வெள்ளி, 7 அக்டோபர், 2022

வெள்ளி வீடியோ : தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே

 நவராத்திரி முடிந்து சரஸ்வதி பூஜை, விஜயதசமியும் இந்த வருடம் நிறைவுற்றது. 

பி. சுசீலா பாடியுள்ள இந்தப் பாடல் அந்த வரிசையில் கேட்கவேண்டிய பாடல்களில் ஒன்று.  காணொளியிலேயே பாடல் வரிகள் வருகின்றன.


ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)
பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்


==========================================================================================

1971 ல் வெளியான திரைப்படம் நான்கு சுவர்கள்.  ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் வாணிஸ்ரீ டித்த படத்துக்கு கண்ணதாசன்  பாடல்களை எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை.  கே பாலச்சந்தர் கதை திரைக்கதை இயக்கம்!

தோல்விப்படம்!  அபத்தமான ஒரு கதை.

அதில் வரும் எஸ்  பி பியின் அற்புதமான பாடல் ஒன்று.  தலைவர் குரலின் குழைவையும், கமகத்தையும் கேட்டுதான் ரசிக்கவேண்டும்.


ஓ மைனா.ஓ மைனா.
ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா

முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா
நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா

ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
நாடறிந்த காதல் இன்று

நாணம் என்ன வேண்டும் இங்கு
இரவென்ன பகலென்ன 
இதிலென்ன தொடரட்டுமே

ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா

தாமரைப்பூ காலெடுத்து
வீதிவலம் போவது போல்
தாமரைப்பூ காலெடுத்து
வீதிவலம் போவது போல்
நீ நடந்த பாவனையை
நான் எழுத மொழியில்லையே

மேலிருந்து பார்த்த வண்ணம்
பாலிருக்கும் வெள்ளிக் கன்னம்
தூது சொல்லக் கேட்ட பின்னும்
காலம் என்ன நேரம் என்ன
வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே

ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா



22 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் தனிப்பாடல் அருமையான பாடல். பி. சுசீலா அவர்களின் அம்மன் பாடல் வரிசையில் இதுவும் சிறப்பானதொன்று. இதை கேட்காத நாளில்லை. இப்போது இந்த நவராத்திரி நாட்கள் முழுவதும் அடிக்கடி தினமும் கேட்டு மகிழ்வடைந்திருக்கிறேன். இன்றும் அந்தப்பாடலை தாங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இப்போதும் நிறைவாய் பல வீடுகளில் காலை எழுந்ததும் சுப்ரபாதம், தொடர்ந்து அந்தந்த நாட்களுக்குப் பொருத்தமான பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன.

      நீக்கு
    2. கண்ணதாசனின் உதவியாளர்காகள் எழுதிய மாதிரி அலட்சிமான வரிகளூடே பாடல் என்ற பெயரில் ஒன்று.

      'மேலிருந்து பார்த்த வண்ணம் பாலிருக்கும் வெள்ளிக் கிண்ணம்'

      கண்ணதாசன் வரிகளில் இலை மறைவு காயாய் வரிகளிருக்கும். அது மிஸ்ஸிங். அன்று திரும்பி வந்த செக்
      ஆத்திரத்தில் காமாசோமாவாய் ஆகிவிட்டது போலும்.

      நீக்கு
    3. அப்படியா சொல்கிறீர்கள்? பாலச்சந்தர் படம் வேற...

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. பி. சுசீலா அவர்களின் இந்த படல் அடிக்கடி கேட்கும் பாடல்.
    அருமையான பாடல். நவராத்திரி நிறைவு பெற்றாலும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பூஜை செய்பவர்கள் அனைவரும் பாடுவார்கள்.

    அடுத்த பாடலும் நன்றாக இருக்கிறது. இந்த பாடலை கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.
    படம் பார்த்து இருக்கிறேன், கதை மறந்து போய் விட்டது.

    பதிலளிநீக்கு
  5. முதல் பாடல் சின்ன வயசில் இருந்தே தெரிஞ்ச பாடல் தான். இரண்டாவது திரைப்படமோ/பாடலோ தெரியாது. இப்போல்லாம் ராகங்கள் ஆய்வே நடப்பதில்லையோ? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாரெங்கன்தான் ராக ஆய்வு செய்பவர். அவரும் கொஞ்ச நாட்களாய் வேறு வேலையில் பிஸி!!

      நீக்கு
  6. வெள்ளியின் மங்கலம் மனையெல்லாம் வாழ்க...

    அன்பின் வணக்க ங்களுடன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. சுசீலா அம்மா அவர்கள் பாடிய ஜெய ஜெய தேவி மிகவும் சிறப்புடையது..

    சித்தர்கள் அளித்த பாடலைப் போல துர்க்கையின் சந்நிதிகளில் பலரும் பாடித் துதிக்கக் கேட்டிருக்கின்றேன்.. அவ்வளவு பிரசித்தம்..

    அந்தக் காலத்து பாட்டு புத்தகங்களில் வீரமணி சோமு என்றிருக்கும்.. அவ்வளவு தான்..

    சுசிலா அவர்களுடன் இணைந்து பாடுபவர்கள் தேரழுந்தூர் சகோதரிகள்..

    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
  8. பாம்பன் ஆயிஷா டூரிங் டாக்கீஸில் படம் போடுவதற்கு அறிகுறி "ஜெய ஜெய தேவி" என்ற பாடல் ஒலிக்கும் உடன் மணலில் ஓடுவோம்... 1974 காலகட்டம்.

    அடுத்த பாடலும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடல் ரொம்ப நாள் கழித்து ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  10. அன்பின் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    அருமையான இரு பாடல்களுக்கும்
    ஸ்ரீராமுக்கு நன்றி.
    ஜெய ஜெய தேவி பாடலும் சுசீலா அம்மாவின் குரலும்
    கூட வராத நாட்கள்
    கிடையாது.
    நவராத்திரியில் அடிக்கடி கேட்கும் வானொலிப் பாடல்.
    இனிமை.

    ஓ மைனா கோவையில் இருந்த நாட்களில்
    கேட்ட பாடல். எஸ்பி பி ஸாரின் இளமைப்
    பாடல்.
    என்ன ஒரு குரல் இவருடையது!!!
    படம் பார்த்த நினைவில்லை.
    பேசும் படம் புத்தகத்தில் இந்த பாலச்சந்தர் படத்தைப் பற்றியும்

    ஷூட்டிங்க் ஸ்பாட் பற்றியும்
    குறிப்புகளும் படங்களும் வந்தன. லெண்டிங்க் லைப்ரரிக்
    காலம்.

    ஏதோ ஆங்கிலப் படத்தின் தழுவல்.
    நன்றி ஸ்ரீராம். வாணி ஸ்ரீ அவ்வளவாகப் பிடிக்காது:)

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் முதல் பாடல் எவ்வளவு தடவை கேட்டிருப்பேன்...அருமையான பாடல்...மிக மிகப் பிடிக்கும். இன்றும் கேட்டு லயித்தேன். பல இடங்களில் கோயில்களில் மாமிகள் குழுவாகப் பாடுவதுண்டு நவராத்திரி சமயம், ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி தை வெள்ளி நாட்களில். கேட்கவே நன்றாக இருக்கும் மனமும் லயிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மதியத்திலிருந்து மாலை வரை ஏர்டெல் சுத்தமாக நெட்வொர்க் இல்லை. அழைப்பும் இல்லை கூப்பிடவும் முடியாது டேட்டாவும் இல்லை...இப்போதுதான் சரியாகியது.

    ஓ மைனா பாட்டு இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். வித்தியாசமான குரல்....பாட்டு மிக நன்றாக இருக்கிறது. ரொம்ப இளமையான குரல்....கடைசியில் லாலா செம

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது ஸ்ரீராம்...பாலசந்தர் படம்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அம்மன் பாடல் இனிமை பலதடவை கேட்டிருக்கிறேன்.
    ஓ மைனா பழைய பாடல் ஓரிரு தடவை கேட்ட நினைவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!