ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு (தமிழில்) சட்னி பொடி
வணக்கம்! வணக்கம்! எபி அடுக்களைக்குள் ரொம்ப நாள் கழித்து கீதா புகுந்திருக்கா! இன்னிக்கு என்ன சொல்லப் போறாளோ? தலைப்பைப் பார்த்தா பயமா இருக்கே சாப்பிடும் படியா இருக்குமான்னு கொஞ்சம் பேர் யோசிக்கறீங்களா!!! ஹாஹாஹாஹா. யோசிங்க யோசிங்க... நல்லா யோசிங்க!
Niger Seeds - உச்செள்ளு/ஹுச்செள்ளு
ஆங்கிலத்தில் Niger Seeds. கன்னடத்தில் ஹூச்செள்ளு, குரெள்ளு, தெலுங்கில் வலிசல்லு/வலசுல்லு, மராத்தியில் கார்ளே/க்குர்சணி, வடக்கே ராம்தில் என்றும் சொல்லப்படும் இது காட்டெள்ளு என்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளில் பேயெள்ளு, உச்செள்ளு என்றும் சொல்லப்படுகிறது.
பார்ப்பதற்குக் கருப்பு ஜீரகம் (கருஞ்சீரகம் வேறு) போல இருந்தாலும், எள்ளின் சுவை. பல மருத்துவ குணங்களைக் கொண்ட உச்செள்ளை, உணவில் எள்ளிற்குப் பதில் பயன்படுத்தலாம். அதே சுவை, மணம், அதே குணம். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணையும் சந்தையில் விற்கப்படுகிறது. Niger Seed oil.
இது என் கண்ணில் பட்டு அறிந்த நாளிலிருந்து (சென்னையில் இருந்த போதே) இதைப் பற்றித் தெரிந்து கொண்டு சட்னி, பொடி என்று செய்வதுண்டு. இங்கு பகிர மறந்தே போனேன். மகனுக்குச் செய்த போது அட! இதை எபியில் பகிரலாமே என்று இதோ இப்போ. செய்முறையை எழுத்தில் சொல்வதோடுஒரு காணொளியாகவே பகிர்கிறேன். எபியில் திங்க பதிவில் காணொளியுடன் பகிர வேண்டும் என்று நான் ஸ்ரீராமிடமும், இங்கு கருத்திலும் சொல்லியும் அனுப்பியதில்லை. இங்கு இது இப்ப என் சிறு முயற்சி. எனவே படங்கள் அதிகம் இல்லை.
நம்முடைய உணவுகளை நான் கண்ணளவில் தான் செய்வது வழக்கம். ஆனால் பேக்கிங் என்றால் கண்டிப்பாக அதற்கான அளவுப் பொருட்களை அளந்துதான் போடுவது வழக்கம். அப்படி நான் பயன்படுத்தும் கப் (பேக்கிங்க் செய்ய பயன்படுத்தும் கப்புகள், தேக்கரண்டி, மேசைக்கரண்டிகள், மற்றும் அடுக்க்ளை Weighing Scale ல் அளந்து (மகனுக்காக) செய்ததால் அந்த அளவுகளையும் இங்கு தருகிறேன்.
தேவையான பொருட்கள் :
உச்செள்ளு/பேயெள்ளு - 1 கப் - 150 கி
நிலக்கடலை - 1/4 கப் - 50 கி
வற்றல் மிளகாய் - 10 - 10 கி (உங்களுக்கு இன்னும் காரம் வேண்டும் என்றால் மிளகாயின் தன்மை பொருத்து இன்னும் 5 கூட்டிக் கொள்ளலாம். 10 குண்டூர் மிளகாயும் 5 பைதாகி மிளகாய் (Byadgi- கர்நாடகா மிளகாய்) பயன்படுத்தலாம். காரம் குறைவாகவும் நல்ல நிறமும் கொடுக்கும்.
பூண்டு - 5 பல் - 5 கி (எண்ணிக்கை எனும் போது அதன் Size பொருத்து கிராம் கணக்கு மாறுபடும். என்றாலும் கூடினாலும் குழப்பமில்லை)
பூண்டு வேண்டாம் என்பவர்கள் அதற்குப் பதில் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு - 5 கி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி - 5 கி
உப்பு (நான் இந்துப்பு உப்புதான் பயன்படுத்துகிறேன் பொடியும்/கல்லுப்பும் இரண்டுமே) - தேவையான அளவு ஒரு தேக்கரண்டி கல்லுப்பு - 10 கி
மேலே கொடுத்திருப்பது 1 கப் அளவு உச்செள்ளிற்கான பிற பொருட்கள் அளவு. நான் மகனுக்காக 3 கப் அளவு உச்செள்ளு எடுத்துச் செய்ததால் அதற்குத் தேவையான மற்ற பொருட்களும் அதற்கேற்ப எடுத்துச் செய்ததால் காணொளியில் அளவு நிறைய இருப்பது போல் இருக்கும். அளவு மாறினாலும் செய்முறை அதேதானே!
காணொளியில், பேயெள்ளு பொரியும் சத்தம் கேட்க வேண்டும் என்பதற்காகக் காணொலியில் கேட்கும் சத்தத்தை நீக்கவில்லை. பக்கத்துவீட்டில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது எனவே அந்தச் சத்தம் கேட்கலாம். இங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் பக்கத்து வீட்டில் பேசுவது இங்கு நன்றாகக் கேட்கும் அது போல VICE VERSA
செய்முறை:
செய்முறை ஒன்னும் வித்தியாசம் இல்லை. எல்லாம் நீங்க செய்வது போலத்தான்.
எள்ளை வறுக்கும் முன் வாணலி நல்ல சூட்டில் இருந்தால் டக்கென்று நல்ல பக்குவத்தில் பட் பட்டென்று பொரியும். அப்படிப் பொரிப்பது நல்லது. நல்ல மணம் மற்றும் பக்குவத்தில் பொரியும் என்பதால் முதலில் வெறும் வாணலியில் அளவான தீயில் மிதமான சூட்டில் பொறுமையாக நிலக்கடலையை பொன்னிறத்தில் வறுபட்டதும் எடுத்து தட்டில் போட்டு வைச்சுக்கோங்க.
வாணலி இப்ப நல்ல சூடாக இருக்கும். உச்செள்ளைப் போட்டு அது பொரியும் சத்தம் கேட்கத் தொடங்கியதும் பிரட்டிக் கொடுத்து பொரிந்து மணம் வந்ததும் எடுத்து தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்து வாணலியில் அரை ஸ்பூன் எண்ணை விட்டு பூண்டையும் கொஞ்சம் பச்சை மணம் போய் நிறம் மாறும் போது தேவையான உப்பைப் போட்டு பிரட்டி (மகனுக்காகச் செய்ததால் உப்பில் இருக்கும் ஈரம் போவதற்காக இப்படிச் செய்வதுண்டு) தட்டில் போட்டுக்கோங்க. பூண்டு வேண்டாம் என்பவர்களுக்கு இதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதில் புளியங்கொட்டை அளவிலான கட்டிப் பெருங்காயத்தைப் பொரித்துச் சேர்க்கலாம் அல்லது பொடிக்கும் போது பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு மிளகாய் வற்றலைப் போட்டு மிதமான தீயில் கறுகாமல் வறுக்கணும் அப்ப சேர்க்க வேண்டிய புளியையும் சேர்த்துக்கலாம் (பல நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் ஈரப்பதம் போவதற்கு) மிளகாய் நன்கு வறுபட்டு வரும் போது கறிவேப்பிலையையும் போட்டு பிரட்டி, அது மொறு மொறு என்று ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு தட்டில் போட்டுவிடுங்கள்.
எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து எடுக்க வேண்டியதுதான்! நல்ல மணமான உச்செள்ளுப் பொடி ரெடி!!
பின் குறிப்பு - நிலக்கடலையின் தோலை நான் தோ வேண்டாம் என்பவர்கள் தோலை நீக்கி விட்டுப் பொடித்துக் கொள்ளலாம். அல்லது வறுத்த நிலக்கடலை வாங்கியும் சேர்க்கலாம். அதில் உப்பு இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக்கோங்க. உப்பிருந்தால் பொடியில் நாம் போடும் உப்பின் அளவை மாற்றிக்கலாம்.
இப்படிப் பொடிக்காமல் தண்ணீர் சேர்த்து எள்ளுச் சட்னியாகவும் செய்யலாம். உடனடியாகப் பயன்படுத்த.
இதே உச்செள்ளுடன் ஆளி விதை - Flax Seed வறுத்துச் சேர்த்தும் செய்யலாம். இதே செய்முறையில் நிலக்கடலைக்குப் பதில் உச்செள்ளு/வழக்கமான எள்ளு 1 கப் என்றால் வெள்ளை உளுந்து 1/4 - 1/2 கப், கொஞ்சம் கறிவேப்பிலை, காரத்திற்கு வற்றல் மிளகாய் எல்லாம் வறுத்து உப்புடன் பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு வகையான அருமையான எள்ளுப் பொடி.
நாம் வழக்கமாகச் செய்யும் மிளகாய்ப் பொடியில் வழக்கமாகச் சேர்க்கும் எள்ளிற்குப் பதில் இந்த எள்ளைச் சேர்த்துக்கலாம். இதே எள்ளுடன் பொட்டுக்கடலை சேர்த்தும் செய்யலாம் அது தனியான சுவை. உங்கள் விருப்பம் போல் சாதரண எள்ளை எதிலெல்லாம் சேர்ப்போமோ அதில் இந்த எள்ளைச் சேர்க்கலாம் அதே போன்று வழக்கமாகப் பயன்படுத்தும் எள்ளில் செய்யும் எல்லாமும் இதிலும் செய்யலாம்.
இனி உங்கள் விருப்பம் போல் உங்கள் கற்பனையை விரித்து, புதிதாகச் செய்யும் ஆர்வம் எல்லாம் கலந்து கட்டி சோதனை செய்து... Enjoy Maadi!!!!!
ஸ்பாஆஆஆ.....சமையல் செய்யறப்ப ஃபோட்டோ எடுக்கறதே கஷ்டமா இருக்கு....இப்ப வீடியோ வேற!!! எல்லாரும் எப்படி அழகா எடுத்துப் போடறாங்கன்னு தோணினாலும் விட்டுருவமா!!
எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
காணொளி பார்த்தேன். ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க. முதலில் ரொம்ப நேரம் எடுக்கும் காணொளியோ என்று பார்த்தேன். மிக அருமையாகங்காணொளி (இன்னும் உணவைப் பத்திச் சொல்லலை) வந்திருக்கு. பாராட்டுகள் கீதா ரங்கன். புதிதாக இந்த தெக்கினிக்கை உங்களிடமிருந்து இன்று கற்றுக்கொண்டேன்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை அண்ணே! அண்ணனின் மனமுவந்த பாராட்டுக்கு மிக்க நன்றி! என்ன நெல்லைu உங்களுக்குத் தெரியாத மாதிரி என்னவோ இங்கதான் கத்துக்கினேன்னு...ஹாஹாஹாஹா
நீக்குகீதா
செய்முறையின் தலைப்பு பயமுறுத்துகிறது. அபடைசிங் ஆக இல்லை. ஆனால் வித்தியாசமான எள்ளுப்பொடி.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா நினைச்சேன் நீங்க சொல்லுவீங்கன்னு!!!
நீக்குஆனா நல்லாருக்கும் நெல்லை. நல்ல மணமுடன். வழக்கமான எள்ளை வைத்து என்னெல்லாம் செய்வோமோ அத்தனையும் இதைக் கொண்டும் செய்யலாம் அதே மணம் சுவை...
மிக்க நன்றி நெல்லை
கீதா
மிளகாயை வறுத்ததும், எள்ளு நிலக்கடலை சேர்ந்த மிட்டாய் சைசில் கறுப்பாகப் போட்டு வறுக்கிறீர்களே அது என்ன? இந்துப்பா?
பதிலளிநீக்குநான் ஹிமாலயாஸ் சிவப்பு உப்பு உபயோகிக்கிறேன், கல் மற்றும் பொடி உப்புக்கு.
ஆனால் பயன்பாட்டுக்கு சாதாரண கல் உப்பும் வெள்ளைநிற பொடியுப்பும்தீன் சுலபமாக இருக்கும். சிவப்பு உப்பில் உப்பின் சுவை குறைவு. ஆனால் வெண்மைநிற பொடி உப்பு கெமிக்கல், உடலுக்குக் கெடுதல் என்றே நான் நினைக்குறேன்.
நெல்லை, அது புளி.
நீக்குஇந்துப்பு தானே himalayan salt பிங்க் உப்பு. அதுதா நான் பயன்படுத்துகிறேன் வெகு காலமாக. ஆமாம் உப்பு தூக்காது எனவே எங்களுக்குச் சரியாகிறது. எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவர். குடும்ப நண்பர் - இப்போது இல்லை. மிகச் சிறிய வயதிலேயே போய்விட்டார் ஆனால் நல்ல நிபுணர் - அவர் பல வருடங்களுக்கு முன்னரே சொல்லியதிலிருந்து அதுதான். வெள்ளைக் கல்லுப்பை உப்பளத்திலிருந்து வாங்கி வடிகட்டிப் பயன்படுத்தச் சொல்லுவார். அதெல்லாம் முடியாதே.
எனக்கு நல்ல நினைவு இருக்கு. ஊரில் இருந்தப்ப, சைக்கிளில் உப்பு மூடை வைத்துக் கொண்டு விற்பவர் வருவார் கல்லுப்பு. இப்போது கிடைப்பது போல வெள்ளையாக இருக்காது. கொஞ்சம் அழுக்குக் கலரில் இருக்கும். கடல்லருந்து தண்ணீர் உப்பளம் க்குப் பாய்ந்து அதன் பின் உப்புப்ராஸஸ் செய்வது என்பது அப்போ கிடையாது. அந்த உப்பு தான் அப்போது. திருவனந்தபுரத்தில் கூட. சென்னை வந்த பிறகும் கூட சில கடைகளில் இருந்து அப்போது அதன் பின் வெள்ளைதான். கிடைத்தது. அதனால் மாறிவிட்டோம்,
பாண்டிச்சேரி - சென்னை மகன் பாண்டிச்சேரியில் படித்தப்ப வரை ப்ராஸஸ் செய்யாத உப்பு கிடைத்தது. ஈசியாரில் முதலியார் குப்பம்/ கல்பாக்கம் தாண்டிய பிறகு உப்பளம் நிறைய பார்க்கலாம்.
கீதா
பொருளின் எடை காண்பிக்காத அலங்கார கிச்சன் ஸ்கேலை இப்போதுதான் பார்க்கிறேன். இதன் உபயோகம் என்ன? ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா எதிர்பார்த்தேன் நெல்லை. ஆனாலும் சிரித்துவிட்டேன். அது அடுக்களையில் லைட் போட்டு செய்ததால் இதன் அளவு டை காணிக்கறது தெரியலை. லைட்டை ஆஃப் செய்துவிட்டு எடுத்தென் அப்போது தெரிந்தது ஆனால் பொருள் தெரியவில்லை. அதனால் இப்படியே பகிர்ந்துவிட்டேன்!
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
காலை வணக்கத்தை சாவகாசமாகச் சொல்லும் (மதியத்தில் சொல்லும் என எழுத நினைத்தேன். கலாய்ப்பதற்கும் ஒரு நியாய தர்மம் வேண்டுமல்லவா?) கமலா ஹரிஹரன் மேடத்தைக் காணோமே. அடுக்களையில் பிஸியா இல்லை உடல் நலமில்லையா? இல்லை, பதிவெழுதி நாளாச்சே, கிருஷ்ண ஜெயந்திக்காக ஏகப்பட்ட பட்சணம் செய்து, படங்கள் எடுத்து, பதிவு எழுதிக்கொண்ணிருக்கிறாரா?
பதிலளிநீக்குநானும் நினைத்தேன் கமலாக்காவைக் காணலையேன்னு. கோகுலாஷ்டமி பிசியாக இருந்திருப்பாங்க அதுக்குப் பிறகு அலுப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். உடல் நலம் நல்லா இருக்கும் என்று நலல்தையே நினைப்போம்.
நீக்குகீதா
கோகுலாஷ்டமிக்கு முன்பு இருந்தே காணவில்லை கமலா ஹரிஹரனை. நானும் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
நீக்குசுருக்கமான காணொளியாகக் கொடுத்தது புதுமை. இதில் மற்றும் ஒருவரின் பங்கும் உண்டு என்று நினைக்கிறேன். காரணம் ஒருவரே அடுப்பில் கிண்டிக்கொண்டு காணொளியும் எடுக்கமுடியாது. அவருக்கும் நன்றி
பதிலளிநீக்குசொல்லவேண்டும்.
எல்லாம் சரி இந்த எள்ளை வாங்க கர்நாடகாவுக்குத் தான் வரவேண்டும் போல் இருக்கிறது. எங்கும் கிடைப்பது அரிது.
Jayakumar
ஜெ கே அண்ணா, எபியில் போட பல முறை நினைத்ததுண்டு ஆனால் நானேதான் வீடியோ எடுக்க வேண்டும் படங்களும் அப்படித்தான். இதுவும் நானே தான் எடுத்தேன் காணொளியில் நன்றாகத் தெரியும். கை பிரட்டிக் கொடுப்பது நிற்கும் பாருங்க இடையில்...அல்லது சும்மா பேருக்கு வறுப்பதாகத் தெரியும். கட கட என்று வறுக்கும் போது ஆங்கிள் மாறியது....ஆனால் கொஞ்சம் பெரிதாகவும் சிறிதாகவும் பல ஷாட்ஸ் எடுத்து அப்புறம் எடிட் செய்தேன். நச்சு வேலை. இதுவே நேரமெ டுத்துக் கொண்டுவிடும்.
நீக்குநான் சில ஷார்ட்ஸ் போடுகிறேன் அப்படி போடுவதற்காகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாமோ என்றும் நினைத்தேன் ஆனால் குரல் எதுவும் கொடுக்கவில்லை. இனிதான் இதை ஷார்ட்ஸ்சாகப் போடலாமோ என்றும் நினைக்கிறேன்.
அண்ணா அங்கும் கிடைக்கும் Niger seeds என்று ஆங்கிலத்தில் இருக்கும் பாருங்க. சென்னையிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில், nuts and spices கடைகள், நாட்டு மருந்து க்டைகளில் கிடைக்கிறது.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
அருமையான குறிப்பு கீதா! இந்த காட்டெள்ளு ஒரு வேளை இங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைத்தாலும் கிடைக்கலாம். கிடைக்காவிட்டால் நம் ஊர் கறுப்பு எள்ளை உபயோகித்தால் சுவை குறையுமா? இதே செய்முறையில் 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பையும் சேர்த்து வறுத்துக்கொள்ளலாமா?
பதிலளிநீக்குஇது தோசை, இட்லிக்கான பொடி தானே? சும்மாவே தொட்டுக்கொள்ளலாமா அல்லது நல்லெண்ணெய் விட்டு குழைக்கலாமா? நிறைய சந்தேகங்களை கேட்டு விட்டேனா?
நிறைய சந்தேகங்களை கேட்டு விட்டேனா?//
நீக்குஅதெல்லாம் இல்லை மனோ அக்கா. ஆனால் நீங்கள் மிக நன்றாகச் செய்பவராச்சே!.
மனோ அக்கா ஒவ்வொரு கேள்விக்காகச் சொல்கிறேன். ஆமாம் நாட்டு மருந்துகடையில் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் இங்கு, துபாயிலும் கூட, niger seeds என்று இருக்கும் பாருங்க.
இல்லை அக்கா நம் ஊர் கறுப்பு எள்ளைப் பயன்படுத்தியும் செய்யலாம். சுவை குறையாது. எள்ளூச் சுவைதானே!
//இதே செய்முறையில் 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பையும் சேர்த்து வறுத்துக்கொள்ளலாமா?//
தாரளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே அதுக்கு ஏற்றாற்போல காரம் உப்பு பாத்துக்கோங்க.
இது தோசை, இட்லிக்கான பொடி தானே? //
இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். நல்லெண்ணை கலந்தும் கலக்காமலும் கூடச் சாப்பிடலாம் நன்றாக இருக்கும் மனோ அக்கா.
சப்பாத்தி/ரோட்டியின் மேல் கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணை விட்டுக் கொண்டு பொடி தூவி தடவி சுருட்டிச் சாப்பிடலாம். ப்ரெட்டின் உள் தூவி வெண்ணை தடவி வைத்துக் கொண்டு மகன் சாப்பிடுவதுண்டு. நாங்களும். நன்றாக இருக்கும். சாதாரணமாகப் பயன்படுத்தும் எள்ளைக் கொண்டு என்னெல்லாம் செய்வோமோ அனைத்தும் செய்யலாம் எள்ளுருண்டையும்.
சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். நல்லெண்ணை விட்டுக் கொண்டு கலந்து. இதைத் துவையலாகவும் சாப்பிடலாம், மனோ அக்கா.
நீங்கள் வித விதமாகச் செய்யக் கூடியவர். இதையும் இன்னும் உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களில் புதுசாகச் செய்து பார்க்கலாம்.
மிளகாய்ப் பொடியில் எள்ளு சேர்த்துச் செய்வோமோ அதுக்குப் பதிலாக இதைச் சேர்த்தும் செய்யலாம்.
மிக்க நன்றி மனோ அக்கா.
கீதா
காணொளியோடு சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குபல மொழிகளில் பெயர்கள் சூப்பர்.
நைஜர் விதை என்றால் டக்கென்று தெரியாது இல்லையா அதனால் இதைப் பல மொழிகளில் என்னன்னு சொல்றாங்கன்னு பார்த்துக் கொண்டேன் அதற்கு முன் வரை னைஜர் என்றே தான் எனக்குத் தெரியும்.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி.
கீதா
சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் சில தினங்களாக வரவில்லையே...
பதிலளிநீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை அண்ணா...
நீக்குகீதா
பதிலளிநீக்குநானும் நினைத்தேன்..
மதிப்புக்குரிய
கமலா ஹரிஹரன் அவர்கள் சில தினங்களாக வருவதில்லையே...
காணொலியோடு சிறப்பாய் ...
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
எள் கொண்டு செய்யப்பட்டது சிறப்பு..
பதிலளிநீக்குகேள்விப்பட்டதே இல்லை
என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்..
மிக்க நன்றி துரை அண்ணா. நீங்கள் இருந்த ஊரில் இது Niger seed என்று இருந்திருக்கும்
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
தோலில் ஒவ்வாமை (அரிப்பு) உடையவர்கள் எள், நல்லெண்ணெய் - வகையறாக்களிடம் ஒதுங்கி இருப்பதே நல்லது..
பதிலளிநீக்குஒன்றரை வருடமாக எனது உணவில் நல்லெண்ணெய் கிடையாது..
இட்லிக்குக் கூட - வற மிளகாய் சேர்க்காத கறிவேப்பிலைப் பொடி தான்..
ஓ! எள் நல்லெண்ணை, தோல் ஒவ்வாமை, அரிப்புக்குக் கூடாதா!!? ஆச்சரியமாக இருக்கிறதே. நல் எண்ணைன்னு சொல்வாங்களே.
நீக்குஅண்ணா, வற மிளகாய்க்குப் பதில், மிளகு ஒத்துக் கொள்ளும் என்றால் கறிவேப்பிலைப் பொடியில் மிளகு கொஞ்சம் சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம். அது நல்ல சுவையாக இருக்கும்.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
நல்ல எண்ணெய் தான் ..
பதிலளிநீக்குஇருப்பினும் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை..
ஓஹோ. நல்ல எண்ணெய் நல்லெண்ணெய் கூட ஒத்துக்கவில்லையே. ஆச்சரியமாக இருக்கு துரை அண்ணா. ஒரு வேளை தயாரிப்பின் காரணமாக இருக்குமோ?
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகட்டெள்ளு (தமிழில்) சட்னி பொடி முதல் முதலில் கேள்வி படுகிறேன் கீதா. செய்முறை படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமுதல் படம் கறுப்பு கவினி அரிசி போல எனக்கு தெரிந்தது.
பிறகு தான் நீங்கள் சொன்னதும் இது வேறு எள் போன்று இருக்கும் என்று.
Weighing Scale மருமகளும் வைத்து இருக்கிறார். அவர் செய்யும் OPOS சமையலுக்கு அளவு மிகவும் அவசியம் .
கறுப்பு எள்ளில் செய்து பார்க்கிறேன். கடையில் கேட்டுப்பார்க்க வேண்டும் கட்டெள்ளுவை. (Niger seeds)
வீடியோவை நன்கு எடுத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கீதா..
Weighing Scale மருமகளும் வைத்து இருக்கிறார். அவர் செய்யும் OPOS சமையலுக்கு அளவு மிகவும் அவசியம் .//
நீக்குஓ OPOS சமையல் செய்யறாங்களா..சூப்பர். ஆமாம் அதற்கு அளவு மிக முக்கிய,.
கடையில் கிடைக்கும் அக்கா.
கோமதிக்கா எனக்கும் இது நைஜர் விதைகள் என்றுதான் முதலில் தெரியும். இதன் நைஜர் எண்ணை வெளிநாட்டில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக விலை கூடுதலாக இருக்கும்
அதன் பின் இதன் ருசி தெரிந்ததும் அட எள்ளு போலத்தான் என்று எள்ளிற்குப் பதில் இதைப் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவே இருக்கு. ஆனால் வறுக்கும் போதுகவனமாக இருக்க வேண்டும் கொஞ்சம் கூடி விட்டாலும் லேசாகக் கசக்கும். மற்றபடி நல்ல மணம்.
செய்து பாருங்க கோமதிக்கா. நம் கறுப்பு எள்ளிலும் செய்யலாம்.
வீடியோவை நன்கு எடுத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கீதா..//
மிக்க நன்றி கோமதிக்கா. வீடியோ எடுப்பது கடினமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மகனுக்காக எடுத்து வைப்பதுண்டு.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
நீங்கள் சொல்லும் விதத்திற்கே செய்து பார்க்கலாம்... அருமை...
பதிலளிநீக்குசெய்து பார்க்கலாம் டிடி.
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
அருமை.இந்த எள்ளை நாங்கள் உபயோகித்ததே இல்லை.
பதிலளிநீக்கு