புதன், 19 அக்டோபர், 2022

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதைப் போல் .. நடிகைகளின் ர ஏ மோ கொ இ ?

 

நெல்லைத்தமிழன் : 

1.ஒரு படம் பார்க்கச் சுமார் 300-500 ரூபாய் ஆகிறது. அந்தப் படம் நம் கற்பனையைத் தூண்டுவதில்லை. ஆனால் அதே ரூபாய்க்கு வாங்கும் ஒரு புத்தகம் நம் அறிவுக் கண்ணைத் திறக்கும் அல்லது கற்பனை வளத்தைப் பெருக்கும். பலமுறை படிக்கவும் முடியும். அப்படி இருக்கும்போது, புத்தகத்தின் விலை அதிகமாக நமக்குத் தோன்றுவதன் காரணம் என்னவாயிருக்கும்? ஏன் புத்தகத்திற்கு டிஸ்கவுண்ட் போட்டால்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கும் எண்ணம் வருகிறது?

# 1. புத்தகம் தயாரிப்பு செலவு அதிகம் இல்லாதது என்று நினைக்கிறோம். எழுத்தாளர்கள் புத்தகம்  வெளி வருவதால் அதிகம் சம்பாதிப்பதில்லை ! தள்ளுபடி விலையில் பல நூல்கள் விற்கப்படுகின்றன. சினிமா கும்பலோடு கொண்டாட்டம். புத்தகம் தனி மனிதர் ரசனை. 

2. நம் கலாச்சாரம், வரலாற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைக்காமல், அதில் தற்காலத்தைய மதம், அரசியலைப் புகுத்தும் எண்ணம் இந்த எத்தர்களுக்கு ஏன் வருகிறது?

# 2. எத்தர்கள் என்று சொன்ன பின் லாபம் தவிர வேறு நோக்கு இராதே !

3. நம் நிலத்திற்குச் சம்பந்தமில்லாத ஆப்பிளுக்கு ஏன் இவ்வளவு மகிமை? வாழைப்பழத்தை ஏன் ஏளனமாகப் பார்க்கும் எண்ணம் வருகிறது?

# 3. An apple a day காரணமாக இருக்கும்! 

4. ஒருவரைப் பார்க்கப்போனால், எதற்காக ஏதேனும் கொண்டுபோக வேண்டும்? (நோய்வாய்ப்பட்டவரைப் பார்க்கப்போவதைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக ஒருவர் வீட்டிற்குப் போகும்போது)

# 4. வெறுங்கையுடன் போவது நம் கலாச்சாரம் அல்ல.

5. இரண்டு முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதுபோல, நடிகைகள் நடித்தால் அப்படி ஏற்படுவதில்லையே. ஏன்? (நல்ல சந்தர்ப்பம் சில பல நடிகைகள் படத்தைப் போடுவதற்கு. நழுவவிட்டுவிடாதீர்கள்)

# நடிகர்களை தலைவனாகவோ அல்லது "கடவுளா" கவோ பார்க்கிற அசடுகள் நடிகைகளை வேறு வகையில் பார்க்கிறார்கள்.

& பாருங்க இங்கே நந்தினியும் குந்தவையும் சந்தோஷமாக selfie எடுத்துக்கிறாங்க ! நடிகர்கள் யாராவது இவ்வளவு ஸௌஜன்யமாக selfie எடுத்துக்குவாங்களா !!

நடிகர்கள் எல்லோரும் எங்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் - என்கிறார்கள் இங்கே உள்ளவர்கள் !







(நன்றி நெ த ! எல்லாப் படங்களும் போட்டாச்சு என்று நினைக்கிறேன்!)

6. சொத்து என்று வரும்போது, மகன்களுக்குச் சமமாகப் பிரிப்பது முறையா, இல்லை, யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்த்து அதன்படிப் பிரிப்பது முறையா?

# மகள்களை கணக்கில் எடுக்க வேண்டாமா ? 

இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு பொதுத் தீர்வு கிடையாது.  அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யவேண்டும். பெற்றோர்கள் யாருக்கு என்ன தேவை என்று அறிய மாட்டார்களா என்ன ?

& முன்பே இந்தக் கேள்வியை நீங்க கேட்டிருப்பதாக ஞாபகம். 

7. யூடியூப் பேட்டிகளில், பேட்டியளிப்பவர் சொல்வது அவரது சொந்தக் கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லும் முதுகெலும்பில்லாத சேனல்கள், எதற்காக அத்தகைய தவறான கருத்துகளைச் சொல்பவர்களைப் பேட்டி எடுக்கவேண்டும்? ஏ சர்டிபிகேட் படம் எடுத்துவிட்டு, ஆபாசத்திற்கு படத்தில் நடிப்பவர் பொறுப்பு, படத்தைப் பார்ப்பது பார்வையாளர்களின் பொறுப்பு என்று தட்டிக்கழிப்பதைப் போன்றதல்லவா இது?

$ Cinema,சமையல், alliance demands,ஸ்ரார்த்தம் தவிர்த்து கேளுங்கள் என்றால்,.....

# மாறுபட்ட கருத்துகள் மக்களைச் சென்று அடையட்டும் , மக்கள் யோசித்து முடிவு செய்யட்டும் என்று அவர்கள் சொன்னாலும், அடிப்படையில் எது பார்ப்பவர் உணர்வுகளைத் தூண்டும் என்று அவர்கள் நினைப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணர்வுகள் ஆதரவாகவோ எதிராகவோ இருப்பினும் அவர்களுக்கு லட்சியமில்லை. சரக்கு விலை போனால் சரி.

பொன்னியின் செல்வன் படம் வந்தாலும் வந்தது, ராஜராஜன் எங்க சாதி, நான் அவர் வாரிசு, நான் பழுவேட்டரையர் வாரிசு, ராஜராஜன் தெலுங்கு முத்தரையர் என்று ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்களே. இதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?

# பொன்னியின் செல்வன் பிரபலமாக இருந்தால் சந்தோஷம்தான். 

வரலாற்றில் குறைந்த அறிவை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு, சோழ சாம்ராஜ்யத்தின் கூட இருந்து பார்த்தவர்கள் போல கதை விடுகிறார்களே பேராசிரியர் தெய்வநாயகம் உட்பட. இந்த மாதிரிப் பேச, ஏதேனும் வெளிநாட்டு சக்திகள் பணம் கொடுக்கின்றனவோ?

# பேராசிரியர் தெய்வநாயகம் என்ன சொன்னார் என்று தெரியாமல் கருத்து சொல்லக்கூடாது.

வெளி நாட்டு சக்திகள் மேல் சந்தேப்படுவது நமக்கு வழக்கமாகி விட்டது!!

& மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு படம் வெளிவரும்போது, அதை வைத்துக்கொண்டு, 'தான்' பிரபலம் ஆகவேண்டும் என்று சில தனி மனிதர்கள் யத்தனிப்பது சகஜமே! (சில சமயங்களில் படத்தை விளம்பரம் செய்யும் ஏஜன்சிகளும் இந்த மாதிரி ஆட்களுக்கு தக்க சன்மானம் அளித்து - இப்படிப் பேச வைத்து, படத்தை விளம்பரம் செய்வார்கள். )

கீதா சாம்பசிவம் : 

இந்தக் காலத்தில் கல்யாணம் என்பது மிக மலிவான ஒன்றாக ஆகிவிட்டதோ?பேருந்துகள் நிற்குமிடத்தின் நிழற்குடையில் வைத்து ஒரு சிறுவன் இன்னொரு சிறுமிக்குத் தாலி கட்டி இருக்கிறானே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

# அறியாத பிள்ளைகள் டிவி சினிமா தாக்கத்தினால் ஏதோ அசட்டுக் காரியம் செய்ததை "பகிர்வது" சரியில்லை.  அதற்கு வரம்பு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லை. 

தாலி கட்டிவிட்டால் அந்தப் பெண் தனக்கு உரிமை என்னும் எண்ணத்தில் கட்டி இருப்பானோ? அப்போ பெண் என்பவள் ஒரு ஆணின் உடைமைதானா?

# ஒரு ஆணின் "உடமை" யாக பெண்கள் திருப்திப் பட்ட காலமும் இருந்தது.  ஆணும் தன் உடமையை கண்ணும் கருத்துமாக கவனித்த காலம் அது. 

திருமண பந்தம் என்பது அதன் உள்ளார்ந்த மதிப்புகள் குறித்து அறியாமல் வெறும் தாலி.கட்டிக்கொண்டால் திருமணம் முடிந்தது என்னும் கட்டுக்குள் வந்திருப்பதற்கு யார் அல்லது எது காரணம்?

# "பெண் கழுத்தில் தாலி ஏற வேண்டுமே " என்று பெற்றோர் தம் கவலையை சம்பிரதாயமாகச் சொல்லும் வழக்கம் பரவலாக இருந்ததை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். சில சடங்குகள் ஆழ்ந்த தாக்கம் தர வல்லவை. தாலி கட்டுவது அம்மாதிரி ஒன்று. இதற்கு நம் நம்பிக்கையும் மனப்போக்கும் காரணம். 

அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இதைக் குறித்து என்ன சொல்கின்றனர்?அந்தச் சிறுமி தாலி கட்டிக்கொள்வதன் விபரீதம் புரியாமல் சிரிப்புடன் முகத்தை மட்டும் மூடிக் கொள்வது சரியா?

# பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் என்று யார் சொல்ல இயலும் ?

இருவரும் இப்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தத் தயாராகி விட்டார்களா?

& அது அவர்களைத்தான் கேட்கவேண்டும். அந்தக் காணொளியில் இருவர் முகத்திலும் சீரியஸ்நெஸ் தென்படவில்லை. சும்மா விளையாட்டுக்காக நடித்து, அதை மொபைலில் பதிவு செய்து, நண்பர்களுக்குள் பகிர்வு செய்து விளையாடியிருப்பார்கள். அதை யாரோ பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இது பற்றிப் பேசி , விவாதித்து, நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.  

= = = = =

எங்கள் கேள்வி :

1) உங்கள் நினைவில் நீங்காத இடம் பெற்ற தீபாவளி எந்த ஆண்டு கொண்டாடினீர்கள் ? அப்படி நீங்காத இடம் பெற்றது ஏன்? 

= = = = =

படம் பார்த்து கருத்து  எழுதுங்க :

1) 


2) 

3) 

இவை இரண்டும் என்ன பேசி இருக்கும்? 
= = = = = =




109 கருத்துகள்:

  1. ஆ...ள் -- வா... பழ ஒப்பீடு அற்புதம். நெல்லை உலகம் சுற்றிய வாலிபன். அவருக்கு ஆ...ளும் ஒன்றே, வா..யும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேட்டிவ் பழங்கள் தவிர, மற்ற ரொபஸ்டா போன்ற வாழைப்பழங்கள் வேஸ்ட். மக்கள் மனதில் வாழைப்பழம் cheap, ஆப்பிள் உயர்ந்தது என்ற எண்ணம். அதனால் வா பழம் ஒரு சீப் வாங்கிக்கொண்டு செல்வதைவிட இரண்டு ஆப்பிள் கொண்டு செல்வது பெருமை என்ற எண்ணம்.

      நீக்கு
    2. பழங்களில், தாய்வான் திராட்சை, பைனாப்பிள், லிச்சி, தாய்லாந்து ரம்பூடான், நம்ம ஊர் மொந்தன் வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், தென்னாப்ரிக்கா ஆரஞ்சு (குட்டி ஆரஞ்சும் ஒட்டிக்கொண்டிருக்கும்படியான அமைப்பு, விதையில்லை) ப்ரான்ஸ் திராட்சைத் தோட்டங்கள் இருக்கும் பகுதியில் வாங்கிய கரும் திராட்சைகள், லண்டனின் ஸ்ட்ராபர்ரி போன்றவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. நடிகர்கள், நடிகைகள் என்ற பேதமில்லாமல்
    இரு சாராருக்கும் ஆண் ரசிகர்களே அதிகம். இருந்தும் இரு முன்னணி நடிகர்களில் பேதம் பார்க்கிற மாதிரி இரு நடிகைகளிடம் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. இரண்டு பேரையும் பிடித்திருக்கிறது என்ற கவர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால்.

    பதிலளிநீக்கு
  3. மகன், மகள் என்பதெல்லாம் முந்தைய தலைமுறை சம்பந்தப்பட்ட ஆசாபாசங்கள்.
    மகன், மகளுக்குத் திருமணம் ஆனதும் தங்கள் சேமிப்பை அட்டகாசமாக செலவு செய்தபடி (இதற்கு பெயர் enjoy,-யாம்) தனித்து வாழும் பெற்றோர்களைத் தான் சந்திக்கிறேன்.
    "உன் பெண்டாட்டி உனக்கு எப்படியோ, அப்படித்தான் எனக்கு என் பெண்டாட்டியும்" என்று மகனிடமே சொல்கிற தந்தைமார்களும் உண்டு.
    வீட்டில் மருமகனும், மாமனாரும் ஒன்றாக உட்கார்ந்து மதுவருந்த அவர்களுக்கு சைட் டிஷ்களை பரிமாறுகிற தாயும், மகளும் என்று.
    கேட்டால் ஞாயிற்றுக் கிழமை வேறு எதற்காகத் தான் இருக்கிறது என்று எகத்தாளமாக பதில் வரும் காலமிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களை, அமெரிக்கா தவிர வேறு எங்காவது சந்தித்திருக்கிறீர்களா? உடனே, சென்னையில், பசங்கள்லாம் வெளிநாட்டில் செட்டிலாகி, உன் பணம் வேண்டாம் என்று சொன்னதும், செலவழித்து எஞ்சாய் பண்ணும் பெற்றோரைக் காண்பிக்கக்கூடாது

      நீக்கு
    2. சென்னையில் தான். அது கூட 10 வருடங்களுக்கு முன்பே. இப்படியான ஜாலியான வாழ்க்கைக்கு சமூகம் என்றோ வந்தாயிற்று.

      நீக்கு
    3. பெரும்பாலான மக்கள் சொந்த டேஸ்ட்டுகளில் திளைக்க ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது. மகன், மகள் எல்லாம் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு தனித்தனியே தான். கணவன் காலமாகி திருமணமாகாத கை நிறைய சம்பாதிக்கும் மகளிடம் மாட்டிக் கொள்ளும் தாயின் பாடு தான் பரிதாபம்.
      தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க மகளுக்குக் கிடைத்த ஒரு டூல் தான் அந்தத் தாய். சுற்றுப்புற வாழ்க்கைப் போக்குகள் புரிபடாத அம்மாஞ்சித்தன கேள்விகளை இந்தப் பகுதியில் பார்க்க பொழுது எனக்கு வேடிக்யாக இருக்கிறது.

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. நெல்லை.. யூட்யூபெல்லாம் குதற்காலம். வாரப்பத்திரிகைகளின் கடைசிப் பக்கத்தைப் பார்ப்பதில்லையா நீங்கள்? ஆசிரியர், வெளியிடுவோர் விவரங்கள் இருக்குமே அந்த இடம். அந்த இடத்தில், கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களின் கருத்துக்களே என்ற குறிப்பு இருக்கும்.
    இதையே கட்டுரையாளர்களின் பெருமை போல நா. பார்த்தசாரதி தனது தீபம் பத்திரிகையின் கடைசி பக்கத்தில் 'இந்த இதழ் கட்டுரைகள், அவற்றை எழுதிய படைப்பாளிகளின் தார்மீக பலத்தில் திகழ்கின்றன' என்ற குறிப்பு இருக்கும்.
    குறிஞ்சி மலரின் அரவிந்தனைப் படைத்தவரின் நிலையே இது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கட்டுரையிலேயே இது அவரது சொந்தக் கருத்து, எங்கள் கருத்துக்கு மாறுபட்டதுன்னு போட்டுடலாமே. இருந்தாலும் பயந்தாங்கொள்ளிகள்தாம்.

      நீக்கு
    2. பத்திரிகை என்பது ஸ்கூல் மேகஸின் அல்ல. அதற்கென்று உள்ளடக்க சமாசாரங்களில் ஒரு தோற்றப்பொலிவு வேண்டியிருக்கிறது.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. அந்தக் காக்கை ஏதோ சொல்லிண்டிருக்கு/அல்லது சொல்ல வருது.
    பாவம் குழந்தை, முகத்தில் கதவு பலமாக மோதி இருக்குப் போல!
    பூனை ஓணானைச் சாப்பிடுமா? தெரியாது/பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுபேருக்கும் வால் இருக்கு, உபயோகமில்லாமல்... என்று சொல்லிக்கொண்டிருந்திருக்குமோ?

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. என்னோட தலை தீபாவளி தான் மறக்க முடியாத தீபாவளி. சென்னையிலிருந்து மதுரை செல்ல அப்போதிருந்த திருவனந்தபுரம் மெயிலில் முன்பதிவு செய்து கொடுத்திருந்தார் பெரியப்பா. ஆனால் அம்பத்தூரிலிருந்து நாங்கள் கிளம்பி எழும்பூர் வந்து நடைமேடையில் நுழையவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது! பின்னாடி எப்படி போய்ச் சேர்ந்தோம் என்பதைப் பதிவாக பல வருஷங்கள் முன்னாடியே போட்டுட்டேன். போயிட்டோமுல்ல! :)))))))

    பதிலளிநீக்கு
  8. அதே போல் தலைப்பொங்கலும். வழக்கம்போல் செங்கோட்டை பாசஞ்சரில் முன்பதிவு செய்துட்டு இடத்தில் உட்கார்ந்திருந்தோம். ரயில் கிளம்பும் சமயம் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் ஒரு கூட்டம். இரவு முழுவதும் ஒடுங்கி உட்கார்ந்த வண்ணம் தண்ணீர் கூடக் குடிக்காமல், கழிவறைக்கும் போக முடியாமல் நசுங்கிக் கொண்டே கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து கருவிலி ஊருக்குப் போய் அன்றே வீட்டிலும் வேலை அதிகமானதில் மயக்கம் போட்டு விழுந்தது எல்லாம் தனிக்கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைதீபாவளி, தலைப்பொங்கல் - நல்ல வசூல் வேட்டைதான் போலிருக்கிறது... இந்த இரண்டுமே நான் கொண்டாடவில்லை. விட்டுப்போனதை இப்போ கேட்கலாம் என்று நினைத்தால் மாமனாரும் இல்லை..என்ன செய்ய? ஹாஹாஹா

      நீக்கு
    2. யார் யாருக்கு வசூல் வேட்டை? அதைக் குறித்து எங்கே சொல்லி இருக்கேன்? புக்ககத்தினருக்குச் சீர் செய்வதில் பெண்ணின் பிறந்தகத்தினருக்குத் தான் செலவு. தலை தீபாவளி/பொங்கல் ஆகியவற்றில். மற்றபடி வசூலெல்லாம் இருக்காது கனவு காணாதீங்க.

      நீக்கு
  9. எங்க வீட்டுக்கு வரவங்களுக்கு ரொம்பத் தெரிஞ்சவங்கன்னா நாங்க வேண்டிக்கொள்வதே ஆப்பிள் பழத்தைத் தவிர்த்து வேறே ஏதானும் வாங்குங்க என்பது தான். பலரும் ஆப்பிள்களை வாங்கி வந்துடறாங்க. இரண்டு போதும். மிச்சத்தை நீங்களே எடுத்துக்கோங்க என்றால் கோபம் வருது! முன்னெல்லாம் நம்மவரும் அப்படிச் சொல்லாதே! தப்பாய் நினைப்பாங்க என்பார். இப்போல்லாம் அவரும் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வாழைப்பழம் எத்தனை வாங்கினாலும் செலவு ஆகிடும். ஆனால் குறிப்பிட்ட ரகங்கள் தான். கற்பூர ரஸ்தாளி, ஏலக்கி, மலைப்பழம், ரஸ்தாளி போன்றவைகளே அதிகம் செலவு ஆகும். பூவன்பழம் பொதுவாய் வாங்குவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  10. நடிக, நடிகையரைப் பார்க்கக் கூட்டம் கூடுவதே எனக்குப் பிடிக்காத ஒன்று. நம்மைப் போலத்தானே அவங்களும். இதில் அடிதடி, தள்ளுமுள்ளு, இப்போல்லாம் செல்ஃபி மோகம் வேறே! என்னவோ போங்க, சினிமாக்காரங்கன்னா கொம்பா முளைச்சிருக்கு? நடிகரோ/நடிகையோ நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடிகரோ/நடிகையோ நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே//

      இல்லை அவர்கள் இறைவனின் பார்வையில் நம்மைவிட இழிவானவர்கள்.

      நாம் இறுதிவரை ஒழுக்கமானவர்கள்.

      பதிலளி

      நீக்கு
    2. அதெல்லாம் சரிதான் கீசா மேடம்... அப்புறம் ஏன் நாம, 1880ல சந்திரபாபுவைத் தொட்டுவிடும் தூரத்தில் பார்த்தேன், பத்மினி என்னைப் பார்த்துச் சிரித்தார் என்றெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு எழுதுகிறோம்? பிரபலங்கள் என்றாலே அவர்கள் தனிதான்.

      நீக்கு
    3. 1880... ஆ ? அப்பவே பிறந்தாச்சா.... ?

      நீக்கு
    4. சந்திரபாபு/பத்மினியை எல்லாம் நான் பார்த்தது இல்லை. வீட்டுக்கு நேர் எதிரே சித்ராலயா ஸ்டுடியோவின் அலுவலகம் (மதுரைக்கிளை) இருந்ததால் கொடைக்கானலில் நடிக்க வரும் நடிக,நடிகையர் அங்கே வருவாங்க. பார்த்திருக்கேன். அதுக்குனு வாயைப் பிளந்துண்டு எல்லாம் போனது இல்லை. ரவிச்சந்திரன் மட்டும் ஒரு நாள் முழுதும் தங்கி இருந்ததால் அவரிடம் எல்லோருமே கையெழுத்து வாங்கினோம். அதில் நானும் ஒருத்தி தான்.

      நீக்கு
    5. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து பழம் பெரும் எழுத்தாளர்
    விக்கிரமன் (வேம்பு) நந்திபுரத்து நாயகி எனற சரித்திர நாவலை எழுதினார். அதில் குந்தவையை, குந்தவ்வை என்றே குறிப்பிடுவார்.
    விக்கிரமன் எனக்கு மிகவும் பழக்கப்பட்டவர்.
    "அதென்ன, குந்தவ்வை?
    வாசிக்கும் பொழுதெல்லாம் எரிச்சலாக இருக்கிறது" என்று அவரிடம் ஒருமுறை குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்தபடியே அவர், 'ஜீவி!
    குந்தவ்வை என்று உச்சரிப்பது தான் சரி. அவங்க மூதாதையர் இன்றைய தெலுங்குப் பக்கம்" என்று சொன்னாரே பார்க்கலாம்.
    அவர் சொல்லிவிட்டார். இருந்தும் இன்றைய வரை குந்தவையை குந்தவ்வை என்று மனசு ஏற்றுக்கொண்டதே இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் மனதை ஆட்கொண்ட விதம் அப்படி. என்னத்தை சொல்ல?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.... குந்தவை முஸ்லீம் மத்த்தைத் தழுவினார்னு ஒரு புதுக்கோஷ்டி சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அந்தக் காலத்தில் தெலுங்கு, தமிழ் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி தமிழகத்தில் இரண்டறக் கலந்திருந்தனர், பாண்டிய தேசத்தில் இது குறைவு

      நீக்கு
    2. // குந்தவை ...... மதத்தைத் தழுவினார்.. னு ஒரு புதுக்கோஷ்டி.. //

      இதை ரெண்டு மூனு வருசத்துக்கு முன்பே படிச்சிருக்கேன்..

      இது இப்போ புது உருட்டு..

      நீக்கு
    3. குந்தவை இஸ்லாம் மதம் என்பதெல்லாம் மிக மிக மிகப் பழைய செய்தி.என்னோடு ஒருத்தர் இதுக்காகச் சண்டையே போட்டிருக்கார். :)))) கண்டுக்காமல் போயிட்டே இருக்கணும்.

      நீக்கு
    4. மாலிக்காஃபூர் தென்னிந்தியா வந்தப்போவும் சரி, அதன் பின்னர் உல்லூக்கான் தென்னிந்தியப் படைஎடுப்பின் போதும் சரி தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களுக்குச் செய்த உதவி மறக்க முடியாத ஒன்று. அழகிய மணவாளர் என்னும் பெயரில் அப்போது இருந்த நம்பெருமாள் மேல்கோட்டையில் சில/பல வருடங்கள் தங்கி இருந்தார். விஜயநகரத்து அரசர்களும் அதற்கு முன்னால் ஹொய்சள அரசன் வீர வல்லாளனும் தமிழர்களும் அவர்களின் கோயில்களும் அழிக்கப்படாமல் இருக்கப் பல தியாகங்களைச் செய்திருக்கின்றனர். வீர வல்லாளன் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு மதுரையில் கொடிக்கம்பத்தில் தொங்க விடப்பட்டான். எல்லாம் ஶ்ரீரங்கம்/மதுரையைக் காப்பாற்ற அவன் போரிட்டதன் காரணமாகத் தான். விரிவாய்ச் சொன்னால் ரொம்பப் பெரிதாகி விடும்.

      நீக்கு
    5. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. புத்தொளியாகிய புதன்.. (உன்மையிலேயே)

    அன்பின்
    வணக்கங்கள்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  13. மாறுபட்ட பதிவு..

    இந்த ஒரு நாளை
    முழுக்க முழுக்க

    பூவையர் பூங்கா!…
    என,

    மாற்றுவதற்கு யோசனை எதுவும் உளதோ - அவ்விடத்தில்!..

    எப்படியோ நல்லா இருந்தா சரி!..

    ( பள்ளி நாட்களில் சக மாணவனை இப்படித்தான் ராவி விடுவது!..)

    பதிலளிநீக்கு
  14. சொத்து பிரிப்பதில் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் கூடுதலாக கொடுக்க நினைக்கலாம்... தவறில்லை மகனும் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மருமகள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது சரி, எப்படிப் பிரிக்கணும் என்பது கேள்வி. அதற்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டனர்.

      நீக்கு
    2. நான்கேட்டது, சொத்தை பசங்களுக்கு எப்படிப் பிரிப்பது சரியானது என்று. ஆனால் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஆசிரியர்கள் டபாய்த்துவிட்டனர்.

      நீக்கு
    3. சொத்து பிரிப்பது என்பது அந்தந்த நபர்களின் விருப்பம். அதில் எது சரி, எது சரியில்லை என்பது எதுவும் இல்லை. நான் சம்பாதித்த சொத்துகளை, என் விருப்பம் போல நான் பங்கீடு செய்யலாம். நான் செய்வதற்கு ஒரு justification என்னிடம் இருக்கும். இதில் எது சரி / எது சரியில்லை என்று வேறு யாரும் ஒன்றும் சொல்ல இயலாது. பரம்பரை சொத்து என்றால் அது பேரனுக்கு சேரும் என்று படித்துள்ளேன்.

      நீக்கு
    4. I think that is not correct. ஒரு தந்தை என்பவர், தன் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகத்தான் பிரித்துத் தரவேண்டும். பிள்ளைகளில் யாரேனும் தனக்குத் தேவையில்லை, இன்னொருவனுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னால்தான் அப்படிச் செய்யமுடியும் என்பது என் எண்ணம். தந்தையின் கடமை, தனக்குள்ளதை, தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்தால் வித்தியாசம் பாராட்டாமல் கொடுப்பது. இதைத் தவிர தன் சொந்த judgement அவ்வளவு சரியாக இருக்குமா? யோசியுங்கள். தந்தை எல்லோருக்கும் ஒரே விதமான வாய்ப்புகள், வசதிகள் கொடுத்திருப்பார் இல்லையா?

      இதுல 'நான், என்னுடையது, என்னிஷ்டம்' என்ற எண்ணம் வந்துவிட்டால், எனக்கு மூத்தவனை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு எல்லா வாய்ப்பையும் தருவேன், கடைசிப் பையனை எனக்குப் பிடிக்காது, அவனுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று ஆரம்பத்திலிருந்தே ஒரு தந்தை இருந்தால், அதனை அவருடைய இஷ்டம், அது சரிதான் என்று சொல்லுவீங்களா?

      நீக்கு
    5. // 'நான், என்னுடையது, என்னிஷ்டம்' என்ற எண்ணம் வந்துவிட்டால், எனக்கு மூத்தவனை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு எல்லா வாய்ப்பையும் தருவேன், கடைசிப் பையனை எனக்குப் பிடிக்காது, அவனுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று ஆரம்பத்திலிருந்தே ஒரு தந்தை இருந்தால், அதனை அவருடைய இஷ்டம், அது சரிதான் என்று சொல்லுவீங்களா?// அவரைப் பொருத்தவரை அது சரிதானே! இதில் நாம் சொல்ல என்ன இருக்கு!

      நீக்கு
    6. மூத்த பிள்ளை என்றால் அது பூர்விகச் சொத்தாக இருந்தாலும் பங்குக்கு வரக்கூடாது என நினைக்கும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து என்ன? தன் தம்பி, தங்கைகளுக்கு விட்டுக் கொடுத்துட்டுத் தன் சம்பாத்தியத்திலும் அவங்களுக்கே செய்யணும் என நினைக்கும் பெற்றோர் பற்றி?

      நீக்கு
  15. கூத்தாடன் நாளை அரசியலில் குதிப்பான் நாளை நமக்கும் சீட் கிடைக்கும் என்றும், கூத்தாடி நாளை அழகு போனவுடன் காணாமல் போய் விடுவாள் (ஜெயலலிதா விதிவிலக்கு) என்றும் பதாகைக்கு பாலூற்றும் அறியாமைகள் நினைக்கிறது போலும்...

    பதிலளிநீக்கு
  16. எனது தலைத்தீபாவளியில்
    பிறரால் எனக்கு கிடைத்த மனவேதனை கடந்த முப்பது ஆண்டுகளாக நான் தீபாவளிக்கு புதிய உடை எடுத்து கொண்டாடியதில்லை.

    தேவைப்படும் உடையை
    நாள், கிழமை பாராது அந்நொடியே எடுத்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  17. அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் பிறகு வெளியான திரைப்படங்கள் பலவும் பள்ளிப் பருவத்தின் இனக் கவர்ச்சியையே காதலென்று ஊளையிட்டுக் கொண்டு வந்தன.. இதனால் அழிந்து போன சிறார்கள் கணக்கில் இல்லை.. இதனைப் பள்ளிகளில் படிப்பித்தால் கூட சமுதாயம் உருப்படுவதற்கு வாய்ப்பு உண்டு..

    தன்னைக் காதலிக்க மறுத்த பண்ணையார் வீட்டுப் பெண்ணை- பள்ளியில் இருந்து மாட்டு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது வழிமறித்து வெட்டித் தள்ளிய சம்பவம் 1980 களில் தஞ்சாவூர் எல்லையில் நடந்தது..

    இத்தனை வருடங்கள் ஆகியும் -ஒரு விழிப்புணர்வும் ஏற்படவில்லை..

    இன்றைக்கு புதிதாய் கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் இருக்கைகள் இந்த மாதிரி விடலைகளாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன..

    யாருக்கும் வெட்கம் /கவலை இல்லை..

    பதிலளிநீக்கு
  18. ஏன் நீ கவலைப்பட வேண்டியது தானே?..

    எவருடைய கேள்வியோ காதில் விழுகின்றது..

    இன்றைக்கு இருக்கும் இருப்பு எதையும் எடுத்தெறிந்து பேசும் ரகம்..

    பதிலளிநீக்கு
  19. அந்தக் காலத்தில்

    பழம் தின்று கொண்டே ஒன்னுக்கு போன பையனுக்கு அறிவுரை சொன்னாராம் பெரியவர் ஒருவர்..

    நான் இதில் புரட்டிக் கொண்டு தின்பேன்.. உனக்கு என்ன?.. - என்று பதில் வந்ததாம்..

    பதிலளிநீக்கு
  20. இங்கே தலையலங்காரத்துடன்
    திரிஷாவும் ஐஸ்வர்யா மட்டுமே..

    குந்தவையையும் நந்தினியையும் இவர்களால் காண்பிக்க இயலாது..

    மணி ரத்தினத்தின் செல்வனைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதால் குழாயடிக் கோஷ்டிகளுக்கு மட்டுமே பைசா வருமானம்..

    படுக்கையில் கிடந்த சுந்தர சோழனுக்குப் பல்லு வெளக்கி விட்ட மாதிரி பேசுகிறார்கள்..

    பதிலளிநீக்கு
  21. இரண்டாவது படம் - நான் எவ்வளவு நல்லா சுத்தம் செய்திருக்கேன்!!! பாரு....(ஸ்பிக் அண்ட் க்ளீன்) என் முகத்தைக் காட்டறேன் ஃபோட்டோ எடுத்துப் போடு...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நான் இந்த வீட்டு ஜன்னல்ல ஏதோ கிடைக்குமாக்கும்னு பார்க்கப் போற டைம்ல வந்துடா பாரு ஃபோட்டோ எடுக்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. 2. குழந்தை கதவைத்திறந்து பட்டுக் கொண்டதோ...இல்லை தன் பொம்மை அங்கு இல்லை என்றோ அழுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால் மாட்டிக்கொண்டு உள்ளது!

      நீக்கு
    2. அச்சச்சோ! நீங்க சொன்னப்புறமாத்தான் கவனிச்சேன் கால் நன்றாக மாட்டிக்கொண்டிருக்கே! எடுத்தாச்சா இல்லையா? :( பாவம் குழந்தை! :(

      நீக்கு
  24. 3- ஓணான் - உன் நல்லதுக்கு சொல்றேன் இங்க படுக்காத வண்டி போற இடம் பாரு...

    பூஸார் - வந்துட்டியா சொல்ல? இப்ப என்னன்ற நான் இங்கதான் படுப்பேன்...உனக்கு போக நிறைய இடம் இருக்கு...போ போய்க்க

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஓணான் - அடி ஆத்தீ! நீ ஸாக்ட்லாந்த் பூஸாரா? லண்டன் பூஸாரா? பாத்து எம்புட்டு வருஷம் ஆச்சு? அது சரி வந்து ஏன் இப்படி நடு ரோட்ல படுத்துருக்க?
    பூஸார் : ஸ்காட்லாந்து...லண்டன் அப்பால மெதுவாத்தான்......முதல்ல வந்து குதிச்சா யாரையும் காணும்...பல வருஷம் கழிச்சு வரேனே ஒரு மாலை, மரியாதை....ஹூம்.....ஒரே ஹாட் வேற.....அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன்...!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. @ கில்லர்ஜி..
    //நடிகரோ/நடிகையோ நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே//

    ## இல்லை.. அவர்கள் இறைவனின் பார்வையில் நம்மைவிட இழிவானவர்கள்..##

    இல்லை ஜி..

    பரிதாபத்துக்கு உரியவர்கள்.. இந்தச் சகதியில் இருந்து மீண்டு கொள்வதற்கு இயலாத கையறு நிலையில் இருப்பவர்கள்.. இப்படி இருப்பதற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்..

    உதிரிகள் வருசத்துக்கு ரெண்டு தரம் மாமனார் வீட்டில் இருந்து விட்டு வருவதற்கும் இவர்கள் ஒளி வட்டத்துக்குள் திளைப்பதற்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...

    சீரழிந்த சின்னத்திரையில் ஆஹ்.. ஆஹ்.. ஆஹ் என்று சிரிப்பதற்கும் என்ன அவஸ்தையோ!?..

    பதிலளிநீக்கு
  27. ஓகோ..... இன்று அனுஷ்க்கு போட்டியாக ஏனைய நடிகைகளின் படங்களா? :)))
    நடிப்பில் யார் வெல்வார் ? அழகில் யார் வெல்வார் ? வோட்டு எடுத்து அடுத்த வாரம் படம் போடலாமா ? :)))
    1) யார் அங்கே படம் பிடிப்பது இது நம்ம வீடுதான்.
    2) தலையில் இடித்தாலும் மறுபடியும் திறப்பேன்.
    3) உனது பசிக்கு நான் சுவையாக இருக்க மாட்டேன் வா பாலும் பிஸ்கெட்டும் உனக்கு வாங்கி தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. பாவனாவைத் தவிர பளிச் படம் ஒன்றுமே இல்லையே... இனி கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், படங்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பணும் போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதையே அதாவது இந்தக் கருத்தையே நினைத்தேன்... ஆனால் சொல்ல வில்லை..

      பாவனா
      பாவனா தான்!..

      நீக்கு
    2. பாவனா
      பாவனா தான்!.. (ஆஹா வெற்றி!!)

      நீக்கு
  29. கேள்விகளுக்கு பதில்கள் நன்றாக இருக்கிறது.
    அழகு பெண்களின் அணிவகுப்பு அருமை.
    காக்கையார் கோபமாக இருக்கிறது போல
    குழந்தை பாவம் கதவை திறந்தவுடன் மீண்டும் கதவு குழந்தையை தாக்கி விட்டதோ!
    உன்னிடம் பேச நேரமில்லை தூங்க போகிறேன் போ! போ!

    பதிலளிநீக்கு
  30. தலை தீபாவளியை மறக்கவே முடியாது! ஒவ்வொரு தீபாவளிக்கும் நினைவுகள் வந்துவிடும். தீபாவளி நினைவுகளில் இன்பமும் , உண்டு துன்பமும் உண்டு.
    சீர் கொடுத்து சென்ற அப்பாவை இறுதியாக பார்த்தது.
    என் கணவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தலை தீபாவளியை கொண்டாடி ஸ்டியோ சென்று எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டது எல்லாம் மகிழ்ச்சியான தருணம்.

    பதிலளிநீக்கு
  31. V

    1.ஒரு படம் பார்க்கச் சுமார் 300-500 ரூபாய் ஆகிறது. அந்தப் படம் நம் கற்பனையைத் தூண்டுவதில்லை...

    புத்தகமென்றால் காசு கொடுத்து அல்லது ஓசியில் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமும் அயர்ச்சியும் இல்லாமல் சினிமாவில் இன்னொருவர் கதைசொல்லி ஆராம் ஸே உட்கார்ந்து பார்க்க கேட்க முடிவதால் இருக்கலாம்.

    - மந

    நம் கலாச்சாரம், வரலாற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைக்காமல், அதில் தற்காலத்தைய மதம், அரசியலைப் புகுத்தும் எண்ணம் இந்த எத்தர்களுக்கு ஏன் வருகிறது?

    அட.. வரலாற்றில் இல்லாத மதம் அரசியலா? வழி வழியாக அதைத் தானே புகுத்தி அடுத்த தலைமுறைக்குத் தந்து வந்திருக்கிறோம்..?

    - மந

    இரண்டு முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதுபோல, நடிகைகள் நடித்தால் அப்படி ஏற்படுவதில்லையே. ஏன்?

    ரசிகர்களிடையே மோதல் ஒரு காலத்தில் இருந்தது என்கிறார் என் தாத்தா. இன்றைய நடிகைகள் அப்படி மோதல் ஏற்படும்படியாக இல்லையோ?
    - மந

    பதிலளிநீக்கு


  32. இந்தக் காலத்தில் கல்யாணம் என்பது மிக மலிவான ஒன்றாக ஆகிவிட்டதோ?பேருந்துகள் நிற்குமிடத்தின் நிழற்குடையில் வைத்து ஒரு சிறுவன் இன்னொரு சிறுமிக்குத் தாலி கட்டி இருக்கிறானே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

    மலிவாகி விட்டது சரியே.
    அந்தச் சம்பவத்துக்கு பிறகு நடந்ததை யாரும் கவனிக்கவில்லையென்று படுகிறது. அத்தனை சுவாரசியம் இல்லாததாலா?
    அந்த சிறுவர்களை சிறையில் அடைத்தாகி விட்டது.
    விடியோ பதிவு செய்தவரை கைது செய்து விட்டார்கள் - வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்
    பெற்றோர்கள் எப்படியோ தப்பி விட்டார்கள் - கஷ்டம்.

    முக்கியமாக ஒரு மூன்றெழுத்து கட்சி இந்த சிறுவர்களுக்கும் படம் எடுத்தவருக்கும் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்து இன்னொரு மூன்றெழுத்து கட்சி அமைதியாக காய் நகர்த்தி வருதாமே?
    விவரம் தெரிந்த பட்சி சொல்லுது.

    - மந

    பதிலளிநீக்கு
  33. எபியின் இந்தப் பகுதியில் கேள்விகள் பதில்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வேண்டும்.
    எந்தக் காலத்துக்கோ சொந்தமான அம்மாஞ்சித் தனங்கள் மறைந்து புதுப் பொலிவு பெற வேண்டும்.
    இன்றைய வாழ்க்கையில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன்ல். அவற்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாய் இந்தப் பகுதி மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகள் அப்படி வந்தால் நாங்களும் பதில் சொல்லத் தயாராக உள்ளோம்!

      நீக்கு
  34. இந்த மடைமாற்றத்திற்கு நான் ஒத்துழைக்கிறேன்.

    சில ஆலோசனைகள்:

    அரசு பதில்கள் மாதிரி ஆசிரியர் குழுவில் இரண்டு மூன்று பேர் இந்தப் பகுதிக்கு பதிலளிக்கத் தயாரானால் வைரைட்டியான பதில்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இரண்டு மூன்று பதில்கள் வேண்டாம். ஒரே பதில் அதுவும் நேரடி கேள்வி-பதில் மாதிரி இல்லாமல் கேள்விகளோடு கலந்து இழைந்த ஒரு கலந்துரையாடல் மாதிரி லேசான மாற்றங்களை உங்கள் பதிலில் கொண்டு வர முடிந்தால் அது இந்தப் பகுதிக்கு இன்னும் அழகு கூட்டும்.
    போகப்போக நாங்கள் - நீங்களும் மறைந்து போய்
    ஆசிரியர் குழுவும் வாசகரும்
    சாம்பாரில் உப்பு கரைந்த மாதிரி தன்மயமாகிப் போகும் அற்புதம் நிகழும்.. தனக்கு வேண்டிய பதில் வருகிறதா என்ற எதிர்பார்ப்புக்காக கேள்விகள் கேட்பது குறைந்து போய் உண்மையிலேயே
    பதில் தெரிந்தாக வேண்டிய urge உடன் கேள்விகள் வர ஆரம்பிக்கும்.
    முடிந்தால் முயற்சி செய்து
    பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலந்துரையாடலுக்கு தானே கருத்துகள்?

      நீக்கு
    2. யோசனைக்கு நன்றி. பார்ப்போம்.

      நீக்கு
    3. ஏற்கெனவே 2, 3 ஆசிரியர்கள் தானே பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒருத்தரே பதில் சொல்லுவது இல்லையே! அதோடு இது பொழுது போக்குக்கான இடம் என்றே எண்ணுகிறேன். அறிவு சார்ந்த கேள்விகள்/கலந்துரையாடல்கள் எனில் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டும். இப்போவே அறிவியல் புத்தகத்தைக் கையில் எடுக்கணுமோ? :)))))))))

      நீக்கு
    4. ஏற்கெனவே 2, 3 ஆசிரியர்கள் தானே பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒருத்தரே பதில் சொல்லுவது இல்லையே! அதோடு இது பொழுது போக்குக்கான இடம் என்றே எண்ணுகிறேன். அறிவு சார்ந்த கேள்விகள்/கலந்துரையாடல்கள் எனில் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டும். இப்போவே அறிவியல் புத்தகத்தைக் கையில் எடுக்கணுமோ? :)))))))))

      நீக்கு
    5. நான் நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க!

      நீக்கு
  35. கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி கேட்டவருடனான உரையாடல் பாணியில் அமைந்தால், கேள்வி - பதில் பகுதியில் இயல்பாகவே அன்யோன் யம் தவழும். இதுவே கலந்துரையாடல் பாணி.
    குமுதம் கில்லாடிகள் கண்டுபிடித்த பாணி.
    அரசு வருகைக்கு முன்பெல்லாம் ஏதோ பரிட்சைக்கான கேள்வி - பதில் போலவே இந்தப் பகுதி இருந்தது.

    அது சரி, பெயரில்லா! கருத்துகளா இல்லை கருத்துக்களா?
    எது சரி?

    பதிலளிநீக்கு
  36. அடுத்த புதனுக்காக ஒரு கேள்வி:

    நெருப்பு எரிய ஆக்ஸிஜன் வேண்டுமானால், ஞாயிறு மட்டும் தகதகவென்று எப்படி உலா வருகிறது?

    பதிலளிநீக்கு
  37. சொத்தை சமமாகப் பிரிப்பதே நல்ல விஷயம். மகன் மகள் எல்லோரையும் உட்படுத்தி.

    இப்போதும் அதாவது இந்தத் தலைமுறையினரிலும் மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கின்றார்கள் என்றே நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!