வியாழன், 7 ஏப்ரல், 2022

ராஜமூவி

 ஜோக்ஸ்....!

இதுல என்ன ஜோக் இருக்குன்னு சாமா சார்தான் சொல்லணும்!


நல்ல தக்கினிக்கி!


நல்ல ஐடியாவா இருக்கிறதே....

பணம் வந்தால்....

வாங்கிண்டு போறவாளுக்கு திருப்தியும் இருக்கணுமில்லையோ.....

ஒரு துணுக்கில் இரண்டு ஜோக்ஸ்!

அட..   பார்க்கறவங்க ரசனை சரியில்லப்பா....!


கிளி கொத்துமா, கொஞ்சுமா?
==============================================================================================================


ரசிக்க ஒரு படம்...


============================================================================================================

கொரோனா ஆரம்பித்த நேரம்..  ஒரே கொரோனா செய்திகளாக வந்தபோது அதை மறக்க பேஸ்புக்கில் அவ்வப்போது பகிர்ந்தது...




===================================================================================================

கவிதை முயற்சி...

பாசிபடர்ந்த நினைவுக் குளத்தின் 
அடியிலிருந்து 
ஒரு முகத்தை 
மங்கலாய் மேலே கொண்டு வருகிறது 
காதில் விழுந்த 
அந்தப் பெயர்.

'அறிவேன் நான் அறிவேன் நான்..'
அரற்றும் மனம் 
துடைத்துப் பார்த்து 
அறியத் துடிக்கிறது  
அந்த முகத்தின்  முழு வடிவை 

========================================================================================================


இந்தத் தாத்தா வித்தியாசமானவர்.  உயர்ந்தவர்.  பெரிய எழுத்தாளர் என்று எல்லோராலும் அடையாளம் காட்டப்பட்டவர்..  நான் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தபின், இலக்கியங்களை சுவாசிக்க ஆரம்பித்தபோது முதலில் அவரது படைப்புகளையே படித்தேன்.  முதலில் புரியவில்லை.  பல கதைகளில் முடிவு இல்லை என நான் குழம்பிய குழந்தை பருவம் அது.

அகம் பற்றிய கதைகளை படித்துவிட்டு, ஏன் தாத்தா அசிங்கமாக எழுதுகிறார் என்று கூட எண்ணினேன்.  அவரது புத்தக அறையில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத வேத புத்தகங்கள், சுதேசமித்திரன், மணிக்கொடி போன்ற பல்வேறு வகையான புத்தகங்களை பிரமிப்போடு தூசி தட்டி, அடுக்கிக் கொண்டே அவரிடம் அதைப்பற்றி கேட்பேன்.  என் கேள்விகளுக்கு சிரிப்பையே பதிலாக்கினார்.


பல வருடங்கள் கழித்து, அதே கதைகளை மீண்டும் படித்தபோதுதான் புரிய ஆரம்பித்தது.  கதையில் அவர் என்ன கருத்தைச் சொல்ல வந்தார் என்று புரிந்தது.  அக்கருத்தை, சொல்லிய பின்னரே அவர் கதையை முடித்திருக்கிறார். என்றும் உணர்ந்தேன்.  என் புதிய புரிதல்களையும் பாராட்டுதல்களையும் அவரிடம் கூறினேன்.  அப்பொழுதும் அவர் சிரிப்பையே பதிலாக்கினார்.  அவருடைய கதைகள் மிக முதிர்ச்சியானவை. படிக்கவே பக்குவம் தேவைப்படும் எழுத்துக்கள்.

மகளின் திருமணத்தை நிச்சயித்து 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்' என்று ஒரு புத்தக வரிசையில் 30 புத்தகங்களை 30 நாட்களில் முடித்துவிட, பதிப்பகத்தார், "நான் புத்தகம் எழுதுங்கள், பணம் தருகிறேன் என்று சொன்னது உண்மைதான்.  ஆனால் முப்பது நாட்களில் முப்பது புத்தகங்கள் எழுதுவீர்கள் என்று தெரியாதே" என்றாராம்.


அதே நேரம் அவர் பேனா மூலம் ரசிகர்களுடன் பேசுவதை நிறுத்தி மௌன விரதமும் மேற்கொண்டார்.  சில சமயங்களில் அவர் மௌனவிரதம் பத்து வருடங்கள் கூட நீண்டதுண்டு.  அந்த நீண்ட மௌனம் கூட பலரை பாதித்தது.  பின் அவர் மௌனம் கலைந்து 'காதுகள்' எழுதியது கூட சில நாட்களில்தான்........

- பழம்பெரும் எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் பற்றி அவர் பேத்தி டாக்டர் ஏ ஆர் சாந்தி '

================================================================================================================

கடந்த சனிக்கிழமை RRR பார்த்து வந்தேன்.  பிரம்மாண்டமான படம்.

கையில் ஒன்றரை ரூபாய்...   இல்லை 75 பைசா அல்லது ஒரு ரூபாய் சேர்ந்தாலே போதும்.  ஒரு படம் பார்த்து விடலாம்.  வாகன வசதி இருந்தால் மிச்ச காசுக்கு பஜ்ஜியோ, போண்டாவோ கூட சாப்பிடலாம்!  கோன் ஐஸ்க்ரீம் வாங்க இன்னும் எட்டணா தேவையாய் இருக்கும்!

சைக்கிளை ஸ்டேண்டில் விட்டால் அதன் வழியாகவே டிக்கெட் கவுண்ட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கலாம்.  சில தியேட்டர்களில் வாகன நிறுத்தாளர்களுக்கு டிக்கெட் உறுதி.  தனி ஒதுக்கீடு இருக்கும்.  சைக்கிளுக்கு ஒரு இருபது பைசா...  அல்லது பத்து பைசாவோ!

டிக்கெட் வாங்கியதும் நேராய் தியேட்டருக்குள் சென்று விடலாம்.  டிக்கெட் கவுண்ட்டர் தியேட்டரிலிருந்து சில அடிகள் தூரத்தில் - தியேட்டரின் காம்பௌண்ட் சுவருடன் ஒட்டித்தான் இருக்கும். டிக்கெட்டை வாங்கி கொண்டு தியேட்டர் நோக்கி நடக்கையில் சைடில் ஒரு கடை இருக்கும்.  அங்கு குளிர்பானங்கள், போண்டா, பஜ்ஜி, மிட்டாய் பிஸ்கட்  மற்றும் சற்று நவீன தியேட்டர் என்றால் கோன் ஐஸ்க்ரீம் மெஷினுடன் ஒரு கடை எல்லாம் இருக்கும்.  பிஸ்கட் கப்பில் கோன் ஐஸ் வழிய வழிய நிரப்பிக் கொடுப்பது  அப்போது ஒரு கவர்ச்சி.  கோப்பையும் சேர்த்து சாப்பிட்டு விடலாம்!

தியேட்டரின் முன்பகுதிக்கு சென்றால் - முன்பகுதி வழியாகத்தான் முதல் வகுப்புக்கும், பால்கனிக்கு செல்ல வேண்டி இருக்கும்.  நாங்கள்தான் விலை குறைந்த டிக்கெட் ஆச்சே..  இடைவேளையில் அந்தப் பக்கம் சென்று பார்ப்போம்.  - தியேட்டரின் முன்பகுதியில், அப்போது அந்தத் தியேட்டரில் வெளியாகி இருக்கும் அந்தப் படத்தின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் பிரேம் செய்யப்பட்டு வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். அதை சிலபேர் ரசித்து விட்டு தியேட்டருக்குள் வருவார்கள். 

ஆக, டிக்கெட் வாங்கியதும் தியேட்டர்தான்.

அப்போதெல்லாம் தியேட்டருக்குள் கடைகள் இருந்தன.  இப்போது கடைகளுக்குள் தியேட்டர் இருக்கிறது!

இப்போதைய மால் கலாச்சாரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டாலும், நான் முன்பு பாஹுபலி, இப்போது RRR என்று இரு படங்கள் பெரிய தி /ரையில் /யேட்டரில் பார்த்திருக்கிறேன்!

தரைடிக்கெட்டில் உட்கார்ந்து மணல் குவித்து படம் பார்த்த பழைய அனுபவங்கள் மறந்து விடும் போலிருக்கிறது.

முதலில் நுழையும்போது கைகளில் சானிடைசர், தேவையானால் 15 ரூபாய்க்கு முகக்கவசம்..  

அடுத்து கொஞ்ச தூரம் நடந்ததும் ,  'ஹேண்ட்ஸ் அப்' செய்யச்சொல்லி உடம்பெல்லாம் தடவி வெடிகுண்டு, ஆயுதங்கள் எடுத்து வந்திருக்கிறோமா என்கிற செக்கிங்..  

பின்னர் நடக்கிறோம்.. நடக்கிறோம்.. நடக்கிறோம்..  நீண்ட நடைபாதைகள், நீண்ட கூடங்கள்..  எத்தனை எத்தனை கடைகள்..!  அதிகம் கண்ணில் பட்டது உணவு வகைக் கடைகள்தான்.  'யோவ்...   தியேட்டர் எங்கேய்யா....'  

'அது நாலாவது மாடிப்பா...'

எஸ்கலேட்டரில் ஏறி ('டேய் நான் எஸ்கலேட்டரில் ஏறுவதை வீடியோ எடுடா' என்று மகனிடம் ரிக்வஸ்ட் விட்டேன்.  அவன் முன்னரே சென்று காத்திருந்து ஆனால் வீடியோ எடுக்காமல் விட்டான்.   என்னடா என்று கேட்டால் என் பின்னால் காட்டி சைகை செய்தான்.  ஏனென்றால் பின்னால் ஒரு இளமங்கைக் கூட்டம்.  நாங்கள் மூன்றாவது மாடி திரும்பும்போது அந்தக் கூட்டம் டாஸ்மாக்கில் ஆராய்ந்து கொண்டிருந்தது.  சட்டென ஆராய்ச்சியை அல்லது வியாபாரத்தை முடித்துக் கொண்டு என் பின்னால் வந்து படிகளில் நின்றுவிட்டது போல)

பிரம்மாண்டம்...  

பளிங்கு போன்ற சுவர்களில் நகரும் மின்பிம்பங்கள்..  தலைக்கு மேலே கண்ணாடி..  தியேட்டருக்குள் ஒரு கடை, பின்னர் ஓரிரு கடைகள் என்கிற நிலைமை மாறி நூற்றுக்கணக்கான கடைகளுக்கு நடுவே சில தியேட்டர்கள்.. அதை ஸ்க்ரீன் ஒன்று, இரண்டு என பிரிக்கிறார்கள்.  ஒவ்வொன்றிலும் ஒரு படம்.

மொபைலில் டிக்கெட் முன்னரே காட்டி உள்நுழைந்து ஸ்க்ரீன் 8 க்கு முன்னர் காத்திருந்து மணிக்கதவம் திறந்ததும் மறுபடி மொபைல் காட்டி உள்நுழையும் முன்னர் ஆளுக்கொரு 3D கண்ணாடி வாங்கி...  


எப்போது சென்று வாங்கினான் என்று தெரியாமல் மகன் கையில் ஒரு பெரிய சைஸ் பாப்கார்ன் பாக்கெட்.   தியேட்டர் மாறுதல்கள் போல  இந்த பாப்கார்ன் (சுவை, விற்பனை வகை) மாறுதல் பற்றியும் ஒரு பதிவு எழுதலாம்.  பாப்கார்ன் வாங்கி அதை ஏதோ சீஸனிங் எல்லாம் செய்து மருந்து பாட்டில் குலுக்குவது போல குலுக்கிக் கொண்டு கொண்டு வருகிறார்கள்.  

எப்போதுமே PVR தியேட்டரில் பத்து அல்லது இருபது நிமிடங்கள் கழித்துதான் படம் ஆரம்பிக்குமாம்.   ஆரம்பித்தது.

3D கண்ணாடி.   படத்தின் பாதி சுவாரஸ்யத்தை இதுதான் கொடுக்கிறது என்று நினைக்கிறேன். 

ஒன்றுமே இல்லாத ஒரு கதையை இவ்வளவு பிரமாண்டமாகவும், காதில் டன்டன்னாக பூச்சுற்றினாலும் சுவாரஸ்யமாகவும் கொடுக்க ராஜமௌலியால்தான் முடியும்.  

பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லபப்ட்ட ஒரு காட்டுவாசிப் பெண் குழந்தையை அந்தக் கூட்டத்தைச் சேந்த ஒருவன் சென்று மீட்டு வரும் கதை எனும் இந்த ஒன்லைனை மற்ற இயக்குனர்கள் எப்படி படம் எடுத்திருப்பார்கள்?  முதலில் முன்வந்திருப்பார்களா?

ஜூனியர் என் டி ஆர் என்கிற பெயர் பார்த்து சற்று பயத்துடன்தான் போனேன்.    பெரிய அளவில் பாதிப்பில்லை.   சின்ன மாமா மாதிரி இருக்கும் ஜூனியர் என் டி ஆர் தம்பி மாதிரி இருக்கும் ராம்சரணை அண்ணா அண்ணா என்று அழைப்பது வேடிக்கை.

அவர்கள் இருவரும் திரைக்கு வரும்போது ஆங்காங்கே சில விசில்களும், ஊ ஊ  கூச்சல்களும் கைதட்டல்களும் இருந்ததைப் பார்த்தபோது அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் தெரிந்தது.

இருவரும் இணைந்து ஆடும் குத்துப் பாடல் செம்ம ஹிட்.  அதுவும் காட்சி அமைப்பு கட்டாயம் அந்தப் பாடலோடு ரசிகர்களை ஒன்றவைக்கும்.  ராஜமௌலி ராஜதந்திரம் அறிந்தவர்.

கடத்தப்பட்ட பெண்ணை விட்டுவிடுவது நல்லது என்று நவாப் அபிப்ராயபப்டுகிறார், என்று சொல்லி , அவளை மீட்க புறப்படும் காப்பன் பற்றிய ஒரு அறிமுகம் ஆங்கிலேயே கவர்னரிடம் சொல்லப்படுவது எதிர்பார்ப்பை ஏற்றுகிறது.

சில வசனங்கள் கவர்கிறது..  உதாரணம் அஜய் தேவ்கன் ஷ்ரேயாவிடம் பேசும் "என் ஆயுள்ல பாதி உனக்கு சொந்தம்" எனும் வசனம்.  மீதி நாட்டுக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஷ்ரேயா கண்களால் அதை புரிய வைக்கிறார்.  அதேபோல ராம்சரண் ஆலியா பட்டிடம் விடைபெறும்போது சொல்லும் வசனம்..  தமிழ் வசனங்கள் கார்க்கி.  ஏற்கெனவே இவர் வசனங்களை வேறொரு படத்தில் ரசித்திருந்தேன்.  அதுபற்றி பிறகு!

'நான் ஈ'யில் சமந்தா, 'மகதீரா'வில் காஜல் அகர்வால், 'பாகுபலி'யில் அனுஷ் மற்றும் தமன்னா என்று கதாநாயகிகள் வைத்த ராமௌ இதில் கதாநாயகியை  நம்பவில்லை.  



அதேபோல வில்லன் என்றும் யாரும் தனியாய்க் கிடையாது.  இந்த இருவருமே கதாநாயகர்கள், இவர்களே ஒருவருக்கொருவர் வில்லன்கள்!

பட முற்றும் முடிந்த பிறகும் ஒரு டான்ஸ் பாடல்.  ஏதோ ரயிலில் குதிப்பது என்றார்கள்.  என் கண்ணில் அந்தக்காட்சி தென்படவில்லை.  வெட்டி விட்டார்களோ என்னவோ..

புலியை ஒற்றைக் கையால் தலைக்குமேல் தூக்கி பத்தடி தூரம் எறிவது (நல்லவேளை யானையை என்று காட்டவில்லை!),  உறுமும் ஆக்ரோஷ புலியின் முகத்துக்கு நேரே நெருக்க்கத்தில் தானும் உறுமுவது, திருவிழாக் கூட்டமாய் ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர்களுக்கு நடுவில் இருக்கும் ஒருவனை, அத்தனை போரையும் சமாளித்து ஒற்றை ஆளாய் இழுத்து வருவது, என நம்ப முடியாத காட்சிகளால் நிறைந்தது படம்.  ஆனால் பார்க்கும்போது தெரியாது, சற்றுப் பொறுத்தோ வெளியில் வந்ததுமோ புன்னகைக்க வைக்கும் படம்.  எவ்வளவு கத்திக் குத்துகள், இரும்புகளால் தாக்கப்பட்டாலும் ராஜமௌலியின் ஹீரோக்களுக்கு உயிர் போவதில்லை என்பதல்ல ஆச்சர்யம், அவர்களால் முன்னரைவிட அதிக பலத்துடன் சண்டையிட முடிகிறது!  

படம் பார்க்கும்போது எல்லோருமே சிறுவர்களாகிப்போக வைக்கும் படம்.  முன்பெல்லாம் பிரம்மாண்டம் என்றால் எஸ் எஸ் தாணு தயாரிப்பு என்பார்கள்.  அப்புறம் கே டி குஞ்சுமோனைச் சொல்வார்கள்.  அப்புறம் சங்கர் படம் என்றால் பிரம்மாண்டம் என்றார்கள்.  ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க் படத்தைச் சொல்வார்கள்.  இந்தியாவில் இவர்களை எல்லாம் தாண்டி இன்டர்நேஷனல் லெவலில் பிரம்மாண்டத்துக்கு பெயர் வாங்கி இருக்கிறார் ராஜமௌலி.  

இங்கேயே பத்து ரூபாய்க்கும் டிக்கெட் இருக்கிறது.  முதல் இரண்டு வரிசையும் பத்து ரூபாய் என்றான் மகன்.  அண்ணாந்து  திரையைப் பார்க்க வேண்டியதாயிருக்கும்..  முடிந்தவரை பின்னால் கிடைத்தால் நம் கழுத்துக்கு நல்லது.  முதல் இரண்டு வரிசை தவிர தியேட்டர் மிச்சம் நிரம்பி இருந்தது.

டிக்கெட் விலை 210 ரூபாய்!  வீட்டிலிருந்து ஊபர் 200 ரூபாய்.  பாப்கார்ன் டோனட் எவ்வளவு என்று தெரியவில்லை.  வீடு வர ஊபர் மறுபடி 200 ரூபாய்...  உள்ளே ஊருக்குள் செல்வது போல அவ்வளவு தூரம் நடை...  நடுவில் கவர்ந்திழுத்து செலவு செய்யத் தூண்டும் நிறைய கடை வலைகள்!நீங்களே சொல்லுங்கள், ஒன்றரை ரூபாயில் படம் பார்த்த நினைவு வராதிருக்குமா?

அப்போ பவுன் என்ன விலை, சீமெண்ணெய் என்ன விலை என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
==================================================================================================

110 கருத்துகள்:

  1. ஜோக்ஸ்கள் ரசிக்க வைத்தது
    ஊரின் பெயர் மேலேபுடி என்றால் குட்டையானவர்கள் என்ன செய்வார்கள் ?

    35 பைசாவில் படம் பார்த்த நினைவுகள் வந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மாதிரியெல்லாம் கில்லர்ஜிக்கு சந்தேகம் வருது? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. மேலபுடி என்றிருந்தால் அருகிலேயே ஏறுவதற்கு ஒரு மைல்கல் இருக்கும் என்று நினைக்கிறேன் ஜி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு கமலா. உடல் நலம் தானே. பிள்ளையுடன் இனிமையான பொழுதாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன். பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தாங்கள் நலமா? நானும் இப்போது ஒரளவு நலமாகத்தான் உள்ளேன். மகன் இங்கு வந்த முதல் இருபது நாட்களாக தொடர் உடல் பாதிப்பில் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். மற்றபடி வீட்டு வேலைகளுடனும், அது அல்லாத மற்ற நாட்கள் மகனுடன் அங்குமிங்கும் பயணிப்பதிலும்,(முடியாவிட்டாலும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் ஆசையில், ஆசை ஒன்றுதானே நம்மை பிடித்து ஆட்டுவிப்பது...) வலையுலகத்திற்கு சரியாக வர இயலவில்லை. சகோதர, சகோதரிகள் அனைவரும் என்னை மன்னிக்கவும். இந்த மாதம் நடுவில் அவர்கள் (பிள்ளை மருமகள்) ஊருக்கு திரும்பி விடுவார்கள் என நினைக்கும் போதே என் மனது விசாரப்படுகிறது. என்ன செய்வது? எ.பியில் தங்களது அன்பான விசாரிப்புகள் கண்டு மிகவும் சந்தோஷமடைகிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது. மிக்க நன்றி சகோதரி.

      அதுவும் இன்றைய என் பிறந்த நாளில் (நானே சுயவிளம்பரம் செய்து கொள்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம்.என் உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு தெரிவிப்பதில் என்ன தயக்கமென நானே கூறி விட்டேன்.) உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் வந்தேன். அவர்கள் (பிள்ளை மருமகள்) ஊருக்குச் சென்ற பின் என் நீண்ட கருத்துரைகளை (அறுவைகளை) தினமும் அனைவரும் தவறாது சந்திக்க வேண்டியிருக்கும்.:) அதற்கும் வேறு வழியில்லை. ஹா.ஹா.ஹா. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      என்னை அன்புடன் வரவேற்றிருப்பது கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா. விரைவில் உடல் நலம் பரிபூரணமாகத் தேறவும் பிரார்த்தனைகள். விரைவில் நீங்களும் உங்கள் பிள்ளை/மருமகள் இருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று ஓய்வாகச் சில மாதங்கள் கழித்துவிட்டு வரவும் பிரார்த்தனைகள். உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும்.

      நீக்கு
    5. நீங்க நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் மேடம்.

      சிறுகதைகள் என்று நினைத்து நீங்கள் எழுதும் நெடுங்கதைகளையும் பதிவுகளையும் படிப்போம்.

      உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் ஆசி அனைவருக்கும் இருப்பதாகுக.

      நீக்கு
    6. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      உடனடியாக கிடைத்த தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. பிள்ளை இருக்கும் இடத்திற்கு நான் செல்வது கொஞ்சம் கடினந்தான். பார்க்கலாம்.¡அவர்கள் அலுவலக வேலை விஷயமாக அங்கு சென்றுள்ளனர். இன்னமும் அங்கு நிரந்தரமாக தங்குவது கடவுள் செயல். அனைத்தும் அவன் விருப்பப்படிதானே நடக்கும். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      தங்களது உடனடி பதில் கருத்துரையும், வாழ்த்துக்களும் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

      /சிறுகதைகள் என்று நினைத்து நீங்கள் எழுதும் நெடுங்கதைகளையும் பதிவுகளையும் படிப்போம்/

      ஹா.ஹா.ஹா. பதிவு என வத்து விட்டால் படித்துத்தானே ஆக வேண்டும். (விரைவில் அனைவரும் தயாராக இருக்கவும்)

      என் அன்பான ஆசிகள் என்னை விட இளையவர்களுக்கு கண்டிப்பாக உண்டு. (இன்று என் வயதை கூறக்கூடாது என்பார்கள் அந்தக்காலப் பெரியவர்கள். இல்லாவிட்டால் இளையவர்கள் யார் யார் என கண்டறிந்து விடலாம்.ஹா ஹா ஹா. ஆனால் முன்பே நானே எந்தப் பதிவிலோ கூறியதாக நினைவு.) . என் அன்பான வாழ்த்துகள் அனைவருக்கும் எப்போதுமே உண்டு. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  பிரார்த்திப்போம்.  நீங்கள் நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.  மகன், மருமகள் ஊர் திரும்பும் நாள் நெருங்கும் சோகம் சொல்லி இருக்கிறீர்கள்.  இப்போதெல்லாம் இப்படி ஆகிவிட்டது வழக்கங்கள்..காலம் செய்த கோலமக்கா..  கடவுள் செய்த குற்றமக்கா   

      :))

      நீக்கு
    9. கமலா அக்கா..  நேற்றே வாழ்த்து சொல்லாததற்கு மன்னிக்கவும்..  ஏதோ கவனம்.   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    10. வணக்கம் சகோதரரே

      தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. இப்போதுதான் அன்றைய கருத்துக்களைப் பார்த்து படித்து பதிலுக்கு நன்றி கூறி வருகிறேன். அதற்குள் தாங்களும் என் கருத்தைப் படித்து பதில் தரும் தங்கள் கடமையுணர்ச்சி கண்டு வியக்கிறேன். பாராட்டுக்கள். இதை நேற்றே என்னால் கடைப்பிடிக்க இயலாமல் போனதற்கு நான் வெட்கப்படுகிறேன். நேற்று என்னால் வலைத்தளம் வரவியவில்லை. மன்னிக்கவும். தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்கவே..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவின் புதுமை நன்றாக உள்ளது. (முதலில் ஜோக்ஸ் என ஆரம்பித்ததை குறிப்பிடுகிறேன்.) இருப்பினும், இப்போதுள்ள தியேட்டரில் சென்று படம் பார்த்த அனுபவங்களை முதலில் ரசித்துப் படித்தேன். அந்தக் காலம் நமக்கு என்றுமே பொன்னாதுதான். அது திரும்பவும் வராத காலம்.

    கவிதை நன்றாக உள்ளது. மற்ற செய்திகளும் சுவாரஸ்யமாக உள்ளது. ஜோக்ஸ் ஒவ்வொன்றாக பெரிதாக்கி படித்து விட்டு பிறகு வருகிறேன்.

    நான் விரைவில் இயல்பாக எல்லோரது பதிவுகளுக்கும் வர ஆண்டவன் அருள வேண்டும். அனைவருக்கும் அன்பு வாழ்த்துகளுடன் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ அப்போது தோன்றிய வித்யாசம்.  அவ்வளவுதான் அக்கா.    விரைவில் இயல்பாக வந்து விடுவீர்கள்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. ஏனோ சாமாவின் துணுக்குகள் வள வள வென்று சப்பென்று தோன்றுகிறது, இரட்டை துணுக்கு உட்பட. 

    நான் இரண்டணா தரை டிக்கெட்டில் அம்மா கூட பராசக்தி பார்த்ததும், 35 பைசா பெஞ்ச் டிக்கெட்டில் கப்பலோட்டிய தமிழன் தீபாவளி அன்று பார்த்த்தும் நினைவு வந்தது.

    பாட்டுக்கு பாட்டு.

    நகுலனின் கவிதை 

    வந்தவன் கேட்டான் 
    என்னைத் தெரிகிறதா ?
    தெரியவில்லை 
    உன்னைத் தெரிகிறதா?
    தெரியவில்லை 
    பின் என்னதான் தெரிகிறது?
    உன்னையும் என்னையும் தவிர 
    மற்ற எல்லாம் தெரிகிறது.

    இது நான்.

    அறிவேன் அறிவேன் என்றாலும் 
    அறிந்தேன் அறிந்தேன் எனும்போது 
    பிறக்கும் மகிழ்ச்சி 
    மறைக்க முடியாதது அன்றோ

    அம்முகம் நண்பன் என்றால். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் JC ஸார்..  சாமாவின் ஜோக்குகளில் சிரிப்பு வருவதில்லை என்றுதான் எனக்கும் தோன்றும்!

      நகுலன் கவிதை முன்னரே பகிர்ந்திருக்கிறீர்கள்.  உங்கள் கவிதை ரசித்தேன்.  நண்பனின் முகம் என்பதால்தானே நினைவில் அடியிலிருந்து எழுந்து வருவது...

      நீக்கு
  6. இப்படிப்பட்ட பசு மாடு இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்தது, என்று இரயில்வே ஸ்டேஷன் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னா தான் படித்த பசுமாட்டைப் பற்றி கட்டுரை எழுதுவதைப்போல, கையில் கிடைத்த அனுஷ்கா படங்களுக்காக, ஆர்ஆர்ஆர் விமர்சனமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பார்த்த அனுபவம்...  விமர்சனமாகவும் இருக்கக் கூடாது, இல்லாமலும் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.  ஹிஹிஹி...

      நீக்கு
  7. பாஹுபலியைவிட வசூல் அதிகமாம், பார்ட் டூ வரப்போகுதாம். ராஜமௌலி அப்பா, கதையை எழுதிவிட்டாராம்.

    பாஹுபலியை (இரண்டையும்) தியேட்டரில் அலுப்பில்லாமல் என்னால் நான்கு தடவைகள் பார்க்க முடிந்தது. இந்தப் படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பது கடினம்னு நினைக்கிறேன். கதை படு வீக். லேஸ் சிப்ஸ் பாக்கெட் மாதிரி. பிரம்மாண்டம். கார்த்தா நாலு சிப்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ட் டூ வரப்போகுதா தெரியாது.  வதந்தியாய் இருக்கலாம்.  இதில் பார்ட் ஒன்னுக்கே வேலையில்லை.  டூவில் என்ன இறுக்கப் போகிறது.  பாஹுபலியோடு இதெல்லாம் போட்டி போடமுடியாது.

      நீக்கு
  8. பாஹுபலி படத்தின் சில காட்சிகளை, (மனைவியைத் தொட்டவன் தலையை எடுப்பது, எருதினோடு சண்டை, அரசவைக் காட்சிகள், தலையெடுக்கும் காட்சிகள்...போர்க்களத்தில் தேரோட்டிக்கொண்டு செல்லும் சண்டைக் காட்சிகள்..... திரும்பப் பார்த்தாலும்... அட என வியக்க வைக்கும். இதில் அப்படி ஒன்றும் இல்லை.

    இதில் காதில் பாலை போடும் காட்சிகள்தான் அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. நகைச்சுவை ரசிக்கவில்லை. பனிக்கவும் கஷ்டம். (கஷ்டப்பட்டு பைரேட் காபியைப் பிடித்து, வலிமை படம் பார்த்த அயர்ச்சி போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும்.  பேப்பர் தரம் ரொம்ப மக்கி விட்டது.  ப்ளஸ் என் படமெடுக்கும் திறன்!

      நீக்கு
  10. நான் தலைவலிக்குமே என்பதால் 3டி வேண்டாம் என்று சொல்லி 2டில பார்த்தேன். ஒரு தடவை பார்க்கப்போற படத்தை 3டிலயே பார்த்திருக்கலாம்.

    படத்தின்போது, விசில் சத்தம், படத்திலேயே வச்சுட்டாங்களோ என்று சந்தேகப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...ஹா...  விசில் தியேட்டரிலிலிருந்துதான் வந்தது.  3D கண்ணாடி போட்டு பார்க்கும் அனுபவம்தான் படத்தின் பெரிய ப்ளஸ்ஸே.  நீர்த்துளிகள் மேலே தெறிப்பதும், இலை தியேட்டருக்குள் அசைந்து அசைந்து விழுவதும், நெருப்புப்பொறிகள் சுற்றிலும் விழுவதும், டெல்லி போன்ற ஊர்ப்பெயர்கள் தொடும் தூரத்தில் தெரிவதும், புல்லட் உங்கள் டியது கணணித் தாண்டிப்  பரபபதும், அதைவிட காட்சிக்கு காட்சி மக்களுக்கிடையே இருக்கும் இடைவெளி, தூரம் உட்பட எல்லாமே அருமை.

      நீக்கு
  11. இன்றைய பதிவு குறிப்பிடத்
    தக்கது..

    பிரம்மாண்டமான விமர்சனம்.. ஆனாலும் பப்படம் பார்க்கும் ஆவல் எல்லாம் இல்லை..

    ஏவாரம் பிய்த்துக் கொண்டு போகுதாமே!..

    அதான் பப்படம்.. ஜாலி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம வியாபாரம் என்றுதான் சொல்கிறார்கள்.  பொழுதுபோக்கு படம்.  மூளையை ஓய்வில் வைத்துவிட்டு பார்க்கவேண்டிய படம்.  ரசிக்கலாம்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. இன்று நகைச்சுவை முதலில் இடம் பெற்றாலும் சிரிப்பு வரவில்லை.
    ஊரின் பேர் ரசிக்க வைக்கிறது.

    //மகளின் திருமணத்தை நிச்சயித்து 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்' என்று ஒரு புத்தக வரிசையில் 30 புத்தகங்களை 30 நாட்களில் முடித்துவிட, பதிப்பகத்தார், "நான் புத்தகம் எழுதுங்கள், பணம் தருகிறேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால் முப்பது நாட்களில் முப்பது புத்தகங்கள் எழுதுவீர்கள் என்று தெரியாதே" என்றாராம்.//

    மகளின் திருமணத்திற்கு பணம் தேவை பட்டதால் இத்தனை கதைகளை எழுத முடிந்தது போலும்.

    அனுஷ் படம் ஒரு பதிவில் இடம்பெறவில்லை. அதற்கு ஒன்றுக்கு இரண்டாய் இரண்டு அனுஷ் படம் இடம் பெற்று விட்டது.

    தியேட்டர் போய் படம் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.
    ('டேய் நான் எஸ்கலேட்டரில் ஏறுவதை வீடியோ எடுடா' என்று மகனிடம் ரிக்வஸ்ட் விட்டேன்//
    இப்படி எடுக்க முடியாமல் போய் விட்டதே!

    தியேட்டருக்கு படம் பார்க்க போன அனுபவங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி சாமா ஜோக்ஸ் பதிய மாட்டேன் என்று சாமா மேல சாத்தியம் செய்து விடுகிறேன்!!!


      அனுஷ் படம் திருப்தியாய் வரவில்லை - என்னைப் பொறுத்தவரை!

      எஸ்கலேட்டர் விடியோவை எடுக்கும் வாய்ப்பு தட்டிப்போய் விட்டது!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. ஏனோ? சாமாவின் நகைச்சுவை ஒருத்தருக்கும் பிடிக்கலை! :(

      நீக்கு
    3. அவ்வளவா சிரிப்பு வரலையாம்.  அதான்!

      நீக்கு
    4. நான்/நாங்க இது வரைக்கும் எஸ்கலேட்டரில் காலை எடுத்து வைத்ததே இல்லை. :( பயம் தான் காரணம். கண் முன்னாலேயே 2,3 விபத்துக்களைப் பார்த்து விட்டோம்.

      நீக்கு
  14. அந்தக் காலத்துக் கல்கி பைன்டிங் நிறைய இருக்கோ? சாமாவின் நகைச்சுவைத்துணுக்குகளாக வருகின்றனவே! ஆர் ஆர் ஆர் பட விமரிசனம் அருமை. இப்போல்லாம் திரைப்பட அரங்குகள் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதை முதல் முதலாய் அறிந்தேன். திரை அரங்குகளில் எல்லாம் போய்ப் படம் பார்த்தே 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. தொலைக்காட்சியில் பார்ப்பது தான் எப்போவானும். அம்பேரிக்கா போனால் அங்கே நெட் ஃப்ளிக்ஸ் மூலம் தேர்ந்தெடுத்துப் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பசங்களோட திரையரங்குக்குச் செல்லணும்னா நான் டென்ஷனாயிடுவேன். சென்னைல இப்படி ஒரு திரையரங்குக்குச் சென்று (டிக்கெட் 120-150 ரூ என்று நினைவு. 4 பேருக்கு 600 இருக்கலாம். அப்புறம் 1500-2000 ரூபாய்க்கு அவங்க மூணு பேருக்கும் சாதாரண ஸ்நாக்ஸ். ஆர் ஆர் ஆர் படத்தின்போதும் பாப்கார்ன் வாங்கினா. நான் என்ன விலைனே கேட்டுக்கலை.. கேட்டால்தானே வயிற்றெரிச்சல் வரும். ஹா ஹா

      நீக்கு
    2. // சாமாவின் நகைச்சுவைத்துணுக்குகளாக வருகின்றனவே! //

      நீண்ட நாட்களுக்குப் பின் இன்றுதானே பகிர்ந்திருக்கிறேன்?  ஆனால் பைண்டிங்குக்கு குறைவில்லை.

      அடடே..  என் வர்ணனை உங்களுக்கு தியேட்டர் பற்றிய ஒரு ஐடியாவை கொடுத்திருக்கிறது போலவே..  சபாஷ்டா ஸ்ரீராம்...

      நீக்கு
    3. //அப்புறம் 1500-2000 ரூபாய்க்கு அவங்க மூணு பேருக்கும் சாதாரண ஸ்நாக்ஸ்.//

      ட்ரே மாதிரி ஒரு தட்டில் வைத்து கொடுத்து விடுகிறார்கள்.  பாப்கார்ன் மெகா பாக்கெட்.  அந்த சீசனிங் செய்ததும் டேஸ்ட் ஒருமாதிரி ரசிக்கும்படி இருக்கிறதுதான்.  ஆனால் பாப்கார்ன் சாப்பிட்டால் எனக்குதான் அது சருகு போல தொண்டையில் மாட்டிக்கொண்டு இருமல் வரும்!

      நீக்கு
  15. எம்.வி.வெங்கட்ராம் குறித்த இந்தக் கட்டுரையைப் படிச்சிருக்கேன். காதுகள் புத்தகம் சித்தப்பா கொடுத்திருந்தார். யாரோ படிக்க வாங்கிண்டு போய்க் கொடுக்கவே இல்லை. எனக்குப் பிடிச்சது எம்வி.வெங்கட்ராமின் "வேள்வித் தீ" நாவலும் (இப்போ நினைச்சால் கூடக் கதாநாயகியின் முடிவு தூக்கி வாரிப் போடும்.) சிறுகதைகளில் "அறம்"சிறுகதையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே நான் படித்ததில்லை. காதுகள் கிடைக்கவில்லை!

      நீக்கு
    2. அறம் என்றொரு சிறுகதையை எம்.வி.வி. அவர்கள் எழுதியிருந்தால் அல்லவா, நீங்கள் படிப்பதற்கு ஸ்ரீராம்?

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா, அது எம்விவி சொன்னதைத் தான் ஆஜான் எழுதினார் என்பதால் அவர் கதை என்றேன். உண்மையில் அவருடைய சொந்த அனுபவம் அது எனக் கேள்வி.

      நீக்கு
    4. இதுக்குக் கொடுத்த பதில் எங்கே? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! அறம் என்பது எம்விவியின் சொந்த அனுபவத்தை அவர் சொன்னதைத் தான் ஆஜான் ஒரு தனிக்கதையாக எழுதினார். அது எம்விவி அவர்களின் சொந்த அனுபவம். :)))) ஆகவே அது அவர் கதை என்றே சொல்லலாம்.

      நீக்கு
    5. ஹை! அதுவும் வந்திருக்கே! :)

      நீக்கு
    6. இந்தப் பதிவுப் பின்னூட்டங்களில் எம்.வி.வி. அவர்களைத் தொட்டு பின்னூட்டம் போட்ட ஒரே ஒருவர் என்றளவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பெருமை போய்ச் சேருகிறது

      அவரும் இதைச் செய்யவில்லை என்றால் ஒரு நல்ல பழம் பெரும் எழுத்தாளருக்கு இந்த தளத்தில் இழைத்த பெருத்த அவமானமாகப் போயிருக்கும். சகோதரிக்கு பாராட்டுகள்.

      செவ்வாய்க்கிழமை கதை எழுதுகிறவர்கள் இந்த மாதிரி எழுத்துச் சிற்பிகளின் எழுத்துக்களை வாசிக்கும் பழக்கம் மேற்கொண்டால் அவர்கள் எழுதுவதற்கு ஒரு பயிற்சிப் பட்டரை மேற்கொண்ட மாதிரி இருக்கும்.

      நீக்கு
    7. ஆமாம்.  நான் என்ன நினைத்தேன் என்றால் எம் வி வி அறம் என்கிற பெயரிலும் எழுதி இருக்கிறார் போல, அதை வைத்துதான் ஜெமோ எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன்.

      நீக்கு
  16. இந்த வாரம் கவிதை சுமார் ரகம் தான். முழுக்க முழுக்க விமரிசனத்தால் பதிவை நிரப்பிட்டீங்க. எடுத்த எடுப்பில் போட்டதால் நகைச்சுவைகள் நன்றாக இல்லைனு சொல்ல முடியாது. யோசிச்சு ரசிக்கும் ரகங்கள்.

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவை ஸோ ஸோ தான். ஏனோ டக்கென்று சிரிப்பு வரலையே... கிளி கொத்துமா கொஞ்சுமா அது ஓகே.

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசாம ஒரு முன்னறிவிப்பு போட்டிருக்கலாம்...  'கைகளால் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டே படிக்கவும்' என்று!

      நீக்கு
  18. நகைச்சுவைகள் விட அடுத்த படம் ரசித்து சிரித்துவிட்டேன்!! அதான் அந்தப் பையன் கீழ பிடிச்சிருக்கார் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கவிதை நல்லாருக்கு....ஆனால், என்னவோ ஒரு சின்ன... ஒரு துடிப்பு? மிஸ்ஸிங்கோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கவிதை வயதான ஒருவரின் நினைவுக் குழிழ்?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. படம் பார்த்ததுமே எவிவி என்று தெரிந்து விட்டது ஆனால் சொன்னவர் யாரென்று கடைசியில் தெரிந்தது. சுவாரசியமான தகவல்.

    ஆர் ஆர் ஆர் முழுசும் என்ன? ராஜமௌலி படம் பிரம்மாண்டம் என்பது இப்போதுதான் தெரிகிறது. கூகுளில் போய்ப்பார்த்தேன் படத்தைப் பத்தி பார்த்தேன் அங்கும் ஆர் ஆர் ஆர் நுதான் இருக்கிறது. ராஜமௌலி ஆனாலும் அனுஷ் இல்லை

    ஆனா நமக்கு ராஜமௌலி படம் ன்ற பேர்ல அனுஷ் படம் போடறதுக்காச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலியா பட் அந்தப் படத்துல வரப் போறார் வரப்போறார்னு கடைசிவரை காத்திருந்தேன். ஹா ஹா. பார்க்கச் சகிக்கலை (னு மனைவிட்ட சொன்னேன். அவளோ...பேசாம இருங்க. பெண்ணுக்கு பிடித்த நடிகை அவர் என்றாள்)

      நீக்கு
    2. ஆலியா பட் போலியா பட் மாதிரி இருந்தாங்க..  பாவம் அஜய் தேவ்கன்.   அனுஷ் படம் எங்கே என்று புதன் கேள்வி வரை எல்லோரும் கேட்டதும் எனக்கே வெட்கமாய் போச்சு...    இவ்வளவு நாளாவா அனுஷ் படம் போடாம விட்டிருக்கோம்னு...

      நீக்கு
    3. நெல்லை ஆலியாபட் இப்ப இளசுகளுக்குப் பிடித்தவங்களா இருக்காங்க ஆனா நடிக்கறாங்களா?!!!!!!!!

      //(னு மனைவிட்ட சொன்னேன். அவளோ...பேசாம இருங்க. பெண்ணுக்கு பிடித்த நடிகை அவர் என்றாள்)//

      செமையா சிரித்துவிட்டேன் நெல்லை.

      கீதா

      நீக்கு
    4. அனுஷ் படம் எங்கே என்று புதன் கேள்வி வரை எல்லோரும் கேட்டதும் எனக்கே வெட்கமாய் போச்சு... இவ்வளவு நாளாவா அனுஷ் படம் போடாம விட்டிருக்கோம்னு...//

      ஹாஹாஹாஹா.....அதானே ...நேத்து சொல்ல நினைத்து அப்புறம் முடியாமல் போச்சு. எல்லாரும் அனுஷை தேடுறாங்களேன்னு அதுவும் ஸ்ரீராம் போடாமல் என்று...ஆமாம் புதன் நினைவில்தான் ..அரம விலிருந்து ஒரு போராட்டம் கூட யோசனை

      அனுஷ் இல்லாத ராஜமௌலி படமா....ஹூம். ஏன் அனுஷ் இல்லையோ? அனுஷின் முதல் படம் பார்த்து முதல்ல ஓ அனுஷ் இருக்காங்களா, அந்த ஆதிவாசி பொண்ணு இவங்கதானோ அப்படினா பெரிசாகி...கதை அப்படி போகுதோன்னு...கடைசில அவங்க இல்லைவே இல்லை...ஹூம் வேஸ்ட்.

      அனுஷ் மேக்கப் இல்லாம கூட அழகா இருக்காங்க!!! பெருமூச்சு

      கீதா

      நீக்கு
  22. படம் 3 டி படமா. தியேட்டர் நோ சான்ஸ்.

    அது சரி பிரிக்க முடியாதது தியேட்டரும் பாப்கார்னும்!!!

    மணல் டிக்கெட், தரை டிக்கெட், படி டிக்கெட், பெஞ்சு டிக்கெட், நாற்காலி டிக்கெட், குஷன் நாற்காலி டிக்கெட் அதுல 1ஸ்ட் க்ளாஸ், 2ண்ட் க்ளாஸ், அப்புறம் பால்கனி, ஹோம்தியேட்டர் வரை வந்தாச்சு!!!!! ஹோம் தியேட்டர்ல கம்ப்ட்யூட்டர் வரைக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியேட்டரில் பார்த்தால்தான் படம்.  அதுவும் 3D யில்.  இல்லாவிட்டால் துரை அண்ணா சொல்வது போல இது வெறும் பப்படம்தான்!

      நீக்கு
  23. என்ன இது...? வழக்கமான வியாழன் இல்லையே என்று நினைத்தேன்... தலைகீழ் :- அனுபவம், கவிதை, நகைச்சுவை படங்கள் என இருக்கும்...

    முகத்தின் முழு வடிவை அறிந்து விட்டீர்கள் தானே...?

    மணலை குவித்து, அதன் மேல் உட்கார்ந்து கொட்டகையில் திரைப்படங்கள் பார்த்த ஞாபகம் வந்தது... Ticket விலை 25 பைசா முதல் 45 பைசா வரை ஏறின காலம் வரையிலும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வேலைகள் என்னை தலைகீழாய் நிற்க வைத்திருக்கின்றன..  அதுதான் பதிவும் தலைகீழாகி விட்டது!   ஹிஹிஹி...

      முகம் இன்னும் புகைவடிவிலிருந்து தெளிவடையவில்லை.  ஓ...  ஹென்றி!

      மணல் நினைவுகள் மனநினைவுகள்.

      நீக்கு
  24. கவிதை எனக்குப் பிடித்திருந்தது ஸ்ரீராம். 'ஆசை முகம் மறந்து போச்சே' என்ற மஹாகவியின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன.

    இப்படிப்பட்ட உணர்வுகள் உண்மை.
    நானும் உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..  நன்றி ஜீவி ஸார்..   கவிதை சொல்லும் பொருளுக்காக பிடித்திருக்கிறது உங்களுக்கு!

      நீக்கு
  25. முதல் ஜோக் அந்தக் காலத்து அறிவு பூர்வமான நகைச்சுவை ரகத்தது

    திருடன் சொல்வது மிக்ச் சரியான ஆதாரம். கோர்ட் விசாரணைகள் சம்பந்தப்பட்டது கூட. ஒரு வக்கிலுக்கான தகுதியுடன் அவன் அதைச் சொல்கிறான்

    அவன் சொல்வது நிரூபிக்கப் பட்டால் இந்த வழக்கில் அவனுக்கு தண்டனை இல்லை என்பது உண்மை தானே?..

    பொதுவாக சாமா ஜோக்குகள் உடனடி கலகல அல்ல. நிதான ரசிப்பிற்கு உகந்தவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் எனினும் அவை ஜோக் என்கிற வகையறாவுக்கு அப்பாற்பட்டவை என்று தோன்றும்.

      நீக்கு
  26. 'கீழப்புடி' படம் எடுத்தவரின் ரசனையே ரசனை! எப்படியெல்லாம் யோசிக்க்றாங்க, பாருங்க!

    பார்த்து பாடமும் பயில்வது ஞாயிற்றுக்கிழமை பகுதிக்காரர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... பெயரைப்பர்த்ததும் சட்டென தோன்றுகிறது அவர்களுக்கு!

      நீக்கு
  27. ராஜமெளலி -- பெயர் நன்றாக இல்லை?..

    சினிமாப் பெண்களை உற்று உற்று ரசிப்பவர்களுக்கு மாற்றாக...
    ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரமுத்துவுக்கு ஒரு வழக்கம் உண்டு.  சிறந்த பொருட்களுக்கு ராஜ என்கிற அடைமொழி கொடுத்து விடுவார்.  ராஜகீதம், ராஜமோகினி, இபப்டி...  இவருக்கு பெயரிலேயே அது இயற்கையிலேயே அமைந்து விட்டது!

      நீக்கு
  28. பி.யு.சின்னப்பா
    எம்.கே.டி.

    படங்களுக்கு கீழே உள்ளவர்ம்களை மாற்றிப் போட்டிருக்க வேண்டும்.

    எல்லாம் காரணமாகத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பேஸ்புக்கில் நாம் பகிர்பவை எந்த வரிசையில் வந்ததோ அப்படியே ஸ்கீன் ஷாட்!

      நீக்கு
  29. அன்பின் அனைவருக்கும் மாலை வணக்கங்கள்.
    1 எம் வி வெங்கட் ராம்,
    2, உங்கள் கவிதை,
    3, நல்ல நகைச்சுவை,
    4, ஆர் ஆர் ஆர் பட விமரிசனம்.
    படத்தை விட நன்றாக இருக்கிறது. படம் பார்க்கும் ஆசை இல்லை.
    5, அனுஷ்கா மனதை விட்டுக் காணாமல் போகவில்லை,
    6,அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு
    அன்பு விசாரிப்புகள்.

    மொத்தத்தில் அனைத்துப் பகுதிகளும் சூப்பர் ஸ்ரீராம்.

    கதை எழுதலாம்.பா ரா பக்கம் பார்த்தீர்களா.?
    மனதிலிருந்து வார்த்தைகள் வந்தால் எல்லாக் கதையும்
    பரிமளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா ரா பக்கமெல்லாம் சென்று வருடங்களாகின்றன வல்லிம்மா...

      நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி

      தங்களது அன்பான விசாரிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி. தாமதமாக பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. வழக்கமாக கட்டுரை, கவிதை, ஜோக்ஸ் என்று வரும். இந்த முறை மாற்றியிருக்கிறீர்கள். ஆர்.ஆர்.ஆர் விமர்சனம் போடுவதற்காக ஏற்கனவே இருந்ததை தூக்கி விட்டீர்களோ என்று தோன்றியது.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்! கவிதை அவரை நினைத்துதான் எழுதப்பட்டதோ என்று தோன்றியது.
    தன்னோடு ஒப்பிட்டதால் கிளிக்கு கோபம் வந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, ஏற்கெனவே ஒன்றும் இல்லை.  சும்மா ஆர்டர் மாற்றி பார்த்தேன்.  அவ்வளவுதான்!

      நீக்கு
  31. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே...


      நானும் நேற்று சொல்ல மறந்து விட்டேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமலா அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. நான் தாமதமாக பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. வாழ்த்துக்களை எப்போது வேண்டுமானாலும் பகிரலாமே.. ¡ நானும் நேற்றைய நாளை தவற விட்டு தாமதமாகத்தான் பதிலுக்கு நன்றி சொல்கிறேன்.அதற்கு அனைவரும் மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. // நானும் நேற்றைய நாளை தவற விட்டு தாமதமாகத்தான் பதிலுக்கு நன்றி சொல்கிறேன்.//

      ஹா..  ஹா..  ஹா...  பழிக்குப் பழியா?   சும்மா ஜோக்குக்குதான் சொல்கிறேன் அக்கா..   சீரியஸா எடுத்துக்காதீங்க!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா. உடன் பதில் உங்கள் அன்பை சொல்கிறது. நன்றி சகோதரரே.

      நீக்கு
  32. வல்லி அக்காவை கொஞ்ச நாட்களாக காணவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவுக்கு கொஞ்சம் அலர்ஜியானதால் அளவாக வந்து சென்றார்.  மேலே அவர் கமெண்ட் இருக்கிறது பாருங்கள்.  இன்று வெள்ளிக்கிழமை பழைய Form ல கமெண்ட்ஸ் போட்டுட்டார்.

      நீக்கு
  33. @ கமலா ஹரிஹரன்..

    //அதுவும் இன்றைய என் பிறந்த நாளில்..//

    பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலன்களையும் பெற்று வாழ்தல் வேண்டும்..

    அன்னை அபிராமவல்லியின் அருள்!..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்களது அன்பான வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி.

      தாமதமாக வந்து பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  34. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    உடல் நலத்தோடு இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படி உள்ளீர்கள்? தாங்கள் நாளும் நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகளும்.

      தங்களது அன்பான வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தாமதமாக வந்து பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  35. ஆர் ஆர் ஆர் என்ற படம் வந்தது குறித்து அறிந்தேன். அதைப் பற்றி உங்கள் விமர்சனம் பார்க்கும் போது பாகுபலியை விட இன்னும் பிரம்மாண்டமோ என்று தோன்றுகிறது. 3டி கண்ணாடி வேறு இல்லையா. பாகுபலி எனக்கு மிகவும் பிடித்தது. ரசித்துப் பார்த்த படம். ஆனால் வீட்டினருக்கு அந்தப் படம் இஷ்டப்படவில்லை. ஆர்ஆர்ஆர் இங்கு ஒரு தியெட்டரில் ஓடுகிற்து. குழந்தைகள் யாரேனும் இந்தச் சமயத்தில் வீட்டிற்கு வந்து அவர்கள் ஆசைப்பட்டால் பார்க்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையும் எதிர்பார்க்காமல் நாமே சென்று பார்க்கலாம் துளஸிஜி.  நாமே குழந்தையாகி விடுவோம்!

      நீக்கு
  36. ஜோக்ஸ் ரசித்தேன். ஒரு தடவை ரசிக்கலாம். சில ஜோக்ஸ் எப்போது வாசித்தாலும் புதியது போல சிரிப்பு வரும். ஜோக்சை விட அந்த கீளப்புடி படம் சிரிக்க வைத்தது.

    ஸ்ரீராம்ஜி, உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனை எனக்கு எப்போதும் வியப்புதான். வயதானவர் பாவம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் கற்பனை எனக்கு எப்போதும் வியப்புதான்.//

      ​நிஜம்மாவா?

      //வயதானவர் பாவம்.//

      ஆ....

      நீக்கு
  37. கமலாக்கா சாரி தாமதமான பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீங்க சீக்கிரம் ஆரோக்கியமாகி இங்கு வந்து கலக்க வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கும்,மனம் நிறைந்த வேண்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      விரைவில் கடவுளின் அருளால் எப்போதும் போல் வர ஆசைப்படுகிறேன். தாமதமாக வந்து பதில் கருத்து தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  38. தியேட்டரில் படம் பார்த்த அந்நாளைய நினைவுகளோடு இன்றைய அனுபவத்தைச் சொல்லியிருக்கும் விதம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  39. நகைச்சுவை துணுக்குகள் ரசித்தேன். படம் பார்த்த அனுபவங்கள் நன்று. தியேட்டர் சென்று படம் பார்த்து சில வருடங்கள் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!