வியாழன், 21 ஏப்ரல், 2022

சடைமுடி கரிநாக்கு 

  'அவருக்கு கரிநாக்கு.  சொல்வதெல்லாம் பலித்து விடும்' என்பார்கள். 

கரிநாக்கு என்றால் நாக்கில் கருப்பாக இருக்கும் என்று நாக்கைக் காட்டியவர்களும் உண்டு!  அதுதான் உண்மையா, அல்லது சொன்னது பலித்தால் சொன்னவர்களுக்கு கரிநாக்கு என்று சொல்வார்களா என்று தெரியாது.  ஏனென்றால் எனக்கு கரிநாக்கு கிடையாது!


சொல்வது எல்லாம் பலித்து விட்டால் அப்புறம் உலகம் தாங்காது.  சொன்னது பலித்த புள்ளிவிவரம் எடுத்துப் பார்த்தால் மிகக் கம்மியாக இருக்கும்.  ஆனால் பயமும், நம்பிக்கையும் எதிராளியை யோசிக்க வைக்கும், தயங்க வைக்கும்.  அந்த 'சில நடக்கும் அனுபவங்களி'ல் நாம் மாட்டி விட்டால் என்கிற பயம் கூட காரணமாயிருக்கும்.

இப்படி தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் யாரும் நல்ல விஷயத்துக்கு சொல்லிக்கொள்வதோ, சொல்வதோ இல்லை - என் அனுபவத்தில்.  எதிராளியை பயமுறுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

பின்னே, தன் 'சக்தி'யைப் பற்றி அவர்கள் அறியாதிருப்பார்களா என்ன!

"அப்புறம் ஏதாவது சொல்லிடப் போறேன்.."

"என் வாயில விழாதே..  நான் சொன்னா அப்படியே நடக்கும்.."

"மனசெரிஞ்சு சொல்றேன்...   அவன் அனுபவிப்பான்...  கடவுள் அவனுக்கு கொடுப்பார்...  எனக்கு கெடுதல் செய்தானில்லை..."

ஏன் இதுபோன்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் "நான் சொன்னா நடக்கும்..  மனசார வாழ்த்துகிறேன்..  நீங்கள் நல்லாயிருப்பீங்க" என்று வாழ்த்துவதில்லை?  ஒருவேளை கெட்டது சொன்னால் மட்டுமே பலித்தால்தான் கரிநாக்கோ?

அப்படி ஓரிருவரை என் அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன்.  யோசித்துப் பார்க்கும்போது அவர்கள் சொன்னதும் ஒவ்வொரு முறையும் பலித்ததில்லை, பலிப்பதில்லை.

தனக்கு கெடுதல் செய்தவர்களை கடவுள் பார்த்துப்பார், பழி வாங்குவார் என்பதே நல்ல கருத்துதானா?  கெடுதல் செய்தால் பலன் தானாய்த் தேடிவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அப்படி சொல்லித்தானே அல்லது பயமுறுத்திதானே முடிந்தவரை ஒழுங்காக இருக்கப் பழகி இருக்கிறோம்?!


உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும்!

நம் சார்பில் அவர்களை பழிவாங்க கடவுளுக்கு என்ன வேறு வேலை இல்லையா?  கடவுள் என்பவரை இங்கு நாம் நம் ஏவலுக்கு கட்டுப்படும்  அலாவுதீன் பூதமாய்ப் பார்க்கிறோம் போல...   அல்லது ஒரு தேங்காய் உடைத்தால் நமக்கு ஜெயம் தந்து விடுவார்!  ஈஸியாய் ஏமாற்றி விடலாம்!

சரி, ஏதோ மன ஆறுதல்.. விடுங்க...

எங்கேயோ போகிறேன்..  சொல்வது பலிப்பது என்பது நினைப்பது பலிப்பது என்று சொல்லலாமோ என்னவோ...  கண்களால் பார்த்தே ரஸ்புடீன் பொருள்களை நகர்த்துவாராம், வளைப்பாராம்.  அதுமாதிரி ஒரு மனமாய் நின்று அதையே நினைத்தால் நடக்கிறதோ என்னவோ..

சமீபத்தில் எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றபின் ஃபோன் பேசினார்.  சரி, நாளை வரமாட்டேன் என்று சொல்லப்போகிறார் என்று நினைத்தோம்!  அவருக்கு நாங்கள் அவ்வப்போது வெவ்வேறு வகையில் (எல்லோரையும் போல) உதவி இருக்கிறோம்.  

தன் மாமியார் பேச விரும்புவதாகச் சொன்னார்.  அவர் கைக்கு ஃபோன் சென்றதும் முதலில் அவர் நாங்கள் செய்த உதவிகளுக்கு நன்றி சொன்னபிறகு சொன்ன விஷயம் 

"நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே.. இவ்வளவு நல்லது செய்யற உங்களுக்குத் சொல்லணும்னு தோணுது"

"இல்லை..   சொல்லுங்க..."  - ஹையோ..  என்ன சொல்லப் போகிறாரோ...  

"உங்கள் வீட்டில் சீக்கிரமே நல்ல விஷயம் ஒன்று நடக்கும் அம்மா...  அதுவும் ஒரு மூன்று மாதங்களுக்குள்ளேயே..."

"இது நல்ல விஷயம்தானேம்மா..   இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?  நாங்கள் பையனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...  கல்யாணம் அமைந்தால் கூட நல்லதுதானே...  நன்றிம்மா"

சில சமயங்களில் நாம் அளவாகப் பேசவேண்டும் என்பது நமக்குப் புரிவதில்லை.   பேச்சை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரியவேண்டும்.  நன்றி சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம்.  அடுத்தடுத்து அதிகப்பிரசங்கம்!  


இப்போது அவருக்கு 'அவர் சக்தி' மேல் அதிக நம்பிக்கை வந்து விட்டது போல...

"உங்களுக்கு எத்தனை பசங்க அம்மா?"

"இரண்டு பசங்க..  மூத்தவனுக்குதான் பார்க்கிறோம்..."

"அம்மா..  சொன்னா கோபிச்சுக்காதீங்க..  தப்பாய் நினைக்காதீங்க...  எனக்கு முடியில் சடை விழுந்திருக்கிறது.  நான் சொன்னால் பலிக்கும்.  உங்கள் இளைய மகனுக்குதான்மா முதலில் கல்யாணம் ஆகும்...  அதுதான் ரெண்டு மூணு மாசத்தில் தெரியும்.."

ஒன்றும் சொல்லாமல் பாஸ் போனை வைத்து விட்டார் என்றாலும், தேவையா இதெல்லாம் என்றே தோன்றியது!

நல்லவார்த்தை சரி, அதிலும் ஒரு 'க்' ஆ?  ஆறுதலா, அல்லலா?

ஆமாம், கரிநாக்கு சரி, முடியில் சடை விழுந்தாலும் சொன்னது பலிக்குமா?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபேஸ்புக்கில் எங்களுக்கெல்லாம் நண்பர் கோபிநாத் ரவி.  சமீபத்தில் ஒரு பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறார்.  அதுபற்றி அவர் எழுதி இருந்ததைப் படித்ததும் மனம் கலங்கி விட்டது.  உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார்.  இந்த எழுத்து, அனுபவங்களுடன் எல்லோராலும் ஒன்ற முடியும்.  
'அம்மா கவனிக்கிறார். அவர் பேசுவது நமக்கு கேட்காது. இந்த பிண்டத்தை மீன், பருந்து, காகம் என்று பல ரூபங்களில் அவர் சாப்பிடுவார்' என்றார். அடுத்த நாள் தொன்னை பாதி தான் காலியாகி இருந்தது. அழுகை வந்தது.

மேற்கண்ட வரிகளில் நான் அழுது விட்டேன்.


மார்ச் 24, 2022. 9PM. அம்மா நிற்கதியாக எங்களை விட்டுப் போய்விட்டாள். 61 வயது. எந்த விதமான பெரிய பிரச்சனையும் இல்லாமல், கடைசி நிமிடம் வரை ஆக்டிவாக இருந்த ஜீவன். மாசிவ் அட்டாக்

🙁 திண்ணையில் உட்கார்ந்து, அப்படியே கண்கள் சொருகி விழுந்து, லஷ்மி நாராயணன் கோவிலை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்திருக்கிறாள்.
அடுத்த நாள் மயானத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டி, பின் என் கையால் எலும்புகளைப் பொறுக்கி கடலூர் கடற்கரையில் கரைத்துவிட்டு வந்தேன்... ("அதோ பாருப்பா கால் விரல், இதோ பாரு கை விரல் எடுத்து சட்டியில் போடு... ஒன்னும் கவலைப்படாதே. நல்ல விதமாக காரியம் நடந்து கொண்டிருக்கிறது"...) க்ரூரமான ceremony.
இவ்வளவு நாள் அஸ்தி என்றால் எதோ டப்பாவில் அடைத்துக் கொடுப்பார்கள், எடுத்துப் போய் கடலில் கரைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
எப்போதும் வேலை நேரத்தில் அவளிடமிருந்து போன் வராது. அதிசயமாக கடைசி நாளன்று பதினொரு மணிக்கு, அரைமணி நேரம் என்னிடம் பேசினாள். 'இரண்டு நாட்களாக என்னவோ மனசு சரியில்லை. இப்போது உன்னிடம் பேசிவிட்டேன் இல்லையா. தெளிவாக இருக்கிறேன்' என்றார். என்ன தெளிவோ 🙁
என் மூன்று வயதில், எங்கே வெளியே விளையாடச் சென்றாலும், ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை வீட்டுக்குள் எட்டிப் பார்த்து அவள் இருக்கிறாளா என்று ஊர்ஜிதம் செய்து கொள்வேனாம். ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வாள். ஸ்கூல் போகும் போது, bye bye maa , bye bye maa அழுது கொண்டே நான் சொன்னதை, அவ்வப்போது tease செய்வாள். மயானம் செல்லும் போது bye bye maa என்று அரற்றிக் கொண்டே இருந்தேன்.
இன்று பதிமூன்றாம் நாள். பிரமை பிடித்தது போல ஸ்மரனையற்று அவ்வப்போது உட்கார்கிறேன்.
இரண்டாம் நாள் யாரோ கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். கோபம் வந்தது. பின் மூன்றாம் நாள், தம்பியின் குழந்தையை பார்த்த போது சிரித்தேன். சட்டென ஏனோ குற்ற உணர்வு வந்தது. இப்படித்தான் இருக்கும் போல.
அம்மாவின் வட்டம் ரொம்பச் சின்னது. அப்பா, தங்கை, நான். Outer zoneல் அவளது அம்மாவும், அவளது தங்கையும்.
இதில் எங்கள் மூன்று பேருக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால், கோதாவில் குதித்து சண்டை போடவும் செய்வார். Lioness.
அநியாய சிக்கனம் பிடித்து எங்களை படிக்க வைத்தாள். தனக்கென எதும் பெரிய சவுகரியங்கள் செய்து கொள்ளவில்லை. பீரோ முழுக்க யாரோ எப்போதோ வைத்துக் கொடுத்த புடவைகள், கவர் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது. பளிச்சென உடுத்த மாட்டாள். எப்பொழுதும் சுமார் புடவை.
தோட்டத்தில் அவள் ஆசையாக நட்டு வைத்த செடி, மரம் என்று ஒவ்வொன்றின் பக்கமும் நின்று கொண்டு நானும் அப்பாவும் கண் கலங்கிக் கொண்டே இருக்கிறோம்.
வைதீக காரியங்களில் நான் ஜீரோ. வேட்டி கூட எனக்கு ஒழுங்காக கட்டத் தெரியாது. நாமம் சாற்றி, பத்து நாட்கள் என்னெனேவோ மந்திரங்களைச் சொன்னார்/சொல்ல சொன்னார் ப்ரோகிதர்.
பற்பல முறை குளியல் போட்டு, நூறு கரிஷ்யே சொல்லி எள் நீர் விட்டு, குமிட்டியில் வேக வைத்து, நிறைய சோற்று உருண்டைகள் செய்தேன். தென்பெண்ணையாறு முழுங்கியது (திருக்கோவிலூர்).
'அம்மா கவனிக்கிறார். அவர் பேசுவது நமக்கு கேட்காது. இந்த பிண்டத்தை மீன், பருந்து, காகம் என்று பல ரூபங்களில் அவர் சாப்பிடுவார்' என்றார். அடுத்த நாள் தொன்னை பாதி தான் காலியாகி இருந்தது. அழுகை வந்தது.
எப்போதும் சிரித்த முகமாகவே வளைய வருவாள். வழக்கம் போல பக்கத்து ரூமில் பாத்திரங்களை குடைந்து கொண்டிருக்கிறாள் என்பது போலவே இந்த நிமிடம் வரை உணர்கிறேன்.
பெற்றோர் போன பின் தான், இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரத்தை ஒதுக்கி இருக்கலாமே என்று தோன்றும் போல (எவ்வளவோ முறை கூப்பிட்டும் 'இன்னும் பத்து வருடங்கள் கழித்து உன்னோடு வருகிறேன் ' என்று சொன்னார். Comfort zone தாண்டி பெரியவர்கள் வருவதேயில்லை).
பொதுவாக personal விஷயங்களை நான் பதிவது இல்லை. ஏன் இதை எழுதுகிறேன் என்றும் எனக்குத் தெளிவில்லை. சுஜாதா, அனுராதா ரமணன், சிவசங்கரி, திஜா, ராஜேஷ்குமார், பிகேபி என்று என்ன கிடைத்தாலும் படிப்பாள். இதையும் படிப்பாள் என்று போட்டு வைக்கிறேன்.
மகனுக்கு உபநயனம், ஸ்கூல், காலேஜ், அவனுக்கு கல்யாணம் என்று நிறைய வேலை இருக்கிறது. அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறப்புக்கு பின் ஆன்மாவுக்கு என்ன நேர்கிறது என்று மத்வர் சுற்றி சுற்றி என்னவோ வித்தியாசமாக சொல்லி வைத்திருக்கிறார். எனக்கு விளங்கவில்லை. மெதுவாக சமயம் இருக்கும் போது படிக்க வேண்டும்.
உன் நாற்பது வயதில் என்னை காலேஜூக்கு அனுப்பி விட்டாய். என் நாற்பதில் என் மகன் கிண்டர்கார்டன் தான் தாண்டியுள்ளான். நிறைய வேலை இருக்கிறது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை என்னை வழி நடத்துவாய் என்று மட்டும் தோன்றுகிறது.

போய் வா அம்மா. Bye bye maa. 

===================================================================================================================

விலகி நடக்கிறேன்
நின்று விட்டது
மனம்.

மேல்கடல் போல ​உணர்வுகள் ​
பொங்கினாலும்
ஆழ்கடல் போல​ அமைதியாகவே 
இருக்கிறது​ மனம்.

உலகத்தார் பார்வைக்கு
பொங்குதலும்​ புரிவதில்லை.
ஆழ்மனமும் தெரிவதில்லை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தனி சட்டம் இயற்ற வேண்டும்!'

முனைவர் சாந்தகுமாரி, வழக்கறிஞர், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர்: 

"திருமண உறவில் பாலியல் பலாத்காரம் குற்றமல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும், 32 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது, தண்டனை சட்டம் அல்ல. எனவே, 'மெரிட்டல் ரேப்' என்பதை குற்றமயமாக்க வேண்டும். 

இதற்கான, ஐ.நா.,வின் தீர்மானத்தில் பல நாடுகளுடன் இந்தியாவும் கையெழுத்திட்டும், இந்திய தண்டனை சட்டத்தில் அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை. 

'மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பலவந்தமாக உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமை ஆகாது' என்று சமீபத்தில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நம் நீதி அமைப்புக்கு, சில நீதிபதிகளுக்கு, முதலில் பாலின சமத்துவம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமண தடுப்பு சட்டப்படி ஒரு சிறுமி பூப்படைந்திருந்தாலும், 18 வயதுக்குள் அவருக்கு திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம். 

ஆனால், ஓர் ஆண், 16 வயது சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்டால் அது குற்றமில்லை என்று இந்திய தண்டனை சட்டம் வரையறுக்கிறது. அதை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.மேலும், மைனர் சிறுமியை திருமணம் செய்த கணவர் தான் அவருக்கு பாதுகாப்பாளர் என்று இந்திய பாதுகாப்பாளர் சட்டம் சொல்கிறது. குற்றவாளியையே பாதுகாப்பாளராக சேர்க்கும் இந்தச் சட்டம், திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியவற்றுள் முக்கியமான ஒன்று.

இப்படி குழந்தை திருமணம் தொடர்பான பல்வேறு சட்டப்பிரிவுகளில் உள்ள அம்சங்கள் ஒன்று, வேறுபட்டு குற்றவாளியைக் காக்கும்படி அமையும் கூறுகளை சீர்செய்து, குழந்தை திருமணங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஜாதி வெறியால் நிகழும் ஆணவ கொலைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பெண்களை பார்த்திருக்கிறோம். பெண்ணின் மீது குடும்ப மானம், ஜாதி என்ற பெயரில் வைக்கும் ஆணாதிக்கம், இந்தப் பிரச்னையின் வேரிலும் உள்ளது. ஆணவ கொலைகளை தடுக்கும் தனிச்சட்டம் முக்கிய கோரிக்கை. 

அதற்கான மசோதா தயாரானாலும், அதை இன்னும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு தான் இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றில்லை. மாநில அரசே சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து சிறப்பு சட்டம் இயற்றலாம். தேசிய குற்றப் பதிவேட்டின்படி, தமிழகத்தில் ஆணவ கொலைகளின் எண்ணிக்கை குறைவு. உண்மையில், தென் மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் ஆணவ கொலைகள் அதிகளவு நடக்கின்றன. சமூக நீதியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள நாம், ஆணவக் கொலை தடுப்புக்கு தனிச்சட்டம் இயற்றி, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக வேண்டும்! 

- தினமலரிலிருந்து -

====================================================================================================================

ரசித்த படம்..


பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த பொன்ஜெயசீலன். இவர் வீட்டிலிருந்து பந்தலூர் வழியாக கொளப்பள்ளி என்ற இடத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மேங்கோரேஞ்ச் - கொளப்பள்ளி சாலையில், ஏலமன்னா உரக்கிடங்கு குப்பை ஏற்றி சென்ற மினி லாரி ஸ்டார்ட் ஆகாமல் நின்றுக்கொண்டிருந்தது. இதனை பார்த்த எம்.எல்.ஏ., ஜெயசீலன் மற்றும் காரில் இருந்த கட்சியினரும் இறங்கி லாரியை தள்ளி உதவினார்கள். குப்பை லாரியை தள்ளி இயங்குவதற்கு உதவிய எம்.எல்.ஏ.,விற்கு அந்த வழியாக வந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
=============================================================================================


கொரோனா கால வெட்டி வேலை..!




========================================================================================================

பொக்கிஷம் : 

போயிங்....  போயிங்...  கோயிங்...  கோயிங்....

இரண்டாயிரமாவது வருஷம் எப்படி இருக்கும் என்கிற வருங்காலக் கற்பனை!


ஆசை வச்சேன்..  அடுக்குமல்லிப் பூவே....ஆரீரோ...   ஆரீரோ...


லைசென்ஸ் வாங்கலியோ..  லைசென்ஸ்!


இம்சை அரசர்கள்...!

=============================================================================================================


போதும்பா..  போதும்...  இந்த வாரம் இது போதும்...   மீதி அடுத்த வாரம் பார்க்கலாம்...

178 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம். மகன் மற்றும் அவர் குடும்பம் ஊர் திரும்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆம். அவர்கள் திங்களன்று மதியம் கிளம்பி நல்லபடியாக செவ்வாயன்று ஊர் சென்று சேர்ந்து விட்டார்கள். வீடே வெறிச்சென்று உள்ளது. அதை விட மனதும். என்ன செய்வது? நினைவாக விசாரித்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சில நாட்களில் சரியாகி விடும் கமலா அக்கா..  கவலைப்படாதீர்கள்..  

      நீக்கு
    4. அந்த நம்பிக்கைகள்தானே நம்மை நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது நன்றி சகோதரரே.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் எல்லாருக்கும்...

    தலைப்பு - ஆஆஆஆஅ எனக்கு ஒரு அனுபவம் உண்டு...அதை நினைத்து ஒரு கவலையும் அடி மனதில் சமீபத்தில் எழுந்து அவ்வப்போது படுத்துகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அதுதான் உண்மையா, அல்லது சொன்னது பலித்தால் சொன்னவர்களுக்கு கரிநாக்கு என்று சொல்வார்களா என்று தெரியாது. ஏனென்றால் எனக்கு கரிநாக்கு கிடையாது!//

    ஆமாம் அதே அதே....மீயும் அந்த லிஸ்ட். யாரிடமும் எதிர்மறையாகப் பேசுவதில்லை அதுவும் டக்கென்று நாவில் வராது. மனதில் இருந்தால்தானே நாவில் வரும் இல்லையோ? எனக்குச் சொல்லப்பட்டதைச் சொல்கிறேன் அடுத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் நானும்.  அப்படி எப்போதாவது தப்பித் தவறி ஏதாவது வாயில் வந்து விட்டாலும் மனசுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும்.

      நீக்கு
    2. ஹைஃபைவ் ஸ்ரீராம்.....அதே அதே....மனம் பிடுங்கி ஒரு வழியாகிவிடும். இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஈ இருப்பேன். நேர்மறையாய் சிந்திக்கணும் என்றும் மனம் திரும்பத் திரும்ப சஷ்டிக்கவசம் காக்க காக்க என்று சொல்லிக் கொண்டே...

      கீதா

      நீக்கு
    3. கொஞ்ச நாளைக்கு ஸ்ட்ரிக்ட்டாய் பழகி விட்டால் போதும்.  நல்லதே நினைக்க, பேச மனம் பழகி விடும்!

      நீக்கு
  4. ஆனால் பயமும், நம்பிக்கையும் எதிராளியை யோசிக்க வைக்கும், தயங்க வைக்கும். அந்த 'சில நடக்கும் அனுபவங்களி'ல் நாம் மாட்டி விட்டால் என்கிற பயம் கூட காரணமாயிருக்கும்.//

    நான் சில்லு சில்லாய் பதிவில் சொல்ல நினைத்திருந்தது. இனிதான் வரும். ஸ்ரீராம், நேற்று கூட நினைவில் வந்தது. இன்று உங்கள் பதிவு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பயம் 90% எல்லோருக்கும் இருக்கும்.  சிலர் வெளியில் காட்டிக்கொள்வார்கள்.  சிலர் வடிவேலு மாதிரி உதார் விடுவார்கள்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் எனக்கு அது மறந்து போய் மாதங்களானகணக்கில் சமீபத்தில் அந்தப் பயம் எழுந்து மகனிடம் சொல்லி நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டேன். இனி நீ இப்படிப் பேசுவதாக இருந்தால் என்னோடு பேசாது என்று சொல்லிவிட்டான்!

      கீதா

      நீக்கு
    3. ஆனால் ஒன்று எங்கள் வீட்டில் வம்படியாய் சில சமயம் நானும் பாஸும் அப்படிப் பேசிக் கொள்வதுண்டு!!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    என் நாக்கு கரி நாக்கு என்று நாக்கை நீட்டி காண்பித்தவர்களை நானும் பார்த்துள்ளேன். சடைமுடி இதுவரை கேள்விப்பட்டதில்லை. பொதுவாக இவர்களிடம் நம்மை அறியாது ஒரு பயம் வருவது உண்மைதான்.

    ஃபோன் பேசியவர் தான் பிறருக்கு வீணாக மனக்கிலேசத்தை உண்டாக்குகிறோமே.. இது தேவையா என நினைக்க வேண்டாமா? என்னவோ இதுவும் நம் நேரந்தான் போலும். வீணாக பலவிதமான எண்ணங்கள் நம் கவலைகளை அதிகரிக்குமே என்று நினைக்காத பேர்களை என்ன செய்வது? என்னவோ இப்படியும் சில மனிதர்கள்.. அனைத்தும் நல்லதே நல்லவிதமாக நடக்க வேண்டுமென நாம் பிரார்த்திப்போம். கடவுளின் அருள் என்றும் நமக்கு நிலைத்திருக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதோடு நமக்கு இன்னொரு சமாதானமும் இருக்கிறதே... 

      "நமக்கு என்ன நடக்கவேண்டும் என்று விதித்திருக்கிறதோ, அது நடக்கும்" 

      சமாதானப்படுத்திக் கொள்ளலாம்!

      நீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியம் சிறக்க ஆண்டவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அது எதிர்ம்றை ஸ்ரீராம், அதனால் அதைச் சொல்வதில் ஒருதயக்கமும். பதிவில் கூட அதைச் சொல்வதா வேண்டாமா என்றே அதைத் தள்ளிப் போட்டு வேறு சில்லுகளைச் சொன்னேன்.

    பிறந்தவீட்டுக் குடும்பத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்க உள்ளன. பதிவிலும் சொல்லியிருந்தேன். அப்போது அதைப் பற்றிய பேச்சு வந்து கொண்டிருந்த போது, கொரோனா அலை, என் பொறுப்புகள் என்று பேசெழுந்த போது ஒருவர் டக்கென்று சொன்னது, "ஒரு வேளை நீ முன்னாடியே போய், உன் அப்பா இருப்பாரோ என்னமோ" என்று சொல்லியதும் I was taken aback! அவருக்குக் கரிநாக்கு என்று சொல்லுவதுண்டு.

    சிலருக்கு என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், பேசும் தருணம் எதுவும் தெரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.   புரிகிறது.  'அசட்டு பிசட்டென்று பேசாதே' என்று சொல்ல அங்கு நல்ல ஒரு பெரிய தலை இல்லை போலும். 

      நீக்கு
    2. ஆமாம் இருந்தவர் எல்லாம் இப்போது மேலே குந்திக் கொண்டு வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்காங்க. இப்போது இருக்கும் நால்வரும் வயசாகி தானுன்டு தன் வேலை உண்டு என்று..

      இது கலந்துரையாடல் முடிந்து, ஒன் டு ஒன்னில் பேசும் போது வந்தது !!!!

      கீதா

      நீக்கு
    3. அப்போ நாமே கண்டிக்க வேண்டியதுதான்!

      நீக்கு
  8. இரண்டாயிரமாவது ஆண்டு க்ரைஸ்லர் வெளி வந்ததா தெரியவில்லை .66ஆம் வருடம் வெளிவந்த பாப்புலர் மெகானிக்ஸ்
    மாகசினில்
    வரும் காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசும் தொலைபேசி வரும் என்றார்கள்.

    எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாங்கள்
    அதாவது நானும் சிங்கமும் பேசிக்கொண்டோம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   என்ன ஆரூடம்..  நடந்து விட்டதே..

      நீக்கு
    2. ஸ்ரீராம் அறிவியலைப் பொருத்தவரை அதன் வளர்ச்சியைப் பார்க்கும் போது இது ஆரூடம் என்று சொல்ல முடியாது இல்லையா? இது வளர்ச்சியின் அடுத்தக்கட்டக் கனவு அல்லது சிந்தனை என்று சொல்லலாமோ?

      கீதா

      நீக்கு
    3. எல்லா கணிப்புகளும் நடந்து விடுவதில்லை என்றாலும் அறிவியலின் அடுத்த கட்ட சிந்தனைகள் சிறப்பாகவே இருக்கின்றன!

      நீக்கு
  9. ஒரு நிஜப் படம் பதிவிட்டு உற்சாகம் கொடுத்தது
    உங்கள் இன்றைய எழுத்து ஸ்ரீராம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிஜப் படம்//


      ??? ​ரசித்த படம்?

      நீக்கு
    2. ஹாஹா. மாறிவிட்டது வார்த்தை. ஆமாம் நிஜமாகவே
      ரசித்த நல்ல படம். நன்றி ஸ்ரீராம்.கொட்டோ கொட்டு கட்டோ கட்டு!!!

      நீக்கு
  10. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...  நலம்தானே?

      நீக்கு
  11. "அப்புறம் ஏதாவது சொல்லிடப் போறேன்.."

    "என் வாயில விழாதே.. நான் சொன்னா அப்படியே நடக்கும்.."

    "மனசெரிஞ்சு சொல்றேன்... அவன் அனுபவிப்பான்... கடவுள் அவனுக்கு கொடுப்பார்... எனக்கு கெடுதல் செய்தானில்லை..."//

    அதே அதே....இது வக்ர புத்தி ஸ்ரீராம். ரொம்பவே வக்ரபுத்தி. இப்படியானவர்களிடமிருந்து நாம் விலகி இருப்பது நல்லது. சிலர் சொல்லமலேயே வைச்சு செய்வாங்க ஸ்ரீராம்.

    அடுத்த வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன். இதையும் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் வேறு விதமாக.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உம்மாச்சி கண்ணைக் குத்திடும்//

    இதோடு சேர்த்து இன்னும் சொல்வதுண்டே. இதை நான் வேறு ஒரு பதிவில் முன்னமே சொன்ன நினைவு. அதாவது குழந்தைகளை வளர்ப்பது குறித்து மனோதத்துவம் என்பதில் சொல்லிய நினைவு.

    இது மிக மிக மிகத் தவறான ஒரு விஷயம். விளையாட்டாகக் கூடச் சொல்லக் கூடாது. மகனின் சிறு வயதில் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் அலல்து வந்தவர்கள் யாரேனும் என் மகனோடு விளையாடும் போது இப்படி ஏதேனும் சொன்னார்கள் என்றால் உடனே நான் சொல்லிவிடுவேன் இப்படித் தயவு செய்து அவனிடம் பேசாதீர்கள் என்று.

    முன்பு எப்பவோ இங்கு எபியிலோ அல்லது வேறு எங்கோ கருத்தில் சொன்னதும் உண்டு...

    சரி சிலதை பதிவில் சொல்லி வைத்திருக்கிறேன் ஸ்ரீராம். அதில் அங்கு சொல்கிறேன். ஹாஹாஹா. ஆ! இருங்க இன்னும் முழுசும் வாசிக்கலையே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  சிறுவயதில் கொஞ்சம் இந்த விஷயத்தில் பயமுறுத்தலாம்.  நல்ல விஷயங்கள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து விடுமே..

      நீக்கு
  13. சேம் சேம் சேம் அலைவரிசை!!!!! ஸ்ரீராம்...அடுத்த வரிகளை வாசித்ததும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பரின் உணர்ச்சி வசப்பட்ட எழுத்துக்கள் மனதை என்னவோ செய்கிறது. ஒரு சில இடங்களில் எனக்கும் கண்களில் கண்ணீர் மழை வந்ததை தவிர்க்க இயலவில்லை.

    அம்மாக்களே இப்படித்தானோ என எண்ணும் போது என்னையும் இந்த அம்மாவின் பிரதிபலிப்பாக உணரும் போது சுயபச்சாதாபம் அளவுக்கு அதிகமாக தோன்றுவதையும் தவிர்க்க இயலவில்லை.

    கவிதை நன்றாக உள்ளது.
    விலகி நடக்க நினைத்தாலும்,
    ஆழ்மனதின் பாசப்பொங்குதலை யாரும் உணரவில்லையோ என நமக்குள் எழும் சுயப்பச்சாதாபத்தை கடலுக்கடியில் புதைக்க முடியுமோ?

    கவிதையும், தங்கள் நண்பரின் எழுத்துக்களும், ஒன்றுக்கொன்று முடிச்சு போட்டது போல் அமைந்ததாக எனக்கு தோன்றியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவெளியில் பகிர்ந்ததுதானே என்று நண்பரிடம் அனுமதி வாங்காமலேயே இங்கே பிரசுரித்திருக்கிறேன்.  அவர் தவறாய் நினைக்காமல் இருக்கவேண்டும்.  நன்றி கமலா அக்கா - அகவிதையையும் சிலாகித்ததற்கு.

      நீக்கு
  15. கரி நாக்கு எல்லாம் நம்பவேண்டாம் ஸ்ரீராம்.

    நல்ல வாக்குகளே நன்மை தரும். இந்த மாதிரி அஸ்ட்டு ஜன்மங்களோடு கறாராக
    இருக்க வேண்டும்.

    எங்கள் வீட்டிலேயும் சின்னவனுக்குத் தான் முதலில்
    நிச்சயம் ஆனது.
    ஆறு மாதத்தில் திருமணம் என்று
    மருமகளின் தகப்பானார் கேட்டுக் கொண்டார்.
    நடுங்கியபடி இருந்தேன்.
    நல்ல வேளையாக முதல் மருமகளையும்
    கண்ணில் காட்டினார் இறைவன்.
    வாழ்வில் திருப்பங்கள் வரும். நல்ல விதத்தில் சமாளிக்கும்
    சக்தியையும் இறைவன் அளிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ​நம்பவில்லை என்றாலும் மனதிற்குள் இருக்கும் நம நம வை ஒதுக்க முடியவில்லை!

      //எங்கள் வீட்டிலேயும் சின்னவனுக்குத் தான் முதலில்
      நிச்சயம் ஆனது.//




      ஓ.. அப்படியா அம்மா... ஆனால் அதே போல நடக்க வேண்டுமே...

      நீக்கு
    2. காலையில் எழுந்திருக்கும் போதே பெரியவனுக்குக் கல்யாணம் சீக்கிரம் நடக்க வேண்டும், நடக்கப் போகிறது.
      என்று சொல்லியே எழுந்திருங்கள். பயமே வேண்டாம்.
      கரி நாக்கு வீட்டுப் பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      நடக்கும் பா.

      நீக்கு
    3. இருவருக்கும் விரைவில் திருமணம் நல்லபடியாக முடிய வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. நன்றி. வாக்கு பொன்னாகட்டும்.

      நீக்கு
  16. கண்களால் பார்த்தே ரஸ்புடீன் பொருள்களை நகர்த்துவாராம், வளைப்பாராம். அதுமாதிரி ஒரு மனமாய் நின்று அதையே நினைத்தால் நடக்கிறதோ என்னவோ..//

    ஆ ஆ ஸ்ரீராம், நான் இது பற்றியும் சொல்ல நினைத்து பதிவிலெ எழுதி வைத்திருக்கிறேனே!!!!!

    அதாவது ஒளிச்சுடரைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருநிலைப்படுத்தி சக்தியை மனதுள் எடுத்து, கண்ணால் பவர் செலுத்திச் செய்யும் ஒரு கலை என்று வாசித்திருக்கிறேன் முன்பு அது திடீரென்று நினைவு வர அதைப் பற்றி...
    இது எதிராளியின் மனதையும் படிக்க வல்லதாம். சித்தர்கள் சொல்லியது. மனோதத்துவத்திலும் உண்டு. அது நேர்மறைக்கும் உதவும், எதிர்மறக்கும் உதவும் என்று. அதைப் பற்றி வாசித்த நினைவு திடீரென்று வர அதை எழுதி...ஹிஹிஹி

    பாருங்க கிரேட் மைன்ட்ஸ் திங்க் அலைக்!! ஹாஹாஹாஹா இப்படிச் சொல்லிப்போம் சைக்கிள் கேப்பில்!

    ஏழாம் அறிவுன்னு ஒரு படம் வந்ததே அதில் கூட இப்படியான சீன்ஸ் உண்டே! ஆனால் எதிர்மறையாக..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ரஸ்புடீன் போல சக்தி கொண்ட மெட்டில்டா என்கிற சின்னப்பெண் பற்றிய ஒரு ஆங்கிலப்படமும் உண்டு!

      நீக்கு
    2. ஆ, ரஸ்புடீன்.

      மெட்டில்டா பெண்....பார்த்த நினைவு இருக்கு....ஆனால் நிழலாக.

      கீதா

      நீக்கு
  17. வெட்டி ஆராய்ச்சி படு ஜோர். நானும் சினிமா சிந்தனைகளில் இதே போல யோசிப்பதுண்டு.

    உன்னிடம் மயங்குகிறேன் வந்திருக்கலாம்.
    அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் படம் வந்ததே.

    பதிலளிநீக்கு
  18. சில சமயங்களில் நாம் அளவாகப் பேசவேண்டும் என்பது நமக்குப் புரிவதில்லை. பேச்சை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரியவேண்டும். நன்றி சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அடுத்தடுத்து அதிகப்பிரசங்கம்! //

    ஹாஹாஹாஹா அதே வடிவேலு ஸ்டைலில் "சுட்டிக் கொண்டு இது தேவையா தேவையா உனக்கு"

    சடை விழுவது நாம் முடியைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் வருவது இல்லையா?

    ஸ்ரீராம் நாம் பிரார்த்திப்போம் நம்மை மீறிய இந்த உலகையே ஆளும் சக்தியிடம். அதை மீறிய சக்தி எதுவும் கிடையாது.

    ஹான்...எனக்குச் சடை முடி உள்ளவர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுவேன். அதுவும் காவி தரித்தோ இல்லை ஆன்மீகச் சின்னங்களுடன் வருபவர்களைத் தவிர்த்து விடுவேன். உடனே மனதில் காக்க காக்க ...வந்துவிடும்! ஆஞ்சு வந்துவிடுவார் மனதில்! ஆனைமுகத்தான் வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சடை முடி உள்ளவர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுவேன். அதுவும் காவி தரித்தோ இல்லை ஆன்மீகச் சின்னங்களுடன் வருபவர்களைத் தவிர்த்து விடுவேன்.//

      ஹா.. ஹா... குசும்பு பிடித்தவர்கள்!

      நீக்கு
  19. உம்மாச்சி கண்ணைக் குத்த வேண்டும் என்றால்
    அரசியல் வாதிகள் இவ்வளவு ஜம்மென்று இருப்பார்களா.:)

    காஞ்சிப் பெரியவர் எத்தனையோ வாக்கியங்களுக்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்.
    உமா மால் சிவம் என்று எப்பவோ
    படித்த நினைவு. நம் கீதா சாம்பசிவத்துக்குத் தெரிந்திருக்கலாம்.
    குழந்தைகளை இப்படி எல்லாம்
    மிரட்டும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, உமா மால் சிவன்.. இது நல்லாயிருக்கே.. ஆனால் அந்த பயம் இல்லாவிட்டால் உலகில் தவறுகள் கூடிவிடும் அம்மா.

      நீக்கு
    2. உமா,மால், சிவன் அல்ல.‌ உமாமகேஸ்வரன் என்பதுதான் உம்மாச்சி என்று மருவி விட்டது என்று மஹாபெரியவர் தெய்வத்தின் குரலில் கூறியிருப்பார்.

      நீக்கு
    3. அவர் மட்டும்தான் கண்ணைக் குத்துவாரா?!!

      நீக்கு
    4. எந்த உம்மாச்சியும் கண்ணையோ மூக்கையோ குத்தமாட்டார்கள். இந்த விஷயத்தில் எனக்கும் என் மாமியாருக்கும் எப்போதுமே அபிப்பிராய பேதம். சாமி வந்து கண்ணைக் குத்திடும், மகமாயி வந்து நாக்கில் சூலத்தைச் செருகிடுவானு எல்லாம் என் மாமியார் பயமுறுத்துவாங்க. அதிலும் வேறு சாமிக்கு நேர்ந்து கொண்டால் உடனே மகமாயிக்கு ஆகாது இதெல்லாம் என்பார்கள். மகமாயி ஏத்துப்பா என்பேன் நான். உனக்கு தெய்வ நம்பிக்கையே இல்லை எனக் கோபமாகச் சொல்வாங்க. தெய்வத்தை நம்பறதால் தான் நான் இதை எல்லாம் நம்புவதில்லை என்பேன். கோபத்துடன் கோயிலுக்குப் போய் என் பேரில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து என்னைத் திருத்தும்படி கேட்டுக் கொண்டு வருவாங்க.

      நீக்கு
    5. கண்ணைக்குத்துவார்கள் என்று குழந்தைகளை நாம் நெறிப்படுத்துகிறோம் என்றே சொல்லவே வந்தேன்.  குத்த மாட்டார் என்று என்றுதான் தெரியும்!  சிறுகுழந்தையாக இருக்கும்போது மனதில் பதியும் அந்த பயம் மனதை நெறிப்படுத்தி நல்லது கெட்டது புரிய வைக்கும்.

      நீக்கு
  20. எம் கே டி பாகவதருக்கு ஆயிரம் தான் சம்பளமா.
    டைரக்டருக்கு 750!!!
    அப்போது ரூபாய் மதிப்பு எத்தனையாய் இருந்ததோ.
    திருச்சியில் பாகவதர் பங்களோ பார்த்த நினைவு. அதனால் அது பெரிய சம்பளமாகத் தான் இருக்கும். கதா நாயகி சூப்பர் ஸ்டாரோ!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய சம்பளமன்றோ!

      நீக்கு
  21. ஸ்ரீராம் ஃபேஸ்புக் பதிவைக்கொஞ்சம்தான் வாசிக்க முடிந்தது.....என்னால் அதற்கு மேல் வாசிக்க முடியவில்லை...வரிகள் எனக்கு நிகழ்ந்ததை நினைவுபடுத்துகிறது. அதைப் பதிவிலும் சொன்ன நினைவு அம்மா என்னொடு பேச வேண்டும் என்று காது கேட்காத நிலையில் ஃபோனில் என்னை அழைத்துப் பேசியது....இப்போது கரிநாக்கு நினைவுக்கு வந்து என் மகன் நினைவுக்கு வர.....மகன் என்னோடு ரொம்ப உணர்வு பூர்வமான நெருக்கம்..அவர் சொல்லியிருப்பது போல அவனும் அடிக்கடி வந்து என்னைப் பார்த்து நான் இருக்கிறேனா என்று உறுதிப் படுத்திக் கொள்வான்.

    ஃபேஸ்புக் பதிவு வாசிக்க முடியாத நிலையில் இப்போது போய் மீண்டும் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நான் ரொம்ப நெகிழ்ந்து போன பதிவு அது.

      நீக்கு
    2. மருத்துவர் தேதி, நேரம், மாதம் குறித்து நாங்கல்லாம் எதிர்பார்த்தது தான் என்றாலும் அம்மாவின் மறைவும்/அன்றைய தினமும் இன்னமும் மனதில்!

      நீக்கு
    3. ஆம்..  அம்மாவோ, அப்பாவோ..  மறையும்போது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

      நாளை என் அப்பா மறைந்த நாள் (தேதிப்படி) 

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    பதிவின் இறுதியில் பதிவுக்கு முத்தாய்ப்பாக போதுமென "காதலிக்க நேரமில்லை" படத்தை போட்டு நீங்கள் நினைவூட்டினாலும், அந்தப் படத்தை பழைய படமாக இருப்பினும் இப்போதும் எத்தனை தடவை பார்த்தாலும்,அலுப்பே வருவதில்லை/வந்ததுமில்லை. அதுபோல்தான் உங்கள் வியாழன் பதிவும். படிக்க படிக்க சுவாரஸ்யம் குன்றாத தங்களது பதிவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  நன்றி.  பாராட்டுவதற்கு எல்லையே வைத்துக் கொள்வதில்லை நீங்கள்!

      நீக்கு
  23. சடைமுடியோ கரிநாக்கோ... நம் பேச்சினால் அடுத்தவர்களுக்கு சந்தோஷம் வரலைனா அதனால என்ன பிரயோசனம்?

    சிலர் அதீதமாகத் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டு தான் சொல்வதெல்லாம் பலிக்கும்னு அலட்டுவாங்க. அதையெல்லாம் அலட்சியம் செய்துவிட வேண்டியதுதான்.

    எது நல்லதோ அதுதான் நடக்கும். அது திருமணமானாலும் சரி வேறு எதுனாலும் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்.  ஆனால் இந்தத் தெளிவு சில சமயம் சொந்த விஷயம் என்று வரும்போது பலவீனமாகிவிடும்.  அதுவும் சில சிரமங்கள் தலைகாட்டிக்கொண்டிருக்கையில்!

      நீக்கு
  24. அம்மா மறைவு பற்றி எழுதியிருப்பது நன்று. அப்பாவின் நிலைதான் பாவம்.

    ஒருத்தர் மறைந்த பிறகுதான் தான் அவருக்குச் செய்ய விட்டுப்போனவைகள் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. மகனின் பார்வையில் அவர் பதிவு நெகிழ்வு.

      நீக்கு
  25. பாலின சமத்துவம்.... இதற்குப் பல வருடங்களாகும். நம் பொது மனத்தில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற எண்ணம் காலம் காலமாக விதைக்கப்பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களானாலும் முழுமையாக வருமா?

      நீக்கு
    2. மத்யமரிலும் இப்போது இந்தப் பொருள் தான் ஓடிக் கொண்டிருக்கு. பெண்ணீயம் பேசுபவர்களும் ஆணாதிக்கம் நிறைந்தஅதை ஆதரிக்கும் பெண்களுமாக மோதிக் கொண்டிருக்காங்க. :))))) வெளியே நின்னு வேடிக்கை பார்க்கிறேன். )

      நீக்கு
    3. பெண்ணியம் பேசும் ஆண்கள்தான் பெரிய ஃராடா இருப்பாங்கன்னு தோணுது. வெளில பேசற மாதிரி வீட்டில் நடந்துக்குவாங்களா?

      நீக்கு
  26. எந்த இறப்பையும் போகப் போக மனது ஏற்றுக்கொண்டு அமைதியடைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லாவிட்டால் இருப்பவர்கள் அமைதியாக வாழமுடியாது.

      நீக்கு
    2. மறந்துடுவோம். பாசம் கீழ்நோக்கித்தான் இருக்கும். நமக்கு மூத்தோர் போனா மனம் சமாதானமாகிடும். கீழனா சமாதானமாகாது

      நீக்கு
    3. ஆனாலும் தாய் தந்தை இழப்பு என்பது...

      நீக்கு
  27. உங்கள் முகநூல் நண்பரின் பதிவு எல்லா நினைவுகளையும் கலக்கிவிட்டது. மகனாக செய்யும் காரியங்கள் மிக அதிர்ச்சி தருபவை. என்கணவர் அழுததை அப்போதுதான் பார்த்தேன். அம்மாவுக்கு நானே பெசண்ட் தகர் போனேன் . அரைமணி தேரத்தில் சாம்பல் கையில் தம்பியைப் பிடித்துக் கொள்ள நானும் சமுத்திரத்தில் இறங்கினேன். நிலையாமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகன்களும் சொல்வார்கள்..  நான் அம்மா மற்றும் அப்பா மறைவின்போது கலங்கிப்போனதை..

      நீக்கு
  28. கவிதை மிகப் பொருத்தம் மனசுக்குப் பிடித்த வரிகள். நன்றியும் வாழ்த்துகளும்ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  29. சொன்னதெல்லாம் பலித்தால் எல்லோரும் தன்னை முதல்வராக சொல்லச் சொல்வார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிதினும் பெரிது கேள் என்றார் பாரதியார்.  சொல்வது சொல்கிறார்கள், பிரதமாராகவேண்டும் என்றோ தானே கடவுளாக வேண்டும் என்றோ சொல்ல மாட்டார்களோ!!!

      :)))  நன்றி ஜி.

      நீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம்.
    சடை உள்ளவர் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் ஒரு கதை எழுதியிருந்தீர்கள் ஸ்ரீராம், நினைவு இருக்கிறதா? இரண்டு மகன்கள் உள்ள ஒரு தந்தையை காதல் மணம் செய்து கொள்ள விரும்பும் மகன்கள் ஒரு டிராமா செய்து ஒப்புக்கொள்ள வைப்பார்கள். அதற்கு சூத்திரதாரி அண்ணனுக்கு முன் காதலில் விழுந்த இளைய மகனும், அவன் காதலியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ் சூப்பர் ஞாபகசக்தி உங்களுக்கு!!

      நீக்கு
    2. ஹை நானும் இதைச் சொல்லியிருக்கிறேனே!!! கீழே. இந்தக்கதை நினைவுக்கு வந்ததாக!!!

      கௌ அண்ணா நேக்கும் நினைவு சக்தி கொஞ்சம் பெட்டர். இப்படி எழுதியது பார்த்தது வாசித்தது பெரும்பாலும் நினைவு இருக்கும்

      ஆனால் பானுக்காவை அடிச்சுக்க முடியாது! அவங்க நினைவுத் திறன் செம. அது போல ஏஞ்சல்!! அதி நினைவுத்திறன்.

      கீதா

      நீக்கு
    3. ஆஹா, என் எழுத்தே எனக்கு சத்ரு!

      நீக்கு
    4. அந்த நினைவு எனக்கும் வந்துச்சி :) அது என்னனா நான் எப்பவும் கமெண்ட்ஸ் வாசிச்சிட்டு அப்புறமா போஸ்டுக்கு போவேன் இன்னிக்கு எதிர்பதம் .பதிவு படிக்கும்போது எதுக்கு நினைவு  கீரணும்னு :) நினைச்சி விட்டா இங்கே பின்னூட்டத்தில் கீத்ஸ் சொல்லிட்டாங்க :) 
      ஆனா பாருங்க அவுங்க என் பேர் சொன்னது தெரியாம நானும் ஓடி வந்திருக்கேன் :)

      நீக்கு
  31. கோபிநாத் ரவியின் அனுபவம் நெகிழ்ச்சி.அதறாகு பொருந்தும் கவிதை.

    ஜோக்குகள் பிரமாதம். அதுவும் பைலட் லைசன்ஸ்..‌‌ரசித்துசிரித்தேன்.

    பொக்கிஷம் அருமை.

    குழந்தை திருமணம் பற்றிய சட்ட அபத்தங்கள் யோசிக்க வைக்கின்றன.

    குப்பை லாரியைத் தள்ளிய எம்.எல்.ஏ. - சனிக்கிழமையன்று இடம் பெற வேண்டியது வியாழனன்று வந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குப்பை லாரியைத் தள்ளிய எம்.எல்.ஏ. - சனிக்கிழமையன்று இடம் பெற வேண்டியது வியாழனன்று வந்து விட்டதோ?// நானும் அப்படி நினைத்தேன்!

      நீக்கு
    2. நன்றி பானு அக்கா.  

      சனிக்கிழமையில் போடலாம்தான்.  ஆனால் என் கருத்து என்னவென்றால், இது சாதாரண மனித உதவி.  அவர் ஒரு பெரிய வி ஐ பி என்றாலும் மனிதர்க்கு மனிதர் செய்யும் உதவி.  இதை பாராட்டிய பொதுஜனம் ஒரு வேடிக்கை என்றால், அவர்கள் உதவாமல், உதவியவரை பாராட்டுவது.

      நீக்கு
  32. ஃபேஸ்புக் பதிவு, உணர்வுபூர்வமான மனதை என்னவோ செய்கிறது.

    உங்கள் கவிதை அட்டகாசம். ஆழ்ந்த கருத்து. அதற்கு முந்தைய பகுதிக்குப் பொருத்தமாகவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வழக்கறிஞர் சாந்தகுமாரி - தினமலர் செய்தியை முழுமையாக ஆதரிக்கிறேன்.

    திருமண உறவில் பாலியல் பலாத்காரம்// இதன் அடிப்படையில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தல் என்ற கட்டத்திற்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. வெளியிடத் தயக்கமும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்ப உறவுக்குள் சட்டம் வந்தால், அங்கு குடும்பத்துக்கு என்ன வேலை?

      அதைப் பிரிந்து மூன்றாமவரிடம் (கோர்ட்) பிரச்சனை வரும்போதுதான் சட்டத்துக்கு வேலை.

      நீக்கு
    2. நான் சொன்னதே வேறு நெல்லை. விவரமாகச் சொல்லவில்லை. அதற்கு மேல் இங்கு எதுவும் சொல்ல முடியாதே!!!!!!

      அதில் குறிப்பிடப்பட்டிருந்த சின்ன வயது திருமணங்கள்...எட்ஸ்ட்ரா....

      கீதா

      நீக்கு
    3. இதைக் குறித்தும் கதை ரெடியா?  ஆனால் ஒன்று கூட வர மாட்டேன் என்கிறதே கீதா?

      திருமண உறவுகள், வயது பற்றிய சிந்தனைகள், சட்டங்கள் எல்லாம்  மாறுபட்ட கருத்துகளைக் கொண்டது.  சட்டென இதுதான் சரி என்று வரையறுத்துச் சொல்லி விட முடியுமா என்ன!

      நீக்கு
  34. வெட்டி வேலை ஆராய்ச்சி இரண்டுமே சுவாரசியம். எங்கள் வீட்டில் நாங்கள் முன்பு இப்படிப் பாடல்வரிகள் திரைப்படப் பெயர் சொல்லி விளையாடியதுண்டு.

    ஸ்ரீராம், அந்த ஐரோப்பிய நடிகையா அது பாகவதர் அருகில் இருக்கும் படம்? பார்த்தால் தெரியவே இல்லையே. வேறு ஒரு தமிழ் நடிகையை நினைவுபடுத்துகிறார். பெயர் டக்கென்று நினைவு வரவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டி ஆராய்ச்சி// ஸாரி வேலை என்றுஇடையில் குறுக்கிட்டுவிட்டது!!!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. அவர் இந்திய நடிகைதான் கீதா.  அவர்தான் டி பி ஆர்.    சினிமா பற்றி பேசினாலே சிலர் வெட்டி என்பார்களே..  அதுதான் நானே முந்திக் கொண்டேன்!

      நீக்கு
    3. //சினிமா பற்றி பேசினாலே சிலர் வெட்டி என்பார்களே.. அதுதான் நானே முந்திக் கொண்டேன்!/ஹையோ, ஹையோ! நான் அப்படில்லாம் சொல்லலையே!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    4. ஹிஹிஹி...   உங்களைச் சொல்ல வேண்டும் என்றால் சிலர் என்று சொல்லமாட்டேன்.  கீதா அக்கா என்றே சொல்லி விடுவேன்!

      நீக்கு
  35. பொக்கிஷம் இரு தகவல்களும் நல்ல சுவாரசியம். இப்படி வளர்ச்சி குறித்து நிறைய அவ்வப்போது வரும் இப்போதும் இனி வருவது பற்றிசொல்லப்படுகிறது. சுஜாதா கூட அவ்வப்போது சொல்லியது உண்டு இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  36. இம்சை அரசர்கள், லைசன்ஸ் // சிம்பு - சிம்புதேவன்? டைரக்டர் 23 ஆம் புலிகேசி எடுத்தவர்? அவர் ஆவியில் தான் போட்ட ராஜா ஜோக்குகள் தாஅன் அப்படத்துக்கு பேஸ் என்று சொல்லியிருந்த நினைவு

    லைசன்ச் முதல் படம் - ஆ என்று சிரிப்பு வந்தது! சர்க்கஸ்?!
    ஜோக்ஸ் ஓகே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர்தான்.  அதனால்தான் அந்தத் தலைப்பு கொடுத்தேன்!

      நீக்கு
  37. ஸ்ரீராம், உங்கள் முதல் பகுதியில் நீங்கள் சொல்லியிருக்கும் அந்தப் பகுதி அந்தப் பெண்மணி இரண்டாம் மகனுக்குக் கல்யாண்கொஞ்சம் உங்கள் கற்பனையில் ஒருகதை வந்த கதை..இரு பையன்கள் தங்கள் காதலை அப்பாவிடம் சர்ப்ரைஸ் என்று ஒரு ஆக்ட் கொடுத்து சொல்லும் கதை எழுதிய நினைவு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதை எழுதியதும் மொட்டை மாடிக்கு மேலிருந்து யாரோ 'ததாஸ்து' என்று சொல்லி விட்டார்களோ!   என்ன காலக் கொடுமை இது!  ஆனால் அதில் கூட நான் மூத்தவனுக்குதான் முதலில் என்று முடித்திருந்தேன்!

      நீக்கு
    2. இதற்க்கு நான் ரிப்லை போட்டேன் ..எங்கே போச்சு ???
      பாருங்க  இன்னிக்கு என் பேர் சொல்லியிருக்காங்க நானும் வந்திருக்கேன் .லேட்டாதான் கவனிச்சேன் எப்பவும் கமெண்ட் படிச்சி பதிவுக்கு போவதை விட்டு மாறுதலா வந்ததில் .
      ஆமாம் ,எனக்கும் அந்த கதை நினைவுக்கு வந்தது 

      நீக்கு
  38. இன்றைய பதிவு கனமானது.
    ஒன்றும் சொல்வதற்கில்லை..

    துணுக்குகளைப் பெரிதாக்கினாலும் இலகுவாகப் படிப்பதற்கு இயலவில்லை..

    பதிலளிநீக்கு
  39. மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டே ஓடிப் போன கணவர்களைப் பற்றி அந்த அம்மா அவர்களுக்குத் தெரியுமா?..

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. @ ஸ்ரீராம்..

    //ஆழ்கடல் போல​ அமைதியாகவே
    இருக்கிறது​ மனம்..//

    ஆழ்கடலே
    ஆனாலும் அங்கே
    அமைதியாய் இருக்க
    விரும்புவதில்லை மனம்!..

    பதிலளிநீக்கு
  42. @ ஸ்ரீராம்..

    இப்படி மாற்றிப் பாருங்க..
    சடைமுடி கரிநாக்கு
    v
    v
    v
    சடைகரி முடிநாக்கு..

    பதிலளிநீக்கு
  43. // திருமண உறவில் பாலியல் பலாத்காரம்.. //

    பிழையான குறிப்புகளின்படி கணிக்கப்பட்ட ஜாதகம் கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கணிப்பு என்பது எத்தனை சதவிகிதம் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது மனதில்!

      நீக்கு
  44. @ ஸ்ரீராம்..

    //அடடா... ஏன்?..//

    கண்ணாடி மாற்றிக் கொள்ள வேண்டும்.. மேலும்

    வலது கண்ணில் மிக மிக மெல்லியதாக ஏதோ ஒரு திரை.. இது வீட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் தெரியாது..

    தெரிந்தால் செல்போனுக்குத் தடையாகி விடும்...

    இரண்டு வருடங்களாக எல்லாமே இதில் தானே!

    பதிலளிநீக்கு
  45. நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக. நம்பிக்கையே மனதின் ஆதாரம். கரி நாக்கோ சடைமுடியோ எதுவானாலும்.

    உங்கள் நண்பரின் எழுந்தில் பாலகுமாரன் வாசனையை நான் உணருகிறேன்.

    //விலகி நடக்கிறேன்
    நின்று விட்டது
    மனம்.​//

    எதை விட்டு விலகுகிறீர்கள். மனைவி மக்களையா? ஆபீஸ் பிரச்சினைகளையா? அல்லது நண்பர்களையா? புரியவில்லை. மனம் தான் நாம் என்றபோது மனதை விட்டு விலக முடியுமா? ​

    எல்லோரும் மனம் ஒரு குரங்கு என்றால் நீங்கள் கடல் என்கிறீர்கள், அதுவும் ஒரே நேரத்தில் இரு நிலை வகிக்கும் அடுப்பில் வைத்த உலை போல. (மேலே கொதிக்கும், அடியில் அப்படியே இருக்கும்). உலையைக் கிண்டுவது போல் மனத்தைக் கிண்டினால் எல்லாம் ஒரே நிலையை அடையாதோ?

    உலகத்தார் பார்வைக்கு
    பொங்குதலும்​ புரிவதில்லை.
    ஆழ்மனமும் தெரிவதில்லை.


    என் மனம்
    எனக்கு தெரிவதில்லை
    உன்மனம்
    உனக்குத் தெரிவதில்லை
    பின் எப்படி
    உன்மனம் எனக்கு தெரியும்.
    எனக்கு இதுதான் தெரியும்
    எல்லோருக்கும் மனம் உண்டு.

    PETA போன்று இந்த பெண் இயக்க வாதிகள் குடும்ப வாழ்க்கைக்கு குழப்பம் உண்டாக்குகிறார்கள். ஆண் பெண் இருவரும் ஒத்து ஒரு குடும்பத்தை நடத்தி செல்வதை விட்டு செயல்கள் யாவையும் சட்டம் ஆக வைக்க வேண்டும் என்றால் இயந்திர வாழ்க்கை தான் வாழ வேணும்.

    அந்தக் காலத்தில் எனக்குவிவரம் தெரிந்த 1957 வருடம் அப்பா மாதம் 1ந் தேதியன்று 100 ரூபாய் சம்பள, கொண்டு வருவார். 25 ரூபாய் வாடகையும் கொடுத்து பாக்கி உள்ள தொகையில் குடும்பமும் ஓடியது. அரிசி பக்கா படி ஒன்றே கால் ரூபாய்.

    ஜோக்குகள் சுமார் ரகம் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக. //

      நன்றி.


      உணர்வுபூர்வமாக எழுதினால் பாலகுமாரன் தெரிந்து விடுவார்!

      அப்போதைய ஏதோ ஒரு சிந்தனையை விட்டு விலகி நடக்கிறேன் என்று கொள்ளலாம்.  ஒவ்வொன்றையும் விட்டு அடுத்த பிரச்னை வரும்போது விலகி புதியதை நோக்கி நகர்கிறோம்.  சில சமயங்களில் பழையதிலேயே தேங்கி நின்று விடுகிறது மனம்.

      மனம் ஒரு குரங்கும்தான், கடலும்தான்!  எதெது எவ்வெப்போது பொருந்துமோ அதது அப்போது!


      மற்றவர்களை யாரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.  அவரவர் பிரச்சனை அவரவர்களுக்குப் பெரிது!

      அந்தக் கால சம்பளம் எல்லோருக்கும் அவ்வண்ணமே..  இருபது தேதி நெருங்கும்போது அப்பாவின் காசு டப்பாவில் காசிருக்காது.  துடைத்துப் போகக்கூடாது என்று ஒரு ரூபாய் நோட்டு மட்டும் ஒன்று இருக்கும்!  மாமாவின் காபிப்பொடி, நல்லெண்ணெய் பிரச்னைகள் தீவிர விவாதத்துக்குள்ளாகும்.  சண்டை வரும்!

      நன்றி ஜெயக்குமார் ஸார்.

      நீக்கு
  46. ///கடவுள் பார்த்துப்பார்//
    இது பத்தி எனக்கும் டவுட்ஸ் உண்டு .நாம் எதுக்கு ஒருத்தரை திட்டனும் வையனும் அவரவர் செயலுக்கு தெய்வமே சாட்சி அவர் தீர்ப்பு அளிக்கட்டும் என்னும் அர்த்தமா ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் வெளிப்பாடு!

      நீக்கு
  47. அவருக்கு முடியில் சடை ஏன் விழுந்திருக்கு ?வேண்டுதலா ? தம்பிக்கு முதலில் திருமணம் ஆகி அப்புறம் அண்ணனுக்கு திருமணம் ஆவது பெரிய பிரச்சினை ஒன்றுமில்லையே :)டேக் இட் ஈஸி :) ஆனாலும் அந்த சடை ஆன்ட்டி குறிப்பிட்டு சொல்லி குழப்பி விட்டுட்டாங்க உங்களை :)
    எனக்கு தெரிஞ்ஜ குடும்பத்தில் இப்படி நடந்திருக்கு அண்ணனுக்கு தம்பிகளுக்கு அப்புறம் மணமாகி மிக மிக மிக அருமையான அழகான அன்பான இன்னும் மானே தேனே பொன்மானேங்கிற அளவுக்கு பெண் அமைஞ்சிருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியில் சடை விழுவது என்ன காரணமோ...  ஏதோ ஆரோக்கியமின்மை.!  ஆனால் தம்பிக்கு மணமாகி அப்புறம் அண்ணனுக்கு என்பது சரியில்லாமல் போகலாம்.

      ஹலோ...   நீங்கள் ஏஞ்சல் இல்லை?  நான் பாட்டுக்க கடமைக்கு பதில் சொல்லிக்கினு இருக்கேன்!  நல்லாயிருக்கீங்களா?

      நீக்கு
  48. // சில சமயங்களில் நாம் அளவாகப் பேசவேண்டும் என்பது நமக்குப் புரிவதில்லை... பேச்சை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரியவேண்டும்... //

    மனதில் விழுந்த தடையை உடைத்தால் போதும்...

    பதிலளிநீக்கு
  49. எல்லாத்துக்கும் நம் மனமே காரணம் கோவிட் அப்புறம் அந்த இன்னொன்னு  தவிர எல்லாத்திலும் பாஸிட்டிவா :) இருப்போம் நல்லதே நடக்கும் .அதுவும் மனசு குழம்பி இருக்கும்போது இப்படி அட்வைஸ்களுக்கு இடம் கொடுக்காதீங்க கொடுத்தாலும் ஒரு காதில் ஏத்தி அடுத்த காது வழியே விட்ருங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இன்னொன்னு??

      அப்படிதான் செய்வது.. ஆனால் எப்படி பதிவு தேத்துவது?!

      நீக்கு
    2. /////அந்த இன்னொன்னு??
      /////

      garrrrrrrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
  50. நமது பொங்குதலும்​ ஆழ்மனமும் நாம் அறிவதே பெரிய வேலையாச்சே... பிறர் எதற்கு...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க...  நமக்கே நாம் யாருனு தெரியாது!

      நீக்கு
  51. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும் (28)

    நிலத்து மறைமொழி = மாந்தர் அருளிச் செய்த நன்மொழி

    பதிலளிநீக்கு
  52. ///பெற்றோர் போன பின் தான், இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரத்தை ஒதுக்கி இருக்கலாமே என்று தோன்றும் போல (எவ்வளவோ முறை கூப்பிட்டும் 'இன்னும் பத்து வருடங்கள் கழித்து உன்னோடு வருகிறேன் ' என்று சொன்னார். Comfort zone தாண்டி பெரியவர்கள் வருவதேயில்லை).//
    உண்மை .இன்னும் பல பெற்றோர்கள் பிடிவாதத்துடன் இருக்காங்க .அந்த zone தகர்த்து வந்திருந்தா இன்னும் நமக்கு நல்ல நினைவுகள் கிடைத்திருக்கும் சேமிப்பு பெட்டியில் .
    ceremony /// மனம் கனத்தது 

    பதிலளிநீக்கு
  53. //உலகத்தார் பார்வைக்கு
    பொங்குதலும் புரிவதில்லை.
    ஆழ்மனமும் தெரிவதில்லை.//
    சரி சரி ரிலாக்ஸ் அனுஷ்க்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம கதாநாயகிகள் யாருக்குமே திருமணமாகமாட்டேங்குது.எல்லாரும் கழண்டுடறாங்க போலிருக்கு

      நீக்கு
    2. //அனுஷ்க்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம் :)/

      அதாங்க இன்னும் கவலையா இருக்கு!

      நீக்கு
  54. //குற்றவாளியையே பாதுகாப்பாளராக சேர்க்கும் இந்தச் சட்டம்,//
    மக்கள குழப்பிட்டாங்கப்பா அது 60  வயசு  ஜீரோ 18 வயசு ஜீரோயின் கூட நடிக்கும்போது நாமளும் செஞ்சா என்னன்னு நினைச்சிக்கிறாங்க .இத்தென்னா புதுசா :) இதுபற்றி நிறைய எழுதலாம் .எதுக்கு மீக்கு வம்பு .எப்போவாச்சும் வரேன் திருமி வரணும் .அதனால் வாயை மூடி பேசறேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //60 வயசு ஜீரோ//

      சொச்ச வயசை ஏங்க குறைக்கறீங்க?!

      நீக்கு
    2. உங்களுக்கு என்னைய பார்த்தா பரிதாபமா இல்லியா :) என்னைய போனா போகட்டும்னு பிழைச்சு போக விடுங்க :))) நானே சரியா கவனமா 60 னு போட்டேன் :) saaaameee save meee

      நீக்கு
  55. இன்று இங்கு வருகை தந்திருக்கும் ,அனைவருக்கும் மற்றும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சங்கத்தினருக்கும் இனிய வணக்கங்களை தெரிவித்து செல்கிறேன் .எல்லாரும் ஹாப்பியா இருங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​சந்தோஷம்... சந்தோஷம்... அடிக்கடி வாங்க...


      'கேளடி என் பாவையே' பாடலில் திடீரென நடுவே மோகன்லால் வந்து போவது போல வந்து செல்கிறீர்கள்!  சந்தோஷம்.

      நீக்கு
    2. ஆஆஅஹ் :) தேடி போய் லாலேட்டனை பார்த்தேன் .
      பாருங்களேன் இந்த படத்தை 3 தடவை பார்த்தும் அவரை மிஸ் பண்ணிருக்கேன் :)

      நீக்கு
    3. அட...  இத்தனை நாள் அவரைப் பார்த்தது இல்லையா?  ப்ரியதர்ஷன் அவர் நண்பர் என்பதால் கெஸ்ட் அப்பியரன்ஸ்!

      நீக்கு
    4. ஏஞ்சல் நலமா? வாழ்க வளமுடன்

      நீக்கு
  56. அம்மாவைப்பற்றிய நண்பரின் பதிவு கனமானது. `லைட்` ஆகத் தெரிந்த அம்மாக்கள், பிள்ளைகளின் மனங்களைக் கனக்கவைத்துவிட்டு அகன்றுவிடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  57. கரி நாக்கு பலிக்கும் என பயமுறுத்தும் கூட்டம் ஒருபுறம் இதில் வேறு பெருமை ? என்னத்தை சொல்வது.
    ஜோக்ஸ் காட்டூன் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அவர்கள் கூட சொல்லிக் கொள்ளவில்லை என்றால் எப்படி! நன்றி மாதேவி.

      நீக்கு
    2. வணக்கம் மாதேவி சகோதரி.

      தாங்கள் உடல் நலம் சற்று. அசௌகரியமாக இருப்பதாக நேற்று சகோதரி கோமதி அரசு அவர்கள் எ.பியில் நலம் விசாரித்திருந்தார். நான் தொடர்ந்து சிறிது காலம் வலைத்தளம் வரவில்லையாததால் எனக்கு அதுபற்றி ஏதும் தெரியவில்லை. தற்சமயம் நீங்கள் பூரணமாக நலம் பெற்று விட்டீர்களா? தங்கள் உடல் நலம் பூரணமாக குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் ஊர் நிலையும் இயல்பு நிலைக்குத் திரும்ப என பிராத்தனைகள். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நலமாக உள்ளேன் அன்பான விசாரணைக்கு நன்றி. நாட்டு நலனுக்கு பிரார்த்திப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  58. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவில் மற்ற தகவல்கள் நன்றாக இருந்தன சின்ன எழுத்துக்களை கைப்பேசியில் படிக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஜோக்ஸ் அருமை. பதிவுக்கு வந்த நல்லவையான கருத்துரைகளும் அருமை.

    நடப்பவை அனைத்தும் நல்லவையாக நம் மனதிற்கு இசைந்தாக நடக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். மனக் குழப்பங்கள் ஏதுமின்றி தைரியமாக இருங்கள்.

    காலையில் கருத்துரையில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். என் கணவரும் அண்ணன் இருக்க தான் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பிதான்.என் கணவரின் அண்ணாவுக்கு வேலைக்குப் போகும் பெண்ணைத் தேடியதில், சரியாக ஏதும் அமையாமல் நாட்கள் கடக்க அவர் தன் தம்பியின் திருமணத்திற்கு வழி விட்டு விட்டார். எங்கள் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் கழித்துதான் அவர் விருப்பப்படி பெண் கிடைத்தார். அந்த காலத்திலும் இது சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. நடப்பவை அனைத்தும் நலமாகத்தான் நடக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். ஏதோ இதைச் சொல்ல வேண்டுமென தோன்றியதால், மறுபடி வந்தேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  மீள்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கமலா அக்கா.   பொடி எழுத்துகளை படிக்க முடியவில்லை என்று துரை அண்ணா சொல்லி இருந்தார்.  கஷ்டப்பட்டு படித்து விட்டர்கள்.  உங்கள் வீட்டிலேயே இந்த தம்பி அண்ணன் நிகழ்வு நடந்திருக்கிறதா?  இருந்தாலும் நான் மூத்தவனுக்கு முதலில் நடப்பதையே விரும்புகிறேன்.  கடவுள் சித்தம்.  பார்ப்போம்.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /நான் மூத்தவனுக்கு முதலில் நடப்பதையே விரும்புகிறேன்./

      உங்கள் பிரார்த்தனைகளோடு, எங்கள் பிரார்த்தனைகளும் இணைந்து அவ்விதமே நடக்கட்டும். கடவுள் கண்டிப்பாக நடத்தி வைப்பார்.கவலை வேண்டாம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  59. ஸ்ரீராம்ஜி, கரிநாக்கு எல்லாம் நம்ப வேண்டாம் இறைவன் இருக்கையில் இவை எல்லாம் பலிக்காது. அது போல அந்தப் பெண்மணி - தன் முடியில் சடை விழுந்திருக்கிறது என்று சொல்லிச் சொல்லுவது உட்பட. அவர் சாதாரணப் பெண்மணி. இறைவனுக்குத் தெரியும் எது எப்போது நமக்கு நடக்க வேண்டும் என்று.

    அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் நம் வீட்டு விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அப்படியே ஆகட்டும்.  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  60. முகநூலில் நண்பர் கோபிநாத் ரவி அவர்கள் பகிர்ந்திருப்பது கண்களில் நீர் வரவழைத்த பதிவு. நம் பெற்றோரை அவர்கள் இருக்கும் போது நாம் உணர்வதை விட மறைந்த பிறகுதான் அதிகம் உணர்கிறோம் என்றே தோன்றுகிறது. எப்போதுமே இல்லாததற்குத்தானே மனம் ஏங்கும்.

    அடுத்து உங்கள் கவிதை மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அருமை ஸ்ரீராம்ஜி! அதை வாசித்தபின் எழுதியதா இல்லை ஏற்கன்வே எழுதி பொருத்தமாக இருப்பதால் பகிர்ந்ததா? ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை ஏற்கெனவே எழுதி வைத்திருந்தது.  முகநூல் பதிவு சமீபத்தியது.  நீங்கள் எல்லாம் சொல்லும்வரை நான் இரண்டுக்கும் முடிச்சு போட்டு பார்க்கவில்லை.  சும்மா பகிர்ந்தேன், அவ்வளவே...

      நன்றி துளஸிஜி.

      நீக்கு
  61. தினமலரில் வக்கீல் சொல்லியிருப்பது யோசிக்க வைக்கிறது. சட்டம் வருமா?

    ஜோக்குகள் ரசித்தேன். பொக்கிஷங்களும், கொரோனா கால உங்கள் வெட்டி ஆராய்ச்சியும்!! வெகு சுவாரசியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  62. கரி நாக்கு - இப்படிச் சொன்ன சிலரை சந்தித்தது உண்டு.

    அம்மாவின் இழப்பு கட்டுரை - மனதைத் தொட்டது.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  63. நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்துவது நல்லதுதான்.கரி நாக்கு சொன்னது பலிக்கும் என்பவர்களை சந்தித்து இருக்கிறேன். முடியில் சடை விழுந்து இருப்பவர்கள் சொல்வது பலிக்கும் என்பதை கேள்வி பட்டது இல்லை.

    உங்கள் நண்பரின் தாயார் நினைவு பகிர்வு நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  64. கவிதை நன்றாக இருக்கிறது.
    உன்னிடம் மயங்குகிறேன் படம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
    பொக்கிஷங்கள், நகைச்சுவை எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!