(002) திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் – பகுதி 2
உட்பிரகாரத்திற்கு நுழையும் முன் மண்டபத்திலேயே சிற்பங்களைப் பார்த்துக்-கொண்டு நின்றுவிட்டோம். வாருங்கள் உட்பிரகாரம் செல்வோம். ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையின் பகுதியைச் சொல்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் தவிர, ஒவ்வொரு சிற்பத்துடன் கூடிய மற்றச் சிற்பங்களும் relative size என்பதை மனதில் நிறுத்தினால் சிற்பி நமக்குக் கடத்த நினைத்த பிரம்மாண்டம் நமக்குப் புலப்படும்.
உட்பிரகாரத்துக்கு வந்துவிட்டோம். இதில்தான் நடுவில் கர்ப்பக்ரஹமும், அதற்கு முன் பக்கமாக நவக்ரஹ மண்டபமும் இருக்கும். பொதுவாக கேரள கோவில்களில், சிலவற்றில், கர்ப்பக்ரஹத்துக்கு முன்பாக ஒற்றைக்கல் மண்டபம் இருக்கும். அதற்கு வெளியிலிருந்துதான் பொதுவாக தரிசனம் செய்யமுடியும். அதற்கு வெளிப்பகுதியில்தான் நவக்ரஹ மண்டபம் உள்ளது. உட்பிரகாரத்தின் இரண்டு மூலைகளில் சன்னிதிகள் இருக்கும் (சிலவற்றில் கணபதி, ஐயப்பன் போன்ற சன்னிதிகள் உண்டு).
உட்பிரகாரத்தில் இருக்கும் கற்சிலைகளும் மிக அழகானவை. சில சிற்பங்களை நெல்லையில் இருக்கும் கோவில்களிலும் பார்த்திருக்கிறேன். ஒருவேளை, ஒரே சிற்பிகள் குழு இவற்றைச் செதுக்கியிருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
கர்ப்பக்ரஹத்தின் முன்னுள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்பது மிகவும் முக்கியமானது. அதில் விழுந்தவைகள் எல்லாம் இறைவனைச் சேர்ந்தது என்பது ஐதீகம். இங்கு அந்த ஒற்றைக்கல், 18 அடி நீள அகலமுள்ள, 2 அடி உயரமுள்ள (3 அடி என்றும் சொல்கிறார்கள்) கருங்கல். ஆதிகேசவப் பெருமாள் சன்னிதி முன்புள்ள ஒற்றைக்கல்லில் தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டாக உள்ளதைப் பார்த்தேன். கோவில் பாலாலயம் (அப்போது மூலவர் என்று சொல்லப்படும் முக்கிய தெய்வத்திற்கு பூசைகள் நடக்காது. அங்கு பராமரிப்புப் பணிகள் செய்வர்) என்பதால் அந்தக் கல்வெட்டினைப் படமெடுத்துக்கொண்டேன். அந்தக் கோவிலில் உள்ள இன்னொரு கல்வெட்டினையும் படமெடுத்துக்கொண்டேன்.
கோவில் கர்ப்பக்ரஹத்தைச் சுற்றியுள்ள சுவர்களில், கேரள கோவில்களுக்கே உரித்தான, இயற்கைச் சாயங்களை வைத்து, வண்ண ஓவியங்களைத் தீட்டியிருக்கின்றனர். நான் சென்றிருந்த சமயத்தில் அவைகள் மிகவும் பழுதுபட்டு அழிந்திருந்தன. கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு அவற்றைச் சீர் செய்தார்களா என்று தெரியவில்லை.
இந்தக் கோவிலின் மூர்த்தியை 6ம் நூற்றாண்டில் ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இது பரசுராமரால் நிறுவப்பட்ட கோவில் என்கின்றனர். அதனால் அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த கோவில் என்று கொள்ளலாம். கோவிலின் வெளிப்பிராகாரத்தில் திருவம்பாடி கண்ணன் கோவில், ஐயப்பன் கோவில் போன்றவையும் உள்ளன. கோவிலின் மூலவர் எப்படி இருப்பார்? திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் போலவே மூன்று கதவுகளின் மூலம் திருமுடி, திருநாபி, திருப்பாதங்களைத் தரிசிக்கும்படியாக இருக்கும். பத்மநாபஸ்வாமியை நோக்கி இருக்கும்போது, நம் இடப்புறம் அவரது திருமுடியும், வலப்புறம் திருப்பாதங்களும் இருக்கும். ஆதிகேசப்பெருமாளின் திருப்பாதம் நம் இடப்புறமும், திருமுகமண்டலம் நம் வலப்புறமும் இருக்கும்.
வாய்ப்பு கிடைக்கும்போது, இந்தப் பழமையான கோவிலைத் தரிசிக்க மறக்காதீர்கள்.
= = = = =
படிப்படியாக விவரித்த விதமும் படங்களும் அருமை...
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன்
நீக்குநேற்றைய பதிவு மாதிரி இல்லாமல்
பதிலளிநீக்குகாலையில் பெருமாள் தரிசனம்..
மகிழ்ச்சி.. நன்றி..
படங்களை தனித்தனியாக பதிவிட்டிருந்தால் என் போன்றவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்..
பதிலளிநீக்குஇந்தக் கூட்டாணி ( கூட்டணி) வேலை யாருடையது?..
என்னுடையதுதான். கீழே கொடுத்திருக்கும் கருத்தைப் பார்க்கவும்.
நீக்குசென்ற வாரமும் இப்படித்தான்..
பதிலளிநீக்குகூட்டாணித் தொகுப்பு..
எப்போதும் புதுமை!..
அதுவே எபி!..
அப்படியும் இப்படியும உருட்டி உருட்டிப் படங்களைப் பார்ப்பதற்குள்...
பதிலளிநீக்கு&%₹# #₹%&
நான் கைபேசிக் காரன்.. அதனால் தான் @@@ ...
உங்கள் கருத்தைக் கொண்டு இனி வரும் பதிவுகளைச் செம்மை செய்வேன்.
நீக்குவடிவமைப்பில் குறை என்று எதுவும் சொல்லவில்லை..
பதிலளிநீக்குஎனது இயலாமை..
அவ்வளவு தான்!..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய சென்ற வார தொடர்ச்சியான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் படங்கள் அருமை. கோவிலின் அமைப்பும், உட்பிரகாரத்தில் உள்ள தூண்களின் கல்வெட்டு சிற்பங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது.
நவகிரஹ மண்டபத்தின் மர வேலைப்பாடுகளும் மனதை கவர்கிறது. பெருமாளை மனதாற வணங்கி கொண்டேன். பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் இந்தக் கோவிலுக்குச் செல்ல வாய்ப்பு வரவேண்டும் எனப் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன் கமலா ஹரிஹரன் மேடம். சில கோவில்களில்தாம் நின்று நிதானித்துத் தரிசனம் செய்ய முடியும். திருவனந்தபுரத்தில் எத்தனைமுறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து தரிசனம் செய்யலாம். ஆனால் கர்ப்பக்ரஹம் முன்பு நிறைய நேரம் நிற்கவிட மாட்டார்கள்.
நீக்குபூர்வ புண்ணியம் காரணமாக, அங்கு, நாங்கள் முப்பது பேர் குழுவாகச் சென்றிருந்தபோதும், சன்னிதானத்தில் அதிகாலை சாற்றுமுறை சொல்லும் மூவரோடு இருபது நிமிடங்கள் என்னைச் சேர்ந்துகொள்ள அனுமதித்தனர் (கூட வந்தவர்களில் சிலருக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது). காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை.
காஞ்சி தேவராஜப்பெருமாளை ;மூலவர்) வாழ்க்கையில் சேவித்ததில்லை. (எங்கள் முன் முன்னோர்கள் காஞ்சீபுரம்). அத்திவரதர் தரிசனங்களில் ஒரு முறை பெண்ணுடனோடு மாத்திரம் போயிருந்தேன். அப்போது மூலவரைச் சேவிக்கச் சென்றபோது எனக்கு முன்பாக வந்திருந்த ஒரு குடும்பம் (யூ எஸ் ஆக இருக்கலாம். அன்றைய தினத்துக்கான செலவுகளைக் கொடுத்தவராயிருக்கலாம்) தரிசனம் செய்ய எல்லோரையும் அப்படியே நிறுத்து, செயற்கை மின் விளக்குகளை அணைத்து, திரி விளக்கு வெளிச்சங்களில் மட்டும் ஐந்து நிமிடம் தரிசனம் செய்தேன். பெருமாளின் புன்னகையுடன் கூடிய மலர்ந்த முகம் கண்ணில் நிற்கிறது. இன்னும் மீண்டும் அந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.
வணக்கம் சகோதரரே
நீக்குதங்களின் அன்பான பிராத்தனைகளுக்கு மிக்க நன்றி. தங்கள் வாக்கு பலிக்கட்டும்.
/திருவனந்தபுரத்தில் எத்தனைமுறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து தரிசனம் செய்யலாம். ஆனால் கர்ப்பக்ரஹம் முன்பு நிறைய நேரம் நிற்கவிட மாட்டார்கள்./
ஆம். குருவாயூர் கோவிலிலும் அப்படித்தானே... நாங்கள் குருவாயூருக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறோம். அப்போது ஒரு முறை திருவனந்தபுரம் பெருமாளையும் தரிசித்து வந்தோம். ஆனால் அன்றே வேறு பல கோவில்களுக்கும், (பகவதி அம்மன், அப்படியே கன்னியாகுமரி அம்மன்) செல்ல அந்த ஒரு நாளில் முடிவு செய்திருந்ததால் விரைவாக சென்று தரிசித்து விட்டு வந்து விட்டோம். இந்த. தரிசனம் கிடைத்து இருபது வருடங்கள் மேலாகிறது. அது இப்போது நினைவிலும் அவ்வளவாக இல்லை.
/செயற்கை மின் விளக்குகளை அணைத்து, திரி விளக்கு வெளிச்சங்களில் மட்டும் ஐந்து நிமிடம் தரிசனம் செய்தேன். பெருமாளின் புன்னகையுடன் கூடிய மலர்ந்த முகம் கண்ணில் நிற்கிறது./
ஆஹா.. அருமையான தரிசன நினைவுகள். இதைப் படிக்கும் போது எனக்கே மெய் சிலிர்க்கிறது.
தங்களுக்கு, திருவனந்தபுரம், காஞ்சிபுரம் கோவில்களில் இந்த மாதிரி பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைத்தது பெருமாளின் அருள்தான். 🙏. அவன் அருளின்றி எதுவும் கிடைக்காது. எனக்கு இப்போது தற்செயலாக வாய்த்த ஸ்ரீ ரெங்கப் பெருமானின் திவ்ய தரிசனமும் மனதில் நிறைவாக தங்கியுள்ளது. தங்களது அருமையான கோவில் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீரெங்கப்பெருமான் - ஸ்ரீரங்கபட்டினமா? இல்லை திருவரங்கமா? இல்லை ஆதிரங்கமா?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதிருச்சியிலிருக்கும் ஸ்ரீரங்கந்தான். (திருவரங்கம்) ஊரிலிருந்து வந்திருந்த மகனுடன் கோவில் சென்று வந்ந விபரத்தை என் பதிவாக வெளியிட்டிருந்தேனே . நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிற்பக்கலைகளை அற்புதமாக படமெடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் தமிழரே...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குஅனைவருக்கும் வணக்கம். ஒரு பதிவில் (உதா. இன்றைய பதிவு) 20+ படங்கள் பகிர்கிறேன். திருவட்டாறு கோயிலுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்கள் சுமார் 50 இருக்கலாம், என்னிடம் நூறு படங்களுக்கு மேல் இருந்தபோதும். சில முக்கியமான படங்களில், துரதிருஷ்டவசமாக என்னையோ இல்லை மனைவியையோ வைத்து படம் எடுத்திருப்பேன். அவற்றைப் பகிர இயஙாமல் போய்விடும்.திருவட்டாறு கோயிலுக்கு நான் மூன்று நான்கு முறை சென்றும், ஒரு தடவைதான் வளைத்து வளைத்து ஏகப்பட்ட படங்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில கோயில் பயணம் மாலைக்குப் பிறகு அமைந்தால் எந்தப் படமும் சரியாக வராது. நாங்களே நெல்லை கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு 6 மணிக்குப் பிறகுதான் சென்றோம். அதுவே பகலில் அல்லது காலையில் கோயிருந்தால் தெளிவாக நிறையப்படங்கள் எடுத்திருக்க முடியும்.
பதிலளிநீக்குஎல்லாப் படங்களையும் பகிர்கிறேன் என்று ஒவ்வொரு படமாகப் போட்டு, நாலு பதிவாக வழங்குவதா அல்லது இந்த மாதிரி கொலாஜ் முறையில் அதிகபட்சம் இரண்டிரண்டு படங்களாகப் பகிர்வதா? பதிவுக்கு எத்தனை படங்கள் இருக்கலாம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதைக் கேட்பதன் காரணம், படங்கள் என்னிடம் இருப்பதுபோல எலெகென்டாக, பளிச் என்று முழு அழகும் புலப்படும்படி கொலாஜ் படத்தில் வரவில்லை.
ஒரு சில படங்கள் தவிர அனைத்தும் நான் அங்கு சென்றிருந்தபோது எடுத்தவை.
//துரதிருஷ்டவசமாக என்னையோ இல்லை மனைவியையோ வைத்து படம் எடுத்திருப்பேன். அவற்றைப் பகிர இயஙாமல் போய்விடும்//
நீக்குஆஅ இது எங்களுக்கு அதிர்ஸ்டம் எல்லோ:)... போடுங்கோ போடுங்கோ 50 என்ன, 100 போட்டாலும் நாங்க பார்க்க ரெடீஈஈஈஈஈஈஈ:))
படங்களும் பகிர்வும் அருமை அருமை
பதிலளிநீக்குதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் படங்கள் அருமை. கோவிலின் உட்பிரகாரம், நவக்கிரஹ மண்டபம் மரத்தில் செய்யப்பட்ட மேல் விதானம் அழகு.
பதிலளிநீக்குஅனைத்து சிற்பங்களும் நன்றாக இருக்கிறது.
கடைசி படமும் அருமை.
அனைத்து படங்களும் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.
நெல்லை கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்களும் மிக அழகானவை.
அந்த கோவிலும் பார்க்கவில்லை. நவதிருப்பதி பார்த்த போது போக நினைத்து நேரம் இல்லாமல் விடுபட்டு விட்டது.
நீங்கள் கிருஷ்ணாபுரம் மற்றும் கருங்குளம் பெருமாளையும் கண்டிப்பாக தரிசனம் செய்ய மறக்காதீர்கள். வெகுவிரைவில் நான்கு நாள் திருநெல்வேலி, மூன்று நாட்கள் கும்பகோணம் செல்லணும் என்று நினைத்திருக்கிறேன். மனைவியும் வரணும், அனுமதியும் தரணும்... அப்போது, கும்பகோணம் பெரியகடைவீதி அனைத்து ஆலயங்களுக்கும், பழையாறை சுற்றிய சிவன் கோவில்களுக்கும் (மனைவியுடன் கொஞ்சம் கஷ்டம்தான்) செல்ல நினைத்திருக்கிறேன். நெல்லையில் கிருஷ்ணாபுரம் போன்ற கோவில்களுக்கும் செல்லநினைத்திருக்கிறேன்
நீக்குநானும் செல்வராஜூ அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் சட்டங்களில் மாட்டாமல் தனித்தனியாக வெளியிடலாம்.
ஆதிகேசவரின் பொக்கிஷம் போனது போனதுதான் நவாபு தொப்பி உட்பட.
பொதுவே கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து துறையினரால் ஒதுக்கப்பட்ட மாவட்டம். பொது போக்குவரத்து வசதிகள் குறைவு. அதனால் தான் மக்கள் இது போன்ற வைணவ கோயில்களுக்கு வருவதும் குறைவு. மாவட்ட மக்கள் குமரி பகவதி, முப்பந்தல் இசக்கி, மேலாங்கோடு செண்பகவல்லி, மண்டைக்காடு பகவதி, போன்ற நாட்டார் தெய்வங்களின் கோயில்களில் கூடுவர்.
அடுத்த வாரமும் திருவட்டார் தானே?
Jayakumarv
திருவட்டாறு முடிந்துவிட்டது. அடுத்து என்ன அனுப்பியிருக்கேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் போரடிக்கும் வண்ணம் இருக்காது.
நீக்குபொதுவா மத ரீதியான கருத்துக்களை எழுத விருப்பம் இல்லை. அரசு, காரணமாகவே இதனைச் செய்கிறது. தாமிரவருணி புஷ்கரம் நிகழ்ச்சி நடந்தபோது, அதனை நடத்தவிடக்கூடாது என்று நிறைய அழுத்தம் அரசுக்கு வந்தது (மக்கள் கோவில், இந்து விழா என்றெல்லாம் கூடும் வழக்கம் ஒழியவேண்டும் என்ற எண்ணம்தான்). அரசும் முடிந்த அளவு தன் பங்கைக் குறைத்துக்கொண்டது. சமீபத்தில் படித்திருப்பீர்களே.. ஆயிரம் பேருந்துகள், வேளாங்கண்ணித் திருவிழாவுக்காக அரசு ஏற்பாடு செய்ததை.
நீக்குபடங்களில் நீங்களோ அல்லது உறவினரோ இருப்பின் தினமலர் அந்துமணி போன்று முகத்துக்கு மாஸ்க் ஒன்று போட்டு வெளியிடலாம்! அப்படி வெளியிட்டால் அது மற்றவர்களின் கவனத்தை கவரும்
பதிலளிநீக்குJayakumar
அப்படிச் செய்ய முயல்கிறேன்.
நீக்குஆதிகேசவ பெருமாள் கோவில் சிலைகள் அழகு. நன்றாக விபரித்து தந்துள்ளீர்கள் . நேரடியாக செய்ததுபோல் இருந்தது.
பதிலளிநீக்குபடங்களும் சிறப்பு.
நன்றி மாதேவி.
நீக்குஆவ்வ்வ் இது இன்றுதான் தற்செயலாக என் கண்ணில பட்டது.. இது எப்ப தொடக்கம் நடக்குதாக்கும்.. அருமையான தொடர், ஆனா சுத்த மரக்கறித் தொடர்போல இருக்கும்போல ஹா ஹா ஹா ஐ மீன்.. இது வேற மீன் ஹையோ டங்கில என்னமோ வருது கேதார கெளரி விரத நேரத்தில:))... சைவத் தொடர் மட்டும்தானோ இல்லை, ஊர்களும் வரப்போகுது.. இனி வர முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்றைக்குத்தான் பார்க்கிறேன் அதிரா.
நீக்குஒரே மாதிரி இருக்காமல் கலந்துதர முயற்சிக்கிறேன். உங்களையும் ஏஞ்சலினையும் பார்க்கவே முடிவதில்லை. பசங்களை ஹாஸ்டலுக்கு அனுப்பினபிறகு எப்படி பிசியாயிட்டீங்க?
//பசங்களை ஹாஸ்டலுக்கு அனுப்பினபிறகு எப்படி பிசியாயிட்டீங்க?// சின்னவருக்காகவே யுனிக்கு கிட்டவா புது வீடு வாங்கி வந்திட்டோம்:)).. ஆற்றங்கரை வீடு இப்போ இல்லையாக்கும்:)).. அதனால புது வீட்டு அலங்கரிப்பு கார்டின் என நான் பிஸியாகிட்டேனாக்கும், அதை விட இந்த வருடம் மட்டும் 3 தடவைகள் கனடாப் பயணம்.. கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியவில்லை, இடையில் இந்தியா.. அப்போ எப்படி நேரம் கிடைக்கும்:))..
நீக்குஇப்படி இடம் மாற்றி, கனடாப பயணம் மேற்கொண்டு, போதாக்குறைக்கு இந்தியப் பயணம். ... நூறு பதிவுகள் இருநூறு காணொளிகள் ரெடிபண்ணியிருப்பீங்களே
நீக்குசிற்பங்களின் அழகு சொல்லி வேலை இல்லை, அந்தக் காலத்தில என்ன மாதிரி வடிவமைச்சிருக்கிறார்கள்.. படங்களில் பார்ப்பதைவிட, நேரில் எனில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம், இப்படித்தான் ஆக்ரா போய் சாஜகானின் கோட்டையைப் பார்த்துப் பிரமிச்சு, மும்தாஜ் வாழ்ந்த வீட்டு ஜன்னலில் நானும் நின்று படமெடுத்தேனாக்கும் ஹா ஹா ஹா நாங்களும் அஜந்தா ஓவியங்கள் பார்க்கும் ஐடியா இருக்கு, அந்தப் பக்கம் முடிச்சு பின்பு தமிழ் நாட்டுக்குள் வரலாம்:)).
பதிலளிநீக்குஎன்ன மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதில் ? இல்லாததால் அர்த்தமே மாறுகிறது ஹிஹிஹி
நீக்குஆக்ரால மும்தாஜ் வீட்டு சன்னலா? அது ஷாஜஹானின் வீட்டுச் சிறையாயிற்றே. அதுவும் சில ஞாயிறு படங்களில் வரும். வாருங்கள்
நீக்குஆக்ரா பேதா இனிப்பு சாப்டீங்களா?
நீக்கு//என்ன மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதில் ? இல்லாததால் அர்த்தமே மாறுகிறது ஹிஹிஹி//
நீக்குதிரும்படியும் ஆரம்பத்திலிருந்தோ?:), டமில் வகுப்பை ஆரம்பிக்கட்டோ?:) ஹையோ ஹையோ..:)) இந்த நேரம் பார்த்து அஞ்சுவும் பிஸி:))..
“என்ன மாதிரி”.. என்றால் எங்கட பாசையில் அது கேள்வி இல்லையாக்கும்:)).. “அந்த மாதிரி சூப்பரா இருக்கே”.. என்பதைத்தான் நாங்க ..”ஆஹா என்ன அழகான சிலைகள்.. என்ன ஒரு கட்டிடம்...” இப்பூடி எல்லாம் சொல்லுவமாக்கும்:)).. கெளரி விரதமும் அதுவுமா ஒரு டமில்ப் புரொபிஸருக்கே வகுப்பெடுக்க வைக்கிறீங்களே சிவனே:))
//நெல்லைத் தமிழன்5 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 9:47
நீக்குஆக்ரால மும்தாஜ் வீட்டு சன்னலா? அது ஷாஜஹானின் வீட்டுச் சிறையாயிற்றே.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்ப பார்த்தாலும் ஒரு சுவீட் 16 பிள்ளையை[என்னைச் சொன்னேன்:)] மிரட்டி வைப்பதே தொழிலாப் போச்ச்சு:))..
பாவம் சாஜகான், மும்தாஜ் ஐ மரி பண்ணி என்னத்தைக் கண்டார்:)).. 19 வருட வாழ்க்கையாம் அவவோடு இருந்த காலம், ஆனா 14 பிள்ளைகளாம்.. அப்போ மனிசன் 5 வருசம்தானே சந்தோசமாக இருந்திருப்பார்... என்ன கொடுமை, ஆனா உண்மையில் முதலில் ஆக்ரா போர்ட் பார்க்க ரயேட் எனத்தான் நினைச்சோம், பின்பு உள்ளே போனால் சொல்லி வேலையில்லை.. என்னா ஒரு பிரமிப்பு.. மும்தாஜ்ஜுக்காக அப்பவே மனிசன் பெரிய சுவிம்மிங் பூல் கட்டியிருக்கிறார் அதுவும் ஜக்குசி வேலைப்பாட்டுடன், மாபிள் கற்களைக் கொண்டு..
நீங்க போடுங்கோ வருகிறேன்.
///ஆக்ரா பேதா இனிப்பு சாப்டீங்களா?//
நீக்குஇல்லை, திரும்பும் பக்கமெல்லாம் அடுக்கி வைத்திருந்தார்கள், இனிப்பு என்பதால் யாருக்கும் பெரிசாக அக்கறை வரவில்லை, வாங்காமல் விட்டு விட்டோம்.. வாங்கிப் பார்த்திருக்கலாம்.. ரயேட் ஆகிட்டால் எதுவும் வேண்டாம் ஹோட்டலுக்குப் போயிடலாம் எனத்தான் மனம் சொல்லும் அந்நேரத்தில்.
பத்தொன்பது வருஷமா? சிமியோன் டீச்சர் மாதிரி வரலாற்றுக்கு யாரோ!!! ஷாஜஹான், கல்யாணமாகி 13 வருஷத்துல 14வது பிரசவம் போது மும்தாஜ் இறந்தார். அது சரி,, மும்தாஜ் அடுத்தவர் மனைவி என்பது தெரியுமா? அவ்வளவு காதல் அவருக்கு
நீக்குஆஆ இதென்ன புதுசு புதுசாச் சொல்றீங்க, அங்கும் ஒரு ஹைட் வந்தார் எங்களோடு, அவர்தான் அப்படிச் சொன்னார்.. இதுபற்றி ஒரு போஸ்ட் எழுதப்போறேன்ன் இதோ பூஸ் ஒன்று புறப்படுதே:))
நீக்குபடங்கள் நன்றாக எடுத்திருக்கிறீங்கள், இன்னும் கொஞ்சம் வெளிச்ச பக்கம் கவனிச்சு எடுத்தால் நன்றாக இருக்கும். சிலைகள் நன்றாக இருக்குது, வெளிச் சுவர்கள் கொஞ்சம் பழுதாகிறதுபோல, இவற்றைப் பராமரிக்க, புனரமைக்க நிறைய செலவாகும்.
பதிலளிநீக்குஏகப்பட்ட கோவில்கள், சிற்பங்கள் என் இருப்பதாலும் மக்களிடம் பெருமிதம் குறைவு என்பதாலும் அரசின் பாராமுகத்தாலும் பராமரிப்பு குறைவு
நீக்குநெல்லைத்தமிழர் சொல்வது சரியே! திருவிழாக்கள்/பண்டிகைகள்/தேர்த்திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அரசுப் போக்குவரத்து வசதிகள் செய்வது மிகக் குறைவே! அதிலும் இந்த அரசிடம் என்ன கெஞ்சினாலும் விடியாது அல்லவா! :(
பதிலளிநீக்குஅடுத்து இப்போ ஆரம்பிச்சுடுவாங்க. தீபாவளிக்குப்பட்டாசு வேண்டாம், மத்தாப்பு வேண்டாம்னு! :(
பதிலளிநீக்கு