விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார்.
மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண்டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி.இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். எந்த பிஸியான நாட்களானாலும், வியாபாரத் திற்காக தொடுக்கும் மாலைகளில் கண்டிப்பாக 4 மாலைகளை இரவில் விட்டுச்செல்வதற்காக முன் கூட்டியே எடுத்துவைத்துவிடுகிறார் துரைப்பாண்டி.
துரைப்பாண்டியனிடம் பேசினோம். “தினமும் பூ வியாபாரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். விருதுநகர் ரொம்ப சின்ன ஊர். எந்த பொருள் வாங்கனும்னாலும் பக்கத்தில் இருக்கும் மதுரைக்கு போய்தான் வாங்கணும். ராத்திரி 10 மணிக்கு மேல் எந்த கடையும் திறந்திருக்காது. ரொம்ப அவசரம்னா இரவில் மதுரை போய்தான் அந்த சாமான்கள் வாங்கிட்டு வரணும்.
விருதுநகரில் ராத்திரி 10 மணிக்கு மேல் யாராவது இறந்து விட்டால் அவர் களது உடலுக்கு போடுவதற்கு மாலை கிடைக்காது. உயிர் போன பிறகு உடலுக்கு மாலை போட்டு விளக்கு ஏற்றி வைப்பதுதான் அந்த உயிருக்கு செய்யும் முதல் மரியாதை. ஆனால் மாலை கூட இல்லாமல் மறு நாள் காலை பூக்கடை திறக்கும் வரை வெத்து உடம்போடு காத்திருப்பது பெரிய கொடுமை. ஒருமுறை பேருந்தில் பயணத்தில் எனது நண்பர்கள் இதைச் சொல்லி வருத்தப்பட்டனர். அது என் மனதில் வருத்தத்தை தந்தது.
கூடவே ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் இப்படி 15 வருடமா செய்து வர்றேன். தினமும் பூ வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது தனி யாக 4 மாலைகளை கடைக்கு வெளியே தொங்க விட்டுட்டு போவேன். ராத்திரி நேரத்தில யாராவது இறந்து போயிட்டா மாலை வாங்குவதற்கு பூக்கடைகளை தேடறவங்க என் கடையில் தொங்குற மாலைகளில் தேவையானதை எடுத்துப் போய் பிரேதத்துக்கு போடுவாங்க. ஆரம்பத்தில இந்த விஷயம் தெரியாததால் காலையில பார்க்கும்போது மாலைகள் அப்படியே இருந்தது.
பிறகு பலருக்கும் இது தெரிஞ்சதால் இப்ப பெரும்பாலும் மாலைகள் இருக்காது. முகம் தெரியாத ஒரு மனிதரின் உடலுக்கு நாம தொடுத்த மாலையால மரியாதை கிடைச்சதே என்ற திருப்தி அன்னிக்கு முழுக்க மனசில இருக்கும். ராத்திரி மாலையை எடுத்துட்டு போன சில பேர் காலையில் வந்து மாலைக்கு காசு கொடுப்பாங்க. வாங்க மறுத்துடுவேன். தொங்க விட்டுப் போன மாலைகளில் ஏதாவது மிச்சம் இருந்தா அதை மறுநாள் வியாபாரத்துக்கு வச்சுக்க மாட்டேன். முதல் காரியமாக அதை குப்பை தொட்டியில் து£க்கிப்போட்டுட்டு புதுசா மாலை கட்ட ஆரம்பிச்சுருவேன்.
என்னோட ஆத்ம திருப்திக்காக இதை 15 வருசமாக செஞ்சுக்கிட்டு வர்றேன். ஒரு மாலை 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவாகும். காசு, பணமா சார் முக்கியம். மாட மாளிகையில பொறந்தாலும் குடிசையில் பிறந்தாலும் இறப்புங்கறது எல்லாருக்கும் பொதுவானது. கஷ்ட நஷ்டங்களை பார்த்து கண் மூடுற மனுஷன், அவனுக்கான மரியாதை இந்த மாலை. அதை முகம் தெரியாத யாருக்கோ என்னால செய்ய முடியுது என்பதே எனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்” என்கிறார் சிறு புன்னகையுடன் பூ வியாபாரி துரைப்பாண்டி.
பழகியவர்களுக்கே உதவி செய்ய பர்ஸை திறக்காத மனிதர்களுக்கு மத்தியில், வருமானத்தை புறந்தள்ளி முகம் தெரியாத மனிதர்களின் மேல் அன்பை செலுத்தும் துரைப்பாண்டி பாராட்டத்தகுந்த மனிதர்தான்.
- நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் .
===========================================================================================================
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அஜய் என்பவர் நடத்தும் உணவகத்தில், கடந்த 13ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளையை சேர்ந்த பாலமுருகன் சென்றார். அப்போது, மறந்து வைத்து சென்ற ரூ 50,300/- மற்றும் வங்கி ஆவணங்களை , மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அஜய் ஒப்படைத்தார்.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்டு, நெல்லை கிழக்கு போலீஸ் துணை கமிஷினர் ஸ்ரீனிவாசன் முன்னிலையில், அஜய் ரூ 50,300 பணத்தை பாலமுருகனிடம் ஒப்படைத்தார்.========================================================================================================
100 வயதை கடந்து, ஓய்வின்றி மருத்துவ சேவையாற்றி வரும் அமெரிக்காவை சேர்ந்த ஹோவர்டு டக்கர், 'உலகின் மிகவும் வயதான மருத்துவர்' என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஹோவர்டு டக்கர். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 98 வருடம், 231 நாட்கள் வயதாகும் போது, டக்கர் உலகின் 'மிகவும் வயதான பயிற்சி மருத்துவர்' என்ற சாதனையை படைத்தார். 100 வயதை எட்டியும், 'இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
89 வயதாகும் அவரது மனைவி சூ, மனோவியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஜூலை மாதம் தனது 100வது பிறந்தநாளை எட்டிய சமயத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது, ஜூம் செயலி மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து டக்கர் கூறியதாவது:-
"கின்னஸ் சாதனை பட்டத்தை பெற்றதை தனி மரியாதையாக கருதுகிறேன். மேலும் நீண்ட, திருப்திகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இதை மற்றொரு சாதனையாகப் பார்க்கிறேன். 1947ல் மருத்துவம் பார்க்க துவங்கிய போது பின்பற்றிய அதே அணுகுமுறையை தான் இப்போதும் தொடர்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னுடைய ஊழியர்கள், வருகை தருவோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
உலகின் மிக வயதான நபர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்ட முடிதிருத்தும் நபரின் இரங்கல் செய்தியை படித்த போது தான், ஹோவர்டு 'மிகவும் வயதான மருத்துவர்' என்ற பட்டத்திற்கான விண்ணப்பிக்க தூண்டுதலாக இருந்தது. ஒரே வயதுடையவர்கள் என்பதால், தன்னால் பதிவுகளை உடைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார். கின்னஸ் உலக சாதனைக்கு முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அவரது பேரன் ஆஸ்டின் அவருக்கு உதவியுள்ளார்.
=========================================================================================================================
நான் படிச்ச கதை (J K )
புதுமனை புகுவிழா
கதையாசிரியர்: கிரிஜா மணாளன்
முன்னுரை.
பசுஞ்சாணத்துக்கும் கோமியத்துக்கும்
முக்கியத்துவம் தந்த ஒரு சிறுகதை “திருடப்போனவன் திருப்பதி போன கதை” யை முன்பே இந்தப் பதிவில் படித்து ரசித்தோம். அந்த வரிசையில் அதே போன்று இவை இரண்டும்
முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சிறுகதை
தான் இது.
கதை இந்தச் சுட்டியில் இருந்து
எடுக்கப்பட்டது.
கதையின் சுட்டி: புதுமனை புகுவிழா
புதுமனை புகுவிழா
“ஏன்டா கோபாலு,……பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே
இல்லே…? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?”
வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற்பார்வை பார்த்துக்கொண்டே
என்னைப் பார்த்துக் கத்தினார்
மாமா.
“சொல்லிட்டேன் மாமா……. விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு
மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா…?”
“நோ..நோ…ராத்திரியே மாட்டை ஓட்டிக்கிட்டு வந்து கட்டிடச் சொல்லுடா!
விடியக்காத்தால அவன எங்கே தேடிப் பிடிக்கறது?
கிரஹப் பிரவேசத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க!”
மாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக
இருக்கவேண்டும். அவர் ரெயிலுக்கு முன்னதாக ரிஸர்வ் பண்ணியிருந்தால்கூட, நாலுமணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, ஸ்டேஷன் மாஸ்டரை
நச்சரித்துக் கொண்டேயிருப்பார்.
ஸ்டேஷன் பக்கம் இவரது தலையைக் கண்டாலே டியூட்டியிலிருந்து லீவுபோட்டு
விட்டு வீட்டுக்கு ஓடும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் உண்டு!
என் அண்ணன் கட்டிய வீட்டுக்கு நாளை விடியற்காலை கிரஹப்பிரவேசம். வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.
கிரஹப் பிரவேசத்துக்கான பொறுப்பை மாமாவின் தலையில் கட்டிவிட்டான் அண்ணன். ஒரு வாரம் முன்னதாகவே தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கிய மாமா, வழக்கமான தன் அதிகாரத் தோரணையோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
முகூர்த்த மாதமாகையால் புரோகிதம் செய்ய அய்யர் கிடைக்காமல் நான் ஒருவாரம் ஊரெல்லாம் தேடியலைந்து
நான் பிடித்து வந்த அந்த அய்யரை, மாமா
‘இண்டர்வியூ” செய்ததில் பாவம், அந்த அய்யர் டென்ஷனாகிப்போய், கோபித்துக் கொண்டு,
துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓடியே போய்விட்டார்!
‘எந்தெந்த மந்திரம் சொல்லி கடவுளரை ஆசீர்வாதத்துக்கு
அழைக்கப்போகிறீர்? சம்பந்தப்பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால்,
அதற்கு மாற்று ஏற்பாடு என்ன?
‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா? ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும்?
– என்று பல கேள்விகளை அந்த புரோகிதரிடம் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தால் அவர் ஓடாமலா இருப்பார்?
நானும் அண்ணனும் போய் அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சி மீண்டும் அழைத்து வருவதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது!
இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மாமாவின் பார்வையிலிருந்து
மறைந்துபோய் படுக்கலாம் என்று நான் ஒதுங்கியபோது,
“ஏன்டி விமலா, கோபால் எங்கே போய்த் தொலஞ்சான்?”
என்று அண்ணியிடம் விசாரித்துக் கொண்டு
வந்துவிட்டார் மாமா.
“கோமியத்துக்கு சொல்லியிருக்கானா?
இந்த ஏரியாவுல அது கிடைக்கறது கஷ்டம்னு அய்யர் சொன்னாரே
….ராத்திரியே போய் அத விசாரிச்சு வச்சுடச்
சொல்லு!”
பாதிச் சாப்பாட்டில் கையை அலம்பிக் கொண்டு மாமாவின் முன்னால் ஆஜரானேன்.
“தாசில்தார் வீட்டு மாமிக்கிட்ட சொல்லியிருக்கேன்.
விடியக்காலை போய் வாங்கிக்கலாமுல்ல?” என்றேன்.
மாமா எதிலுமே ஒரு க்வாலிட்டி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதக்காரர்.
‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு,
ரிலீஸ் பண்ணுன சுத்த கோமியமா இருக்கணும்! அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்!’ என்று அவர்
ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை,
அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல்,
“விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போடற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்!” என்று மட்டும் கண்டிஷன் போட்டார்.
விடிகாலையில் அந்த மாட்டிற்கு ‘சிறுநீர் உபாதை’ ஏற்படும் நேரத்தை எதிர்பார்த்து நானும்
அந்த மாட்டுத் தொழுவத்திலா
படுத்துக் கிடக்கமுடியும்?
“நீ பாட்டுக்கு தூங்கிடாதேடா! விடியறதுக்கு முந்தியே புரோகிதருக்கு வேண்டிய
எல்லா அயிட்டங்களையும் ரெடி
பண்ணி வெச்சிடணும்…புரியுதா?”
நான் தூக்க அசதியால் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சரி சரி, நீ போய் படு! விடிகாலை முழிச்சுடு!” என்று எனக்கு விடுதலை கொடுத்தார்.
விடியற்காலை நான் விழித்தபோது, மாமாவின் சத்தம் கேட்டது.
தூங்கிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் எழுப்பி குளியலறைக்கு விரட்டிக்கொண்டிருந்தார். அவர் பார்வையில் படாமல் நழுவிவிட எண்ணி, முகம் அலம்பிக்கொண்டு, தெருவில் இறங்கியபோது……..
“என்னடா கோபாலு, இப்பத்தான் எழுந்திருச்சியா? போய் அந்த கோமிய வேலைய முதல்ல முடிச்சிட்டு வா!”
என்று என்னைப் பிடித்துக் கொண்டார்.
“இத பாருடா…..இருட்டுல அந்த கொட்டில்ல வித்தியாசம்
தெரியாம நீ எருமை, காளை எதுகிட்டேயாச்சும் பிடிச்சுட்டு வந்து தொலையாதே!”
என்ற அட்வைஸ் வேறு!
தாசில்தார் வீட்டை அடைந்து, அந்த விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியபோது, தாசில்தார் மாமா
ஒரு கையில் டார்ச் லைட்டும், மற்றொரு கையில் ஒரு தடிக்கம்பு சகிதமாக வந்து கதவைத் திறந்தார். அந்த ஏரியாவில் ‘திருட பகவான்கள்’ திருவுலா வரும் நேரம் அது ஆகையால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த முன் ஜாக்கிரதை வழக்கமான ஒன்று.
தூக்க மயக்கத்தில் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல், இசகு பிசகாக அவர் என் மீது ஒரு போடு போட்டுவிட்டாரென்றால்…………கிரஹப்பிரவேசத்துக்கு இருக்க வேண்டிய நான், ஆஸ்பத்திரி பிரவேசமோ, எனது விதியின் கொடுமை ரொம்ப மோசமாக இருக்கும் பட்சத்தில்
‘எம லோகப் பிரவேசமோ’ அல்லவா போகவேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், “மாமா!….நான் நடராஜ் தம்பி கோபால் வந்துருக்கேன்”
என்று முன்ஜாக்கிரதையாக குரல் கொடுத்தேன்.
அவர் முகத்தில் தூக்கக் களையும், எரிச்சலின் சாயலும் படர்ந்திருந்ததை அந்த
மங்கிய வெளிச்சத்திலும் கண்டுகொண்டேன்.
தலையைச் சொறிந்தவாறு உள்ளே போனார். பெட்ரூமிலிருந்த மாமியுடன் ஏதோ பேசிவிட்டு,
கையில் ஒரு பாட்டிலுடன் வந்தவர்,
அதை என் கையில் தந்தார்.
‘ராத்திரியே பிடிச்சு வச்சிட்டாங்க போலிருக்கு! பரவாயில்லை,
அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே! கோமியப் பிரச்னை தீர்ந்ததில் எனக்கு திருப்தி.
இருந்தாலும், மாமா ஒரு சந்தேகப்பிராணி. கோமியத்தின் நிறம்,
மணம் இவற்றில் சந்தேகப்பட்டு, ஏதாவது குறுக்கு
விசாரணை செய்தால் என்ன செய்வது?
……”இப்ப……இப்பத்தான் சுடச் சுட பிடிச்சது!”
என்று ஓட்டல் சர்வர் பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவேண்டும்.
தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியைஅழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க
மாமா!” என்று அழைப்புவிடுத்தேன்.
“காத்தால நான் வந்துடுறேன்டா.
மாமிக்கு உடம்பு சரியில்லே. அவள டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போகணும். நடராஜன் கிட்ட சொல்லிடு!”
அவரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிய
போது, மாமா சமையல் கட்டில் நின்றுகொண்டு
சுடச் சுட காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார், அவருக்குப் பயந்து ஒவ்வொரு வேலையையும் நான் செய்து வந்தாலும்,
அவரிடமிருந்து கிடைத்த ஏச்சுக்களினால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தேன்.
அவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநாள் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து போகும்படி ஒரு ‘நோஸ்கட்”
நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என் திட்டம்.
புது வீட்டுக்குள் நுழையவிட ஒரு பசுவும் கன்றும் கொண்டு வருவதற்காக நான் மாடாய் அலைந்து, கடைசியில் ஒரு மாட்டுக் காரனைப் பிடித்தேன். அவனிடம் பேரம் பேசி அவனை முந்திய நாள் இரவே மாடு, கன்றுடன் வந்து கொல்லைப்புறத்தில் படுக்கச் சொல்லிவிட்டார் மாமா.
‘தண்ணியடித்துவிட்டு’
படுத்த அவனை விடியற் காலையில் நான் தண்ணியை அவன் மூஞ்சியில் அடித்து எழுப்ப வேண்டியாகிவிட்டது! ‘புதுமனைப் புகுவிழா’ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
பசுவும், கன்றும் வீட்டுக்குள் நுழையும்போது அது நடுவீட்டில் சாணம் போட்டால்தான்
‘மங்களகர’மாய் இருக்கும் என்று மாமா கண்டிஷன்போட, மாட்டுக்காரன் அவரிடம் சண்டைக்கு வந்து விட்டான்!
சரியான தீவனமின்றி கருவாடாய்க் காட்சியளித்த
பரிதாபத்துக்குரிய அந்த கோமாதா, மூச்சுவிடவே திராணியற்ற நிலையில் தள்ளாடியவாறு நிற்கும்போது,
அது சாணம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இல்லை என எனக்குப் புரிந்தது.
மாமாவோ “சாணச் சம்பிரதாய”த்தில் பிடிவாதமாய் நின்றார்.
மாட்டுக்காரனை தனியே அழைத்துப்போய் அவனிடம்
பேசினேன். அவனோ ஒரு ‘தண்ணி கேஸ்’. மாமாவின்மேல் அவனுக்கிருந்த கோபத்துக்கு,
அவரை மிதித்து, ‘வரட்டி’ தட்டிவிட்டுத்தான் போவான் என்று புரிந்தது! அவனை சமாதானப்படுத்தி, எனக்குத் தோன்றிய ஒரு ஐடியாவை அவனிடம் சொல்ல. அவனும் சம்மதித்தான்.
‘இன்ஸ்டண்ட்’
சாணத்துடன்
கூடிய ஒரு பாலிதீன் பையை மாட்டின் பின்புறம்
- வாலுக்குக் கீழே மறைவாகக் கட்டிவிடவேண்டியது. (மாமாவின் பார்வைக்குப்
படாமல் தான்!) மாடு,
வீட்டுக்குள் நுழையும்போது, மாட்டுக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுப்பதுபோல்
அந்த சாணப்பையை நசுக்கி,
சாணம் வீடெங்கும் பீச்சியடிக்குமாறு செய்ய
வேண்டியது. இதுதான் எங்கள் திட்டம்!
அப்படியே எல்லாம் நடந்து, பீச்சியடிக்கப்பட்ட சாணமானது, ஹாலில் உட்கார்ந்திருந்த பட்டுச்சேலைப் பெண்மணிகள் மேலெல்லாம்
“சாண அபிஷேகம்’ செய்துவிட்டது!
சாணத்தால் ஏற்பட்ட நாணத்தால் அவர்கள் ஓடி ஒளிந்த காட்சியும் விழாவுக்கு களைகட்டியது!
புரோகிதரின் பக்கத்திலேயே மாமா உட்கார்ந்து கொண்டு அவரை “பெண்டு”
எடுத்துக் கொண்டிருந்தார்.
கிரஹப்பிரவேசம் சுபமாய் முடிந்தது. தனது ஏற்பாடுகளைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்
மாமா. காலையிலேயே வருவதாகச் சொன்ன அந்த தாசில்தார் மாமா ஏன் நிகழ்ச்சிக்கே வராமலிருந்துவிட்டார் என்று புரியாமல் குழம்பினேன். அந்த குண்டு மாமிக்கு உடம்புக்கு
ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ?
மறுநாள். மதுரை மாமாவை ரயிலேற்றிவிட்டு நான்
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் பார்த்த தாசில்தார் மாமாவைக்
கேட்டேன்: “என்ன மாமா, ஃபங்ஷனுக்கு வராமலேயே இருந்துட்டீங்க?”
“வரமுடியாமப் போச்சுடா!….மாமிய டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்னு
சொன்னேனில்லியோ….” என்று சொல்லி
அவர் நிறுத்த, “என்ன மாமா ஆச்சு?” என்று பட படப்புடன் கேட்டேன்.
அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
டாக்டரின் க்ளினிக்கில் மாமியின் “லேப் டெஸ்ட் ரிஸல்ட்”டைப் பார்த்துவிட்டு அந்த டாக்டரே மூர்ச்சையாகி விழுந்துவிட்டாராம்!
மாமிக்கு இது “தலைச்சன் ஈற்று”
என்றும், வீட்டுக் கால்நடைகளை எளிதில் தாக்கும்
‘கோமாரி நோய்’ அவளைப் பீடித்திருப்பதாகவும், இந்த தலைச்சன் கன்றுக்குட்டியை மாமி
பிரசவிப்பதே ரொம்பக் கடினம் என்றும் அந்த ரிஸல்ட்டில் இருந்ததைப் பார்த்த டாக்டர் மயக்கமுற்று விழுந்ததில் ஆச்சரியமில்லையே!
நடந்ததை மாமா விளக்கினார். “கோபாலு,
நேத்திக்கு
காத்தால இருட்டுல நான் உங்கிட்ட பாட்டிலை மாத்திக் குடுத்துத் தொலச்சிட்டேன்! அதுல இருந்தது
மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு
வெச்சதுப்பா! ‘தன்னோடது’ன்னு மாமி அந்த பசுவோட கோமிய பாட்டிலை லேப்’ல குடுத்துட்டதால இவ்வளவு கோளாறு!…மன்னிச்சுடுடா!” எனக்குத் தலை சுற்றியது!
அப்படியானால்…… மதுரை மாமா பக்தி சிரத்தையுடன்,
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, புரோகிதர் கொடுத்த
கோமிய தீர்த்தத்தை பவ்யமாக
வாங்கி, தன் தலையில் தெளித்துக் கொண்டு,
வாயிலும் ஊற்றிக்கொண்டாரே….அது…… அது…
ஜூன் 2009
கதையின் சுட்டி: புதுமனை புகுவிழா
கதை ஆய்வு.
இக்கதையில் சிறப்பு அம்சம் ஒன்றும் தெரியவில்லை; முடிச்சைத் தவிர. ஆனாலும் ஆரம்பம் முடிவு போன்றவை ஈர்க்கின்றன. படிக்கலாம் சிரிக்கலாம் ரசிக்கலாம். ஆசிரியரின் கற்பனை கொடி கட்டிப் பறக்கின்றது.
ஆனால் இப்படியும் நடக்குமா என்றெல்லாம்
கேட்கக்கூடாது. கதையைப் படித்து முடித்த போது முன் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவில்
வந்தார். .
ஆசிரியர் பற்றிய குறிப்பு.
ஆசிரியரின் இயற்பெயர் ஆர். நந்தகோபால். இவரது படம் கிடைக்கவில்லை. விவரங்கள் தமிழ்
விக்கியில் கிடைத்தன,
ஆர். நந்தகோபால் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுநிலை வரைவாளராகப்
பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா,
சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி எனும் புனைப் பெயர்களில் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் நகைச்சுவைத்
துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீகத் துணுக்குகள் போன்றவைகளை எழுதியிருக்கிறார்.
தமிழில் வெளியான அச்சு இதழ்களில் இவருடைய படைப்புகள் நகைச்சுவைத்
துணுக்குகள்-1150, சிறுகதைகள்-210 (50% நகைச்சுவைக் கதைகள்), பொதுக் கட்டுரைகள்-12, ஆன்மீகக் கட்டுரைகள்-12 , கவிதைகள்-35 வெளியாகி இருக்கின்றன.
தினத்தந்தி, தினமலர், மாலை முரசு, மாலை மலர், காலைக்கதிர், தினகரன், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ஜங்க்ஷன், ஆனந்த விகடன், கல்கி, தேவி, ராணி,
பாக்யா, தினத்தந்தி-குடும்பமலர், தினமலர்-வாரமலர், காலைக்கதிர்-வாரக்கதிர், தினகரன் -வசந்தம், தினகரன் அருள் ஆகிய வார இதழ்களிலும், மங்கை, மங்கையர் மலர்,
கோகுலம் கதிர், பெண்மணி, தங்கமங்கை, அமுதசுரபி ஆகிய மாத இதழ்களிலும்,
குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த், குமுதம் பக்தி ஸ்பெஷல், தேவியின் கண்மணி ஆகிய மாதமிருமுறை இதழ்களிலும்,
மேலும் தமிழில் வெளியாகி நின்று போன பல முன்னனி இதழ்களிலும், சில சிற்றிதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.
தற்போது இணையத்தில் வெளி வரும் இணைய இதழ்களில் திண்ணை, கீற்று,
அதிகாலை, முத்துக்கமலம், அந்திமழை,
இதயநிலா, தமிழோவியம், நிலாச்சாரல், அப்புசாமி, தமிழ்ச்சிகரம், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.
மேற்கூறிய விவரங்கள் மூலம் எனக்கு தெரியாத அச்சு இதழ்கள், மற்றும் இணைய இதழ்கள் பட்டியல் கிடைத்தது.
= = = =
காலை வணக்கம்.
பதிலளிநீக்குமாலை சாற்றுவது... முதலில் கணவனுக்கு மாலை. அவன், தனக்கு மாலை. மாலை மாற்றுவது.. தன் மாலை அவனுக்கு, அவன் மாலை தனக்கு. இது திருமணத்தில் ஒரு நிகழ்வு
நீக்குவாங்க ஜீவி ஸார் வணக்கம்.
நீக்குநெல்லை விளக்கம் இடம் மாறி இருக்கோ?!
நீக்குலேசா நெளியக்கூடிய ஹி
பதிலளிநீக்கு.ஹி.. கதை. நிறைய ஹா..ஹா.ஹா..
ஹாஹி ஹிஹா ஹாஹி ஹிஹா...
நீக்குஇன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை. மாலை... புதிய தகவல்
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஇன்றைய நகைச்சுவைக் கதை... நல்லாத்தான் இருந்தது.
பதிலளிநீக்குகிரிஜா மணாளன் பற்றி நான் ஏதோ அறிவேன். ஆனால் நினைவுக்கு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ரொம்ப இடுக்கில் மாட்டிக்கொண்டு நூழிலையின் நுனி மட்டும் ப்படுத்துகிறது!
நீக்குலேடீஸ் எக்ஸ்பிரஸ் கிரிஜா ராகவனின்
நீக்குநினைவில் சொல்ல்கிறீர்களா, ஸ்ரீராம்?
இல்லை ஸார்.
நீக்குஇந்த கிரிஜா மணாளன் சுமார் 10/15 வருடங்கள் முன்னர் நன்கு அறிமுகம் ஆனவரே. அப்போத் திருச்சியில் இருந்தார் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொண்டு கிரிஜா மணாளன் ஆனவர். எங்கள் அனைவருக்கும் பொதுவான நண்பர் காமேஷின் திருமணத்தின்போது இவரை முதலில் சந்தித்தேன். நான் இருந்த பல குழுமங்களில் இவரும் இருந்திருக்கார். பின்னர் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலை.
நீக்குமுன்பெல்லாம் கேரக்டர் என்று பாக்ஸ் கட்டி தனி மனித கல்யாண குணங்களை கலகல சிரிப்பு வரவழைக்கிற மாதிரி பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளர்களின் குட்டி கட்டுரைகள் வரும்.
பதிலளிநீக்குஇந்தக் கதை மாமா.
கிரிஜா மனாளன் கூட அந்த மாதிரி கேரக்டர் வர்ணிப்புக்கான ஒரு மாமாவை தயாரித்தவர்
இந்தக் கதைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார் போலும்.
கேரக்டர் பற்றிய எழுத்து என்றால் சாவிக்குதான் முதலிடம்.
நீக்குநாடோடி கூட என் நினைவுக்கு வந்தார். அப்புறம் மாம்பலம் டைம்ஸ்லே வாராவாரம் எழுதற ராகவன் ஸாரும்.
நீக்குஇப்போ மாம்பலம் டைம்ஸ்லாம் வர்றதோ, ஸ்ரீராம்?
கடுகு பி எஸ் ரங்கநாதன் அவர்களும் கேரக்டர் தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார் சாவியின் பத்திரிகையில்.
நீக்கு//இப்போ மாம்பலம் டைம்ஸ்லாம் வர்றதோ, ஸ்ரீராம்?//
நீக்குயாருக்குத் தெரியும் ஸார்?! மாம்பலம் காரங்களைதான் கேட்கணும்!
//கடுகு பி எஸ் ரங்கநாதன் அவர்களும் கேரக்டர் தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார் சாவியின் பத்திரிகையில்.//
நீக்குஆமாம். அப்புறம் நிறையபேர் தொடர்ந்தார்கள். நம்ம பாமரன் வாசு பாலாஜி ஸார் கூட முன்னர் அவ் ஆர் பிளாக்ல கேரக்டர் நிறைய அழகா எழுதி இருக்கார்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா. வாங்க. பிரார்த்திப்போம்.
நீக்கு'கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?' என்பார்கள். அதான் முதல் நாள் ராத்திரியே மாட்டைப் பிடித்து ஏற்பாடு பண்ணியாச்சே' என்ற சந்தேகம் எழுந்தாலும்
பதிலளிநீக்குமனுஷ கோமியத்தின் மகத்துவத்தை விலாவாரியா விவரிக்கிற இந்தக் கதை கிடைத்திருக்காதே என்ற
ஞானோதயம் பின்னால் தான் கிடைத்தது. அப்போ கதையோட தலைப்பு ஏன் இவ்வளவு சாதாரணமா?
மாமி, பசுமாடு, கோமியம் இதெல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி கிரிஜா மணாளனுக்கு ஒரு கதைத் தலைப்பு கிடைக்காமலா போயிற்று? என்ற நியாயமான சந்தேகமும் கூடவே.
ஆயிரம் சொல்லுங்கள் இந்த மாதிரி கலகலப்பான கதை வாசித்து எவ்வளவு நாளாச்சு? என்ற ஏக்கம் தீர்ந்த திருப்தி ஏற்பட்டது என்னவோ உண்மை தான். வாசிக்கத் தந்த ஜெஸி ஸாருக்கும் நன்றி சொல்லிடலாம்.
கதையின் நிஜ ஹீரோ அந்த மதுரை மாமா தான்.
பதிலளிநீக்குஎன்ன தான் இணையத்திலிருந்து சுட்டது என்றாலும் நிறைய மாமிகளுக்கு நடுவே ஒரு குடைமிளகாய் மூக்கு மாமா கிடைக்காமலா போய் விட்டார், கேஜிஜி ஸார்?
அந்த மாமா பற்றிய என் ஊகத்தை முதலிலேயே ஸ்ரீராமுக்கு சொல்லி விட்டேன். ஆ நி ரா.
நீக்குJayakumar
கோபுலுவோட படம் பொருத்தமாய் இருக்கும்!
நீக்குஇந்த பூக்கடை மாலை விடயம் பழையதோ முனாபே படித்து இருக்கிறேன் ஜி.
பதிலளிநீக்குமீண்டும் வாழ்த்துவோம்...
வாழ்த்துவோம். நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவணக்கம். வாங்க மனோ அக்கா.'
நீக்குஎந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெருந்தன்மையுடன் திரு.துரைப்பாண்டி செய்யும் உதவி அவருக்கு கரம் குப்பி நன்றி சொல்ல வைக்கிறது.
பதிலளிநீக்குஉண்மைதான். போற்றப்பட வேண்டியவர்கள்.
நீக்கு100 வயதாகும் மருத்துவர் ஹோவர்ட் டக்கர் இன்னும் தனது மருத்துவ சேவையைத்தொடர்ந்து கொண்டிருப்பது பிரமிப்பைத் தருகிறது. 103 வயதாகும் என் தாயாரின் நினைவு வருகிறது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
பூக்கடை துரைபாண்டி அவர்களின் செயல் பாராட்டத்தக்கது. மனம் நெகிழ்வித்த பாஸிடிவ் செய்தி. அவரின் மனிதாபிமான இந்த செயலுக்கு அவரை கைக்கூப்பி வணங்க வேண்டும்.
இன்றைய தலைப்பில் கதைப்பகிர்வு என எதையும் குறிப்பிட காணோமே என நினைத்தேன். ஆனால் கதையை கண்டு படித்த பின்தான் சனிக்கிழமை பதிவு முழுதாக நிறைவடைந்த. திருப்தி உள்ளத்தில் எழுந்தது.
கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. அந்த மாமி வீட்டுக்குச் சென்று அதை வாங்கும் போதே இப்படித்தான் இருக்கும் எனவும் முதலிலேயே ஊகித்தேன். தவிரவும் இதை எங்கோ எப்போதோ படித்த நினைவும் வந்தது. இப்போதும் ரசித்து படிக்க தந்து உதவவியதற்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
துரைப்பாண்டி அவர்களின் செயல் வியக்க வைக்கின்றது...
பதிலளிநீக்குபூ வியாபாரி துரைப்பாண்டி அவர்களின் எண்ணம் வாழ்க!
பதிலளிநீக்குஆவர் செய்யும் தொண்டு சிறப்பானது.
போற்றி பாராட்ட வேண்டும்.
அஜய் வாழ்க!, தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர் வாழ்க!
பதிலளிநீக்குநகைச்சுவை கதை.
பதிலளிநீக்கு//அவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநாள் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து போகும்படி ஒரு ‘நோஸ்கட்” நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என் திட்டம்.//
திட்டம் போடாமலே மாமாவை ஒரு வழி பண்ணிவிட்டாரே கோபால்!
பாவம் மாமா. எல்லோரையும் சுறு சுறுப்பாக வேலை வாங்கிய மாமாவுக்கு இந்த கதியா?
கோமியம் இப்போது பூஜை பொருட்கள் விற்கும் கடையில் விற்கிறார்கள்.
கங்கை தீர்த்தம் விற்கிறார்கள் தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்யலாம்.
பூக்கடை நடத்தும் திரு துரைப்பாண்டி, சேவை மனப்பான்மையுடன் இப்படிச் செய்வது அட! என்று போட வைத்தது. எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் கிடைக்கும் அனுபவங்கள்தான் சிந்திக்கத் தூண்டுவதோடு சேவை மனம் உள்ளவர்கள் அதைச் செயல்படுத்தவும் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குதிரு துரைப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.
கீதா
மருத்துவரும் வியக்க வைக்கிறார்.
பதிலளிநீக்கு//1947ல் மருத்துவம் பார்க்க துவங்கிய போது பின்பற்றிய அதே அணுகுமுறையை தான் இப்போதும் தொடர்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னுடைய ஊழியர்கள், வருகை தருவோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன்.”//
நல்ல விஷயம்..
கீதா
நகைச்சுவைக் கதை. பல இடங்கள் சிரிக்க வைத்தன.
பதிலளிநீக்குபல வீடுகளில் இப்படி ஒரு மாமா அல்லது பாட்டி, இப்படி ஒரு கேரக்டர் இருப்பார் எல்லோரையும் முடுக்கி விட்டு வீட்டு நிகழ்வுகள் சரியாக நடப்பதற்கு. எங்கள் வீட்டிலும் ஒருவர் இருந்தார்.
எழுத்தாளர் இது வரை அறிந்ததில்லை. ஜெகே அண்ணாவிற்கு நன்றி.
கீதா
மாடும் கன்றும் கூடவே இருக்கையில் கோமியத்துக்கு அலைவானேன்? இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாச் சிரிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது இல்லையோ? கிரிஜா மணாளன் நகைச்சுவை எழுத்தாளர் என்றே பெயர் பெற்றவர். படம் இணையத்திலிருந்தா? கேஜிஜியோனு நினைச்சுட்டேன்.
பதிலளிநீக்குநல்ல செய்திகள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன. முக்கியமாய் வயதான மருத்துவர்/மனைவி, மற்றும் மாலை கட்டும் நபர்.
கிரஹப்ரவேசப் படத்தில் அந்த மனிதர் கையில் வைத்திருக்கும் உம்மாச்சி படத்தைக் கூர்ந்து நோக்கினால் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் இருக்கிறாப்போல் தெரியுது. அதிலும் அந்தத்தலைக்கொண்டை!
பதிலளிநீக்குகாசு சோபனா மறுபடி தலையைக் காட்டி இருக்காரே! அவர் யார் என்னும் சஸ்பென்சைத் தான் உடைச்சுடுங்களேன். மண்டை வெடிக்கும்போல இருக்கு. :)))))
பதிலளிநீக்குவருகை தந்து கருத்துக்கள் கூறிய யாவர்க்கும் நன்றி.
பதிலளிநீக்குJayakumar
போற்றத்தக்கவர்கள். கதை அருமை.
பதிலளிநீக்குமனித நேயர் பூ வியாபாரி போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குஉதவும் கரங்களை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகதை படித்து சிரித்தேன் ஹா....ஹா.