இன்றைய தனிப்பாடல்...
கீதப்ரியன் எழுதிய பாடல். V. குமார் இசை. சீர்காழி கோவிந்தராஜன் குரல்.
வள்ளிக்கணவன் பெயரை தினமும் சொல்லடா தம்பி
வள்ளிக்கணவன் பெயரை தினமும் சொல்லடா தம்பி
உன் வாழ்வில் வளம் காண்பதற்கு உறுதியுடன் நம்பி -வள்ளி
தெள்ளுதமிழ் கற்றுத்தேர்ந்த புலவர்க்கெல்லாம் தலைவன்
தெள்ளுதமிழ் கற்றுத்தேர்ந்த புலவர்க்கெல்லாம் தலைவன்
தேன் மணக்கும் தென்பழநி மலையில் வாழும் முருகன்
தேன் மணக்கும் தென்பழநி மலையில் வாழும் முருகன் -வள்ளிக்
கருணைபொழியும் விழிகளில் அருள் விளங்குமடா
கருணைபொழியும் விழிகளில் அருள் விளங்குமடா
கையில் உள்ள வேல் அவனின் ஆற்றல் கூறுமடா
கையில் உள்ள வேல் அவனின் ஆற்றல் கூறுமடா
அருணன் உதயம் போலே மேனி வண்ணம் காணுமடா
அருணன் உதயம் போலே மேனி வண்ணம் காணுமடா
அவனியெல்லாம் புகழ்ந்துபோற்றும் அழகு தெய்வமடா
அவனியெல்லாம் புகழ்ந்துபோற்றும் அழகு தெய்வமடா -வள்ளிக்
***********************************************************************
எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இளைய சகோதரி எஸ் பி ஷைலஜா. இளையராஜாவிடம் போய் தான் பாட விரும்புவதாகச் சொல்ல, அவர் இவருக்கு பாட வாய்ப்பு கொடுத்து முதலில் பாடிய பாடல் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் வரும் 'சோலைக்குயிலே.. காலைக்கதிரே..' பாடல். இனிமையான பாடல். அப்போதே பல நெஞ்சங்களைக் கவர்ந்த பாடல்.
பின்னர் பல பாடல்களை பாடினாலும், முதல் பாடலே கொஞ்சம் சவாலான பாடல்தான் என்றாலும் ஷைலஜா அண்ணனிடம் பாராட்டு வாங்கிய பாடல் இன்று நான் பகிரும் அவர் பாடல். பெருமை இளையராஜாவுக்கு.
1980 ல் வந்த படம் ஜானி. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்திலும், ஸ்ரீதேவியுடன் நடித்த படம். மகேந்திரனுக்கு ரஜினியுடனான அவர் முந்தைய படமான முள்ளும் மலரும் படத்தின் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' பாடலின் மலைஜாதிப் பெண்கள் நாட்டியம் ரொம்பப் பிடித்துப் போய்விட்டது போல... இதிலும் அதே போல ஒரு நடனத்தைக் கொண்டு வந்திருப்பார்.
ஜெயசுதாவுக்கு எவ்வளவு வயதானாலும் சின்னப்பெண் போலவே தெரிவார். அவர் தங்கையான சுபாஷினி நேர்மாறு! சிறு வயதிலேயே ஆண்ட்டி போல தெரிவார். அவர் அறிமுகமான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்திலேயே அப்படிதான். இதில் சொல்லவே வேண்டாம்! ரஜினி உணர்ச்சியே காட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க,சுபாஷினி ஆடும் காட்சி. நடனத்துக்காக ஒரு முறை பாருங்கள். அப்புறம் பாடலை மட்டும் ஒருமுறை கேளுங்கள்.
இந்தப் பாடல் சிந்து பைரவி ராகமாம். இதன் பாடல்கள் எல்லாமே ஹிட், மற்றும் வெவ்வேறு முறை மறுபடி உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன.
பாடலை எழுதியவர் கங்கை அமரன்.
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை
பூ மணம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையில் சொந்தம் தேடுது
மேடையில
ஆசைய காத்துல
தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில
செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள்
பதிலளிநீக்குஎல்லாம் தலை
தமிழ் வாழ்க..
தமிழ் வாழ்க..
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குஇன்றைய பாடல்கள் அருமை..
பதிலளிநீக்குஇரண்டுமே இனிமை..
நன்றி. ஆமாம்.
நீக்குராமன் ஆண்டாலும்..
பதிலளிநீக்குராவணன் ஆண்டாலும்!..
முருகா!..
ஆசைய காத்துல தூது விட்டதால வந்த மயக்கமா?..
ஹா... ஹா... ஹா... இதோ மாற்றி விடுகிறேன்!
நீக்குசோலைக்குயிலே காலைக்கதிரே. பாடல் மிக இனிமையானது. பள்ளியில் படிக்கும்போது பாடிப்பார்க்கும் பாடல். பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆசையைக் காத்துல தூதுவிட்டு..... மிகவும் பிடித்த பாடல். இளையராஜாவின் சூப்பர்களில் இதுவும் ஒன்று.
சலங்கை ஒலி படம் பார்த்தபிறகு, ஷைலஜா அடாவடிப்பெண் என்ற பிம்பமே என் மனதில் தங்கிவிட்டது. ஒரு திரைப்படம் செய்யும் மாயம் அது,
முன்பு சோலைக்குயிலே பாடலைப் பகிர்ந்த நினைவு. அதனாலென்ன.. மறுபடி ஒருமுறை பகிர்ந்து விடலாம்! சலங்களை ஒளி அடாவடிப்பெண் பிம்பம் தவிர, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கடுமையான நடுவர்!+
நீக்குமுதல் பாடல் ஓகே ரகம்.
பதிலளிநீக்குஅதிகாலை ஆறுமணி சுமாருக்கு கேட்கவேண்டும். நன்றாய் இருக்கும்!
நீக்கு1950-ல வெளிவந்தபடம் ஜானி! அதில் இரட்டை வேடத்தில் ரஜினி.. எந்தா சாரே...என்ன இதுல்லாம்!
பதிலளிநீக்குஹிஹிஹி.. கேஜிஜி திருத்தி விட்டார் போல...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்கு// 1950 - ல் வெளி வந்த படம் ஜானி!.//
பதிலளிநீக்குநானும் இப்போது தான் கவனிக்கின்றேன்..
வாசம்
பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம்
தை மாசம் மல்லிகை
பூ மணம் வீசும்
அந்த மலை மோகினியின் மல்லிககைப் பூ வாசமா ஸ்ரீராம்!..
எட்டு அதன் சுழி மாறி ஐந்தாகி விட்டது வேறு ஒன்றுமில்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வு இரண்டும் அருமை.
முதல் தனிப்பாடல் அடிக்கடி கேட்டு மனதில் அமர்ந்திருந்த வரிகள். சீர்காழி அவர்களின் முருகன் பக்திப்பாடல் கேசட்களில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அவரின் கம்பீரமான குரலில் இழையும் பாடல்களில் இதுவும் ஒன்று. மிக அருமையான பாடலை மீண்டும் கேட்கறேன்.
இரண்டாவது பாடலும் இனிமை. இந்த திரைப்படம் இன்னமும் முழுமையாக பார்க்கவில்லை. இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும நன்றாக இருக்கும். இந்தப்பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இதன் ராகம் இப்போது அறிந்து கொண்டேன். இதையும் இருமுறை பார்த்து, கேட்டு ரசிக்கிறேன்.
முள்ளும் மலரும் அனேக தடவைகள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அதில் இடம் பெறும் அந்த மலை வாசிகள் பாடலும் எனக்கு பிடிக்கும். ரஜனியின் நடிப்புடன் ஸ்டைலும் அழகு.
ஒவ்வொரு பாடலுக்கும் தாங்கள் தேடிப்பிடித்து தரும் விபரங்கள் அதனினும் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. அந்தப் பாடல் கேட்கும்போது எனக்கு சிந்துபைரவி வாசனை அடித்ததில்லை. அங்கு சொல்லி இருந்ததைச் சொன்னேன்! 'வலையோசை கலகலகலகலவென பாடல் கூட சிந்துபைரவி. அவ்வை ஷண்முகி படத்தில் வரும் ஆம்பளைக்கு வேலையில்ல கூட சிந்துபைரவி என்று சொல்வார்கள்.
நீக்குஇரண்டும் அற்புதமான பாடல்.
பதிலளிநீக்குஉச்சத்தில் போன இளையராஜா தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் குறுகிய காலத்தில். பலருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
எல்லாம் அவரவர் வயிற்றுப் பாட்டிற்குத் தான்...
நீக்குஇது அவரவர் பார்வை. ரஹ்மான் அப்படி ஒன்றும் வாய்ப்பு கொடுத்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால் அவர் தமிழ்ப்படங்களை முடிந்தவரை தவிர்த்து ஹிந்தி படங்களே செய்தார்.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. அதுக்குப் பதிலாக வள்ளி கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் என்னும் காவடிச்சிந்து தான் நினைவில் வருது. ஜானி பாடப் பாடல்கள் கேட்டிருந்தாலும் இது கேட்டேனா என்பது நினைவில் இல்லை. எஸ்பிபி தன் தங்கை பாட வந்தது பிடிக்காமல் தான் யாருக்கும் சிபாரிசு பண்ணினதில்லை என்று சொல்லிக் கேட்டிருக்கேன். அதோடு எஸ்..பி.ஷைலஜாவுக்கு அப்போது காதல் விவகாரம் வேறே. அதன் காரணமாகவே எஸ்பிபிக்கும் கோபமும் அதிகம் என்பார்கள்.
பதிலளிநீக்குஆமாம். அந்தப் பாடலும் இருக்கிறியாது. இதைத் தேடினால் அதுதான் கண்ணில் படும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் மிகவும் பிடித்த பாடல் , அடுத்த பாடலும் அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல். இரு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கடுமையான நடுவர்!+//
ஆமாம் . உம் என்று பாடினால் இவருக்கு பிடிக்காது சிரித்து கொண்டு ரசித்துப் பாட சொல்வார்.
ஆமாம். முன்பு பார்த்திருக்கிறேன் நானும்.
நீக்குஇரண்டாவது பாடலை இசைக்காகவே கேட்கலாம்...
பதிலளிநீக்குTrue... உண்மை. நிஜம்.
நீக்குஸ்ரீராம் முதல் பாடல் பிடித்த பாடல் நிறைய கேட்டதுண்டு! எளிமையான ராகப் பாடல். யார் வேண்டுமானாலும் எளிதிக் கற்றுக் கொண்டு பாடலாம்.. சின்னக் குழந்தைக்குச் சொல்லுவது போல!
பதிலளிநீக்குகீதா
எளிமையான ராகம்... என்ன ராகம்?
நீக்குஹையோ ஸ்ரீராம் எனக்கு இந்த இரண்டாவது பாட்டு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். அதுவும் அந்த ஆரம்ப இசை..பாட்டு முழுவதுமே....செம ரிதமிக்....;செம இசை இது. இதைக் கேக்கறப்ப எல்லாம் எனக்கு கல்லூரி நினைவு வந்துரும்.
பதிலளிநீக்குஎன் சீனியர் இந்தப் பாட்டுக்கு செமையா ஆடுவாங்க.
கீதா
ஆம். இசையிலும், குரலிலும், டியூனிலும் மிகவும் ரசிக்க வைக்கும் பாடல்.
நீக்குஇரண்டுமே இனிய பாடல்கள்.
பதிலளிநீக்கு