(Kh)கொட்டே, ஹிட்டு, கடுபு / இட்லி
எபி அடுக்களைக்குள் வந்து பல மாதங்களாகிவிட்டதோ? (உங்க வீட்டு அடுக்களைக்குள் நுழைந்து எவ்வளவு நாளாச்சுன்னு யாரோ குரல் கொடுக்கறாங்களே! வேற யாரு நம்ம அண்ணன் தான்!!!)
இங்கு வருபவர்கள் எல்லோரும் திங்க செய்முறைகள் பகிரலாமே என்ற எண்ணம்தான் (பாருங்க இப்ப ஜெ கே அண்ணாவும் கலந்து, கலக்கிக் கொண்டிருக்கிறார்) என்று நான் சப்பைக் கட்டு கட்டினாலும் அதைவிட உண்மையான காரணம், படங்கள் இருந்தும் என்னால் எழுத முடியாததுதான். மின்சாரம் தொடர்ந்து கட் ஆன போது எடுத்தவை எனவே படங்கள் அத்தனை சரியாக இல்லை.
இது மங்களூர், உடுப்பி பகுதிகளில் செய்யப்படும் இட்லி. இட்லி தட்டில்லாமல், பலா இலையைக் கொஞ்சம் பெரிய தொன்னை போன்று அல்லது புட்டுக் குழாய் போன்று பெரிதாகச் செய்ய தாழம்பூச் செடி இலைகள் (Screw Pine) (இதில் ஒரு வகையில் முட்கள் இருக்கும் என்பதால் (Pandan Leaves) அன்னபூர்ணா இலைகள் (இதுவும் Screw Pine வகை மணம் இருக்கும்), தேக்கு மர இலைகள், வாழை இலை அல்லது மஞ்சள் செடி இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படியாகத் தயாரிக்கப்பட்ட குழாய்கள், பலா மர இலைத் தொன்னைகள் இங்கு மங்களூர் கடையில் கிடைக்கின்றன. உங்களுக்குக் காட்டுவதற்காக இரண்டே இரண்டு வாங்கி அதில் மாவு ஊற்றிச் செய்திருக்கிறேன். படங்கள் கீழே. நான் டம்ளர்களில் ஊற்றி வேக வைத்துவிடுவதுதான் வழக்கம். இதை அவர்கள் கொட்டே கடுபு என்கிறார்கள். அதாவது கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை ஹிட்டு, கொட்டே, கடுபு, என்றும் அல்லது கொட்டே கடுபு என்றும் சொல்கிறார்கள். நம் இட்லி போலதான் ஆனால் அளவுதான் வித்தியாசம். கிட்டத்தட்ட காஞ்சிபுரம் இட்லி போலதான்.
ஒரு கப்/கிண்ணம் உளுந்து (எந்தக் கிண்ணத்தால் நீங்கள் அளக்கின்றீர்களோ அந்தக் கிண்ணத்தின் அளவு) 2 கிண்ணம் இட்லி ரவை. இட்லி ரவையை கொஞ்சம் மேலே நீர் இருப்பது போல் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வேளை உங்களுக்கு இட்லி ரவை கிடைக்கவில்லை என்றால் இட்லி அரிசியை ஊற வைத்து பாம்பே ரவை பக்குவத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கரகர என்ற பக்குவத்தில்.
உளுந்தைக் கழுவி இட்லிக்கு ஊற வைப்பது போல் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இட்லி அரிசி ஊற வைத்து அரைத்தால் ரவை இரண்டாவது படத்தில் இருப்பது போல் உளுந்து அரைத்த மாவுடன் கலந்த பிறகும் தெரிய வேண்டும்.
புளித்த மாவு
அரைத்த உளுந்தை ஊற வைத்திருக்கும் இட்லி ரவையுடன் நன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு புளிப்பதற்கு மூடி வைத்துவிடவும்.
புளித்த மாவை இப்படி டம்ளர் அல்லது கிண்ணங்களில் கொஞ்சம் எண்ணை தடவி மாவை ஊற்றி குக்கரிலோ, அல்லது அகலமான வாணலியிலோ வைத்து மூடி விட வேண்டும். 20 நிமிடங்கள் ஆகும்.
இதோ கடுபு இட்லி தயார்.
இதற்குத் தொட்டுக் கொள்ள வெள்ளைச் சட்னி, சிவப்புச் சட்னி
கால் கப்/கிண்ணம் தேங்காய், 2 சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்), 1 பச்சை மிளகாய் வெள்ளைச் சட்னிக்கு, அதே அளவுடன் ஒரு சிவப்பு மிளகாய் - சிவப்புச் சட்னிக்கு. தாளிக்க நடுத்தர அளவு பெரிய வெங்காயம் வெள்ளைச் சட்னிக்கு ஒன்று, சிவப்புச் சட்னிக்கு ஒன்று. தாளிப்பதற்கும் சிறிய வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) எடுத்துக் கொண்டால் சுவைதான். ஒவ்வொரு சட்னிக்கும் 10 எடுத்துக் கொள்ளலாம். பெரிய வெங்காயம் நல்ல பெரிய அளவில் இருந்தால் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம். பெரிய வெங்காயத்தைச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், மிளகாய், தேங்காய் இவற்றைத் தேவையான உப்பு போட்டு, வெள்ளைச் சட்னிக்குத் தனியாக, சிவப்புச் சட்னிக்குத் தனியாக நன்றாக அரைச்சுக்கோங்க. வாணலியில் இரு தேக்கரண்டி எண்ணை விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் சிறியதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வதக்கிக்கோங்க. கறுவேப்பிலையும் போட்டு வதக்கியதும், இரு சட்னிகளிலும் சேர்த்துவிடலாம். சேர்த்த பிறகு படம் எடுக்க விட்டுப் போச்!!!
மங்களூர் கடையில் பலா மர இலையில் செய்த தொன்னை ஒன்றும், தாழைச்செடியின் இலையில் செய்த ஒரு குழாயும் (புட்டுக் குழல் போல) வாங்கி அதில் செய்த படங்கள் உங்களுக்காக...கடையில் வாங்குவதால், இவற்றைப் பயன்படுத்தும் முன் ஈரத் துணி கொண்டு உட்புறம் துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
பலா மர இலையில் செய்த தொன்னை ஒன்றும், தாழைச்செடியின் இலையில் செய்த ஒரு குழாயும்...இரண்டாவது படத்தில் பலா இலையின் தொன்னையின் உட்புறம்.
குழாயின் அடி பாகம் இப்படி இருக்கும். அடுத்த படத்தில் குழாயின் உட்புறம்.
ஒரு கையில் கேமரா, மற்றொரு கையால் மாவு ஊற்ற சரிந்து கொஞ்சம் மாவு வழிந்துவிட்டது... அடுத்த படம் இட்லி வெந்த பிறகு....குழாயில் வைக்கும் போது இட்லி வெந்துவிட்டதா என்று ஒரு குச்சி கொண்டு நடுவில் குத்தி இறக்கிப் பார்த்து வெந்திருக்கிறதா என்று பார்த்து எடுக்க வேண்டும்.இலையைச் சுருட்டி இப்படிக் குழாய் போன்று செய்யும் போது மெல்லிய குச்சிகள் இலைகளைத் தைக்கப் பயன்படுத்தப்படும். எனவே அவற்றை எடுத்துப் பிரிக்க வேண்டும். சிறிய காணொளி இணைத்திருக்கிறேன்.
இதே போன்று, சிறிய வித்தியாசங்களுடன் செய்யப்படும் ஹலசின (பலாப்பழ) ஹிட்டு/கொட்டே/கடுபும், கொங்கண் (கோவா, மங்களூர்) பகுதியில் செய்யப்படும் சன்னாஸ் வகையும் இங்கு வரும்.... நம்பணும்!!!!!!!! எப்பன்னு எல்லாம் கேட்கக் கூடாதாக்கும்! தகவல் : நம்ம பூஸார் கூட குண்டு இட்லி என்று சிவப்பரிசியில் செய்த இதே போன்ற செய்முறை அவங்க அதீஸ் பாலஸ் யுட்யூப் தளத்தில் போட்டிருக்காங்க!
பின் குறிப்பு :
இதே செய்முறையை வேறு தானியங்களிலும் -சிறு தானியங்களிலும் இதே அளவில் அரிசிக்குப் பதிலாகத் தானியங்கள் என்று செய்யலாம். நன்றாக வரும்.
எபி ஆசிரியர்களுக்கும், கருத்திடுபவர்களுக்கும் மிக்க நன்றி.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்று எபிய்ல் நம்ம செய்முறை என்பதே மறந்து போச்சு. தேதி நினைவிருந்தால்தானே! டக்கென்று தேதி பார்த்தால் 17 ஆ அதற்குள் 17 வந்திடுச்சான்னு!
நீக்குகீதா
இதே செய்முறையை வேறு தானியங்களிலும் -சிறு தானியங்களிலும் இதே அளவில் அரிசிக்குப் பதிலாகத் தானியங்கள் என்று செய்யலாம். நன்றாக வரும். பதிவில் குறிப்பிட விட்டுப் போச்சு
நீக்குகீதா
பின் குறிப்பாக இதை சேர்த்துவிட்டேன்.
நீக்குமிக்க நன்றி கௌ அண்ணா!
நீக்குகீதா
அருமையான நேரடி வர்ணிப்பு. மிகவும் ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குதிங்கள் கிழமை செய்முறை விளக்கம் கொடுப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணப் பதிவு. வாழ்த்துக்கள், சகோதரி.
மிக்க நன்றி ஜீவி அண்ணா ரசித்து வாசித்தமைக்கும், பாராட்டிற்கும். இங்கு எழுதறவங்க எல்லாருமே நன்றாக எழுதறாங்க. பாக்கப் போனா நான் தான் கதை அடிக்கிறேன் என்று நினைப்பதுண்டு!! இப்ப குறைத்துக் கொண்டுவிட்டேன்!
நீக்குகீதா
இட்லி ரவையில் செய்யப்படும் இட்லி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் உதிராக இருக்கும்.
பதிலளிநீக்குகடுபு இட்லி செய்முறை அருமை. காஞ்சீபுரம் இட்லி அடர்த்தியா இருக்கும், உதிர்உதிராக இருக்காது
மிக்க நன்றி நெல்லை. கடுபு கொஞ்சம் உதிரியாக இருக்கும். காஞ்சிபுரம் இட்லி ஆமாம் கொஞ்சம் அடர்த்தியா இருக்கும். அதுல பச்சை அரிசி சேர்ப்பதால்...
நீக்குஇல்லை என்றால் நல்ல பழைய பச்சரிசி ரவையை பகுதி அளவு பயன்படுத்திச் செய்தால் அது கொஞ்சம் உதிரி போல் வரும்.இருந்தாலும் பச்சரியிலுள்ள கஞ்சிப்பதம் இருக்குமே.
கீதா
குடலை போல அந்த இலை டம்ளர் இருக்கிறது. டம்ளரைவிட இதில் செய்யும் இட்லியில் வாசனை இருக்கும்.
பதிலளிநீக்குசட்னிகளோடு நல்லா இருக்கும். எனக்கு மி பொடியோடு இன்னும் பிடிக்கும்.
குடலையில், இப்படியான இலையில் செய்வது வாசனைதான் நெல்லை. ஆனால் ஃப்ரெஷ்ஷாக இலைகளை இப்படிக் கோர்த்துச்செய்தால் நன்றாக இருக்கும்.
நீக்குஇதற்குச் சட்னி ஏனென்றால் வழக்கமாகச் செய்யும் இட்லி போல இல்லாமல் மி பொ என்றால் தொண்டையை பிடிக்கிறது என்பதால் சட்னி அல்லது சங்கீதாவில் முன்பு கொடுக்கும் மங்களூர் கூட்டு வகை நன்றாக இருக்கும்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
முதல் நாள் பதிவுக்கு அடுத்த நாள் பின்னூட்டம் போட்டால் கூட மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. இந்த மாதிரி குறைகளை பின்னூட்டமிடும் ஒவ்வொருவரும் சொல்லப் போவதில்லை.
பதிலளிநீக்குகவனிக்க வேண்டுகிறேன்.
அந்தந்த நாள் கருத்துரைகள் மட்டுமே மட்டறுத்தல் இன்றி வெளியாகும். விரும்பத்தகாத கருத்துரைகளை வெளியாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீக்குவிருந்தினர் பதிவுகளுக்காவது இதை நீங்கள் கருத்தில் கொண்டு அவ்வப்போது வந்து பார்த்து பின்னூட்டங்களை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
நீக்குவிருந்தினர் பதிவுகள் உங்களுக்கு எவ்வளவு அவசியமோ அதை விட மேலான அவசியம் அந்த விருந்துனர்களை உற்சாகப்படுத்த நாங்கள் இடும் பின்னூட்டங்கள். அதனால் உங்கள் பகுதியிலும் கூடுதல் முயற்சிகள் தேவைப் படுகிறது.
ஒவ்வொரு நாளும் தேங்கிக் கிடக்கும் கருத்துரைகளை ரிலீஸ் செய்துதான் வருகிறேன்.
நீக்குஜீவி அண்ணா இடையில் எபியில் நிறைய வேண்டாத கருத்துகள் வந்தன. அதனால்தான் இப்படி.
நீக்குஎங்கள் தளத்திலும் வந்தன. பெயரில்லா என்று ஆனால் கருத்தின் கீழ் சுதா என்று....என்னவோ ஆழம் பார்ப்பது போன்று வந்தன. நாங்களும் இடையில் மட்டுறுத்தலை எடுத்திருந்தோம் மீண்டும் வைத்துவிட்டோம்.
கீதா
முதல் நாள் பதிவுக்கு அடுத்த நாள் பின்னூட்டம் போட்டால் கூட மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. இந்த மாதிரி குறைகளை பின்னூட்டமிடும் ஒவ்வொருவரும் சொல்லப் போவதில்லை.
பதிலளிநீக்குகவனிக்க வேண்டுகிறேன்.
இதி ஒரு தலைவலிதான் ஜீவி சார். பின்னூட்டத்தை ஒரு சில நாட்கள் சென்று, விடுவித்தபின் கவனித்து அதற்குப் பதில் எழுதினால் அதை வெளியிடவும் நாளாகிறது.
நீக்குநெல்லை...ஹாஹாஹாஹா கீதா ரெங்கன் (கா) தில்லை அகத்து தளத்துலன்னு சொல்ல வேண்டியதுதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்ப பயணத்தில் இருந்தேன் நெல்லை. மொபைலில் எங்கள் தளத்தினுள் செல்ல முடியாது துளசியின் ஐடியில் இருப்பதால். ஆனால் கணினிலதான் அதையும் சிங்க் செய்து வைத்திருப்பதால் முடிகிறது. மொபைலில் சிங்க் ஆக மாட்டேங்குது....ஏகப்பட்ட செக்யூரிட்டி கேள்விகள்!!! அதனால தாமதமானது. துளசியால் மொபைலில் கருத்து பார்க்க முடிகிறது ஆனால் கருத்தை வெளியிட முடியவில்லைன்னு சொன்னார்.
நீக்குஇனி அதான் பயணம் என்றால் மட்டுறுத்தலை எடுத்துவிடணும் என்று நினைத்திருக்கிறேன்.
கீதா
இல்லை... எபி பற்றித்தான் சொன்னேன். உங்க ப்ராக்டிகல் ப்ராப்ளம் தெரியும்.
நீக்குநன்றி நெல்லை. ரொம்பவே யதார்த்தப் பிரச்சனைகள் இருக்கு. ஆனாலும் எழுதணும், எல்லாம் பகிர வேண்டும் என்ற ஆசை மட்டும் கூடவே இருக்கு!! இப்ப என் கணினி திறக்கிறது ஆனால் கோடுகள் நெடுக்கும் குறுக்குமாக வருது....சரி பண்ண வேண்டும். அதில் இருந்த ஃபைல்ஸ் எல்லாம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் ல பதிவு செய்துகொண்டு கணவரின் கணினியில்தான் இப்ப தட்டச்சு!
நீக்குஎபி ஆசிரியர்களும் பாவம் தானே நெல்லை. அவங்களுக்கும் யதார்த்தப் பிரச்சனைகள் இருக்கே. வயசாகி வேற போச்சு!!!!!!! ஹிஹிஹிஹி...
கீதா
இட்லியாக குழியில் வார்ப்பதன் சுவை கடுபு இட்லிக்கு வருவதில்லை. தட்டை இட்லிகூட நல்லாருக்கும்.
பதிலளிநீக்குமுள்பாகலில் (ஊர்), தட்டை இட்லிக்கு மி பொடி நெய் விட்டார்கள். நான் ஆசையில் இன்னும் பொடி போடச் சொன்னேன். ஒரு கரண்டி மி பொடியைப் போட்டுத் தந்தான். ஆந்திரா மெதட் பொடி என்பதை மறந்ததால், அதில் இருந்த காரம் தாங்கமுடியவில்ஙை. என் நல்லகாலம் அருகே இளனி விற்றுக்கொண்டிருந்தான், இரண்டு இளநி சாப்பிட்டு ஆபத்தைத் தவிர்த்தேன்.
இட்லியாக குழியில் வார்ப்பதன் சுவை கடுபு இட்லிக்கு வருவதில்லை. தட்டை இட்லிகூட நல்லாருக்கும்.//
நீக்குஹையோ நெல்லை நாம் வழக்கமாகச் செய்யற இட்லிக்குப் போடும் அளவு வேறு கடுபுக்குப் போடும் அளவு வேறு. தட்டே இட்லி அளவு பொருட்கள் வித்தியாசம் உண்டு!!!!
போட்டது போதும்னு இருந்திருக்கணும்!!! ஆந்திராப் பொடி காரம் கூடுதலாக இருக்கும்...வெளியில் போறப்ப அதுவும் இப்ப வெயில்...கவனமா இருங்க நெல்லை..
கீதா
குடலையிலிருந்து இட்லி எடுப்பதைக் காணொளி போட்ட மடந்தையே... நீவிர் வாழ்க, தங்கள் காணொளி ஆசை வாழ்க
பதிலளிநீக்குஹாஹாஹாஹா சிரிச்சு முடிலை நெல்லை!!
நீக்குஉண்மைய சொல்லணும்னா முன்னயே ஸ்ரீராம்கிட்ட சொல்லிருக்கேன் எபில திங்க பதிவு ஒண்ணு வீடியோவா போட ஆசை உண்டு ஆனால் எடுப்பது கஷ்டமாக இருக்குன்னு....அப்புறம் எடிட்டிங்க்...(யுட்யூப்ல இல்லை...கவனிக்க. எனக்கு அங்கு போடும் ஆசை கிடையாசு...துளசி சொல்கிறார்தான் அங்கும் சமையல் பதிவு போடுன்னு ...நோ!!)
ஏற்கனவே பறவைகள் காணொளிகள் எல்லாம் எடிட் பண்ண டைம் இல்லாம....கடினமா இருக்கு பதிவுக்கு வெயிட்டிங்க்!!
மிக்க நன்றி நெல்லை...
கீதா
மிளகு சீரகம் தாளித்துக் கொட்டி மந்தார இலை தொன்னைகளில் ஊற்றி காஞ்சிபுரம் இட்லி ஆக்கிவிட்டால் நெல்லை "கொண்டா கொண்டா" என்று கேட்பார்.
பதிலளிநீக்குபடங்களுக்கு பிளாஷ் போட்டு எடுத்திருக்கலாம்.
Jayakumar
ஹாஹாஹாஹா ஜெ கே அண்ணா அதென்னவோ சரிதான்!!!
நீக்குமுதல்ல வந்த படங்கள் தான் பழைய வீட்டில் கரன்ட் போய் போய் வந்ததில் எடுத்தவை....ஃப்ளாஷ் போட்டு எடுத்தா கலர் மாறிப் போனது அதனால எடுக்கலை.
இலைகளுடன் காணொளியுடன் வந்த அந்த செட் படங்கள் இங்க இந்த வீட்டில் எடுத்தவை.
மிக்க நன்றி அண்ணா
கீதா
புதுமையான ஐயிட்டமாக இருக்கிறது கடுபு இட்லி.
பதிலளிநீக்குபடங்கள் கடுப்பு ஏற்றாமல் கோர்வையாக வந்து இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ஹாஹாஹா கில்லர்ஜி, மிக்க நன்றி. பெயர் தான் வித்தியாசம். மத்ததெல்லாம் வழக்கமாகச் செய்யும் வகைதான்...
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நல்லதே நடக்கட்டும் எல்லோருக்கும்..
நீக்குகீதா
காலையிலேயே படித்து விட்டேன்..
பதிலளிநீக்குமிக அருமை.. அருமை....
படங்களும் பதிவும் சிறப்பு..
மிக்க நன்றி துரை அண்ணா..
நீக்குகீதா
நேற்று விசேஷம் ஒன்றிற்காக நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தேன்.. நாகை ஸ்டேஷனில் இருந்து வடக்காகத் திரும்பும் போது கிழ்ச்க்குப் பக்கமாக நெடிதாக தூண் விளக்கு - கலங்கரை விளக்கம்..
பதிலளிநீக்குஅதன் பணிக்காக அது... அதுவே சிறப்பு..
படம் எடுத்திருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.
நீக்குஉடனே கௌதமன் சாருக்கு நாகப்பட்டினம் ஊர்ப்பாசம் வந்துடுமே
நீக்குஅதானே!!
நீக்குபுதிதாக உள்ளது... அசத்தல்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி.
நீக்குகீதா
@ திரு.கௌதம்..
பதிலளிநீக்கு// படம் எடுத்திருந்தால் எங்களுக்கு அனுப்பவும்... //
அதுதான் மிக வருத்தம்...
படம் எடுக்க முடிய வில்லை.. சீமைக் கருவை மரங்க சூழ்ந்து கிடக்கின்றது..
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த அழகு போய்விட்டது..
s.s. ரஜூலா என்ற கப்பல் பினாங்குக்கு இயங்கிய சரித்திரம் நினைவில் வந்தது.. சீர்மிகுந்த துறைமுகம் நிலை குலைந்து விட்டது.. வழித்தடத்தில் இருந்த (நாகப்பட்டினம்) துறைமுகம் ஸ்டேசன் கூட எடுக்கப்பட்டு விட்டது..
இப்படியான மன உளைச்சல்..
இந்நிலையில்
ரயில் சென்று கொண்டிருக்கும் போது வாசல் ஓரம் நின்று படம் எடுக்கவும் இயலவில்லை..
திரும்பி வந்த நேரத்தில் அந்த ரயில் மிக அகலமான வாயிலைக் கொண்டதாக இருந்ததுடன் இரவாகி விட்டது..
நலமான நாட்கள் திரும்பி வருதல் வேண்டும்..
அதுவே விருப்பம்.. வேண்டுதல்..
விளக்கத்திற்கு நன்றி. நலமான நாட்கள் திரும்ப வேண்டுவோம். மூடப்பட்ட ஸ்டேஷன் பெயர் : நாகப்பட்டினம் கடற்கரை ( Nagapattinam Beach )
நீக்குநாகப்பட்டினம் கடற்கரை..
பதிலளிநீக்குஇதுதான் சரி..
நான் குழப்பி விட்டேன்..
கடுபு இட்லி செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குசொல்லிச் சென்ற விதம் ரசனையாக இருந்தது.
மிக்க நன்றி மாதேவி.
நீக்குகீதா
கீதா! சமையல் குறிப்பு-கடுபு இட்லி தயாரிக்கும் முறையும் படங்களும் மிக அருமை! அதுவும் பலா இலை, தாழை இலைகளாலான தொன்னைகள் படங்கள் மிக அழகு! அவசியம் செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க..
நீக்குகீதா
"கடுபு இட்லி" செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது கீதா.
பதிலளிநீக்குகாணொளியும் நன்றாக இருக்கிறது. படி படியாக படங்கள் தொகுப்பு அருமை.
திருவனந்தபுரத்தில் செய்யும் திரளி இலை கொழுக்கட்டை நினைவுக்கு வந்தது. இலையின் வாசம் கொழுக்கட்டையில் இருக்கும்.
//கடையில் வாங்குவதால், இவற்றைப் பயன்படுத்தும் முன் ஈரத் துணி கொண்டு உட்புறம் துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.//
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு.
அதிராவின் சிவப்பு அரிசி குண்டு இட்லி செய்முறையை நானும் பார்த்தேன்.
ஆமாம் கோமதிக்கா, திருவனந்தபுரத்தில் இருந்தவரை திரளி இலை கொழுக்கட்டை ஆற்றுக்கால் பொங்காலேக்குச் செய்து படைப்பதுண்டு. அது ஒரு கனாக்காலம்!
நீக்குஅதிராவின் யுட்யூப் பதிவில் உங்கள் கருத்தையும் பார்த்தேன் கோமதிக்கா...
கடையில் வாங்கும் இலைக்கிண்ணங்களை தண்ணியில் போட்டும் கழுவி உலர வைத்துவிடலாம் ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். இடுக்கில் தூசி, சின்ன பூச்சிகள் இருந்தாலும் வந்துவிடும் கடையில் இருப்பதால். நாம் பறித்துக் கழுவி துடைத்துக் கிண்ணம் கோர்த்தால் பிரச்சனை இல்லை...ஆனால் அதெல்லாம் இப்போது முடிவதில்லையே.
//"கடுபு இட்லி" செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது கீதா.
காணொளியும் நன்றாக இருக்கிறது. படி படியாக படங்கள் தொகுப்பு அருமை.//
மிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
கடுபு இட்லியைக் காலம்பரவே பார்த்தாலும் எடுத்துச் சாப்பிடத் தோணலை. ஆனால் இங்கே பார்த்தால் நல்ல போணி ஆகி இருக்கே! :) சித்தப்பா எழுதி இருந்த கதை மூலம் கடுபு என்றால் கொழுக்கட்டை மட்டுமேனு நினைச்சேன். இட்லியைக் கூடக் கடுபுனு சொல்லுவாங்கனு இப்போத் தான் தெரியும். முன்னெல்லாம் காஞ்சீபுரம் இட்லி எல்லாம் செய்து கொண்டிருந்தேன். இப்போ என்னமோ பண்ணப் பிடிக்கலை. ஆனால் ரவா இட்லி அவ்வப்போது பண்ணுவேன். அதிலும் இட்லி/தோசைக்கு அரைத்த மாவு மீதி இருக்கையில் அதை ரவா இட்லியாக மாற்றிடுவேன்.
பதிலளிநீக்குகீதாக்கா....கடுபு என்றால் கொட்டே கொழுக்கட்டை தான் இருந்தாலும் தமிழில் அவங்க சொல்லுறப்ப கடுபு இட்லினு சொல்றாங்க...நாம் செய்யும் காஞ்சிபுரம் இட்லி /கிண்ணம் இட்லி போல என்பதால்....
நீக்கு//அதிலும் இட்லி/தோசைக்கு அரைத்த மாவு மீதி இருக்கையில் அதை ரவா இட்லியாக மாற்றிடுவேன்.//
ஹாஹாஹாஹா நானும் இட்லி அல்லது ரவா தோசையாக மாற்றுவதுண்டு!! அல்லது மிளகு ஜீரகம் போட்டு குண்டு தோசை...
மிக்க நன்றி கீதாக்கா.
கீதா
ஊகீசா மேடம் மிஞ்சினதில் எதை வைத்து எப்படி மாற்றுவார் எனக் கண்டுபிடிக்க முடியாத்தால் பயந்துகொண்டு, வீட்டில் உள்ளவர்கள் அவ்வப்போது வயறு சரியில்லை, கஞ்சி மட்டுமே போதும் என்று சொல்லித் தப்பிப்பார்களோ?
நீக்குஇன்னிக்குக் கூட ரவா இட்லி தான் செய்திருக்கணும். சாம்பாருக்கு வெங்காயம் கூட உரிச்சு வைச்சேன். ஆனால் அதுக்குள்ளே ஸ்டவ் சர்வீஸ் பண்ணுபவர் வந்து அடுப்பை எடுத்துட்டுப் போயிட்டார். நாளைக்கு மத்தியானம் தான் தருவாராம்.
பதிலளிநீக்குவடை போச்சே!!!!!! அப்ப நாளைக்கு மாலைக்கான உணவாச்சு!! இன்று அடுப்பில்லாமல் அப்புறம் என்ன செஞ்சீங்க கீதாக்கா?
நீக்குகீதா
நாளைக்கு அதில் ரவா இட்லி கிடையாது. ஒருவேளை குனுக்காக்கியிருப்பாரோ இல்லை ரவா தோசையா?
நீக்குஇந்த ஸ்டவ் ரிப்பேர் செய்வதில் கூட ஒருத்தர் ஏமாற்றவென்றே வந்தார். நான் ப்ரெஸ்டிஜ் செர்வீஸ் சென்டரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நடுவில் ஒருத்தர் குறுக்கிட்டு நாங்க ப்ரெஸ்டிஜ் பொருட்கள் தான் செர்வீஸ் செய்யறோம். அவங்க ஃப்ராஞ்சைஸ் என்று சொல்லிவிட்டு என்னிடம் என்ன செய்யணும்னு கேட்டார். கொஞ்சம் யோசித்த நான் நாம் என்ன விலாசமோ மற்ற விபரங்களோ கொடுக்கப் போவதில்லையே என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு ப்ரெஸ்டிஜ் க்ளாஸ் டாப் அடுப்பு செர்வீஸ் என்று சொன்னேன். உடனே என்னிடம் முன்பதிவு செய்துக்கக் கட்டணம் உண்டு எனவும் கூகிள் பே/பேடி எம் மூலம் பணம் கட்டிட்டு முன்பதிவு செய்துக்கவும்னு சொன்னார். எங்களிடம் இரண்டு வசதிகளுமே இல்லை. ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்வதில்லைனு சொன்னதும் அவருக்கு வந்ததே பாருங்க கோபம்! கன்னா/பின்னா என ஏதோ சொல்லிட்டுத் தொலைபேசியை வைச்சுட்டார் நல்லவேளையாக!
பதிலளிநீக்குஅக்கா தப்பிச்சீங்க! நல்ல நேரம். இல்லைனா ...இப்படியும் ஏமாற்றுறாங்க கீதாக்கா. கூகுள் பே எல்லாம் இருந்தாலுமே செர்வீச் பண்ணுறவங்க அப்படிக் கேட்பதில்லை முன் பதிவுன்னு எதுவும். அது சரி எப்படி இடையில் ஆள் குறுக்கிட்டார்? நீங்க பிரஸ்டீஜ் செர்வீஸ் தொடர்பு கொள்ள முயன்ற போது?
நீக்குகீதா
படங்களுடன் கூடிய பதிவு வழக்கம் போல் உங்கள் பாணியில் அருமையாகக் கொடுத்திருக்கீங்க. ஹாஹா! இலையைப் பிரிக்கச் சொல்லிக் கொடுத்திருப்பது முதலில் சிப்புச் சிப்பாய் வந்தாலும் அப்புறமா அட, நம்மைப் போல் நிறையப் பேர் இருப்பாங்களேனு தோணித்து. நான் இலையில் வைத்து இலை அடை தான் செய்திருக்கேன். இலை வாசத்துடன் சூடாகச் சாப்பிடக் கொஞ்சம் போளி போலவும்/கொஞ்சம் கொழுக்கட்டை போலவும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஅக்கா கொடுத்ததுக்குக் காரணம் , அதில் கோர்த்த குச்சிகள் இருக்கும். எடுக்கும் போது சிலப்போ சின்னக் குச்சிகள் மாட்டிக் கொண்டால் அதனால் அப்படி இருக்கும்னு சொல்றதுக்குத்தான்...நீங்கள் எல்லாம் அனுபவஸ்தர்கள். அடுப்பில் சமையல் வேலை செய்து பழக்கமில்லாதவர்களுக்காக...
நீக்கு//படங்களுடன் கூடிய பதிவு வழக்கம் போல் உங்கள் பாணியில் அருமையாகக் கொடுத்திருக்கீங்க. //
மிக்க நன்றி கீதாக்கா.
கீதா
கௌ அண்ணா/ஸ்ரீராம், ஒளிந்திருக்கும் கருத்துகளை இழுத்துக் கொண்டு வாங்க!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஒளிந்திருந்தவை இப்ப வந்துவிட்டன
நீக்குகீதா