ஜெயகுமார் சந்திரசேகரன் :
1. மசாலா (பட்டை லவங்கம் ஏலம் ) இல்லாமல் உருளைக் கிழங்கு வைத்து மடித்த தோசைக்கு ஏன் மசால் தோசை என்று பெயர்?
# மசாலா என்றால் ருசி கூட்டி - இதுவோ அதுவோ மட்டுமல்ல. மசாலாப் படம்னா சோம்பு பூண்டு பட்டை சேர்த்தா எடுக்கிறார்கள் ?
$ மசாலா தோசை போல மசாலா பால்,டீ என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறோம். மசாலா என்பது சேர்க்கப்பட்ட பொருளுக்கான ஆகு பெயராக ஆகி விட்டது பான் மசாலா,இன்னும் நிறைய இருக்கலாம் .
2. சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு எது அழகு?
# இரண்டு பேருக்கும் மூக்கு அல்ல அழகு.
& மூக்கை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் - முகத்துக்கேற்ற மூக்கு கொண்டவர் சி.
# உண்டு. பல்லுக்கு அப்புறம் தானே லி வருகிறது ?
$ பல்லி கரப்பான் பூச்சியைக்கவ்வி எடுத்து செல்வது வைத்துப் பார்த்தால், உண்டு.
4. சீத்தாப்பழம் தெரியும். ராமர் பழம் என்று ஏதாவது உண்டா?
# வெளிப்பகுதி மடிப்பு இல்லாமல் ராமர் பழம் என்று ஒன்று உண்டு.
$ நாசிக் factory எஸ்டேட்டில் வீட்டுக்கு வீடு சீத்தாப்பழம் போல ஆனால் முள்ளின்றி இருக்கும் பழ மரங்கள் இருக்கும் ராம் phal என்பார்கள்.
5. இரன்டு காது இரண்டு கண் என்று வைத்த கடவுள் ஏன் இரண்டு வாய் வைக்கவில்லை?
# ஸ்டீரியோ சவுண்டு விஷன் உண்டு, ஆனால், ஸ்டீரியோ சாப்பாடு பேச்சு கிடையாது எனவே ஒரு வாயே போதும் என்று கடவுள் முடிவு செய்து விட்டார்.
$ ஒளி, ஒலி இவை கொண்டு திசை அறிய இரண்டு கண், இரண்டு காது தேவைப்படுவதால் இரண்டிரண்டு.
நெல்லைத்தமிழன் :
& யோசித்துப் பார்த்தால், நீங்கள் சொல்வது சரி என்று தோன்றுகிறது. நகைச்சுவை நடிகர்களுக்கு தேவையான முக்கிய இரண்டு அம்சங்கள் : Timing மற்றும் குரலில் நடிப்பில் அவர்கள் கொண்டு வரும் (B)பாவம். அதில் சிறந்த நடிகர்கள் நாகேஷ், பாலையா, சோ ஆகியோரைச் சொல்லலாம். அதனால்தான் சில வசனங்களைப் படிக்கும்போதே அந்தந்த நடிகர்களின் குரல் நம்முள்ளே ஒலிக்கிறது.
= = = =
எங்கள் கேள்விகள் :
1) ஏதேனும் இரண்டு அணிகள் ஒன்றுக்கொன்று எதிராக ஆடும்போது - ஒரு அணியை ஆதரிக்காமல் விளையாட்டை இரசிக்க உங்களால் முடியுமா?
2) தீபாவளி வெடி / வாண வகைகளில் உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது? பயப்படுவது எதைக்கண்டு ?
3) தீபாவளி என்றவுடனேயே உங்களுக்கு நினைவுக்கு வரும் சம்பவம் எது?
= = = =
படம் பார்த்து கருத்து எழுதுங்க :
1)
2)
3)
= = = =மின்நிலா (MN076) இந்த வார இதழ் சுட்டி : LINK
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்னாட்களும்
பதிலளிநீக்குஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் உடன் வாழ
இறைவன் அருள வேண்டும்.
இனிய காலை வணக்கம்.
நீக்குகேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம். ஸ்ரீ ஜெயக்குமார் சந்திரசேகர் கேள்விகள் அப்படியே
பதிலளிநீக்குகுமுதம் காலத்துக்குக் கொண்டு போய்விட்டது:)
பல்லி பதிலும் சிம்ரன் மூக்கும் சூப்பர்ப்.!!!!!!!!!!!!!!
நன்றி.
நீக்குகீதாமா பதிவில் அனைத்துமே மிக சுவார்ஸ்யம்.
பதிலளிநீக்குசுவையான திங்க பதிவு.
அதனால் அடிச்சு ஆட முடிந்தது:)
அதை நெ.த ரசித்தது மகிழ்ச்சி.
உண்மைதான் சினிமா வசனங்கள் நம் மனதில்
அப்படியே இருக்கும்.
நான் என் தம்பிகள் எல்லோரும்
எல்லாக் கேள்விகளுக்கும் வசனங்களைப்
பதிலாகச் சொல்வோம்.
என்னடா இது உடம்பா/ இல்லப்பா சட்டை:)
அப்படியே எனக்கொரு கப்........
அதான் எனக்குத் தெரியுமே...
ஒன்னைத் தூக்கி வெய்யில்ல போட....
ஏனைய பாளையக்காரர்கள்
சில உதாரணங்கள்.
ஹா ஹா ! ஆம், அந்தந்தக் கால கட்டங்களில் வலம் வந்த டயலாக் சொல்வது எல்லா குழுக்களிலும் உண்டு என்று நினைக்கிறேன்.
நீக்குஇரண்டு வாய்களா. !!!!! தேர்தல் சமயம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்:)
பதிலளிநீக்குகாதுகளைப் பொத்திக்கொள்ள நான்கு கைகள் வேண்டியிருக்கும்!
நீக்கு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீக்குஇரண்டு அணிகள்னால் யார்? அண்டை நாடு விளையாடும்போது அதுவும்
பதிலளிநீக்குஃபௌல் ப்ளே இருந்தால் ரசிக்க முடியாது.
வெஸ்ட் இண்டீஸ் பிடிக்கும். நியூ சீ அணி 1987ல ரொம்பப் பிடித்தது:)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதீபாவளி மத்தாப்பு அதுவும் கம்பி மத்தாப்பு மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குசீனிச்சரம் படபட அதுவும் பிடிக்கும்.
அணுகுண்டு,லக்ஷ்மி வெடி பயம்.:)
:))) கருத்துரைக்கு நன்றி. (பட பட என்றால் என்ன?)
நீக்குஎன்ன சார் நீங்க. சீனிச்சரம் எப்படி வெடிக்கும் நு
நீக்குதெரியாதா:)குட்டி குட்டியான வெடி தொடர்ந்து வெடித்துக் கடைசியில் எதிர்பார்க்காத
போது ஒன்று வெடிக்குமே அத்து:))))
ஓ ! அப்படியா !! எங்கள் ஊரில் சடபுடா என்று சொல்வார்கள். அப்போதும் எனக்கு டவுட் இருந்தது.
நீக்குநல்ல தீபாவளி நினைவுகள் குடும்பத்தோடு களித்தது நினைவில் உண்டு. மறக்க முடியாத தீபாவளி,
பதிலளிநீக்குஎன் பெரிய மாமனார் இஸபெல்லில் அட்மிட் ஆனது
தீபாவளிக்கு முதல நாள்.
அனைவரும் வெடி வெடிக்கையில்
நான் காப்பி போட்டுக் கொண்டு போய் அந்த ஐசியூ வாசலில்
உட்கார்ந்து கொண்டிருந்தேன்.1982 தீபாவளி.
அப்படியா!
நீக்குமுதல் படம். நாங்க எல்லோரும் லிரில் girls.!
பதிலளிநீக்குஇரண்டாவது படம்
எனக்கும் மத்தாப்பூ கொடு. பட்டாஸ் பக்கத்தில நிக்காதே
மூன்ராவது படம்
இதுதான் பொட்டி தட்டுவது:)
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குKGG க்கு பாராட்டுகள் ,...
பதிலளிநீக்கு? எதற்கு?
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் என் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த தீபாவளி மக்களைப் பழையபடி அச்சமற்று உலவும்படியாக அமையட்டும். இந்த தீபாவளியில் இருந்து தொற்று அடியோடு விலகி அனைவரும் ஆரோக்கியமான வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குநான் விளையாட்டாக கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் தந்த எ பி ஆசிரியர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குJayakumar
இன்னும் நிறைய விளையாட்டுக் கேள்விகள் கேளுங்க. நன்றி.
நீக்குகேள்வி/பதில்கள் சுவாரசியம்! என் கேள்வி!
பதிலளிநீக்குஆண்கள் அனைவரும் ஏன் எப்போதும் நடிகைகளின் முக லாவண்யத்தையே ஒப்பிட்டுக் களிப்படைகிறார்கள்?
நடிகர்களின் அழகைப் பற்றி அவங்க கவலையே படுவதில்லையே ஏன்?
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைப்பட நடிக, நடிகையர்கள் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பது சரியா?
நன்றி. பதில்கள் அளிப்போம்.
நீக்கு//நடிகர்களின் அழகைப் பற்றி//- இந்த மாதிரி எக்குத் தப்பா சிலர் சிந்திக்கறதுனால, ஆண்-ஆண், பெண்-பெண் திருமணங்கள் நம்ம சொசையிட்டிலயும் நடக்க ஆரம்பிக்கறதோ?
நீக்குஎன்ன சொல்லுவது? எங்க உறவிலேயே ஒரு பையருக்கு இப்படியான ஒரு பெண்ணைப் பெற்றோர் பலவந்தமாகத் திருமணம் செய்து வைக்க 3 மாதங்கள் கூட அந்தப் பெண் இருக்கவில்லை. திரும்பிப் போய்விட்டாள். பின்னர் ஆதாரங்கள், அந்தப் பெண் பேசிய தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றைச் சாட்சியாக வைத்து உடனடியாக விவாகரத்து வாங்கினார்கள். ஆனால் அந்தப் பையருக்கு இன்னமும் மறுமணம் ஆகவில்லை! :(
நீக்கு//திருமணம்// - இதைப் பற்றி நினைத்தாலே (இந்தக் காலத்தில்) வயத்தைக் கலக்கும் செய்திகள்தான்.
நீக்கு1. நான் எப்போவுமே இந்திய அணிக்குத் தான் ஆதரவு அளிப்பேன்.
பதிலளிநீக்கு2. அநேகமாக எல்லா வெடிகளுமே வெடிப்பேன்/வெடிச்சிருக்கேன். ஹிஹிஹி, அப்பா திட்டுவார். ஆகவே அவர் இல்லாத நேரங்களில் வெடிச்சு ஆவலைத் தீர்த்துப்பேன். சாட்டை, புஸ்வாணம் இவற்றிலிருந்து வரும் மருந்துகளின் நெடி அந்த நாட்களிலேயே எனக்கு வயிற்றைப் பிசையும். அவ்வளவாப் பிடிக்காது, கம்பி மத்தாப்பு ஓகே!
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு3. தீபாவளினா நினைவுக்கு வரது சின்ன வயசில் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஜூரம் வந்து படுத்துக் கிடந்தது. அதன் பின்னர் கல்யாணம் ஆனதும் தலை தீபாவளிக்கு முன்பதிவு செய்த ரயிலை விட்டுவிட்டுப் பின்னர் பாண்டியன் விரைவு வண்டியில் அடிச்சுப் பிடிச்சுப் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு முன்பதிவு செய்யாத பெட்டியில் போர்ட்டரை விட்டு இடம் போடச் சொல்லி உட்கார்ந்து கொண்டு காலம்பர மதுரையை அடையும்வரைக் கழிவறைக்குக் கூடப் போக முடியாமல் சென்றது தான். இந்த ரயில் பயணங்கள் என்னைக் கிட்டத்தட்ட அறுபதுகளின் கடைசியில் இருந்து கல்யாணம் ஆனப்புறமாக் கூடத் துரத்திக் கொண்டிருந்தன. இவற்றைக்குறித்து ஆரம்பகாலப் பதிவுகளில் நிறையவே எழுதி இருக்கேன்.
பதிலளிநீக்குகடினமானப் பயணங்கள்தான். கருத்துரைக்கு நன்றி.
நீக்குதலைப்பொங்கலுக்கும் அப்படித்தான் பயணம் செய்ய வேண்டி வந்தது. ஆனால் ரயிலை விட்டுட்டு எல்லாம் அப்படிப் போகலை. முன்பதிவு செய்திருந்தும் அந்தப் பெட்டியில் கூட்டம் ஏறி விட்டது. எங்களுக்கு உட்காரக் கூட இடம் இல்லை. எங்களோட முன்பதிவு செய்த இடத்தில் உட்கார மற்றப் பயணிகளோடு சண்டை போட வேண்டி இருந்தது. டிடிஆரும் கண்டுக்கலை.
நீக்குஎனக்கு எதையும் தவற விட்டுடக்கூடாது. அரை மணி நேரமாவது முன்னால் சென்றுவிடுவேன்.
நீக்குஎனக்கு இரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கி ஏதாவது வாங்கும்போது இரயில் புறப்பட்டுவிடும் என்ற போபியா (இரண்டு மூன்று கனவுகளினால் இருக்கலாம்). அதனால நான் ஏதேனும் வாங்க இறங்கினாலும் சட்னு ஏறும்படியா கதவு அருகில்தான் இருப்பேன்.
மு ஜா மு !!
நீக்குநெல்லைக்கு இந்த அனுபவங்கள் எல்லாம் இல்லைனு நினைக்கிறேன். என்னதான் முன்னாலேயே போனாலும் நம்ம பதிவு செய்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும் திமுதிமுவென ஏறும் மக்கள் கூட்டம் நம்மைத் தான் முதலில் விரட்டும். அதிலும் சில பெண்கள், "என்னம்மா! காத்தாடப் புருஷனோட உட்கார்ந்திருக்கியா? நாங்கல்லாம் நிக்கிறது கண்ணு தெரியலே?" என்று ஏதோ அவங்க இடத்தில் நாம் உட்கார்ந்தாப்போல் சண்டையே போடுவாங்க. பதிலே பேச முடியாது. வட மேற்கே குஜராத்திலும் வடகிழக்கே பிஹாரிலும் இந்தத் தொல்லை மிக மிக அதிகம். அதிலும் குஜராத்தில் அஹமதாபாத்---சூரத்/ இன்டர் சிடி எக்ஸ்பிரஸில் நீங்க முன்பதிவு செய்திருந்தாலும் உங்க இடம் உங்களுக்குச் சொந்தமே இல்லை. அழுத்தமாக உட்கார்ந்து கொண்டு எழுந்து கொள்ள மறுப்பார்கள். அஹமதாபாதில் ஏறினாலோ அல்லது திரும்பும்போது சூரத்தில் ஏறினாலோ கொஞ்சம் மோசமில்லை. உட்கார்ந்து கொண்டாவதூ வரலாம். அப்படியும் நெருக்கி நசுக்குவார்கள். காலை மிதிப்பார்கள். மடியில் அவங்க பைகள் வைப்பார்கள். என்னென்னவோ!
நீக்குநெல்லை! நீங்க நான் தலைதீபாவளிக்கு ரயிலைத் தவற விட்டதைச் சொல்றீங்க போல. நாங்களும் அரை மணி இல்லை ஒரு மணி கூட முன்னால்தான் போவோம். அந்த நாளில் நாங்க இருவருமே அலுவலகம் போக வேண்டி இருந்தது. அதிலும் எனக்கு முக்கியமான ஒரு ஃபைலை முடிச்சுக் கொடுக்கணும். ஆகவே போயிட்டு அரை நாள் லீவு சொல்லிட்டு வரலாம்னு அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டை அலுவலகம் போனேன்.வேலை முடியவே இரண்டு மணி ஆகிவிட்டது. ஆகவே அங்கிருந்து வீட்டுக்குப் போய்த் தயார் செய்து கொண்டு கிளம்பவே ஐந்து மணி ஆகிவிட்டது. அப்படியும் எழும்பூருக்கு நேரே செல்லும் பேருந்தில் தான் போனோம். நாங்க தினத்தந்தி அலுவலகம் அருகே பேருந்து நிற்குமிடம் வந்ததுமே இறங்கி குறுக்கு வழியாக ஓடினோம். நடைமேடையில் நுழைகிறோம். வண்டி கிளம்புகிறது. அப்படியும் கூடவே ஓடினோம். கார்ட் கைகளைக் காட்டி வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். வண்டி போயே போச்சு! போயிந்தி! இட்ஸ் கான்!
நீக்குமுதல் படத்துப் பெண்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் குளிக்கிறாங்களோ? யார் முதலில் குளிப்பதுனு போட்டி போல இருக்கு! ஹிஹிஹி! வாயால் நீரைக் கொப்பளித்துத் துப்பறாங்களா/இல்லைனா தலை மயிரிலிருந்து நீர் அப்படி வருதா? கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு நாளைக்கு அவங்க பதில் என்னோட கருத்துரை நிச்சயம்.
பதிலளிநீக்குஎல்லோரும் தண்ணீரில் தலையை முங்கி ஸ்டைலாக தலையை ஒரே நேரத்தில் உயர்த்தி அப்படி flower pot நீர் ஜாலம் காட்டுகிறார்கள்.
நீக்கு"அவங்க பதிவில்!" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வரவர மாமியார் கதையா ஆயிடுச்சே என் கதை! :))))))
நீக்குகுட்டிப் பையரிடம் குட்டிச் செல்லம் எங்கேயோ அழைக்கிறது.
பதிலளிநீக்குமூன்றாவது படத்தில் குட்டிப் பையருக்குக் கணினியில் இப்போதே ஆர்வம். எங்க குட்டிக் குஞ்சுலுவும் குட்டியாய் இருக்கையில் என் மடியில் உட்கார்ந்து கொண்டு நான் எழுதும்போது கீபோர்டை அழுத்தி விட்டுடும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஶ்ரீராமுக்கு இன்னமும் உடம்பு சரியாகலையோ? :(
பதிலளிநீக்குதீபாவளி நினைவலைகளோடு நாளை வருவார்.
நீக்குஅல்லது, முறுக்கு சுத்தும் டிபார்ட்மென்டில் இன்று வேலை கொடுத்திருக்கிறாரா பாஸ்?
நீக்குஅவருக்கு முறுக்கு சுற்றத் தெரியாது என்று நினைக்கிறேன். தெரியும் என்றால், அவர் சுற்றிய முறுக்கைப் பொரித்து, எனக்கு அனுப்பி நிரூபிக்கவேண்டும்.
நீக்குகடமை வா! வா! என அழைக்கிறது. சென்று/வென்று வருகிறேன். :)
பதிலளிநீக்குமீண்டும் வருக.
நீக்குஎன்ன போங்க! விடிஞ்சால் தீபாவளி! பக்ஷணம் எங்க வாடிக்கைக் காடரிங்காரங்க கிட்டே சொல்லி இருந்தேன்.இன்னமும் வந்து சேரலை. தொலைபேசியில் கேட்டால்,இதோ, அதோ! வந்துவிட்டேன் என்கிறார்கள்.திடீரென வேறே யாரைப் போய்க் கேட்பது. அவசரமாக இருக்கிற அரிசி மாவில் உளுந்து மாவு சேர்த்துத் தேன்குழல் பண்ணிட்டு, பொட்டுக்கடலையை வறுத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஏலக்காய், மு.ப. போட்டு நெய் காய்ச்சி விட்டு உருண்டையும் பிடிச்சு வைச்சுட்டு மருந்து கிளறி வைச்சுட்டு வரேன். அதையானும் நாளைக்கு உம்மாச்சிக்கு வைக்கலாமே! இவங்க எப்போ வந்து தருவாங்களோ! தெரியவே இல்லை! :( இதுவரை இம்மாதிரி வெளியே சொல்லி எல்லாம் பண்ணி வாங்கியது இல்லை. இந்த வருஷம் வேறே வழி இல்லை!:(
நீக்குஇங்க உறவினர் ஒருவர் சொன்னார்... பட்சணம் பண்ணித்தரும் சிலரிடம் சில நாட்கள் முன்பு கேட்டபோது, ஏகப்பட்ட ஆர்டர்கள் வந்துவிட்டது. அதனால் இனிமேல் அதிகமாகச் செய்ய முடியாது என்று ஆர்டரை ஏற்றுக்கொள்ளலையாம். அப்படீன்னா.... இந்தத் தலைமுறையில் பட்சணம் பண்ணத் தெரியாதவங்களும், எதுக்கு கஷ்டப்படணும் என்று நினைக்கறவங்களும் இயல்பாகவே முடியாதவங்களும் அதிகமாக ஆகிட்டாங்கன்னு தோணுது.
நீக்குஅது சரி... ஹோட்டல், இனிப்பு கடைகளில் வாங்கின இனிப்பை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் அர்த்தம் இருக்கிறதா? (புதன் கேள்வி)
பதில் அளிப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. மூக்கு பதிலும், பல்லி பதிலும் நானும் ரசித்தேன்.
ஒரு மனிதரின் அழகை விமர்சிக்கும் போது "முக்கும் முழியுமாக லட்சணமாக இருக்கிறார்" என்ற ரசனையில்தான் முக அழகே அடங்குகிறது என நான் நினைக்கிறேன்.அதனால் மூக்கைப் பற்றிய கேள்வி நியாயமானதே..
பகிர்வினுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூக்கும் முழியுமாக .. முதல் வார்த்தை தட்டச்சு பிழையினால் தன் சுழியை இழந்து அர்த்தம் வேறாக்கி காட்டுகிறது. இங்கு வானம் ஒரே கவிந்த மேகமாய் இருப்பதினால் என் முழியும் தன் திறனை இழந்து விட்டதோ..? :)
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு1) ஏதேனும் இரண்டு அணிகள் ஒன்றுக்கொன்று எதிராக ஆடும்போது - ஒரு அணியை ஆதரிக்காமல் விளையாட்டை இரசிக்க உங்களால் முடியுமா?
பதிலளிநீக்குவிளையாட்டை ரசிக்க முடியும். ஆனாலும் நன்றாக விளையாடும் அணியின் பக்கம் ஆதரவு தானாகவே செல்லும். இது மனித இயல்பு. இந்திய அணி ஹாக்கி நன்றாக விளையாடும். ஆனால் கடைசியில் தோற்கும்.
2) தீபாவளி வெடி / வாண வகைகளில் உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது? பயப்படுவது எதைக்கண்டு ?
பிடித்தது: தரை சக்கரம், புஷ்வாணம்.
பிடிக்காதது:பாம்பு மாத்திரை தரையெல்லாம் கறை.
பயப்படுவது:ராக்கெட். (நான் ISRO வில் இருந்து ஒய்வு பெற்றவன்!!!!). ராக்கெட் எங்காவது சென்று ஏதாவது தீ விபத்தை உண்டாகி விடுமோ என்று பயம்.
முதல் படம் எடுப்பது மிகக் கடினம். DSLR வேண்டும். ஹை ஸ்பீடில் தொடர் freeze ஷாட் எடுக்கவேண்டும். நிற்பவர்கள் எல்லோரும் ஒரே நேரத்த்ல் தலையை உயர்த்த வேண்டும். இது போன்று பல சிக்கல்கள். இதனால் இந்த படம் எடுத்தவரைப் பாராட்ட வேண்டும். (fashion tv யில் இது போன்ற ஷாட்களை காணலாம். ஹி ஹி )
இரண்டாம் படம். செல்லங்களிலும் மு ஜா மு உண்டு!
மூன்றாவது படம் பேத்தியை நினைவு படுத்தியது. ஒரு வயதில் இது போன்று லேப்டாப் கி போர்டில் விளையாடுவாள். அவள் வந்தால் நான் உடனே FG யில் Bambam என்ற விளையாட்டை போட்டுவிடுவேன். (இப்போது அது இல்லை). அதில் கி அழுத்த அழுத்த ஏதாவது நாய், பூனை, குரங்கு போன்று படங்கள் வரும். mouse function களும் உண்டு. கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு போய்விடுவாள்.
Jayakumar
விவரமான, விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குமூக்கு ஆராய்ச்சி - :)
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் நன்று. படங்களும் ரசித்தேன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎங்களுக்கான கேள்விகளையும், படங்களையும் ரசித்தேன்.
ஏதாவது ஒரு அணியை அதிகமாக விரும்பினால்தான் விளையாட்டில் ஸ்வாரஸ்யம் வரும்.
வாசனைகளில், மழை பெய்தவுடன் ஏற்படும் மண் வாசனை போல், வெடி வாசனை எனக்குப் பிடிக்கும். ஆனால் அச்சுறுத்தும் சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் கொஞ்சம் பயந்தான்.
தீபாவளி நினைவுகள் என்ன சொல்ல...?
முதல் படம்.. நன்றாக உள்ளது. எனக்கும் விளம்பரத்தை நினைவு கூர்கிறது. ஆனால் இப்படி அனைவரும் ஒரே ஷாட்டிற்குள் வருவதற்கு அந்த புகைப்படம் எடுத்தவருக்கு எவ்வளவு சிரமாகி இருக்குமோ எனத் தோன்றுகிறது. அப்படியும் அந்த வரிசையில் முதல் பெண் கொஞ்சம் தனக்கென்ற சான்ஸை தவற விட்டு விட்டார் போலும்.
இரண்டாவது.. அந்த குட்டிச் செல்லம் "போதும்.. இளங்கன்று பயமறியாதது என்பதை போல் அடுத்து வெடிகளையும் எடுத்து பயன்படுத்தி விடாதே" என பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறது.
மூன்றாவது.. அருகில் இத்தனை விளையாட்டு பொருட்கள் இருந்தாலும்,மேலும் நீங்கள் புதிது புதிதாக நிறைய வாங்கித் தந்தாலும், எனக்கு என்னவோ இந்த கணினிதான் பிடித்திருக்கிறதுப்பா." என்று தன் அப்பாவிடம் அந்த அழகான குழந்தை சொல்கிறது.
பகிர்வினுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெடி வாசனை பிடிக்குமா? போன ஜென்மத்துல எந்த நாட்டுல எந்தப் போர்க்குழுல இவங்க பிறந்திருப்பாங்க? இல்லை வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வெடி வாசனைக்குப் பழகி இருப்பாங்களோ?
நீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி. (எனக்கும் வெடி வாசனை தீபாவளி நினைவுகளைக் கொண்டுவருவதால், ரொம்பப் பிடிக்கும்!)
நீக்குஎனக்கும் என் முன் ஜென்ம வாசனை (சே..!இங்கும் வாசனை வந்து விட்டது.) என் முற் பிறவி பற்றி அறிந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. வீராங்கனை (அட.. முன் ஜென்மத்திலாவது தைரியலக்ஷ்மி என்னுடன் வாசம் செய்திருக்கிறாளே..) என குறிப்பிட்டது சந்தோஷமாக இருக்கிறது. சகோதரர் நெல்லைத் தமிழருக்கு மேலும் இது குறித்த (முன் ஜென்மம்) விபரங்கள் தெரிந்தால், கூறவும். ஹா ஹா ஹா.
நீக்குவிளையாட்டுக் கேள்விகள் அருமை... + பல்லுக்கு அப்புறம் தானே லி...!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குலட்சுமணன் பழமும் உண்டா என்று கேட்பார்களோ ?
பதிலளிநீக்குஎதற்கும் wiki பார்த்து வைத்துககொள்கிறேன்!
நீக்கு//இரண்டு அணிகள் விளையாடும்போது//- சொன்னால் வித்தியாசமாக இருக்கும். என்னால் எந்த லைவ் போட்டிகளையும் பார்க்க முடியாது. நான் நினைக்கும் அணி தோல்வி அடையும்போது நான் தோல்வி அடைவதுபோல மனசு டிப்ரஸ்ட் ஆயிடும். ரிசல்ட் தெரிந்து, அது எனக்குப் பிடித்தமானதாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு மேட்சையும் பார்ப்பேன், அப்படி ரீப்ளேயைப் பார்க்கும்போது அதே டென்ஷனுடன் ஆர்வமாகப் பார்ப்பேன்.
பதிலளிநீக்குஎங்க வீட்டுல லைவ் மேட்சுகளை மத்தவங்க பார்க்கும்போது நான் அந்தப் பக்கமே போவதில்லை... எந்த விளையாட்டு என்றாலும்.
கிட்டத்தட்ட என் கேஸ்தான்!
நீக்குசும்ரன், நமீதாவை இன்னும் நினைவு வைத்திருப்பதால் ரசிகர்களில் சிறந்தவர் ஜெயக்குமார் சாராக இருக்குமோ?
பதிலளிநீக்குஹா ஹா ! (அதிலும் மூக்கு !! ) அவரே பதில் சொல்லட்டும்.
நீக்குஐயா சிம்ரன் நமீதா கால கட்டங்களில் நான் மலையாள நாட்டில் இருந்தேன். நான் ரசித்தது நாட்டியப் பேரொளி, நடிகையர் திலகம், கன்னடத்து பைங்கிளி ஆகிய மூவரைதான், அதுவும் நடிப்பிற்காக.
நீக்குJayakumar
:)))
நீக்குநானும் அனுஷ்க்காவை நடிப்புக்காகத்தான் ரசிக்கிறேன்.
நீக்கு@ கில்லர் ஜி..
பதிலளிநீக்கு// லட்சுமணன் பழமும் உண்டா என்று கேட்பார்களோ ?..//
இப்படியெல்லாம் கேட்டால் -
அனுமான் பழம் என்று எதையாவது சொல்லி யூடியூப்பில் போட்டு விடப் போகின்றார்கள்...
:)))
நீக்குஸ்ரீராம் அவர்கள் கண்ணில் படுவதே இல்லை.. ஏன்?..
பதிலளிநீக்குஇன்னும் உடல் நலம் சரியாகவில்லையா!?..
நாளை வருவார்.
நீக்குஇன்னமும் முழுமையான நலம் பெறவில்லை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குராமாஃபல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை.அது சரி சீதா பழமா? சீத்தாப்பழமா?
எனக்கும் அந்த டவுட் இருக்கு.
நீக்குஒரு வாயால் சாப்பிடுவதும், பேசுவதுமே அளவிற்கு மீறி விடுகிறது, இதில் இரண்டு வாய்களா? மை காட்! தாங்காது.(இது கூட ஒரு சினிமா டயலாக்தான்)
பதிலளிநீக்குஎந்த சினிமா?
நீக்குநாகேஷின் குரலும் நினைவுக்கு வருகிறதா? அது அவரின் வெற்றி. எம்.ஆர்.ராதாவின் வசனங்களை நினைவு கூறும் பொழுது அவருடைய குரல், மாடுலேஷனோடுதானே நினைவு கூறுவோம்.
பதிலளிநீக்குஹாஹாஹா, அதே மாதிரி "ஜிவாஜி" என்றால் சிம்மக்குரல் நினைவுக்கு வரணுமே! இஃகி,இஃகி,இஃகி! அப்பாடா! ரொம்ப நாளாச்சுத் தமிழில் சிரிச்சு! :))))
நீக்குஹாஹாஹா, அதே மாதிரி "ஜிவாஜி" என்றால் சிம்மக்குரல் நினைவுக்கு வரணுமே!// இல்லையா பின்னே..?
நீக்குஆனால் திருவிளையாடல் படத்தில் மட்டும், சிவாஜியின் ஒவ்வொரு வசனத்துக்கும் counter கொடுத்த நாகேஷ் வசனங்கள் சூப்பர் ஆக இருந்தன.
நீக்குஇரண்டு அணிகள் ஆடும் பொழுது ஏதாவது ஒரு அணி பக்கம் சார்ந்தவை தவிர்க்க முடியாது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளை பாதியிலிருந்து பார்க்கும் பொழுது நன்றாக ஆடுபவரின் ஆட்டத்தை ரசிக்க முடியும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குகேள்விகளும் பதிலும் அருமை.
பதிலளிநீக்குவிளையாட்டை ரசிப்பது என்றால் இருபக்க திறமையாளர்களையும் ரசிக்க வேண்டும்.
வெடிகளில் ஆட்டம் பாம் எனும் அணுகுண்டு பிடிக்காது.
தீபாவளி நினைவுகள் நிறைய இருக்கிறது.
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதீபாவளி வெடி,வாணங்களில் தரைச்சக்கரம், புஸ்வாணம் போன்றவை பிடிக்கும்.
பதிலளிநீக்குஃபேன்ஸி வாரங்கள் பிடிக்காது, காரணம் விலை அதிகம், திருப்தி குறைவு.
சர வெடி பிடிக்கும். இந்த வருடம் சரவெடிக்கு தடையாமே???:((
பயப்படுவது ஏரோப்ளேன் என்னும் வெடிக்கும், விஷ்ணு சக்கரம் என்ற வானத்திற்கும்.
காரணம் முதலாவது வைத்தவர் மேலோ அல்லது பக்கத்தில் இருப்பவர் மேலோ பாயும் அபாயம் உண்டு. ஒரு முறை என் அண்ணன் வைத்த ஏரோப்ளேன் எதிர் வீட்டு திண்ணைக்கு பாய்ந்து அங்கு உலர்த்தியிருந்த வேட்டியை பதம் பார்த்து விட்டது. அந்த வீட்டு ஆண்கள் அதை சுலபமாக எடுத்துக் கொண்டாலும், மாமி சண்டைக்கு வந்து விட்டார் அதனால் எங்கள் அம்மா மிச்சமிருந்த ஏரோப்ளேன்களை வெடிக்க விடவில்லை.
என் சிறு வயதில் தரை சக்கரத்தை கம்பியில் கோர்த்து விஷ்ணு சக்கரம் என்று வரும். அதை கவனமாக பிடித்துக் கொள்ளாவிட்டால் கையில் பாய்ந்து விடும் எனவே பயம்.
ஆம், நீங்க சொல்லியிருப்பது எல்லாமே என் அனுபவத்திலும் பார்த்தது உண்டு.
நீக்குசெல்ஃபோனில் டைப்புவதால் வாணம் என்று வர வேண்டியது ஒரு முறை வாரம் என்றும், இன்னொரு முறை வானம் என்றும் வந்திருக்கிறது.
பதிலளிநீக்குபுரிந்துகொண்டோம்.
நீக்குதீபாவளி என்றால் பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..?
பதிலளிநீக்குஎல்லாத்தையும் சொல்லுங்க. தனி பதிவாக எழுதி அனுப்புங்க.
நீக்கு1. நீர் புஸ்வாணம்
பதிலளிநீக்கு2. முதலில் பட்சணம், அப்புறம்தான் வெடி.
3. Happy diwali greetings எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்.
ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! Have a safe Deepavali! சானிடைஸர் கையோடு வெடி வைக்க வேண்டாம்.
பதிலளிநீக்குஆம். எல்லோரும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
நீக்குதீபாவளி வெடியில் எனக்குப் பிடித்தது - ஹாஹா... எனக்கு சாட்டை பிடிக்கும். ஒளி வரும், ஆபத்தில்லாத வெடிகள்தான் பிடிக்கும். சத்தம் வருவதே பிடிக்காது.
பதிலளிநீக்குதீபாவளி என்று நினைத்தவுடனே - வெடிச் சப்தம்தான். எனக்கு அலர்ஜி. வெளில எங்கயும் போக முடியாது. எங்க எவன் வெடி வெடிக்கிறான்னே தெரியாது. எனக்கு வெடிச் சப்தம் பிடிக்காது
ஆச்சரியமா இருக்கு!
நீக்குதீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு