திங்கள், 1 நவம்பர், 2021

திங்கக்கிழமை :  அழல் அமுதகம் -  கீதா சாம்பசிவம்

 எல்லோரும் என்ன என்னமோ குறிப்புக்கள் எல்லாம் எழுதறாங்க. நெல்லைத்தமிழர் பாரம்பரியச் சமையலில் இறங்கிட்டார்.

யார் என்ன எழுதினாலும் எங்கள் ப்ளாகும் அதை வெளியிட்டு விடுகிறது. இஃகி,இஃகி,இஃகி!

ஆகவே நான் இப்போ முக்கியமான சமையல் குறிப்பு ஒண்ணைச் சொல்லித் தரப்போறேன். இதுக்கு வேண்டிய சாமான்கள் அதிகமெல்லாம் இல்லை, ஜென்டில் விமென் அன்ட் மென்! இரண்டே இரண்டு தான் தேவை.

ஒண்ணு ஒரு பிடி வைச்ச வால் பாத்திரம். இடுக்கி பயன்படுத்தாமல் வெந்நீரை இந்தக் கைப்பிடி கொண்டு எடுக்கலாம். அதுக்காக. இல்லை, சாதாரணப் பாத்திரம் தான் இருக்குனா அதையே எடுத்துக்கோங்க. ஆனால் இதைக் கீழே இறக்க இடுக்கிக் கட்டாயம் வேணும். அதையும் தயாரா வைச்சுக்கோங்க. அடுத்துத் தேவையானது சுத்தமான குடிநீர். பலரும் அக்வா கார்ட் தண்ணீரோ, மினரல் வாட்டர் வரும் கான் தண்ணீரோ சூடு  பண்ணிச் சாப்பிடக் கூடாதுனு சொல்றாங்க. ஆகவே கார்ப்பரேஷன் தண்ணீர் விநியோகம் செய்தால் அந்தத் தண்ணீரை எடுத்துக்கோங்க. 

இப்போ அடுத்துச் செய்ய வேண்டியது கவனமாக எடுத்துக் கொண்ட நீரைப் பாத்திரத்தில் விட வேண்டும். கீழே சிந்திடாதீங்க. துடைக்கற வேலை வேறே வந்துடும். இப்போத் தண்ணீரும், பாத்திரமும் அடுப்பில்  ஏற்றத் தயார் நிலையில் காத்திருக்கு இல்லையா? அடுத்து அடுப்பை மூட்டணும். ஒரு சிலர் முதலிலேயே அடுப்பை மூட்டிட்டுப் பாத்திரம் எங்கே, தண்ணீர் எங்கேனு தேடுவாங்க. நாம தான் மு.ஜா.மு. அக்கா ஆச்சே! எல்லாம் தயாராக வைச்சிருப்போம். அடுப்பைப் பற்ற வைச்சதும். தண்ணீரோடு உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். நல்லாக் கொதிக்கட்டும். முத்துக் கொதினு உள்ளே முத்து முத்தாக வரும். சூடு போறும்னா அப்போவே வெந்நீரை எடுத்துடலாம். இல்லைனா இன்னும் கொஞ்சம் கொதிக்க விடலாம். பின்னர் பாத்திரத்தை கவனமாகக் கீழே இறக்கி ஒரு தம்பளர்/டபரா எடுத்துக் கொண்டு தம்பளரில் வெந்நீரை விட்டு இதை இதுவரை வேடிக்கை பார்த்தவங்களுக்குக் குடிக்கக் கொடுக்கவும். வெந்நீர் குடிப்பது தொண்டைக்கு இதம் மட்டுமல்ல/ வயிற்றுத் தொந்திரவு உள்ளவங்களுக்கு ஜீரணம் ஆகவும், உடல் இளைக்கவும் அடிக்கடி வெந்நீர் குடிக்கலாம். ஆகவே இதன் முக்கியத்துவம் புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே/நண்பிகளே!

இந்த வெந்நீரை வைச்சு எத்தனை வேலை செய்யலாம் தெரியுமோ? அப்படியே ஆத்திக் குடிக்கலாம். கொத்துமல்லிக் காஃபி போடலாம். தேநீர் தயாரிக்கலாம். இன்ஸ்டன்ட் காஃபிப் பவுடர் இருந்தால் காஃபி டிகாக்‌ஷ்ன் தயார் செய்து பாலோடு சேர்த்துக் காஃபி குடிக்கலாம். கபசுரக்குடிநீர்ப் பவுடரைப் போட்டுக் கஷாயம் தயாரிக்கலாம். பருப்பு வேக வைத்தால் வெந்நீரை விடலாம். புளி கரைக்க/ஊற வைக்கப் பயன்படுத்தலாம். காய்கள் சீக்கிரம் வேகவும் தக்காளியைத் தோல் உரிக்கவும் பயன்படுத்தலாம். இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு இது போதும். 

ஆகவே நண்பர்களே, நண்பிகளே, வெந்நீர் போடுவது என்பது சமையலில் முக்கியமான ஒரு தயாரிப்பு. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டீர்களானால் உங்களுக்கு அதை வைத்துப் பல தயாரிப்புக்கள்/சமையல்கள் தயார் பண்ணலாம்.

பைதபை தண்ணீருக்கு வேறு பெயர்கள் உண்டு தெரியுமோ...   தலைப்புக்கு காரணம் சொல்லவேண்டுமல்லோ...


தண்ணீரின் வேறு பெயர்கள் : 

அப்பு அம்  அம்பணம்  அம்பு  அமுதகம்  அமுது  அயம்  அரி  அலம்  அலர்  அளகம்  அளறு  அறல்  அனலாற்றி  ஆப்பு  ஆபம்  ஆருவம்    ஆலம்  ஆழி  இதடி  இதம்  இரை  உதகம்  உதம் உதுக்கம்  உந்தி  உலம் உவரி ஓமி கஞ்சம் கம் கமலம் கருப்புரம் கவந்தம் காலாயம் கீரம் குசம் கையம் கோ கோமலம் சடாக்காரி சம்பரம் சரம் சரலகம் சலம் சலிலம் சிந்து சிவம் சீதம் சூமம் செம்மல் தகடி தாமரம் தாரம் தோணி தோயம் நலிதம் நளினம் நாரம் நீசகம் நீரம் நீவரம் நெருப்புக்கிரை பயசம் பயசு பயம் பயன் பாணி பாணிதம் பாதம் பாயம் பாவனி பீவை புணம் புயல் புனல் புனை பூதம் பேயம் பேரை மது மாபகம் மாரி மேகம் மை யா வசி வயம் வருணம் வலாகம் வளம் வாணி வாள் வாசம் வாயம் வார் வார்த்தரம் வாரி வாருவகை விடம் வேது  என்று பல வார்த்தை உண்டாம்.  இணையம் சொல்கிறது!

93 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    நல்ல பதிவு. வெந்நீர் மகாத்மியம் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன். எப்போதும் சமையல்களைப் பற்றி விதவிதமான பாணிகளில் அலசும் நமக்கு இந்த சூடுநீர் உபயோகத்தின் அவசியம் குறித்தும், அதை தயாரிப்பதின் கவனங்கள் பற்றியும் சிந்தாமல், சிதறாமல் விளக்கி சொல்லியிருப்பதற்கு பாராட்டுக்கள். இறுதியில் நீரின் (தண்ணீர்) 101 பெயர்கள் குறித்த பயனுள்ள தகவலும் அருமை. பெயர்கள் அனைத்தும் அமிழ்தமாகவே உள்ளன. படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறுதியில் நீரின் (தண்ணீர்) 101 பெயர்கள் குறித்த பயனுள்ள தகவலும் அருமை. பெயர்கள் அனைத்தும் அமிழ்தமாகவே உள்ளன. படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
      அது நான் எழுதிச் சேர்க்கலை. சுவை கூட்ட ஶ்ரீராம் சேர்த்திருக்கிறார் கமலா. அவருக்குத் தான் நன்றி கூற வேண்டாம். நான் இதைப் பற்றி மறந்தே போயிட்டேன். :))))

      நீக்கு
    2. ஓ..அப்படியா? தண்ணீரின் சுவையறிந்து, வெந்நீரின் சுவை கூட்ட தேடிப் பிடித்து நீரின் நிறைய பெயர்களை அறிமுகம் செய்த ஸ்ரீராம் சகோதரருக்கும் நன்றிகள்.

      நீக்கு
    3. இரண்டு வருடங்களாக நான் எழுத நினைத்த சமையல் குறிப்பு! ஹூம் கீ சா மேடம் முந்திக்கொண்டு எழுதிவிட்டார்!

      நீக்கு
    4. நிறைய நாட்களாக நானும் எழுத நினைத்த சமையல் குறிப்புதான்.. மேலும் இந்த பதிவு நாம் எல்லோருமே விருப்பத்துடன் எழுத நினைக்கிறோம் என கருத்துரைகளில் தெரிந்து கொண்டேன். இது ஒரு கஷ்டமான சமையல் குறிப்பு என்பதினால் எனக்கும் இதுவரை எழுத தாமதமாகி வருகிறது.:)

      நீக்கு
    5. நன்றி கூற வேண்டும் என்பது "வேண்டாம்" எனத் தட்டச்சி இருக்கேன். கவனிக்காததால் திருத்தாமல் விட்டிருக்கேன். வேண்டும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அன்பு கமலா மாவுக்கும், ஸ்ரீராமுக்கும் ஸ்பெஷல் வணக்கம்.
    நம் எல்லோருக்கும் நிறைந்த நிம்மதியும், ஆரோக்கியமும் இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சகோதரரைத்தான் இரு தினங்களாக அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை. இருமல் குணமாகி நலமாகி உள்ளீர்களா? உடல் நலம் கவனித்து கொள்ளவும்.

      நீக்கு
    3. இருமல் மற்றும் ஜூரம்.  வியாழன் மாலை முதல் எழமுடியாமல் படுக்கை.  இன்று சற்று தேவலாம்.  நன்றி அக்கா.

      நீக்கு
    4. ஸ்ரீராம்..இப்போது தேவலை என்று சொல்லி நிம்மதியை வரவைத்தீர்கள். அங்க மழை குளிர்னு இருக்கா? ஜலதோஷம் போன்றவை இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் போட்டுக்கோங்க. வெளில செல்லுவதை முடிந்தவரை ஜாக்கிரதையாச் செய்யுங்க.

      நீக்கு
    5. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      இன்று உங்கள் உடல் நிலை சற்று பரவாயில்லை எனச் சொன்னது சந்தோஷமாக உள்ளது. எனினும் உடல் நிலையை பத்திரமாக கவனித்துக் கொள்ளவும். ஜுரம்.இருமல் முற்றிலும் நீங்கி விரைவில் பூரணமாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. ஸ்ரீராம், கீதா சாம்பசிவம் சொன்னது போல் வெந்நீர் வைத்தியம் சிறந்தது. மழை பெய்து கொண்டு இருக்கிறது. உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.
      சுக்கு மல்லி காப்பி குடியுங்கள்.

      நீக்கு
  4. திங்க' கிழமை
    குடிக்கிற கிழமையாகிவிட்டதே!~! ஹ ஹாஹா.
    என்ன ஒரு கற்பனை.
    என் பெண் நன்றாகத் தண்ணீர் சுடவைப்பாள் என்பது பழைய வசனம்.

    அதுவே அடுப்பு மூட்டுவதுல் ஆரம்பித்து,
    பாத்திரம் தேடி, சுத்தத் தண்ணீர் பிடித்து அடுப்பில் ஏற்றி,
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி நெட்டி முறிக்கிறதே
    இந்தப் பதிவு.
    ம்ஹூம் இப்படிக் கடினமா செய்முறை சொன்னால்
    எப்படிப் பின் பற்றுவது. ஹ்ம்ம்ம் யோசிக்க வைக்கிற பதிவு.
    பார்க்கலாம்:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஸ்ரீராம் முடிந்த வரை கூட்டங்களை தவிருங்கள்

      நீக்கு
  5. தமிழுக்கு அமுதென்று பேர் தெரியும். தண்ணீருக்கும் அதுவே வா.!!!

    நாவுக்கு இனிமை தமிழ். உடலுக்கு நன்மை தண்ணீர்.
    இத்தனை பெயர் இந்தத் தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு வைத்ததே இனிமை.

    காவிரிக்கரையில் வசிக்கும் கீதாமா சொல்வது மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காவிரிக்கரையில் வசிக்கும் கீதாமா சொல்வது மிகப் பொருத்தம்.//

      ம்ஹூம், ஶ்ரீராம் கடைசிப் பகுதி அவருடைய சேர்க்கை! "உஷ்ணம்" என்பதில் ஆரம்பித்து நீரின் பல பெயர்கள் வரை ஶ்ரீராமுடையது.

      நீக்கு
    2. 😹😹😹ஓ! சரி சரி. ஶ்ரீராமுக்கு பாராடுகள்.

      நீக்கு
  6. அடுப்பு மூட்டி என்றால் எந்த அடுப்பு?
    கரியா, விறகா, மரத்தூள் அடுப்பா, ஜனதா ஸ்டவ்வா,ஹீட்டரா
    அப்புறம் புதுசா வந்திருக்கே காஸ்
    அதுவா..... சரியாகச் சொல்லவில்லை குறிப்பில்:)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.ஹா.ஹா. இன்டெக்ஸன் அடுப்பை விட்டு விட்டீர்களே...! விரைவில் இந்த அடுப்புக்கள் பற்றி விபரமாக யாரேனும் எழுதக்கூடும். எதுவாக இருந்தாலும் இன்றைய பதிவு ரசிக்கும்படி இருந்தது. நகைச்சுவை ததும்ப எழுதிய சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மீ்ண்டும் என் பாராட்டுகள்... நன்றி.

      நீக்கு
    2. அடுப்பைப் பத்திச் சொல்ல நினைச்சு விட்டுப் போயிடுத்து. காஸ் அடுப்புன்னா தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசித் தீ உண்டாக்கி மூட்டணும். லைட்டர்னால் அது உள்ளே சரியா இருக்கா/செயல்பாட்டில் இருக்கானு பார்த்துட்டுக் க்ளிக் செய்யணும். இன்டக்‌ஷன் ஸ்டவ் எனில் வெந்நீர் கொதிக்க வைக்கும் ஆப்ஷனில் வைக்கணும். இப்படி நிறைய இருக்கு. சேர்த்திருக்கணுமோ? :))))))

      நீக்கு
    3. பின்ன! இதெல்லாம் சொல்லாம விடலாமா. தாங்க்ஸ் பா கமலா.

      நீக்கு
  7. ""இந்த வெந்நீரை வைச்சு எத்தனை வேலை செய்யலாம் தெரியுமோ? அப்படியே ஆத்திக் குடிக்கலாம். கொத்துமல்லிக் காஃபி போடலாம். தேநீர் தயாரிக்கலாம். இன்ஸ்டன்ட் காஃபிப் பவுடர் இருந்தால் காஃபி டிகாக்‌ஷ்ன் தயார் செய்து பாலோடு சேர்த்துக் காஃபி குடிக்கலாம். கபசுரக்குடிநீர்ப் பவுடரைப் போட்டுக் கஷாயம் தயாரிக்கலாம். பருப்பு வேக வைத்தால் வெந்நீரை விடலாம். புளி கரைக்க/ஊற வைக்கப் பயன்படுத்தலாம். காய்கள் சீக்கிரம் வேகவும் தக்காளியைத் தோல் உரிக்கவும் பயன்படுத்தலாம். இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு இது போதும். "


    இத்தனை வேலைகளை நடத்த ஒரு பாய்லர் வாங்கிடலாமா.
    இல்லை வென்னீர்த்தவலை போதுமா?
    மொண்டு மொண்டு எடுத்துக் கொண்டே இருக்கலாமே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! பெரிய அடுக்குகளிலும் வெந்நீர் போடலாமே!

      நீக்கு
    2. பெரிய அடுக்கா?…? சரி வாங்கறேன:):):):):)

      நீக்கு
    3. :))) காதலிக்க நேரமில்லை படத்தில், ரவிச்சந்திரனிடம் நாகேஷ் சொல்லும் " நாட்டியக்காரியா ! சரி, ஆக்கிடறேன் " வசனம் ஞாபகம் வந்தது!

      நீக்கு
    4. KGG sir.. காலையில் வல்லிம்மா எழுதினதை ரசித்தேன். அதுக்கு நீங்க பதில் கொடுத்ததை இன்னமும் ரசிக்கிறேன்

      புதன் கேள்வி - நீங்க எழுதினது டெக்ஸ்ட் தான். ஆனால் அதைப் படிக்கும்போது நாகேஷின் குரல்தான் என் மனதில் ஒலித்தது...(ஒலிக்கிறது). இதன் காரணம் என்னவாக இருக்கும்? மனதிலேயே குரலும் தங்கிவிடுகிறதோ, வசனத்துடன்?

      நீக்கு
    5. நல்ல கேள்வி. பதில் அளிக்கிறோம் !!

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும் நல்வாழ்வு வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. நான் எழுதியதைப் பிரசுரித்துப் பிற்சேர்க்கையும் சேர்த்துச் சுவையூட்டி வெளியிட்ட ஶ்ரீராமுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி ஏழாகிறது. நாம் மூவருமே இப்படி வெறும் வெந்நீர் குடித்து விட்டு அளவளாவி கொண்டிருக்கிறோம். யாரையும் காணோமே.:) நான் இனிதான் காஃபியே குடிக்க வேண்டும். வருகிறேன்.

      நீக்கு
    2. வந்துட்டோம் !! தீபாவளி வருது - எல்லோரும் வெந்நீர் வைக்கக் கற்றுக்கொள்வது நல்லதுதான் !

      நீக்கு
  10. காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிவின் சில வரிகள் படித்ததுமே இது கலாய்ப்பைப் பதிவு என்று புரிந்துபோயிற்று.

    எழுதுவதை ரசனையுடன் எழுதினால, எந்தக் குறிப்புமே திங்க பதிவுக்குச் சுவை கூட்டும்.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நாளைக்குப் பிறகு கீதா சாம்பசிவம் மேடம் எழுதியிருக்காங்க. பாராட்டுகள்.

    அது சரி... உங்க ஜீவாதாரமான கஞ்சியைச் செய்யலாம் என்று எழுத விட்டுப்போய்விட்டதே

    நான் காலையில் கிட்டத்தட்ட அரை லிட்டர் above warm தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து தண்ணீர் பாட்டிலின் எடை குறைகிறதே தவிர என் எடை குறைவதாகத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொரு வேளையும் மிதமான சூட்டில் வெந்நீர் குடிக்கலாம் நெல்லை. நீங்கள் எடை குறைய உணவைக் குறைக்க வேண்டாம். சாப்பிட வேண்டியவற்றைப் பிரித்து நான்கு முறைகளாகச் சாப்பிடுங்கள். வாரம் ஒரு நாள் பழங்கள் மட்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. சாப்பிட வேண்டிய குறிப்பிட்ட நேரத்தில் அளவாகச் சாப்பிட்டாலே போதும். அதுக்காக ராத்திரி சாப்பாடைத் தவிர்க்கிறேன் பேர்வழி எனச் சாயங்காலம் ஐந்தரை/ஆறுக்கே சாப்பிட்டு விட்டால் அதிலும் பலன் தெரியாது. இரவு உணவை ஏழரைக்குள் முடித்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  12. பிற்சேர்க்கை எழுதிய ஶ்ரீராம், கீசா மேடம் இடுகைதானே என்று அலட்சியமாக நீங்கள் அனுப்பிய படங்களை வெளியிடவில்லை போலிருக்கிறது. அல்லது அவராவது படங்களைச் சேர்த்திருக்கலாம்.

    என்னைப் போன்றவர்கள் படக் குறிப்புகள் இல்லாமல் எப்படிச் செய்வது?

    செய்முறை விளக்கமும் முழுமையாக இல்லை. வீட்டில் உள்ள பெண்களைத் துணைக்கு அழைக்கணுமா இல்லை மற்ற குடியிருப்பில் உள்ள பெண்களைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொள்ளலாமா? காவேரித் தண்ணீர் மட்டும்தான் உபயோகிக்கணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மற்ற குடியிருப்பில் உள்ள பெண்களைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொள்ளலாமா?// அப்படி எல்லாம் ஏதேனும் செய்தீர்கள் என்றால் மனைவியிடம் வாங்கும் அடிக்கு, வீங்கிய இடங்களில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க நீங்க போட்ட வெந்நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் !

      நீக்கு
    2. @கௌதமன் சார்! ஜூப்பரோ ஜூப்பரு!

      நீக்கு
  13. தண்ணீருக்கான பெயர்களில் பல காரணப் பெயர்கள். மழை என்றாலே தண்ணீர் என்பதைக் குறிக்கும் விதமாக மாரி, வாரி மேகம் என்றெல்லாம் பல பெயர்களைப் போட்டுள்ளார்கள்.

    ஜீவி சாரைக் காணாதது கவலையை உண்டாக்குகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கேட்க நினைத்தேன். ஜீ வி அண்ணாவைக் காணவில்லையே என்று.

      கில்லர்ஜியையும் காணவில்லை. அவர் கணினி கையில் இல்லை என்று தெரிந்தது.

      பானுக்கா ஜெட்லாக் சரியாகி வருவாங்கன்னு நினைக்கிறேன்.

      ஸ்ரீராம் உடல் நலமில்லை. ரொம்ப முடியலை என்று அன்று சொன்னார். அதோடு வியாழன் அன்று பதிலும் கொடுத்தார். இப்போது வல்லிம்மாவுக்கு தேவலாம் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கறப்ப ஆறுதல்.

      கீதா

      நீக்கு
    2. ஶ்ரீராமிடம் ஜீவி சாரைப் பற்றி முன்னரே கேட்டேன். அவர் மனைவி வேறே உடல் நலமில்லாமல் இருந்தார். யாரானும் விசாரித்துச் சொல்லலாமே! கில்லர்ஜி வாட்சப்பில் வருகிறாரே!

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  14. கடைசியில் ஒன்னு சொல்ல மறந்து போச்சு. அமுதகம் பக்குவம் ஆகிவிட்டதா என்று சோதித்து பார்க்க ஒரு கரண்டி எடுத்து காலில் ஊற்றவும். எந்த காலில் வேண்டுமென்றாலும் ஊற்றலாம். நீங்கள் டான்ஸ் ஆடினால் பக்குவம் வந்துவிட்டது என்று அர்த்தம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா - இது நல்லா இருக்கே!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா !!!

      கீதா

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  15. தில்லையகத்து கீதா ரங்கனைக் காணோம்... கஷ்டமான செய்முறைனா, எதுக்கு வம்பு, நமக்குச் செய்யத் தெரியாது என்று நினைத்து பின்னூட்டமிடுவதில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைச்சேன்! இந்த நெல்லையின் லெக்புல்லிங்கை காணமேன்னு!

      ஹாஹாஹாஹா இதுக்கு முன்ன திங்க கீதா வுடையது வந்தப்ப ஆளையே காணும்,.,....

      இதுக்கு வந்த உங்களை என்னன்னு சொல்றதாக்கும்?!!!!!!!

      கீதா

      நீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  17. அழல் அமுதகம்!! கீதாக்கா தலைப்பு ஈர்க்கிறது. தலைப்பு பார்த்ததும் உள்ளே என்ன என்பது ஓரளவு புரிந்துவிட்டது!!!!!!!!!

    இதற்கான அர்த்தம் அழல் அமுதகம் என்பது தனி தனியாக என் தமிழாசிரியை சங்கரவடிவு அவங்க சொல்லிக் கொடுத்ததுண்டு. அதன் பின் பிரபந்தம் கற்றுக் கொடுத்த குரு சொல்லிக் கொடுத்த போது..

    வெந்நீரின் பயன் நிறைய உண்டு.

    நாங்களும் கேன் தண்ணீர் என்றெல்லாம் இல்லை காவேரித் தண்ணீரை நேரடியாகப் பிடித்து (பைப்பில் வருவதுதான்!! ஹிஹிஹி இதுக்குன்னு ஆற்றிற்கா போகமுடியும்??!!) காய்ச்சிக் குடிப்பதுதான்.

    வெந்நீரின் புராணம் செம கீதாக்கா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்புக்குச் சொந்தக்காரர் "ஶ்ரீராம்" தான்! ஆகவே பாராட்டுகள் அவருக்கே. ஶ்ரீவைஷ்ணவர்களுக்குப் புரிஞ்சிருக்கும். கொஞ்சம் கொஞ்சம் பிரபந்தங்களோடு அறிமுகம் செய்து கொண்டு/ பண்ணிக் கொண்டிருப்பதால் நானும் புரிஞ்சுண்டேன்.
      என்றாலும் உங்களை எல்லாம் போல் பிரபந்த வகுப்புக்கெல்லாம் தலை காட்டுவதுஇல்லை. நேரம் இருக்கையில் இங்கே ஒண்ணு/அங்கே ஒண்ணு! அம்புடுதேன்.

      நீக்கு
  18. குழாயடிகளின் கூச்சல் தாங்க முடியாததால் அந்தப் பக்கமே போவதில்லை..

    இருந்தாலும் இப்படியாக் ஒரு சம்மட்டியடிப் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

    அக்கா எழுதி விட்டார்கள்..
    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  19. டீபாளி (நம்ம தீபாவளி தாங்க) நேரத்தில் இப்படியான ஹாட் வாட்டர் புராசசிங் (!) தேவைதான்..

    பதிலளிநீக்கு
  20. தண்ணீர் குறித்த அரும் பெயர்களைத் தொகுத்து வழங்கிய் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  21. வெந்நீர் மகாத்மியம் அவசியமானதும்கூட.

    சிலர் கவனமின்றி பைப்நீரையும் கிணற்று நீரையும் வடிகட்டாமல் அப்படியே குடித்து விடுகிறார்களே.

    பதிலளிநீக்கு
  22. வெந்நீர் வைத்தியம் மிகவும் அருமை.
    நான் எப்போதும் வெந்நீர்தான் அருந்துகிறேன்.

    வள்ளலார் அவர்கள், வெந்நீரீல் குளிக்கவேண்டும், வெந்நீர்தான் அருந்த வேண்டும் என்பார்.

    அதுவும் இந்த மழை காலத்தில், மற்றும் தீநுண்மி காலத்தில் வெந்நீர் மிக நல்லது.

    தலைப்பும், அதற்கு விளக்கமும் அருமை.

    ஸ்ரீராம் வழங்கிய குறிப்புகளும் அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு ஶ்ரீராமுடையது. இதை எழுதி அனுப்பும்போது இத்தனை வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஶ்ரீராம் சொன்னார் ரசிக்கும்படி இருக்கு.போடலாம் என்றார்.

      நீக்கு
  23. ஒரு பிடி வைச்ச வால் பாத்திரம் குறிப்பு அருமை, நான் வால் பாத்திரம் இரண்டு மூன்று பெரிது, சிறிதுமாக வைத்து இருக்கிறேன்.
    அவை இல்லையென்றால் முடியாது எனக்கு.

    வாயுபிடிப்பு மாதிரி முதுகு, நெஞ்சு வலித்தால் சீரகம், கல் உப்பு இரண்டையும் மென்று முழுங்கி விட்டு வெந்நீர் அருந்தினால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, கோமதி, நம்ம வீட்டிலேயும் சில,பல அளவுகளில் வால் பாத்திரங்கள் இருக்கின்றன. :))))

      நீக்கு
  24. எதிர்பாராத சில திடீர் உடல் நலக் குறைவுகள். தேறி வருகிறேன்.
    பூரண குணத்திற்கு பிறகு வருகிறேன். ப்ரிய நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஜீவி சார் வணக்கம் ,வாழ்க வளமுடன்
      உடல் நலம் தேறி வருவது அறிந்து மகிழ்ச்சி சார்.
      பூரண நலம் பெற எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

      நீக்கு
    2. நன்றி, கோமதிம்மா. எல்லோருக்கும் நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் ஜீவி சகோதரரே

      வாங்க.. தங்கள் உடல் நலமின்மை தெரிந்து வருத்தமடைகிறேன். விரைவில் பூரண நலமடைந்து பதிவுகளுக்கு எப்போதும் போல் வர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. @ ஜூவி அண்ணா..

    // பூரண குணத்திற்கு பிறகு வருகிறேன்.. //

    தங்களது நலத்திற்கு வேண்டிக் கொள்கிறேன்.. நலங்கொண்டு வருக விரைவில்!..

    பதிலளிநீக்கு
  26. நலமுடன் குணம் அடைந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. அடுப்பை மூட்டி பாத்திரத்தில் வெந்நீர் சுடவைத்தப் பின் அடுப்பை அணைக்கணுமா கூடாதா? அதை பற்றி சொல்லவே இல்லையே

    பதிலளிநீக்கு
  28. திரு ஜீவி அவர்களின் உடல்நிலை முற்றிலும் பூரண குணமாகி அவர் மீண்டும் எழுத ஆரம்பிக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  29. மனம் கனிந்த அன்பிற்கு எல்லோருக்கும் நன்றி. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

    பதிலளிநீக்கு
  30. ஜீவி அவர்களது சுறுசுறுப்பான பங்களிப்புகளுக்குக் காத்திருக்கிறோம். விரைந்து வருக !

    பதிலளிநீக்கு
  31. இத்தனை நாள் இது தெரியாம போச்சே.
    பற்ற வைக்கும் அடுப்புக்கு பதில் மைக்ரோ வேவ் பயன்படுத்தினா சுவை குறையுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இத்தனை நாள் இது தெரியாம போச்சே.//
      அதுக்குத் தானே நாங்க சொல்லித் தரோம். :))))

      மைக்ரோவேவிலும் வைச்சுச் சூடு பண்ணிக்கலாம். சுவை அத்தனை மாறாது! :)))))

      நீக்கு
  32. அடுத்து அடுப்பு பற்ற வைப்பது எப்படி, இண்டக்‌ஷன் ஸ்டவ் எப்படி ஆன் செய்வது என்றெல்லாமும் எழுதலாம்! ஹாஹா....

    சுவையான குறிப்புகள்! :) வெந்நீரும் ஒரு சுவை தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, வெங்கட், அதையும் இதிலேயே சொல்லி இருக்கலாமோ? :)

      நீக்கு
  33. நீரின்றி அமையாது இவ்வுலகு! அதுவே நமக்கு கிடைத்த அமிழ்தும், மருந்தும். அருமையாய் நீருக்காக பதிவிட்ட கீதாம்மாவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!