திங்கள், 8 நவம்பர், 2021

"திங்க"க்கிழமை :   எமா டட்ஷி (EMA DATSHI) - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

எமா டட்ஷி (EMA DATSHI)

Signature Dish of Bhutan

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், வெல்கம், Kuzu zangpo la (ஹலோ) Jen Pa Leg Sho  (வெல்கம்) பூட்டான் மொழியில்!!!!! (ட்ஜோங்கா அவர்கள் மொழி – Dzongkha)!

இன்று எபியில் நாம் அதிகம் அறிந்திராத ஒரு புதிய சர்வதேச ரெசிப்பி, அதுவும் நம் நாட்டை ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தேசிய உணவு.

மகன் இங்கு கல்லூரியில் படித்த போது அவன் வகுப்பில் பூட்டான் மாணவ மாணவியரும் படித்தனர். நல்ல நண்பர்கள்.  அப்போது அவர்களிடம் தெரிந்து கொண்ட அவர்களின் சைவ உணவுகளில் இதுவும் ஒன்று.

எமா டட்ஷி என்பது பூட்டானின் தேசிய உணவுகளில் ஒன்று. எமா என்றால் மிளகாய். டட்ஷி என்றால் பாலாடை/சீஸ்/பனீர்.

சீஸ், பச்சை மிளகாய் (எந்த வகையாக இருந்தாலும் சரி அல்லது வகைகள் கலந்தும்)/காய்ந்த சிவப்பு மிளகாய்,  பூண்டு இந்த மூன்றும் மட்டுமே பயன்படுத்திச் செய்வதுதான் பேஸ்.  

இதோடு வெங்காயம், தக்காளியும் சேர்த்தும் செய்வது உண்டு.

காய்கள் போட்டுச் செய்வது அடுத்தது. என்றாலும் சீஸ்/பனீர் பச்சை மிளகாய் பூண்டு சேர்க்காமல் செய்ய மாட்டார்கள்.

கேவா டட்ஷி – (KEWA DATSHI) உருளைக்கிழங்கு டட்ஷி

ஷமு டட்ஷி – (SHAMU DATSHI) மஷ்ரூம் டட்ஷி

ஷகம் எம டட்ஷி – (LOCAL DRIED BEEF WITH EMA DATSHI )

என்று பல வகைகள் இருக்கின்றன. அவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்குப் புரிய கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது மட்டுமில்லை மிக மிக மெதுவாகப் பேசினார்கள். கேட்பதும் சிரமமாக இருந்தது. இருந்தாலும் அவர்கள் சொன்ன போது நான் புரிந்து கொண்ட உச்சரிப்பின் படியும், மகனும் அவர்கள் பேசியதை எனக்கு விளக்கியதால் ஆங்கிலத்தில் எழுதி  அவர்களிடம் காட்டி சரியா என்றும் உறுதி செய்து கொண்டேன்.

பூட்டான் பசங்களுக்கு கல்லூரி விடுதியில் சாப்பாடு ஒத்துவரவில்லை – அவர்களைப் பொருத்தவரை நம் சாப்பாட்டில் காரம் மிகவும் குறைவு - என்பதால் தனியாக வீடெடுத்துக் குழுவாகத் தங்கினர்.

அவர்களின் சாப்பாடு வித்தியாசமான மிக அதிகக் காரமான (ஆந்திரா காரத்தையும் விட) ஆனால் அதே சமயம் ரொம்ப சிம்பிளான சாப்பாடு. நம்மைப் போல் குழம்பு, ரசம், பொரியல் என்று கிடையாது.

வித விதமான மிளகாய்கள் அவர்கள் ஊரில் கிடைக்குமாம். குளிர் பிரதேசம் என்பதாலோ என்னவோ காரம் மிக மிக அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சிவப்பு மிளகாய் வகைகளும் ஃப்ரெஷ் அல்லது காய்ந்ததும் பயன்படுத்துகிறார்கள்.  

சாப்பாட்டில் காய்கள் இருக்கிறதோ இல்லையோ மிளகாய் இல்லாமல் அவர்கள் உணவு எதுவும் கிடையாது. அவர்களைப் பொருத்தவரையில் மிளகாயை ஒரு காயாகவே பயன்படுத்துகிறார்கள் அல்லாமல் நம்மைப் போல் காரத்திற்காக, மசாலாவாக நினைப்பதில்லை.

அசைவமும் இப்படித்தான் செய்கிறார்கள். அவர்கள் ஊரில் குளிர் காலத்தில் காய்கள் அதிகம் கிடைக்காது என்பதால் வெங்காயம் தக்காளி மட்டுமே பயன்படுத்திச் செய்வார்களாம். இல்லை என்றால் பதப்படுத்தியக் காய்களைக் கொண்டும் செய்வார்களாம்.

மிளகாய் தவிர வேறு எந்தக் காரமும் கிடையாது. மிளகாய் மிளகாய் மிளகாய் மட்டுமே.

சிறு வயதிலிருந்தே மிளகாய்க் காரம் பழக்கிவிடுவார்களாம். காரம் இல்லை என்றால் உணவைத் தொடவே மாட்டார்கள். நம் வீட்டில் அவர்கள் சாப்பிட வந்தால் தட்டில் தனியாக நிறைய பச்சை மிளகாய்களை அப்படியேவோ அல்லது கொஞ்சம் வதக்கியோ வைத்துவிடுவேன்.

மகனின் பூட்டான் நட்புகள் நம்ம ஊர் மிளகாய்கள் காரமே இல்லை என்று அவர்கள் ஊர் மிளகாயைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டும் செய்தார்கள். நம்மூர் மிளகாய் என்றால் இருமடங்கு போட்டுச் செய்தார்கள்.

மிளகாய் அவர்களின் சடங்குகளிலும் மிகப் பிரதான பொருளாம். அதாங்க நம்ம ஊர்ல கண் திருஷ்ட்டி, பேயோட்டுவதற்குப் பயன்படுத்துவது போல அவர்கள் ஊரிலும் பயன்படுத்துவாங்களாம்.

அடுத்து அவர்கள் ஊர் காட்டேஜ் சீஸ்/பனீர் பற்றி…

அவர்கள் ஊரில் யாக் மாட்டினம், ஆடு மற்றும் மாட்டின் பாலிலும் தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் யாக் பாலில் எடுக்கும் பாலாடைக் கட்டிதான்.

இதை ச்சுர்ப்பி என்றும் சொல்கிறார்கள். இரண்டு வகை. ஒன்று மிருதுவான பாலாடைக்கட்டி. மற்றொன்று கொஞ்சம் கடினமானது.  

கடினமான வகையைப், பாலைப் புளிக்க வைத்து அதோடு புதுப் பாலை 5 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ப்பார்களாம். அதை தயிராக்கி அதில் வெண்ணை எடுத்த பிறகு அந்தத் தயிரில் பாலாடைக் கட்டி தயாரிப்பார்களாம். யாக் பாலில் எடுக்கப்படுவது.

யாக் பாலில் எடுக்கப்படும் வெண்ணெய் தான் அவர்கள் ஊரில் பச்சைத் தேநீர்ல் போட்டுக் குடிக்கிறார்கள்.

காரம் அதிகம் என்பதால் இந்தப் பாலாடையும், வெண்ணையும் இந்த உணவில் மிக முக்கியம்.

இதை அவர்கள் சாதத்துடன், ஃப்ரைட் ரைஸுடன், ரொட்டி, சப்பாத்தி, ப்ரெட் இவற்றோடும் சாப்பிடுகிறார்கள். அரிசிதான் முக்கிய உணவு. வெள்ளை அரிசி பயன்படுத்தினாலும் பெரும்பாலும் சிவப்பரிசி தான் பயன்படுத்துகிறார்கள்.

எமா டட்ஷி நான் இங்கு செய்திருப்பது போல் க்ரேவியாக அல்லது கெட்டியாகக் கறி போன்றும் செய்யலாம். அவர்களின் காரம் நமக்கு ஒத்துவராது. கண்டிப்பாக அழுவோம் மற்றும் கழிவறையிலேயே குடியிருக்க வேண்டியதாகிவிடும்!!!

எனவே, இங்கு கொடுத்திருக்கும் செய்முறையில் பச்சை மிளகாய்  குறைவுதான். இதோ செய்முறை

பெட்டியில் விடுபட்ட ஒன்று. வெங்காயம் தக்காளி எதுவும் நம் க்ரேவிக்கு வதக்குவது போல் அதிகம் வதக்காமல் ப்ரௌனாகாமல் வெந்து பளபளப்பாக இருக்க வேண்டும் அவ்வளவே.

(1)

(2)

(3)

(4)


எபி ஆசிரியர்கள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. Kadrin Cheyla (நன்றி)




55 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். அட! ஐ ஃபர்ஸ்ட்:)))

    பதிலளிநீக்கு
  2. பேரை படித்து விட்டு சென்ற வாரம் போல ஏதோ ப்ராங்க் பதிவு என்று நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை, நிஜமாகவே சமையல் குறிப்புதான். Something different!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Something different!//

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
    2. //சென்ற வாரம் போல ஏதோ ப்ராங்க் பதிவு என்று நினைத்தேன்.// ஹெஹெஹெஹெஹெ! ஆரம்ப காலங்களில் வம்புக்கு இழுத்ததை விட இப்போக் குறைவு தான். இதுக்கேவா? இஃகி,இஃகி,இஃகி! நம்ம ஶ்ரீராம் தானே!னு அனுப்பி வைச்சேன். அவருக்கும் பிடிச்சிருந்ததா போட்டுட்டார். இந்த மாதிரி இன்னும் எழுதி அனுப்பலாமானு யோசிச்சிங்க்!

      நீக்கு
  3. சிக்கிம் பூடான் மக்கள் மிளகாய் சாப்பிடுவதைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன். அவர்கள் வட்டாரத்தின் இயற்கை அழகைப் பற்றி நிறைய பேசுவார்கள். சாப்பாட்டைப் பற்றி சொல்லும் போது மட்டும் பயமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்பாதுரை ஜி. அவங்க ஊர் இயற்கை அழகை ரொம்பவே பெருமையாகப் பேசுவாங்க.
      இந்த செய்முறையில் இந்த அளவிற்கே அவங்க 20 மிளகாய் பயன்படுத்துவாங்க!!!!!!

      மிக்க நன்றி அப்பாதுரை ஜி

      கீதா

      நீக்கு
  4. நட்சத்திர ஹோட்டல்களின் வாடிக்கை சேவை பணியாட்களில் நிறைய பேர் சிக்கிம் பூடான் பிரதேசக்காரர்களைப் பார்க்கிறேன். நட்புடனும் சுலபமாகவும் பழகுகிறார்கள். குளிர் பிரதேசத்தில் மிளகாய் வளராது என்பார்கள்.. ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நட்புடன் பழகுவார்கள். பேசுவதும் மிகவும் ஸாஃப்டாகப் பேசுகிறார்கள்.

      அவங்க பிரதேசத்துல ஓரிரு வகைகள் மிளகாய்தான் அதுவும் கொஞ்சமாத்தான் வளருமாம். அதுவும் குளிர்காலத்தில். அதனால குளிர்காலத்துல காய்ந்த மிளகாய்கள் தான் விதம் விதமாக. காரசாரமான மிளகாய்கள் எல்லாம் இறக்குமதிதான் வகை வகையாக மெக்சிக்கன் வெரைட்டிஸ் உட்பட

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  5. புது வகையான சமையல் குறிப்பு. இன்டெரெஸ்டிங்.

    ஒவ்வொரு பிரதேச மக்களின் உணவுப் பழக்கங்கள் எவ்வளவு வித்தியாசமானவை என எண்ணத் தோன்றுகிறது.

    செய்முறை விளக்கம் நன்று. செய்துபார்க்கும் வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன்.

    காரம் இல்லாத ஆனால் இதே போன்ற உணவைச் சாப்பிட்ட நினைவு (துபாய் 7 ஸ்டாரில் ஒரு பார்ட்டியில்)

    குளிர் பிரதேசம் என்பதால் காரமும் கொழுப்பு சேர்ந்த உணவும் என நினைக்கிறேன். புதிய உணவு அறிமுகத்திற்கு கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பிரதேசத்து உணவும் வித்தியாசம் தான் என்றாலும் பலதும் அடிப்படையில் ஒன்றேதான்ன்னு எனக்குத் தோன்றுகிறது நெல்லை. ப்ராசஸ்தான் வித்தியாசம். பெயரும் வித்தியாசம்.

      ஆமாம் குளிர்ன்றதுனாலதான் காரம் சீஸ் எல்லாம்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. முதல் முறையாக, இந்த உணவைக் கேள்விப்பட்டதில்லையே என கீசா மேடம் சொல்லப் போறாங்க. இந்திய உணவுனா, ராஜஸ்தான் வேரியேஷன், மற்ற இடங்களின் வேரியேஷன்னு நிறைய எழுதியிருப்பார்.

    காமாட்சியம்மா படித்தால் இதன் நேபாள வேரியேஷனோ இல்லை பூடான் உணவு சாப்பிட்ட அனுபவமோ நமக்குத் தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நான் இந்த ரெசிப்பியை எழுதிய போது காமாட்சி அம்மாவை நினைத்துக் கொண்டேன்.

      இது திபெத், நேபாலிலும் கூட செய்வதுண்டு. அந்த ரீஜனில் இது உண்டு என்றாலும் பூட்டானின் சிக்னேச்சர் ரெசிப்பியாகச் சொல்றாங்க.

      திபெத்தின் துப்கா வரும்....படம் எல்லாம் இருக்கு ஆனால் குறிப்புகள் எழுதவில்லை வழக்கம் போல...

      கீதா

      நீக்கு
    2. நெல்லை இதில் பொதுவாக வேரியேஷன்ஸ் இல்லை. வேரியேஷன்ஸ் நான் கொடுத்திருக்கிறேன் பாருங்க...பதிவை சரியா வாசிக்கறதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. நிஜம்மாவே நான் சிக்கிம், புடான் எல்லாம் போனதில்லை. அந்த மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தெரியவும் தெரியாது. நேபாளத்திற்கும் திபெத்திற்கும் கயிலை யாத்திரையின் போது சென்றோம். ஆனால் உள்ளூர் மக்களுடன் பரிச்சயமெல்லாம் செய்துக்கலை.

      நீக்கு
  7. கேரள நாட்டுப் பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் கீதா ரங்கன்(க்கா) இன்னும் என்ன புதுவித செய்முறைகளோடு வந்து நம்மைக் கலங்கடிக்கப் போகிறாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை புயல் இங்குதான் மையம் கொண்டிருக்காக்கும்!!!!!

      கீதா

      நீக்கு
    2. என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா? கீதா ரெங்கன்/தி/கீதா, இப்போக் கேரளாவிலா இருக்கார்? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! எனக்குச் சுற்று வட்டாரத்தில் என்ன நடக்குதுனு தெரியறதே இல்லை. :(

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறைவன் அருளால்
    அனைவரும் ஆரோக்கியம், அமைதி ,ஆனந்தத்துடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. புத்தம்புது மிளகாய் ரெசிப்பி. பெயரில் எமா வந்தாலும்
    வயிற்றுக்குக் கேடில்லாமல் செய்யலாம என்றே தோன்றுகிறது.

    பூடான் விவரங்கள் மிக அருமை.

    பூடான் கிராம சமையல் செய்முறை கூட
    யூடியூபில் பார்த்திருக்கிறேன்.

    கீதாரங்கன் கொடுத்திருக்கும் வகை பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா இதுவும் யுட்யூபில் இருக்கும்...பாருங்க ஆமாம் அவங்க வெஜிட்டேரியன் என்பது ரொம்ப ரொம்ப சிம்பிள்தான். அத்தனை வெரடிட்டிஸ் இல்லை.
      எல்லாவற்றிற்கும் சீஸ் பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் உண்டு.

      அம்மா வயிற்றிற்கு கேடு இல்லவே இல்லை அம்மா. மிளகாய் குறைத்துக் கொண்டால் போச்சு. செய்து பாருங்க ரொம்ப சிம்பிளும் கூட

      மிக்க நன்றி வல்லிம்மா.

      கீதா

      நீக்கு
  11. சீஸ் பயன்படுத்தும் முறை, பனீர் செய்யும் முறை என்று ஏகப்பட்ட விவரங்கள்.
    முறையாக எடுக்கப் பட்ட படங்கள்.

    வண்ணக் கறிகாய்கள், விவரமான செய்முறை

    எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா வங்க யாக் சீஸ் / பாலாடைக்கட்டி செய்து அதுவும் புளித்த வாசனை இருக்குமாம் அதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  12. ஏகப்பட்ட கொலெஸ்டிரால் அடங்கி இருக்கும் உணவு. அவர்களுடைய
    குளிருக்கு இத்தனையும் வேண்டி இருக்கும். கடினமான உழைப்பு
    இருக்கும் மலைப் பிரதேசமாயிற்றே.

    அருமையான ரெசிப்பிக்கு மிக நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா உங்க ஊர்க் குளிருக்கும் கொஞ்சமா சாப்பிடலாம்!!!!!!!!!

      ஆஅமாம் கடின உழைப்புதான் ஏறி இறங்கி நடக்கவே சரியாகிடும்.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  13. நான் ஏதேதோ நினைச்சுட்டேன்..

    திங்கக்கிழமை அதுவுமா எமா டட்ஷி ன்னு ஒரு பொண்ணு மிட்ஷூ பிஷி கார் ஓட்டிக்கினு வருதுன்னு!..

    க்டேசில வேற கேதரின்.. ன்னு!..

    பதிலளிநீக்கு
  14. எமா டட்ஷி...
    நல்ல பேராத்தான் இருக்கு..

    இது மட்டும் கோடம்பாக்கத்துக்குத் தெரிஞ்சிருந்தா -

    நாப்பது கிலோ நாரத்தங்காய்..
    அம்பது. கிலோ ஆப்ரிகாட்!..

    அப்படின்னு பாட்டு கிளம்பியிருக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா இந்த வகை பாட்டு //நாப்பது கிலோ நாரத்தங்காய்..
      அம்பது. கிலோ ஆப்ரிகாட்!..// (இது உங்கள் வரிகள்னு தெரியுது)ஏதாச்சும் புதுசா வந்திருக்கா துரை அண்ணா?!!

      கீதா

      நீக்கு
    2. ஓ 50 கேஜி (எபி ஆசிரியர் கே ஜி அண்ணா குழம்பிடப் போறார்!!!!) தாஜ்மகாலைச் சொன்னீங்களோ?!!!

      கீதா

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    இன்றைய திங்களில் புதுவிதமான சமையலை புதுவிதமான பெயரில் அறிகிறேன். பூடான் நாட்டு சமையல் பழக்கவழக்கங்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும், அவரவர் பழக்கங்கள் இனிமை தானே..! அவர்கள் சமையலை விளக்கமாக நீங்கள் கூறியதும், செய்து காண்பித்ததும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க பழக்கவழக்கங்களும் சுவாரசியம்தான் கமலாக்கா.

      இங்கு போல மூட நம்பிக்கைகளும் நிறைய உண்டு.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  17. பூட்டான் தகவல்கள் நிறைய அறிந்து கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அறியாத தகவல்களோடு இது வரை அறிந்திரதா புது ரிசிப்பி. படமும் விளக்கமும் அருமை

    பதிலளிநீக்கு
  19. அனுஷ்கா பிறந்தநாளை எங்கள் ப்ளாக் மறந்துவிட்டதோ???

    பதிலளிநீக்கு
  20. பூட்டான் சமையல் நன்றாக இருக்கிறது.

    நமது நாட்டு சமையலும் காரம்தான் .



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உங்கள் பகுதி சமையலும் காரம் இருக்கும்...ஆனால் இது அதை எல்லாம் மிஞ்சி விடும் மாதேவி!!

      மிக்க நன்றி மாதேவி

      கீதா

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. பூட்டான் சமையல் முறை அவர்கள் உணவு பழக்க வழக்கம் சொன்னது அருமை.

    எமா டட்ஷி செய்முறை விளக்கமும் , படங்களும் அருமை கீதா.

    சத்து மிகுந்த உணவு அங்கு உள்ளவர்களுக்கு . நமக்கு ஏற்ற மாதிரி செய்முறையை செய்து காட்டியதற்கு நன்றி.








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. அவங்க காரம் அளவு நாம சாப்பிட முடியாது கோமதிக்கா..

      அதனால் குறைவாகப் போட்டுச் செய்தது. என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் ஈசியாகச் செய்துவிடலாம் என்பதால்...சுவையும் பிடிக்கும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  23. எ பி ஆசிரியர்கள் யாரையும் காணோம். வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதா? அல்லது மற்றவர்களுக்கு உதவ சென்று விட்டார்களா?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைக்குப் பயந்து...அங்கு கரன்ட் இருக்காது என்று நினைக்கிறேன் ஜெ கே அண்ணா..

      கீதா

      நீக்கு
    2. மழை, அலுவலகம், சாலைகள் இடைஞ்சல், நேரமெடுக்கிறது.  அரசாங்கத்தின் அரைகுறை அறிவிவிப்பும் கடுப்பேற்றுகிறது.  அதுதான்!

      நீக்கு
  24. அனுஷ்கா அவுட் அஃப் ஃபாஷன் ஆகும் நாளென்னாளோ

    ஆரிதைப் பகர்வா ரிங்கே .

    பதிலளிநீக்கு
  25. புதிய சமையல் முறை, புடான் மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!