திங்கள், 15 நவம்பர், 2021

"திங்க"க்கிழமை  :   நிலக்கடலை / வேர்க்கடலை மசாலாக்கறி - கீதா ரெங்கன் ரெஸிப்பி 


 நிலக்கடலை/வேர்க்கடலை மசாலா கறி

ஒரு தவறு நேர்ந்துவிட்டது. நிலக்கடலை மசாலா கிரேவி என்று இரு ரெசிப்பி வைத்திருந்தேன். அதில் ஒன்று முன்னர் வந்த வட இந்தியாவில் செய்வது போன்ற ரெசிப்பி. இது கொஞ்சம் வேறு டக்கென்று செய்யும் ரெசிப்பி. இதற்கான படங்கள் அனுப்புவதற்குப் பதில் தெரியாமல் முன்னர் வந்த ரெசிப்பி படங்கள்  அனுப்பிவிட்டேன். அதைக் கோடிட்டுக் காட்டிய பானுக்காவிற்கு மிக்க மிக்க நன்றி. எனக்குக் குழப்பம் என்னடா இது இரு ரெசிப்பி அனுப்பிருந்தேனே என்று. அதன் பின் பார்த்த பிறகுதான் என் தவறு தெரிந்தது அதே படங்கள் என்று. எனவே இங்கு கடைக்குச் சென்று சாமான் வாங்கி வந்து டக்கென்று இப்போது அதே ரெசிப்பி வேர்ட் டாக்குமென்டாக இருந்ததால் அதை அப்படியே செய்து, என் லேப்டாப்பை தண்ணீருக்குப் பயந்து லாஃப்டில் வைத்திருப்பதால், அருகில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் லேப்டாப்பில் படங்களை ஜஸ்ட் கொலாஜ் செய்து இதை ஸ்ரீராமிடம் பேசி அனுப்புகிறேன். 

ஸாரி ஸாரி ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க.

ஸ்ரீராம் ப்ளீஸ் உங்களுக்கும் வெரி ஸாரி சொல்லிக் கொள்கிறேன் தொந்தரவிற்கு.

எபி 'திங்க' ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கம்.  இன்னும் பல செய்முறைகள் இருக்கின்றன. படங்கள் கோர்த்து எழுதி ஸ்பாஆஆஆ. அதனால் செய்முறை சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறேன். எங்கள் வீட்டில் நிலக்கடலை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். சும்மாவே வெந்து உப்பு போட்டு அல்லது அதோடு காய்கள் கலந்து பீச் சுண்டல் போல சலாட் போலவும் செய்து சாப்பிடுவதுண்டு. அப்படி ஒரு முறை கொஞ்சம் அதிகமாக இருந்ததை இப்படிச் செய்தேன். 

செய்முறை

இதற்குத் தேவையானவை :

நிலக்கடலை – 100 கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் 4 டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைக்கவும்

பெரிய வெங்காயம் – 1 பொடியாகக் கட் செய்து கொள்ளவும்

சின்ன வெங்காயம் – 10-12 உரித்துச் சிறிய துண்டுகளாகக் கட் செய்து கொள்ளவும்.

பூண்டு – சிறியது என்றால் 2, பெரியது என்றால் 1  பொடியாகக் கட் செய்துக்கோங்க

கடுகு – 1 ஸ்பூன்

ஜீரகம் – 1 ஸ்பூன்

பட்டை – சிறியதாக 2, 3 துண்டுகள்

ஏலக்காய் – 1

கிராம்பு -1

பிரிஞ்சி இலை -1

பச்சை மிளகாய் – 2 கீறி வைத்துக் கொள்ளவும்

புளி – கெட்டியாகக் கரைத்தது 1 ஸ்பூன் அல்லது புளி பேஸ்ட் – 1 ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு கட் செய்து கொள்ளவும்

சுக்குப் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

கொத்தமல்லிப் பொடி + மிளகாய் தூள் – சேர்த்து 1 ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையானது

வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, கடுகு வெடிக்கும் போது ஜீரகம் தாளித்து, மசாலாப் பொருட்கள் போட்டு வறுபட்டதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி, சுக்குப் பொடி, மஞ்சள் தூள், தனியா + மிளகாய்த் தூள் கலந்தது போட்டு நன்றாகச் சுருள வதங்கியதும், அதில் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதை தனியாக எடுத்து வைத்திருக்கும் வெந்த கடலை 4 டேபிள் ஸ்பூனுடன் சேர்த்து மையாக அரைத்துக் கொண்டு அரைத்து வைக்கவும்.

வாணலியில் வதங்கும் மசாலாப் பொருளுடன் வெந்த கடலையை அதோடு இருக்கும் தண்ணீருடன் சேர்த்து, கெட்டிப் புளிக்கரைசல் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, தேவையான உப்பையும் போட்டுக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்து கொஞ்சம் சேர்ந்துக் கெட்டியாகக் குழம்பு போன்று வந்ததும் கிரேவி ரெடி.




நன்றி நவிலல்! எபி ஆசிரியர்களுக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் ஹிஹிஹி!!!! மிக்க மிக்க நன்றி.  மீண்டும் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


79 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோருக்கும்
    எல்லா நாட்களிலும்
    இறைவன் அருகில் இருந்து காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.    இறைவன் காக்கட்டும்.

      நீக்கு
  2. அன்பு கீதா ரங்கனின் ரெசிப்பியா இன்று!!
    மிக வித்தியாசமாக இருக்கும்.

    வேர்க்கடலை அப்படியே சாப்பிடலாமே:)))))

    இப்படியும் சாப்பிடலாமோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேர்க்கடலை சட்னி செய்வோம்.  வேர்க்கடலையை குழம்பில், புளியோதரையில் போடுவோம்.  இது எனக்கு புதுசு.

      நீக்கு
    2. ஆமாம் மா. புளியோதரைக்கும் வேர்க்கடலைக்கும் மிகப் பொருத்தம்.

      குழம்பில் இது வரை போட்டதில்லை.
      நவம்பர் மாதம் வேர்க்கடலை வண்டியின்
      ஓசை கேட்பது போல ஒரு பிரமை:)

      நீக்கு
    3. இது எனக்கும் புதுசுதான். நான் வேர்கடலையை புளியோதரை, எலுமிச்சை சாதம், சட்னி மற்றும் பைங்கன் பர்த்தா போன்றவைகளுக்கும் பயன்படுத்துவேன் என் மனைவி எனக்காக வேர்கடலையை மிளகாய் தூள் சேர்த்து வறுத்து வைத்திருப்பாள் அடிக்கடி அதை சாப்பிடுவேன் சில சம்யங்களில் முழு வேர்கடலையை வாங்கி அவித்து உண்போம்..

      வேர்கடலை என்று பொது நினைவிற்கு வருவது இங்கு மிடில் ஸ்கூல் வரைக்கு வேர்கடலையை யோ அல்லது அதை வைத்து தயாரித்தா ஸ்னாக்குகளையோ பள்ளிக்கு எடுத்து வர தடை உண்டு. உங்கு பலருக்கு அந்த கடலையை முகர்ந்தாலே அல்ர்ஜி வந்து விடும் உயிருக்கும் பிரச்சனை அதனால் அதற்கு இங்கு தடை

      நீக்கு
    4. எதனால வேர்க்கடலையை அலர்ஜிக்குத் தொடர்புபடுத்தறாங்கன்னு தெரியலை. வேர்க்கடலை, கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றை அவாய்ட் பண்ணச் சொல்றாங்க.

      நீக்கு
  3. அதுவும் சுக்குப்பொடி வேறு சேர்ப்பது

    வாயுவுக்கு இதமாக இருக்கும்.

    வேறெதுவுடனும் சேர்க்காமல் அப்படியே சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
    மசாலா தான் இப்போ பிடிப்பதில்லை. வெங்காயமும் சேர்ப்பதில்லை.


    சின்னப் பசங்களின் ஏகோப்த்த வரவேற்பைப் பெறும் என்று தோன்றுகிறது.

    இந்த செய்முறை ப்ரசன்டேஷனே நல்ல கலை.
    அதை அருமையாகச் செய்திருக்கிறார் கீதா.
    அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி, பஞ்சாபி/காஷ்மீரி உணவுப் பதார்த்தங்கள் செய்முறையில் சுக்குப் பொடி, சோம்புப் பொடி தனியாகவும் சேர்ப்பது உண்டு. அங்கே இருக்கும் அதீதக் குளிருக்கு வாயுத் தொந்திரவு இல்லாமல் இருக்கும்.

      நீக்கு
    2. ஹிஹிஹி, இங்கேயும் அந்தப் பதிவில் உள்ளே அதே பொடிகள் இருக்கின்றன. ஶ்ரீராம் தான் தப்பாய் மறுபடி பப்ளிஷ் செய்துட்டாரோ? பானுமதியின் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்னா இரண்டும் ஒரே செய்முறைதான் என்பதை அவரும் மறந்திருக்கார்! ஓரமாக் கொஞ்சம்போல் சந்தோஷம் எட்டிப் பார்க்குதே! :))))))))

      நீக்கு
    3. அந்தப் பதிவில் இந்தச் செய்முறை எனக்குத் தெரிந்ததுதான்னு சொல்லலை.:)))))

      நீக்கு
    4. இதையே வறுத்த வேர்க்கடலைகளைத் தோல் உரித்துக்கொண்டு தேங்காயோடு மசாலா சாமான்கள் சேர்த்து அரைத்துக் கோக்கம் புளியோடு சேர்த்தும் செய்வார்கள். அநேகமாக இது விரத உணவு. அதிலும் நவராத்திரியில் முக்கியமாக விரதம் இருப்பவர்கள் இப்படிச் சமைப்பார்கள்.

      நீக்கு
    5. பதிவு திருத்தப்பட்டுள்ளது.  படங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. அனைவரும் மறுபடி பதிவை முதலிலிருந்து படிக்கவும்!!!

      நீக்கு
    6. படிச்சுட்டேன் அப்போவே. கமென்டவில்லை. :)

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரும் நாட்கள் எந்தவிதப் பிரச்னைகளும் இன்றிக் கடக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. மஹாராஷ்ட்ரா/குஜராத் மக்களின் விருப்பமான உணவுச் செய்முறை. இதே போல் மஹாராஷ்ட்ராவில் கறுப்புப் பட்டாணி என்னும் ஒருவிதமான பட்டாணியிலும் செய்வார்கள். இதே செய்முறைதான். நானும் பண்ணி இருக்கேன். பூண்டு சேர்க்காமல். வெர்க்கடலை/முழு மொச்சைப் பருப்பு ஆகியவற்றில் பண்ணுகையில் பூண்டு சேர்த்தால் வாயுக் கொள்ளாது. ஆதலால் நான் அதிகம் மொச்சையில் செய்வதில்லை. எப்போதேனும் அபூர்வமாக!

    பதிலளிநீக்கு
  6. வழக்கம்பொல் வித்தியாசமானதொரு செய்முறையைக் கொடுத்து அசத்திய கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள். சாப்பிடவும் ஆர்வமும், ருசியும் உள்ளவர்கள் வேண்டும். எங்க வீட்டில் இப்போல்லாம் இது போணி ஆவது கஷ்டமாக இருக்கிறது. அநேகமாக வேர்க்கடலைச் சுண்டல் செய்து அதில் சாட் மாதிரிச் சாமான்கள் சேர்த்துச் சாப்பிடுகிறோம். சப்ஜி எல்லாம் செய்தால் செலவே ஆகிறதில்லை. :(

    பதிலளிநீக்கு
  7. இன்னமுமா என்னோட தக்காளி சாதத்தையும் மடர் பனீரையும் சாப்பிட்டுக் கொண்டிருக்காங்க? ஆனால் ஜீரணத்துக்குத் தான் உடனடியாக அழல் அமுதம் கிடைக்குதே, அதான் போல! :)))))

    பதிலளிநீக்கு
  8. வேர்கடலை தக்காளி எல்லாம் விலை ஏறும் போதுதான் வேர்கடலை கறி செய்முறையை ஸ்ரீராம் வெளியிடுவார்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்காளி இங்கே கிலோ அறுபது ரூபாயில் இருந்து எழுபத்தைந்து ரூபாய் வரை விற்கிறது. வேர்க்கடலை எல்லா மளிகைக்கடைகளிலும் ஒரே விலை தான். பச்சை வேர்க்கடலை தான் இப்போக் குறைந்திருக்கிறது. டிசம்பரில் மறுபடி வர ஆரம்பிக்கலாம். இந்தக் கூட்டைப் பச்சை வேர்க்கடலையில் செய்தால் இன்னமும் சுவை. ஊற வைக்க வேண்டாம்.

      நீக்கு
    2. இதெல்லாம் கூட நாம மன்னித்து விட்டுவிடலாம் ஹிஹி. ஆனா பாருங்க, ஏப்ரல் மே மாதங்களில் செய்த குல்ஃபி ஐஸ்க்ரீம் செய்முறையை, டிசம்பர்/ஜனவரில வெளியிடுவார் பாருங்க... அதுதான் கஷ்டமாக இருக்கும். மாங்காய் வைத்துச் செய்யும் செய்முறைகள், மாவடு போன்றவற்றையும் மார்ச் ஏப்ரலில் வெளியிடாமல் நவம்பரில் வெளியிட்டு கடுப்பேத்துவார் ஹா ஹா.

      நீக்கு
  9. புதிய செய்முறை. இதில் உள்ள பல ஐட்டங்கள் உபயோகிப்பதில்லை.

    கார்த்திகைக்கு வேர்க்கடலை உருண்டை சாப்பிடலாம்னு எண்ணம்.

    ஆனால் பசங்க, இந்த மசாலா வேர்க்கடலையை விரும்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெண்டும் பண்ணலாம், போத்! எங்க வீடுகளில் வேர்க்கடலை உருண்டை கார்த்திகைக்குப் பண்ணுவதில்லை. அது ஏன்னு தெரியலை.

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். இந்திய நேரப்படி இன்று (கனடாவில் நாளை) முதல் பிறந்த நாள் கொண்டாடும் என் பேத்தி சாயிஜனனியை ஆசிர்வதியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பேத்தி சாய்ஜனனிக்கு எங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும். பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடவும் பிரார்த்தனைகள். நீங்க நேரம் தெரிந்து கொண்டு ஸ்கைப் மூலம் பார்க்கலாம். எங்க குட்டிக்குஞ்சுலுவின் ஆயுஷ்ஹோமத்தை நாங்க அப்படித் தான் பார்த்தோம். அதில் இருந்தவாறே பிள்ளை/மாட்டுப்பெண்/பேத்தி ஆகியோர் எங்களை நமஸ்கரிக்கவும் செய்தார்கள். :))))))

      நீக்கு
    2. என் அண்ணா பெண் பெயரும் சாய் ஜனனி தான், தினமலரில் "பட்டம்" எழுதித் தயாரித்துக் கொண்டிருந்தாள். இப்போது இல்லை. வேலையே கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்னு வீட்டைத் தான் பார்த்துக்கிறாள்.

      நீக்கு
    3. நீங்க நேரம் தெரிந்து கொண்டு ஸ்கைப் மூலம் பார்க்கலாம்.// நான் கனடாவில்தானே இருக்கிறேன். அதனால் நேரிலேயே கலந்து கொள்ளலாம்.

      நீக்கு
    4. எங்கள் பூரண நல்லாசிகள் உரித்தாகுக. பல்லாண்டுகள் சந்தோஷமாக, வளமாக நலமாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

      நீக்கு
    5. உங்கள் பேத்தி சாய்ஜனனிக்கு எனது வாழ்த்துகளும், ஆசிகளும், பிரார்த்தனைகளும்

      நீக்கு
    6. சாய்ஜனனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவனருளால் ஆனந்தம் பலபெற்று தீர்க்காயுசாக இனிதே வாழட்டும்!

      நீக்கு
    7. தங்களது பெயர்த்திக்கு எமது வாழ்த்துகளும்கூடி....

      நீக்கு
    8. ஹிஹிஹி, அ.வ.சி. அ.வ.சி. கனடா பேத்திக்கா? நான் பிள்ளை வயிற்றுப் பேத்திக்கோனு நினைச்சுட்டேன். ஆனால் இப்போ இருக்காதேனும் தோணினது. :) இருந்தாலும் வழிஞ்சாச்சு! :)))))

      நீக்கு
    9. சாய்ஜனனிக்கு வாழ்த்துகள். இறையருளால் நன்னலம் பெற்று நல்ல நிலைக்கு உயரட்டும்.

      வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன் (ஹா ஹா)

      அப்புறம் (இப்போ கனடா) என்று எழுதியதைப் படித்ததும் எனக்கு ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர்தான் பதிவில் மற்றும் பின்னூட்டத்தில், தற்போது ஜாகை ... என்று எழுதுவார். அவர் பதிவு எழுதியும் பல வருடங்கள் ஆகிவிட்டதுபோலப் பிரமை.

      நீக்கு
    10. வணக்கம் பானுமதி சகோதரி

      தங்களது மகள் வயிற்று கனடா பேத்தி சாய்ஜனனிக்கு என் அன்பார்ந்த முதல் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு, சீரும் சிறப்புமாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.(பிறந்த நாள் கொண்டாட்டம் நாளை என்கிற போது இங்கு என் தாமதமான வாழ்த்துகள் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.) வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    11. //வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் (ஹா ஹா)// ஹலோ பிறந்த நாள் எனக்கல்ல,
      என் பேத்திக்கு(இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை)

      நீக்கு
  11. சமீபத்தில் தானே வேர்க்கடலையை வைத்து ஒரு சப்ஜி கீதா ரங்கன் அனுப்பியிருந்தார்? அதையே இன்னும் செய்யவில்லை அதற்குள் மற்றொரு வேர்க்கடலை ரெசிபி. மீள் பதிவா? கடைசியில் எ.பி.வாசகர்கள் உஷாராக இருக்கிறார்களா? என்று செக் பண்ணுவதற்காக போட்டோம் என்று சொல்லிவிடப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமீபத்தில் தானே வேர்க்கடலையை வைத்து ஒரு சப்ஜி கீதா ரங்கன் அனுப்பியிருந்தார்?// அது என்ன? நினைவில் இல்லையே?

      நீக்கு
    2. கீசா மேடம்... 15 மணி விமானப் பயணத்தில், எபியின் முதல் பதிவிலிருந்து படித்திருப்பார். அதனால் எதுவும் அவருக்கு 'சமீபத்தில்' என்றுதானே தோன்றும்.

      நீக்கு
    3. சமீபம் தான், ரொம்ப ரொம்பசமீபம். அக்டோபரில் போட்டிருக்கார் இதே நீக்கப்பட்டப் பதிவை. அதையே ஶ்ரீராம் திரும்பப் போட்டிருக்கார்/அல்லது தி/கீதா திரும்ப அனுப்பி இருக்கார்.

      நீக்கு
    4. கீதாக்கா பதிவு காலை வெளிவந்த கன்டென்ட் ஆனால் அந்தப் பதிவின் படங்கள் தான் அந்தப் பதிவின் படங்களாகிவிட்டன. என் தவறுதான் என்பதையும் இதோ இப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறேன்.

      இரு பதிவுகள் கடலை வைத்து ரெசிப்பிஸ். இரண்டாவதின் படங்கள் எல்லாம் ரிப்பெர் ஆன ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டுவிட்டதால்....செய்முறை மட்டும் வேர்ட் டாக்குமென்ட் மகனுக்கு அனுப்பிய மெயிலில் இருந்ததால் அதை எடுத்து மீண்டும் இங்கு நான் இருக்கும் எங்கள் ஊரில் இன்று காலை செய்து படங்கள் எடுத்து ஜஸ்ட் கொலாஜ் மட்டும் செய்து அனுப்பினேன் அதையும் பதிவில் சொல்லியிருக்கிறேன்...பாருங்க

      கீதா

      நீக்கு
    5. 15 மணி விமானப் பயணத்தில், எபியின் முதல் பதிவிலிருந்து படித்திருப்பார். அதனால் எதுவும் அவருக்கு 'சமீபத்தில்' என்றுதானே தோன்றும்.// கர்ர்ர்ர்.,...ர். இன்றைய பதிவிலிருந்து ஒரு வி‌ஷயம் புரிகிறது. எ.பி.யில் பாதி பேர் பதிவை ஒழுங்காக படிப்பதில்லை,(அந்த அணி தலைவர் யார் என்று சொல்ல வேண்டாம்)மீதிப் பேர் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை.‌ ஒழுங்காக படித்து, நினைவில் வைத்துக் கொள்கிறவர்கள் பாவம்.:((

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  13. நேற்று மதியத்திற்குப் பிறகு மீண்டும் காய்ச்சல்..

    நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். மருத்துவ ஆலோசனை / மருந்துகள் தவறாமல் பெறுங்கள். நலம் பேணி நலமடைய வாழ்த்துகள்.

      நீக்கு
    2. விரைவில் உடல் நலம் சரியாக வாழ்த்துக்கள்.
      விட்டு விட்டு காய்ச்சல் வருகிறதா?
      கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் உடல் நலத்தை.

      நீக்கு
    3. உடல் நலம் சரியாக பிரார்த்தனைகள்

      நீக்கு
    4. @ துரைசெல்வராஜு : விரைவில் உடல்நலம் தேறிவர ப்ரார்த்தனைகள்.

      நீக்கு
    5. மனதில் இறை சிந்தனை இருக்கும்போது கவலைக்கு இடமேது. விரைவில் குணமடைவீர்கள்

      நீக்கு
    6. காய்ச்சல் குறைந்து சகஜ நிலைக்கு வரப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

      தங்கள் காய்ச்சல் இப்போது குறைந்துள்ளதா? ஜுரத்திற்கான மாத்திரை, அல்லது சுக்கு,மிளகு (நிலவேம்பு அங்கு கிடைக்குமானால் அதையும் சேர்த்து.. அது ஜுரத்தை விரைவில் போக்கும். ) கஷாயம் மாதிரி வைத்து அடிக்கடி அருந்தி வரவும். உடல் நிலையை கவனித்து கொள்ளவும். விரைவில் தாங்கள் பூரண நலம் பெற இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. வேர்க்கடலை மசாலாக்கறி செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது கீதா.

    பதிலளிநீக்கு

  16. பேத்தி சாய்ஜனனிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். ஆசீர்வாதங்கள்.

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. சுவையான குறிப்பு. எனக்கும் வேர்க்கடலை பிடித்தது.

    பதிலளிநீக்கு
  19. @ கௌதமன்...

    // மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.//

    அப்படியெல்லாம் இல்லை.. இங்கே பருவ நிலை மாற்றம்.. எவ்வளவோ கவனமாக இருந்தும் - விதி விட வில்லை..

    பதிலளிநீக்கு
  20. அருமையான ரெசிபி கீதாக்கா ! கஸ்தூரி மேத்தி யின் மணமும், கடலையின் சுவையும், சுவைக்கூட்டியாய் அம்சூர் என்று நினைத்தாலே நன்றாக இருக்கும் என தோன்றும் செய்முறை. ரெசிபிக்கு நன்றி கீதாக்கா.

    பதிலளிநீக்கு
  21. பதிவு திருத்தப்பட்டுள்ளது.  படங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. அனைவரும் மறுபடி பதிவை முதலிலிருந்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது... பழைய பதிவை வைத்து செய்துகொண்டிருக்கிறேன்... இப்போ எல்லாமே வீணா? மறுபடியும் முதலிலிருந்தா?

      நீக்கு
  22. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    சகோதரி எப்படியிருக்கிறீர்கள்.? நலமா? அங்கு மழை வெள்ளம் குறைந்து நார்மல் நிலைமைக்கு திரும்பி விட்டீர்களா?

    தங்களது"திங்க" செய்முறையான நிலக்கடலை மசாலா கறி நன்றாக உள்ளது. நான் காலையில் பார்க்கும் போது வேறு விதமாக இருந்தது பிறகு மதியத்திற்கு மேல் வந்து கருத்துரை இடலாம் என போனேன். உறவினர்கள் ஃபோன்,வேலைகள் என உடனே வர இயலவில்லை. இப்போது பக்குவம், படங்கள் என முற்றிலும் மாறி விட்டது எனது கைபேசியில் முழுதுமாக சரிவர படிக்க இயலவில்லை. எப்படியோ முதல் பாராவை படித்து விட்டேன். செய்முறை அளவு குறிப்புகளும், கொலாஜ் படங்களும் படித்து பார்த்து விட்டேன். இதுவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி எப்படியிருக்கிறீர்கள்.? நலமா? அங்கு மழை வெள்ளம் குறைந்து நார்மல் நிலைமைக்கு திரும்பி விட்டீர்களா?//

      அக்கா நாங்கள் நலம். இங்கு வெள்ளம் எல்லாம் 3, 4 மணி நேரத்தில் வடிந்துவிடும். மறுநாள் முழுவதும் வடிந்துவிடும். கடைகள் எல்லாம் இருந்தன பால் மோர், தயிர் எல்லாமே கிடைத்தன!!!!!!!!

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
    2. /அக்கா நாங்கள் நலம். இங்கு வெள்ளம் எல்லாம் 3, 4 மணி நேரத்தில் வடிந்துவிடும். மறுநாள் முழுவதும் வடிந்துவிடும். கடைகள் எல்லாம் இருந்தன பால் மோர், தயிர் எல்லாமே கிடைத்தன!!!!!!!!/

      மிகவும் சந்தோஷம். பிரச்சனைகள் ஏதுமில்லாமலிருந்தால் சந்தோஷமே...ஆனாலும் ஜாக்கிரதையாக இருங்கள்.அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  24. என் மந்த கதியில் கூட இதென்னடா ,
    ஏற்கனவே படித்திருக்கிறோமே
    என்று தோன்றியது:)
    இப்ப மாத்தினதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வேர்கடலை மசாலாக் கறி அருமை.

    பதிலளிநீக்கு
  26. எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி கருத்திட்டமைக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. வித்தியாசமாக உள்ளது... படத்தை சேமித்து விட்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  28. துரை அண்ணா நலமா இப்போது பரவாயில்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. குழந்தை சாய்ஜனனியை வாழ்த்திய எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    நெல்லை தாத்தாவுக்கு சிறப்பு நன்றி;)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!