் நன்றாகவே இருக்கும். குறிப்பாக "சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம் சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்" வரியும், "கையாள அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா... சொல்லால் அடிச்ச்சுப்புட்டே தொடச்சு இது லேசா" வரிகளும்...
சீதைக்கொரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வெச்சான்
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வெச்சான்
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்
அன்பாலே அடிச்ச அடி எப்போதும் வலித்ததில்லை
இப்போதும் பொறந்தவலி என்னான்னு தெரியவில்லை
பூ மேலே முள்ளு பட்டா போய் உரைக்க வழக்குமில்ல
எம்மேலே குத்தமில்ல இந்தப்புள்ள சின்னப்புள்ள
கண்ணாடி போல தெளிவான மனம்தானே...
கல் மீது விழுந்து உடைஞ்சாச்சு அடி மானே
சந்தேக திரை விழுந்து மறைஞ்சதய்யா நீதி
சம்சார வாழ்க்கையிலே முடிஞ்சதய்யா பாதி
முன்னால பிரிவிருந்தா பின்னால உறவிருக்கும்
இப்போது துயர் இருந்தா தப்பாம சுகம் இருக்கும்
ராமனோட சீதை நின்னா காட்டு வழி கஷ்டப்பட்டா
ஆனாலும் ராமன் கிட்ட எப்போதும் இஷ்டப்பட்டா
புண்ணாச்சு மனசு இளம் வயசு இது பாவம்
அண்ணாச்சி உனக்கு இவன் மேலே என்ன கோபம்
கையால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா
சொல்லால அடிச்சுபுட்ட துடைச்சுவிடு லேசா
அடுத்த இந்தப் பாடல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியிலேயே ஆரம்பிக்கும் பாடல். பல்லவி சாதாரணமாகவே இருக்கும். ஆனால் சரணத்தில் இழைத்து, இழைந்து விடுவார்கள் சுசீலாம்மாவும் மனோவும். இந்தப் பாடலை எழுதி இருப்பவர் இளையராஜாவே.
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
முள்ளிருக்கும் பாத நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேல தான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா
நிதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
செந்துருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா
ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தார்களா
வானம் பாடுது இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது அதை நானும் அறிவேனே
அனந்துவின் கதைக்கு கலைஞர் மு கருணாநிதி கதை வசனம் எழுத, வீ. கலாநிதி தயாரிப்பில் 1990 ல் வெளிவந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன். பிரபு- நிரோஷா நடித்தது. பாடல்களை கருணாநிதியும், கவிஞர் இளையபாரதியும் எழுதி இருக்கின்றனர். சந்தானபாரதி இயக்கம்.
போலீஸ் வேலை அலர்ஜியான ஒருவன் அந்த வாய்ப்பு கிடைத்ததும் ஓடிப்போய்விட்டு மறுபடி சினிமாத்தனமான சூழ்நிலைகளால் உந்தப்பட்டு போலீசில் வந்து சேரும் கதை.
இதில் வரும் மனோ-சித்ரா பாடல் 'சோலை இளங்குயில் யாரை எண்ணி இங்கு' எனும் பாடல். ஆரம்பமுதலே பாடல் சூடு பிடித்து விடும். ஆரம்ப ஹம்மிங் முடிந்த உடன் துடித்து எழும் இசை.. பின்னர் பாடல். பல்லவியின் முதல் இரண்டு வரிகளுக்கிடையேயும் ஒலிக்கும் ட்ரம்ஸ்... ஒவ்வொரு சரணமும் முடிந்து பல்லவிக்குத் திரும்பும் இடம் அழகு.
சசச சநிச
சசச சநிச
ரிரிரி ரிசரி
ரிரிரி ரிசரி
ககரி ரிசசா
சரி ககரி ரிசசா
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ
காதலின் வானத்துச் சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ
காதலின் வானத்துச் சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ
தோளினில் தாவிடும் தாரகையே
வானத்தில் ஏகிடும் தாமரையே
தோளினில் தாவிடும் தாரகையே
வானத்தில் ஏகிடும் தாமரையே
இசையே மீட்டிடு எனையே கனலே மூட்டிடு தினமே
பூ மகளே உனை தேடுகிறேன் பூவினில் வண்டென கூடிடத் தானே
பாலோடு தேனூறும் பாத்திரம்
நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்
பாலோடு தேனூறும் பாத்திரம்
நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
உயிரே காதலின் சுடரே விழியே பாடிடும் கவியே
ஆயிரம் பூ மழை தூவிடுதே
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல
அனைவருக்கும் காலை/மாலை வணக்கங்கள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... வணக்கம்.
நீக்குதமிழகத்தில் மழை தொடர்வதாக வரும் செய்திகள் கவலையூட்டுகின்றன. மக்களை காக்க இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஉண்மைதான். எப்போதடா இந்த பருவநிலை மாறும் என்கிற எண்ணம் வந்து விட்டது.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குமழை இன்னும் வாட்டாமல் சென்னை மீள
வேண்டும்.
எல்லோரும் ஆரோக்கியம் அமைதியோடு
நலமாக வாழ இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குஎப்பொழுதும் போல ஸ்ரீராமின் சாய்ஸ் மிக
பதிலளிநீக்குஇனிமை.
முதல் பாட்டையும் மூன்றாவது பாட்டையும் கேட்டதில்லை.
இரண்டாவது மிக மிகப் பிரபலம்.
மனோவின் குரல் மிக மிக இதம்
நன்றி அம்மா. முதலும் மூன்றாவதும் நீங்கள் இதுவரை கேட்காத பாடல்கள் என்பது மகிழ்ச்சி. நன்றாய் இருந்ததா?
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தமிழக மக்கள் அனைவரும் இந்தக் கொட்டும் மழையிலிருந்து காப்பாற்றப்பட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அதிலும் தூத்துக்குடி, நெல்லை, கன்யாகுமரி மாவட்டங்களின் நிலைமை மிக வேதனைப்படுவதாக இருக்கிறது. போதும், போதும் என்னும் அளவுக்குப் பெய்திருக்கும் மழையால் ஒருவருக்கும் பாதிப்பு இல்லாமல் அருள் செய்யும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஇன்னும் வேண்டும் என்று கேட்டாலும், போதும் என்று சொன்னாலும் வருணன் கேட்கும் மூடில் இல்லை போல!! வாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குவழக்கம்போல் எனக்குப் புதிதான படங்கள்/பாடல்கள். கேட்டேன். ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குகேட்டீர்களா? நன்றி.
நீக்குமூன்றாவது பாடல் வேறென்னவோ பாடலை நினைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஎப்பவும் போலத் தொண்டை வரை வரும் ராகம் வெளியே வர மறுத்து
சுற்றி வருகிறது.
பாடல்களைக் கேட்ட காலங்கள் மறக்க முடியாதவை.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னாலும் ஒரு
படமோ இசையோ இருக்கும்.
சிப்பி இருக்குது பாடல் முதன் முதலில் கேட்டபோது
எங்கள் டிசில்வா ரோடில் ஒரு பங்களாவில்
பாலச்சந்தர் சார் பட ஷூட்டிங்.நடந்ததும். கமலஹாசன்
ஸ்ரீதேவியை அருகில் சென்று பார்த்ததும்,அந்தப் படத்தில்
அச்சமில்லை அச்சமில்லை என்று சொன்னபடி கமலஹாசன்
வெளி நடப்பு செய்யும் காட்சியும்
நினைவுக்கு வருகிறது.
இந்தப் பாடல் கேட்டதும் உங்களுக்கு வேறு என்ன பாடல் நினைவுக்கு வருகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
நீக்குஆம், அந்தப் பாடல்கள் அதை நாம் முதலில் கேட்ட காலத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நன்றி அம்மா.
மனோ பற்றிய செய்திகள் புதியவை. நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குஎல்லாமே சிறந்த பாடல்கள்.
பதிலளிநீக்குமனோவின் உண்மையான பெயர் சாகுல் ஹமீது, இளையராஜாதான் மனோ என்று மாற்றியதாக படித்து இருக்கிறேன்.
சாகுல் ஹமீதோ, நாகூர் பாபுவோ.. நமக்கு மனோ!
நீக்குநன்றி ஜி.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா. வாங்க..
நீக்குமுதல் பாடல் கேட்டது இல்லை. மற்ற இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன். இரண்டாவது பாடல் அடிக்கடி ரேடியோ, தொலைகாட்சியில் வைப்பார்கள். மூன்றாவது பாட்டு கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள்.
நன்றி அக்கா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை... இரண்டாவது பலமுறை... மூன்றாவது கேட்டு இருக்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி DD. முதல் பாடல் முதலில் ஒரு வரிக்காக ரசிக்கத் தொடங்கி அப்புறம் முழுப் பாடலும் ரசித்தேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்கு//.. ராசா.. ராசா.. என்று மறைமுகமாக இளையராஜாவைக் கொண்டாடி ஐஸ் வைத்து.. //
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் இல்லை..
நேரிடையாகவே ஐஸ் வைத்துக் கொண்டாடினார்கள்..
நேற்று இல்லை.. நாளை இல்லை..
எப்பவும் நான் ராஜா..
என்று பாடியவர்,
அதற்கப்புறம்.. !
புகழ் போதை!
நீக்குதிரு. மனோ. அவர்களது குரல் தனியொரு விதம்...
பதிலளிநீக்குகொஞ்சம் எஸ் பி பி சாயல்!
நீக்குPoor man's SPB.. விஜயகாந்த் poor man's Rajini, மாதிரி
நீக்குஇனிய பாடல்கள்.
பதிலளிநீக்குமுதலாவது கேட்கவில்லை. இப்பொழுதுதான் கேட்டேன்.
நன்றி மாதேவி.
நீக்குஇளையராஜா இசையமைத்த பாடல்களே சூப்பர். அதிலும் ராசாத்தி மனசிலே... ஆஹா
பதிலளிநீக்குஆமாம். அருமையான பாடல்களில் ஒன்று.
நீக்கு// ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத் தான்.. //
பதிலளிநீக்குபாடலை மனோவும் சுசீலாம்மா அவர்களும் பாடியிருந்தாலும் - ராம்ராஜனும் ரேகாவும் நம்மை மயங்க / கிறங்க அடித்து விடுவார்கள்..
ஆசயில பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வச்சேன்!..
இதே ரகம்!..
ஆம். ராமராஜன் பாடல்களில் நிறைய நல்ல மனோ பாடல்கள் இருக்கின்றன.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவழக்கம் போல் வெள்ளி பதிவை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். பாடகர் மனோ பற்றிய அறியாத தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.
இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமை. இதில் இரண்டாவது பாடல்தான் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். முதலும், மூன்றும் அவ்வளவாக கேட்ட நினைவில்லை. இன்று கேட்கிறேன். நேற்று வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தாமத வருகை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிமையான பாடல்கள்
பதிலளிநீக்கு