வெள்ளி, 1 செப்டம்பர், 2023

வெள்ளி வீடியோ மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன்

 தாமரைப் பூவில் அமர்ந்தவளே என்னும் பி சுசீலா குரலில் அமைந்துள்ள பாடல் இன்று தனிப்பாடலாய்...

தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)

சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)


======================================================================================================

1954 ல் sabrina​ என்றொரு அமெரிக்க படம் வெளியானது.  அதைத்தழுவி 1961  தமிழில் மணப்பந்தல் என்று படம் வந்தது.  V N ரெட்டி இயக்கத்தில் TR ராமண்ணா தயாரிப்பு.  எஸ் எஸ் ஆர், அசோகன், சரோஜா தேவி, ஈ வி சரோஜா ​ஆகியோர் நடித்த திரைப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.  பாடல்கள் கண்ணதாசன்.

பி  சுசீலா குரலில் இன்றைய பாடல்.  தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை ஆசையுடன் சொல்லும் ஒரு இளம்பெண்ணின் உணர்வாய் பாடல்.


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா

உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே

வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
ஓஹோஓ.ஓ..ஓஹோஓ.ஓ.ஓஹோஓ.ஓ.ஓஒ..

வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே

பூ முடித்தேன் பூ முடித்தேன்
கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்
ஆசையினாலே உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே

மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்

ஆ மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்த உடன்
உனக்கு கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா

உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே

46 கருத்துகள்:

  1. முதல் பாடல் பலமுறை கேட்டு ரசித்ததே...

    இரண்டாவது பாடலின் திரைப்படம் மணப்பந்தலா ? பெயரை திருத்தம் செய்யுங்கள் ஜி.

    //அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன்//

    கணவர் நெஞ்சுவலி வந்து செத்துவிட மாட்டாரா ? கவிஞர் ஏன் இப்படி எழுதினார் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்பு என்பது மனதைக் குறிப்பது. அதில் எப்போதும் நிலைபெற்றிருப்பேன் என்கிறாள்.

      கவிஞர்களின் பிதற்றலுக்கெல்லாம் அர்த்தம் காண ஆரம்பித்தால் எங்குபோய் முடியுமோ..

      நீக்கு
    2. ஆஹா.. தவறை கவனிக்கவில்லை. நன்றி ஜி. மாற்றி விட்டேன்.


      நெஞ்சு வலி.. ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
  2. அதைத் தழுவி 1961-ல் தமிழில் ------------- என்று படம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தத்தில் இரண்டாவது பாடலில் தேறிய வரிகள்:

      உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்.
      அதை ஒருவரிடமும் சொல்லிவிடாதே
      எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா
      அது இயற்கை தந்த பந்தம்
      வந்து நின்றார் வாசலின் மேலே
      கண்டு கொண்டேன் கண்களினாலே
      பூ முடித்தேன் கூந்தலின் மேலே
      பொட்டு வைத்தேன்
      மணவறையில் கணவராக (!) மாலை சூட்டுவேன்
      மார்பினிலே காலமெலாம் நடனமாடுவேன்
      கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
      அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்குக் கூறுவேன்.

      அங்கங்கே ஓஹோஹோ ஆஹாஹா போட்டு விட்டால் அவ்வளவு தானய்யா சினிமா பாட்டு!

      நீக்கு
    2. நானும் இப்படி பல பாடல்களுக்கு யோசித்ததுண்டு.

      நீக்கு
  3. //1954 ல் sabrina​ என்றொரு அமெரிக்க படம் வெளியானது. அதைத்தழுவி 1961 தமிழில் மனபபிண்டஹ்ல் என்று படம் வந்தது. ரெட்டி இயக்கத்தில் TR ராமண்ணா தயாரிப்பு. எஸ் எஸ் ஆர், அசோகன், சரோஜா தேவி, ஈ வி சரோஜா ​ஆகியோர் அடித்த திரைபபடத்துக்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடல்கள் கண்ணதாசன்.

    பி சுசீலா குரலில் இன்றைய பாடல்.தனக்கு திருமணம் நிச்சயமாகி இருபப்தை ஆசையுடன் சொல்லும் ஒரு இளம்பெண்ணின் உணர்வாய் பாடல்.

    'அழகி'ய தமிழ்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. முதல் பாடல் பி சுசீலாவின் கலெக்‌ஷனில் முதலாக இடம்பெறும் பாடல். மிக மிக ரசித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  5. மனபபிண்டஹ்ல் அடித்த திரைபபடத்துக்கு

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அருமையான பாடல். இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இரண்டு நல்ல பாடலுக்கான தேர்வு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்.
    மணபந்தல் படத்தில் பாட்டுக்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
    1."பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்"
    2."ஒரே ராகம், ஒரே தாளம், ஒரே பாடல்"
    3."உடலுக்கு உயிர் காவல்" பாடல்
    அடிக்கடி சிலோன் வானொலியில் கேட்ட பாடல்கள்.
    இரண்டு நல்ல பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பதிவின் முதற்பாடல் சிறப்பானது...
    இனிய பாடலால்
    தளத்திற்குப் பெருமை..

    தாமரைத் திருவின் அருளால் அனைவரும் நலம் பெறட்டும்..

    பதிலளிநீக்கு
  12. தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைச் சொல்லும் இளம் பெண்ணின் உணர்வுப் பூக்களாக பாடல்..

    இளம் பெண்ணின் உணர்வுப் பூக்களாக பாடல் என்றாலும் அதை நயமாக வெளிப்படுத்தியிருப்பவர் கவியரசர்..

    இன்றைக்கு ரசனை கடைத் தரத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால் இப்படியான மெல்லிய உணர்வுகளுடன் கூடிய பாடல்கள் இனிமேல் வருவதற்கில்லை..

    பதிலளிநீக்கு

  13. கசாநாயகியே (கதாநாயகி உபயம் கில்லர்ஜி!..) மேலாடை இன்றி ஆடுகின்ற காலம் இது!..

    கலி புருஷன் வாழ்க!..

    கலி புருசனா..
    அவன் யாரு லே!..

    பதிலளிநீக்கு
  14. //அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன்//

    இன்றைய திரைப்பாடலில் தேவகோட்டையாருக்கு வந்த சந்தேகமும் நெல்லை அவர்களது விளக்கமும்

    ஆகா.. அருமை!..

    பதிலளிநீக்கு
  15. தோடியில் கம்பீரமான பாடல் முதல் பாடல் எவ்வளவு கேட்டு ரசித்த பாடல். முதலில் வரும் தனிப்பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் கோயில்ல தினமும் போடும் இசைத்தட்டில் கேட்டவை ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் ஆனால் அதிகம் இல்லை. அருமையான பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. சுசீலாவின் குரலில் சாதாரண வரிகள்கூட மேன்மை பெறும். இளம்பெண்ணின் கற்பனை வெளியைக் கவிஞன் அவதானிக்க ... நமக்குக் கிடைத்தது நல்ல பாட்டு.

    பதிலளிநீக்கு
  18. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.

    முதலாவது பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ம்ம்ம்ம் சுரதாவுக்கு ஏதோ பிரச்னை. கலப்பையில் குரில், நெடிலே வராது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!அடிக்கடி சுரதாவில் ஏன் பிரச்னை வருதுனு தெரியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷிஃப்ட் அமுக்கி டைப்பி பாருங்கள். அழகியை அப்படிதான்

      நீக்கு
  20. இரண்டு பாடலுமே அருமை எனினும் முதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாம் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்ததே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!