கடந்த ஜூன் மாதத்திலேயே ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்கிற என் பயணம் உறுதி செய்யப் பட்டிருந்தது.
அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த ஹேமா தம்பதியருக்கு சஷ்டியப்தபூர்த்தி. உங்களுக்கு அவரை நினைவிருக்கலாம். நமது தளத்தில் அவரது ஓரிரண்டு ரெசிப்பிகள் 'ஆரோக்கிய சமையல் ஹேமா' என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது.'வராமலிருக்கக் கூடாது, கட்டாயம் வரவேண்டும்' என்று ஜூனிலேயே அன்புக் கட்டளை இட்டிருந்தார் ஹேமா. குடும்ப நண்பர்.
ஆனாலும் வயதான தாயாரை விட்டு பாஸால் வரமுடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. எனவே நான் மட்டுமா, பாஸும் கூட வருவாரா என்கிற குழப்பம் கடைசி நிமிடம் வரை இருந்து, கடைசியில் இருவருமே கிளம்பினோம்.
எப்படியோ அம்மாவை சமாதானப்படுத்தி இருந்தார் பாஸ்.
நீண்ட நாட்களாய் திருவானைக்கா கோவிலை மறுபடி காணவேண்டும் என்கிற ஆவல் எனக்கும் இருந்தது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னென்ன இடங்கள் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். கீதா அக்காவுக்கு ஜூனிலேயே எங்கள் ஆகஸ்ட் வருகையை சொல்லி விட்டேன். ஆகஸ்ட் ஐந்தாம் நாள் அவரிடமிருந்து மெசேஜ்... "எங்களை சந்தியுங்கள்.. இது என் கட்டளை" என்று! கட்டளையே சாசனம் என்பதால் 'தவறமாட்டேன்' என்று பதில் அனுப்பினேன்!
எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு கோவிலைப் பார்க்கலாம் என்று நாங்கள் நினைக்க, அதே நாளில் எங்கள் குடும்பத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். (குறைந்தபட்சம்) 108 சுமங்கலி(களை வைத்து) பூஜை. தவிர்க்க முடியாத தவிப்பு. பாஸுக்கு என் மாமாவின் மருமகளிடமிருந்து அன்புக் கட்டளை, கலந்து கொண்டே ஆகவேண்டுமென்று. இருவரும் பயங்கர நெருக்கமான தோழிகள்!
மறுபடியும் சில சமிக்ஞைகள் காட்டிய மாமியாரை சிரமப்பட்டு சமாதானப்படுத்தி இரண்டு நாள் என் மகன்கள் பாதுகாப்பில் விட்டு விட்டு கிளம்பினோம். அவர்கள்மேல் ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி இருந்தார் மாமியார்.
எல்லோரும் வரும்வரை காத்திராமல் சுமங்கலிகள் வரவர, காலை 7 மணி தொடக்கம் 'பேட்ச் பேட்சா'ய் விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த செய்தி எனக்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. சீக்கிரம் கிளம்பி விடலாம்! எனவே நாங்கள் (நான்) சுமார் ஏழரைக்குள் அங்கு சென்று வரிசையில் அமர்ந்து, பூஜை முடித்து, சாப்பிட்டு, ஒன்பதரைக்குள் கிளம்பி விட திட்டமிட்டேன். அதே நாளில் பாஸின் ஒன்று விட்ட அக்கா தனது மகளுக்கு சீமந்தம் வேறு ஏற்பாடு செய்து அழைத்தார். அவர்களின் சஷ்டியப்தபூர்த்திக்கே நாங்கள் செல்லவிலை என்கிற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. என்ன செய்ய, அப்போது கொரோனா டைம்! இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த சுமங்கலி பூஜையும், அந்த சீமந்தமும் ஒரே ஏரியாவில், ஒரே தெருவில் நடக்க இருந்ததது ஒரு ஆச்சர்யம், சங்கடம்! நாங்கள் சீமந்தத்தையும் லேசாக எட்டிப்பார்த்து அட்டென்ட் செய்து விடலாம் என்று மனப்பால் குடித்திருந்தோம்.
அவ்வளவு சொல்லிப் பார்த்தும் பாஸ் சுமங்கலிப் பிரார்த்தனையை ஸ்கிப் செய்வதாயில்லை. எனவே ஏழு மணிக்கு கிளம்பி அஸ்தினாபுரம்! ஒன்பதுக்குள் கிளம்பி விடலாம் என்கிற எண்ணம் ஈடேறவில்லை. ஒரு குடும்பப் பாடல் (25 நிமிஷம் வரும் - கால அளவும் சொல்லி இருந்தார்கள்) பாடி, சாப்பாடு என்று சொன்னார்கள். சாப்பாடு வரவில்லை சகியே பாடல் முடித்து சஹஸ்ரநாமம் தொடங்கி விட்டார்கள் சகியே லலிதா சஹஸ்ரநாமம் தொடங்கி விட்டார்கள். பாதியில் எழுந்திருக்கவும் முடியாத நிலை. இன்னும் தாம்பூலம் கொடுக்கவில்லை!
சாப்பாடு பந்தி ரெடி என்றதும் ஓடியவர்களுக்கு இன்னுமொரு செய்தி காத்திருந்தது .முதலில் சுவாசினிகளுக்கு மட்டும்தானாம். அதாவது முதல் பந்தி, விழாவில் சிறப்பிக்கப்பட்ட சுமங்கலிகளுக்கு. இது கேட்டரர் தன் பங்குக்கு செய்த புதுமை! இதனால் பாதிகப்பட்டது நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன்!
சரி, என்று பாஸ் சாப்பிட்ட உடன் நான் சாப்பாட்டை தியாகம் செய்து கிளம்பினோம். பாஸின் அக்கா வீட்டுக்கும் எட்டிப் பார்த்து சீமந்தப் பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்பது பாஸின் விருப்பம். மணி அப்போதே பதினொன்றேகால். எனவே வேண்டாம் என்று நான் சொன்னதில் அடுத்த பத்து கிலோமீட்டருக்கு பாஸ் மௌனவிரதம். "இதோட பின்விளைவுகள் எல்லாம் உங்களுக்குத் தெரியாது.. உங்களைப் போல எல்லாம் என்னால் இருக்க முடியாது" என்கிற வார்த்தையுடன் மௌனமானார்.
அவர் அந்தப் பக்கம் ஜன்னலுக்காய் வேடிக்கை பார்க்க, நான் இந்தப் பக்கம் ஜன்னலில் வேடிக்கை பார்க்க, ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தோம்.
====================================================================================================
துரை செல்வராஜூ அண்ணா ரசிக்கக் கூடும்...
===========================================================================================================
இணையத்தில் படித்தது..பார்த்தது..
ஆடும் மயிலும் பாடும் குயிலும்!
****************************** *********
இசைப் பேரரசியாகத் திகழ்ந்தவரான எம். எஸ். சுப்புலட்சுமி என்றதும் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டோடும் கூந்தலில் செருகிய மலரோடும் புடவையில் காட்சிதரும் அவரின் குடும்பப் பாங்கான தோற்றமும், கேட்போரை வசீகரிக்கும் காந்தக் குரலுமே அனைவரின் நினைவுக்கும் வரும்.
கருநாடக இசைப்பாடகியாக மேடைகளில் மிளிர்வதற்கு முந்தைய காலகட்டத்தில் திரைப்படங்களிலும் சொந்தக்குரலில் பாடி நடித்தவர் அவர் என்கின்ற விவரம் இப்போது எழுபதைத் தாண்டிய அகவையிலிருப்போர்க்குத் தெரிந்திருக்கும். எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா போன்ற அந்நாளைய படங்களில் நடித்தவர். மீரா படத்தில் அவர் பாடிய ’காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இப்போது வானலைகளில் மிதந்து வந்தாலும் நம்மைக் கிறங்க வைப்பது!
அந்தக் கானக் குயிலைத்தான் இந்தப் புகைப்படத்தின் வலப்பக்கத்தில் (on the right-side to the viewers) கையில் சிகரெட்டோடு நாம் காண்கிறோம். அவருக்கு அருகில் நிற்கும் இளம்பெண்ணும் சாதாரணமானவர் அல்லர். அவர்தாம், பரதநாட்டியத்தில் தமக்கென தனிமுத்திரை பதித்தவரும் அற்புதமான நாட்டிய ஆசிரியராகத் திகழ்ந்தவருமான தஞ்சை பாலசரஸ்வதி. இவர் சிறந்த பாடகியும் கூட! இவரின் முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் இசைக் கலைஞர்களாகப் பல தலைமுறை இருந்தவர்கள்.
பழமையில் ஊறிய கலைக்குடும்பத்தைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் மேனாட்டு இரவு உடையில் (Western-style sleepwear/pajamas) வாயில் சிகரெட்டோடு, காண்போருக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் புகைப்படத்தில் காட்சியளிக்கின்றார்கள்.
இது மெய்யாலுமே எடுக்கப்பட்ட புகைப்படந்தானா என்கிறீர்களா?
ஆம் நண்பர்களே! இந்தப் புகைப்படம், திரு. டக்லஸ் எம் நைட் ஜூனியர் (Douglas M Knight Jr. – இவர் பாலசரஸ்வதியின் மகளும் நாட்டியமணியுமான இலட்சுமியின் கணவர்) எழுதிய 'பாலசரஸ்வதி: கலையும் வாழ்க்கையும்' (Balasaraswati: Her Art and Life) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது.
இளவயதுத் தோழியராக இருந்த பாலசரஸ்வதியும் சுப்புலட்சுமியும் 1937இல் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் மேற்கத்திய உடையில், ஒருவர் தம் கையிலும் மற்றொருவர் தம் வாயிலும், சிகரெட்டைப்போல் காகிதத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு மிகவும் இரகசியமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இது எனும் விவரம் தெரியவருகின்றது.
படமெடுத்தவர் யார்? எந்த ஸ்டுடியோ? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இந்த அரிய புகைப்படம் இவ்விரு பெண்களின், வழக்கத்துக்கு மாறுபட்ட, வேறொரு முகத்தை நமக்கு அறியத்தரும் கலை ஓவியம் எனலாம்.
PC: Madras Local History Group
-மேகலா ராமமூர்த்தி
======================================================================================================
கீழே உள்ள கவிதை - ஆம், கவிதைதான்.. நம்புங்கள்... - எழுதக் காரணம் ஒரு செய்தி. 58 ஆண்டுகளுக்கு முன் எருமையைத் திருடியவரை இப்போது கைது செய்திருக்கிறது போலீஸ்... நம் நாட்டில்தான்! செய்தியைப் படிக்க இங்கே க்ளிக்குங்கள்... செய்திக்காக நான் ஒரு கவிதை முயற்சி செய்திருந்தேன் என்று Face Book ல் பகிர்ந்தபோது நிறைய பேருக்கு தெரியாததால் போதிய ஆதரவு இல்லாமல் போனது!
ஐம்பத்தெட்டு ஆண்டுகள் எல்லாம் ஆகவில்லை
அதற்கும் குறைவாகத்தான்..
அருமையாய் வைத்திருந்தேன்
ஒரு பென்சில் பாக்ஸ்
இரண்டிரண்டு பென்சில் பேனாக்களுடன்
எரேசர் ஷார்ப்பனருமுண்டு
அதையும் கண்டுபிடித்துத் தாருங்கள் ப்ளீஸ்..
பலமுறை சொல்லியும் கேட்கவில்லை
என் டீச்சர்
பக்கத்து பெஞ்ச் பத்மாதான் திருடினாள் என்று
========================================================================================================
இது சம்சார பாரமா குடும்ப பாரமா? இணையத்தில் ரசித்தது..
அடுத்தாத்து அம்புஜத்திற்கு போட்டியா பக்கத்து பென்ச் பத்மா.
பதிலளிநீக்குவிநாயகருக்கு அடையாளமே ஆனை முகம் தான். மனித முகத்துடன் இருக்கும் இவரை விநாயகர் என்று எப்படி அடையாளம் காண்பது?
நேரு எட்வீனாவுக்கு பற்றவைக்கும் போட்டோக்கள் வலம் வந்ததற்கு ஈடாக இந்த MS அம்மா போட்டோ போட்டிருக்கிறார்களோ? இப்படி செய்வதால்
என்ன பயன் என்று புரியவில்லை.
அக்ராஹாரத்தில் கழுதை என்ற சினிமாவை நினைவூட்டியது கழுதை துணுக்கு.
எப்படியோ தலைப்பு கேட்சியாக இருக்க வேண்டும்!!
நீக்குஅதனால்தான் விநாயகர் என்று பக்கத்தில் எழுதி வைத்து விடுகிறார்கள்!!
இதுவும் நடந்தது.. அவர் இளவயது செயல், ஆசை அது அவ்வளவுதானே... இப்படியும் இருந்தது என்று தெரிந்து கொள்கிறோம். ஒரு சுவாரஸ்யம். அவ்வளவுதான்!!
பஞ்சகல்யாணி படத்தில் அருமையான எஸ் பி பி பாடல் இருக்கிறது! "பூமாதேவி போலே வாழும்..."
//இப்படிச் செய்வதால் என்ன பயன்?/ - என்ன ஓய்.. ரசனை இல்லாத மனுசனா இருக்கீரே... எல்லாம் ஒரு ஆசைதான்
நீக்குஸ்ரீராம் அண்ட் நெல்லை - ஜெ கே அண்ணா சொல்லிருப்பது // நேரு எட்வீனாவுக்கு பற்றவைக்கும் போட்டோக்கள் வலம் வந்ததற்கு ஈடாக இந்த MS அம்மா போட்டோ போட்டிருக்கிறார்களோ?// இதன் தொடர்ச்சியாக என்று நினைக்கிறேன்...
நீக்குகீதா
இள வயதில் கூலிங் க்ளாஸ் போட்டு போட்டோ எடுக்காத பேருண்டா? அவரவர் மனதிற்கேற்ப அவரவர் ஆசை!
நீக்குநானெல்லாம் கூலிங் க்ளாஸ் போட்டதே கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான்.
நீக்குஆண் குழந்தைகள் பதினாறு பதினேழு வயதில் கூலிங் க்ளாஸ் போட்டு படம் எடுத்து வைத்திருப்பார்கள்!
நீக்குவலது பக்கத்தில் கையில் சிகரெட்டுடன் எம் எஸ் எஸ் இல்லை. வாயில்.
பதிலளிநீக்குஆமாம், ஆமாம்!
நீக்குஇரண்டு மூன்று வேலைகளை கம்பைன் பண்ணி பிரயாணத் திட்டத்தை வைக்க முடியாது, செல்பவர்கள் நேரத்தைக் கடைபிடித்து, தலையை மட்டும் காட்டிவிட்டு வந்தாலொழிய. பாஸோ ரிலேஷன்ஷிப் பேணுபவர். எனக்கே தெரிகிறது டக் என்று அவரால் ஒரு இடத்தை விட்டுக் கிளம்பமுடியாது என்று.
பதிலளிநீக்குஇரு துருவங்கள்! வேறு வழி இல்லை!
நீக்குஜோக்கைகளைப் படித்தால் உங்களுக்கே சிரிப்பு வரலைனா எங்களின் பார்வைக்குக் கொண்டுவரலாமா?
பதிலளிநீக்குஎனக்கு இதைப் படித்தாலும் சிரிப்பு வரவில்லை... என்ன செய்ய! சிலர் ரசிக்கக் கூடும். அல்லது இப்படி எல்லாம் போட்டு அதைதான் ஜோக் என்று அப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள், நாமும் சிரித்துக் கொண்டிருந்தோம் என்று உணரவேண்டும்! ஆனால் போன வாரம் எனக்கு சிரிப்பு வராத உ ராஜாஜி ஜோக்கை அப்பாதுரை உள்ளிட்ட சிலர் ரசித்தார்கள்.
நீக்குஇரயில் போன்ற பொது வாகனத்தில் பயணிக்காமல், வாடகை டாக்சி எடுத்துக்கொண்டு செல்வது எவ்வளவு சௌகரியம், எவ்வளவு எக்ஸ்பென்சிவ்?
பதிலளிநீக்குஅது உங்கள் புரிதல், சௌகர்யத்தைப் பொறுத்தது. நினைத்த நேரம், நினைத்த இடம் செல்லலாம். வாடகை டாக்சியில் அல்ல, எங்கள் காரில் டிரைவர் அமர்த்திக் கொண்டு சென்றோம்.
நீக்குரயில் பயணம் பிடித்தாலும் இப்போல்லாம் ஏற முடிவதில்லை. ஆகவே எங்கே போனாலும் கார் தான். வாடகைக் கார் தான். சௌகரியமாகவே இருக்கு. ரயிலில் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.
நீக்குஏனோ எனக்கு ரயில் பயணம் அவ்வளவாக பிடித்ததில்லை!
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.
நீக்குமனித முகத்துடன் விநாயகர். வியப்பு
பதிலளிநீக்குஆம். அந்த மூர்த்தத்தை விநாயகர் என்றே ஒப்புக்கொள்ள முடியவில்லை.
நீக்குஇரு முறை அந்தக் கோயிலுக்குப் போயிருக்கோம்.
நீக்குஅடடே ஆச்சர்யக்குறி.
நீக்குஅவர்கள்மேல் ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி இருந்தார் மாமியார்.//
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா.....ஆனா பசங்க சமத்துப் பசங்க.
கீதா
எப்படி? 'நல்லவன்.. எனக்கு நானே நல்லவன்...' மாதிரியா?!!
நீக்குஆ! ஒரே நாளில் இத்தனை விழாக்களா?!!!! ரொம்பவே பொறுமை ஸ்ரீராம் உங்களுக்கு! ஒரு இடத்துல வலது கால் இன்னொரு இடத்துல இடது கால்.னு ஓடிருக்கீங்க!
பதிலளிநீக்கு//"இதோட பின்விளைவுகள் எல்லாம் உங்களுக்குத் தெரியாது.. உங்களைப் போல எல்லாம் என்னால் இருக்க முடியாது"//
ஹாஹாஹாஹாஹா அதுவும் பாயின்ட்! ஸ்ரீராம். ஆம்பிள்ளைகள் தப்பிச்சுடுவாங்க. இப்படியானதுல பெண்கள்தான் அதிகம் மாட்டிக் கொள்வது.
10 கிமீக்கு அப்புறம் சரியாகிடுச்சுல்ல அம்புட்டுத்தான். பாஸால் பேசாம எல்லாம் இருக்க முடியாது...!!!
சென்டிமென்ட்ஸ் அதிகம் தாக்குவது பெண்களை என்பது என் கணிப்பு. சரியா தவறா தெரியலை நான் கண்டவகையில். நான் அதிலிருந்து தள்ளி!
கீதா
பத்து கிலோமீட்டருக்கு அப்புறம் வேறொரு பிரச்னை!!
நீக்குஎம் எஸ், பால சரஸ்வதி புகைப்படம் பார்த்திருக்கிறேன் இந்தச் செய்தியுடன்....எதில் வாட்சப்பில்? இருக்கும்....
பதிலளிநீக்குஅட! என்று ரசித்த புகைப்படம்.
பாருங்க அப்பவே பால சரஸ்வதி அவங்களோட மாப்பிள்ளை ஆங்கிலேயர்!!!
கீதா
ஆம். முன்னர் ஒரு சுற்று வந்தது என்று நினைவு.
நீக்குஇந்தப் படம் பத்து வருஷங்களாகச் சுத்துதுனு நினைக்கிறேன்.
நீக்குமனித உருவ விநாயகர் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் இந்தக் கோயில் இடம் என்று. என்னவோ விநாயகரை ஆனை முகத்தோனே என்று விளித்துப் பாடிவிட்டு இது வித்தியாசமாக இருக்கு. சிவன் ஆதி பைரவர்/தட்சிணாமுர்த்தி போல இருக்கிறார் இத்திருஉருவம்!
பதிலளிநீக்குகீதா
ஆம். புது கெட்டப்!! ஆனால் நான் இப்போது இந்தப் படம் பார்த்தபோதுதான் எனக்கு தெரியும்.
நீக்குஇம்புட்டு வருஷம் கழிச்சு எருமை மாடு திருடியவரை பிடிச்ச ஃபோட்டோ பார்த்து சிரித்துவிட்டேன். நீங்க எழுதியிருக்கற கவிதை சாராம்சம் மாதிரி பாப்பா கேஸு!!!!! ஹிஹிஹிஹி கேஸை சொன்னேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம், கவிதை சாராம்சம் ரொம்ப ரசித்தேன். ஸ்ரீராமுக்குத்தான் எப்படி எல்லாம் கற்பனை விரிகிறது!!!
பக்கத்து பெஞ்ச் பத்மாவை வலை வீசி தேடுகிறேன்! ஒரு வேளை பத்திரமா வைச்சிருந்தா?!!! ஆ ஆ ஆஹா அருமையான கதை கிடைக்குதே! மனசுக்குள் ஓடுது...இப்ப பாருங்க இதை ஒரு டாக்குமென்ட் எடுத்து போட்டு வைச்சிட்டு அவ்வளவுதான்...வேலைய கவனிக்க போய்டுவேன்......மனதில் ஓடுவதை அப்படியே எழுத்தாக இந்தக் கம்ப்யூட்டர் தந்தா ஸ்ரீராமுக்கு கே வா போ க வுக்கு எம்புட்டு கொடுத்திருக்கலாம்! ஹூம்.
கீதா
உங்கள் பதில் வரியிலிருந்துதான் கதை பிறக்கிறது.
நீக்குபத்மா அந்த டப்பாவை லவட்டியதற்கு காரணம் லவ்ஸ் என்று நினைக்க வைத்து, கடைசியில் வேறொரு உணர்ச்சிகரமான காரணம் சொல்லி முடித்து விடலாம்.
இணையத்தில் ரசித்த படம் - விட்டா இரு சக்கர வாகனத்துலயே சமையல் செஞ்சு குடித்தனமும் செஞ்சுருவாங்க போல!!!
பதிலளிநீக்குஆனா எவ்வளவு ஆபத்து இல்லையா? நல்ல காலம் பின்னால பாய் மெத்தைன்னு பிள்ளைய அதுல படுக்க வைக்கல. இன்னொன்னு இருந்திருந்ததுனா அது அதுல உக்காந்து அப்பா கழுத்துல கால் போட்டு உக்கார வைச்சிருப்பாங்க!
கீதா
தோளைப் பிடிச்சிட்டு காலை அவருக்கு இடையில் தொங்கப் போட்டும் கூட உட்கார வைச்சிருப்பாங்களா இருக்கும்
நீக்குகீதா
நல்லவேளை பின்னால் மெத்தையில் குழந்தையை தூங்க வைத்து கட்டிப்போடவில்லை என்று நானும் எழுத நினைத்திருந்தேன்!
நீக்குஇதுவும் ஏற்கெனவே வந்ததே!
நீக்குஆட்டோ மீட்டர் முன்ன எல்லாம் கிடு கிடுன்னு ஏறும் போது எனக்கும் அந்த பயம் ஏற்பட்டதுண்டு.
பதிலளிநீக்குகீதா
ஆம். எனக்கும் அல்லது எல்லோருக்கும்! பாஸ்ட் டிராக் டாக்சியில் ஒருமுறை சண்டையே போட்டேன்!
நீக்குபொக்கிஷம் ஜோக்ஸ் ஓகே....
பதிலளிநீக்குகீதா
ம்ம்... ஏதோ...
நீக்குதங்களது ஸ்ரீரங்கத்து அனுபவம் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குமனித முகத்துடன் விநாயகர் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
அந்த கணவன் - மனைவி - குழந்தை பாய வியாபாரம் படம் மனதில் பல எண்ணங்களை கொடுத்தது.
அவர்களது குடும்ப நிலை ரசிக்க முடியவில்லை
ரசிக்க முடியாது. வருந்த வைக்கும்! நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு//சாப்பாடு பந்தி ரெடி என்றதும் ஓடியவர்களுக்கு இன்னுமொரு செய்தி காத்திருந்தது .முதலில் சுவாசினிகளுக்கு மட்டும்தானாம். //
பதிலளிநீக்குஅவ்வவளவு நேரம் பொறுமையாக அமர்ந்து இருந்தும் உங்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லையா?
"//இதோட பின்விளைவுகள் எல்லாம் உங்களுக்குத் தெரியாது.. உங்களைப் போல எல்லாம் என்னால் இருக்க முடியாது" என்கிற வார்த்தையுடன் மௌனமானார். //
இப்படித்தான் எனக்கும் சாருக்கும் ஏற்படும் நானும் அடிக்கடி மெளனமாக இருந்து இருக்கிறேன்.
எல்லா உறவுகளை திருப்தி படுத்த முடியாது என்று சொல்லி விடுவார்கள்.
நாங்கள் சரஸ்வதி அம்மன் ஆலயம் சென்ற போது செதலபதி முக்தீஸ்வரர் பிள்ளையாரை தரிசனம் செய்து இருக்கிறோம்.
கோவிலின் வெளிபக்கம் இருப்பார் அவரை தரிசனம் செய்து விட்டு கோவிலுக்குள் போகிற மாதிரி அமைப்பு.
சரஸ்வதி அம்மனை வழி பட போகும் குழந்தைகள் இவரையும் வழிபட்டால் நல்ல நினைவாற்றல் வரும் என்று சொல்வார்கள்.
புரட்டாசி விஜயதசமி சமயம் நல்ல கூட்டம் இருக்கும்.
பாஸ் சாப்பிடும்போதே நான் பரிமாறுபவர்கள் பாத்திரங்கள் வைத்திருக்கும் இடத்தில நின்று போளி, வடை, புளியோதரை ஒரு வாய், பாயசம் சாப்பிட்டேன்!
நீக்குநீங்களும் மௌனம்தானா? ஆம், எல்லா உறவுகளையும் என்பதை விட பொதுவாகவே எல்லோரையும் எல்லா நேரமும் திருப்திப்படுத்த முடியாதே என்றே சொல்லி விடலாம்!
அடடே.. நீங்கள் இந்த விநாயகரை தரிசனம் செய்திருக்கிறீர்களா?
அனுபவம் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஉங்கள் கவிதை கீதா சொன்னது போல பத்மா பத்திர படுத்தி வைத்தாலும் வைத்து இருப்பார் உங்கள் பென்சிலை. சிலருக்கு சிறு வயதில் சேகரித்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்து இருக்கும் பழக்கம் உண்டு.
பதிலளிநீக்குநம் பொருட்களை பாத்திரப்பப்டுத்தி வைக்கலாம். அடுத்தவர் பொருட்களை?!!
நீக்குஅம்பாள் பிள்ளையாரை உருவாக்கிய சில பொழுதிலேயே அவருக்கும் ஈசனுக்கும் தர்க்கம் ஏற்பட்டு தலை தனியாகப் போய் விடுகின்றது..
பதிலளிநீக்குஇது வட நாட்டவரின் கதை..
நமக்கு கணபதியின் தோற்றம் பற்றி ஞானசம்பந்தப் பெருமான் சொல்லியிருக்கின்றார்.. அதுவே பிரமாணம்..
திருநாவுக்கரசர் ஸ்வாமிகளும் சொல்லியிருக்கின்றார்..
அப்படியா?
நீக்குதிலதர்ப்பணபுரியில் இருப்பவர் சண்டிகேசர் என்ற கருத்தும் உள்ளது..
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்கு/// துரை செல்வராஜூ அண்ணா ரசிக்கக் கூடும்...
பதிலளிநீக்கு///
அட !.. இதில் நானும் இருக்கின்றேனா...
இது கவனியாமல் எனது கருத்து சொல்லியிருக்கின்றேன்..
ஸ்தில அல்ல!..
தில - எள்..
70 களில் சில் சோதிடர்கள் நவக்கிரக கோயில்கள் பட்டியல் இட்டபோது இந்த ஊர் இப்படி வகைப்படுத்தப்பட்டது..
அப்படியா?
நீக்குபிள்ளயாருக்கு நீரிழிவு என்று ஒரு காணொளி சுற்றி வருகின்றது..
பதிலளிநீக்குஅதனால் தான் அவருக்கு நாவல பழம் கொடுக்கின்றோமாம்..
இனிமேல் ஔவையாருக்கும் நீரிழிவு என்று கிளப்பி விடுவார்கள்..
அதனால் தான் அந்த பையன் நாவல் பழத்தை உலுக்கிப் போட்டிருக்கின்றான்..
பாவம் தமிழ்ப்பாட்டி..
தீண்டாமை.. அதனால்தான் கையில் கொடுக்காமல், பக்கத்தில் வராமல் மரத்திலிருந்து உலுக்கி போட்டிருக்கிறான். அவற்றை எல்லாம் மாற்றியது நாங்கள்தான்...
நீக்குஇதுவும் வேணும்..
நீக்குஇன்னமும் வேணும்..
தமிழ்ப் பாட்டி என்று தெரிந்தும்!..
இதை சும்மா விடக் கூடாது..
தமிழைக் காப்பாற்றியதும் நாங்கள்தான்..
நீக்கு/இரண்டிரண்டு பென்சில் பேனாக்களுடன் எரேசர் ஷார்ப்பனருமுண்டு
பதிலளிநீக்குஅதையும் கண்டுபிடித்துத் தாருங்கள் ப்ளீஸ்..//
ஹலோ போலீஸ் அப்படியே அந்த பக்கத்து பென்ச் பத்மாவையும் சேர்த்து கண்டு பிடிச்சி கொடுத்திடுங்க :)
இப்போ கண்டு பிடிச்சிக் கொடுத்து !?...
நீக்குபத்மாவைப் பிடித்துக் கொண்டு வரும்போது தப்பி ஓட முயற்சித்தார். என்கவுண்டரில் போட்டுத்தள்ளி விட்டார்களாம்!
நீக்குhahahha :))
நீக்குபெண் பாவம் பொல்லாதது..
நீக்குகடமை முக்கியம் பாஸ்..
நீக்குமனித முகத்துடன் ஆதி வினாயகரா? மனித முக நந்தி தேவர் என நினைத்தேன்..!
பதிலளிநீக்குஇல்லையாம். பிள்ளையார்தானாம்.
நீக்குஉ ராஜாஜியின் ஜோக்குகளில் வழக்கமான குறும்பு இல்லையே... Out of form-ல் இருந்தபோது எழுதியதோ, என்னவோ..
பதிலளிநீக்குஆம். எல்லா ஜோக்ஸிலும் சிக்ஸர் அடிக்க முடியுமா?
நீக்குஎங்க வீட்டில் காலிஃப்ளவர் கறியை ஏதோ பெரிசா புது மாதிரியா இருக்கும்னு நினைச்சு ஏமாந்ததை மட்டும் சொல்லிடாதீங்க. மானம் போயிடும். (இருக்கா என்ன?) இஃகி,இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குநீங்களே சொல்லிட்டீங்க.... இழுத்துடுவோம்!
நீக்குஒரே நாளில் ஒன்றுக்கு மேலான முக்கிய விசேஷங்கள்.. சிரமம்தான்.
பதிலளிநீக்குமயிலும் குயிலும் க.வெ படம் பார்த்திருக்கிறேன்.
பழைய திருட்டுக்குக் கைதான செய்தி வாசித்தேன். பென்சில் பாக்ஸுக்காக கொடுத்திருக்கும் பிராது கவனிக்கப்படுமா :)?
ஆதி விநாயகர் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
துணுக்குகள் அருமை.
குடும்பப் பாரம் கல்கத்தாவில் எடுத்த எனது இந்தப் படத்தை நினைவூட்டியது:
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/29952683917/
தொகுப்பு நன்று.