கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை
தலைகுளத்தூர் பட்டதிரி.
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 2.
[தலைகுளத்தூர் பட்டதிரி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஒரு பிரபல ஜோசியர். இவரது இல்லம் பிரிட்டிஷ் மலையாளத்தில் இருந்தது (மலபார்). ஜாதகக்கணிப்பு,
ஜோசியம், பிரச்சனை ஜோசியம் போன்றவற்றில் மட்டுமல்லாது காவியம், நாட்டியம், மருத்துவம்,
போன்ற பல துறைகளிலும் விற்பன்னர். கதகளி பதங்கள், துள்ளல் பாட்டுகள் என்று பலவும் இயற்றியுள்ளார்.
ஆனாலும் சோழி உருட்டி ப்ரஸ்னம் பார்ப்பது இவரது சிறப்பு.]
பட்டதிரி விவாகம் செய்து கிருகஸ்தனாக இருக்கும்போது
அவருக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுடைய ஜாதகம் கணித்து நோக்கியபோது மகனுக்குத் தீர்க்காயுள் உள்ளதாக அவருக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு வயது முடியுமுன் மகன் மரித்தான்.
பட்டதிரிக்கு துக்கம் மேலோங்கியது. மகன் மரித்ததும் அல்லாமல் தான் இதுகாறும் நம்பிக்கை
வைத்திருந்த ஜோதிட சாஸ்திரமும் பொய்யாகிப் போனதோ என்று அடக்கவொண்ணா வெறுப்பும் தோன்றியது.
இந்தச் சந்தேகத்தை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று
நினைத்தார். மகனின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு தஞ்சனூரில் இருந்த ஆள்வார் என்ற மகா
பண்டிதரைக் காணப் புறப்பட்டார்.
அதே சமயம் சில நிமித்தங்களால் இவர் வரவை அறிந்த ஆள்வார்
தன்னுடைய சீடர்களிடம் “ஒரு போலி ஜாதகம் கொண்டு ஒரு மலையாள பிராமணன் இங்கு வருவார்.
வந்தால் அந்த ஜாதகத்தை வெளியில் வைத்துவிட்டு உள்ளே இருக்கச் சொல்லவும்.” என்று கூறினார்.
அதே போல் சீடர்களும் பட்டதிரி வந்தவுடன் கூறவே, அவர் ஜாதகத்தைத் தூர எறிந்துவிட்டு
ஆள்வாரின் வரவை நோக்கி இருந்தார்.
சற்று நேரம் சென்றபின் ஆள்வார் வந்தார். குசலம் விசாரித்தார்.
பல பல காரியங்களை இருவரும் பேசினர். பட்டதிரி வந்த விஷயத்தைக் கூறினார். “ஜோதிடம் ஒருக்காலும்
பொய்யாவதில்லை. பிழைகள் வருவது கணிப்பின் மூலமே. இஷ்ட தேவதையை மனதில் இருத்தாது மற்றும்
மனசித்தியும் இல்லாமல் போனதுமே இவ்வாறு ஆயிற்று” என்று ஆள்வார் பதில் உரைத்தார். பட்டதிரியின்
மனக்கிலேசம் தீர்ந்தது.
தன்ஜனூரில் இருந்து திரும்பும் வழியில் திருசிவபேரூர்
(திருச்சூர்) வடக்கு நாதனை தொழுது ஒரு விசேஷ மந்திரம் உருப்போட்டு கொண்டு திருசிவ பேரூரில்
தங்கினார். அபோது விக்ரகத்தில் சார்த்திய ஒரு திருக்கண் காணாதாயிற்று. பல ஜோஷியர்களும் ப்ரஸ்னம் பார்த்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அதை களவாடியது நல்ல கருப்பு நிறமுள்ள
ஒரு இரண்டெழுத்து பெயருடைய கள்ளன் என்றும், அவனுடைய முதல் எழுத்து க என்றும் இரண்டாம்
எழுத்து க்க (மலையாளத்தில் க்க ஓர் எழுத்து) என்றும் விடை கிடைத்தது. ஆகவே காக்கு என்ற
ஒரு கருப்பு நிற சிப்பந்தியை பிடித்து விசாரித்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
பட்டதிரி பஜனம் தீர்த்து ப்ரஸ்னம் வைத்து பார்த்ததில்
திருடன் ஒரு காக்கை என்றும் வடக்கில் ஒரு தென்னை மரத்தில் அதனுடைய கூட்டில் அத் திருக்கண்
உண்டு என்றும் விடை சொன்னார். அதே போன்று நோக்கியதில் திருக்கண் கிடைத்தது.
பின்னர் பட்டதிரி திருவிதாங்கூர் சென்றார். பட்டதிரி
திருவிதாங்கூர் மகாராஜாவின் சபையிலும் ஜாதகங்கள் கணித்து கொடுத்தல், ப்ரஸ்னம் வைத்து
சொல்லல் போன்று பல காரியங்களையும் செய்து பல சன்மானங்கள் தேடினார்.
அவ்வாறு இருக்கும்போது ஒரு நாள் மஹாராஜா “நான் நாளை
எவ்வாறு எந்த வழியில் பத்மநாப சாமி கோயிலுக்குப் பிரவேசிப்பேன்” என்று கூறமுடியுமா
என்று பட்டதிரியிடம் வினவினார். அதற்கு பட்டதிரி “அது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது
கூற விரும்பவில்லை. நாளை கோவில் மதில் தாண்டும்போது உங்களுக்கு நான் சொன்னதின் அர்த்தம்
புரியும்.” என்று கூறினார்.
மறுநாள் மஹாராஜா பரிவாரங்களுடன் பத்மநாபசாமி கோவில்
கிழக்கு வாயிலை அடைந்தார். அங்கிருந்து தெற்கு திசையில் கொஞ்ச தூரம் நடந்து ஒரு இடத்தில
நின்று “இங்கு மதிலை இடிச்சு வழியுண்டாக்கு” என்று கட்டளை இட்டார். அது போலவே வேலையாட்கள்
மதிலை இடித்து கற்களை மாற்றும்போது ஒரு கல்லின் இடையில் ஒரு ஓலைநறுக்கைக் கண்டனர்.
அது மகாராஜாவின் கண்ணில் பட்டது. மஹாராஜா “ஓலையை இங்கே கொடு, நான் பார்க்கட்டும்” என்று
ஓலையை வாங்கிப் பார்த்தார். அதில் “இந்த வழியே நுழைவீர்கள்” என்று பட்டதிரியின் கைஅட்சரத்தில்
எழுதியவாறு இருந்தது. மகிழ்ச்சி அடைந்த மஹாராஜா ஆச்சர்யமும் அடைந்தார்.
பட்டதிரி அருகில்
இருக்கவே “வீர ஸ்ரிங்கல” (கங்கணம்) வருத்தி இரண்டு கையிலும் அணிவித்தார். பின்னர்
“இடித்த பாகத்தை கட்டி அடைக்க வேண்டாம். இங்கே ஒரு கோட்டை வாசல் வைக்க வேண்டும். “என்று கட்டளை இட்டார்.“ செண்பகத்தின் மூட்டில் மன” என்று அவ்வாசல் அறியப்படுகிறது.
[வெட்டி முறிச்ச கோட்டை என்றே எனக்கும் மற்றும் புது வரவுகளுக்கும் இவ்விடம் அறியப்படுகிறது.]
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநான் அதிசயமாக காலையில் வந்தால் இங்கு யாரையும் காணுமே!
கீதா
வணக்கம் கீதா.. வாங்க... இனிதான் களைகட்டும்!
நீக்குஜோசியம், பிரஸ்னம் போன்றவை நிறைந்த நிகழ்வுகளின் தொகுப்பு கதைகளாகவோ என்று தோன்றுகிறது. அம்புலிமாமா கதைகள் போன்று.
பதிலளிநீக்குமலையாளத்தில் வந்ததை அதுவும் சம்ஸ்கிருதம் கலந்து எழுதப்பட்டதை, தமிழில் மொழியாக்கம் செய்வது என்பது கஷ்டமான விஷயம். அதற்கே அந்தப் பொறுமைக்கே ஜெகே அண்ணாவுக்குப் பாராட்டுகள்.
கீதா
சோழி பார்த்துச் சொல்லும் ஒருவகை ப்ரச்னம் ரொம்ப ஃபேமஸ் இல்லை?
நீக்கு// .... தமிழில் மொழியாக்கம் செய்வது என்பது கஷ்டமான விஷயம். அதற்கே அந்தப் பொறுமைக்கே ஜெகே அண்ணாவுக்குப் பாராட்டுகள். //
உண்மைதான்.
சோழி பார்த்துச் சொல்லும் ஒருவகை ப்ரச்னம் ரொம்ப ஃபேமஸ் இல்லை?//
நீக்குஆமாம் ஆமாம். நான் இப்படியான விஷயங்களில் இருந்து ரொம்பவே விலகி இருப்பேன். பிரஸ்னம் பார்க்கும் எந்த வகையிலிருந்தும். என்னவோ அது ஒரு அலர்ஜி. ஒரு வேளை பயம் காரணமாக இருக்கலாம். நான் பிறந்து வளர்ந்த சூழல் அப்படியான ஒன்றாயிற்றே. எங்கள் ஊரில் இந்த அமானுஷயங்கள் நிறையப் பேசப்பட்டகாலம் அது. இப்போது தெரியவில்லை
கீதா
அமானுஷ்யம் என்றால் என்ன சகோதரி?
நீக்குஅடிக்கடி சிலர் இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவதால் ஒவ்வொருவருக்கும் அமானுஷ்யம் பற்றி ஒவ்வொரு புரிதல் இருக்கலாம் என்பதால் கேடகத் தோன்றியது. அமானுஷ்யம் பற்றி உங்கள் புரிதல் என்ன சகோ?
நீக்குஸ்ரீராம், அது நேரிடையாகத்தான் அலர்ஜி. ஆனால் வாசிக்கப் பிடிக்கும்!!!! யாரேனும் சொல்வதைக் கேட்கப் பிடிக்கும்! என்பது வேறு
நீக்குகீதா
ஜீவி அண்ணா நான் பெரிய அறிவாளி அல்ல. சாதாரண மிக மிகச் சாதாரண பிரஜ்ஜை.
நீக்குஇதைப் பற்றிய நிகழ்வுகள், கதைகள் கேட்டிருக்கிறேன் வாசித்திருக்கிறேன் என்பதற்கு அப்பாற்பட்டு இதைப் பற்றி அறிய முற்பட்டதில்லை.
இங்கு இதைப் பற்றி நிறைய அறிந்தவர்கள், படித்தவர்கள் சபையில் என் சின்ன தம்மாத்துண்டு அறிவுக்கு எட்டியதை நான் புரிந்துகொண்டதைச் சொல்கிறேன்!!!!!!
அ-மானுஷ்யம் – பேய், பிசாசு, ஆவி, பில்லி, சூனியம் என்ற எதிர்மறையானவை முதலில் அறிந்தவை. சிறு வயதில். அதன் பின் இஎஸ்பி என்பது பற்றி அறிந்த போது, நேர்மறையும் உண்டு என்பதும் அறிந்தேன்.
என் நெருங்கிய சொந்தங்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்வதுண்டு. ஆனால் எனக்கு இதுவரை அப்படியான அனுபவம் எதுவும் இல்லை. அல்லது அதை நான் அந்தக் கோணத்தில் சிந்திக்காமலும் இருக்கலாம். அதனால்தான் இங்கு எபியில் நான் எழுதிய கதையும் என் சிந்தனையின் அடிப்படையில் இருந்தது.
இன்னும் நான் அறிந்ததை, என் புரிதலைச் சொல்லலாம் மனோதத்துவம் உட்படுத்தி... ஆனால் கருத்து பெரிதாகும். என்பதால் தவிர்க்கிறேன்.
கீதா
நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். தயக்கமேன்? உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. அறிந்த மனோதத்துவ செய்திகளின் பாக்கியை சனிக்கிழமை சொல்றீங்களா?
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள். தொடர்ந்து கொண்டிருக்கும் தொற்று அடியோடு ஒழிந்து போகவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குபட்டத்ரியின் அனுபவங்கள் அருமையாக இருக்கின்றன. என்றாலும் "பிரஸ்னம்" "பிரஷ்னம்" என்பதைப் பிரச்சனை என்றே எழுதி வருவது அர்த்த்த்தையே மாற்றி விடுகிறது. :(
பதிலளிநீக்குகட்டுரைகள் அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஆகின்றன. வெளியிட்டபின் தான் பிரஷ்னம் பிரச்னையாக உள்ளதை வாசகர்கள் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே schedule செய்யப்பட்டுவிட்டதால் திருத்த முடியவில்லை. வார்த்தையை திருத்தி வாசித்தமைக்கு நன்றி.
நீக்குJayakumar
கட்டுரையா! செவ்வாய் கதைப் பகுதி அல்லவோ!
நீக்குஜீவி ஐயா இது முதலில் சனிக்கிழமை "நான் படிச்ச கதை"க்கு கட்டுரையாகத் தான் எழுதப்பட்டது. கதையின் தன்மை ஐதீகம் என்பதால் செவ்வாய்க்கிழமை கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று சில திருத்தங்களுடன் செவ்வாய் பதிவாக ஆகியது. இப்போதும் நீங்கள் கவனித்திருப்பீர்கள் இது கதையாக இல்லாமல் police FIR போன்று இருப்பதை. வருகைக்கு நன்றி.
நீக்குJayakumar
பிரச்னை என்றாலும் மலையாளத்தில் இதே அர்த்தம்தானாம். எப்படியும் ப்ரஸ்னம் என்று மாற்றிவிட்டேன்.
நீக்கு//இது கதையாக இல்லாமல் police FIR போன்று இருப்பதை. வருகைக்கு நன்றி. /
நீக்குமொழிபெயர்ப்பு என்பதால் நம் கைவண்ணத்தைக் காட்ட முடியாத நிலைமை.
அன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம். நலமடைந்து விட்டீர்களா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு//“ஜோதிடம் ஒருக்காலும் பொய்யாவதில்லை. பிழைகள் வருவது கணிப்பின் மூலமே. இஷ்ட தேவதையை மனதில் இருத்தாது மற்றும் மனசித்தியும் இல்லாமல் போனதுமே இவ்வாறு ஆயிற்று” என்று ஆள்வார் பதில் உரைத்தார். பட்டதிரியின் மனக்கிலேசம் தீர்ந்தது.//
பதிலளிநீக்குபட்டதிரியின் மனக்கிலேசம் தீர்ந்து ஜோதிட பயணம் ஆரம்பம் ஆகி விட்டது.
கதை நன்றாக போகிறது. தொடர்கிறேன்.
காக்கை கள்ளனை பற்றி படித்தவுடன் சிறு வயதில் படித்த கதை "காக்கை கதை" நினைவுக்கு வருது. ஓவ்வொரு முறையும் தன் முட்டைகளை சாப்பிடும் பாம்பை கொல்ல தந்திரம் செய்யும் காக்கை கதை.
காக்கை மகாராணியின் நகையை எடுத்து வந்து பொந்தில் வைக்கும், காவலர்கள் காக்கையை தொடர்ந்து வருவார்கள். காக்கை பொந்தில் நகையை வைத்து விட்டு பறந்து விடும், காவலர்கள் நகையை எடுக்கபோகும் போது பாம்பு தலை காட்டும் அதை வாளால் வெட்டி விடுவார்கள்.
புத்திசாலி காக்கை!
நீக்குகதை சுவாரஸ்யமாகச் செல்கிறது, ஜெஸி சார். வெட்டி முறிச்ச கோட்டை போன்ற உண்மை ஆதாரங்களுடன் சேர்த்துப் பின்னப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த சிறப்புகள் உண்மையில் நடந்தவை தானோ என்ற உணர்வை வாசிப்பவரிடம் ஏற்படுத்தும். இது தான் எந்தக் கதைகளுக்குமான வெற்றி. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஆம். எனக்கும் அந்த 'வெட்டி முறிச்ச கோட்டை' ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
நீக்கு'பெரிசா வெட்டி முறிச்சிட்டையோ?'
பதிலளிநீக்குஎன்று சொல்வார்கள், பெரிதாக ஒரு வேலையும் செய்யாதவனைப் பார்த்து.
'வெட்டி முறிச்ச' என்ற பதப் பிரயோகம், தமிழில் உபயோகப் படுத்தப்படுகிற விதமே வேறு மாதிரி.
// தமிழில் உபயோகப் படுத்தப்படுகிற விதமே வேறு மாதிரி. //
நீக்குமுன்னொரு காலத்தில் நாற்றம் என்ற சொல்லுக்கு வாசனை என்று பொருளாமே...
ஆமாம் ஸ்ரீராம் "நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடுகிறாரே! நறுமணம் கமழும் துழாய்-துளசி
நீக்குகீதா
கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய் தான் தித்திருக்குமோ?
நீக்கு// ஜோதிடம் ஒருக்காலும் பொய்யாவதில்லை. பிழைகள் வருவது கணிப்பின் மூலமே. இஷ்ட தேவதையை மனதில் இருத்தாது மற்றும் மன சித்தியும் இல்லாமல் போனதுமே இவ்வாறு ஆயிற்று” என்று ஆள்வார் பதில் உரைத்தார்..//
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை..
மிகவும் பிடித்த வரிகள்..
நன்றி.
நீக்குவெட்டி முறிச்ச கோட்டை - (வரைந்த ?) படம் அழகு...!
பதிலளிநீக்குபுகைப்படம். கின்னெஸ் புகழ் ஆற்றுக்கால் பொங்காலை நடைபெறும்போது எடுக்கப்பட்டது.
நீக்குசுவாரசியமான கதை .
பதிலளிநீக்குநன்றி மாதேவி. நலம்தானே? உங்கள் ஊர் விலைவாசி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது போல...
நீக்கு“ஜோதிடம் ஒருக்காலும் பொய்யாவதில்லை. பிழைகள் வருவது கணிப்பின் மூலமே. இஷ்ட தேவதையை மனதில் இருத்தாது மற்றும் மனசித்தியும் இல்லாமல் போனதுமே இவ்வாறு ஆயிற்று” என்று ஆள்வார் பதில் உரைத்தார். பட்டதிரியின் மனக்கிலேசம் தீர்ந்தது. '' மிகப் பிடித்த வரிகள்.
பதிலளிநீக்குதிரு ஜெயக்குமார் ஸாருக்கு மன்ம் நிறை நன்றி.
ப்ரஸ்னம் என்பது பிரச்சினைக்கு உண்டான
வழி சொல்வது. சிலசமயம் பிரச்சினை எந்த விதமாக
உருவெடுத்தது என்ன காரணம் என்ன தீர்வு
என்று தெரிய மேற்கொள்ளும் வழி.
மேற்சொன்னது என் கேரளத்தோழியிடம் இருந்து
அறிய வந்தது.
மிக அருமையாகச் சொல்லி வருவது
ஈடுபாட்டைக் காட்டுகிறது.
பல பிரச்சினைகளுக்கு எது ஆதி காரணம் என்று
கண்டு பிடிப்பது மிக நல்லது.
மாதேவியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி. என்றும் நலமாக
பதிலளிநீக்குஇருக்க வேண்டும்.
மேலும் நல்ல நிகழ்வுகள் வருவதற்கு வாழ்த்துகள் ஆகச் சிறந்தது
பதிலளிநீக்கு'வெட்டி முறிச்சான் கோட்டை''.
நல்ல பதிவு. நன்றி.
வருகை தந்த எல்லோருக்கும் பிடித்திருந்த வரிகள்
பதிலளிநீக்கு// ஜோதிடம் ஒருக்காலும் பொய்யாவதில்லை. பிழைகள் வருவது கணிப்பின் மூலமே. இஷ்ட தேவதையை மனதில் இருத்தாது மற்றும் மன சித்தியும் இல்லாமல் போனதுமே இவ்வாறு ஆயிற்று” என்று ஆள்வார் பதில் உரைத்தார்..//
ஆக பெரும்பான்மை வாசகர்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது உறுதியாகிறது.
வருகை தந்து கருத்துரை இட்ட எல்லோருக்கும் நன்றி. நிறைகளை மட்டும் கூறாமல் குறைகளையும் எடுத்துக் காட்டினால் தான் என்னுடைய குறைகளைக் களைந்து சிறக்க முடியும். ஆகவே அங்கங்கே உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டக் கோருகிறேன். தொடர் 6 பாகங்கள். 2 முடிந்தன.
Jayakumar
கேரளத்தில் பிரசித்தி பெற்ற விஷயங்கள் இவை - சோதிடம், கணிப்பு, சோழி உருட்டல் எல்லாம். இவை சார்ந்த அதிலும் நுண்ணிய விஷயங்கள் சார்ந்தவை கதையில் வருகிறது என்று தெரிகிறது. ஜெயகுமார் சாரின் மொழியாக்கம் சிறப்பு. இடையிடையே மலையாளச் சொற்கள் வருவது அதன் மணம் கெடாமல் இருக்கட்டும் என்பதாலோ?
பதிலளிநீக்குமலையாளத்திலும் வாசித்ததில்லை. இங்கு நீங்கள் தமிழில் தருவதே கதை புரிந்துவிடுகிறது.
வீர ஸ்ரிங்கல இப்போதும் சில இடங்களில் வழங்குவதுண்டு.
செண்பகத்தின் மூட்டில் மன” என்று அவ்வாசல் அறியப்படுகிறது.//
ஆம் என்றாலும் வெட்டிமுறிச்சான் கோட்டை என்று அறியப்பட்ட பின் அது பின் தள்ளப்பட்டுவிட்டது.
நன்றி ஜெயகுமார் சார்
துளசிதரன்
கதை என்பது படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமான தகுதி . இந்தக் கதை படிக்க மிக மிக சுவாரஸ்யமாகப் போகிறது . பிளாகில் போடாமல் அச்சுப் பத்திரிக்கைகள் கண்டு இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. நன்றி . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு"பத்திரிக்கைகளுக்கு அனுப்பி
நீக்குஇருக்கலாமே" என்று படிக்கவும் .
//ஜோதிடம் ஒருக்காலும்.... பதிலுரைத்தார்.. //
பதிலளிநீக்குஇதற்கு எதிரான கருத்துடன் கதை முடிவு இரு ந்தால் தான் அது பத்திரிகை கதை. ஒரே கருத்துடன் கதை முடிவு வரை போனால் அதில் கதை அம்சம் இருக்காது. கதைகளுக்கு திருப்புமுனைகள் அவசியம்.
தம்பி துரை கூட இந்தக் கருத்தை யோசிக்க வேண்டுகிறேன்.
இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், எந்தக் கருத்தை வலியுறுத்தி நீங்கள் கதையை முடிக்க விரும்புகிறீர்களோ அதற்கு எதிரான போக்கில் கதையின் ஆரம்பப் பகுதிகளை அமைத்து வாசகர்களுக்கு போக்குக் காட்டி நீங்கள் விரும்புகிற விதத்தில் கதையின் முடிவைத் திருப்ப வேண்டும்.
பதிலளிநீக்குஇன்னொன்று. கதைகள் வாய்மொழி உபதேசங்கள் அல்ல. அது நிகழ்ச்சிப் போக்குகளால் கட்டமைக்கப்படுவது.
அண்ணா அவர்களது கருத்துகள் பயனுள்ளவை..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி அண்ணா..
எங்கிருந்து நம் வளர்ச்சிக்கு உதவுகிற என்ன கருத்து வந்தாலும் அதை சுவீகரித்துக் கொள்ள மன மாண்பு கொண்டவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.
பதிலளிநீக்குமனம் கனிந்த வாழ்த்துக்கள் தம்பி.
பதிவினை படித்தேன். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு