சனி, 16 செப்டம்பர், 2023

100 குடும்பங்களுக்கு தலா 1,00,000 மற்றும் 'நான் சிரிச்ச கதை'

 


=======================================================================================================



===============================================================================================

[நன்றி JKC Sir...]

பழங்குடியினர் பகுதியில் வசிப்பவரும், இந்தியை பிரதான மொழியாக வைத்து படித்த சுரேஷ்குமார் ஜகத், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியுள்ளார்.  "நான் சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தின் பார்சாடா கிராமத்தைச் சேர்ந்தவன். இது மிகவும் பின்தங்கிய பழங்குடி கிராமமாகும், இது மைக்கல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த மாணவனாக இருந்தேன். ஒருவேளை நான் கிராமத்திலிருந்து வெளியேறி இருந்தால் ஒரு பெரிய கனவு காண முடிந்திருக்கும். உயர்நிலைப் பள்ளி வரை எனது படிப்பு மிகவும் கடினமாக இருந்தது. சில வகுப்புகளில் ஒரு ஆசிரியர் கூட இருந்ததில்லை...." 

===========================================================================================

[நன்றி JKC Sir...]

மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்தவர் 14 வயதான சுபம் பஞ்சால். இவர் சமீபத்தில் கூகுள் மற்றும் உடாசிட்டி (அமெரிக்கா) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாவது இளம் அசோசியேட் ஆண்டிராய்ட் டெவலப்பர் ஆகியுள்ளார்

===========================================================================================


=====================================================================================================


=======================================================================================================

 

நான் சிரிச்ச கதை (JKC)


1. மனிதர்கள் கண்ணுக்கு தேவர்கள் ஏன் புலப்படுவதில்லை ? 

2. கோயில்களில் வெள்ளிகிழமையன்று இளைய தலைமுறை  கூடுவது ஏன்? 

3. ஜாதி இரண்டொழிய வேறில்லை. தேவ ஜாதி, மனுஷ ஜாதி.. இவர்களுக்குள்  எப்படி விரோதம் உண்டானது. 

4. மனுஷர்கள் தேவர்கள்  ஆக முடியாது ஏன் ? 

5. எருமைப்பால் உபயோகம் எப்படி தொடங்கியது?  

Stop stop.  இப்படி புதன் கேள்விகளை ஏன் இங்கே கதை சொல்கிறேன் பேர்வழி என்று அடுக்குகிறேன் என்று திகைக்கிறீர்களா? 

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தான் இன்றைய கதை. அந்த விடை ஒன் லைனில் இன்றைய மொழியில் சொல்வதானால் லவ் ஜிகாத். ஒரு மனுஷ்ய புத்திரன் ஒரு தேவ குமாரியை காதலித்த கதை.

 ======> முதல் பகுதியின் சுட்டி <======

சுருக்கம் அல்லாமல் முழுக் கதையையும் கீழே உள்ள  சுட்டிகளில் வாசிக்கலாம். 

====>பாகம் 1<==== ====>பாகம் 2<==== ====>பாகம் 3<==== ====>பாகம் 4<====

sirukathaigal.com இல் வெளிவந்த முழுக் கதையின் சுட்டியும் தந்துள்ளேன் இதோ ====>தைவாதர்சனம்<====


தைவாதர்சனம்

 கதையாசிரியர்: அப்பாதுரை

கதைச் சுருக்கம் 2/2

இது வரை

பிராதாப  மஹாராஜாவுக்கு ஒரு புத்ரன் பிரபாத குமாரன். தேவகுமாரி  ப்ரியதர்ஸினியை காதலிக்கிறான். மகாராஜா கண்டிக்கிறார். அவருக்கும் தேவனாக  ஆசை. தேவலோகத்தில் தர்மராஜன் வேலை செய்யப் பிடிக்கவில்லை  என்று நோட்டிஸ் கொடுத்து விட்டார். வேகன்ஸ்சி விளம்பரம். எலிஜிபிலிட்டி  தேவர் மாத்திரம் என நிபந்தனை. நிற்க. 

ஒரு நாள் பிரியதர்சினியின் தோப்பனார் மகள் காதலனுடன்  இருப்பதை கண்டு பொறுக்காமல் ஆத்திரத்தில் பிரதாப்குமாரனின் தலையைச் சீவி விடுகிறார். அதை கண்ட பிரதாப மஹாராஜா குமரா என்று அழுகிறார். பிரியதர்சினி சில சீரியல்  சாபங்களை வீசுகிறாள். 

“உருத்தெரியலேனு கிண்டலா பண்றேள்? நேருக்கு நேர் நின்னு பேச தைர்யமில்லாத தேவகூட்டம் இந்த க்ஷணத்துலேந்து கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போகட்டும். 

உங்க கண் முன்னாடி இப்படி நடந்ததுன்னு தானே கோபம்? இனிமே மனுஷ்யாளும், மனுஷ்யாள் சம்பந்தப்பட்ட எதுவுமே, தேவாள் கண்ணுக்குத் தெரியாம போகட்டும். 

ஒண்ணா இருந்தாத்தானே மனுஷ்ய ஜாதி, தேவ ஜாதின்னு பேதம் பேசறேள்? இனிமே மனுஷாள் இருக்கற லோகத்துல உங்களுக்கு இடம் இல்லாமப் போகட்டும். 

ஆத்மார்த்தமான நேசமும் காதலும் பக்தியும் தேவாள் மேலே இருக்கணும், ஆனா தேவாளோட கலந்து இருக்க மட்டும் மனுஷாளுக்கு பாத்யதை கிடையாதுன்னு சொல்றேளே? இனிமே ஜீவராசிகள் யார் கண்ணுக்கும் தெரியாம தேவாள்ளாம் மறஞ்சு போகட்டும்” 

இனி தொடரலாம் 

இதுல பாருங்கோ, தேவர்கள் எல்லாரும் ஜீவராசிகளோட கண்ணுக்குத் தெரியாம போகட்டும்னுதான் சாபம் குடுத்தா ப்ரியதர்சனி. கண்ணுக்கே தெரியாமப் போகட்டும்னு குடுத்திருந்தா, இந்தக் கதைக்கு சமாபனமே இல்லாமப் போயிருக்கும். ஏன்னா, இப்பப் பாருங்கோ அட்லீஸ்டு தேவர்களுக்குள்ளேயாவது ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுண்டா. அதனால, கதையைக் கொஞ்சம் முடிவுக்குக் கொண்டு போக முடியறது. 

எமர்ஜன்சின்னுட்டு மும்மூர்த்திகளும் கலந்து பேசறா. என்ன ஆச்சுனு இங்க்வைரி பண்றப்போ, எல்லா விஷயமும் தெரிஞ்சுபோறது. நேரா ப்ரியதர்சனியண்டை போறா. “என்ன கார்யம் பண்ணிட்டேமா?”னு கதறிட்டு, “சாபத்தைத் திருப்பி வாங்கிக்கோ”னு சொல்றா. 

சாபத்தை எங்கேந்து திருப்பிக்கறது? “மொதல்ல என் நாயகனை, பிரதாபகுமாரனை, உயிரோட திருப்புங்கோ. நான் சாபத்தைத் திருப்பறதைப் பத்தி அப்புறம் யோசிக்கறேன்”னு அவ சொல்றா. இன்னும் ஆத்திரம் அடங்கலை. எப்படி அடங்கும்? ஆத்மார்த்தக் காதலை அடாவடியாப் பிரிச்சுட்டா ஜன்மத்துக்கும் இருக்குமே துவேஷம்? 

“அவன் மானுடன், அவனோட ம்ருத்யுவை மேனேஜ் பண்ண உபகாரி யாரும் இல்லை. அவன் இப்போ அவாந்த்ரத்துல இருக்கான். சொர்க்கமோ, நரகமோ அவன் பிராப்தத்துக்கு ஏத்த மாதிரி நடக்கும்”னு மும்மூர்த்திகளும் கை விரிச்சுடறா. 

“அப்படின்னா, என் சாபத்தை நான் மாத்திக்க மாட்டேன். நீங்கள்ளாம் கண்ணுக்குத் தெரியாம இருக்க வேண்டியது தான்”னு தீர்மானமா சொல்லிடறா ப்ரியதர்சனி. 

“நான் நெலமையைச் சொல்றேன், கோவிச்சுக்காதே. பிரதாபகுமாரனோட ஜீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. ம்ருத்யுவானப்புறம் மனுஷ்ய ஜீவனெல்லாம் ஒண்ணுக் கொண்ணு வித்தியாசமில்லாம அடுத்த ஜன்மம் தீர்மானமாற வரைக்கும் அவாந்த்ரத்துல அலஞ்சிண்டிருக்கும். உன்னாலயும் சரி, என்னாலயும் சரி அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கச்சே, திருப்பணும்னு நினைச்சாலும் அந்த ஜீவனை எப்படி திருப்பிக் கொண்டு வர முடியும்? நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாருமா 

எல்லா தேவாளும் பிரதாப ராஜா கிட்டே வந்து கெஞ்சறா. சிவன் சொல்றார். “தேவாள்ளாம் சித்த சாந்தமா இருங்கோ. பிரதாப ராஜா கொழம்பி பயந்து போயிருக்கார். பிரதாபா, நான் மகாதேவன் பேசறேன். ப்ரியதர்சனி போட்ட சாபத்துனால நாங்க எல்லாரும் மனுஷா கண்ணுக்குத் தெரியாம போய்ட்டோம். பழைய நிலைக்கு வரணும்னா, உன் பையனைத் திருப்பிக் கொண்டு வந்தாத்தான் முடியும். எங்களால மனுஷ்ய ஜீவன்களைக் கண்டு பிடிக்க முடியாது. நீதான் அவாந்த்ர லோகத்துக்குப் போய் உன் பிள்ளை ஜீவனோட குரலை வச்சுக் கண்டுபிடிச்சுத் திருப்பிக் கூட்டிண்டு வரணும். உடனே போ, உன் பிள்ளையோட ஜீவன் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ மறு ஜென்மத்துக்கோ போயிட்டா திருப்பிக்கொண்டு வரவே முடியாது. தயவு செஞ்சு உன் பிள்ளையைக் கண்டுபிடிச்சு எங்களையும் காப்பாத்துப்பா”னு வேண்டிக்கறார் நடராஜர். 

“சரி, அவாந்த்ரத்துக்கு எப்படிப் போறது? யார் என் கூட வருவா? நேக்கு வழி தெரியாதே?”னு கேக்கறார் பிரதாப ராஜா.

 

சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவைப் பாக்கறா. பிரம்மா வேற வழியில்லாம, “நான் கூட்டிண்டு போறேன்.. பிரதாப ராஜா.. உம்ம வலது கையைக் கொடும்”னு சொல்றார். தட்டித் தடவி பிரதாபனோட வலது கையைப் பிடிச்சுண்டார் பிரம்மா. 

“பொண்ணே.. எங்க இருக்கே? நான் திரும்பி வரவரைக்கும் இவன் உடம்பைப் பத்திரமா பாத்துக்கோ, உன்னை நம்பித்தான் போறேனாக்கும்”னு சொல்லிட்டு, தன் கையைப் பிடிச்ச பிரம்மாவோட அவாந்த்ரத்துக்கு கிளம்பினார் பிரதாப ராஜா. 

அவாந்த்ர லோகம் வந்ததும் ப்ரம்மா, “பிரதாபா, நீ போய் அழைச்சுண்டு வா, நான் இங்கயே இருக்கேன்”னு சொல்றார். பிரம்மாவுக்கு உள்ளே போகப் பிடிக்கலைங்கறது பிரதாபனுக்குப் புரியறது. 

ராஜா தனியா உள்ளே போறார். அங்கே ம்ருத்யுவான ஜன்மாக்களெல்லாம் ஓலமிட்டிண்டுருக்கு. உருவமெல்லாம் இல்லை. ஆனா தன்னைச் சுத்தி நடமாட்டம் இருக்கறதை உணர முடியறது. தன்னோட குமாரனைத் தேடறார். “பிரதாப குமாரா, குமரா”னு கதறிண்டே போறார். சப்தமே காணோம். 

ராஜா அப்படி மனசு வெம்பி அழ ஆரம்பிச்ச சித்த நாழிக்கெல்லாம், “அப்பா!”னு ஒரு குரல் கேக்கறது. குரலை வச்சுத் தேடிக் கண்டுபிடிச்சுடறார் ராஜா. அவர் கண்லேந்து தாரை தாரையா ஆனந்தஜலம். நடந்ததையெல்லாம் சொல்றார். 

“பிரம்ம தேவரே! என் பையனைக் கண்டுபிடிச்சுட்டேன்”னு குரல் கேக்கறது. பிரம்மாவுக்கு பரம சந்தோஷம். “என்ன பிரதாபரே, உம்ம பையனைக் கூட்டிண்டு வந்தீரா?”னு கேக்கறார். 

“அவன் வர மாட்டேன்னுட்டான்”கறார் பிரதாப ராஜா. 

“என்ன? வர மாட்டானாமா? என்னய்யா இது?”னு பதட்டப்படறார் பிரம்மா. 

“நான் என்ன பண்றது. எவ்வளவு கெஞ்சியும் வரமுடியாதுன்னுட்டான். நீங்களே வேணும்னாலும் கேட்டுப் பாருங்கோ”னுட்டு நடக்க ஆரம்பிக்கறார் ராஜா. 

“பிரதாப குமாரா.. என்னய்யா கூத்தடிக்கிறே? என் வரமாட்டேங்கறே?”னு நாலு வாயாலயும் கத்தறார் பிரம்மா. 

குமார ஜீவன் கொஞ்சம் நிதானமா பதில் சொல்றது. கிணத்துக்குள்ளேந்து வர மாதிரி இருக்கு சப்தம். ஆனா நிதானமா, தெளிவாக் கேக்கறது. 

பதிலைக் கேட்டதும் பிரம்மாவுக்கு ரொம்பக் கோவம் வரது. அவர் மொகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. “பிரதாப ராஜா, உம்ம புத்தியைக் காமிச்சுட்டீரே?”னு கோவமா பேசறார். 

“நான் என்னய்யா செய்யறது? எல்லாம் என் பையனோட ஜீவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்! இப்ப நீங்களே அதன் வாயால கேட்டாச்சு. நீங்க பண்ணின கூத்துக்கு நான் எப்படி ஜவாப்தாரியாறது?”ங்கறார் பிரதாப ராஜா. “என் பிள்ளை சொன்னதை கேட்டேள் இல்லையா? இப்ப என்ன செய்யணுமோ செய்யுங்கோ”னு சொல்லிட்டு அங்கருந்து நடக்க ஆரம்பிச்சார். பிரம்மா ராஜாவை இழுத்துண்டு விஷ்ணு லோகத்துக்குப் போறார். 

பிரம்மா எல்லாத்தையும் சொல்றார். “அந்தப் பையனோட ஜீவன் கிட்டே பேசிட்டு வந்தேன். ஒரு நிர்ப்பந்தம் போடறான். தன்னோட அப்பாவை, அதாவது பிரதாப ராஜாவை, நாலாவது மூர்த்தியா ம்ருத்யுலோக மேனேஜரா போட்டாத்தான் திரும்பி வருவேன்னு சொல்லிட்டான். இல்லைன்னா இப்படியே ஜீவனாவே இருந்துட்டுப் போறேன்னு சொல்லிட்டான்”கறார். 

“என்னய்யா இது? அக்கிரமமா இருக்கே?”ங்கறார் நமச்சிவாயர். 

“நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்”கறார் பிரதாப ராஜா.

“அத்தனையும் சொல்லிக் குடுத்துட்டு, நான் என்ன செய்யட்டுங்கறார். என்ன ஒரு அழிச்சாட்டியம் பாருங்கோ!”ங்கறார் பிரம்மா. 

மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார். 

தலையாட்டிட்டு சிவன் சொன்னார். “சரி. நேரமாயிண்டே போறது. எப்படி இருந்தாலும் ம்ருத்யு மேனேஜ் பண்ண ஆள் தேவைன்னு போட்டிருக்கோமே. அமரத்வமான நமக்கு ம்ருத்யு லோகத்தை மேனேஜ் பண்ண வரலை. பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம். அவரும் ரொம்ப நாளா தேவ வம்சத்துல சேந்துடணும்னு சொல்லிண்டிருக்கார். சீக்கிரம் அந்த ஜீவனைத் திருப்பலைன்னா நம்ம கதி ரொம்ப மோசமாயிடும். நம்ம சௌகரியத்துக்காகவாவது பிரதாப ராஜாவுக்கு இந்த வேலையைக் குடுத்துட வேண்டியது தான். என்ன, பிரதாபரே, உம்மை நாலாவது மூர்த்தியா செஞ்சுட்டா, உம்ம பையன் ஜீவனைத் திருப்பிக் கொண்டு வந்து சேக்க சம்மதமா?”ங்கறார். 

“மொதல்ல என்னை தேவ வம்சமாக்கி, ம்ருத்யுலோகாதிபதி ஆக்குங்கோ”ங்கறார் பிரதாப ராஜா. 

“பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். இந்தக் க்ஷணத்துலந்து ம்ருத்யுலோகாதிபதி. இந்தக் க்ஷணத்துலந்து நாலாவது மூர்த்தி. தர்மலோக பரிபாலனம் பண்றதுனால அவர் பெயர் இன்னைலேந்து தர்மராஜன். ம்ருத்யுலோகாதிபதியா இருக்கறதால யமன். இந்தக் க்ஷணத்துலந்து யமதர்மராஜன்”னு நீலகண்டர் பிரதாப ராஜாவோட கையைப் பிடிச்சு அர்க்கயம் விட்டு சொல்றார். 

யமதர்மராஜன் தான் தேவ வம்சத்துல சேர்ந்த மொதல் மனுஷன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனா இதான் யமதர்மராஜன் உதயமான கதை. உண்டான கதை. நிலைச்ச கதை. அன்னைலேந்து ஸ்ரத்தையா தர்மலோகம் பரிபாலனம், ம்ருத்யுலோக பரிபாலனம் பண்ணிண்டு அமரத்வத்தோட இருக்கார் பிரதாப ராஜன் அலியெஸ் எமதர்மராஜன். 

சாபத்துக்கு அப்புறம் உண்டானதாலே, மனுஷனா இருந்து தேவனா மாறினதாலே, யமன் மட்டுமே மனுஷாள் கண்ணுக்குத் தெரியறான். இதான் கதை. 

ஓ! பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி பத்தின மிச்ச காதல் கதையா? மறந்து போயிருப்பேள்னு நினைச்சேன். சரி, அதையும் சொல்லி, சுப சமாப்தமா பண்ணிட்டா போச்சு. 

யமதர்மராஜன், அதான் நம்ம பிரதாப ராஜன், வேக வேகமா போய் குமாரனோட ஜீவனைக் கூட்டிண்டு வந்து ஒடம்போட சேத்ததும், பிள்ளையாண்டான் பழையபடி புருஷோத்தமனா எழுந்துக்கறான். 

மூச்சு வந்த முகூர்த்தம், “ப்ரியதர்சனி, எங்க நீ, கண்ணே?”னு தேடறான். 

“இங்கே இருக்கேன் கண்ணா.. இதோ வந்துட்டேன் என் ராஜா”னு குரல் மட்டும் கேக்கறது. 

‘என்னடாது.. குரலைக் காதலிக்கவா இத்தனைக் கஷ்டப்பட்டோம்?’னு நெனக்கறான் குமாரன். 

“இந்தாடி.. தடிச்செருக்கி, சித்த நில்லுடி”னு அதட்டறார் பிரம்மா. “உம்பாட்டுக்கு சாபத்தைக் குடுத்துட்டு கண்ணா ராஜானு சுத்திண்டிருக்கே? எங்க கதி என்னாறது? சாபத்தை மொதல்ல வாபஸ் வாங்கிக்கோ”னு கோவமாச் சொல்றார். 

“மறந்தே போச்சு!”னுட்டு சாபத்தை திருப்பி எடுத்துக்கறா ப்ரியதர்சனி. “சாபம் வாபஸ்”ங்கறா. 

ஒரு க்ஷணமாறது, ரெண்டு நாழியாறது, மூணு முகூர்த்தமாறது. ஒரு மாத்தமும் காணோம். தேவாளும் மனுஷாளும் ஒருத்தருக்கொருத்தர் கண்ணுக்குத் தெரியாம இருக்கா. 

“கக்கக்க்கும்”னு யாரோ கனைக்கறது கேக்கறது. எல்லா தேவாளும் திரும்பிப் பாக்கறா. அங்கே விஷமமா இளிச்சுண்டே நிக்கறார் தேவகுரு, பிரகஸ்பதி. 

“என்னய்யா?”னு எரிச்சலோட கேக்கறா விஷ்ணுவும் சிவனும். 

“ஒண்ணுமில்லே. ‘தேவசாபம் சாஸ்வதம்’னு நீங்க ரெண்டு பேரும் தான் தீர்மானிச்சேள். தேவாளுக்கு அம்ருதம் கடைஞ்சு கொடுக்கறச்சே. ஞாபகமில்லையோ?”ங்கறார் பிரகஸ்பதி. 

எல்லா தேவாளுக்கும் திக்குங்கறது. எல்லா தேவாளும் சிவாவிஷ்ணு கிட்டே “இப்ப என்ன செய்யறது?”னு கேக்கறா. “கொடுத்த சாபத்தை எடுக்க முடியாது 

நீயே பரிகாரம் சொல்லுமா”னு கெஞ்சறா ரெண்டு மூர்த்திகளும் ப்ரியத்ரசினி கிட்டே. 

ப்ரியதர்சனி பொம்னாட்டியாச்சே? முன் பின் எப்பவும் புத்திசாலியோன்னோ? யோசிச்சு சொல்றா: “தப்பு நடந்து போச்சு. சாபம் குடுத்தாச்சு. சரி, அரூபமா தெரியமாட்டேள். ஆனா லோகத்துல காதலிக்கற மனுஷா யாராயிருந்தாலும் கோவிலுக்கு வர வரைக்கும் இனிமே கோவில்ல விக்ரகம், சிலைனு பல வடிவங்கள்ல கண்ணுக்குத் தெரிவேள். மனுஷாளும் விக்ரகம்னு நினைக்காம தெய்வம்னு நினைச்சு பழைய மாதிரியே நேசமா நம்பிக்கையா இருப்பா. ஒவ்வொரு கோவில் கட்டும் போதும் மூல உற்சவர் வடிவத்துலயும், கோபுர சிலா வடிவத்துலயும் எல்லா தேவர்களும் கொஞ்சம் கொஞ்சமா ரூபத்துக்கு வருவேள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இப்படி ஒத்தொத்தரா கோவில் கட்டி வந்ததும், பழையபடி தேவா மனுஷா சகஜீவிதம் பரிணாமிக்கும்”. 

சாபத்தை தணிக்கும்படியான யோசனை பண்ணியும், தான் இன்னும் தன்னோட காதலனோட சேர முடியலையேனு வருத்தமா இருக்கு ப்ரியதர்சனிக்கு. 

அப்போ மகாவிஷ்ணு அவகிட்டே சொல்றார். “அம்மா, ப்ரியதர்சனி. தேவ எண்ணிக்கை அபிக்ஷணமா.. நிரந்தரமா இருக்கணும். இப்ப ஒண்ணு ஜாஸ்தியாயிடுத்து. உனக்கோ உன் காதலனோட சேந்து இருக்கணும்னு ஆசை. ஆனா, அது மனுஷ்ய வம்சத்துல தான் சாத்யப்படும். உனக்குக் காதல் அவ்ளோ பெரிசுன்னா, முக்யம்னா, நீ தேவ வம்சத்தை விட்டு மனுஷ்ய வம்சத்துல சேந்துடு. உன் மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோசஷமா இருக்கலாம். நான் ஒரு வரம் குடுக்கறேன். காதல்னாலே உங்க ரெண்டு பேர் ஞாபகம் தான் எல்லாருக்கு வரும், காதலிக்கறவா எல்லாருமே உங்க ரெண்டு பேரையும் கொண்டாடுவா. உங்க நினைவா காதலைத் தேடி லோகத்துல ஸ்த்ரீ புருஷாள்ளாம் கோவிலுக்கு வருவா”னு சொல்றார். 

சாபத்தை தணிக்கும்படியான யோசனை பண்ணியும், தான் இன்னும் தன்னோட காதலனோட சேர முடியலையேனு வருத்தமா இருக்கு ப்ரியதர்சனிக்கு. 

ப்ரியதர்சனி யோசிக்கறா. ஒரு முடிவுக்கு வந்துடறா. “பெத்த பெண்ணோட மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கற அப்பா அம்மா நேக்கு இருந்து என்ன ப்ரயோஜனம்? தன்னோட ஆடம்பரத்துக்கும் ஆசாரத்துக்கும் என்னை பலி கொடுக்கத் தயாரா இருக்குற அப்பா அம்மாவை விட, எனக்காக எதையும் விட்டுக் கொடுக்கற மனுஷ்ய ராஜனே மேல்”னு சொல்லிட்டு தேவரூபத்தைக் களையறா. மனுஷ்ய ரூபம் எடுத்துக்கறா. 

பிரதாப குமாரனுக்கு சந்தோஷம். ப்ரியதர்சனி கண்ணுக்குத் தெரிஞ்சதும் அவளை அப்படியே கட்டிண்டு அழறான். “என்னை மீட்டுண்டு வந்தியே!”னு முத்தமா பொழியறான். அவளுக்கோ அவனோட தேக ஸ்பர்சம், வாத்சல்யம், எல்லாம் சொர்க்க லோகத்தை விட மகோன்னதமா இருக்கு. 

ரெண்டு பேரும் அப்பவே கல்யாணம் பண்ணிண்டா. அந்தக் க்ஷணத்துலந்து சந்தோஷமா இருந்தா. 

இவ்ளோ தூரம் கேட்டேள், இன்னும் சமாசாரம் பாக்கி, அதையும் கேட்டுட்டுப் போங்கோ. 

யமதர்மராஜனானதும் திடீர்னு பிரதாப ராஜா எதிர்ல சர்வாலங்காரத்தோட ஒரு மகிஷம், எருமை மாடு.. நிக்கறது. “இனிமே நீ இதுல தான் போகணும்”னு சொல்றா தேவாள்ளாம்.


ஒரு நாள் போறான், ரெண்டு நாள் போறான். ஊர்ல எல்லாரும் சிரிக்கறா மாதிரி இருக்கு. ராஜாவோன்னோ? “இன்னைலந்து எருமை மாடு சாஸ்வதம். எல்லாரும் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் சாப்பிடணும். வீட்டுக்கு ரெண்டு எருமை வளக்கணும்”னு ஆணை போடறான். ‘தேவனான உடனேயே அக்கிரமம் பண்றானே!’னுட்டு புலம்பிண்டே எல்லாரும் எருமை மாட்டை வளக்க ஆரம்பிச்சா. எருமைப்பால் காபி இன்னிக்குச் சாப்பிடறோம்னா அதுக்கு பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி காதல் தான் காரணமாக்கும். 

கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணப் பண்ண, தேவாள்ளாம் சாப விமோசனம் கெடைச்சு, ஒத்தொத்தரா ரூபத்துக்கு வருவானு சொன்னேனில்லையா? அந்தக் கணக்குப்படி பாத்தா, அனேகம் தேவாளுக்கு ஏற்கனவே சாப விமோசனம் கிடைச்சாச்சு. நாமதான் தெருவுக்குத் தெரு கோவில் கட்டிண்டிருக்கோமே? ஒரு பக்கம் கோவில் பாழடைஞ்சாலும் இன்னொரு பக்கம் புதுசா கட்டறோமே? அந்தக் கணக்குப்படி, இதே வேகத்தில கோவில் கும்பாபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா, இன்னும் முப்பத்து மூணு வருஷத்திலே, 2045ல, எல்லா தேவாளுக்கும் சாப விமோசனம் கிடைச்சுடும். அன்னைலேந்து தேவா-மனுஷா சகஜீவனம் தான். அதைப் பாக்க எல்லாரும் தீர்க்காயுசா இருக்கணும்னு வேண்டி கதையை முடிச்சுக்கறேன். சுபஸ்ய சுபம். 

2012

 ஸ்ரீராம்.ஜூன் 16, 2012

போங்கோ மாமா.... என் பேரு ப்ரவசனத்துல வரல்ல..... உக்கூம்.... போங்கோ நான் பின்னூட்டம் போட மாட்டேன் போங்கோ....

ஜீவி  ஜூன் 17, 2012

//அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா.//

ஓ.. தேவதாஸ்..ஓ.. பார்வதி..
 


19 கருத்துகள்:

  1. கால்களில் சுட்டுப் பிடித்தார்...... எனக்கு என்கவுன்டர் நிகழ்வுகளில் தோன்றும் சந்தேகம்... ஏன் குற்றவாளி தப்பிக்க நினைக்கும்போது கால்களில் போலீசார் சுடுவதில்லை என்று. எப்போதுமே ஆளைப்்போட்டுத் தள்ளி கேசை முடிக்கிறார்கள். சட்டம் விரைவாகச் செயல்பட போராடலாம் ஆனால் என்கவுன்டர் செய்வது சரியா?

    லஞ்சம் வாங்கும் போலீஸ் அரசு அதிகாரிகளை, ஒழுங்கீனமாக பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் அதிகாரிகளை, இடமாற்றம், FIR, சிறை, சஸ்பென்ட் என்றுதானே தண்டனைக்கு உள்ளாக்குகிறார்கள். இதை எதையுமே செய்யாமல் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்தால் இவர்கள் ஒத்துக்கொள்வார்களா?

    சவுமியாவில் லாஜிகல் செயல் என்னை இப்படி யோசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. சென்ற வாரமே தளத்துக்குச் சென்று படித்துவிட்டேன். மிக அருமையான நடை. நகைச்சுவையோடு, பலவித எண்ணச் சிதறல்களோடு கூடிய கற்பனை. ரொம்பவே கவர்ந்தது. அப்பாதுரைக்குப் பாராட்டுகள்.

    க்ளைமாக்ஸ் முடிந்தபின்னும் கதையை கொஞ்சம் நீட்டியமாதிரித் தோன்றியது. நகைச்சுவைக் கதை சட்னு முடிந்துவிடவேண்டும். இது கடுகு சார் எனக்குச் சொன்னது.

    பதிலளிநீக்கு
  3. பழங்குடியினர்...சுரேஷ்குமார் ஜகத்....... புத்திசாலித்தனம் சாதி மதம் என்ற பேதமில்லாமல் அனேகமாக அனைவரிடமும் உள்ளது. என்னுடைய வேலை நாட்களில் எனக்கு மிக உறுதுணையாக, புத்திசாலித்தனமாகவும் மிகவும் திறமையாகவும் செயல்பட்ட, மீனவர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், இரண்டு ஆண்களையும் எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் அந்தப் பெண், என்னுடைய பொசிஷனைக் கொடுத்திருந்தாலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்கார்.

    படிப்பு என்பது மாத்திரம்தான் ஒருவனுடைய வாழ்க்கைக்கு, அவன் சந்ததிக்கு ஒளிவிளக்கு.

    பதிலளிநீக்கு
  4. இப்பப் படிக்கறச்சே கதை வேறே ரூபமா தெரியறது.
    சும்மாச் சொல்லக் கூடாது துரை எழுதறத்தே ரொம்ப யோசிச்சிருப்பார்ன்னு தெரியறது.
    தேவலோக.சமாச்சாரம்னா
    யாருக்கு என்ன தெரியப் போறதுன்னு இஷ்டத்திற்கு உடான்ஸ் விடலாம் தான். யாரும் எதுவும் சொல்றத்துக்கு இல்லேன்னு
    லைசன்ஸ் கிடைச்சுடறது தான். இருந்தாலும் தனக்குத் தெரிஞ்சவரை ஒரு விஷயத்தையும் இன்னொரு விஷயத்தையும் கனெக்ட் பண்றத்துக்கு அக்கறை எடுத்திண்டு எழுதி முடிச்சிருக்கார்ன்னு நன்னா தெரியறது. அதான் தொழில் நேர்த்தி. அதுக்காகவே அவரைப் பாராட்டணும்.

    தேவதாஸ் --பார்வதி ஜோடி சினிமா என்னை ரொம்ப பாதிச்ச ஒண்ணு. அதுனாலே
    பதினோறு வருஷத்துக்கு முந்தி அதைக் குறிப்பிட்டேன்.
    இந்தக் கதையைப் படிக்கற வேறே யாரானும் அவங்களுக்குப் பின்னால் வந்த தங்களுக்குப் பிடிச்ச அமர காதல் ஜோடியை நினைவு கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  5. ஆகாய ப்ரியதர்சனி
    தரை மீது வந்ததேனோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன கேள்வி ஜீவி சார். அதுதான் காதல். பாகிஸ்தான் பெண் இந்திய ஆணைக் காதலித்தது போன்று.

      தேவர்களுக்கு மனுஷ்யர்களும், மனுஷ்யர்களுக்கு தேவர்களும் கண்ணுக்கு புலப்பட்ட காலம்அது. இந்த காதல் இல்லையேல் கதையே இல்லை.
      Jayakumarv

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் நீண்ட நாட்களாக வருவதேயில்லையே..

    பதிலளிநீக்கு
  8. சபரீஸ்வரன் வாழ்க வளமுடன், பாராட்டுக்கள்.
    நடிகர் விஜய் தேவரகொண்டா 100 குடும்பங்களுக்கு உதவியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. அப்பாத்துரை அவர்கள் கதை நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி ஜெயகுமார் சார்.
    (மீண்டும் படித்து பொறுமையை சோதித்துக் கொண்டவர்களுக்கும் நன்றி.)

    பதிலளிநீக்கு
  11. ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமா நடிகருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரொம்பக் கம்மிங்க...   விஜய் ஒரு படத்துக்கு 135 கோடியும், ரஜினி 100 முதல் 125 கோடியும் வாங்குகிறார்கள்.

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

      எனக்கு கொஞ்சம் வழக்கம் போல் உடல் நலமில்லாமல் இருந்தது. இப்போது நலமாகி விட்டேன். ஆனால், அதன்பின் தீடிரென எங்கள் மகனுக்கும், இப்போது (நேற்றிலிருந்து) மகளுக்கும், பேத்திக்கும் (அவளுடைய மகள்) தொடர்ந்து உடல் நல பாதிப்புக்கள் என வரிசையாக வந்தபடியால், மனம் வருத்தமாக உள்ளது. அதனால் என்னால் வழக்கம் போல், பத்து, பதினைந்து நாட்களுக்கு மேலாகவே வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.

      இங்கு அனைவரும் சகோதரர்கள் நெல்லைத்தமிழர், கில்லர்ஜி, துரைசெல்வராஜு அவர்களும், சகோதரிகள் கோமதி அரசு, கீதா ரெங்கன் அவர்களும் தொடர்ந்து என்னைக் காணாமல் தேடியதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன். அதைப் படித்ததும் என் மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது. என் மீது நீங்கள் அனைவரும் வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.

      இன்று உங்கள் அன்பான விசாரிப்பையும், சகோதரி கோமதி அரசு அவர்களின் அன்பான விசாரிப்பையும் மெயிலில் கண்டதும், இன்னமும் மனம் நெகிழ்வடைந்தேன். உடனே இங்கு வந்து வீட்டின் விபரம் தெரிவிக்கிறேன். வீட்டில் அனைவரும் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும் அதற்கு உறுதுணையாக இருக்கும். விரைவில் எல்லாமும் நலமாகி எப்போதும் போல் வலைத்தளம் வருவேன். அன்பாக என்னைப்பற்றி விசாரித்த உங்கள் அனைவருக்கும், என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கதை நன்றாக இருக்கிறது.

      கமலா ஹரிஹரன் அவர்கள் குடும்பம் நலமடைய வேண்டுகிறோம்.

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன், விரைவில் குழந்தைகள் நலம்பெற பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      உங்கள் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    5. நம்மை யாரும் தேடலை. எல்லோருக்கும் பழகிப் போயிருக்கும். ;))))

      நீக்கு
    6. சகோதரி கமலா -ஹரி-ஹரனும் அவர் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்தனைகள்

      நீக்கு
    7. சபரீஸ்வரனுக்கும் மற்றவர்களூக்கும் வாழ்த்துகள். கொடுக்கும் கருத்தெல்லாம் எங்கே போகுதோ?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!