கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
மலையாளக் கதைத் தொகுப்பு
ஐதீக மாலையில் இருந்து ஒரு கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
நுழையும் முன்
ஐதீகம் என்பது பல அர்த்தங்களை உள்ளடக்குவது. நம்பிக்கைகள், செவி வழி கதைகள், கோவில் புராணங்கள், செயல்முறைகள், பிரார்த்தனைகள் என்று பலவும் ஐதீகம் என்ற ஒரு சொல்லில் அடங்கும். இத்தகைய ஐதீகங்களை தொகுத்து ஐதீக மாலை என்ற பெயரில் தொடராக மனோரமா, மற்றும் பாஷா போஷினி பத்திரிக்கைகளில் கொட்டாரத்தில் சங்குண்ணி வெளியிட்டார். இவை எழுதி பிரசுரிக்கப்பட்ட காலம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி (1898-1930) ஆகும்.
இப்புத்தகத்தின் சில கதைகள் ஹிந்து ஆங்கில நாளிதழின் ஞாயிறு இணைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்திருக்கின்றன.
ஆசிரியர் பற்றிய குறிப்பு
ஆசிரியர் கொட்டாரத்தில் சங்குண்ணி. இயற்பெயர் வாசுதேவன் உண்ணி. தந்தையின் பெயரும் வாசுதேவன் என்பதால் இவர் சங்குண்ணி (சங்கு + உண்ணி) என்ற பெயரால் அறியப்பட்டார். பிறப்பு 1855, மறைவு 1937. பிறந்த ஊர் கோட்டயம். ஐதீக மாலை தவிர கதகளி பாடல்கள்(ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்), ஒட்டன் துள்ளல் பாடல்கள், என்று பல சாஹித்தியங்களையும் இயற்றியுள்ளார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். ஆங்கிலேயருக்கு மலையாளம் படிப்பிக்கும் ஆசானாகவும் இருந்திருக்கிறார்.
முன்னுரை
ஐதீக மாலையில் உள்ள கதைகள் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டவை. சமஸ்க்ரிதம் மற்றும் பழைய மலையாளம் கலந்து ஒரு கலவையாக இருக்கும். பல சொற்களுக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் உத்தேசமாக கருத்தை எனது தமிழில் எழுதியிருக்கிறேன். ஆகவே வார்த்தைக்கு வார்த்தை என்ற மொழிபெயர்ப்பு இல்லை.
ஐதீகம் என்பதால் கதை பல திரிபுகளுடன் சில சமயம் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இக்கதைகள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவை.
இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு கூடுதல் விருப்பமும்
உண்டு. அது திருவனந்தபுரத்தில் “வெட்டி முறிச்ச கோட்டை” என்ற சரித்திர சின்னத்தின்
கதையையும் கூறுவதால் தான்.
தலைகுளத்தூர் பட்டதிரி.
பாகம் 1.
உண்ணிப்
பருவம்.
தலைகுளத்தூர் பட்டதிரி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஒரு பிரபல ஜோசியர். இவரது இல்லம் பிரிட்டிஷ் மலையாளத்தில் இருந்தது (மலபார்). ஜாதகக்கணிப்பு,
ஜோசியம், பிரச்சனை ஜோசியம் போன்றவற்றில் மட்டுமல்லாது காவியம், நாட்டியம், மருத்துவம்,
போன்ற பல துறைகளிலும் விற்பன்னர். கதகளி பதங்கள், துள்ளல் பாட்டுகள் என்று பலவும் இயற்றியுள்ளார்.
ஆனாலும் சோழி உருட்டி பிரச்னை பார்ப்பது இவரது சிறப்பு.
இச்சிறப்பு
இவருடைய குட்டிக் காலத்திலேயே தெரிய வந்ததைப் பார்ப்போம்.
பிரம்மச்சாரியாகக் குருகுல வாசம் செய்து ஓதிக்கோனிடம்
(வேதம் படிப்பிக்கும் வாத்தியார், குரு) வேதங்கள் கற்று வரும் காலம். ஒரு நாள் ஓதிக்கோன்
ஏதோ ஒரு காரியமாக வெளியூர் சென்றிருந்தார். அச்சமயம் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு
ஒரு விடுமுறை கிடைக்கவே, விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அதற்கு பட்டதிரி கற்களை உருட்டி “பால சாபம் ” என்றார்.
“இதற்கு பரிகாரம் உண்டோ?” என்று மற்றொரு உண்ணி கேட்கவும் “உண்டு” என்ற பதில் கிடைத்தது.
“பிள்ளைகளைப் பிரம்பால் அடிக்காதிருக்க வேண்டும், ஒரு
மண்டல காலம் தினமும் நல்ல பால் பாயசம் வைத்து
உண்ணிகளுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். “
என்றார்.
இச்சமயம் வெளியூர் சென்றிருந்த ஓதிக்கோன் திரும்பிவந்தவர் ஓசைப்படாமல் மேற்கூறிய அத்தனையும்
கேட்டறிந்தார். பின்னர் அப்போதுதான் வருபவர் போல் வெளியே சென்று மீண்டும் திரும்பி
வந்து வேலைகளைக் கவனித்தார்.
அன்றிலிருந்து அவர் மாணவர்களை அடிப்பதை நிறுத்தினார்.
பாயசமும் தினமும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. அப்படியிருக்க ஓதிக்கோனின் அந்தர்ஜனத்திற்கு
உண்ணி உண்டாகியது.
ஓதிக்கோனுக்கு மிக்க சந்தோசம். பட்டதிரியை விளித்து
“நீ இனி ஜோதிஷ சாஸ்திரமும் படிக்க வேண்டும். நீ ஒரு நல்ல ஜோஷ்யனாக வருவாய்” என்று தலை
மேல் கைவைத்து ஆசீர்வதித்தார்.
பட்டதிரியும் வேதபடனம் முடிந்து ஜோதிடம், பிரச்சனை
ஜோதிடம், ஜாதகக் கணிப்பு முதலியவை கற்று இளமைப் பிராயத்திலேயே பெயர் பெற்ற ஜோதிடர்
ஆனார்.
>>>>> இன்னும் வரும்.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅருமை ஜெயக்குமார் ஸார். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடருங்கள்.
முதல் வாழ்த்து - முத்தான வாழ்த்து... வாங்க ஜீவி ஸார்.
நீக்குமுதல் முதலாக காலையிலேயே வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
Jayakumar
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே...
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநிறை ஆரோக்கியத்துடன் எல்லோரும் வளமாக
வாழ வேண்டும்.
மொழி பெயர்த்து, நமக்காகக் கொடுத்திருக்கும்
பதிலளிநீக்குதிரு ஜெயக்குமார் சந்த்ரசேகர் அவர்களுக்கு நன்றி.
மலையாளக் கதைகளில் தனி வாசம் இருக்கும். நன்றி.
செவ்வாய்க் கிழமைக்கு புதியதொரு முகம்..
பதிலளிநீக்குமலையாளக் கதைகள் மிகவும் பிடிக்கும்... குவைத்தில் இருந்த போது மிகவும் விரும்பிப் பார்த்தவை மலையாளத் திரைப் படங்களே.. அதிலும் மர்மக் கதை எனில் தனி விருப்பம்..
மணிச் சித்ரத் தாழ் - படத்தின் இறுதிக் காட்சி மனதை விட்டு நீங்காதது..
தமிழில் ஒரு மலையாளக் கதை எனில் சர்க்கரைப் பந்தலில் தேன்மழை..
ஐயா இது கதை அல்ல. ஐதீகம். வழி வழி வந்த செய்தி உருமாறி கதையாய் ஆகியது. இதில் மர்மங்கள் இல்லை. திரிபுகள் மற்றும் உயர்வு நவிலல் கூடுதல் இருக்கும். வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.
நீக்குஅருமையாக இருக்கிறது. ப்ரஷ்ணம் பிரச்சினை ஆகிறது?
பதிலளிநீக்குஇங்கும் மலையாளிகள் சோழிகள் (பெரிய பாம்புக் கோலம்போட்டுப் )பார்க்கிறார்கள்.
மீண்டும் வருகிறேன்
ஆமாம், ரேவதி. நானும் சொல்ல இருந்தேன். நீங்க சொல்லிட்டிங்க. ப்ரச்னம் என்றே வர வேண்டும். பிரச்சினை என்றால் அர்த்தமே (தமிழில்) மாறுகிறது.
நீக்குமணிச் சித்ரத் தாழ் - படத்தின் இறுதிக் காட்சி மனதை விட்டு நீங்காதது..//
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த படம் துரை அண்ணா. கடைசிப் பகுதி மிகவும் வித்தியாசமான சிந்தனையுடன் எடுத்திருப்பாங்க. கிழக்கும் மேற்கும் இணைந்த ஒரு தீர்வு. கதாநாயகியின் பிரச்சனைக்கான நல்ல தீர்வாக.... எனக்கு அது மிகவும் பிடித்தது. மனப்பிரச்சனைக்கான அந்தத் தீர்வு.
கீதா
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅருமையான படம் மணிச்சித்ரதாழ்! தமிழில் கெடுத்துட்டாங்க! :(
நீக்குமணிப்ரவாளம்!..
பதிலளிநீக்குஅதன் சுவையே தனி!..
அந்த ஒலிக்கோர்வை ஆயுளையும் அறிவையும் மேம்படுத்துவது..
தங்கிலீஷ் போல் அல்ல!..
எனக்கும் மணிப்ரவாளம் பிடிக்கும். படிக்கவும் வரும். கிரந்தம் கூடப் படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் முடியலை. மறந்திருக்கேன். :( அப்பா தன்னோட சுந்தரகாண்டம் (கிரந்தத்தில் எழுதியது) எனக்குக் கொடுத்திருக்கார். அப்பாவிடமிருந்து வந்த ஒரே பூர்விக சொத்து அது. தூள் தூளாகிக் கொண்டிருக்கிறது. :(
நீக்கு// அதிலும் மர்மக் கதை எனில் தனி விருப்பம்..//
பதிலளிநீக்குமரக் கதை எனில் டமால்.. டுமீல்.. படங்கள் அல்ல.
மந்த்ர, யந்த்ர, பிரச்ன, பரிகாரம் போன்றவற்றைச் சொல்லும் படங்கள்..
எனக்கும் பிடிக்கும் அன்பு துரை.
நீக்குஆமாம், அதிலும் யட்சிணிகள் வந்தால் இன்னமும் பிடிக்கும். நானும் நிறைய மலையாளக் கதைகள் (தமிழில் மொழி பெயர்த்தவை) படிச்சிருக்கேன். பிடிச்சது எம்.டி.வாசுதேவன் நாயரின் "நாலு கெட்டு வீடு". இதன் அர்த்தமே கதை படிக்கும்போது புரியலை. பின்னர் திருவட்டாறு போனப்போ பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்கச் சென்றப்போப் புரிந்து கொண்டேன்.
நீக்குடமால் டுமீல் துப்பாக்கி இல்லாமல் இந்த மாதிரி மர்மத்தை ரசிக்கும் லிஸ்ட்டில் நானும் சேர்ந்து கொள்கிறேன்!
நீக்கு"“பிள்ளைகளைப் பிரம்பால் அடிக்காதிருக்க வேண்டும், ஒரு மண்டல காலம் தினமும் நல்ல பால் பாயசம் வைத்து உண்ணிகளுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். “ என்றார்.
பதிலளிநீக்குஇச்சமயம் வெளியூர் சென்றிருந்த ஓதிக்கோன் திரும்பிவந்தவர் ஓசைப்படாமல் மேற்கூறிய அத்தனையும் கேட்டறிந்தார். பின்னர் அப்போதுதான் வருபவர் போல் வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்து வேலைகளைக் கவனித்தார். "
முதன் முதலில் சொன்ன ப்ரஷ்ணமே
குழந்தைகளுக்கு நன்மையானதே.
அருமையாகத் தொடரப் போகும் கதையையும்
கொட்டாரத்தில் சங்குண்ணியையும் தொடர்வதில் மிக மகிழ்ச்சி.
மீண்டும் நன்றி மா.
கதையை விட்டு விலகிப்போய் விடாமல் கதையை ஒட்டி அதை ஜெயக்குமார் ஸார் எப்படி நேர்ட் பண்ணியிருக்கிறார் என்பதில் கவனம் செலுத்தி வாசிக்க எண்ணம். பார்க்கலாம்.
பதிலளிநீக்குமூலக்கதை தெரிந்திருக்கணும்.
நீக்குபொதுவாக நாக்கு மொழிபெயர்ப்பு கதைகள் இஷ்டம். புத்தகக் கண்காட்சி போகும்போது மொழிபெயர்ப்பு கதைகள் ---------------------- (பெயர் அமர்ந்து விட்டது) ஸ்டாலில் என்னென்ன கிடைக்கின்றன என்று பார்ப்பதுண்டு.
நீக்குமூலம் மலையாளத்தில் e-book ஆக PDF வடிவில் தரவிறக்கம் 200 கதைகள் 1200 பக்கம் என்னிடம் உள்ளது. இப்போதும் அச்சில் உள்ள புத்தகம் இது. மலையாளத்திலும் english லும் அமேசானில் கிடைக்கிறது.
நீக்குகதையின் மூலம் புரிந்து கொண்டாலே அதை விட்டு விலகாமல் நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்/சொல்ல முயற்சி செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே என்னைப் பொறுத்தவரை இந்த ஐதிகம் என்ன சொல்லப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.
நீக்கு// பிள்ளைகளைப் பிரம்பால் அடிக்காதிருக்க வேண்டும், ஒரு மண்டல காலம் தினமும் நல்ல பால் பாயசம் வைத்து உண்ணிகளுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்.. “//
பதிலளிநீக்குபிள்ளைகளைக் கொஞ்சி விளையாடுவதே பெரும் புண்ணியம்..
உண்மை.
நீக்குநல்லதொரு தொடக்கம்...
பதிலளிநீக்குகுழந்தைகளை கொஞ்சுவது புண்ணியவான்களின் செயலாகும்.
தற்போது கொஞ்சினால் POCSO வில் போக வேண்டி வரும். வாழ்த்துக்கு நன்றி.
நீக்குதொடக்கத்தில் விளக்கம் அருமை... நல்லதும் கூட... ஏனெனில் சோதிடம்...!
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குகதைக்கு முன்னுரை அருமை.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது.
//“பிள்ளைகளைப் பிரம்பால் அடிக்காதிருக்க வேண்டும், ஒரு மண்டல காலம் தினமும் நல்ல பால் பாயசம் வைத்து உண்ணிகளுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். “ என்றார். //
பிள்ளைகளை அடிப்பதால் அப்படி சொன்னாரா விளையாட்டாக.
விளையாட்டாக சொன்னதே செயல் வடிவம் கொடுத்து பலன் அடைந்து விட்டார் ஓதிக்கோன். குருவின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் சிறந்த ஜோதிடராக ஆக்கி விட்டது.
கதையை தொடர்கிறேன்.
நன்றி. உங்கள் தளத்திற்கு வருவேன்,. ஆனால் கருத்து எதுவும் சொல்வதில்லை.
நீக்குஓ ! அப்படியா
நீக்குஎன் தளத்திற்கு வருவதற்கு நன்றி சார்.
நல்லதொரு ஆரம்பம் ஜெயக்குமார் சார். மொழியாக்கம் எனில் நீங்கள் கதையின் கருவை உள்வாங்கி உங்கள் எழுத்தில் எழுதியது என நான் பொருள் கொள்கிறேன். மொழிபெயர்ப்பு எனில் மூலத்தை அப்படியே தமிழில் எழுதியது எனப் பொருள் கொள்கிறேன். இதில் நீங்கள் செய்திருப்பது மொழியாக்கமா?மொழி பெயர்ப்பா? எதாக இருந்தாலும் நல்ல துவக்கம். இப்படி வித்தியாசமான கதைக்களம் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போதெல்லாம் பழைய/இத்தனை பழைய புத்தகங்கள் கிடைப்பதில்லை.
பதிலளிநீக்குமொழியாக்கம் என்று தலைப்பிலேயே உள்ளது. கிம் பகுணா இந்த சமஸ்க்ரித வார்த்தையை மொழி பெயர்க்க முடியுமா? இது கதையில் உள்ள வார்த்தை.
நீக்குஇப்போதும் அச்சில் உள்ள புத்தகம் இது. மலையாளத்திலும் english லும் அமேசானில் கிடைக்கிறது.
நீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குநல்லவேளையாக முன்னுரை/தொடக்கவுரை எல்லாம் கொடுத்து விபரமாகப் புரிய வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகொட்டாரத்தில் சங்குண்ணி தெரியும் ஆனால் கதைகள் வாசித்ததில்லை. மலையாளம் கதைகள் வாசிக்கும் அளவிற்கு எல்லாம் வேகம் கிடையாது. இருந்த ஏரியாவும் தமிழ் ஏரியா என்பதால் அப்படியே போய்விட்டது. கற்காமல் விட்டோமே என்று நினைப்பதுண்டு.
பதிலளிநீக்குஜெகே அண்ணாவின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. உள்வாங்கிச் சொல்லுவதிலும் கதையில் வரும் மணிப்பிரவாள வார்த்தைகளையும் சொல்லி வருவது கதையின் சுவை மணம் மாறாமல் இயல்பாக வருவது அழகு.
கீதா
வேறு மொழிக் கதைகளின் மொழியாக்கம்/மொழிபெயர்ப்புப் பகுதி செவ்வாய் கேவாபோக வுக்கு நல்ல தோற்றம் வரவேற்கவேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குகீதா
அருமை ஜெயக்குமார் ஐயா பிறமொழி சிறுகதை மொழிபெயர்பு முயற்சிக்கு வாழ்த்துகள். தொடருங்கள்.
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குகொட்டாரத்தில் சங்குண்ணி அவர்களின் தலைக்குளத்தூர் பட்டதிரி கதையா. மூலம் வாசித்ததில்லை. கதைகள் கேட்டதுண்டு.
பதிலளிநீக்குஉங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன், ஜெயக்குமார் சந்திரசேகரன், சார். தாய்மொழி அல்லாத வேற்று மொழியைக் கற்று அதை மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் செய்வது என்பது எளிதல்ல.
என் தாய்மொழி மலையாளம் என்றாலும் வாசித்து உள்வாங்கிச் செய்யும் அளவு என்னால் முடியுமா என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.
பிரச்சினை என்பது பிரஸ்நம் என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
துளசிதரன்
பாழூர் படிப்புற ஜோதிடம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அது இக்கதையுடன் சம்பந்தப்பட்டதே. ஆட்டோ சஜசன் காலை வாருகிறது சமயங்களில். பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குகதை மிக நன்றாக புரிகிறது ஐதிகம் என்றால் வழிவழியாக அனுஷ்டிக்கும் ஒரு பழக்கம் இல்லையா மலையாள கதை படிக்க அருமை அன்புடன்
நீக்குநல்ல தொடக்கம். ப்ரஷ்ணம் மாந்த்ரீகம் இதெல்லாம் இன்டெரெஸ்டிங் டாபிக். முன்னுரை அருமை
பதிலளிநீக்குநல்லதொரு தொடக்கம். பிரச்சனை :) பிரஸ்னம் என்றே வந்திருக்கலாம்! அர்த்தமே மாறி விடுகிறதே!
பதிலளிநீக்கு