கிருஷ்ணசந்திரன், அருண்மொழி, ரமேஷ் என்று அவ்வப்போது பிறமொழிப் பாடகர்கள், அல்லது புதிய குரல்களை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா.
அந்த வரிசையில் அருண்மொழி பற்றி முன்னரே பகிர்ந்திருக்கிறேன். இப்போது ரமேஷ். கன்னட பாடகரான ரமேஷ் சில பாடல்கள் தமிழிலும் பாடி இருக்கிறார். அதில் ரசிக்க கூடியதாய் மூன்று பாடல்கள் இன்று...
1984 ல் மோகன்லாலை வைத்து 'உணரு' மலையாளப்படம் எடுத்தபின் தமிழில் 1985 ல் எடுத்த படம் 'பகல்நிலவு'.
மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்லப்பட்டாலும் கூட, பள்ளிக்காலத்திலிருந்தே தனது நண்பரான சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜனின் அனாவசிய பயங்களே படத்தை வெற்றி பெறாமல் செய்தன என்று சொல்லலாம். ஸ்டார் வேல்யூவுக்காக சத்யராஜ் வேண்டும், நல்ல கேரக்டர் ரோலுக்காக சரத் பாபுவும், ராதிகாவும் வேண்டும் என்றதோடு காமெடிக்கு லிவிங்ஸ்டனை எழுதவைத்து கவுண்ட்டமணி ஜோக்ஸையும் சேர்த்தாராம். மணிரத்னம் முதலில் தனது மௌனராகம் கதையைச் சொல்லி இருக்கிறார். உணர்ச்சிகரமான கதை வேண்டாம், ஆக்ஷன் கதைதான் வேண்டும் என்று டி ஜி டி வற்புறுத்த பகல்நிவு கதை தயாராகி இருக்கிறது.
அது எப்படியோ போகட்டும். முரளி ரேவதி நாயக நாயகியாய் நடித்த இந்தப் படத்திலிருந்து இன்று நாம் ஒரு ரமேஷ் பாடலை கேட்கப்போகிறோம்! இளையராஜா இசைதான் இந்தப் படத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றி இருக்கின்றன. இந்தப் படத்தில் ஜெயச்சந்திரனின் குரலில் தாலாட்டுப் பாடல் ஒன்று உண்டு. "பூவிலே மேடை நான் போடவா.." மிக இனிமையான பாடல். பி சுசீலாவும் உடன் பாடியிருப்பார்.
இன்றைய பாடல், நாயகன் குடித்துவிட்டு பாடுவது போல நாயகியை ஏமாற்றி பாடும் பாடல். இதில் ரமேஷுடன் பாடும் பெண்குரல் உஷா ஸ்ரீநிவாசன்.
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ
நீ காதல் தூது போ நீ
காதல் தந்த தோல்வியால் நானும் இன்று தேவதாஸ் தேவதாஸ்
எங்கு என் பார்வதி
வாழ்வு எல்லாம் மாயமே தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே சொல்லி வா மேகமே
நானும் பாடும்
நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லையோ இல்லையோ
ஆறுதல் இல்லையோ
ஆசை கொண்ட மனதினை நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன் சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
அதே 1985 ஆம் வருடம். ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படம். இளையராஜா இசை. படம் பெயர் 'உன்னைத்தேடி வருவேன்'. ரமேஷை இந்தப் படத்திலும் ஒரு பாட்டு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. காட்சியோடு பார்க்க முடியாது! கண்டனக் கடிதங்கள் வரும்! எனவே பாடல் மட்டும்.
இதே படத்தில் எனக்குப் பிடித்த எஸ் பி பி பாடல் ஒன்றும் உண்டு. அதைப் பிறிதொரு நாளில் பகிர்கிறேன்.
இந்தப் பாடலை எழுதியவர் வாலி. சுரேஷ் நளினி நடித்த படம்.
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே
மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே
மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே
பார்வையாலே பாலை வார்க்கிறாய்
என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய்
வானம் இன்று ஏன் உடைந்து போனது
என் நாணம்கூட ஏன் கரைந்து போனது
வானம் இன்று ஏன் உடைந்து போனது
என் நாணம்கூட ஏன் கரைந்து போனது
மூடி வைத்த பூவிது மோகம் வந்து பூத்தது
மூடி வைத்த பூவிது மோகம் வந்து பூத்தது
வானம் வந்து நீர் தெளித்தது..
புது பூமி இன்று புல்லரித்தது..
1985 ல் வெளியான இன்னொரு படம் ஜப்பானில் கல்யாணராமன். இதிலும் ரமேஷ் குரலில் ஒரு பாடல் உண்டு. உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் வரும் என்றெல்லாம் சொல்லி வந்திருந்தாலும் ஏற்கெனவே வெளியான ஒரு தமிழ்ப்படத்துக்கு இரண்டாம் பாகம் வந்தது கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன் படம்தான்.
கல்யாணராமன் உடைத்த சாதனைகளை இந்தப் படத்தால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. ரசிகர்கள் மாறி இருந்தார்கள். அவர்கள் ரசனையும் மாறி இருந்தது! படம் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
ரமேஷ் ஜானகியுடன் பாடி இருக்கும் பாடல். வாலியின் வரிகள்.
ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே - இந்தப் பாடலின் பல்லவி சாதாரணமாக இருந்தாலும் சரணங்கள் அழகாய் இருக்கும். ரமேஷின் குரலும் மிக இனிமையாய் இருக்கும்.
ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே
முன்பக்கம் பின்பக்கம் ஏதோ
இன்பங்கள் தென்பட்டதோ
தென்பட்ட அங்கங்கள் யாவும்
கண்பட்டு புண்பட்டதோ
நீயும் தோளில் சாயலாம்
காயம் கொஞ்சம் ஆறலாம்
நோயும் தீரலாம்
நீ கொடுக்கும் முத்தங்கள்
நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட
ஆவல் காவல் தாண்ட
ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
கண்ணா நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
கண்ணா கண்ணா
நீ உண்ணும் தேன் நானா
நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ
வேர் விட்ட ஆசைக்கு நீதான்
நீர் விட்ட நேரம் இதோ
நீலம் பூத்த பார்வையில்
காதல் பூத்த வேளையில்
நாணம் தோன்றலாம்
வாடை வந்து தொட்டுத்தான்
வாய் வெடித்த மொட்டுத்தான்
வாசம் வீசும் போது
அச்சம் மிச்சம் ஏது
ராதே என் ராதே வா ராதே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். அனைவருக்கும்
பதிலளிநீக்குஇந்த நாள் நல்ல நாளாக இருக்கவும், வரும் காலம் ஆரோக்கியம், அமைதியுடன்
இருக்க இறைவன் அருள வேண்டும்.
வணக்கம் வல்லிம்மா... வாங்க.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குமூன்றாவது பாடல் மிகப் பிடித்தமானது. இந்தப் படத்தை நெல்லை டவுன் லக்ஷ்மி தியேட்டரில் பார்த்து ரசித்தேன். அப்போதுதான் சின்னவீடு படமும் ரிலீசாகி நல்லாப் போலையோ?
வாங்க நெல்லை. வணக்கம். சின்ன வீடு நன்றாகக் போகவில்லையா? நினைவில்லை. ஆனால் பாக்யராஜ் கதைமன்னன்!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
பதிலளிநீக்குகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏
வாங்க பானு அக்கா.. வணக்கம்.
நீக்குமுதலிரண்டு பாடல்களைக் கேட்ட நினைவு இல்லை. பிறகு கேட்டுப்பார்த்து நினைவுக்கு வருதா எனப் பார்க்கணும்
பதிலளிநீக்குகேட்டிருப்பீர்கள். இப்போது கேட்டதும் நினைவுக்கு வரும் பாருங்கள்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஅனைவருக்கும்
பதிலளிநீக்குதிருக் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
அன்பெனும் சுடர்
எங்கெங்கும் ஒளிரட்டும்..
நன்றி. தீபத்திருநாள் வாழ்த்துகள்.
நீக்குதீபத் திரு நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்
பதிலளிநீக்குநன்றி அம்மா. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குமுதல் பாடல் மிக அருமை. இதை முன்பு கேட்டதில்லை.
பதிலளிநீக்குஇந்தப் பாடகரைப் பற்றியும்
தெரியாது. மிக அருமையாகப் பாடி இருக்கிறார்.
நன்றி ஸ்ரீராம்.
கேள்விப்பட்டதில்லையா? நன்றி அம்மா.. மற்ற இரு பாடல்களும் இதைவிட நன்றாய் இருக்கும் (என் ரசனையில்!)
நீக்குஅதே 1985 ஆம் வருடம். ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படம். இளையராஜா இசை. படம் பெயர் உன்னைத்தேடி வருவேன். ரமேஷை இந்தப் படத்திலும் ஒரு பாட்டு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. காட்சியோடு பார்க்க முடியாது! பாடல் மட்டும். !!!!!!!
பதிலளிநீக்குபல பாடல்களைப் பதிவிட முடியாமல் நிறைய சங்கடம்
இதே போல்.:)
அதே.. அதே... பாடலோ இனிமையாய் இருக்கும். காட்சியோ கவர்ச்சியாய் இருக்கும்!
நீக்குகவர்ச்சி என்ற பெயரா அதற்கு:(
நீக்குசகிக்க முடியாத உடைகள் நடிப்பு. சாமி!!!!!!
அப்போ "கன்றாவியாய் இருக்கும்" என்று படிக்கவும்!
நீக்கு😂😂😂😂😂😂😂😂😂😂
நீக்குமூன்றாவது பாடலும் அடிக்கடி கேட்டதுதான்.
பதிலளிநீக்குஇசை இனிமை. இதுவும் கூடக் கேட்டால் போதும்.
இசைக் கலைஞர் ரமேஷுக்கு பாராட்டுகள் .
என்ன ஒரு நல்ல குரல் மா. இவர் இன்னும் பாடி இருக்கலாம்.
ஆமாம் அம்மா.. இன்னும் சில பாடல்களும் பாடி இருக்கிறார். இந்த மூன்று சட்டென்று அவர் பெயர் சொல்லும் பாடல்கள். கூட இளையராஜா இசை! ஆரம்ப வயலின் எழுச்சிகளும் ஆங்காங்கேயே சாரல் தூவும் குழல் இசையும்..
நீக்குஅனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குகார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள் கீதா அக்கா.. வாங்க..
நீக்குபடமோ பாடல்களோ தெரியாட்டியும் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள், வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள். இருள் எனும் அறியாமை நீங்கி, அனைவர் வாழ்விலும் இறையாண்மை எனும் இன்ப ஒளி என்றும் சுடர் விட இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் தேர்வு, படங்கள் மற்றும் பாடகரை பற்றி விபரங்கள், அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. புதுப்புது பாடகர்களை இளையராஜா அறிமுகப்படுத்தினாரோ இல்லையோ,புதுப் புது பாடகர்களை உங்களால் நான் தெரிந்து கொள்கிறேன்.
ஜப்பானில் கல்யாண ராமன் படத்தை மட்டும் தொலைக்காட்சியில் பிறகு பார்த்திருக்கிறேன். அப்படத்தின் பாடல்கள் அவ்வளவாக நினைவில்லை. அப்போதுள்ள (1985) எங்கள் குடும்ப சூழல்களில் பல படங்கள்,பாடல்கள் என கேள்வியேபட்டதில்லை. பாடகர் ரமேஷ் பாடிய இன்றைய மூன்று பாடல்களையும் பிறகு அவசியம் கேட்டுப் பார்க்கிறேன். 1985ல் வெளி வந்த இளையராஜா பாடல்களை நினைவு கூர்ந்து அழகாக தொகுத்துத் தரும் தங்களின் ஆர்வமான ரசனை கண்டு வியக்கிறேன். மனமார்ந்த பாராட்டுக்கள். மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமூன்றும் முத்தான பாடல்கள்.
பதிலளிநீக்குஇளையராஜா நல்லதொரு இசைக்கலைஞர் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் எந்த தமிழனுக்கு வாழ்வு கொடுத்தார் ?
ஏ.ஆர்.ரகுமான் இளையராஜா அளவுக்கு இல்லை இருப்பினும் பலரையும் அறிமுகம் செய்தார்.
நன்றி ஜி. அது அவர்கள் பிரச்னை. எனக்குத் தேவை நல்ல இசை, பாடல்கள். மேலும் பக்கத்து மாநிலம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?!!!
நீக்குமுதல் பாடல் கேட்டேன். ரமேஷ் என்றொரு பாடகர்! குரல் நன்றாக இருக்கிறது, இசை நன்றாக இருக்கிறது என்பதால் தொடர்ந்து கேட்க முடிந்தது. ரமேஷ் இன்னும் பாடியிருக்கலாம். பெண்குரல் உஷா ஸ்ரீனிவாசன்.இதுவும் புதிது எனக்கு.
பதிலளிநீக்குமற்றவற்றின் லிரிக்ஸ் என்னைக் கவரவில்லை. யார் பாடினாலென்ன!
பொதுவாக தமிழில் காதல் காட்சிகளைக் காண்பிக்கும் விதத்தை, பத்தாம்பசலித்தனத்தை என்னால் தாங்கமுடிவதில்லை. மென்மையான உணர்வுகளோ, கலாரசனையோ இம்மியளவும் இல்லாத அல்லது கலைத்திறனின் நிழல் லேசாகக்கூட பட்டுவிடாத இயக்குனர்களே பெரும்பாலும் இதற்குக் காரணம். தமிழனின் பொதுப்புத்தி, பொதுரசனை நாசமாய்ப்போனதிற்கும் இவன்களே மூலகாரணம்.
மற்ற பாடல்களும் நன்றாகவே ரசிக்க முடியும் ஏகாந்தன் ஸார். சில பாடல்களில் வரிகள், டியூன், இசை எல்லாமே நன்றாய் இருக்கும். சில பாடல்களில் வரிகள் நன்றாய் இருக்கும். டியூன் அமையாது. சில பாடல்களில் அப்படியே மாற்றாக... மொத்தத்தில் பாடல் கேட்கும்போது மனதுக்கு இதமாக இருந்தால் சரி. காட்சிகளும் இதமாக அமையும் பாடல்கள் மிகச் சொற்பம்.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.!
வாங்க கோமதி அக்கா.. வாங்க..
நீக்குமுதலிரண்டு பாடல்களைக்கேட்டே வெகு காலம் ஆகி விட்டது.
பதிலளிநீக்குகடைசி பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
மூன்று பாடல்களையும் கேட்டேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குரசனையான பாடல்கள்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஸார்..
நீக்குஸ்ரீராம் புதியதாய் கேட்கிறேன் முதல் பாடல். ரமேஷ், உஷா ஸ்ரீனிவாசன் இரு பெயர்களும் புதிதுதான் எனக்கு. குரல்கள் நன்றாக இருக்கின்றன....உஷா
பதிலளிநீக்குவாராயோ பாடல் ஆத்மா படப் பாடல் வாராயோ சரண் நாங்களே பாடலை நினைவுபடுத்துகிறது ரிஷிவாணி ராகம் போல் இருக்கிறது.
கீதா
அப்படியா? அப்படி எனக்குத் தோன்றவில்லை. ரிஷிவானி என்றொரு ராகமா?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஆமாம் ஸ்ரீராம் ரிஷிவாணி ந்னு ராகம். ராஜா சில பாடல்கள் போட்டிருக்கிறார். இந்த ராகம் கீரவாணிக்கும் கௌரிமனோஹரிக்கும் இடைப்பட்ட ராகம். இந்த இரு ராகங்களையும் பிரிக்கும் ஒரே ஒரு ஸ்வரம் அது இல்லாமல் வருவதுதான் ரிஷிவாணி.
நீக்குhttps://www.youtube.com/watch?v=9t30krK47z8
இந்தப் பாடலும் சரி, இளைய நிலவே பாடலிலும் சரி பீட் ரிதம் நல்லாருக்கும்.
அப்புறம் என்னதான் சுகமோ பாடலும் ரிஷிவாணி தான்
நான் கூட ஒரு கதையில் ரிஷிவாணி ராகம் சொல்லிருக்கிறேன் எபியில் வந்த கதைதான்...கவிநயாம்மா பாடலை அந்த ராகத்தில் பாடி பதிந்த பாடல் ஆனால் பாடல் ஷேர் செய்யவில்லை என்று நினைக்கிறேன்
கீதா
இப்போதுதான் கேட்கிறேன்.
நீக்குஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
பதிலளிநீக்கு//
இதுவும் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். படம் பெயரும் இப்பதான் கேட்கிறேன். இந்தப் பாடலும் பெண்குரல் உஷாவோ?
கீதா
இல்லை. எஸ். ஜானகி. நன்றி கீதா
நீக்குமூன்றாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரசித்த பாடல் ஆனால் அதைப் பாடியவர் ரமேஷ் என்பது இப்பதான் தெரியும் ஹிஹிஹி!!
பதிலளிநீக்குதகவல்கள் எல்லாமே புதுசுதான்
கீதா
ஹா.. ஹா.. ஹா... நன்றி கீதா!
நீக்குஇன்றைய பதிவில் என்னைக் கவர்ந்த பாடல் -
பதிலளிநீக்குவாராயோ வான்மதி!.. - மட்டும் தான்...
இனிய ஆண்கள் தின வாழ்த்துகள் எ.பி.நண்பர்களே.
பதிலளிநீக்குஅனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். அடுத்தது இப்பொழுதுதான் கேட்கிறேன்.
அருமையான பாடல்கள்
பதிலளிநீக்கு