===========================================================================================
======================================================================================================
===================================================================================================================================================
நான் படிச்ச கதை
மனோ சாமிநாதன்
'இன்னும் சில இலைகள் இருக்கின்றன!'
சமீபத்தில் மனம் தொட்ட சிறுகதை ' இன்னும் சில இலைகள் இருக்கின்றன!'
எழுதியவர் நாவலாசிரியர், 'பெண்மணி' இதழாசிரியர் வி.உஷா. பெண்மைக்கும் உண்மைக்கும் அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிறைய நாவல்கள் எழுதியிருக்கிறார். இந்த சிறுகதையிலுமே அன்பையும் நேர்மையையும் தான் வலியுறுத்தியிருக்கிறார்.
இங்கே அவரின் எழுத்துக்களில் என் நடையையும் புகுத்தி இந்த சிறுகதையை சொல்லியிருக்கிறேன்.
இந்த சிறுகதையின் கதாநாயகியே ஒரு முதிய பெண்மணி தான். பெயர் சிவபாக்கியம். தினமும் முடியாத கால்களை மனோபலத்துடன் மெள்ள மெள்ள நகர்த்தி, சுவரைப்பிடித்துக்கொண்டு குளியலறை சென்று நாலு சொம்பு தண்ணீரை விட்டு உடலைக்கழுவி வருவதற்குள் உயிர் போய் உயிர் வரும். உடம்பு தான் இப்படி. மனசு? அது எப்போதும் கெளரவம் பார்த்துக்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. மூர்க்கத்துடன் பொருமியது. ஒரே மகன். எண்பது பவுன் நகையுடனும் வீடுடனும் காருடனும் சொந்தக்காரப் பெண்ணை வைத்துக்கொண்டு கனவுடன் காத்துக்கொண்டிருந்த போது, திடீரென்று அமெரிக்காவிலிருந்த மகன் நான்ஸி என்ற ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு இவள் கனவுகள் மீது மண் போட்டு மூடினான். மதத்தையோ, அவள் தோலையோ பார்க்காதே, அவள் மனசைப்பாரு. அவள் அருமை உனக்கு எப்போதாவது புரியும் என்கிறான்.
எட்டி உதைத்து மலைப்பாதையில் உருட்டி விட்ட மகனை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன! முதலிலெல்லாம் தொலைபேசி அழைப்புகள் வரும். வந்தால் இவள் எடுக்க மாட்டாள். கோபத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பாள். நிராகரிக்கப்பட்ட அழைப்புகள் அவளுக்கு திருப்தியையும் கர்வத்தையும் தந்து கொண்டிருந்தன.
அது போல ஒரு நாள் உட்கார்ந்திருந்தபோது, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
“" அம்மா, உள்ளே வரலாமா?"
மிருதுவான, மென்மையான குரலைக்கேட்டதும் வழக்கம்போல சுவரைப்பற்றியபடியே நடந்து சென்று கதவைத்திறந்தாள்.
“யாரு?"
"வணக்கம்மா, நான் நான்ஸி:"
செதுக்கப்பட்ட அம்மன் சிலை போல நின்றாள் அவள். எளிமையான உடையில் எளிமையான புன்னகை வெளி வந்த போது அவள் முகம் சுடர் விட்டு ஜொலித்ததை சிவபாக்கியம் கண்கொட்டாமல் பார்த்தாள். சரிவது போன்ற ஊடலை சமனப்படுத்திக்கொண்டு ' வா ' என்ற ஒற்றை வரியில் உள்ளே அழைத்தாள்.
‘ஒண்ணுமில்லைம்மா. கன்யாகுமரிக்கு போய்க்கிட்டிருக்கேன். உங்கள் மகன் படித்த பள்ளிக்கு நன்கொடை தரணுமாம். உங்களிடம் விபரங்கள் கிடைக்கும் என்று வழியில் இறங்கினேன். "
“சரி உட்கார்"
சொன்ன அடுத்த விநாடி சிவபாக்கியத்துக்கு தலை சுற்றியது. கால்களில் நடுக்கம். வயிற்றை புரட்டியது. சரிந்து விழப்போனவளை நான்ஸியின் கரங்கள் தாங்கிக்கொண்டன.
மறுபடியும் சிவபாக்கியம் கண்களைத்திறந்த போது ஜன்னல்கள் தூசி துடைக்கப்பட்டு, ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டு, தூசு தும்பு இல்லாத வீடு பொன்மயமாக காட்சி தந்தது.
பயந்து கொண்டே காலை கீழே வைத்தாள்.
இதென்ன! முட்டிகளில் கல் போலிருந்தது எப்படி கரைந்து போனது? வலி எப்படி அப்படியே குறைந்தது? குமட்டல், நடுக்கத்துக்கு பதிலாக பசியும் தாகமும் இருக்கின்றனவே?
நான்ஸி இதமாக கிணற்று நீரை ஊற்றி குளிப்பாட்டி சூடான ஆப்பமும் தேங்காய்ப்பாலும் ஊட்டி விட்ட போது எல்லையற்ற அன்பு வட்டத்திற்குள் பெரு விருப்பத்துடன் அமர்ந்து கொண்டது மனசு.
நான்ஸி சிரித்தவாறே ' முதியோர் மருத்துவம்' தான் தான் பார்க்கும் தொழில் என்றாள்.
அந்த சிரிப்பில் கரைந்து போனாள் சிவபாக்கியம். இத்தனை நாள் அவள் பண்ணிய தப்புக்கள் எல்லாம் விஸ்வரூபம் எடுத்து வந்து கண் முன்னே நின்றன. மனசு புலம்ப ஆரம்பித்தது.
இத்தனை நாள் ஏன் அன்பின் அழைப்பை நிராகரித்தாள்? பொறுப்புடன் இருப்பதும் மன்னிப்பதும் தானே மிகப்பெரும் குணங்களாக இருந்திருக்க வேண்டும்! அதுவும் முதிர்ந்த வயதில் உள்ளே ஏன் ஒரு அரக்கியை வளர்த்துக்கொண்டாள்? எல்லையில்லாத அன்பையும் பரிவையும் விடவா பேதங்கள் முக்கியமானவை?
புறப்படுவதற்காக நான்ஸி முயன்ற போது அவளை தடுத்து பேசினாள் சிவபாக்கியம்.
“இல்லைம்மா? நீ இங்கேயே இருந்து விடு. அவனையும் இங்கே கூப்பிடு. இந்த முட்டாள் கிழவியை மட்டும் மன்னிச்சா போதும்"
“இல்லைம்மா. தப்பா நினைக்கக்கூடாது. நாங்கள் இருவரும் மனசு ஒத்து வராததால் பிரியப்போகிறோம். விவாகரத்து கோர்ட்டில் இருக்கிறது. மணவிலக்கு கிடைச்சதும் நான் இங்க வந்து ப்ராக்டிஸ் பண்ணலாம் என்று இருக்கிறேன். அதான் முன்னாடியே வந்து விட்டேன்.
“என்ன... என்ன சொன்னே நான்ஸி?"
உங்கள் மகனுக்கு என்னை விட பணம், பெரிய பணம் என்று ஆசை வந்திருக்கு. நான் அப்படி இல்லைம்மா. நேர்மையாய் செய்கிற டாக்டர் தொழிலில் வரும் வருமானம் போதுமென்று நினைக்கிறேன். ஃபார்மஸி பிஸினஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு நான் நோயாளிகள் மூலமா நிறைய சம்பாதிக்கணும்னு அவர் வற்புறுத்துகிறார். விருப்பம் இல்லைம்மா எனக்கு,."
“சேர்ந்து வாழ்ந்த போது கொஞ்சம் பணம் இன்வெஸ்ட் பண்ணியிருந்தோம். அதுல வருகிற வட்டித்தொகையில் இருவருக்கும் பாதிப் பாதி வரும். அவர் பங்குக்கு வருகிற வட்டித்தொகையை தான் படிச்ச பள்ளிக்குக் கொடுக்கணும்னு அவர் விருப்பப்பட்டார். அந்த பணத்தை கொண்டு வந்திருக்கேன்மா. அதை ஸ்கூல்ல் கொடுத்து நான் கிளம்பணும்."
தொலைபேசி ஒலித்தது. அவள் மகன் சரவணன் தான்!
சீற்றத்துடன் வெடித்தாள் சிவபாக்கியம்.
“நல்லவனா இருக்கணும்னு உன்னைச் சொல்லிச் சொல்லித்தானே வளர்த்தேன். நாலு பரம்பரைக்கு சொத்து சேர்க்கணும்னு என்னிக்காவது உன்னிடம் சொல்லியிருக்கேனா? இப்போ சொல்றேன், கேட்டுக்க. நான்ஸி மாதிரி ஒரு பெண்ணை என்னாலேயும் தேடவே முடியாது. தானா திரண்டு வந்து நிலத்தையும் மனுஷனையும் நனைக்கிற மழை மாதிரி அவ. ஒழுங்கு மரியாதையாய் அவளுடன் சேர்ந்து வாழப்பாரு. இல்லேன்னா இத்தோட என்னுடன் பேசுறதையும் நிறுத்திடு. பாழமாய் போற பணம் அளவு தாண்டிப்போனா விஷமாயிடும் என்பதை புரிஞ்சுக்க"
நான்ஸி திகைப்புடன் நின்றாள். உணர்ச்சியும் உண்மையும் கலந்த விகிதத்தில் கொட்டித்தீர்த்த சிவபாக்கியம் சிறுமியைப் போல் பெருங்குரலெடுத்து அழுதபடி நான்ஸியை அணைத்துக்கொள்ள, அன்பாக இருப்பதைப்போல உன்னதமானது எதுவுமே இல்லை என்பது போல் அந்த முதியவளை நான்ஸி நெஞ்சில் தாங்கிக்கொண்டாள்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
பதிலளிநீக்குஎன்புதோல் போர்த்த உடம்பு..
வாழ்க தமிழ்..
வாழ்க தமிழ்.....
நீக்குகாலையில் இதமான குறள். கொஞ்சம் பதமான கதை.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குஅன்பின் மனோ சாமிநாதன் அவர்கள் பதிவு செய்திருக்கும் கதை அழ்கு..
பதிலளிநீக்கு//அன்பாக இருப்பதைப்போல உன்னதமானது எதுவுமே இல்லை..//
உண்மை..
மனம் கவர்ந்தது..
வாழ்க நலம்..
அன்புச் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி!
நீக்குமாதவன் அவர்களது மகன் பெற்ற வெற்றியை நமது ஊடகங்கள் சிறப்பிக்க விலலையே ஏன்?..
பதிலளிநீக்குஅந்த வெற்றியினால பெருமை, மகிழ்ச்சி ஏதும் இல்லையோ!..
அவங்கள்லாம் வேறு முக்கியச் செய்திகளில் பிசி
நீக்குகாரணம் உ கை நெ க.
நீக்குஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை - வெள்ளிக்கு விருப்பப் பாடல்
நீக்குஇன்னும் சில இலைகள்..... ரொம்ப நாடகத் தன்மையாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை விவரமாகப் படிக்கும்போது அப்படித் தெரியாமலிருக்குமோ என்னவோ. அன்பின் வழியது உயிர்நிலை .... படிக்க நல்லாத்தான் இருக்கு.... ஈகோ..
பதிலளிநீக்குகருத்துரைக்கு இனிய நன்றி நெல்லைத்தமிழன்!
நீக்குநான் படிச்ச கதை பகுதிக்கு முதல் முயற்சி மனோ சுவாமிநாதனுக்கு நல்வரவு. கதை ஆசிரியரின் விவரங்களையும் சேர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குபகுதியை காப்பாற்றியமைக்கு நன்றி. மேலும் பலர் முன் வர வேண்டும் .
Jayakumar
உண்மைதான். வேறொருவர் பாதி எழுதி வைத்திருப்பதாய்ச் சொல்லி இருக்கிறார். சீக்கிரம் மீதியையும் எழுதி அனுப்புவார் என்று எதிர்பார்க்கிறேன்!
நீக்குவரவேற்றதற்கும் ஊக்குவித்தலுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகரன்!
நீக்குகதாசிரியரைப்பற்றி ஆரம்பத்திலேயே விபரங்கள் கொடுத்திருக்கிறேன்.
அவர் படிச்ச கதை தொடர் கதையா? விமரிசனமும் விட்டு விட்டு எழுத உத்தேசிக்கிறார்?
நீக்குJayakumar
:)))
நீக்குவாங்க, ஜெஸி ஸார்.
நீக்குநலமா?
நலம் என்று சொல்ல முடியவில்லை. மூன்று மாதங்களாகிறது. மருந்துகள் பலவும் சேர்ந்து கொஞ்சம் மூளையும் பாதிக்கிறது, அதனால் முன் போல் மூளைக்கு ஓர் ஷார்ப்னஸ் கிடைக்கவில்லை. அசதியும் கூடுதல். என்னுடைய உடல் நலம் பற்றி ஸ்ரீராம் அறிவார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் வாங்க..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனை பாராட்டுவோம். மற்ற செய்திகள் பெரிதாக்கி படிக்க வரவில்லை. என் கைப்பேசியில் பொடி எழுத்துக்களில் படிக்க இயலவில்லை. திரு மாதவன் அவர்களது மகனுக்கும் வாழ்த்துகள். நல்ல மனங்களுடன் இருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செய்தித்தாள்களிலிருந்து காபி பேஸ்ட் செய்யும் வசதியை அவர்கள் எடுத்து விட்டதால் இபப்டி தர வேண்டி இருக்கிறது. செய்வது தவறுதான். ஆனால் நல்ல விஷயத்துக்குதானே செய்கிறோம்? முன்பும் லிங்க் தருவோம் என்றாலும் மேலும் இப்படி செய்வதால் அவர்களிடமிருந்து எடுத்திருக்கிறோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.. அதனால்தான் படிக்க சிரமம். பொறுத்துக் கொள்ளுங்கள் அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநீங்கள் வாரந்தோறும் திரட்டித் தரும் எத்தனையோ நல்ல செய்திகளை படித்தறிந்து, அதன் லிங்கிற்கும் போய் படித்து இருக்கிறேன். பல வருடங்களாக தொடர்ந்து சனிக்கிழமைதோறும் நல்ல செய்திகளை தந்து வரும் எ..பிக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். இப்போதுதான் இந்த மாதிரி பொடி எழுத்துகளில் வருகிறது. அதில் பெரிதாக்கி படிக்கும் வசதி இருக்கும் போது அது போல் நிறைய படித்து பல நல்ல செய்திகளை அறிந்து கொண்டுள்ளேன். இன்று ஒன்றைத்தவிர எதையும் படிக்க இயலவில்லை. அதனால்தான் குறிப்பிட்டேன். மன்னிக்கவும். மற்றபடி உங்கள் சனிக்கிழமை பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எப்போதும் உண்டு. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
நீக்குஇன்றைய பதிவின் தலைப்பின்படி எனக்கும் உறுத்தியதால், பொடி எழுத்துக்களை படிக்க இயலவில்லை என்பதை குறிப்பிட்டேன்.:)) மற்றபடி உங்கள் சனிக்கிழமை பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா.. ஹா.. ஹா... அக்கா.. நீங்கள் எப்போதுமே வித்தியாசமாய் சிந்திப்பவர். உங்கள் வழக்கப்படி தலைப்பை இதோடு லிங்க் செய்து விட்டீர்கள். நான் யோசிக்கவே இல்லை!
நீக்குஹா. ஹா. நன்றி சகோதரரே.
நீக்குஉங்கள் கருத்துக்கு பதில் கருத்து தந்த பின்தான் இன்று தலைப்பு பொருத்தமாய் அமைந்திருப்பதை நான் கவனித்தேன். இதைத்தான் பெண் புத்தி பின் புத்திதான் .. என்பதோ? ஆ..! இதற்கு எத்தனை பேர் (பின் புத்தியென்றால் கூர்மையான அர்த்தமென்று) சண்டைக்கு வரப் போகிறார்களோ? ஹா ஹா ஹா. நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய நான் படிச்ச கதை பகுதி நன்றாக உள்ளது. அன்புக்கு முதலிடம் அமைத்து தந்து கதை எழுதிய ஆசிரியருக்கும், அதை தெளிவாக எழுதி நமக்களித்த சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பணத்தை பெரிதாக எண்ணிய அந்த தாயின் மனம் மாறிய போது அவரின் மகனின் மனம் பணத்தை தேடிப் போவது விந்தை. அன்பான நடந்து கொள்ளும் இந்த வெளிநாட்டு மருமகளைப் போல எத்தனை பேர் இந்த மாதிரி வயதான தாய்க்கு கிடைப்பார்கள். முடிவில் அந்த மகனும் பணத்தை பெரிதாக கருதாமல், மனந்திருந்தி ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும். நல்லதொரு கதைப்பகிர்வை தந்த சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதையின் தலைப்பு நன்றாக உள்ளது. அதை கருத்தில் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன். நல்லதொரு தலைப்பிற்கும் வாழ்த்துகள். நன்றி.
நீக்குசிறுகதையை ரசித்துப்படித்து அழகிய விமர்சனமும் வாழ்த்துக்களும் பாராட்டும் தந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!
நீக்குஅருமையான கதை...
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு//காரணம் உ கை நெ க.//
நெ க என்றால் நெய்க் கரண்டியா!
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குநெ. க. நெல்லிக்கனி. என்பதாக எனக்கு பொருள்படும். தங்களுக்கு தெரியாததா? தெரிந்து கொண்டே வேறு ஏதோ ஐயப்பாட்டுடன் தாங்கள் வினவியிருக்க வேண்டுமோ எனவும் நினைக்கிறேன். சகோதரர் ஸ்ரீ ராம் அவர்கள் இதற்கு என்ன பதில் தரப்போகிறார் எனவும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இதைத்தான் தே. இ. வி. மூ. நு. என்பது. ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உள்ளங்கை நெல்லிக்கனி
நீக்குஇதைத்தான் தே. இ. வி. மூ. நு. என்பது..
நீக்குஅ அ பெ பெ என்பது போலப் போய்க் கொண்டிருக்கின்றதே!..
கமலா அக்கா சொல்லி இருபிப்பது சரி. உள்ளங்கை நெல்லிக்கனி! புகழ்பெற்ற வார்த்தைதான் அது!
நீக்குதேவை இலலாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதாய் நான் எண்ணவில்லை. தெரியாததை தெரிந்து கொள்வதில் தவறில்லையே!
ஆகா... கண்டு பிடித்து விட்டீர்களே..! க்ரேட். ஆனால் அ அ. பெ. பெ தான் என்னால் கண்டு கொள்ள இயலவில்லை.
நீக்கு"தேவை இல்லாத விஷயத்தில்" என்று நான் என்னைச் சொன்னேன். அது தவறாக பொருள் கொண்டிருந்தால் மன்னிக்கவும்.
நீக்குபாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நல்ல உள்ளங்களை , விடாமுயற்சியில் பெற்ற வெற்றியை சொல்கிறது அருமை.
பதிலளிநீக்குபள்ளிக்கு படிக்க அழைக்கும் காவலர் வாழ்க!
மாதவன் அவர்கள் மகன் வேதாந்த் வாழ்க! வளர்க! மேலும் வெற்றிகள் வந்து சேரட்டும்.
மனோ சாமிநாதன் அவர்கள் கதை பகிர்வு அருமை.
பதிலளிநீக்குகதை சொன்ன விதம் அருமை .தான் படிச்ச பள்ளிக்கு உதவி செய்யும் அன்பு உள்ளம் கொண்டவர் இப்படி பணத்தின் மேல் நாட்டம் கொள்வாரா? நல்ல உள்ளம் இருப்பதால் தாயின் பேச்சை கேட்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.நான்ஸியின் அன்பு தாயை மாற்றியது போல மகனையும் மாற்றும் அன்பு எல்லாம் செய்யும்.
அ அ..
பதிலளிநீக்குபெ பெ..
என்றால்,
அடுக்குக்குள் அடுக்கு
பெட்டிக்குள் பெட்டி!..
வணக்கம் சகோதரரே
நீக்குபுரிந்து கொண்டேன். நல்ல சொற்சொடர். முன்பு எங்கள் வீட்டில் அண்ணா, அம்மா, மன்னி, நான் என இப்படித்தான் வார்த்தைகளின் முதல் எழுத்தைக்கொண்டு பேசி மகிழ்வோம். இன்று நீண்ட வருடங்கள் கழித்து அந்த மலரும் நினைவுகளை தொட்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கு இந்த வார்த்தை புதிது!
நீக்குஆச்சரியந்தான்.
நீக்குபாசிட்டிவ் செய்திகளில் என்னைக் கவர்ந்தது ஊத்துக்கோட்டை செய்தி! ரொம்ப நல்ல செய்தி. அடுத்து மாதவனின் மகனின் வெற்றி! எங்கயுமே பரபரப்பு இல்லாம அமைதியா இந்தச் செய்தி கடந்து சென்றது என்று நினைக்கிறேன். அப்படியே இருக்கட்டும். ரொம்ப ஊடக வெளிச்சம் வேண்டாம்...
பதிலளிநீக்குகீதா
மனோ அக்காவின் முதல் முயற்சியா!! நல்லா எழுதியிருக்கீங்க மனோ அக்கா நீங்கள் சொல்லும் விதமே ரொம்ப அழகா இருக்கும்...
பதிலளிநீக்குகதையின் கருத்து நன்றாக இருக்கிறது. ஈகோ மனிதனைப்படுத்டும் பாடு! கடைசில சிவபாக்கியம் அன்பை உணர்வது நேர்மறை முடிவு.
நீங்கள் சொன்னவிதமும் அருமை.
கீதா