வியாழன், 6 ஏப்ரல், 2023

"காம்பா.. நீயா?"

 பரபரப்பின்றி அமைதியாகக் காணப்பட்டது

நைரோபி நேஷனல் பார்க். வாசல் கதவு திறந்திருந்தாலும் காவலுக்கென்று எல்லாம் பெரிய அளவில் கவலைப்பட்டு நிற்க ஆளில்லை போலும்.  யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்கிற மறைமுக செய்தி தாங்கி காணப்பட்டது அதன் வாசல்.

கொஞ்ச நேரத்தில் சிறிய சலசலப்பு.  கொஞ்ச தூரத்தில் மரங்களுக்கிடையிலிருந்து தோன்றியது ஒரு யானை.  அதைத் தொடர்ந்து வேறு சில யானைகளும் வர, அமைதியாக வந்த அவை காப்பக வாசலருகே வந்ததும் நின்று விட்டன.

முதலில் இது ஒரு விஷயமாக படவில்லை அங்கிருந்த ஆட்களுக்கு.  நேரம் செல்லச் செல்ல அவை அசையாமல் எதற்கோ காத்திருப்பது போல நின்றிருக்க, ஓரிருவராக கூடத் தொடங்கினார்கள்.

செய்தி மெல்லப் பரவியது.

உள்ளே அமர்ந்திருந்த அந்த வயதான மாது டாப்னேயின் காதுகளுக்கும் சென்று அடைந்தது செய்தி.

அந்தக் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளைக் காண வந்திருந்தார் அவர்.  விலங்குகள் மேல் நிறைய பாசம் கொண்டவர்.  அவைகளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

சிறு வயதிலிருந்தே இந்த எண்ணம் மனதில் தலைதூக்கி இருந்ததால் தனக்கு கிடைத்த மருத்துவப் படிப்பைக் கூட துறந்து வனவிலங்குகள் சேவையில் ஆழ்ந்தவர் அவர்.  அங்கேயே விலங்குகளுக்கு சேவை செய்யும்  வாலிபர் ஒருவரை மணந்து, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு அவர் முதலாளி ஷெல்ட்ரிக்கை மணந்து  17 வருடங்கள் இருவரும் விலங்குகளுக்காக அன்புடன் சேவை செய்தனர்.  1977 ல் கணவர் மறைந்தாலும் இவரின் சேவை நிற்கவில்லை.

அனாதையாக்கப்பட்ட விலங்குகளை பராமரித்து வனத்துக்குள் விடும் சேவையை அன்புடன் செய்து வந்தார்.  குறிப்பாக யானைகள்.

அதில் ஒரு முறை வந்தொரு கைவிடப்பட்ட யானைக்கு காம்பா என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.  தாய் தந்தை இருவரையும் இழந்துவிட்ட அதுவும் இதுவரை பழகிய யானைகளிலேயே இவரிடம் அதிகம் அன்பு காட்டிய செல்லமாக இருந்தது.  கதைகள் எல்லாம் படித்துக் காட்டி தூங்க வைப்பார் டாப்னே.  என்ன வளர்த்தாலும், உரிய வயது வந்ததும் அதையும் வனத்துக்குள் அனுப்பிதானே ஆகவேண்டும்?  

இப்போதெல்லாம் வயதாகி விட்டதால் ஈடுபாடு இருந்தாலும் அவ்வளவு வேகமாக சேவைசெய்ய முடிவதில்லை.  பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இங்குள்ள விலங்குகளை பார்க்க வந்திருந்தார் அவர்.

சில நாட்களாக இங்கேயே தங்கி அங்கு இருந்த விலங்குகளுடன் பழகி, பேசி பொழுதைக் கழித்து வந்தார்.

இந்த நேரத்தில்தான் வெளியில் ஒரு யானை குடும்பம் நிற்கிறது ஏனென்று தெரியவில்லை என்று ஊழியர்கள் சொல்லி அழைத்ததும் அவற்றைப் பார்க்கக் கிளம்பினார்.  அவரால் என்ன ஏது என்று உணர்ந்து சொல்ல முடியும்.

வெளியில் வந்து பார்த்தவர் யானைக் கூட்டத்தைப் பார்த்தார்.  அருகில் சென்றார்.  அதன் தலைவன் போலிருந்த பெரிய யானையைப் பார்த்தார்.  அதன் அருகில் நம்பிச் சென்றார்.


அதுவும் இவர் அருகில் வருவதைப் பார்த்ததும் மெல்ல நகர்ந்து அருகில் வந்தது.  அதன் அசைவுகளிலிருந்து அதற்கு மனிதர்கள் புதிதல்ல என்று தோன்றியது டாப்னேவுக்கு.

அதன் துதிக்கையை மெல்லத் தொட்டு தடவியவாறு இருந்தவருக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு தோன்ற "காம்பா..  நீயா?" என்றார் ஆச்சர்யத்துடன்.


அதுவும் இவரைத் தொட்டு, உரசியபடி அருகில் நின்றிருந்தது. ஆம், காம்பாதான்.   கொஞ்ச நேரம் கழித்து அந்தக் குடும்பம் மெல்ல மீண்டும் திரும்பி வனத்துக்குள் சென்று மறைந்தது.

இது மாதிரி எத்தனை சம்பவங்கள்...

சமீபத்தில் தமிழகத்தில் தயாரான எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை படித்திருப்பீர்கள்.  அதற்கு முன்பே ஒரு எலிபன்ட் விஸ்பரர் பிரபலம்.  கூகிளிட்டு பார்த்தால் தெரியும்.  லாரன்ஸ் ஆண்டனி.  படிக்காதவர்கள் இவரைப்பற்றி கூகுள் செய்து கட்டாயம் படித்துப் பாருங்கள்.

அவர் மரணமடைந்த நாளில் எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு யானைக்கூட்டம் பல கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து ஒழுங்கான வரிசை முறையில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப் போன செய்தியும் அறிந்திருப்பீர்கள்.  ஜெமோ கூட இதை வைத்துதான் 'யானை டாக்டர்' எழுதினார்.

தன்னை வளர்த்த தாய் இங்கு வந்திருக்கிறார் என்பதை பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்த காம்பா எப்படி அறிந்தது?  குடும்பத்துடன் வந்து பார்த்து மரியாதை செய்து விட்டு போகவேண்டும் என்று எப்படி யானைகளுக்கு தோன்றுகிறது?  பார்க்காமல் இருந்திருந்தால் டாப்னே கோபித்துக் கொள்ளப்போகிறாரா, வருத்தப்படப் போகிறாரா?  காம்பா இருக்கும் இடம் கூட டாப்னேவுக்கு தெரியாது.  கிட்டத்தட்ட அதை மறந்தே விட்டிருந்தார். 

கள்ளக்காதலுக்காகவும், பணத்துக்காகவும் தாயை, தந்தையை, கணவனை, மனைவியை கொடூரமாகக் கொலை செய்யும் ஆறறிவு படைத்த மனிதர்கள் நடுவே ஐந்தறிவு என்று சொல்லப்படும் விலங்குகளின் குணங்கள் ஆச்சர்யப்படுத்துபவைதானே?  இதேபோல தன்னை வளர்த்தவர்களை இனம் கண்டு அடையாளம் கண்டு செல்லம் கொஞ்சும் சிங்கம், புலிகளை பற்றியும் நாம் இணையத்தில் படித்திருக்கிறோம்தானே?

வருடா வருடம் சரியாக லாரன்ஸ் மறைந்த நாளில்  மரியாதை தெரிவிக்கவும், அவரை நினைவு கூரவும் வரும் யானைக் கூட்டங்களின் அன்பை என்னவென்று சொல்ல...

=============================================================================================================
வந்த கவிதை... 



ஆதரவாய் இருந்த மரம் வெட்டித்                  
தள்ளப்பட்டது
சாலை விரிவாக்கமாம்..
அடுத்திருந்த பள்ளத்தில்
அமிச்சர் எதையோ நட்டார்
கட்சிக் கொடிகள் புடைசூழ..
சிரித்துக் கொண்டிருந்த
சிறுசெடி செல்பியானது 
சில பெண்களுடன்..
***

வறண்டு கிடந்த பூமி
வானத்தைப் பார்த்து சிரித்தது
நீயும் மலடாகிப் போனாயே..
காற்றுக்குக் கோபம் வந்தது
இருங்கடா இதோ வர்றேன்..

சிலநொடிகளில்
முறிந்து விழுந்தது
செயற்கை சினையூட்டல்
மையத்தின் விளம்பரப் பலகை..

===============================================================================================

படித்ததை பகிர்வது....


  மூங்கில் அரிசி பற்றி தெரியுமா உங்களுக்கு :-
+++++++++++++++++++++++++++++++++++++
40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல் இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும்.
மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப்பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம்.அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .
மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி
பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவு
மூங்கில் அரிசிக் கஞ்சி ;
தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி – தலா 150 கிராம், சீரகம், ஓமம் – தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு – 6 பல், சுக்கு – ஒரு துண்டு, நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.
செய்முறை: மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
மூங்கில் அரிசியின் பயன்கள் :
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.
உடல் வலிமை பெறும்.
சர்க்கரை அளவை குறைக்கும்.
எலும்பை உறுதியாக்கும்.
நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.
அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக;
கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
கைகுத்தல் புழுங்கல் அரிசி:
low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
காட்டுயானம்:
ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி:
மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா:
பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா:
இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா:
இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காளான் சம்பா:
உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா:
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா:
பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா:
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
சீதாபோகம்:
உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா:
இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை:
தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா:
அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா:
நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா:
உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா:
வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச்சம்பா:
வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி:
மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி:
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி:
பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும்,கபமும் குறையும்.
இவை அனைத்தும் அரிசியின் பல வகைகளும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளும் ஆகும். இதை கொண்டு உடலுக்கு ஆரோக்கியமானஅரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைவாழ்வோம்.
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்...

======================================================================================================


நியூஸ் ரூம்

ப்ளஸ் டூ தேர்வில் நடந்தது போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட் ஆகக் கூடாது என்று பத்தாம் வகுப்பில் பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை எப்படியாவது தேர்வு எழுத வரவைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறதாம். அவர்களுக்காக நீங்களே தேர்வு எழுதி விடுங்கள் என்று சொல்லாதவரை சரி.

கர்னாடகாவில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஜோசியர்களுக்கு மவுஸு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த தொகுதியில் போட்டியிடலாம்? போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோமா? வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவி கிடைக்குமா? அமைச்சரானாலும் எந்த இலாகா கிடைக்கும்? பிரசாரத்திற்கு செல்லும் பொழுது என்ன கலர் உடையணிந்து செல்ல வேண்டும்? எந்த திசையில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்ற கேள்விகளோடு ஜோசியர்களை முற்றுகையிடுகிறார்களாம்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, “காந்தியிடம் பல்கலைகழக பட்டம் ஒன்று கூட இல்லை” என்று கோரக்பூர் ஐ.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் கூறியதற்கு, காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மறுப்பு தெரிவிதிருக்கிறார். மனோஜ் சின்ஹாவிற்கு அந்தக் காலத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியாது என்று நினைக்கிறேன். மோதிலால் நேரு கூட மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றதும் சட்டம் படித்தவர்தான். நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் இதை குறிப்பிட்டிருப்பார்.

ராகுல் காந்தியின் அரெஸ்ட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வர, அன்றைக்கு பார்த்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி ஸ்ரீநிவாசன் கருப்பு புடவை,சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருக்கிறார். அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது, “காங்கிரஸ்காரர்களின் போராட்டம் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார். என்ன மேடம் இது? நாட்டு நடப்பு தெரிய வேண்டாமா?

டங்க் ஸ்லிப்பாவது சகஜம்தான். சாதாரண மனிதர்களுக்கு அது பிரச்சனை கிடையாது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு டங் ஸ்லிப்பாகும் பொழுது மீம்ஸாகி விடுகிறது. நம் ஊரில் ஒருவர் அதற்கு பிரசித்தம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா சென்ற பொழுது கனடா என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் சைனா என்று கூறி நகைப்புக்குள்ளாகி இருக்கிறார்.

=======================================================================================================


சென்ற வாரம் 1930 களில், 1940 களில் பெண்ணுரிமை, சட்டம் சொல்வது என்பது பற்றி தியாகபூமி பகிர்வில் படித்தோம். கீழே உள்ளது 2013 ல் தினமணியில் ஓய்வுபெற்ற பெண் நீதியரசர் எழுதிய தொடர் கட்டுரை ஒன்றில் வெளிவந்தது... அந்தக் அக்கட்டுரைத்தொடர் புத்தகமாகக் கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவன் இறந்து விட, 'அவனே போயாச்சு... நீ எங்களுக்கு யாருமில்லை. உனக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை' என்று கணவன் வீட்டாரால் வெளியேற்றப் படுகிறாள் அந்தப் பெண்.
பெற்றோர் ஆதரவுடன் மறுபடி இன்னும் கொஞ்சம் படித்து, வேலையில் சேர்ந்து, நல்ல பணமும் வங்கியில் இருக்கும் நிலையில் மரணமடைந்து விடுகிறாள் அந்தப் பெண்.
பெண்ணின் தாயார் அந்தப் பணத்துக்கு உரிமை கோரி, நீதி மன்றத்தை நாடுகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் நாத்தனாரின் மகனும் (இறந்த கணவனின் தங்கை மகன், இவளை வீட்டை விட்டு உடனடியாகத் துரத்திய புகுந்த வீட்டைச் சேர்ந்த உறவு) அந்தப் பணத்துக்கு உரிமை கோருகிறார்.
தீர்ப்பு என்னவாக இருக்கலாம்? - மார்ச் 2013

கமெண்ட்டில் வெவ்வேறு அபிப்ராயங்கள் வந்திருந்தன. அப்புறம் தினமணியிலிருந்து அதன் தீர்ப்பை எடுத்து இணைத்திருந்தேன். அது..

இன்றைய தினமணியில் வந்துள்ள கட்டுரை இது. நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை. 1956-ல் போடப் பட்ட சட்டத்தின் படி பணம் இறந்துபோன கணவனின் தங்கை மகனுக்குத்தான் என்று தீர்ப்பானதாம். சுயமாக (அதிகமாக) பெண்கள் சம்பாதிக்க முடியாத காலத்தில் போடப் பட்ட சட்டம்! சட்டத்துக்கு பரிதாபமோ பச்சாத்தாபமோ, நியாயமோ, தர்மமோ கிடையாதாம். சட்டத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ அதுதானாம். இது ஓம்ப்ரகாஷ் Vs ராதாசரண் (2009(15) எஸ் சி சி பக்கம் 66 என்ற வழக்காகத் தீர்ப்பளிக்கப் பட்டது என்கிறார். 20 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட இந்த ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தை விட கி பி 600 - 900 வந்த தேவால முனிவர் எழுதிய எழுதியதே தேவலாம் என்கிறார் இவர். அதாவது "பழங்கால சூத்திரங்களில் முற்போக்கான சில கருத்துகள் காண்கிறோம். "பெண்ணின் சொத்தை அவள் அனுமதியின்றி கையாள்பவன் திருடன்' என்கிறது. அவனுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்கிறது. "மக்கள் இல்லாத பெண்ணின் சொத்து அவள் இறந்தபின் இந்த வரிசையில் வாரிசுரிமை வரும்; அந்த வரிசையில் கணவன், தாயார், சகோதரர், தந்தை...
இந்த ரீதியில் நீளமாக எழுதப் பட்டுள்ள இந்தக் கட்டுரை கவனத்தை ஈர்க்கிறது.

========================================================================================

ரசித்த புகைப்படம்...



======================================================================================

மறுபடியும் சுவரில் ஒரு உருவம்...!

"பொறந்து வந்தியா இல்லை செஞ்சு அனுப்பினங்களா?"ன்னு கேட்டதும் ஐடியா வந்திருக்கும் போல... இப்படி ஒரு எலும்புக்கூடு கிடைத்ததாய் எப்போதோ இணையத்தில் படித்த நினைவு!



இந்த ரூபாய் நோட்டில் என்ன விசேஷம்?

இப்படி நாமும் முயற்சிக்கலாம் இல்லை?!


என்ன கடுப்பு பாருங்க சுருட்டு மன்னருக்கு!

152 கருத்துகள்:

  1. ஆஹா முதல் பகுதி அருமையோ அருமை. ரசித்து வாசித்தேன்...மீண்டும் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தல் ரிசல்ட் வரும்போது முதல் ரிசல்ட் முதல் தொகுதியில் முன்னிலை என்று அறியும் உணர்வு!!! வாங்க அப்புறம்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....இப்ப இங்கு தான் இருக்கிறேன். யானை பற்றிய செய்தி இழுத்துவிட்டதே!!!

      கீதா

      நீக்கு
    3. நான் யு டுயூபில் நிறைய பார்க்கும் வீடியோ யானை பற்றியதுதான்.  அது தெரிந்து யானை பற்றிய காணொளிகளை யு டியூன் எனக்கு எப்போதும் சிபாரிசு செய்துகொண்டே இருக்கும்!

      நீக்கு
  2. இந்தக் காணொளி பார்த்திருக்கிறேன். எடுத்தும் வைத்திருக்கிறேன்.

    நீங்க ரொம்ப அழகா அதை எழுதிட்டீங்க ஸ்ரீராம்...சுவாரசியமாக, கவர்ச்சியாக!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாரன்ஸ் ஆன்டனி பற்றியும் நிறைய காணொளிகள், தகவல்கள் இருக்கு கீதா..

      நீக்கு
  3. சமீபத்தில் தமிழகத்தில் தயாரான எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை படித்திருப்பீர்கள். //

    ஆமாம் ஸ்ரீராம்.... பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்....

    //அதற்கு முன்பே ஒரு எலிபன்ட் விஸ்பரர் பிரபலம். கூகிளிட்டு பார்த்தால் தெரியும். லாரன்ஸ் ஆண்டனி. படிக்காதவர்கள் இவரைப்பற்றி கூகுள் செய்து கட்டாயம் படித்துப் பாருங்கள்.//

    வாசித்திருக்கிறேன். இவர் பற்றியும் சொல்ல நினைத்திருந்தேன். இவர் காண்டாமிருகம் வேட்டையைத் தடுத்து விழிப்புணர்வு புத்தகம் கூட மூன்றாவது புத்தகம் என்று நினைவு....கடைசி 4 காண்டாமிருகங்களைக் காப்பாற்ற போராட்டம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெட்ப்ளிக்சில் அது வெளியான அன்றே  நான் பார்த்து ரசித்து விட்டேன்.  அதற்கு விருது என்று கேட்டதும் ஒரு இனிய ஆச்சர்யம்.

      நீக்கு
  4. ஸ்ரீராம் விலங்குகளுக்கு இருக்கும் உணர்வு பற்றி நீங்க சொல்லியிருக்கும் கருத்திற்குக் கை தட்டி அப்படியே வழி மொழிகிறேன். இது ரொம்ப உண்மை. சிங்கம் புலிகள் கூட மனிதர்களோடு அன்பு காட்டுபவை. நம் உடல் மொழி, மன மொழி எல்லாம் அவற்றிற்கு எளிதாகப் புரியும். ஒரு வேளை மனிதனின் இந்த ஆறாவது அறிவு கொஞ்சம் ஓவரோ என்று கூடத் தோன்றும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானா முதன்முதலில் லாரன்ஸ் ஆண்டனி அருகில் - வேலிக்கு அப்பால்தான் - நின்று அவரை ஸ்பரிசிக்க முயன்ற நொடி மாற்றம் நிகழ்ந்த நொடி.  அது எப்படி இவரைப் புரிந்து கொண்டது?  இவருக்கும் நம்பி அருகில் செல்லும் தைரியம் எப்படி வந்தது?

      நீக்கு
    2. ஸ்ரீராம் மகன் சொல்லுவான்.....அவற்றிற்குத் தெரியுமாம்....சில மாதங்கள் முன் அவன் இருக்கும் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு அரிய வகை விலங்கு பெயர் மறந்து போச்சு இப்ப போங்கோ - Bongo வான்னு மறந்து போச்சு...வைத்தியம் பார்க்கப் போனானாம். அது கிட்டத்தட்ட சீரியஸ்....அது மகன் கைவைக்க நன்றாக அனுமதித்ததாம். சிலரை அனுமதிக்கலையாம். அப்ப அவன் சொன்னான்.....நாம ரொம்ப மெதுவா நம் உடல் மொழி மனம் எல்லாம் அன்போடு போவதைக் காட்டனும் கண்கள் எல்லாம் அப்ப அதுக்குப் புரியுமாம்....அதுவும் மெதுவாகத்தான் முன்னே அருகில் செல்லணும்..ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதைக் கவனித்துக் கொண்டே நம் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே....

      கீதா

      நீக்கு
    3. இதை நாம் நாய்களிடத்தில் கூட பார்க்க முடியும் கீதா... சிலசமயம் கண்ணோடு கண் நோக்க வேண்டாம் என்பார்கள். அது அவைகளை சந்தேகத்துக்கு உள்ளாக்கி கோபப்படுத்துமாம். இதைப் படித்தபோது நாய்கள் புதிய விளக்குடன் அல்லது புதிய நாயுடன் நட்பு கொள்ளும்போது நடந்து கொள்வது ஞாபகத்துக்கு வந்ததது. கவனித்திருக்கிறீர்களா? எதிராளியின் கண்ணையே பார்க்காது. குனிந்து கொண்டே வாழை ஆட்டிக்கொண்டே உடல் குழைந்து.. (மனம் கனிந்தே என்கிற எம் கே டி பாகவதரின் ரதிப்ரியா ராக பாடல் நினைவுக்கு வருகிறது)

      நீக்கு
  5. வருடா வருடம் சரியாக லாரன்ஸ் மறைந்த நாளில் மரியாதை தெரிவிக்கவும், அவரை நினைவு கூரவும் வரும் யானைக் கூட்டங்களின் அன்பை என்னவென்று சொல்ல...//

    ஆமாம் ஸ்ரீராம்...இந்தக் காணொளிகள் பார்க்கும் போதெல்லம் என்னை அறியாமல் கண்ணில் நீர் துளிர்க்கும்.

    ரசித்து வாசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைகள் தங்கள் குடும்பத்தில் உள்ள யானைகள் இறந்து அவற்றை புதைத்த இடத்துக்கே வருடா வருடம் வந்து அஞ்சலி செலுத்துமாம்.

      நீக்கு
  6. துரை அண்ணாவின் கவிதை அருமை. யதார்த்தம் அப்படியே!!!

    அமிச்சர் எதையோ நாட்டார்//

    அமைச்சர் என்றிருக்கணுமோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமிச்சர் என்பது நக்கலான குறியீடு.  வேண்டுமென்றே அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.  மாற்றவேண்டாம் என்று குறிப்பு கொடுத்திருந்தார்.

      நீக்கு
    2. அமிச்சர் - வேண்டுமென்று தான் எழுதினேன்..

      நன்றி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. சிலநொடிகளில்
    முறிந்து விழுந்தது
    செயற்கை சினையூட்டல்
    மையத்தின் விளம்பரப் பலகை..//

    இக்கவிதையை ரொம்ப ரசித்தேன்.....அசாத்திய கற்பனை!!! துரை அண்ணா, ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க...ஸ்ரீராமின் கவிதையிலிருந்து பிறந்த உங்கள் கற்பனையும் அசாத்தியம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எனக்கும் பெரும்பாலான சமயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று என்கிற வகையில் எழுதத் தோன்றும்.

      நீக்கு
    2. கவிதைக்கான கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  8. ஆஹா ஸ்ரீராம் மூங்கில் அரிசி பற்றி தெரிந்து, வாங்கியிருக்கிறேன் சென்னையில் இருந்தப்ப. இங்கு கடைகளைத் தேடித்தான் அரிசி வாங்கணுமா இருக்கு. இங்கு வந்தபிறகு அது கண்ணில் படவே இல்லை.

    மூங்கில் அரிசியை கொஞ்சமா வறுத்து கஞ்சி செய்து சாப்பிட்டா சுவை அட்டகாசமா இருக்கும். வேக நேரம் எடுக்கும். ஆனால் நல்ல விஷயங்கள் அடங்கிய அரிசி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சுவைத்ததில்லை.  சதா அரிசியை விட காஸ்ட்லியோ...  பெரிசு பெரிசா இருக்கும் போல!

      நீக்கு
    2. சதா அரிசியா! அந்நியன் படத்தில் நடித்தவர் பெயரில் கூட அரிசி இருக்கா!!

      நீக்கு
    3. ஹிஹிஹி சாதா சதா ஆகிவிட்டது. சதாசிவமே துணை!

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம் விலை கூடுதல்தான்!!

      ஹாஹாஹா, கௌ அண்ணா!!

      கீதா

      நீக்கு
  9. மூங்கில் அரிசின்னு தலைப்பு பார்த்ததுமே முந்தைய கருத்தை அடித்துவிட்டு வெளியிட்ட பின் வாசித்து வந்தா ஆஹா கீழ அதே கஞ்சி செய்முறை!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஆம்...  இன்னும் சில செய்முறைகளும் சேர்ந்தே இருக்கு!

      நீக்கு
  10. பானுக்காவின் நியூஸ் ரூம் சுவாரசியம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. லாரன்ஸ் பற்றி முன்பே படித்திருக்கிறேன்.

    ஶ்ரீரங்கம் யானைப் பாகன் யானைகளுக்கு நினைவுத்திறன் இல்லை. ஐந்து வருடங்கள் கரித்து பழைய பாகன் வந்தால் மீண்டும் யானையுடன் பழக்கமேற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருந்தது வியப்பாக இருந்தது.

    இங்கு காம்பா பற்றிய பகுதி நன்றாக எழுதியிருக்கீங்க. யானை நினைவாற்றல் உடையதுதான் என்பது நிரூபணம். இதுபோல வளர்ப்புச் சிங்க காணொளி பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு வயதாகி விட்டது என்றோ, வேறு காரணமோ..  இன்னொரு யானை சேர்ந்திருக்கிறது போல..  சமீபத்தில் படித்தேன்.  காம்பா பற்றி எழுதும்போதே லாரன்ஸ் நினைவுக்கு வந்து விடுகிறார்.  அதுசரி, ஜெமோவின் யானை டாக்டர் படித்திருக்கிறீர்களோ?

      நீக்கு
    2. நானும் ஜெமோவின் யானை டாக்டர் வாசிக்கணும் ஸ்ரீராம்....

      கீதா

      நீக்கு
    3. https://kupdf.net/download/2991-3006-2985-3016-2975-3006-2965-3021-2975-2992-3021_58c54feadc0d60e62433902b_pdf

      நீக்கு
  12. ஜனநாயகம், அதில் எல்லோருக்கும் வாக்கு உரிமை என்பது இந்தியர்களுக்குச் சரியானதாக இருக்காது என சர்ச்சில் சொன்னது சரிதான். அதைத்தான் திருமங்கலம் மற்றும் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் நிரூபித்துவிட்டார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  எனக்கும் தோன்றியது.  ஆனால் மக்களுக்கு முன்னரே அரசியல்வியாதிகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்!

      நீக்கு
  13. சுபாஷ் சந்திரபோசின் இந்தியத் திருநாடு இன்னமும் தேசப்பற்று மிக்கதாக இருந்திருக்குமோ? பண நோட்டில் காந்தி படத்தைப் போட்டு, நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது நேரு குடும்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தி ரொம்ப ஓவரா நடுநிலை, நியாயம் பார்த்துட்டார் போல...  'என்னை எல்லோரும் நல்லவன்னு சொல்லிட்டாங்க' மொமண்ட்!  (ஸாரி ஜீவி ஸார்..!)

      நீக்கு
    2. தாழ்வுற்று வறுமை மிஞ்சி
      விடுதலை தவறிக் கெட்டு
      பாழ்பட்டு நின்ற தாமோர்
      பாரத தேசந்தன்னை
      வாழ்விக்க வந்த காந்தி
      மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
      -- பாரதியார்

      பாரதியாரிடமல்லவா, ஸாரி கேட்டிருக்க வேண்டும்?

      நீக்கு
    3. ஹிஹிஹி.. அது பாரதிக்கு உண்மை தெரியாத காலம்! அப்புறம் நடந்ததெல்லாம் அவரறிய மாட்டாரே!

      நீக்கு
    4. அப்புறம் என்ன நடந்தது?
      அறியேன் .

      நீக்கு
    5. எங்கள் தலைமுறை மஹாத்மா இந்தத் தலைமுறைக்கு என்ன பாவம் செய்தார்? அப்படி அறியாமல் அவர் ஏதேனும் தவறிழைத்திருந்தால் பெரிய மனது கொண்டு மன்னித்து விடுங்கள். பாவம், கடைசி வரை துன்பத்தையே சுகித்த பெரியவர்.

      நீக்கு
    6. எங்கள் தலைமுறை மஹாத்மா இந்தத் தலைமுறைக்கு என்ன பாவம் செய்தார்? அப்படி அறியாமல் அவர் ஏதேனும் தவறிழைத்திருந்தால் பெரிய மனது கொண்டு மன்னித்து விடுங்கள். பாவம், கடைசி வரை துன்பத்தையே சுகித்த பெரியவர்.

      நீக்கு
    7. காந்தி மற்றவர்களுக்குத் தான் துன்பத்தைக் கொடுத்தார். ஒரு வகையில் அவர் செய்தது emotional blackmail என்று சொல்லலாம். சிறையில் இருந்தாரே என்று கேட்பவர்களுக்கு! வீர சாவர்க்கர் அந்தமானில் சிறை இருந்தப்போ வைக்கப்பட்டிருந்த இடத்தின் ஃபோட்டோ சில நாட்கள் முன்னர் பார்க்க நேர்ந்தது. மழைக்காலத்தில் அந்த அறை தண்ணீரால் நிரம்பி இருக்குமாம். அதிலே தான் உட்காரணும், படிக்கணும்(அனுமதி கிட்டினால்) படுக்கணும். ஆனால் காந்தி? எரவாடா சிறையைப் பார்த்தவங்க கிட்டேக் கேளுங்க சொல்லுவாங்க. தனி அறை, யாரேனும் வந்தால் அமர்ந்து பேசத் தனி இடம். கூடவே காந்தியின் மனைவியும், காரியதரிசியும் இருக்கலாம். அவங்களுக்குத் தனி இடம். அவருக்குப் பிடித்தமான உணவு. முக்கியமாய் மாலை நேரத்தில் ஏழெட்டு ஆரஞ்சுகளைப் பிழிந்து எடுத்த சாறு ஒரு தம்பளர் நிறைய! கடிதம் எழுதக் கார்டுகள், கவர்கள், பேனா, இங்க், பென்சில் போன்ற உபகரணங்கள், அன்றாடம் படிக்க தினசரி. காரியதரிசி மஹாதேவ தேசாயுடன் கலந்து பேசிக்கொண்டு முடிவுகள் எடுத்தல், அவர் உதவியுடன் அன்றாடம் காங்கிரஸ் காரங்களுக்குச் செய்தியை தினசரிகளில் கொடுத்தல்னு எல்லாமும் உண்டு. கூடவே தினமும் மருத்துவ உதவியும் உண்டு. ஆனால் இந்த மருத்துவ உதவியை காந்தி/நல்லவர் காந்தி தன் மனைவிக்குத் தேவை இல்லை எனச் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார். மருத்துவ உதவி இல்லாமலேயே கஸ்தூரிபாய் காந்தி இறந்து போனார்.

      நீக்கு
    8. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மோகன் தாஸ் காந்தி தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை இணையத்தில் கிடைத்தால் தேடிப்பிடித்துப் படியுங்கள். வங்காளக்கலவரத்தின்போது உண்ணாவிரதம் இருந்த காந்திக்கு எழுதிய ஏழைமனிதனின் கடிதத்தையும் தேடிப் பிடித்துப் படியுங்கள். ரத்தம் கொதிக்கும்..:(

      நீக்கு
    9. :((

      கமலா நேரு நோயுற்றிருந்தபோது நேரு கூட கண்டு கொள்ளவில்லை என்றொரு தகவல் படித்த நினைவு...

      நீக்கு
    10. ஹரிலால் தந்தைக்கு பிடிக்காத பிள்ளை, இல்லையா?

      நீக்கு
    11. கோட்சேயின் "May It Please Your Honour"!புத்தகத்தைப் படிச்சவங்க இருக்கீங்களா?

      நீக்கு
    12. ஆமாம். ஆனால் அவர் பணக்காரக்குடும்பம் என்பதால் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து சென்றார். அப்படியும் குணமாகவில்லை.

      நீக்கு
    13. // கோட்சேயின் "May It Please Your Honour"!புத்தகத்தைப் படிச்சவங்க இருக்கீங்களா? //

      No. இணையத்தில் கிடைக்கிறதா?

      நீக்கு
    14. ருஷ்யா என்றால்
      லெனின்
      சீனா என்றால்
      சென் யாட் சென்
      அமெரிக்கா என்றால் ஆப்ரஹாம் லிங்கன்
      இத்தாலி என்றால் கரிபால்டி
      பாரதம் என்றால் மஹாத்மா

      --- வரலாற்றை அவ்வளவு எளிதாக யாரும் மாற்றி எழுதிவிட முடியாது.

      நீக்கு
    15. ருஷ்யா என்றால்
      லெனின்
      சீனா என்றால்
      சென் யாட் சென்
      அமெரிக்கா என்றால் ஆப்ரஹாம் லிங்கன்
      இத்தாலி என்றால் கரிபால்டி
      பாரதம் என்றால் மஹாத்மா

      --- வரலாற்றை அவ்வளவு எளிதாக யாரும் மாற்றி எழுதிவிட முடியாது.

      நீக்கு
    16. இணையத்தில் இப்போல்லாம் தாராளமாய்க் கிடைக்கிறது ஸ்ரீராம். பிடிஎஃப் இருக்கு.

      நீக்கு
    17. மாற்றியதால் தானே உண்மைகள் வெளிவருகின்றன. இல்லை எனில் இன்னமும் மக்கள் காந்தியை மஹாத்மா என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

      நீக்கு
  14. மிகப்பெரிய மண்டையோடு - கிராபிக்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது அப்போதான் செயற்கையா உருவாக்கிக்கிட்டு இருக்காங்களோ..  ஆனால் வந்த கதை, மிகப்பெரிய மனிதனின் மண்டையோடு கிடைத்தது!  பனி மனிதன் பற்றிய கதையே உண்மையா பொய்யா, தெரியாது!

      நீக்கு
  15. சிறு செடி செல்பியானது...... நாட்டு நடப்புக்கேற்ற கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் வந்து நன்றி சொல்வார்!

      நீக்கு
    2. அன்பின் நெல்லை அவர்களது கருத்தினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. சர்ச்சில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1945 ஆம் வருடம் ' இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் வழங்கக் கூடாது - அல்லது அவருக்கு ஏன் அதில் விருப்பம் இல்லை ' என்பது பற்றி நிகழ்த்திய உரை - அது. அதாவது 78 வருடங்களுக்கு முன்பு நிகழ்த்திய உரை. அப்பொழுது அவர் மனதில் நேரு, காந்தி இவர்கள்தான் இருந்திருப்பார்கள். அவர்களை நினைத்து இப்படி சொல்லியிருப்பாரோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை...மவுன்ட்பேட்டனின் மனைவியை இதில் நீங்கள் சேர்க்கவில்லை

      நீக்கு
    2. ஹா..  ஹா...   அப்படி இருந்திருக்காது.  வல்லபபாய் படேல் போன்றோரெல்லாம் மறக்கக் கூடியவர்கள் அல்ல...  சர்ச்சிலுக்கு இந்தியர்கள் மேல் வெறுப்பு!  இப்போது அவர் இருந்திருக்க வேண்டும்...

      நீக்கு
    3. தன் மனைவியை நேருவிடமிருந்து மீட்கத்தான் மவுண்ட் பேட்டன் இந்தியாவுக்கு சீக்கிரமாக சுதந்திரம் அளிக்க பரிந்துரை செய்தார் என்று சிலர் வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு.

      நீக்கு
    4. விதி வலியது!  (ஸாரி ஜீவி ஸார்..!)

      நீக்கு
    5. உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியுமா?

      நீக்கு
    6. //வல்லபாய் படேல் போன்றோரெல்லாம்..//
      கோடிகள் செலவழித்து சிலை வைத்ததால் சொல்கிறீர்களா?

      திலகரையே மறந்து விட்ட பின் படேலெல்லாம் எம்மாத்திரம்?

      நீக்கு
    7. கோடி கொடுத்ததுதான் நினைவிருக்கிறதா?  சுயநலம் காணா இரும்பு நெஞ்சத்தை மறந்து போனதா?  திலகரை மட்டுமா மறந்தோம்?  புகழ் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ தியாகிகள் பெயர் கூட அறியமாட்டோமே...

      நீக்கு
    8. படேல் தானே பிரதமராகி இருக்க வேண்டும். இந்த நேருவின் பிடிவாதமும், காந்தியின் அதிகாரமும் செல்லுபடி ஆகி படேல் விட்டுக்கொடுத்தார். அதனால் நாட்டின் இப்போதைய நிலைக்கு நேருவும், காந்தியுமே காரணம். வளர்ச்சி இல்லைனு சொல்லலை. ஊழலும் அது போலவே மாபெரும் வளர்ச்சி பெற்றது. :(

      நீக்கு
    9. இதோடு நேதாஜி காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியிட்டபோது காந்திஜி போட்ட முட்டு கட்டைகள். நவகாளி யாத்திரையில் ஒரு பக்க சார்பு.. இதெல்லாம் நான் புத்தகங்களில் படித்தவைதான்.

      ஆனால் படேல் பிரதமராகி இருந்தால் என்ன மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்? காஷ்மீர் பிரச்னையைத் தவிர்த்து..

      நீக்கு
  17. யானை பற்றிய எந்தச் செய்தியும் உடனுக்குடன் எனக்கு கூகிள் அல்லது முகநூல் அனுப்பி விடும் என்பதால் இவை எல்லாமும் முன்னரே படிச்சிருக்கேன். துரையின் கவிதைகளா அவை? ஆச்சரியம்! வியாழக்கிழமையும் விருந்தினர் பக்கமாகி விட்டது போல! பானுமதீயின் செய்திப் பக்கமும் நன்றாக உள்ளது. செய்திகள் படித்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  எனக்கும் அப்படிதான்.  யு டியூபும் யானை படங்களா காட்டும்.

      நீக்கு
    2. இப்படியும் எழுதுவேன்.. கண்டு கொண்டதற்கு நன்றியக்கா..

      நீக்கு
  18. பெண்ணின் சொத்து நாத்தனார் மகனுக்கே சேர வேண்டும் என்ற அநியாயமான தீர்ப்பை ஏற்கெனவே பத்திரிகைகளில் படிச்சேன். எனக்கு அந்த 3 புள்ளிகளைப் பார்த்துட்டுக் கூரையைப் பார்த்தால் எதுவுமே தெரியலையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   தினமணியில் முன்பு தொடராக வந்ததில் படித்திருப்பீர்கள்.


      //கூரையைப் பார்த்தால் எதுவுமே தெரியலையே!//

      சர்ஜரி பண்ணி இருக்கிறீர்கள் இல்லை?  எதற்கும் கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாருங்களேன்....  :)) ஹிஹிஹி...

      நீக்கு
    2. எனக்குத் தெரிகின்ற உருவம் காஞ்சி பெரியவர் போல தெரிகிறது.

      நீக்கு
    3. நோக்குக் குறிப்பு  :  சுவரைப் பார்த்ததும் ஒன்றும் தெரியவில்லை என்றால் ஒன்றிரண்டு முறை கவனமாக (!) கண்களை இமைக்கவும்!

      நீக்கு
  19. அரிசி வகைகள் பற்றி ஏற்கெனவே படிச்சுக் குறிப்புகள் சேகரித்துக் கொஞ்சம் எழுதின நினைவும் இருக்கு. சர்ச்சில் சொன்னது உலகப் பிரசித்தி. கிட்டத்தட்ட 70 வருடங்கள் அப்படித்தானே போயிற்று. சுபாஷ் அவர்கள் ரூபாய் நோட்டுக் கூட வெளியிட்டிருக்கார் என்பது எனக்கு முற்றிலும் புதிய செய்தி! 1947 ஆம் வருடத்திய ரூபாய் நோட்டு எனில் அப்போ சுபாஷ் உயிருடன் இருந்தாரா? அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் அரிசி என்று ஒன்று இருப்பது எனக்கு சமீபத்தில்தான் தெரியும்!  சர்ச்சில் சுருட்டு பிடித்தபடி பாத்ரூம் டப்பில் படுத்துக்க கொண்டு இருப்பது போல படமொன்று சிறுவயதில் பார்த்த ஞாபகம் இருக்கிறது!  சுபாஷுக்கு மரியாதை தெரிவிக்கும் முகத்தான் நோட்டில் அவர் படம் வெளியிட்டிருக்கலாம் இல்லையா?

      நீக்கு
  20. யானைகளின் பற்றும் பாசமும் நெகிழ வைக்கிறது

    பதிலளிநீக்கு
  21. நெடுவேல் முருகன்
    நோயின்றிக் காக்க...

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  22. நேற்று அரசூர் முருகன் கோயிலில் பால்குடம் .. ஊருக்குள் ஒரு துக்கம் காரணமாக ஐந்து மணி நேரம் தாமதம்

    அது கடந்து சென்றதும் ஐந்து மணி நேர தாமதத்தில் பால்குடங்கள் கோயிலுக்கு வந்தன..

    காலையில் கோயிலுக்கு சென்றிருந்த நாங்கள் மாலை ஐந்து மணி வரை வெயிலான சூழலில் காத்திருந்தோம்..

    காத்திருந்த எங்களுக்கு கருணைக் கண் காட்டினான் கந்தன்...

    நூற்றுக் கணக்கான மக்கள் இருந்தும் அருகே நின்று பாலாபிஷேகம் கண்டு மகிழ்ந்தோம்..

    மாலை வரை சித்திரான்ன
    விநியோகம் செய்து கொண்டிருந்தனர் மக்கள்..

    நிழல் இருந்தாலும் வெயில் அதிகம்.. எவ்வித அசௌகரியமும் இல்லாது இருந்தது கந்தன் கருணை..

    ஆனாலும் விடிந்து எழுவதில் தான் சற்றே தாமதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருகில் இருத்தி அருள் பாலித்த ஆறுமுகன் கருணை மிக்கவன்.

      நீக்கு
  23. வாசலில் நின்று மானசீகமாக வழிநடை அகவலை விண்ணப்பம் செய்து கொண்டேன்..

    எல்லாம் அவன் செயல்..

    பதிலளிநீக்கு
  24. உண்மையில் இன்றைய பதிவு கனமானது..

    ஆனைகள் எதையும் எப்போதும் மறப்பதில்லை..

    ஆனை முகத்தானும் அப்படித்தான்..

    தக்கார்க்கு
    தகவளித்தே தீர்வான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  யானைகளுக்கு மறதி கிடையாது என்றே படித்திருக்கிறேன்.

      நீக்கு
  25. இன்று எனது கவிதைகள் பிரசுரம் ஆனதில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  26. இருந்த கருத்து மீண்டும் காணாமல் போனது எப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டுமா?  உள்ளே ஸ்பாமில் ஏதுமில்லை.  இந்த கமெண்ட் இங்கேயே இருக்கிறது.  இப்போதுதான் நானும் இதை முதலில் பார்க்கிறேன்.

      நீக்கு
  27. 1967/68 களில் கொள்ளிடக் கரைக்குப் பக்கத்து ஊர் ஒன்றில் தந்தைக்கு வேலை..

    அப்போது கொள்ளிடக் கரை காடுகளில் இருந்து மூங்கில் அரிசி கிடைத்திருக்கின்றது..
    சாப்பிட்டிருக்கின்றோம்..

    மூங்கில் சிம்புகளை தேனடையோடு கொண்டு வருவார்கள் கிராமத்தினர்..

    அவையெல்லாம் இனி திரும்ப வராத நாட்கள்..

    பதிலளிநீக்கு
  28. தன்னை வளர்த்தவர் காலமாவிட்டார் என்று அந்த மரம் வாடி வதங்கி நின்றதையும்

    அந்த மரத்தின் பறவைகள் சுற்றித் திரியாமல் சுணங்கி இருந்ததையும் ஒரு கதையாக எப்போதோ படித்திருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான பேச்சு கேட்டு மரங்கள் பூக்கும், காய்க்கும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது புதுசு!

      நீக்கு
    2. அந்தக் கதை எழுதியவர் சு. சமுத்திரம் அவர்களா அல்லது மேலாண்மை பொன்னுசாமி அவர்களா ...

      நினைவில் இல்லை..

      1970 களில் என்று மட்டுமே நினைவு..

      நீக்கு
    3. ஓ.. நான் படித்ததாக நினைவில்லை.

      நீக்கு
  29. வளர்த்தவர் இறப்பின் போது உண்ணா நோன்பிருந்த செல்லங்களைப் பற்றிய செய்திகளை நிறையவே கேட்டிருக்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் அரிசி பற்றிய குறிப்புகள் வாசித்திருக்கிறேன். இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்.

    சட்டம் ஒரு இருட்டறை!!!!!!

    ஸ்ரீராம் எனக்கு அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது!!!

    மண்டை ஓடு இம்மாம் பெரிசா இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருங்கள் சட்டம் ஒரு இருட்டறை குறிப்பு ஏன் என்று மேலே சென்று பார்த்து வருகிறேன்! ஓ.. பிரபா ஸ்ரீதேவன்

      நீக்கு
  31. ரூபாய் நோட்டில் சுபாஷ் சந்திர போஸ். முன்ன எங்கோ இப்படிப் பார்த்த நினைவு...அதுவும் அந்த நோட்டில் உள்ள வாசகம்!! ஹிந்துஸ்தான் ஜெய்ஹிந்த்!! இவரைப் பற்றி படித்த போது ஏன் கொண்டாடப்படுவதில்லைன்னு தோணும்...

    சிலரைப் பற்றி வரலாறு தூக்கி வைக்கும் சிலரை ஒழித்துக் கட்டும்!!! வரலாறா? இல்லை மனுஷன் எழுதற வரலாற்றுக் குறிப்புகள்! எழுதியவரின் எண்ணங்கள், குறிப்புகள் அதில் தன் கருத்தைப் பதித்தல் இதுதானே நடக்குது.

    நம்ம கண்ணு முன்னாலேயே ஒரு காணொளி சுத்திச்சே வாட்சப்ல கில்லர்ஜி கூட பகிர்ந்திருந்தாரே...அதுல பெயர் மாத்தி தூத்துக்குடி பெண் ந்னு வேற இஷ்டத்துக்குப் போட்டு பரப்பி விடுறாங்க இப்பவாச்சும் இணையம்னு ஒண்ணு இருக்கு ...உண்மை என்னன்னு தெரிய...ஆனால் அப்பல்லாம்? அதுவும் நாம பிறக்காத வருடங்களில்...எத்தனை மாற்றப்பட்டிருக்கும்?!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபாய் நோட்டில் சுபாஷ் நான் பார்த்த நினைவில்லை. அவரைப்பற்றி பேசினால் பாவம் என்பது போல எண்ணி இருந்தார்கள் அப்போது! வரலாறு என்பதில் பாதி உண்மை இருந்தால் பெரிது!

      நீக்கு
  32. ஆங்கில எழுத்துகள் - ஆஹா நல்லா யோசிச்சிருக்காங்க...சூப்பர்!!!

    சர்ச்சில் சொன்னது வாசித்திருக்கிறேன். அப்பவே அவரு இப்படி சொன்னார்னா....அது ஒரு வெறுப்பில் உமிழ்ந்திருந்தாலும், இப்ப அது உண்மையாகிவிட்டதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்துதான் சொல்லி இருக்கிறார். அங்கும் அனுபவம் இருந்திருக்கும்!

      நீக்கு
  33. அன்பான காம்பா, மனதை கவர்ந்தது... என்னவொரு ஞாபக சக்தி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைகள் என்றுமே ஞாபக சக்திக்கு பெயர் போனவை.​

      நீக்கு
  34. தஞ்சையில் இன்றிருக்கும் திலகர் திடலின் மேற்குப் புற்மாக சிவகங்கைப் பூங்காவின் எதிர்புறம் நேதாஜி அவர்களுக்கு முழு உயர சிலை ஒன்று இருந்தது..

    நேதாஜி அவர்களின் வழியில் நாட்டைச் செல்ல விடாதது யாருடைய குற்றம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்த ஞாபகமாய் இருக்கிறது. என் அப்பா சுபாஷ் சந்திர பக்தர். அவர் தனது சில படைப்புகளை 'சுபாஷ் சந்திரன்' என்கிற புனைப்பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

      நீக்கு
  35. பள்ளி நாட்களில் என்னுடைய தோழர்கள் பலருடைய வீட்டிலும் INA தாத்தாக்கள் இருந்தனர்.. அவர்களிடம் - அவர்கள் நேதாஜிக்காக
    சிங்கப்பூர் மலேயா ரங்கூன் காடுகளில் நடந்து சென்ற தீரத்தைக் கேட்டு கண் கலங்கியிருக்கின்றேன்..

    நேதாஜிக்கு காந்திஜியின் ஆதரவு கிடைக்கவில்லை..

    சிங்கப்பூரில் நேதாஜி அவர்களுக்கு அருங்காட்சியகம் உள்ளது..

    நான் பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய படையில் இருந்த கேப்டன் லட்சுமி சமீபத்தில்தான் காலமானார் என்று நினைவு.

      நீக்கு
    2. திருமதி ருக்மிணி சேஷசாயி கூட சுபாஷின் படையைச் சேர்ந்தவர் என்றார்கள். இங்கே இருந்த அவர் தன்னுடைய மருமகளிடம் சென்று தங்கச் சென்றபோது எல்லா வலைப்பக்கத்து நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்திருந்தார்.ரஞ்சனி நாராயணன், துளசி கோபால், வைகோ, ரிஷபன் ஸ்ரீநிவாசன், ராதா பாலு எனப் பல பிரபலங்கள் வருகை தந்தனர். எனக்குப் பல நாட்கள் கழிச்சுத்தான் அவருடைய இந்தப் பின்னணி தெரியும். முன்னரே தெரிந்திருந்தால் ஒரு பேட்டி எடுத்திருப்பேன்.

      நீக்கு
    3. தேனம்மை அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கார். எனக்கும் அவர் மூலமே இந்த விஷயம் தெரியும்.

      நீக்கு
    4. ஓ... தேடிப்பார்க்கிறேன்.

      நீக்கு
  36. சில மிருகங்கள் ஆறறிவு என்று நாமே பொய் சொல்லிக் கொள்ளும் மனிதர்களைவிட உயர்ந்த வகைதான்.

    குவைத்ஜி அவர்களின் கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்கள் கருத்தினுக்கு மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  37. /// தன் மனைவியை

    நேருவிடமிருந்து மீட்கத்தான் மவுண்ட் பேட்டன் இந்தியாவுக்கு சீக்கிரமாக சுதந்திரம் அளிக்க பரிந்துரை செய்தார் என்று சிலர் வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு.///

    உண்மை தானே..

    ஜோடியாக சிகரெட் பிடிப்பவர்கள் யாராக இருக்கும்!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜோடியாக சிகரெட் பிடிப்பவர்கள் யாராக இருக்கும்!?...//

      மாற்றி மாற்றி பிடிப்பவர்கள் இருக்கிறார்களே..

      நீக்கு
  38. இதைப் பற்றி தனியே ஒரு பதிவு போடலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போடுங்களேன், படிப்போம்!

      நீக்கு
    2. நான் போடுவதற்காக இல்லை.. நீங்கள் போடுவதற்காகச் சொன்னேன்..

      காந்தி ஹிந்துக்களுக்கு இழைத்த அநீதியைச் சொன்னால் இங்கே சிலருக்கு கோபம் வரும்..

      ஊர் பொல்லாப்பு நமக்கெதற்கு!..

      பள்ளி நாட்களில் காந்திஜி என்று கேட்டாலே கண்கள் கலங்கி விடும்...

      இப்போது அப்படி இல்லை..

      அட்டன் பரோ காந்தி படத்தின் வீடியோ கேசட்டை சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்தேன்..

      நீக்கு
    3. ஆமாம், எனக்கும் பள்ளி நாட்களில் ஒன்பதாம் வகுப்பு வரை காந்தி, நேரு என்றாலே கண்கள் கலங்கி விடும். பத்தாம் வகுப்பில் தான் முக்கிய பாடங்கள் எடுக்கணும் என்பதால் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்தேன். அதில் எகனாமிக்ஸும், கமர்ஷியல் ஜியாக்ரஃஃபியும் வரும். அப்போ உலகச் சந்தைகள் பற்றி, உலகநாடுகளின் முன்னேற்றம் பற்றி எல்லாம் படிக்கையில் இந்தியாவின் பூர்வ காலத்துப் பணப்பரிமாற்றங்கள், அப்போதைய செல்வச் சிறப்புகல்னு படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சது. பசுக்களை வைத்தும், பிராமணர்களை வைத்தும் ஆங்கிலேய அரசு எப்படி எல்லாம் விளையாடிப் படுகுழியில் தள்ளினது என்பதையும் அப்போது எங்கள் வாத்தியார் சொல்லிக் கொடுத்தார். உண்மையிலேயே வாத்தியார் எங்கள் கண்களைத் திறந்து தான் விட்டார். அப்போதில் இருந்து தான் சுற்றுப்புற உலகையும், பத்திரிகைகளோடு தினசரி படிப்பதையும், அதன் மூலம் எல்லாமும் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்தேன்.

      நீக்கு
    4. உலகம் எனும் நாடக மேடையில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.. அரசியல்வாதிகளின் கைகளில் எதிர்காலம் எனும் பொம்மை.

      நீக்கு
  39. பதினெட்டு, பத்தொன்பது வயதில் கல்யாணம் ஆன புதுசில், "Freedam at Midnight" புத்தகம் படித்ததும் என்னுடைய அசட்டுத்தனமும் புரிய வந்தது. நாம் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கோம் இந்த காந்தி பெயரை வைத்து என்பதையும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பதில்லை. படித்தவர்களும் ஒரே மாதிரி புரிந்து கொள்வதில்லை. நாம் எதை நம்ப வேண்டும், எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் எப்போதும் போல் அருமை.. முதல் பகுதி கட்டுரை மனதை நெகிழ வைத்தது. ஐந்தறிவு ஜீவன்களுக்குத்தான் எத்தனை அன்பு. அந்த யானையின் அறிவு வியக்க வைத்தது.

    கவிதை அருமையாக உள்ளது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    மூங்கில் அரிசியை பற்றி தெரிந்து கொண்டேன்.
    அரிசியின் ரக வாரியாக பெயர்களைச் சொல்லி, அதன் பயன்பாடுகளை பற்றி விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி சகோதரரே.

    நியூஸ் ரூம் மூலம் பல செய்திகளை அறிய தந்த சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுககு பாராட்டுக்கள்.

    கதம்பத்தில் மற்றசெய்திகள் அனைத்தும் அருமையாக இருந்தது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கவிதை அருமையாக உள்ளது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்///

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. நன்றி கமலா அக்கா..  இப்போது கூட ஒரு கொக்கு தன்னைக் காப்பாற்றிய ஆரிஃப் என்பவர் வீட்டிலேயே தங்கி பழகி வருவது பற்றி படித்து விட்டு வருகிறேன்.  மூங்கில் அரிசி பற்றி நான் படித்ததை பகிர்ந்தேன்.  நான் ஒன்றும் அறியேன்!  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  41. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    காம்பா யானையின் அன்பு மனதை நெகிழ வைத்து விட்டது.
    வளர்த்த தாயை பார்க்க குடும்பத்துடன் வந்து சென்றது மகிழ்ச்சி.

    நேற்று விமானத்திற்கு காத்து இருக்கும் போது ஒரு குடும்பம் தன் கை குழந்தையுடன், தன் வளர்ப்பு குட்டி செல்ல நாயுடன் வந்து இருந்தார்கள். கணவனும் , மனைவியும் , குழந்தை , வளர்ப்பு செல்லத்தை மாறி மாறி தூக்கி வைத்து கொண்டு கொஞ்சியதை மகிழ்ந்து பார்த்து கொண்டு இருந்தேன்.

    மனிதர்களை விட அன்பு , பாசம், நன்றி உணர்ச்சி மிருகங்களிடம் அதிகமாக இருக்கிறது. காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேற்று விமானத்திற்கு காத்து இருக்கும் போது //

      இந்தியா வந்தாச்சா?  இல்லை பெண் வீட்டுக்கு பயணமா?

      பதிவை ரசித்ததற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. பெண் வீட்டுக்கு பயணம். மகள் வீட்டுக்கு வந்து இருக்கிறேன்

      நீக்கு
    3. ஓகே.  துரை செல்வராஜூ அண்ணா பதிவிலும் உங்கள் பதில் இப்போதுதான் படித்தேன்.

      நீக்கு
  42. சகோ துரை செல்வராஜூ கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கவிதையைப் பாராட்டியதற்கு நெஞ்சார்ந்த நன்றி... மகிழ்ச்சி..

      நீக்கு
    2. எனது கவிதையை பாராட்டியதற்கு நெஞ்சார்ந்த நன்றி .. மகிழ்ச்சி..

      நீக்கு
    3. எனது கவிதைகளைப் பாராட்டியதற்கு நெஞ்சார்ந்த நன்றி .. மகிழ்ச்சி..

      நீக்கு
  43. மற்ற பகுதிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  44. "எலிபன்ட் விஸ்பரர்ஸ்" குறும்படம் பார்த்து ரசித்த படம். பின் விருது பெற்றது அறிந்து மகிழ்ந்தேன். ஐந்தறிவு ஜீவன்களும் அவற்றின் அன்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  45. யானைகளின் அன்பு சிலிர்க்க வைக்கிறது.

    கவிதைகள் அருமை. அமிச்சர் - அமைச்சர்.. தட்டச்சுப் பிழை.

    மூங்கில் அரிசி பற்றிய தகவல்கள் புதிது. நன்றி.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  அது எழுத்துப்பிழை அல்ல.  விரும்பியேதான் அப்படி எழுதி இருக்கிறார் துரை செல்வராஜூ அண்ணா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!