வியாழன், 20 ஏப்ரல், 2023

அப்துல் மாலிக்

 கடந்த வாரம் அயோத்தி பார்த்து அழுதேன்!


கல்கி சொல்வாராம்..  "இப்போது கவிஞர் சுப்பு ஆறுமுகம் காந்தி கதை சொல்லி அழுவார்" என்று.  வில்லுப்பாட்டில் காந்தி கதையைச் சொல்லும்போதெல்லாம் அழுவாராம் சுப்பு ஆறுமுகம்.  அதை அப்படிச் சொல்வாராம் கல்கி தனது முன்னறிவிப்பில்!

பாஷை தெரியாத ஊரில் நெருங்கிய உறவு மரணமடைந்துவிட்டால் என்ன ஆகும்?  எப்படி உடலை சொந்த ஊர் கொண்டு வருவது?  இதில் எங்கள் குடும்பத்து உறவில் ஒரு நிகழ்வே உண்டு.  இந்தப் படத்தைவிட இறுக்கமான சூழல்.  என் அம்மா தவறியதும் அவர் காரியத்துக்கு வரவேண்டி அவர் தங்கை - என் சித்தி - சூரத்திலிருந்து சித்தப்பாவுடன் கிளம்பினார். அவர் மகன்கள் அங்கு வேலை பார்த்து வந்ததால் அங்கு சென்றிருந்தார்கள் இருவரும்.  இருவருக்குமே பாஷை தெரியாது.  இதில் சித்தப்பாவுக்கு காதும் கேட்காது. 

கிளம்பிய ஓரிரு மணியில் வடநாட்டு ரயில் நிலையம் ஒன்றிலேயே சித்தியின் உயிர் சத்தமின்றி பிரிந்துவிட, பாஷை தெரியாத, அதைவிட காது கேட்காத என் சித்தப்பா தெரிந்தவர்கள் என்று யாருமே இல்லாத அந்த இடத்திலிருந்து சித்தியின் உயிரற்ற உடலை மறுபடி ஊருக்கு எடுத்துச் சென்றது பெரிய சோகக்கதை.  செல்போன் கூட இல்லாத காலம்.  எத்தனையோ நல்ல மனிதர் உதவினார்கள். 

தை எஸ்ரா என்று சொன்னார்கள்.  டைட்டிலில் போடுகிறார்கள். இணையத்தில் தேடிப்பார்த்தேன்.  கிடைக்கவில்லை.  படம் பார்த்த கையோடு கதையையும் படித்தால் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன்.

முதலில் நடிகை நடிகையர் தேர்வு.  பல்ராமாகவும் ஜானகியாகவும் நம்மூர் சத்யராஜ், தம்பி ராமையா என்று போட்டு நம்பள்கி நிம்பள்கி என்று கெடுக்காமல் யஷ்பால் ஷர்மா என்கிற தரமான நடிகரை இறக்கி இருக்கிறார்கள்.  ப்ரமாதப்படுத்தி இருக்கிறார் மனுஷன்.  குறிப்பிட்ட இடம் வரை பார்வையாளர்களுக்கு அவர்மேல் வரும் கோபம், வெறுப்பு...  ஏற்கெனவே பல ஹிந்தி, பஞ்சாபி படங்களில் நடித்திருக்கிறார்.  அவரின் சிப்காளி என்கிற புதிய படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். படம் பற்றிய விவரம் ஈர்க்கிறது.

நாயகி ப்ரீத்தி அஸ்ரானி ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார்.  நல்லவேளை இவருக்கு பதில் ரஷ்மிகா, பெத்துராஜ், என்றெல்லாம் போடாமல் புதிய முகமாக, இளவயதாக நடிக்க வைத்தார் இயக்குனர்.


இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்ல முடியாமல் தந்தையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவிக்கும், தாயின் அன்பில் திளைக்கும், தாயை இழந்து தவிக்கும் பெண்ணாக மிக இயற்கையாக கஷ்டப்பட்டிருக்கிறார்.  சரியான செலெக்ஷன்.  இதற்காகவே இயக்குனர் மந்திர மூர்த்தியை பாராட்டவேண்டும்.

அயோத்தியிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் வரும் குடும்பம்.  தந்தை ஒரு மூர்க்கன்.  ஆனால் பக்திமான்.  மனைவியையும், பெண், பிள்ளையை அடக்கி பயமுறுத்தி வைத்து வளர்ப்பவர்.  குழந்தைகளுக்கு அம்மா நெருக்கம்.  மிக்க அன்பான, சாதுவான மென்மையான அம்மா.  ராமேஸ்வரத்தில் குளித்தால் தந்தையின் மூர்க்கம் குறையும் என்று நம்பும் அம்மா.  ஆனால் அந்த மூர்க்கத்தினாலேயே மதுரையிலிருந்து ராமேஸ்வரம் போகும் வழியில் விபத்தில் தாயின் உயிர் ஊசலாட, சசிகுமார் என்ட்ரி.

நண்பனான கார் டிரைவருக்கு உதவ வந்து கொஞ்சம் கொஞ்சமாக பாஷை தெரியாமல் திண்டாடும் இந்தக் குடும்பத்துக்கு உதவ ஆரம்பிக்கிறார்.  

நடுவிலேயே தாயின் உயிர் பிரிந்துவிட, உடலை அயோத்தி கொண்டு செல்ல நினைத்தால் ஆயிரம் பிரச்னைகள்.  ஒரு தீபாவளி நாளில் ராமேஸ்வரம் வந்து மாட்டிக்கொண்டு தவிக்கிறது குடும்பம். 

போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்று மூர்க்கமாக தடுக்கிறார் பல்ராம். அவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் அது பெரும் பாவமாக கருதப்படுவதாக பிடிவாதம் பிடிக்கிறார்.  அப்படிச் செய்தால் அவர் மனைவி ஜானகியின் ஆன்மா சாந்தியடையாது என்று கோபப்படுகிறார். 


அவரவருக்கு அவரவர் மத நம்பிக்கைகள்.  அப்புறம் அதற்கு சம்மதித்தாலும் எம்பாம் செய்யும்போது இன்னும் மூர்க்கமாக தடுக்க, அது நடக்காமல் ஊர் திரும்ப முடியாது என்கிற நிலையில் ஷிவானி வெடிக்கிறாள்.

விட்டுக் கொடுத்துதானே ஆகவேண்டும்?  நடக்க முடியாததை ஒரு நாளில் சாதித்துக் காட்டும் தமிழ்நாட்டு மனிதராக சசிகுமார்.  உடன் உதவும் மனிதர்களாக புகழ், கல்லூரி வினோத், போஸ் வெங்கட் முதலானோர்.  இப்படி உதவ ஆட்கள் இல்லாவிடில் அந்தக் குடும்பம் என்ன ஆகியிருக்குமோ என்று எண்ண வைக்கும் நிகழ்வுகள்.

ஒவ்வொருவராக பண உதவி கேட்கும்போது, சசிகுமாரை உதவுவதற்கு கூப்பிட்ட நண்பனே "உன்னை விட்டு விட்டு வந்து விடு என்றுதானே சொன்னேன்" என்கிறான்.  இன்னொரு நண்பன் ஆசையாக வாங்கிய பைக்கை இவர்கள் பொருட்டு விற்று இவர்களுக்கு ஃபிளைட் டிக்கெட் எடுக்கிறான்.  மனிதர்களை புரிந்து கொள்ளாதவராக, குறை சொல்பவராக, தான் நினைபபதுதான் சரி என்று பிடிவாதம் கொண்டவராக யஷ்பால் ஷர்மா.  "இந்த ஊரில் எதற்கெடுத்தாலும் ரூலா?  எதற்கெடுத்தாளு செரிபிகேட், கையெழுத்து...  ஹசே..  மனிதர்களே இல்லையா இங்கே" என்று சசிகுமார், புகழை பக்கத்தில் வைத்துக்கொண்டே வெடிக்கிறார்.  அவர் மனம் மாறும் கட்டம், குழந்தையாகவும் இல்லாமல், வளர்ந்த பெண்ணாகவும் இல்லாமல் பொறுப்பைச் சுமக்கும் ஷிவானி. 

சசிகுமார் ஏற்றிருக்கும் பாத்திரம் விழுந்து விழுந்து அந்த யாரென்றே தெரியாத சக மனிதர்களுக்கு உதவ நினைப்பதை, உதவுவதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் மெல்ல தங்களையறியாமல், தங்களையும் மீறி அவர்களும் உதவி செய்கிறார்கள்.  கல்லூரி வினோத் தன் சக்தியையும் மீறி செய்கிறார்.  இந்த பாஸிட்டிவ் அலைதான் படம் மூலம் பரவும் முக்கியமான செய்தி.

இந்த வருடம் கட்டாயம் விருது வாங்கப்போகும் படம் அயோத்தி.  பார்ப்பவர்கள் ஓரிரு இடங்களிலாவது கண்கலங்காமல் இருக்க முடியாது.  மனிதத்தை வளர்க்கும் இது மாதிரி படங்கள்தான் இன்றைய சூழ்நிலையில் அவசியத்தேவை.  எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

படத்தில் குறைகளே இல்லையா?  காவல் நிலையத்தில் அந்தப் பாடல் காட்சி தேவை இல்லைதான்.  சிலர் கடைசி காட்சியில் பெயர் கேட்கும் காட்சியைச் சொல்கிறார்கள்.  தவறல்ல என்பதே எனக்குத் தோன்றியது.  ஆனாலும் பொருட்படுத்தும் அளவு குறைகள் எதுவும் இல்லை என்பதே பதில்.  இருந்தாலும் இப்படி ஒரு படம் வெளிவர அவை பெரிய தடையல்ல.


என்ன படம்ப்பா...  கலங்கின கண்கள்ல மூழ்கி நெஞ்சுக்குள்ள போயிடுச்சு..
===============================================================================================

அப்படி என்னதான் இருக்கு படத்துலன்னு இதோ போய் பார்த்துடறேன்...

============================================================================================================================================


90 களில் வரிசையில் நின்று இடம்பிடித்து சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

பரிதாபமாக மாறிவிட்டன சரவணபவன்கள்.  முன்னர் இட்லி தோசைக்கு அவர்கள் கொடுக்கும் அந்த சாம்பார் அவ்வளவு ருசி, அவ்வளவு ஃபேமஸ்.  சரவணபவன் சாம்பார் செய்வது எப்படி என்று டிபேட் எல்லாம் நடந்திருக்கிறது.  நானும் எங்கள் தளத்தில் எங்கோ கிடைத்த சரவணபவன் சாம்பார் செய்முறையை வெளியிட்டிருக்கிறேன்.  இப்போது கொடுத்த சாம்பாரை அப்படியே வைத்து விட்டேன் 

இப்பொழுதும் அங்கு மக்கள் வருகிறார்கள்.  வித்தியாசத்தை உணர்கிறீர்களா இல்லையா தெரியவில்லை.  

அங்கு சம்பளமே கூட சரியாக போடப்படுவதில்லை என்று அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் உறவினர் தன்னிடம் புலம்பியதாக நண்பர் ஒருவர் கூறினார்.

அண்ணாச்சி கையில் இருந்தவரை சரவணபவன் நன்றாய்தான் இருந்தது.  கைமாறிய நேரமா, A2B , சங்கீதா போன்ற நிறுவனங்களின் போட்டியா..    ஒன்றிரண்டு கிளைகளைத் தவிர மற்ற கிளைகளில் ஒரு சுறுசுறுப்பு கூட இல்லை.  அசோக் பில்லர் அருகே உட்பட சில இடங்களில் நான் முன்பு பார்த்த கிளைகள் கூட மூடப்பட்டு விட்டன போலும்..  

ஒரு வார இறுதி சுவை இழந்தது!

==========================================================================================

நியூஸ் ரூம் :-  பானுமதி வெங்கடேஸ்வரன் 

செய்திகள்:

நம் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் வரப்போகின்றன. இப்போது இருப்பது போல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பதில்லாமல் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இரண்டிற்கும் சேர்த்து நான்கு செமஸ்டர் கள் அதே போல் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நான்கு செமஸ்டர்கள் என்று வரப்போகிறதாம். இன்னுமொரு குறிப்பிடத்தக்க மாற்றம், பதினோராம் வகுப்பில் பத்து பிரிவுகள் வருமாம். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமாதை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக Maths, Physics படிக்க விரும்பும் மாணவன் History படிக்க விரும்பினால் அதை தேர்ந்தெடுக்கலாம். எப்பூடி..?

பிரிட்டனில் கணிதம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதால் குறிப்பிட்ட வகுப்பு வரை கணிதம் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும், அதற்கேற்றபடி கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நம் ஊர் மாப்பிள்ளை ரிஷி சுனக் கூறியிருக்கிறார். நடக்கட்டும்.

பிரிட்டன் பள்ளிகளில் இந்து(மத) மாணவர்கள் கேலிக்கு உள்ளாகுகிறார்களாம். தன் மதச்சின்னத்தை நெற்றியில் தரித்துக் கொண்டு பள்ளி சென்ற ஹிந்து மாணவன் சக மாணவர்களால் சீண்டப் பட்டதால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட சேர்ந்ததாம். கடவுளே!

பிரிட்டிஷ் இளவரசர் மன்னிக்கவும் அரசர் சார்லஸின் முடிசூட்டு விழா மே ஆறாம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக சிறப்பு வெள்ளி நாணயங்கள் அச்சிடப்படுகின்றன.

ஈரானில் பொது இடங்களில் பெண்கள் தங்கள் தலையை துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்னும் அரசாணையை எதிர்த்து பெண்கள் கிளர்ச்சி.

================================================================================================


நிழலுக்காக அமர்ந்து விட்டு முதுகில் குறுகுறுக்கவே திரும்பிப் பார்த்தேன்.. 'யாரோ நம்மைப் பார்க்கிறார்கள்...'

மரங்களின் வேர்களில் சித்தர்கள் உறைந்திருக்கிறார்கள்!



=========================================================================================


"என்னவாம்?"

அதுக்கு அயோத்தி பார்த்து அழணுமாம்..."

===================================================================================================  

படம் வெளிவந்ததோ...



“மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

படப்பிடிப்பு நின்றது

4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.

நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.

சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.

நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.

ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

“மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.

சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

சிவாஜிகணேசன் தீர்ப்பு

நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.

ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

சிவாஜியின் அன்பு

அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

மீண்டும் சிக்கல்

படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

கிருஷ்ணன் – பஞ்சு

மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.

“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

படம் நின்று போனது.

சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”

இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

நன்றி: வேர்ட்பிரஸ்.காம்
========================================================================================================

பொக்கிஷம் :-

தகவல்...



அத்திரிபாட்சா...


காத்திருக்காதே..  காலியாகாது!

என்னென்ன உவமைகள்!


95 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிகள் நல்லா இருந்தது. அயோத்தி படம் பார்க்கும் வாய்ப்பு குறைவு.

    பதிலளிநீக்கு
  2. ஜிப்ஸிகளைப் போன்றவர்களாகத்தான் குறவர்களும் இருந்திருக்கவேண்டும், வட நாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் செட்டிலானவங்களா

    பதிலளிநீக்கு
  3. படத்துக்கே விதி உண்டு எனச் சொல்வார்கள். ப்ப்படம் ஆன படங்களால் துண்டைப்போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்தவர்கள் எத்தனையோ.

    கோவி மணிசேகரன் விகடனில் பரிசு பெற்றதும், ஒரு தீபாவளியில் அவரது கருப்பு வெள்ளைப் படம் பிற வண்ணப்படங்களுடன் போட்டி போட முடியாமல் படுதோல்வி அடைந்ததும் நினைவுக்கு வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேலையாக அவர் படம் ஒன்றும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். விகடனில் அவர் பரிசு பெற்றது எந்த நாவலுக்கு?

      நீக்கு
    2. ஒருவேளை இவர் விகடன் வரலாற்று நாவல் போட்டியில் நடுவராக இருந்திருப்பாரோ இல்லை பரிசு பெற்றாரா? 25,000 ரூ. நினைவில்லை. ப்ப்படம் ஆகிய கருப்பு வெள்ளை யாகசாலை படம் என்று நினைவு

      நீக்கு
    3. எனக்கு சட்டென நினைவுக்கு வருவது மு மேத்தாவின் மகுட நிலா!

      நீக்கு
  4. மரங்களின் வேர்களில் சித்தர்கள்.... கொளுத்திப்கோட அளவே இல்லையா? இனி மஞ்சள் குளிப்பாட்டு, பூ என அமர்க்களமாகிவிடும் அந்த இடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 2014 ல் எடுக்கபப்ட்டு பேஸ்புக்கிலும் இங்கும் முன்னர் பகிரப்பட்டது!  அந்த ஊர் பெயரை அன்று முதல் நினைவுக்கு கொண்டுவர பாடுபடுகிறேன்.  நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது!

      நீக்கு
  5. அயோத்தி படத்தின் முதல் காட்சிக்கு மூணு பேர்தான் வந்திருந்தார்களாம். பின்ன என்ன? யானை வேகத்தில் தியேட்டருக்கு மெதுவாகச் சென்றால், அதற்குள் படத்தைத் தூக்கிவிட்டிருக்க மாட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தியேட்டரில் பார்க்கவில்லை.  OTT யில்தான், அதுவும் தாமதமாகத்தான் பார்த்தேன்.  ZEE5 ல் கிடைக்கிறது.

      நீக்கு
    2. எந்த ஓடிடி நல்லது? எவ்வளவாகிறது?

      நீக்கு
    3. Zee5. நான் கிட்டத்தட்ட எல்லா OTT யம் வைத்திருக்கிறேன். சில மிகக் கம்மி. சில மாடரேட் ஆக இருக்கும்.

      நீக்கு
  6. அயோத்தி விமர்சனம் என்னைக்கூட படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக பார்க்கலாம் ஜி.

      நீக்கு
    2. அயோத்தி படத்தின் முக்கியமான பாத்திரங்களைக் கேவலப்படுத்தி இருப்பதைச் சொல்லாமலேயே விமரிசனம் எழுதி இருக்கீங்க. எனக்கும் அயோத்தி வந்திருக்கு பிஎஸ் என் எல் சினிமா+ல். ஆனால் நான் பார்க்கப் போவதில்லை. வித்யா சுப்ரமணியம், இன்னும் சிலரின் விமரிசனங்களைப் படித்ததும் எடுத்த முடிவு.

      நீக்கு
    3. எவ்வளவு யோசித்தும் அப்படி எதுவும் என்னால் நினைக்க முடியவில்லை. படம் பார்க்காமல் இருந்தால் நல்ல படம் ஒன்றை நீங்கள் இழக்கிறீர்கள்.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. மனம் தளர்ந்து விட்ட காலத்தில் இப்படியான படங்களை மனமே விரும்பவில்லை - அது என்ன மாதிரியான நல்ல செய்தியைச் சொல்லியிருந்த போதிலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தளரவிடுவது நல்லது அல்ல என்பது என் கருத்து.  படம் பார்க்கலாம்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    முதல் பகுதி கண் கலங்க வைத்து விட்டது. படத்தை விட தங்கள் குடும்ப உறவில் நடந்த சோகமான சம்பவம் பற்றி படித்ததும் கண் கலங்கி விட்டேன். அந்த நேரம் உங்கள் சித்தப்பாவுக்கு மிகவும் கடினமானது.

    இந்தப் படத்தை பற்றி விமர்சனம் படித்திருக்கிறேன். நீங்களும் நன்றாக உணர்ச்சிபூர்வமாக விமர்சித்திருக்கிறீர்கள். பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

    இந்த வாரம் கவிதை ஏதும் காணோமே..?

    இயக்குனர் கோவி. மணிசேகரன் பற்றிய தகவல் அறிந்து கொண்டேன்.ஒரு படம் எடுக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. அதன் மூல கதை( மனோரஞ்சிதம்) நானும் நாவலாக படித்துள்ளேன். இந்தப்படத்தை பற்றிய நீங்கள் பகிர்ந்துள்ள தகவலும் வேறு எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை எதுவும் தோன்றவில்லை!!!   படம் கட்டாயமாக ஒருமுறை பார்க்கலாம்.  பாஸிட்டிவ் அதிர்வைத் தோற்றுவிக்கும் படம்.

      நீக்கு
  11. கதை விமரிசனம் இப்படிப் போவதால் பதிவின் மற்ற பகுதிகளில் மனம் ஒன்றவில்லை..

    தலைப்பு எதற்காக இப்படி?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் சசிகுமாரின் பெயர் அதுதான்!

      நீக்கு
    2. அந்தக் காலத்து பாவ மன்னிப்பு படத்தின் கலாய் பூச்சு இன்னும் தொடர்கின்றது..

      நீக்கு
    3. பாவ மன்னிப்பின் கதையமைப்பு வேறு.

      நீக்கு
  12. தங்கள் குடும்ப உறவில் நடந்த சோகம் பற்றிப் படித்ததும் மனம் கலங்கி விட்டது..

    என்னவொரு கொடுமை..

    காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே!..

    ஹே..
    ஸ்வாமிநாத
    கருணாகர தீனபந்தோ..

    என்றன் உயிர்க்கு
    ஆதரவுற் றருள்வாயே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது உறவில் எல்லோரையுமே பதற வைத்த நிகழ்வு.

      நீக்கு
    2. குடும்ப உறவின் சோகம் முன்னமேயே எழுதியிருக்கீங்களா? என்ன மாதிரியான கொடுமை அது? யாத்திரை சென்றுவிட்டு இறந்தவர்களை (மலைச்சரிவில்) நினைத்தால் பயங்கரமாக இருக்கும்.

      நீக்கு
    3. நெருங்கியவர்களுக்குத் தெரியும்.

      நீக்கு
  13. பார்க்க வேண்டும் என்று நினைத்த படம்... ஆனால் ZEE5 இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய படம்தான்.  இணையத்திலிருந்து தரவிறக்கம் வசதி இருப்பதாக நண்பர் சொன்னார்.

      நீக்கு
  14. இதில் எங்கள் குடும்பத்து உறவில் ஒரு நிகழ்வே உண்டு. இந்தப் படத்தைவிட இறுக்கமான சூழல்.//

    நீங்கள் முன்னரே சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம். நினைவுக்கு வந்தது. ரொம்பக் கொடுமையான தருணம் அது.

    எங்கள் உறவிலும் ஒன்று இப்படி நடந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வரேன் கொஞ்சம் பொறுத்து....நடைப்பயிற்சி போகணும் இனிதான்...வேலை வேறு ஒன்று வந்திருக்கு...அதைக் கொஞ்சமேனும் முடித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. படத்தில் அப்பா தன் சமூகம் சார்ந்த நம்பிக்கையால் மனைவியின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய மறுக்கிறார் என்பதற்கு இணையான உம்மன் சாண்டி பற்றிய செய்தியை சைக்கிள் கேப்பில் செருகியிருப்பது செம பொருத்தம் ஸ்ரீராம்!!!!

    இப்படி உள்ளவர்கள் இருக்காங்க.

    கீட்ஜா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரது புது அக்கா கீட்ஜான்னு நெல்லை வரதுக்குள்ள கருத்தின் கீழ் இருக்கும் கீட்ஜாவை கீதான்னு வாசிச்சிருங்கன்னு சொல்லிட்டேன்!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. இல்லாவிட்டால் இந்தச் செய்திக்கு பங்கமாக கமெண்ட் வந்திருக்குமே...  இது எல்லா இடத்திலும் ஜகஜம் என்று தெரியணுமே...

      நீக்கு
  17. இந்த பாஸிட்டிவ் அலைதான் படம் மூலம் பரவும் முக்கியமான செய்தி.//

    அதேதான் ஸ்ரீராம். ரொம்பத் தேவை இந்தக் காலகட்டத்திற்கு.

    பரிவை சே குமாரும் எழுதியிருந்தார் இப்படத்திற்கு விமர்சனம். ஆமாம் கடைசிக் காட்சியில்பெயர் கேட்பதை அவரும் குறிப்பிட்டிருந்தார் குறையில். ஆனால் கடைசியில் அவரும் இதெல்லாம் தள்ளிவிட்டுப் படத்தின் நல்ல அம்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார்

    //இருந்தாலும் இப்படி ஒரு படம் வெளிவர அவை பெரிய தடையல்ல//

    ரொம்ப சரி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமார் சொல்ல மறந்த விஷயம் நடிகை நடிகையர் செலெக்ஷன்.

      நீக்கு
    2. யெஸ்ஸு....ஷிவானி யாக நடித்தவர் நல்லா நடிச்சிருக்கார்னு சொல்லியிருந்த நினைவு அது போல அப்பாவாக நடித்தவர்

      கீதா

      நீக்கு
    3. யஷ்பால் ஷர்மா (இப்படி ஒரு கிரிக்கெட்டர் இருந்தார் முன்பு)  ப்ரீத்தி அஸ்ரானி சொல்லி இருக்கிறேனே...   படத்திலிருந்து ஒரு  காட்சிகளும் கொடுத்திருக்கிறேனே..  பார்க்கவில்லையா?!

      நீக்கு
  18. முதல் பகுதியின் கீழ் கொடுத்துள்ள படம் ரசனை!!!! உங்கள் ரசனை!! அழகா இருக்கு ....

    ஹாஹாஹா அதுக்கு அடுத்த படமும் ஹையோ இந்த வாட்டி கோர்த்து கோர்த்து ரசனையாக! கொடுத்திருக்கீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நானும் எங்கள் தளத்தில் எங்கோ கிடைத்த சரவணபவன் சாம்பார் செய்முறையை வெளியிட்டிருக்கிறேன். //

    ஆமாம் தோசை புராணம்னும் எழுதியிருந்தீங்களே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  கீதா அக்கா கூட எடுத்துக் போட்டிருந்தாங்க...  மாமா சிலாகித்ததாகச் சொல்லி இருந்தார்.

      நீக்கு
  20. சரவணபவன் பத்தி நோ ஐடியா!! முன்ன எப்பவோ ஓரிருமுறை சாப்பிட்டது அதன் பின் சாப்பிட்டதே இல்லையே. அதனால் தெரியலை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மாதங்களுக்கு முன், அடையார் சென்றிருந்து, அவங்க வீட்டில் சாப்பிடப்போவதில்லை, சரவணபவனில் மதிய உணவு சாப்பிடப்போகிறேன் என்று சொல்லி, போதாதற்கு என் மனைவியையும் கூட்டிச் சென்று....இதைவிட மோசமான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. எதை எப்படிச் செய்யணும் என்று யோசித்து நடத்திய ராஜகோபாலன் டீம் எங்கே, வெறும்ன காசை வீசி வியாபாரத்தை வாங்கியவங்களுக்கு எப்படித் தெரியும்? 1987-95 சரவணபவன் போல் வரவே வராது. என்ன ருசி.. என்ன ருசி... இப்பயும் பண்றாங்களே...கொடுமை

      நீக்கு
    2. நஷ்டக்கணக்குக் காட்டி வருமானவரி கணக்கு காட்டவே வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

      நீக்கு
  21. நியூஸ் ரூம் செய்திகள் குறிப்பாகக் கல்வித் திட்ட மாற்றங்கள்...ஏற்கனவே சிபி எஸ்ஸில வருஷத்துல ரெண்டு முறைதானே தேர்வு என்று அறிந்த நினைவு. இது மாநிலக் கல்வித் திட்டமோ?

    ரிஷிசுனக் கணக்கு நல்லா போடுவாராமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலியே...    பானு அக்கா..  ரிஷி நல்லா கணக்கு பண்ணுவாரான்னு என்னவோ கேக்கறாங்க பாருங்க... 

      நீக்கு
    2. போட்டிருக்கிறாரே.... பணம் கொழிக்கும் மரத்தைத் திருமணம் செய்திருக்கிறாரே

      நீக்கு
  22. மரங்களின் வேர்களில் சித்தர்கள் - ஆ கொஞ்ச நாளில் கோயில் வந்திருமோ? எல்லா மரங்களுமே புனிதமானவைதான் அதுக்காக?

    இதைப் பார்த்ததும் இந்த ஊர் பார்க்குகள் நினைவுக்கு வந்தன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 2014 ல் போனது.  தாராசுரம்...  ஆ....  நான்கு நாட்களாய் உறுத்திக்கொண்டிருந்த பெயர் நினைவுக்கு வந்து விட்டது.  தாராசுரத்தில் எடுக்கபப்ட்ட படம்.  அங்கு இல்லாமல் சித்தர்கள் வேறெங்கு இருப்பார்கள் சொல்லுங்கள்!

      நீக்கு
    2. ஸ்ரீராம், இந்த வேர் படத்தை முன்ன எப்பவோ நீங்க பகிர்ந்த நினைவும் வருது இதே சித்தர்னு சொல்லி...

      கீதா

      நீக்கு
  23. ஹாஹாஹாஹா இன்னிக்கு அயோத்தி யுடன் தொடர்ப் படுத்தி!! யானையும்...(குதிரையும்!!!) உங்களை எவ்வளவு கவர்ந்திருக்கிறது அந்தப் படம்னு தெரியுது, ஸ்ரீராம்.

    அதை வனக்காவலர்கள் பின் தொடரும் போது, "நீங்க என்ன எப்படி எல்லாம் கூப்பிட்டாலும் நான் வர முடியாது....ஸ்ரீராம், அயோத்தி படம் பத்தி சொன்னதும்....அயோத்தி படம் பார்க்காம வரமாட்டேன்.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே படத்தை முன்பு வேறொரு படத்துக்கு யூஸ் செய்திருந்தேன்!

      நீக்கு
  24. கோ வி படம் எல்லாம் கூட இயக்கியிருக்கிறாரா?!! புதிய தகவல்

    சினி உலகம் மாய உலகம். யார் எப்ப முறுக்கிக்குவாங்கன்னு சொல்ல முடியாத உலகம்..பணம் உறுதி கிடையாது. நம் மதிப்பிற்கு உறுதி கிடையாது. வம்பு, அரசியல்.....அதுல நீஞ்சி பொழச்சு வரவங்களை நிஜமாகவே பாராட்டத்தான் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கோவி கதை ஒன்றும் படித்ததில்லை, படமும் பார்த்ததில்லை!

      நீக்கு
  25. பொக்கிஷத் - தகவல் தகவலேதான். அத்ரிபாட்சா - ஹாஹாஹாஹா...

    காத்திருக்காதே காலியாகாது - இது போல கொஞ்சம் இணையான ஒரு அனுபவம் எனக்கு நேர்ந்தது..

    அனுபவங்கள் பல இருந்தாலும், எழுத டக்கென்று வர மாட்டேங்குது, ஸ்ரீராம். இப்படி உங்க பதிவு அல்லது வேறு யாருடைய பதிவிலும் ஏதும் வரிகள் சம்பவங்கள் தான் நினைவுபடுத்தி எடுத்துக் கொடுக்கின்றன!! இதுக்கும் நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளையாய் நினைவு வந்தது என்று குறித்துக் கொண்டு விடுங்கள்.  மறுபடி பார்க்கும்போது எழுதி விடலாம்!

      நீக்கு
  26. ஸ்ரீராம் என் கருத்துகள் வந்தனவா? காணாமப் போகுதே

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஹையோ இப்ப பொக்கிஷம் பகுதிக்கு கொடுத்த கருத்தை காணலைஏ

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஜிப்ஸினாலே எனக்கு நம்ம ஊர் குறவர்கள்தான் நினைவுக்கு வருவாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  30. அயோத்தி படம் போல உங்கள் குடும்பத்திலும் நடந்து இருப்பது கேட்கவே மிகவும் வருத்தமாக இருந்தது.
    இதே போல அவர் குடும்பத்தில் நடந்த கதையை ஜெயகாந்தன் மருமகன் தீபக் ராஜ் வலை பதிவாளர் முன்பு கதையாக எழுதிய நினைவு இருக்கிறது. அவர் கதைதான் அயோத்தி என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.

    படம் பார்க்க வேண்டும். உதவும் எண்ணம் உள்ளவர்கள் எங்கும் இருப்பார்கள். அவர்களை பற்றி படம் எடுப்பது நல்லதுதான்.

    //மனிதத்தை வளர்க்கும் இது மாதிரி படங்கள்தான் இன்றைய சூழ்நிலையில் அவசியத்தேவை. //

    ஆமாம்.

    பதிலளிநீக்கு
  31. சரவணபவன்கள் பழசு ஆகி விட்டு இருக்கும், புதுமையை விரும்புபவர்களுக்கு.
    பானுமதி வழங்கிய நியூஸ் ரூம், நன்றாக இருக்கிறது.

    //மரங்களின் வேர்களில் சித்தர்கள் உறைந்திருக்கிறார்கள்!//
    ஆஹா ! சித்தர்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்களா?
    எனக்கு முதல் படத்தில் சில யானை முகம் தெரிகிறது.

    மீதியை கொஞ்ச நேரம் கழித்து வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவம் செய்யும் சித்தர்கள் முகம் போல தெரிகிறது பாருங்கள்...  தாடியும் மீசையுமாக....!  அதைச் சொன்னேன்.

      நீக்கு
    2. தெரிகிறது, ஜடா முடியும் தெரிகிறது.

      நீக்கு
    3. //பானுமதி வழங்கிய நியூஸ் ரூம், நன்றாக இருக்கிறது.// நன்றி

      நீக்கு
  32. காணொளிகள் நன்றாக இருக்கிறது.ப்ரீத்தி அஸ்ரானி அழகாய் இருக்கிறார், இரண்டாவது காணொளி மூலம் நன்றாக நடிப்பதும் தெரிகிறது.
    மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.//

    படித்த நினைவு இல்லை, படம் நின்று போன விவரம் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    பொக்கிஷபகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. ஜெஸி ஸாரைக் காணோமே என்றிருக்கிருக்கிறது.
    என் சென்ற செவ்வாய்க் கிழமை கதையை அலசுவதாகச் சொல்லியிருந்தார். எபியிலேயே ஏதாவது ஒரு சனிக்கிழமைக்கு அதைச் செய்வார் என்று பட்சி படபடத்துச் சொல்கிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நான் பதில் சொல்வது பொருத்தமா என்று தெரியவில்லை.  எனினும் JKC ஸார் சற்றே உடல்நலமில்லாமல் ஓய்வில் இருக்கிறார்.  இன்றைய பதிவில் கூட அவர் பின்னூட்டம் இல்லாதது எனக்கு வருத்தம், குறை.  ஆனால் அவர் உடல்நலமும், அவர் ஓய்வும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. அப்படியா? நீங்கள் சொல்வது சரியே. அவர் உடல் நலன் தேறிவருவார்.

      நீக்கு
  34. மற்றவர்கள் செய்யாததைச் செய்ய ணும்: சொல்லாததைச் சொல்லாததைச் சொல்லணும் என்ற ஆவல் என்றைக்குமே உண்டு. இந்த வியாழனுக்கு அப்படி என்ன கிடைக்கிறதுன்னு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  35. ரத்தினம் பட்டணம் பொடிக்கும் எபிக்கும் என்ன இணைப்பு என்று தெரியவில்லை. இரண்டு மூன்று வாரங்களாக ர.ப.பொ.
    எப்படியோ எபியில் தனக்கென்று ஓரிடம் பிடித்து விடுகிறது. பொடி-யும் இரண்டெழுத்து, எபியும்.. என்று மட்டும் சொல்லிவிடா.. அது சரி, T.A.S. ரத்தினம் பட்டணம் பொடியில்,
    அந்த T.A.S.க்கு விரிவாக்கம் என்று யோசனை ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தாத்தா பயங்கர பொடி பிரியர். அது காரணமாக இருக்கலாம்.

      TAS mudaliar family was harassed by government, so they stop that business. Their own lands were also taken over by government in present Anna Nagar.

      நீக்கு
  36. கோ.வி. மணிசேகரன் அவர்கள் சாகித்ய அகாதமியால் கெளரவிக்கப்பட்டவர்.
    சரித்திர நாவல்கள் பல படைத்திட்டவர். அவர் எழுத்து நடைக்கு ஒரு உதாரணம் :

    'நிலா திலகமிட்டு பவனி வந்த அந்த இரவெனும் கரிய
    மங்கைக்குத் தான் எத்துணை வரவேற்பு, எத்துணை வாழ்த்துக்கள்? பொதிகை மலைத்தூதன், பூந்தென்றல் காற்றழகன், பூக்காட்டை முத்தமிட்டுப் புழுங்கித் தவிக்கும் மக்களின் வேக்காட்டைத் தணிக்கத் தொடங்கினான். மேனி சிலிர்க்க, மெய் இன்பம் பொலிந்தசைய ராணி தலை சாய்க்க நல்லினத்து நங்கையர் போல் மென் மலரினங்கள் மாரவேள் நடனம் புரிந்தன.

    -- ராஜசிம்மன் காதலி
    நாவலில்..

    ஹப்பாடி.. போதுமடா சாமி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..   இந்தக் காலத்துக்கு ஒத்துவராத எழுத்து.  மூச்சு வாங்குகிறது!

      நீக்கு
  37. அயோத்தி விமர்சனம் அருமை. எனது வாட்ச் லிஸ்டில் உள்ளது. விரைவில் காண்கிறேன். தங்கள் சித்தியின் மறைவும், சித்தப்பாவுக்கு எதிர்கொண்ட சிரமங்களும் மனதைக் கனக்க வைத்தன.

    A2B தரமும் கிளைக்குக் கிளை மாறுபடுகிறது.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!