நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
வெள்ளி வீடியோ : எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்...
இன்றைய தனிப்பாடல் முதலில்.
இந்தப் பாடலை நான் முதலில் என் பள்ளிப் பருவத்தில் கேட்டேன். கிறித்துவப் பள்ளியில் படித்ததால் அதன் வழக்கங்களும், பாடல்களும் சிறு வயதிலேயே அறிமுகமாகி இருந்தன.
'எல்லாம் ஏசுவே', 'ஆண்டவனின் திரு சன்னதியில்', 'கேளுங்கள் தரப்படும்' போன்ற தோத்திரப்ப பாடல்களுக்கு நடுவே அந்நாளில் வானொலியில் கேட்ட இந்தப் பாடல் என் மனதில் நின்ற பாடல்களில் ஒன்று என்பதற்கு அந்தப் பாடலைப் பாடிய குரலும் காரணம்.
பள்ளியை விட்டு வந்த பிகு நீண்ட நாட்கள் மறந்திருந்த இந்தப் பாடல் சில வருடங்களுக்கு முன்னர் மறுபடி நினைவுக்கு வந்தது. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யு டியூபில் எவ்வளவு தேடினாலும் கிட்டவில்லை. பேஸ்புக்கில் எல்லாம் அறிவித்து தேடிப் பார்த்திருக்கிறேன். சில கிறித்துவ நண்பர்ளுக்கு இந்தப் பாடல் அறிமுகமே ஆகி இருக்கவில்லை என்பதும் வியப்பு. ஒரே ஒரு நண்பன் மட்டும் இதை சிலுவைப் பாடல் என்றான்.
சில இடங்களில் எஸ் பி பி இல்லாமல் யாரோ பாடிய பாடல் கிடைத்தது. எனக்கு வேண்டியது எஸ் பி பி குரலில். அது இப்போது கிடைத்தது.
சமீபத்தில்தான் இந்தப் பாடல் கிடைத்தது. இன்றைய புனித வெள்ளியை முன்னிட்டு அந்தப் பாடலை இங்கு பகிர்கிறேன்.
1975 ல் வெளியான இந்தப் பாடலை எழுதி இசை அமைத்தவர் டாக்டர் Y. டேவிட் தயானந்தன் என்கிறது யு டியூப் பக்கம். பாடல் இசையில் கொஞ்சம் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தாலும் ஒரிஜினல் டியூன் மாறவில்லை.
வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே
தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ
தூக்காத வன் சிலுவை
நீ தூக்கி சுமப்பாயோ
கறை காணாத உன் ரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ
1976 ல் வெளிவந்த திரைப்படம் பயணம்.
வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் மேஜர், விஜயகுமார், ஸ்ரீகாந்த், படாபட் நடித்த படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். பாடல்கள் கண்ணதாசன்.
பயணத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள்தான் கதை என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நல்லதொரு பாடல் எஸ் பி பி குரலில் வரும் இந்தப் பாடல். படத்தில் ஸ்ரீகாந்த் பாடுவதாக வரும் பாடல். ஸ்ரீகாந்த் படத்தில் வில்லன் என்று நினைக்கிறேன்.
பாடலின் பெரிய ஸ்பெஷல் எஸ்பி பி. "எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்" என்கிற வரியில் அவர் குரலைக் கேட்கவேண்டுமே..
தென்றலுக்கு என்றும் வயது பாடலும் குரலும் மிக இனிமை. கவிதை வரிகள். கண்ணதாசன் . பின்னே கேட்பானேன். முன்னெல்லாம் கேட்ட கையோடு மறந்துவிடும். இப்போது நீங்கள் பதிவில் கொடுப்பதால் நல்ல படியாக ரசிக்க முடிகிறதுமா. மிக மிக நன்றி ஸ்ரீராம்.
அன்பு வாழ்த்துகள்,புனித வெள்ளிக்கான இனிய பாடல்கள். எஸ்பிபி பாடிய பாடலை இப்போது தான் கேட்கிறேன். இனிமையாக உத்சாகமாகப் பாடி இருக்கிறார்,.
நலந்தான். இதோ வரும் திங்களன்று ஊருக்கு திரும்பிச் சென்று விடும் மகன்,மருமகளுடன் நேரம் செல்கிறது.(பறக்கிறது என்று கூடச் சொல்லலாம்.) அதனால் இடையிடையே கொஞ்சம் இடைவெளிகள். அனைவருக்கும் என் அன்பான தாமதமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிய சுபகிருதுவில் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
இன்றைய பாடல் பகிர்வு இரண்டும் அருமை. இரண்டுமே இதுவரை நான் கேட்டதில்லை. எஸ்.பி.பியின் குரல் இனிமையில் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். அவரும் நன்றாக ரசித்துப் பாடியிருக்கிறார்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
சொல்லி இருக்கும் இரண்டு பாடல்களுமே கேட்காதவை. எங்க பள்ளியில் புனித வெள்ளிப் பாடல் தனி. "நின் செங்குருதி பாவி எனக்காய் மீட்கப்பட்டதென அறிந்து!" என்று ஆரம்பிக்கும். ஒரு இடத்தில்"வாக்கு மாறா என் தேவனே!" என்றும் வரும். எல்லா ஆசிரியைகளும் அழுது கொண்டே பாடுவார்கள். நமக்குமே அந்த ராகம் குரலின் உணர்ச்சி எல்லாம் சேர்ந்து சிறிது நேரம் மனம் கலங்கும். எங்க பள்ளியில் சில நாட்கள் அசெம்பிளி ப்ரேயர். வெள்ளிக்கிழமைகளில் முக்கியமாய் அசெம்பிளி ப்ரேயர் இருக்கும். அப்போது ஒரு ஆசிரியை பியானோ வாசிப்பார். கடைசிப்பாடல் அநேகமா இதாத் தான் இருக்கும். மற்ற நாட்களில் பொதுவான ப்ரேயர். பள்ளி மொத்தமும் மைதானத்தில் கூடி இறை வணக்கப்பாடல்களைப் பாடுவோம். அதில் தான் ரேவதி சொன்ன பாடல்கள் எல்லாம் பாடுவார்கள். வகுப்புக்களில் வாரம் ஒரு தரம் அந்த வகுப்பு மாணவி அன்றைய ப்ரேயரை எடுத்து நடத்த வேண்டும். என் முறை வந்தால் நான் தேர்ந்தெடுப்பது, "நின் செங்குருதி" பாடலைத் தான். அது முடிஞ்சதுமே எதுவும் பேசாமல் "பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே!" எனப் பிரார்த்தனையைத் தொடங்கி முடிச்சுடுவேன். :)))))
மேலாவணி மூல வீதி/தெற்காவணி மூல வீதி முனையில் இருக்கும் சர்ச்சுக்கு எங்க மேலாவணி மூலவீதி வழியாத் தான் பெரும்பாலோர் போவார்கள். குருத்தோலை ஞாயிறன்று சர்ச்சில் இருந்து குருத்தோலையுடன் ஊர்வலமாக வருவார்கள். மேலாவணி மூல வீதியே இப்போல்லாம் வணிகத் தெருவாக மாறி விட்டது. நான் மேலாவணி மூல வீதியில் இருந்தேன் என நான் எழுதி இருந்ததைப் படிச்ச மத்யமர் நண்பர் ஒருத்தர் அங்கே எல்லாம் எப்படிக்குடி இருக்க முடியும்? ஒரே கடைகளும்/கம்பெனிகளும் தான். என்று சிரித்தார். அவர் இப்போத் தான் மதுரைக்கு வந்தவர் போலனு நினைச்சேன். :( அந்த அளவுக்கு மோசமாக இப்போது ஊரே தன் முகத்தை மாற்றிக் கொண்டு விட்டது!:(
செயின்ட் மேரிஸ் சர்ச்சைச் சொல்கிறீர்களோ? ஆனால் அது ரொம்ப தூரமாச்சே மேல ஆவணி மூல வீதியிலிருந்து? வேறு எந்த இடத்தில சர்ச் இருந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை.
இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். இலங்கை வானொலிக்குப் பின் கேட்டதில்லை. இப்போதுதான் நீங்கள் இங்கு பகிர்ந்ததன் மூலம் கேட்டேன். இல்லை என்றால் இப்போது பழைய பாடல்கள் யுட்யூபில் கேட்டாலும் கூட இது நினைவு வந்திருக்காதுதான். மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
பதிலளிநீக்குகுத்தொக்க சீர்த்த இடத்து..
வாழ்க குறள் நெறி..
வாழ்க... வாழ்க...
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே...
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம். பிரார்த்திப்போம்.
// தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ.. //
பதிலளிநீக்குகவியரசர்+ மெல்லிசல் மன்னர் + spb - கூட்டணியின் அழகான இனிமையான பாடல்..
மறக்க முடியாத பாடல்களுள் இதுவும் ஒன்று..
மகிழ்ச்சி..
ஆமாம். மிக இனிமையான பாடல்.
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் இனிதே ஆரோக்கியத்துடன் வாழ
இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஎல்லாம் ஏசுவே, தேனினிமையிலும், தந்தானைத் துதிப்போமெ
பதிலளிநீக்குஎல்லாம் எங்களுக்கும் மனப்பாடம்:)
தேனினிமையிலும் பாடல் சுசீலாம்மாவின் குரலில் உண்மையிலேயே தேன், மதுரமான பாடல்.
நீக்குபுனித வெள்ளிக்கான இனிய பாடல்கள்.
பதிலளிநீக்குஎஸ்பிபி பாடிய பாடலை இப்போது தான் கேட்கிறேன்.
இனிமையாக உத்சாகமாகப் பாடி இருக்கிறார்,.
ஆம் அம்மா.. இனிமையான பாடல். ஒரிஜினலுக்காக ரொம்ப நாள் தேடிய பாடல்.
நீக்குநானும் சில பாடல்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் மா:)
நீக்குஎன்ன பாடல்கள்மா?
நீக்குமுதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் சூப்பர் ஜி
ரசித்ததற்கு நன்றி ஜி.
நீக்குதென்றலுக்கு என்றும் வயது
பதிலளிநீக்குபாடலும் குரலும் மிக இனிமை. கவிதை வரிகள்.
கண்ணதாசன் . பின்னே கேட்பானேன்.
முன்னெல்லாம் கேட்ட கையோடு மறந்துவிடும்.
இப்போது நீங்கள்
பதிவில் கொடுப்பதால் நல்ல படியாக ரசிக்க முடிகிறதுமா.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
அன்பு வாழ்த்துகள்,புனித வெள்ளிக்கான இனிய பாடல்கள்.
எஸ்பிபி பாடிய பாடலை இப்போது தான் கேட்கிறேன்.
இனிமையாக உத்சாகமாகப் பாடி இருக்கிறார்,.
எஸ்பிபி குரலில் கேட்கும் போது இன்னும் இனிமை.
ன்றி அம்மா.
நீக்குதென்றலுக்கு பாடலில் எம் எஸ் வி அலட்டல் இல்லாத அமைதியான தென்றல் போன்ற இசையை வழங்கி இருக்கிறார். ஸ் பி பி குரலோ பரவசமாகக் குழைகிறது.
*ந
நீக்குஹிஹிஹி.. மேலே இந்த எழுத்து மட்டும் தப்பி என்னிடமே இருந்தது! மறுபடியும் இங்கு கொண்டுவந்து சேர்த்து விட்டேன்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம். மறுபடி ஒரு இடைவெளிக்கு அப்புறம் வருகிறீர்கள். நலம்தானே?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநலந்தான். இதோ வரும் திங்களன்று ஊருக்கு திரும்பிச் சென்று விடும் மகன்,மருமகளுடன் நேரம் செல்கிறது.(பறக்கிறது என்று கூடச் சொல்லலாம்.) அதனால் இடையிடையே கொஞ்சம் இடைவெளிகள். அனைவருக்கும் என் அன்பான தாமதமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிய சுபகிருதுவில் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்லது அக்கா. மகனுடனும் குடும்பத்துடனும் இனிமையாக பொழுதைக் கழிக்க வாழ்த்துகள். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குமிக்க நன்றி.
நீக்குகமலாக்கா வாங்க!! இன்னும் சில நாட்கள்தானே...அவர்களோடு இனிமையாக சந்தோஷமாக நேரத்தை எஞ்சாய் மாடி!!!
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வு இரண்டும் அருமை. இரண்டுமே இதுவரை நான் கேட்டதில்லை. எஸ்.பி.பியின் குரல் இனிமையில் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். அவரும் நன்றாக ரசித்துப் பாடியிருக்கிறார்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதலாவது ஓகே, இரண்டாவது பாடலும் நீங்கள் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.
நீக்குசொல்லி இருக்கும் இரண்டு பாடல்களுமே கேட்காதவை. எங்க பள்ளியில் புனித வெள்ளிப் பாடல் தனி. "நின் செங்குருதி பாவி எனக்காய் மீட்கப்பட்டதென அறிந்து!" என்று ஆரம்பிக்கும். ஒரு இடத்தில்"வாக்கு மாறா என் தேவனே!" என்றும் வரும். எல்லா ஆசிரியைகளும் அழுது கொண்டே பாடுவார்கள். நமக்குமே அந்த ராகம் குரலின் உணர்ச்சி எல்லாம் சேர்ந்து சிறிது நேரம் மனம் கலங்கும். எங்க பள்ளியில் சில நாட்கள் அசெம்பிளி ப்ரேயர். வெள்ளிக்கிழமைகளில் முக்கியமாய் அசெம்பிளி ப்ரேயர் இருக்கும். அப்போது ஒரு ஆசிரியை பியானோ வாசிப்பார். கடைசிப்பாடல் அநேகமா இதாத் தான் இருக்கும். மற்ற நாட்களில் பொதுவான ப்ரேயர். பள்ளி மொத்தமும் மைதானத்தில் கூடி இறை வணக்கப்பாடல்களைப் பாடுவோம். அதில் தான் ரேவதி சொன்ன பாடல்கள் எல்லாம் பாடுவார்கள். வகுப்புக்களில் வாரம் ஒரு தரம் அந்த வகுப்பு மாணவி அன்றைய ப்ரேயரை எடுத்து நடத்த வேண்டும். என் முறை வந்தால் நான் தேர்ந்தெடுப்பது, "நின் செங்குருதி" பாடலைத் தான். அது முடிஞ்சதுமே எதுவும் பேசாமல் "பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே!" எனப் பிரார்த்தனையைத் தொடங்கி முடிச்சுடுவேன். :)))))
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருக்கும் பாடல் நான் கேட்டதே இல்லை கீதா அக்கா.
நீக்குநானும் இப்போ எழுதிட்டு கூகிளாரிடம் கேட்டுப் பார்த்தேன். வேறே என்ன என்னமோ ரத்தத்தின் ரத்தமே என்றெல்லாம் தரார். பயந்து ஓடி வந்துட்டேன். வரேன் அப்புறமா!
நீக்குமேலாவணி மூல வீதி/தெற்காவணி மூல வீதி முனையில் இருக்கும் சர்ச்சுக்கு எங்க மேலாவணி மூலவீதி வழியாத் தான் பெரும்பாலோர் போவார்கள். குருத்தோலை ஞாயிறன்று சர்ச்சில் இருந்து குருத்தோலையுடன் ஊர்வலமாக வருவார்கள். மேலாவணி மூல வீதியே இப்போல்லாம் வணிகத் தெருவாக மாறி விட்டது. நான் மேலாவணி மூல வீதியில் இருந்தேன் என நான் எழுதி இருந்ததைப் படிச்ச மத்யமர் நண்பர் ஒருத்தர் அங்கே எல்லாம் எப்படிக்குடி இருக்க முடியும்? ஒரே கடைகளும்/கம்பெனிகளும் தான். என்று சிரித்தார். அவர் இப்போத் தான் மதுரைக்கு வந்தவர் போலனு நினைச்சேன். :( அந்த அளவுக்கு மோசமாக இப்போது ஊரே தன் முகத்தை மாற்றிக் கொண்டு விட்டது!:(
பதிலளிநீக்குசெயின்ட் மேரிஸ் சர்ச்சைச் சொல்கிறீர்களோ? ஆனால் அது ரொம்ப தூரமாச்சே மேல ஆவணி மூல வீதியிலிருந்து? வேறு எந்த இடத்தில சர்ச் இருந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை.
நீக்குமுதல் பாட்டு இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம்!! ஆனால் புனித வெள்ளிக்கு ஏற்ற பாடல் ட்யூன்!!!!
பதிலளிநீக்குஎஸ்பிபி குரல்! அவர் குரலுக்கென்ன!! ஆனால் பாடல் ரொம்பக் க்ளியராக இல்லை. ரேடியொவில் இருந்து ரெக்கார்ட் பண்ணியிருப்பாங்க போல!
நானும் கிறித்தவப் பள்ளியில் படித்தவள். பி ஏ வும் கிறித்தக் கல்லூரியில்தான். எனவே சர்ச் பாடல்கள் பல எனக்கு அறிமுகம் உண்டு. பாடியும் இருக்கிறேன்.
கீதா
ஆம். பாடல் ஆடியோ தரம் நன்றாய் இல்லைதான். ஆனால் இதாவது கிடைத்ததே என்று பகிர்ந்தேன்.
நீக்குநன்றி கீதா.
இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். துள்ளலான பாடல்! அதுவும் எஸ் பி பியின் குரல்!!! ஆனால் படம் மற்ற தகவல்கள் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்...
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குபடத்தில் ஸ்ரீகாந்த் பாடுவதாக வரும் பாடல். ஸ்ரீகாந்த் படத்தில் வில்லன் என்று நினைக்கிறேன்.//
பதிலளிநீக்குவில்லனுக்கு இந்த அழகான பாடலா!!!!
கீதா
அதுதானே! நானும் அதை நினைத்தேன்.
நீக்குஇனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஆம். நன்றி DD.
நீக்குஸ்ரீராம், முதல் பாஅல் கேட்டதும், என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழிப்பார்வையிலே பாட்டு டக்கென்று பாட வந்தது!
பதிலளிநீக்குகீதா
கூடவே அன்று வந்ததும் அதே நிலா....இதெல்லாமே மெட்லி செஞ்சுடலாம் போல!!!
நீக்குகீதா
அடடே... நீங்கள் சொன்னதும் அப்படியா என்று எனக்கும் தோன்றுகிறது.
நீக்கு2 வதில் இரண்டாவதாகப் பல்லவி பாடும் போது சங்கதி செம....
பதிலளிநீக்குஅது போலவே முதல் சரணத்திலும் சங்கதி....
இரண்டாவது சரணத்தில் //தத்தித்தாவும் சித்திரமுத்துச் சிப்பியில் விளையாடி
தழுவப்போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி //
மூன்றாவதில் //எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்
இன்பத்தமிழில் உள்ளதை எல்லாம் அள்ளித்தருகின்றேன்.//
எஸ்பிபியின் விளையாட்டு!!! செம...
கீதா
ஆமாம். அவை எல்லாம் எப்போதுமே நானும் ரசிக்கும் இடங்கள். நன்றி கீதா.
நீக்குஇரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். இலங்கை வானொலிக்குப் பின் கேட்டதில்லை. இப்போதுதான் நீங்கள் இங்கு பகிர்ந்ததன் மூலம் கேட்டேன். இல்லை என்றால் இப்போது பழைய பாடல்கள் யுட்யூபில் கேட்டாலும் கூட இது நினைவு வந்திருக்காதுதான். மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டேன் நன்றாக இருக்கிறது.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குநான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஐயா.
நீக்குமுதல் பாடல் கேட்ட நினைவில்லை. தற்போது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல்?
நீக்குநன்றி வெங்கட்.
இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன். இனிமையான பாடல்கள்.
பதிலளிநீக்கு