ஞாயிறு, 23 அக்டோபர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்


(006) கும்பகோணம் – இராமஸ்வாமி கோவில் – பகுதி 1

எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் எங்கள் பிளாக் வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

சென்ற ஞாயிறு பதிவின் தொடர்ச்சிதான் இன்றும் வந்திருக்கவேண்டும். ஆனால், தீபாவளி என்பதால் 'கோவில் பதிவு ஒன்று வெளியிடலாமா' என்று கௌதமன் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். சரி, அனுப்புங்கள் என்று சொன்னதால் இந்தப் பதிவை அனுப்புகிறேன்.  இந்த நாளில், இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாகுக.

கும்பகோணத்தில் இருக்கும் புகழ்பெற்ற கோவில் இராமஸ்வாமி கோவில். இதைத் தென்னக அயோத்தி என்று அழைக்கின்றனர்.  கும்பகோணத்தில், வைணவர்களுக்கான கோவில்களில் முக்கியமானது ஆதி வராஹர் கோவில், சார்ங்கபாணி கோவில் (ஆராவமுதன் கோவில்), சக்ரபாணி கோவில், இராமஸ்வாமி கோவில் மற்றும் திருமழிசையாழ்வார் திருவரசு. இது தவிர, பெரிய கடைவீதியில், ஆஞ்சநேயர் கோவில், தசாவதார கோவில், ராஜகோபாலஸ்வாமி கோவில் என்று நிறைய இருக்கிறது.

இது தவிர, சைவர்களுக்கான கோவில்கள் ஏராளமாக இருக்கிறது. நான் இங்குக் குறிப்பிடுவது, கும்பகோணம் நகரம் மட்டும்தான். சுற்றுவட்டாரத்தில் ஏகப்பட்ட கோவில்கள், வைணவ திவ்யதேசங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், அரசியல்வாதிகள் சென்று பிரபலப்படுத்திய இடங்கள் என்று நிறைய இருக்கின்றன. “நான் சென்ற கோவில்கள்” என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த எனக்கு, நிறைய கோவில்களில் ‘சிற்பங்கள்’ குறிப்பிடும்படியாக இல்லை, கோவில் மூர்த்தங்கள் மற்றும் சன்னிதிகள்தாம் இருக்கின்றன என்பதை நான் எடுத்த புகைப்படங்கள் நினைவுபடுத்தும். எனக்கோ, கோவில் தலவரலாறு, பாடல் பெற்ற தலமாக இருந்தால் அதற்குரிய ஓர் பாசுரம் என்று எழுதுவதற்கு ஆசைதான், ஆனால் அதற்கான தளம் இதுவல்ல. மற்றும் ஆன்மீகத் தலங்களின் புராணக் கதைகளிலும் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தஞ்சைப் பெரிய கோயிலில் நடக்கும்போது, சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும்போது, கல்வெட்டுகளைப் பார்க்கும்போது, சிலர் சொல்லும் செய்திகளைக் கேட்கும்போது, இந்த இடத்தில்தான் ராஜராஜசோழன் நடந்து நிர்வாகம் செய்திருக்கிறான், இங்கு கருவூர்த்தேவர் மற்றும் வரலாற்றுப் பாத்திரங்கள் உயிருடன் நடமாடிய இடம் என்ற எண்ணம் வந்து சிலிர்க்கும். அதே நேரத்தில், இங்குதான் மது கைடபர்கள் தவம் புரிந்தார்கள், இந்தக் கோவிலில் நாராயணனை அர்ஜுனன் பிரதிட்டை செய்தான் என்றெல்லாம் படிக்கும்போதோ கேட்கும்போதோ கொஞ்சம் ஒன்ற இயலவில்லை. இது வெறும் நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல. நம் தாத்தா பாட்டி என்னும்போது நமக்கு இருக்கும் நெருக்கம், பூட்டன்/பூட்டி அவர்கள் சம்பந்தமான கதைகள் போன்றவற்றில், நெருக்கம் இருக்காது. அதுவும், இன்னும் முந்தைக்கும் முந்தைய தலைமுறை என்றால், மனதளவில் உணர்வு பூர்வமான நெருக்கம் இருக்காது. அதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு எனும்போது நம் நம்பிக்கையும் குறைகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

நான் என் சிறுவயதில் பார்த்தது, நான் வாழ்ந்த விதம், அப்போதைய காலகட்டம் போன்றவற்றையே எனக்கு அடுத்த தலைமுறையால் கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கும் இரண்டு தலைமுறைக்கு முன்பாக எப்படி என் பூர்வீக கிராமத்தில் வாழ்ந்தார்கள் என்பதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. காலம் பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்ல, நம் நம்பிக்கையின், நெருக்கத்தின் அளவும் குறைகிறது என்றே நினைக்கிறேன்.

இன்றைய பதிவிலும் அதைத் தொடர்ந்த அடுத்த பதிவிலும் இராமஸ்வாமி கோவிலின் சிற்பங்கள் படங்கள்தாம். ஒவ்வொரு சிற்பமும் தூண்களில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். செதுக்கும்போது இவற்றில் சிறிது தவறு செய்திருந்தாலும் தூணின் முழு அழகும் கெட்டுவிடும்.

இந்தக் கோவில் 16ம் நூற்றாண்டில், தஞ்சை அச்சுத நாயக்கரால் கட்டப்பட்ட து. (தஞ்சை அரசராக இவர் 1614லிலிருந்து 26 வருடங்கள் இருந்தார்). அச்சுத நாயக்கர் ராம பக்தர். தாராசுரத்தில் ஒரு திருக்குளத்தைத் தோண்டும்போது கிடைத்த இராமர், சீதை விக்ரஹங்களை வைத்து இராமருக்கு இந்தக் கோவில் கட்டினார். கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டவர், அவருடைய முதலமைச்சரான கோவிந்த தீக்ஷிதர். அவர்தான், இந்தக் கோவிலுக்கும் சக்ரபாணி கோவிலுக்கும் இடையில் பெரிய கடைவீதியை நிர்மாணித்தவர்.




கர்பக்ரஹத்தில், ராமர், சீதை இருவரும் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர் (கல்யாண திருக்கோலம்). அவர்களுடன், சத்ருக் ன ன், குடை பிடித்த நிலையில் பரதன் மற்றும் லக்ஷ்மணன் காட்சி தருகின்றனர். ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில், வீணை வாசிக்கும் நிலையில் காட்சி தருகிறார். அவர் இராம கதையை வாசிப்பதாக தரிசனம் தருகிறார். 






இராமஸ்வாமி கோவிலின் மீதி சிற்பங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

 = = = =

கீழே உள்ளது தஞ்சை அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த நடராஜர் பஞ்சலோகச் சிலைகள். 

உலோகத்தில் சிலைகள் செய்யும் திறன் தமிழகத்தில் பலப் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றுவந்துள்ளது என்பதற்கு ஆதாரமானவை. அவற்றையும் இத்திருநாளில் கண்டுகளிப்போம். 

ஆறு நடராஜர் சிலைகளை (அந்த அருங்காட்சியகத்தில் இருந்த பல சிலைகளில் சில) கீழே காணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். அதிலும் தாழ்சடையானைச் சடையில்லாமல் செய்த சிற்பமும், முக்கால் சந்திர வட்டப் பிரபையில் செய்திருந்த திருக்கோலமும் என்னை மிகவும் கவர்ந்தன.




இந்த நாள் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்.

(அடுத்த வாரம் : கும்பகோணம் இராமஸ்வாமி கோவில் - பகுதி இரண்டு.) 

= = = =  =

 

102 கருத்துகள்:

  1. தீபாவளியையொட்டி வரும் ஞாயிறு. கோயில் பதிவை வெளியிட்ட எ.பிக்கு நன்றி.

    ஒரு செட் படங்கள் திரும்ப வந்திருக்கின்றன.

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் கவனித்தேன். சரி செய்துவிட்டேன். நன்றி.

      நீக்கு
  2. போட்டோக்கள் நன்றாக உள்ளன. என்றாலும் இரண்டு இரண்டாக கொலாஜ் செய்யாமல் தனித்தனியாக போட்டால் பெரிது படுத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும்.  பதிவு நீளமாக இருக்கும் என்று கருத வேண்டாம்.  போட்டோ ஆனதால் ஒரு வரி படிக்கும் நேரம்தான்  ஒரு போட்டோ பார்க்கும் நேரம் ஆக  இருக்கும். அடுத்த பதிவாவது அப்படி செய்து பார்க்கலாம் என்பது என் வேண்டுகோள்.  

    இங்கு கேரளத்தில் கும்பகோணம் என்ற வார்த்தை போபோர்ஸ் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்படும். 
    உதாரணம். லாவ்லின் கும்பகோணம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு நன்றி. கும்பகோணம் :)))

      நீக்கு
    2. நன்றி ஜெயகுமார் சார். பதிவு ரொம்ப நீளமாகத் தெரியுமே என்ற தயக்கம் தான். இருவாரங்களில், ஒரு பதிவை நீங்கள் கூறியுள்ளதுபோலச் செய்துபார்க்கிறேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. கலைப் பொக்கிஷங்களைக் கண் முன் காட்டிய பதிவு.. இனிய தரிசனம் ..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார்... ஆயிரம் முறை கும்பகோணம் வந்தாலும், அங்கு பார்ப்பதற்கு ஏகப்பட்ட இடங்கள் உண்டு.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. கும்பகோணம் ராமசாமி கோயிலில் படங்கள் எடுக்கவென்றே போனோம். ஆனால் உள்ளே எல்லாம் எடுக்கவிடவில்லை. ஒருவேளை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டுமே எடுக்கலாமோ என்னமோ! ஆனால் ரகசியமாகச் சுவரில் வரைந்திருந்த ஓவியங்களை எடுத்துச் சிலவற்றைப் பகிர்ந்திருக்கேன். அதுவும் ரொம்ப நாட்கள்/வருடங்கள் முன்ன்ன்னாடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹாஹா கீதாக்கா எனக்குமே இதேதான்...!!!!! எடுக்க அனுமதி கிடைத்ததே இல்லை!!!!

      கீதா

      நீக்கு
    2. சில நேரங்களில் எடுக்கவிடமாட்டார்கள். ஒரு சமயம் 100 ரூபாய் கொடுத்திருக்கிறேன். முகராசியும் சில நேரங்களில் உதவும்.

      அது இருக்கட்டும்... சிலருடைய முகராசிக்கு ஏகப்பட்ட பெண் நண்பர்கள் அமையும். சிலருக்கு அப்படி அமையாது. காரணம் என்னவாக இருக்கும்?

      நீக்கு
    3. ஆ ஆ என் கருத்து எங்கே எங்கே....

      கீதா

      நீக்கு
    4. தளத்தில் நிறைய கருத்து காணாமல் போகிறது. வெறுப்பா இருக்கு

      நீக்கு
    5. //கோயிலில் படங்கள் எடுக்கவென்றே போனோம். ஆனால் உள்ளே எல்லாம் எடுக்கவிடவில்லை.// - என்னுடைய அனுபவம்... யாரிடமும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அடுத்தது, சிலை திருட வந்தவர்களைப்போல ரொம்பவே தயங்கக்கூடாது. சட் சட் என்று போட்டோக்கள் எடுத்துவிடவேண்டும். யாரேனும் ஆட்சேபித்தால், ஓ..சாரி... நான் அந்த போர்டைப் பார்க்கவில்லை என்று பம்மிவிடவேண்டும்.

      நீக்கு
    6. ஹா...  ஹா..  ஹா...   நானும் அப்படிதான்.  ஆனால் அப்படி மதுரையில் எடுத்தபோது கேமிராவை வாங்கிக்கொண்டு ஆபீசுக்குள் சென்று விட்டார்கள்!  திரும்ப வாங்குவதற்குள்...

      நீக்கு
    7. திருநாவாய் என்ற கேரள திவ்யதேசக் கோவிலில், என் செல்ஃபோனிலிருந்து படங்களை அழிக்கச் சொன்னார்கள். அழித்தேன். பிறகு வீட்டிற்கு வந்து எடுத்த படங்களை மீட்டுவிட்டேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. கீதாக்கா நீங்க கொடுத்த சுட்டிக்குப் போனால் பதிவு வருது...கீழ யாருக்கும் தெரியாம எடுத்தேன்னு சொல்லி போட்டிருக்கீங்கல்லியா ராமசாமி கோயில் சித்திரங்கள்னு அதை க்ளிக் பண்ணினா எரர் நு வருது 404 ந்னு வருது வாசிக்கலாம் ஆனா சித்திரங்கள் பார்க்க முடியலை

      கீதா

      நீக்கு
    2. அது பழைய மிக மிகப் பழைய சுட்டி என்பதால்வேலை செய்யலை போல இருக்கு தி/கீதா! எதிலே கொடுத்திருந்தேன் என்பதைத் தேடிப் பார்க்கணும். 12/13 வருஷங்கள் ஆகின்றனவே!

      நீக்கு
    3. படங்கள் மாத்திரம் வரவில்லை. மற்றபடி பதிவைப் படித்தேன் கீசா மேடம்

      நீக்கு
  9. நடந்தவைகளை பற்றி படித்து புல்லரித்துப் போகும்போது வரும் நம்பிக்கைகளை பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள்.  எனக்கும் அப்படித் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகப் பதிவுகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நான் படிக்காமல் கடந்துவிடுவேன். சில நம்பிக்கைகள், பல கோவில்களுக்கும் சொல்வார்கள் (பசு ஒரு இடத்தில் வந்து தானே பால் சொரிந்தது, ஒரு இடத்தைத் தோண்டும்போது கடப்பாறையில் ரத்தம் தெரித்தது என்றெல்லாம்). மனதில் நினைப்பதை வெளிப்படையாக எழுத நான் தயங்குவதில்லை.

      நீக்கு
    2. டிட்டோ டிட்டோ நெல்லை.....மீக்கும் இதெல்லாம் மனம் ஏற்பதில்லை.....எனவே கடந்து விடுவேன்....அன்னவரம் பதிவில் கூட, வந்த உறவினர் பெரியவர் அவர் சத்யநாராயணா பூஜை எலலம் செய்வதால் அந்தக் கோயில் பற்றி மலை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்......நான் கேள்விகள் கேட்க...அவர் பாவம்...அப்புறம் உனக்கு நம்பிக்கையே கிடையாதுன்னு சொல்லிக் கொண்டே ஆனால் கதைகள் சொல்லிக் கொண்டே வந்தார்!!!!!! பாவம்!!! அவருக்கு அது ஒரு ஆசுவாசம்....

      கீதா

      நீக்கு
    3. ஹைதிராபாத் கோல்கொண்டா கோட்டையின் உச்சியில், பக்த ராமதாசரைச் சிறைவைத்த இடமும், அவர் உருவாக்கிய கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன (12 வருடங்கள் அங்கு சிறையிடப்பட்டிருந்தார்). அவையெல்லாம் என்னைச் சிலிர்க்கவைக்கும். ரொம்பப் பழங்காலக் கதைகள்தாம் (புராணக் கதைகள்தாம்) என்னை ரொம்பவே கவர்வதில்லை.

      நீக்கு
  10. அருமையான பதிவு.
    முதல் படம் நீங்கள் வரைந்த படமா? மிக நன்றாக இருக்கிறது.

    இராமஸ்வாமி கோயில் நிறைய தடவை போய் இருக்கிறோம்.
    அங்கு உள்ள தூணில் உள்ள சிற்பங்கள் மிக அருமையாக இருக்கும்.சுவர் ஓவியங்களையும் பகிர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அருங்காட்சியகத்தில் இருந்த நடராஜர் பஞ்சலோகச் சிலைகள் எல்லாம் அருமை. மகாவிஷ்ணு படமும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி நல் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நன்றி கோமதி அரசு மேடம்... முதல் படம் 2004ல் நான் வரைந்திருக்கிறேன். மறந்தும்விட்டேன். என் பெண், சமீபத்தில் ஒரு டிராயிங் நோட்டை எனக்குக் கொண்டுவந்துகொடுத்தாள், நான் ஒரு படம் வரையணும் என்று சொன்னதன் பேரில். அதில் இந்தப் படம் இருந்தது. அந்த நோட்டில், அவளையும், என் பையனையும் புகைப்படத்தைப் பார்த்து வரைய முயன்றிருக்கிறேன் (அப்போது). பெண் போட்டோவைப் பார்த்தால் என் மனைவியைப் பார்த்ததுபோலவே இருந்தது. பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது பகிர்கிறேன்.

      தூணின் புடைப்புச் சிற்பங்களின் மீது, எண்ணெய் தடவி, பூக்களிட்டு, அதையும் தெய்வமாக்குவது சரியா? (இன்றைக்குப் பின்னூட்டத்தில் கேட்கும் கேள்விகள் அனைத்தும் புதனுக்கானவை. கேஜிஜி சார் நோட் பண்ணிக்கோங்க).

      தஞ்சை அருங்காட்சியகம் ரொம்ப அருமையாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமா? நாட்டியமாடும் கிருஷ்ணர் சிலைக்கும் சம்பந்தர்/மாணிக்கவாசகர்(?) சிற்பத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம்.

      நீக்கு
    3. //தூணின் புடைப்புச் சிற்பங்களின் மீது, எண்ணெய் தடவி, பூக்களிட்டு, அதையும் தெய்வமாக்குவது சரியா?//

      அதையும் தெய்வமாக்குவது என்பதைத் தவிர்த்து.....தூணில் இருக்கும் படைப்புச் சிற்பங்களின் மீது எண்ணை தடவி இப்படிச் செய்வது என் மனம் ஒப்புவதில்லை...அதையும் தெய்வமாக வணங்குவதில் என்ன இருக்கு ? தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எங்கு நீக்கமற நிறைந்திருக்கும் சக்தி!! ஆனால் எண்ணைவிட்டு அங்கெல்லாம் எண்ணைய் பிசுக்காக்கி, தீபம் ஏற்றி அது ஏனோ எனக்கும் சங்கட்மாக இருக்கும்

      கீதா

      நீக்கு
    4. இதுல ஒரு தெக்கினிக்கி இருக்கு. சிலைகளைச் சின்னாபின்னமாக்க மாட்டார்கள். அதையே பிரதக்ஷணம் வருவதால், மற்றவர்களும் சிலையைச் சேதப்படுத்தாமல் சிலை பத்திரமாக இருக்கும்.

      நீக்கு
    5. தூணின் புடைப்புச் சிற்பங்களின் மீது, எண்ணெய் தடவி, பூக்களிட்டு, அதையும் தெய்வமாக்குவது சரியா?//

      மக்கள் அப்படி செய்து அதன் அழகை கெடுக்கிறார்கள். அப்படி செய்ய கூடாது. தூணில் இருக்கும் சிறபங்களுக்கு பூஜை கூடாது என்றாலும் சந்தனம், குங்குமம் வைத்து விளக்கு கீழே வைத்து அந்த சிற்பங்கள் மேல் கரிபிடிக்கும் படி செய்து விடுகிறார்கள்.
      சம்பந்தர் தான் காளிங்க நர்த்தனர் சிலையில் உள்ள கண்ணன் போல இருப்பார்.

      நீக்கு
    6. //நாட்டியமாடும் கிருஷ்ணர் சிலைக்கும் சம்பந்தர்/மாணிக்கவாசகர்(?) சிற்பத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம்.//
      சம்பந்தர் நாட்டியம் ஆடும் கிருஷ்ணர் போல் இருக்கிறார் என்று திட்டை கோயில் சம்பந்தர் பதிவு போட்டு இருந்தேன். தஞ்சை அருகாட்சியகம் பார்த்து இருக்கிறேன். நிறைய அருகாட்சியகத்தில் இந்த சிலைகள் இருக்கும். சம்பந்தர் தலை கொண்டை கண்ணன் கொண்டை போல இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தைகளை கண்னன் போல அலங்கரிப்பார்கள் இல்லையா? அதுதான் சிற்பிகள் அப்படி சிலைகளை செய்து இருக்கிறார்கள்.

      நீக்கு
    7. நன்றி கோமதி அரசு மேடம். அருங்காட்சியகத்தில் இருந்தவர், என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்து இதனைத் தெரிவித்தார். நிறைய பேசிக்கொண்டிருந்தார்.

      //கரி பிடிக்கும்படி// - கோவில் தீபத்திற்கு எண்ணெய் வார்ப்பது புண்ணியம் என்ற பொருளில் கோவிலில் விளக்கேற்றவேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள். இதனை அனர்த்தமாக்கிக்கொண்டு, சின்னச் சின்னச் சட்டியில் கிடைத்த இடத்திலெல்லாம் நெய்விளக்கு ஏற்றுகிறேன் என்று மோசமான எண்ணெய் விளக்குகளை ஏற்றி கோவிலுக்கு ஆபத்தை உண்டாக்குகிறார்கள். அதனால் இப்போதெல்லாம், பெரிய ட்ரே ஒன்றை வைத்து, அதில் விளக்குகளை ஏற்றுங்கள் என்று சொல்கின்றனர்.

      நீக்கு
    8. இதற்குப் பதிலளித்திருந்தேன். காணவில்லை.

      கோவிலை, அதன் சிற்பங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் கடமைதான். ஆங்காங்கே நெய்விளக்கு என்ற பெயரில் வெளியில் கிடைக்கும் 2 ரூபாய் விளக்கை ஏற்றுவதில் எனக்குச் சம்மதமில்லை (நான் சொல்வது எளியவர்கள் செய்வதை அல்ல. அவர்கள் பக்தி பெரிது. பொதுவாக அனைத்து பக்தர்களும் இந்த மாதிரி விளக்கேற்றுவது). முடிந்தால், கோயில் விளக்கு ஏற்ற, நல்லெண்ணெய் அல்லது நெய், நல்ல பிராண்டு வாங்கிக் கொடுக்கலாம்.

      சமீபத்தில் ஒரு பிராண்ட் நெய் மெட்ரோ சூப்பர்மார்க்கெட்டில் வாங்கினேன் (வீட்டில் வெண்ணெய் காய்ச்சி நெய் எடுப்பதற்குப் பதிலாக). எனக்குத் திருப்தியே இல்லை. வனஸ்பதியோ அல்லது வேறு ஏதோ கலந்திருப்பார்கள் என்றே தோன்றியது. உடனுக்குடன் உறைந்துவிட்டது. (அவ்வளவு குளிர் இல்லாதபோதும்)

      நீக்கு
    9. நாங்க வெளியில் வாங்கினால் வெண்ணெய் மட்டும் எப்போதானும். முழுக்க முழுக்க வீட்டில் கடைந்து எடுக்கும் வெண்ணெயே தான் நான் கல்யாணம் ஆனதில் இருந்து இன்று வரை. இந்த தீபாவளிக்குப் பொட்டுக்கடலை உருண்டைக்குக் கூட வீட்டு வெண்ணெயில் காய்ச்சின நெய்தான்.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கமலா ஹரிஹரன் மேடம். பட்சணங்கள் செய்துவிட்டீர்களா?

      நீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. உங்கள் எழுத்தின் நடை கவர்கிறது. அருமையான கோவில் படங்கள். அனைத்துப் படங்களும் நன்றாக தெளிவாக வந்துள்ளன. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன். பஞ்சலோக சிவபெருமானின் சிலைகளும் அழகாக உள்ளது. இறுதியில் மஹாவிஷ்ணுவின் சிலையும் அழகு. இரு தெய்வங்களை ஒருங்கிணைந்து கொண்டு வந்து இன்றைய நாளை சிறப்பாக்கியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. தீபாவளி மலரில் ஆன்மீக கட்டுரை, படங்கள் ஓவியங்கள் இடம் பெறும் அது போல இருக்கிறது நெல்லைத் தமிழன் உங்கள் பகிர்வு.
    எங்கள் ப்ளாக் தீபாவளி மலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எனக்குத் தோன்றவில்லை கோமதி அரசு மேடம். பெரிய பல்சுவைப் பதிவே எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது (ஸ்ரீராம் மாதிரி எழுத முடியாவிட்டாலும், பல்வேறு டாபிக்குகளில் படங்கள் சேர்த்திருக்கலாம்)

      நீக்கு
    2. நான் தீபாவளி மலர் பகிர்வு போட்டு இருக்கிறேன் நெல்லை. அதில் இப்படி ஓவியம், கோயில் சிலைகள், சுவாமிபடம், கோயில் கட்டுரை எல்லாம் இருக்கும் இல்லையா அதை பகிர்ந்து இருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்தவுடன் தீபாவளி மலர் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    3. அதைப் பார்த்தேன். ரசித்தேன். நல்லா compile பண்ணியிருக்கீங்க கோமதி அரசு மேடம்

      நீக்கு
  14. அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் மனோ சாமிநாதன் மேடம். எங்கள் வளாகத்தில் வெடி வெடிக்க தனி இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். பால்கனியில் மத்தாப்பு கொளுத்தலாம் என்று நினைத்துள்ளேன். வேறு சக்கரம், வெடிவகைகள் வாங்கவில்லை.

      நீக்கு
  15. முதலில் உள்ள ஓவியம் மிக அழகு!
    ஒவியமும் சிற்பங்களின் அழகும் தகவல்களின் சிறப்பும் மீண்டும் ஒரு முறை குடந்தை இராமஸ்வாமி கோவிலுக்குச் செல்ல தூண்டுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. கும்பகோணத்தில் உள்ள கோவில்களுக்கு எத்தனை முறை சென்றாலும் அலுக்காது.

      நீக்கு
    2. நன்றி மனோ சாமிநாதன் மேடம். கும்பகோணம் எவ்வளவு தடவை போனாலும் அலுப்பதில்லை

      நீக்கு
    3. நான் அறிந்தவரை கும்பகோணத்தை விடக் காஞ்சியில் கோயில்கள் அதிகம்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. உண்மை. காஞ்சீபுரம் ஒரு காலத்தில் பெரிய நகரம். விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி, சைவ காஞ்சி என்று பல்வேறு பகுதிகளாக இருந்த, பல கிராமங்களை உள்ளடக்கிய நகரம். மேற்கு மாம்பலமே முன் காலத்தில் சில பல கிராமங்களை உள்ளடக்கியது. காஞ்சீபுரத்தில் 12 திவ்யதேசம், பலப் பல கோவில்கள் இருக்கும் நகரம். ஒவ்வொரு கோயிலுமே மிகப் பெரியவை. பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது. கும்பகோணத்திலும் கோயில்கள் அதிகம்.

      நீக்கு
  16. நம் தாத்தா பாட்டி என்னும்போது நமக்கு இருக்கும் நெருக்கம், பூட்டன்/பூட்டி அவர்கள் சம்பந்தமான கதைகள் போன்றவற்றில், நெருக்கம் இருக்காது. அதுவும், இன்னும் முந்தைக்கும் முந்தைய தலைமுறை என்றால், மனதளவில் உணர்வு பூர்வமான நெருக்கம் இருக்காது. அதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு எனும்போது நம் நம்பிக்கையும் குறைகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    நான் என் சிறுவயதில் பார்த்தது, நான் வாழ்ந்த விதம், அப்போதைய காலகட்டம் போன்றவற்றையே எனக்கு அடுத்த தலைமுறையால் கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கும் இரண்டு தலைமுறைக்கு முன்பாக எப்படி என் பூர்வீக கிராமத்தில் வாழ்ந்தார்கள் என்பதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. காலம் பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்ல, நம் நம்பிக்கையின், நெருக்கத்தின் அளவும் குறைகிறது என்றே நினைக்கிறேன்.//

    நெல்லை இதை அப்படியே நான் டிட்டோ செய்கிறேன்....என் எண்ணம் இப்படியேதான்......

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை/faith என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் மனைவி தீவிர நம்பிக்கை உள்ளவள்.

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை வேறுபடும்.....

      என் தங்கைகளில் இரண்டு பேர் ரொம்ப நம்பிக்கை உடையவர்கள்.

      கீதா

      நீக்கு
    3. மனைவி சொல்வது... டாக்டர் மீது அல்லது மருந்தின் மீது முழு நம்பிக்கை இல்லை என்றால் எப்படிக் குணமாகும்? தெய்வம், அவரை நோக்கிப் போகும் பாதையில் முழு நம்பிக்கை வைத்துத்தானே செல்லணும்? மனம் அலைபாயலாமா என்பாள்.

      நீக்கு
    4. நெல்லை, அவங்க சொல்ற பாயின்ட் ரொம்பச் சரிதான். கண்டிப்பாக அலைபாயக் கூடாது. ஆனா நான் சொல்வது தெய்வத்தின் மீதான நம்பிக்கை பத்தி இல்ல.....பல கதைகள் ஒவ்வொரு கதைகள் பத்தி. நீங்க கூட சொல்லிருக்கீங்களே பசு பால் சொறிந்தது...இப்படியானவை.....நமக்கு அப்பாற்பட்ட சக்தி தெய்வத்தை நம்பறதுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே...கதைகள் கேட்டுக்கலாம் அதுல உள்ள சாராம்சம் வாழ்க்கைக்கு உதவும்னா அதை மட்டும் எடுத்துக்கலாம்....அவ்வளவுதான் ஆனால் தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது முழுவதும் வேறு. அது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது....சரணாகதி சொல்வதும் அதுதானே!! இல்லையா..

      கீதா

      நீக்கு
  17. கோயில் படங்கள் சூப்பர் சூப்பர்....என்ன சொல்ல நெல்லை!!!!!!! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதுவும் சிற்பங்கள் செமையா இருக்கு...

    இந்தக் கோயில் சென்றதில்லை என்று நினைக்கிறேன்....இல்லைனா பல வருஷங்களுக்கு முன்னாடி தஞ்சாவூர் னு (புகுந்தவீடு அப்பக்கம்தானே!!!) கும்பலோடு கும்பலா ஏதோ பல கோயில்கள் கூட்டிட்டுப் போனாங்க.....அதுல இதுவும் ஒண்ணான்னு தெரியலை...ஆனால் அப்போது சென்ற எந்தக் கோயிலும் நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட கும்பகோணம் வாங்க. நிறைய இடங்கள் பார்த்துவிட்டு வரலாம். மூணு நாட்கள் வீட்டுல லீவு போடுங்க. நிச்சயம் அலைவதற்கும், ரசிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தயங்கமாட்டீங்க.

      நீக்கு
    2. பேசாம மூணு நாள் லீவு போட்டுட்டு நாம கும்பகோணம் செல்லலாம். நிறைய இடங்கள்/கோவில்கள் பார்த்துட்டு வரலாம். உங்களுக்கும் அலைவதிலோ, ரசிப்பதிலோ, புகைப்படங்கள் எடுப்பதிலோ தயக்கம் இல்லை. வீட்டில் சொல்லிட்டுச் சொல்லுங்க. கிளம்பிடுவோம்.

      நீக்கு
    3. மூணு நாலு நாள் போயிட்டு வரலாம். நீங்களோ அலைய அலுத்துக்க மாட்டீங்க. ஆர்வம், ரசனை உண்டு. சொல்லுங்க எப்போ போலாம்னு

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா நெல்லை ஆமாம் ஆனால் இங்க கூட என் ஆர்வம் ரசனை உள்ளவங்க இல்லை.....

      நான் பாக் பண்ணி ரெடி!!!!! இதோ இப்பவே வந்துக்கிட்டிருக்கேனாக்கும் !!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  18. அது சரி நெல்லை, உங்களை மட்டும் எப்படி கோயிலுக்குள்ள இப்படிச் சிற்பங்கள் எல்லாம் எடுக்க அனுமதிச்சாங்க...அது போல திருவட்டார் கோயில்லயும்தான்....ஹூம் அதுக்கும் முகராசி வேணுமோ!!!!! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு தடவை சென்றால் ஒரு தடவை சரியான வாய்ப்பு அமைந்துவிடும். அப்புறம் என்ன... படமெடுத்துத் தள்ளிவிடவேண்டியதுதான். சில நேரங்களில் இரவு செல்லும்படி ஆகிவிடும். அப்போ புகைப்படம் எடுத்தால் சரியாகவே இருக்காது.

      நீக்கு
    2. நாலு தடவை போனா ஒரு தடவை நிறைய புகைப்படம் எடுக்க முடியும். சில நேரங்களில் மாலையில் சென்றால் எடுக்கமுடியாது

      நீக்கு
    3. ம்ம்ம்ம் ஓ இப்படி ஒரு தெக்கினிக்கி இருக்கா.....ஆமாம் மாலையில் போனால் எடுக்க முடியாதுதான் எனக்கு எப்பவுமே நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் போது இப்படியான இடங்களுக்குப் போணும்னு தோணும். ஆனால் வெளியில் வரும் போது வெயில் இருக்கக் கூடாது!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா...

      மாலையில் என் மூன்றாவது விழிக்கு மாலைக்கண் வந்துடும்!!!!

      நெல்லை, எனக்கு ரொம்ப நாளா? மாதங்காளாக ஒரு 3 வருஷமா....ஆசை என் லிஸ்டில் இருப்பது....இதோ ரயில்ல போனா ஜஸ்ட் 2 மணி நேரப் பயணத்துல இருக்கும் லேபக்ஷி!!! ஆந்திரா கர்நாடகா பார்டர் ஆனா இருப்பது ஆந்திராவுல.

      இப்ப சமீபத்துல அனு போட்டிருந்தாங்க....பதிவும் படங்களும். அதுக்கு முன்ன ராமலஷ்மி போய் பதிவும் போட்டிருக்காங்க போல. அதுவும் அனுவின் பதிவில் அவங்க சொன்னதுலருந்துதான் தெரிந்தது. அனுவும் ராமலஷ்மி பதிவு பார்த்துட்டுத்தான் போயிருக்காங்க....

      நான் வழக்கமா பார்ப்பது போல் ஒவ்வொரு ஊரைச் சுற்றி என்ன இருக்கு என்று பார்த்ததில் இது கண்ணில் பட்டது.,,..

      எப்போ வாய்ப்பு கிடைக்குமோ...

      கீதா

      நீக்கு
  19. பயணமும் படங்களும், பகிர்வும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  20. // துரை செல்வராஜு சார்... ஆயிரம் முறை கும்பகோணம் வந்தாலும், அங்கு பார்ப்பதற்கு ஏகப்பட்ட இடங்கள் உண்டு.//

    என்ன இருந்தாலும்
    எங்கள் ஊர் எங்கள் ஊர் தான்..

    ஊருக்குள் கடைத் தெரு இருக்கலாம்... கடைத் தெருவிற்குள் ஊர் என்றால்!..
    அதுதான் கும்பகோணம்..
    எந்நேரமும் நசநச என்று...

    ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கும்மோணம் உங்களுக்குத் தெரியுமா!..

    அவ்வளவு அழகு.. 70 களில் லாட்டரி சீட்டுக்காகத் தோன்றிய சில நாளேடுகளில் தான் முதன் முதலில் கோயில் நகரம் என்று வெளி வந்தது.. உண்மையில் கோயில் நகரம் காஞ்சி...

    இன்னமும் சொல்கின்றார்கள்- குடந்தைக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்று..

    டிக்‌ஷ்னரியில் ஒரு வார்த்தை இருந்ததாமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் கோயில்கள், கடைத்தெரு... ஆஹா மிக அருமை.

      பெரியகடைவீதியில் சில மாதங்களுக்கு முன்பு போயிருந்தபோது பலாப்பழச் சுளைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். (அப்போதே பலாப்பழத்தை அரிந்து சுளைகளை வண்டியில் பரத்தி). எவ்ளோனாலும் சாப்பிட்டுப்பாருங்க. இலவசம்தான். கிலோ 50 ரூபாய் என்று சொன்னார் கடைக்காரர். சுவைத்து நிறைய வாங்கினேன் (என் எடையும் கணிசமாக அதிகரித்தது. அங்கிருந்த 3 நாட்களில் 3 கிலோ வாங்கிச் சாப்பிட்டிருப்பேன். மகள் ஒப்பிலியப்பன் யானைக்குக் கொடுக்கணும் என்று சொன்னதால் அவளுக்கு ஒரு கிலோ)

      நீக்கு
    2. பெரிய வீதி தனி. பெரிய கடைத் தெரு தனி கும்பகோணத்தில். அது தெரியுமா? ஓட்டல் அர்ச்சனா இருக்கும் தெரு பெரிய கடைத்தெரு. அங்கிருந்து கொஞ்ச தூரம் வந்து அஹோபில மடம் பக்கம் திரும்பினால் வருவது பெரிய தெரு. நீஈஈஈஈஈள்ளமாகப் போகும். வெங்கட்ரமணா ஓட்டல் அதன் முடிவில் இருக்கும்.

      நீக்கு
    3. வெங்கட்ரமணா ஓட்டலை படம் பிடித்துப் போட்டிருந்தேன்!  வர எனக்கு கூகிளில் பதில் அளித்து இருந்தார்.

      நீக்கு
    4. புரிந்தது. பெரியகடைத் தெருவைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  21. நெல்லை, நீங்கள் வரைஞ்சது செமையா இருக்கு.....இதை காலைல சொல்லணும்னு நினைச்சு விட்டுப் போச்சு...ரொம்ப அழகா வரைஞ்சுருக்கீங்க.....நல்ல திறமை நெல்லை....இதை ஃப்ரேம் போட்டு மாட்டலாம்...

    அது சரி, நாளைக்குத் தீபாவளி.....கிச்சன்ல உங்களுக்கு வேலை இல்லையா ஆர்வமா நிறைய செய்வீங்களே...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா... நான் வரைந்தது எனக்கே நினைவில்லை. என் பெண், நான் ஒன்று வரையணும் என்றதும் அந்த டிராயிங் நோட்டைக் கொண்டுவந்துகொடுத்தா. அதில் இருந்தது நான் பல வருடங்களுக்கு முன்பு வரைந்த படங்கள். என் பெண் மற்றும் பையனின் முகத்தை அப்போ ஏதோ புகைப்படத்தைப் பார்த்து வரைந்திருக்கிறேன். இப்போ பார்க்கும்போது மனைவியின் முகம் மாதிரியே தெரியுது.

      நீக்கு
  22. தஞ்சை அருங்காட்சியகம் சிவன் அருமையாக இருக்கு...எனக்கு தஞ்சாவூர் அரண்மனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரொம்ப நாளாக உண்டு....அதுவும் கையில் மூன்றாவது விழி வந்ததிலிருந்து. கோயில் பார்த்துள்ளேன் அப்போது கேமரா கிடையாது, இப்ப இருப்பதும் சும்மா பயன்படுத்தப்பட்டு வந்ததுதான்...ஆனாலும் இப்ப கோயில் பார்க்க ரொம்ப ஆசை படம் புடிக்கலாமேன்னு...அனுமதிப்பாங்களான்னு தெரியலை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் மூலவர் தவிர மற்றவற்றைப் புகைப்படம் எடுக்கலாம். தஞ்சைப் பெரியகோயில் கலைக்களஞ்சியம். அரண்மணையும் ஓகே. அங்கும் அரசவை, அருங்காட்சியகம், சுற்றுப்பட்ட ஊர்களில் கிடைத்த சிலைகள் போன்றவையும், பெண்கள் மறந்துவிட்ட ஆட்டுக்கல், அம்மி போன்றவையும் உண்டு

      நீக்கு
  23. தல விளக்கம் சிறப்பு
    புகைப்படங்களும் அருமை தமிழரே... - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  24. படங்களும் பதிவும் மிக அருமை. கோவிலுக்குப் போனோமா, சாமி தரிசனம் பண்ணோமா என்ற கேட்டகிரிகளை என்னென்று சொல்வது. போய்ப்பார்த்து ரஸிக்க இப்போது கனவில்தான். இல்லை இந்தப் பதிவு படித்தால்ப் போதும்.பார்த்தால் பசிதீரும். நன்றி. யாவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம் காமாட்சியம்மா. நேர போய் தெய்வ தரிசனம் செய்துவிட்டு, கடமைக்கு டக் டக் என்று மூன்று பிரதட்சணம் செய்துவிட்டு, ஓகே..இந்தக் கோவிலைப் பார்த்தாச்சு, அடுத்து.... என்று போவதை நான் விரும்புவதில்லை. பல நேரங்களில் அந்த மாதிரித்தான் தெய்வதரிசனம் கிடைக்கும்போது, மீண்டும் அந்தக் கோவிலுக்குச் செல்லத் தயங்குவதில்லை.

      எந்த ஒரு திவ்யதேசக் கோவிலையும், அந்த ஊரில் மூன்று இரவுகள் தங்கி சேவிப்பதுதான் விசேஷமாம் (முழுப் பலனுமாம்). வாராது வந்த மாமணியாக, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, திருப்பதி தரிசனம் அப்படி வாய்த்தது. அங்கேயே 5 இரவுகள் தங்கியிருந்தேன். 8 முறை தரிசனம் கிடைத்தது, அதில் 5 முறை, குலசேகரன் படிக்கு முந்தைய மண்டபத்தில்.

      நீக்கு
  25. அனைவருக்கும்
    தீபாவளி
    நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  26. வைணவர்களுக்கான கோயில்கள், சைவர்களுக்கான கோயில்கள் என்று
    பாகுபாடெல்லாம் எதற்கு?
    எல்லா இந்துக் கோயில்களும் நம் வழிபாட்டிற்கே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நான் பிரிக்கவில்லை. நான் தரிசனம் செய்யும்போது பெருமாள் கோவில், சிவன் கோவில் பிறகு அம்பாள் என அமைந்துவிடுகிறது. தீபாவளி வாழ்த்துகள் ஜீவி சார்.

      நீக்கு
  27. இந்த மாதிரி அர்த்தம் கொடுக்கிற தோற்றம் கொடுக்கிற வைணவ, சைவ வார்த்தைகளை பதிவில் உபயோகிக்காமல் இருக்கலாம். (உதா: கும்பகோணத்தில் வைணவர்களுக்கான கோயில்களில் முக்கியமானது என்று ஆரம்பிக்கும் வரிகளைப் பாருங்கள். அடுத்த பாராவில் சைவர்களுக்கான என்ற வார்த்தைகள்.)
    பதிவுகள் நல்லபடி அமைய வேண்டும் என்ற அக்கறையில் சொல்லப்படும் திருத்தங்களாக இதைக் கொள்ள வேண்டுகிறேன்.

    தங்களுக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள் முரளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்..நீங்கள் சொல்லும் கருத்து சரிதான். அந்தத் த்வனி வந்துவிட்டதோ என்று இப்போது நினைக்கிறேன். எனக்கு எந்தவித வேறுபாடும் மனதளவில் கிடையாது. (அவர் அவர் இறையவர், என அடி அடைவர்கள். அவர் அவர் இறையவர் குறைவிலர். "இறையவர்" அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே)

      நீக்கு
    2. நீங்களும் தீபாவளி கொண்டாடியதைப் பற்றிப் பதிவு எழுதலாம். இப்போது விரல்கள் சரியாகியிருக்கும் என்றே நம்புகிறேன்.

      இன்னொன்று.. நான் கடந்த சரஸ்வதி பூஜை அன்றிலிருந்து காலையில் ஆயில் புல்லிங் செய்கிறேன். நாக்கை நீட்டி, இடது வலது பக்கம் move செய்வதை பத்துப் பதினைந்துமுறை காலையில் செய்தால் பலவற்றிர்க்கு நல்லது என இன்று படித்தேன். நாளையிலிருந்து செய்ய நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  28. எஸ். அந்தக் கால இதயம் நல்லெண்ணை பாக்கெட்டுகளுடன் இந்த oil pulling பற்றி விவர காகிதங்கள் கொடுப்பார்கள்.

    வயிறை சுத்தம் செய்து இரத்த சுத்திகரிப்புக்கு, இதய ஆரோக்கியத்திற்கு
    உதவுவதாக குறிப்புகள் சொல்லும். நான் இந்த oil pulling வழக்கத்தை அ ந் நாட்களில் கொண்டிருந்தேன்.

    எந்த புதுப் பழக்கத்திற்கும் எந்த அளவுக்கு இதெல்ல்சம் நம் உடல் நலனுக்கு உதவுகிறது என்ற உள்ளுணர்வு புரிதல்கள் வேண்டும். அந்த observation தொடர்ந்து அந்தப் பயிற்சிகளை செய்யலாமா வேண்டாமா என்ற அறிவுறுத்துதலை நமக்குக் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையும் (ஆயில் புல்லிங்), வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். எவ்வளவு தூரம் இவை நன்மையளிப்பவை என்று நிஜமாகவே தெரியவில்லை ஜீவி சார்.

      என் யோகா மாஸ்டர், காலையில் எழுந்து 1 லிட்டர் உப்புப் போட்ட நீரைக் குடித்து, வாமிட் பண்ணிடணும் (அதுவாகவே வந்துவிடும்) என்றார். ஆனால் நான் இதனை ஒரு முறை மட்டுமே பரீட்சித்துப் பார்த்தேன். ப்ரெஷர், உடம்பில் உப்பு அதிகமாகி, இன்னும் அதிகமாகிவிட்டால் என்ற பயம்தான் காரணம்.

      நீக்கு
  29. இடது கையில் மொபைலை அளவாக வயிற்ருப் பகுதி தாங்கலுடன் பிடித்துக் கொண்டு வலது கை ஆள்சுட்டி விரலால் எழுத்துக்களைத் தொட்டு டைப் செய்கிறேன். இடது கண்ணில் தான் பார்வைக் குறைபாடு. Aged related Macular degeneration. பதிவுகள் வாசிப்பது, பதிலளிப்பது,
    YouTube பார்த்தல் எல்லாம்
    மனதளவு பெரும் புத்துணர்ச்சி கொடுத்து அன்றாட வாழ்க்கையை அர்த்தபூர்வமாக ஆக்கிக் கொண்டு வருகிறது.
    தங்கள் நினைவு கூறலுக்கு நன்றி. நாளாவட்டத்தில் எபிக்கு உருப்படியாக ஏதாவது அனுப்ப.முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் முழுமையாக சரியாகவில்லையா? விரைவில் முழுவதும் சரியாகப் ப்ரார்த்திக்கிறேன். மொபைல் மூலமாக உலகத்தின் சாளரங்கள் திறப்பது, ஓடிடி மூலமாக பலவற்றைத் தொலைக்காட்சிப்பெட்டியில் பார்ப்பது என்று இது பலருக்கு மிக்க உபயோகமாக இருக்கிறது.

      உங்கள் தளத்தில் புதிய பதிவுகளை வெளியிட (இலக்கிய)க் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  30. கும்பகோணம் ராமசாமிகோவில் படங்கள் அருமை. அருங்காட்சியகம் நடராஜர் சிலைகள் அழகு. தஞ்சை அருங்காட்சியகம் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!