சனி, 8 ஏப்ரல், 2023

கல்வி, உணவு, மத நல்லிணக்கம் மற்றும் நான் படிச்ச கதை

 


==============================================================================================

எளிமையான விஞ்ஞானிகள் 


===================================================================================================


=====================================================================================================




======================================================================================================


==================================================================================================================================================================== 

நான் படிச்ச கதை (J K C)

ஏட்டில் இல்லாத மஹாபாரதக்  கதைகள்

2

 மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர் ஆகும். அக்கதையை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம் பெறாத நாட்டுப்புறக் கதைகள். அவை செவி வழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பனவே தவிர தீமை விளைவிப்பன அல்ல. “ 

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்.

கோவேந்தன் 

பாரதப் போரில் வீடுமர் அர்ச்சுனன் அம்பால்  அடிபட்டு வீழ்ந்தார். 

வீடுமர் பெரும் ஞானி. பகவான் பரசுராமரின் மாணாக்கர். அவர் விரும்பும் போதுதான் அவர் உயிர் பிரியும். அத்தகைய வரத்தை அவர் தந்தை சந்தனு அளித்தார்.

அவர் அடிபட்டு வீழ்ந்த காலம் தட்சிணாயனம். உத்தராயண காலத்தில் உயிர் துறந்தால்தான் மோட்சம் கிட்டும். அதனால் உத்தராயணம் வரும் வரை அர்ச்சுனன் அமைத்துக் கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.



அப்போது தருமன் அவரை வணங்கி அரச நீதி அறிவுறுத்தும்படி வேண்டினார். கண்ண பெருமானும் அரச நீதியை தருமனுக்குக் கூறும்படி வற்புறுத்தினார். 

அம்புப் படுக்கையில் படுத்துள்ள துன்பத்தையும் பொருட்படுத்தாமல் வீடுமர் அரச நீதி கூறத் தொடங்கினார். 

அப்போது அருகிலிருந்த பாஞ்சாலி உறக்கச் சிரிக்கத் தொடங்கினாள். அவள் சிரிப்பதற்குக் காரணம் என்ன என்று வீடுமர் கேட்டார். 

தாத்தா! காரணம் ஏதும் இல்லை. தாங்கள் பெருஞ்ஞானி. நல்லறம் முழுதும் அறிந்தவர். உலகிலேயே உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்தவர். அப்படி இருந்தும் துரியோதனன் சூதாட்டம் என்ற வஞ்சனையால் எங்கள் நாட்டைப் பறித்துக்கொண்ட போது அரச நீதி துரியோதனனுக்குக் கூறவில்லை. துச்சாதனன் என்னை மானபங்கப்படுத்திய போதாவது அறவுரை கூறித் தடுத்திருக்கலாம். எங்களைக் காட்டுக்கு அனுப்பாமல் தடுத்திருக்கலாம். அப்போதே வாய் திறவாமல் தீயவர் செயலுக்கு உடன்பட்டிருந்த நீங்கள் தற்போது அரசநீதி கூறத் தொடங்குவதை எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது. என்றாள்  பாஞ்சாலி. 

குழந்தாய் பாஞ்சாலி! நீ நினைத்து சிரித்ததும் ஞாயமானதுதான். அதற்குரிய காரணம் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.” 

நான் உண்ட உணவு துட்டனாகிய துரியோதனனுடையது. அந்த உணவால் உண்டான இரத்தம் என் உடலில் ஓடியது. அந்த இரத்தம் அறநெறியைக் கழுவி அநீதிச் சேற்றை என்னுள் தேக்கி விட்டது.

அதனால் தான் என் வாயில் இருந்து அறநெறி வெளி வரவில்லை. இப்போது அர்ச்சுனன் அம்புகள் என் உடலைத் துளைத்து அந்த அநீதிக் குருதி முழுவதையும் வெளியேற்றி விட்டது. 

இப்போது என் உடலில் ஓடுவது இறைபக்தியாகிய குருதி. அதனால்தான் அறநெறி கூற என் உணர்வு என்னைத் தூண்டுகிறது. எத்தனை தூயவராயினும் தீயவர் உறவும் உணவும் உடையவரானால் தீமை  கண்டும் சீறி எழவிடாமல் உணர்வு மழுங்கிவிடும் என்பதற்கு என் செயல் தக்க எடுத்துக்காட்டு. இன்றைய செயலுக்காக நான் நாணுகிறேன். என்னைக்கண்டு சிரித்தமைக்கு நான் வெறுப்படையவில்லை. மாறாக உவப்பு அடைகிறேன்.” என்று கூறிவிட்டு பின்னர் தருமனுக்கு அரச நீதி கூறத் தொடங்கினார் வீடுமர்.

34 கருத்துகள்:

  1. நல்ல செயல்கள் பாராட்டுக்குரியவை.

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. பல நேரங்களில் தகுதியானவர்களை உணவு அடைகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள் படைத்த பல மனிதர்களின் ஆசை தனக்கு வேண்டாம் என்று சொல்ல மறுக்கிறது.​

      நீக்கு
  2. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்க எண்ணாத்தால் எத்தனையோ நிகழ்வுகள். ஓரிரு வாரங்களாக மகாபாரத்த்தின் சுருக்கத்தை எழுதலாம் எனத் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் நிகழ்ந்த பலவையும் (ஆரம்பக் கதைகள் உட்பட), தேவையில்லாத விவாதங்களுக்கு வழிவகுக்குமோ என்பதால் தயக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இது மாதிரி ஆசை எழுந்ததன் விளைவே மகாபாரதத்தை ஒட்டி ஒரு கதை எழுதினேன்! இரண்டு என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. ஒன்றுதான் எழுதியிருப்பீர்கள். இரண்டாக ஆகியிருக்கும்...!

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா... ஒன்று பாஞ்சாலி கர்ணன் பற்றியது. இன்னொன்று என்ன என்று நினைவில்லை!

      நீக்கு
  3. வாசவன் மருகா
    வருக வருக..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. பொம்பள சிரிச்சா.. போச்சு - என்று கிராமத்துப் பெரிசுகள் அவ்வப்போது சொல்ல, சின்னவயதினிலே கேட்டிருந்தேன். இத்தனைக் காலத்துக்கப்புறம்... புரிகிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஞ்சாலி இங்கு சிரித்ததை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பாஞ்சாலி இதற்கு முன்னரும் சிரித்தாள். கண்ணாடி மாளிகையில்! வினை அங்குதான் தொடங்கியது.

      நீக்கு
    2. ஆணுலகத்தின் விதியே இவர்களின் விரலில்தான் சுற்றப்பட்டிருக்கிறது எனப் பொதுவாக நினைத்து சிரித்திருக்கலாம்.

      ஏனென்றால், இவள் சிரித்ததைப் பார்த்து ‘சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..’ என எந்தப் பாண்டவனும் பாடியதாகத் தெரியவில்லையே..!

      நீக்கு
  5. இப்படி ஒசரமானது ஜால்ரா அடித்தே வளர்ந்தவர்கள்.

    ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாமல் போனதில் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட்ட நன்றிக்கடனுக்கான செஞ்சோற்றுக்கடன்..

    வீடுமர் சொன்ன விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டு பாராக்களுக்கும் அர்த்தமே புரியவில்லை!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மதநல்லிணக்க செய்திக்கு நன்றி. நல்லதையே நினைக்கும்/செய்யும் நல்லவர்களை மனதார பாராட்டுவோம்.

    ஏட்டில் இல்லாத மஹாபாரத கதைகளில் இந்தக் கதையும் படித்திருக்கிறேன். மரணத்தை தாம் விரும்பும் வரை தக்க வைத்துக் கொள்ளும் சக்தி பெற்ற பிதாமகரின் கூற்று சிறந்தது. ஆனால், சாதாரண மக்களுக்கு இது சாத்தியமல்ல. கெட்ட எண்ணங்களினால் உருவாகி உண்டாக்கப்பட்ட உதிரம் வற்றிய பின் உடலில் உயிர் நிலைப்பதென்பது சாத்தியமல்லவே ..! கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. மரணத்தை தான் நினைத்தவரை ஒத்திப்போட முடியும் என்பது நல்லதா கெட்டதா? 2. துரியோதன்ன் கெட்ட எண்ணங்கள் நிறைந்தவன் என்று சொல்வது சரியா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      மரணத்தை தாம் நினைக்கும் வரை தன்னுடல் தாங்கும் வரை ஒத்தி வைத்த ஆன்மிக பெரியவர்கள், மற்றும் யோகிகளைப் பற்றியும் ஒரளவு படித்துள்ளோம். பிதாமகருக்கு அவர் தந்தையால் அந்த வரம் கிடைத்தது எனவும் மஹாபாரத ஆரம்ப கதைகளில் படித்து அறிந்திருக்கிறோம் . ஆனால் சாதாரண மனிதர்களில் ஒருவருக்கு மரணம் என்பது எப்போது நிகழ வேண்டுமோ அது அந்த பொழுதை ஒரு நொடி கடக்காது என்பதையும் நேரடியாக பார்க்கிறோம். /உணர்கிறோம்.

      இதில் நல்லது கெட்டது என்பது அவரவர்களின் உடல்வலு, அவர்களின் மனதின் சந்தோஷமான தருணங்கள் எல்லாவற்றையும் தாண்டி விதிக்கப்பட்ட அந்த நேரங்களில் மரணம் வந்து அவர்களை அழைத்துச் செல்லும் போது, நம் மனதுக்குள் எழும் போராட்டங்கள்.

      உடல் வலுவிழந்து, அல்லது மிக சிரமங்களுகிடையே வாழ்பவரை மரணம் அழைத்துக் கொள்ளும் போது, அவர்கள் நம் நெருங்கிய உறவாக இருப்பினும், அவர்களுக்கு அது நல்லதுதான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் எண்ணவோட்டத்தை இறைவன் ஏன் தருகிறான் நானும் வியப்பதுண்டு. ஆனால் ஒரு உறவின் பிரிவெனும் ஆழமான காயங்கள் எல்லோரின் மனங்களிலும் நிரந்தரமாவதுதான். அதிலிருந்து நம் நினைவுகளற்று போகும் வரை தப்பிக்க இயலாது என நான் நினைக்கிறேன். .

      என்னதான் புதிதாக விஞ்ஞானங்கள் உருவானாலும், இந்த பிறப்பு, இறப்பு என்ற கண்ணுக்குத் தெரியாத மாயயைதானே இறைசக்தியாக நாம் உணர்கிறோம். இதை குறித்து விவாதங்கள் நிறைய பேசலாம். ஏதும் தவறாக என் கருத்துக்கள் இருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள்.

      எல்லாவற்றிற்கும் மூலகாரணம் இந்த ஆசைதான். உண்மையிலேயே துரியோதனன் மிக நல்லவன். ஆசையின் காரணமாக முதலில் எழுந்த அந்த பொறாமை, அதன் விளைவால் எழுந்த சுயநலமும் அவனை, அவன் செய்கைகளை கெட்டவனாக்கி விட்டது. இதேதான் இன்றைய ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எழுவது. இந்த கதைகளின்படி நாம் எல்லோருமே எல்லோருமாக வாழ்ந்து முடிவில் மரணத்தை தொடுகிறோம். என்ன செய்வது? ஆரம்பம் ஒரு முடிவை சந்தித்துதானே ஆக வேண்டும்.

      எனக்கு இந்த மாதிரி நினைப்பது, பேசுவது பிடிக்கும். ஆனாலும் அப்பாடா.. என் எண்ணவோட்டங்கள் இப்படி ஒரு பெரிய கருத்தாக ஆகி விட்டதே....! தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. என் கேள்விகளை புதன் கேள்விகளாக எடுத்துக்கொள்ளட்டும்.

      மரணம் நம் கையில் இருந்தால், நம்மால், அதன் புதிர் காரணமாக மற்றும் நம் ஆசைகளின் விளைவாக ஒத்திப்போடவே தோன்றும். எப்படா என்னை அழச்சுக்கப்போற என்று அலுத்துக்கொள்பவர்களிடம் இறைவன் வந்து, சரி கிளம்பறயா என்று கேட்டால், நாளைக்கு வாயேன், இன்றுதான் திருநெவேலியிலிருந்து என் மருமான் வர்றான், அல்வா கட்டாயம் கொண்டுவருவான், சாப்பிட்டுடறேன். எதுக்கு அந்த ஆசையை பாக்கி வைப்பானேன் என்று சொல்வார்களோ? இல்லை, என் பேத்தி பிறந்து முகத்தைப் பார்த்ததும் உடனே வந்துடறேன் என்பார்களோ?

      3. துரியோதனன் ஆசை தவறா? பொறாமை இல்லாத மனிதர்கள் உண்டா? ஒரு 'அரசன்' என்ற நிலையில் துரியோதனனின் செய்கைகளை நியாயப்படுத்த முடியாதா?

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      அடாடா.....நீங்கள் கேட்டது அனைத்தும் புதனுக்குரிய கேள்விகளா? நான்தான் சம்பந்தமில்லாமல், ஏதேதோ கூறி, அறுவையான பதிலாக்கி விட்டேனா?:))) மன்னிக்கவும். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. நீங்களும் கருத்துச் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். உங்கள்ட இருந்து பதிவுகளே காணோமே....

      நீக்கு
    6. கமலா அக்கா..   மரணத்தை ஒத்திப்போடுவது சாத்தியமா, அதற்கு வேறு ஏதாவது பொருள் இருக்குமா தெரியவில்லை.   உத்திரம் வெற்றியபின் உயிர் நிலைப்பது என்பது சித்தர்கள் விஷயத்தில் சாத்தியமா, தெரியவில்லை.  நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றனவே!

      நீக்கு
    7. கமலா அக்கா..  நெல்லையில் கேள்விகளுக்கு காரண காரியங்களை மிக அழகாக அலசி இருக்கிறீர்கள்.  தாங்க முடியாத அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் உறவின் உயிர் பிரியும் பொது துக்கத்துடன் கூடவே அந்த விடுதலை குறித்து எழும் நிம்மதி, உட்பட உயிரின் நீட்சி குறித்த விளக்கங்களும் சிந்தனைகளும் அருமை.  105 வயது வரை வாழ்ந்த என் பாட்டியை நமஸ்காரம் செய்யும்போது  சொல்வார், "யாரையும் நூறு வயசு வாழுங்கள் என்று வாழ்த்தமாட்டேன்.  அதன் கஷ்டம் என்ன என்று எனக்குதான் தெரியும்" என்பார். "உடம்பு ஒத்துழைக்கும் வரைதான் இருக்க வேண்டும் என்பார்.  மற்றவர்கள் உதவியுடன் வாழ்வது சிரமம் என்பார்.

      நீக்கு
    8. நெல்லை... துரியோதனன் கெட்டவனா?  நல்ல கேள்வி.  இல்லை, அரசியல் ராஜ தந்திரிகளால் கெட்டவனாக்கப்பட்டானா?!  எனக்குத் தோன்றுவதை இங்கே இப்போது சொல்வதைவிட புதனில் (முடிந்தால்) சொல்கிறேன்!

      நீக்கு
    9. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

      தங்கள் பதில் கருத்து கண்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி. . ஏதோ இப்படி எனக்குள் அடிக்கடி தோன்றுவதை (மனதுக்குள் விவாதித்துக் கொள்வதை) இன்று சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களுடன் கலந்து பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.

      நீங்கள் பலரை சந்தித்துப் பேசிப் பழகி, நிறைய விஷயங்களைப் பற்றி நல்லறிவுடன் அளவளாவி பல அனுபவ அறிவையும் நன்கு கற்று தேர்ந்தவர். சகோதரர் நெல்லைத் தமிழர் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் விரிவான புதன் பதிலையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நீங்கள் உங்கள் பாட்டியை பற்றிச் சொன்னதும் என் கண்கள் கலங்கி விட்டன எங்கள் பாட்டியும் (அம்மாவின் அம்மா) 89 வயது வரை வாழ்ந்தவர். பேச்சு வாக்கில், அக்கம் பக்கம் இருப்பவர்கள், உறவுகள் என அவரிடம் ஏதாவது ஒரு காரியத்திற்காக வேண்டி, "பாட்டி,, நீங்க நூறு வயது வரை வாழ வேண்டும். தயவு செய்து இதை எனக்கு செய்து தாருங்கள்." எனச் சொன்னவுடன் பாட்டி அவ்வளவு கோபப்படுவார்.. "ஆமாம்.. உன் வாழ்த்து ஒன்றுதான் இன்னமும் பாக்கி.. நான் படும் சிரமம் தெரியாமல் எனன பேச்சு இது..? என கோபப்படுவார். ஆனால் அவர் இறுதி வரை எங்களுக்காக நன்றாக உழைத்தார். இறுதி மூன்று மாதங்கள்தான் நடமாட முடியாமல் படுக்கையாகிப் போனது. அவரை இழந்தது எனக்கு இன்னமும் மனத்துள் ரணமாகத்தான் உள்ளது. நன்றி சகோதரரே.

      நேற்றைய பாடல்கள் பகிர்வுக்கு இன்று காலையில்தான் தாமதமாக ஒரு கருத்து தந்துள்ளேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    கதை பகிர்வும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. செய்திகள் நன்று. புதன் விவாத கேள்விகள் களைகட்டுகிறது . தொடரட்டும். ...விவாதம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல செய்திகள் அனைத்திற்கும் நன்றி. மஹாபாரத மாந்தர்கள் பற்றி என் உ.பி.ச. திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் ஓர் புத்தகம் போட்டிருக்கார். தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து எழுதி இருப்பார். ராமாயணம், மஹாபாரதத்துக்கு அவ்ர் தான் அதாரிடி என எனக்குத் தோன்றும். இப்போக் கண்ணில் அறுவை சிகிச்சை என்பதால் மருத்துவாமனை வாசம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!