புதன், 5 அக்டோபர், 2022

நம் கல்வியில் என்ன என்ன மாற்றங்கள் தேவை?

 

நெல்லைத்தமிழன்: 

1. செக்கு எண்ணெய் என்று வருகிற போலிகளை ஏன் அரசு ஒடுக்குவதில்லை? செக்கு நல்லெண்ணெய் லிட்டர் 300 ரூபாய்க்குத் தருவது சாத்தியமா?

# உண்மையில் செக்கு எண்ணெய்தானா என்று சரி பார்க்க அரசு எந்திரம் அவ்வளவு விஸ்தாரமாக இல்லை.  ஆர்வலர் யாராவது சரி பார்த்து புகார் அளித்தால் சரி செய்ய இயலும்.   நல்லெண்ணெய் விலை நியாயமானதுதானா என்பதை எங்களிடம் கேட்பது நியாயம்தானா ?

& நான் வாங்குகின்ற Tilnad gingelly oil Rs 310 / Lt. செக்கு எண்ணெய் என்றால் உற்பத்தி செலவு குறைவாக இருக்கும் என்றுதான் என் அனுமானம். வல்லுனர்கள் அபிப்பிராயம் கூறலாம். 

2. நம் கல்வியில் என்ன என்ன மாற்றங்கள் தேவை?  அரசுப் பள்ளிகளின் உண்மையான தேவை என்ன?  

#  கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டு வர அரசு முயல்வது தெரிகிறது. ஆனால் இது பற்றிய கொள்கைகளை நிபுணர் குழுதான் ஆராயவேண்டும். 

பத்தாம் வகுப்பு வரை அடிப்படை அறிவியல், அதிகமாக சுற்றுச்  சூழல் கல்வி, குடிமைப் பயிற்சி, கொஞ்சம் கைவேலை, கொஞ்சம் கலை, நிறைய உடற்பயிற்சி என்று இருப்பது நல்லது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு துறை சார்ந்த கல்வி இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் - பொறுப்பாளர்கள் கடமை உணர்ச்சி இன்னும் வளரவேண்டும். அடிப்படை வசதி சரியாக்கப்பட வேண்டும்.

3. படிப்புக்கும் வேலையில் மிளிர்வதற்கும் ஏன் ஒவ்வொருவரிடத்தில் வேறுபாடு இருக்கிறது? நல்ல டிகிரி பெற்றவனைவிட, படிக்காதவன் அல்லது வெறும் பாலிடெக்னிக் படித்தவன் மிகத் திறமையாளனாக இருப்பதைப் போல

#  படிப்பு சரியான மனோபாவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். திறமை அறிவு ஊக்கம் இவை மூன்றும் இருந்தால்தான் வாழ்க்கையில்  வெற்றி சாத்தியம்.

& ஆ ! என்னது?  'வெறும் பாலிடெக்னிக்'  ஆ! என்ன தைரியம் உங்களுக்கு! '$' மற்றும் '&' உங்கள் மீது கேஸ் போடுவோம் ஜா ஆ ஆ க்கிரதை! 

$ = LME; & = DME, AMIE, AMIAE!!

4. தமிழ்மணம் போன்ற தளங்கள் இல்லாததால் சிறந்த பதிவுகளை, பிளாக்குகளைப் படிக்கமுடியாமல் போய்விடுகிறதே... உங்களுக்குத் தெரிந்த சில நல்ல தளங்களை லிஸ்ட் செய்யலாமே! 

# இது எனக்கு யாராவது சொல்ல வேண்டிய விஷயம்.

& எங்களுக்குத் தெரிய வந்த தளங்களை எங்கள் Blog side bar ல போட்டுக் கொண்டிருக்கிறோம். வேறு யாரேனும் அவர்களின் தளங்கள் / நண்பர்களின் தளங்கள் பற்றி விவரம் அனுப்பினால், அதையும் சேர்ப்போம். 

5. பொன்னியின் செல்வன் பார்த்தீர்களா? உங்கள் எண்ணம் என்ன? - மிகச் சுருக்கமான விமர்சனம். 

# இன்னும்  பார்க்கவில்லை. பார்க்க ஆசை நிறைய உண்டு .  காதில் விழும் செய்தி அடிப்படையில் படம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது.

$ Met 5 people who had seen PS1 this morning (October 1) @600 to 930 and all of them have only good things to say Another Dubai resident was also appreciative and all the 6 say they are looking forward to seeing part 2

& Amazon prime ல வந்தால் பார்க்கலாம் என்று இருக்கிறேன். 

பாரம்பர்யம் என்பது எவ்வளவு வருடங்களாயிருக்கும்? ஜீனியே ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்திருக்குமா? கற்கண்டு இலக்கியக் குறிப்புகளில் இருக்கிறது. அதனை எப்படிச் செய்திருப்பார்கள்?

$ Sugarcane juice Or Palm juice (read பனங்கள்!) மற்றும் தென்னங்கள் இவற்றை ஓரளவுக்கு பாகு பதம் வந்த பின்  பானைகளில் போட்டு மூடி போட்டு காற்றுப்புகாமல் சீல் பண்ணி மண்ணில் புதைத்து வைத்து, சில காலம் கழித்து எடுத்துப் பார்த்தால் நீர் மண்குடம் வழியே ஆவியாகி படிகங்கள் வந்திருக்கும்.

சில சமயங்களில் படிக வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு சிறிய கல்கண்டில் நூலைக் கட்டி பாகில் இறக்கியிருப்பார்கள்  கட்டிக் கல் கண்டு நடுவே நூல் பார்த்திருப்பீர்கள்.

# பாரம்பரியத்தின் ஒவ்வொரு மாசமும் வெவ்வேறு காலத்திலிருந்துஆரம்பம் ஆகி இருக்கும்.  முன்னோர்கள் பனங்கல்கண்டு பற்றி அறிந்திருந்தனர்.

** இந்த வாட்சப் பகிர்வைப் பற்றி (அதில் உள்ள கருத்துகள்) எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவின் எண்ணம் என்ன?

** தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக் கொள்வோம்.

# மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

#நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். 

#ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

# திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

# படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

# இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

# ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

# பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

# நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

நிற்க.

மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.

### புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது

 அரசியல்வாதி களிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா??சற்றே சிந்தியுங்கள் உறவுகளே....

இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான். சிந்திக்க வேண்டும்.

$ நம் கஷ்டங்களில் மற்றவர் பங்கு பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதற்கு வருகிறது?

நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது ஒரு supply and demand சமாச்சாரம். 

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் படத்துக்கு மனைவியில்லாமல் ஒரு முறையும் மனைவியுடன் இன்னொரு முறையும் அதிக விலை கொடுத்து பார்ப்பதை (அப்படிப் பார்ப்பவர்கள்!) உடனே நிறுத்துங்கள்.

# நடிகர்கள் கேட்கும் கோடிகளை கொடுக்க ஏன் முன் வருகிறார்கள் ? நிறைய செலவழித்து படம் பார்க்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

& அதிகம் சம்பாதிப்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் ஒருவர் எழுதிய பதிவு என்று தோன்றுகிறது! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

இந்த வருடம் தண்ணீர் ஊற்றினால் எரியும் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் mechanism என்ன என்று விளக்க முடியுமா?

$ தண்ணீர் வழியே பாயும் மின்சாரம், ஒரு electronic ஸ்விட்சை இயக்குகிறது 

Meg ohm கணக்கில் இருந்தாலும் மின்னணுவியல் ஸ்விட்ச் வேலை செய்யும். 

நீர் எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமானதோ அவ்வளவு அரிதில் கடத்தி. அதாவது, பெரிய மின்தடை.

இந்த விளக்கில் நீர் ஊற்றுவதனால் உள்ளே உள்ள மினி பேட்டரிககும் ஒரு LED விளக்குக்கும் மின் தொடர்பு ஏற்பட்டு விளக்கு எரிகிறது

அதாவது நீர் வழியே போகும் மைக்ரோ ஆம்பியர் மின்னோட்டம் amplify செய்யப்பட்டு விளக்கு எரிகிறது.

-------

& அதன் Mechanism என்ன என்று சுருக்கமாகச் சொன்னால், " சுவிட்சைப் போட்டால் லைட்டு எரியும் " என்பதுதான். 

amazon தேடலில் அகல் விளக்கு போன்ற அமைப்பும் - அதில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றினால் விளக்கு எரியும் காணொளியும் பார்த்தேன். சரிதான் எண்ணெய்க்கு பதில் தண்ணீர் ஊற்றியே விளக்கை எரிக்கலாம் போலிருக்கு என்று ஆவலுடன் பார்த்தேன். 

பிறகுதான் தெரிந்தது $ சொல்லியிருக்கும் விஷயங்கள்!  

விளக்கில் ஒரு LED (bulb?) அதனுடன் பட்டன் செல் மற்றும் ஒரு சிறிய பிரிண்டட் சர்க்யூட் ஆகியவை உள்ளன. நாம் ஊற்றும் தண்ணீர் - அரிதில் கடத்தியாக (insulator) ஆக இருந்தபோதும், அது ஒரு சர்க்யூட் closer ஆக பயன்பட்டு பட்டன் செல் வோல்டேஜ் LED யை அடைய வைக்கிறது. எனவே LED ஒளிர்கிறது. அவ்வளவே. 

ஆறு விளக்குகள் முன்னூறு ரூபாய் சமீபம். 

ஒவ்வொரு விளக்கிலும் LR44 வகை பட்டன் செல் மூன்று உபயோகப்படுத்தியுள்ளார்கள். இந்த செல் அதிக பட்சம் ஐம்பது மணி நேரம் பயன்படும். பிறகு வேறு செல் மாற்ற வேண்டும். ஒரு செல் விலை சராசரியாக ரூபாய் இருபது. மூன்று செல் அறுபது ரூபாய். 

தீபாவளி / கார்த்திகை காலங்களில், நெருப்பு அபாயம் இன்றி, காற்றில் விளக்கு அணைந்துவிடுமே என்ற கவலையும் இன்றி விளக்கு ஏற்றவேண்டும் என்றால், இந்த வகை விளக்குகள் பயன்படும்.  (ஆனால் இவற்றிலிருந்து மத்தாப்பு பற்றவைக்க முடியாது!)  

= = = = = =

வாசகர்கள் எல்லோருக்கும் இனிய ஆயுத பூஜை / விஜயதசமி நல் வாழ்த்துகள்! 


= = = = =

62 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.
    வரிசையாக வாசித்ததில் ஒரே ஒரு சந்தேகம் தான்.
    சரஸ்வதி பூஜையைத் தான் ஆயுதபூஜை என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி பூஜையின் மறுநாள், விஜயதசமி அல்லது ஆயுதபூஜை.

      நீக்கு
    2. எழுதும்போதே எனக்கும் சந்தேகம் வரவைத்துவிட்டீர்கள். பெங்களூரில் நான் இருக்கும் பகுதியிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமான பூசனிக்காய்கள், சிறு வாழைக் கன்றுகள், மலை போல் குவிக்கப்பட்ட மாவிலைகள், விலை ஏறிவிட்ட வாழைப்பழங்கள் என விற்பனை வெகு ஜோராக இருக்கிறது.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர் பற்றிய கேள்வி கேட்டகோது உங்கள் நினைவுதான் கில்லர்ஜி

      நீக்கு
    2. மிகச் சிறப்பான கட்டுரை அது என்னிடமும் இருக்கிறது. இதை விவரித்து பதிவு போடலாம் என்று நினைத்து இருந்தேன்.

      நீங்கள் கேள்வியாக கேட்டு விட்டீர்கள்.

      சிந்திக்கத் தெரிந்தவர்களைவிட, சிந்திக்க மறுக்கும் மனிதர்களே நிறைய வாழ்கின்றன(ர்)

      நீக்கு
    3. // நடிகர் பற்றிய கேள்வி கேட்டகோது உங்கள் நினைவுதான் கில்லர்ஜி// பதில் எழுதும்போது நானும் நினைத்தேன். (" கூத்தாடி , கூத்தாடி !!)

      நீக்கு
  3. சில கேள்விகல் சிந்திக்க வைக்கின்றன. தண்ணீரும் சுவிட்ச் ஆக வேலை செய்வதை பற்றிய விளக்கம் நன்று. 

    சம்பாதிப்பது வேறு. சேமிப்பது என்பது வேறு. சம்பாதித்ததை எல்லாம் சேமிப்பதில்லை. பல நடிகர்களும் கடைசி காலத்தில் கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறோம் சாவித்ரி, காஞ்சனா உட்பட.

     ஒரு அறிஞர் சொன்னது போல் செல்வம் என்பதே "செல்வோம்" என்பதில் இருந்து உண்டானது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சென்று கொண்டே இருக்கும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. புதுப் பூவாக புதன்...

    அனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய விஜய தசமி நல் வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  7. வணிகம் என்பதே இன்றைக்கு ஏமாற்று வேலையாகி விட்டது..

    எள் , தேங்காய்க் கொப்பரை என்று நாமே உலர்த்தி எண்ணெய் ஆட்டும் இடங்களில் கொடுத்து எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்..

    இங்கே தஞ்சையில் பல இடங்களில் செக்கில் ஆட்டித் தருகின்றனர்.. எள் தேங்காய் கொடுக்காமலும் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் .. எண்ணெயின் வாசம் சாட்சி ..

    நம்பிக்கையும் முக்கியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலையைக் குறிப்பிடவில்லையே... பழயாறை வடதளி கோவில் முன்புள்ள ரோடில் எள் செடிகளைக் காய வைத்திருந்தனர். எப்படி எள் எடுப்பார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
    2. சென்ற மாதத்திற்கு முன் நல்லெண்ணெய் லிட்டர் ரூ .. இருநூறுக்குள் இருந்தது.. நாம் சொந்த எள் ஆட்டினால் இன்னும் குறைவாக இருக்கும்..

      நீக்கு
    3. மாசி மாதம் விதைக்கப்படும் எள் மூன்று மாதத்தில் அறுவடைக்கு வந்திடும்.. எள் செடிகளை அறுத்து வெயிலில் தலை கீழாக வைத்தால் ஐந்து ஆறு நாட்களில் எள் காய்கள் அனைத்தும் உதிர்ந்து விடும்..

      அதன் பிறகு காய்களை நன்றாக உலர்த்தினால் எள் தனியாகப் பிரிந்து விடும்..

      பழையாறை வட்டாரத்தில் எள் சாகுபடி அதிகம்..

      அலுப்பைப் பார்க்காமல் நாமே முன்னின்று எண்ணெய் ஆட்டி எடுத்தால் நமக்கு நல்லது.. ஏமாற்றுத் தயாரிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்..

      நீக்கு
    4. விவரமான, விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு,

    நேற்று பதிவில் நான் எழுதிய கருத்துக்கள் காணவில்லை.

    உள்ளே ஒளிந்து கொண்டு விட்டதாக நினைப்பு..

    அப்படி இருந்தால் சரி செய்யவும்...

    பதிலளிநீக்கு
  9. இப்போதைய பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு இதுவரையிலும் விருப்பம் இல்லை

    பதிலளிநீக்கு
  10. சில நாட்களாக கீதாக்கா வருவதில்லை..

    கீதா ரங்கன் அவர்கள் சில வாரங்களாகவே வருவதில்லை..

    யாரறியக்கூடும்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் மேடத்துக்கு சிறிது உடல்நிலை சரியில்லை என எழுதியிருந்தார். கீதா ரங்கன்(க்கா) புது வீடு செட்பண்ணிக்கொண்டிருக்கிறார்.

      நீக்கு
    2. இன்னைக்குத் தான் வேறே உலகிலிருந்து வந்தாப்போல் வந்திருக்கேன். தொடரப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  11. வெறும் பாலிடெக்னிக் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. ப்ளஸ் டூ என்று எழுதலாம் என நினைத்தேன். ஆனால் ஒப்பீடுக்கு பாலிடெக்னிக் என எழுதினேன். தேறுவதற்கு மிக்க் கடினமான ஏஎம்ஐஇ போன்றவற்றை இந்தக் கேடகரியில் சேர்ப்பது நியாயமா?

    பதிலளிநீக்கு
  12. பனங்கல்கண்டு நாங்கள் உபயோகிப்பதில்லை. கல்கண்டு ஒருவேளை சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்திருக்கும். வெல்லம் என்பதைத்தான் இலக்கியங்களில் படித்திருக்கிறேன். அக்காரம், கரும்பு, பால்சோறு என,றெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூந்தைப் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் கல்கண்டு சளி, ஜலதோஷம், இருமலுக்கு நல்லது. வாயில் அடக்கிக்கச் சொல்லுவாங்க. பனங்கல்கண்டுப் பால் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தால் விட மாட்டீங்க நெல்லையாரே! அம்புட்டு ருசி!

      நீக்கு
  13. பொ செ டிக்கட் 650?... சில தியேட்டர்களில் 1000, 1500 ரூ.. ஆன்லைனில் விலை பார்த்தேன். இன்னொரு விஷயம்... விடுமுறை தினமா, பகலா, மதியமா, இரவா என்பதைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுகிறது. நான் 236 ரூபாயில் பார்த்தேன். வீட்டில் எல்லோரும் 175ரூ டிக்கெட் (ஆனால் கோக வர ஆட்டோ, தியேட்டரில் 1000 ரூ க்கு மேல் செலவு பாப்கார்ன் போன்று. நான் வீட்டை ஒட்டியுள்ள மாலில் பார்த்தேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே திருச்சியில் ஒரு திரை அரங்கில் மாலை ஏழு மணிக்காட்சியாகப் பொ.செ. 1 போடுகின்றனர். அனுமதிச்சீட்டு விலையை விடத் திங்கறதுக்கு வாங்கறது 30 ரூ தான் கம்மி. அதோடு அதைக் கட்டாயமாய் வாங்கித் தின்னு வயிற்றையும் உடம்பையும் கெடுத்துக்கணும் போல இருக்கே! ஏனெனில் மொத்தப் பணத்தில் இந்தத் திங்கற சமாசாரமும் சேர்ந்து பட்டியல் இட்டிருக்காங்க. ! :)))))))))

      நீக்கு
  14. அருமை.
    கல்வி என்பதே பொருள் ஈட்டுவதற்காகத்தான் என்று சுருக்கி விட்டோம்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள் அன்னையவள் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.

    பொன்னியின் செல்வன் மகள் அவர்கள் என்னையும் கூட்டிச் சென்றதில் பார்த்து விட்டேன். நாவலில் உள்ள த்ரில், சுவாரசியம் படத்தில் கொண்டு வருவது சிரமமே..எனது பார்வையில் சுமார்..

    பதிலளிநீக்கு
  16. கல்வி சில காலமாக தொழில் ஆகி விட்டது தான் துயரம்...

    பதிலளிநீக்கு
  17. செக்கு எண்ணெய் என்று வருகிற போலிகளை ஏன் அரசு ஒடுக்குவதில்லை? செக்கு நல்லெண்ணெய் லிட்டர் 300 ரூபாய்க்குத் தருவது சாத்தியமா?

    மக்கள் ஒடுக்குவார்கள் எனறு அரசு எற்றிப்பார்ப்பதால். போலிகளை ஒடுக்கி விட்டால் அரசில் இருப்பவர்கள் மடியில் கை வைப்பதாகுமே?

    -மந

    பதிலளிநீக்கு
  18. நம் கல்வியில் என்ன என்ன மாற்றங்கள் தேவை?  அரசுப் பள்ளிகளின் உண்மையான தேவை என்ன? 

    அரசுப் பள்ளிகளில் அந்நாள் தேவை அந்நாள் தேவை நல்ல ஆசிரியர்கள். இந்நாள் தேவை நல்ல மாணவர்கள். அந்நாள் தேவை நிறைவேறாமலே போனதால் இந்நாள் தேவை உருவாகியிருக்கலாம்.

    கல்வியில் முக்கிய மாற்றம் ஆறாம் வகுப்பு வரை படிப்பை விட்டு விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் யோகப்பயிற்சியிலும் மாணவர்களை ஈடுபடுத்தவேண்டும். அப்படிச் செய்தால் உலகம் உருப்படலாம்.

    (ஆறாம் வகுப்பு வரை கூகில் தேடி அறிவை வளர்த்துக் கொள்ளச் சொல்லித் தந்தால் போதுமே?)

    -மந

    பதிலளிநீக்கு
  19. படிப்புக்கும் வேலையில் மிளிர்வதற்கும் ஏன் ஒவ்வொருவரிடத்தில் வேறுபாடு இருக்கிறது? நல்ல டிகிரி பெற்றவனைவிட, படிக்காதவன் அல்லது வெறும் பாலிடெக்னிக் படித்தவன் மிகத் திறமையாளனாக இருப்பதைப் போல..

    அரசியல் தவிர இது சிறுபான்மை என்றே சொல்லவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துவோர் வேலையிலும் (என்ன வேலையாக இருந்தாலும்) கவனம் செலுத்துவார்கள். பிடித்த வேலை கிடைத்தோர் படித்த படிப்பினால் சில படிகள் உயர்ந்து போகிறார்கள்.

    -மந

    பதிலளிநீக்கு
  20. பொன்னியின் செல்வன் பார்த்தீர்களா? உங்கள் எண்ணம் என்ன? - மிகச் சுருக்கமான விமர்சனம். 

    அடுத்த பாகம் வந்ததும் முழுதும் பார்த்துவிட்டு சொல்கிறேன். கதை கூட அப்படித்தான் எல்லா பாகமும் ஒன்றாகப் படிக்கும் வழக்கம் எனக்கு.

    -மந

    பதிலளிநீக்கு
  21. நம் கஷ்டங்களில் மற்றவர் பங்கு பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதற்கு வருகிறது?

    அவங்களும் அனுபவிக்கட்டும் என்கிற நல்ல எண்ணம் தான்.

    -மந

    பதிலளிநீக்கு
  22. இந்த வருடம் தண்ணீர் ஊற்றினால் எரியும் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் mechanism என்ன என்று விளக்க முடியுமா?

    மக்களுக்கு fancyஆக ஏதாவது தேவை. நல்ல வேளையாக விஸ்கி ஊற்றி விளக்கெரிவதாகக் காட்டவில்லை. காட்டியிருந்தால் இன்னேரம் டாஸ்மாக் கதி அதோகதியாகி இருக்கும்.

    நிற்க விளக்கின் நுட்பம் மாறவில்லை.

    - மந

    பதிலளிநீக்கு
  23. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
    பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு, தையல், பாட்டு , வகுப்புகள் வேண்டும்.

    விளையாட்டு வகுப்புகள் கண்டிப்பாய் இடம் பெற வேண்டும் அந்த வகுப்புகளை மற்ற பாட ஆசிரியர்கள் கேட்காமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. பானுமதி வெங்கடேஸ்வரன்5 அக்டோபர், 2022 அன்று 6:43 PM

    மிகவும் தாமதமாக கேள்வி அனுப்பினேன். என்றாலும் பதில் தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் திருப்தியே எங்கள் திருப்தி ! நன்றி.

      நீக்கு
  25. பானுமதி வெங்கடேஸ்வரன்5 அக்டோபர், 2022 அன்று 6:44 PM

    இந்த வாரம் பெயரில்லா என்ற பெயரில் வந்திருக்கும் கருத்துக்கள் என்னுடைய வை அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்தான் கீழே ம ந என்று குறிப்பிட்டுள்ளாரே !!

      நீக்கு
  26. பானுமதி வெங்கடேஸ்வரன்5 அக்டோபர், 2022 அன்று 6:47 PM

    யாராவது என்னை எங்கள் blog whatsapp குழுவில் இணைந்து விடுங்களேன். Blogger ல் கருத்துக்கள் கூறினால் பெரும்பாலும் வெளியாவதில் லை, இப்படியே போனால் என்னை மறந்து விடுவார்களோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!