வெள்ளி, 15 செப்டம்பர், 2023

வெள்ளி வீடியோ : பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா... பூமாலை நான் சூடும் நாள் வந்ததா

 நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்... 

கேட்டுக்கொண்டு வரும் காலை பக்திமாலையில் அடுத்தடுத்த பாடல்களை இவை ஒலிக்கும்போது மனதில் ஒரு அமைதியும், நிம்மதியும் பிறக்கும்.


காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா

மாட்சிஎல்லாம் வாழ்வில்
தேர்ந்திட கனிவுடன்
மாட்சி எல்லாம் வாழ்வில்
தேர்ந்திட கனிவுடன்
மன்றிலே நின்றாடும் அம்பலவானருடன்
மன்றிலே நின்றாடும் அம்பலவானருடன்
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா

அங்கமொரு பாகமாய் அமைந்த என் தாயே
அங்கமொரு பாகமாய் அமைந்த என் தாயே
ஆனந்த மாமலையின் தேமதுரக்கனியே
ஆனந்த மாமலையின் தேமதுரக்கனியே
மங்கள குங்குமத்தில்
மகிழ்ந்திடும் அம்மையே
மங்கள குங்குமத்தில்
மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயில் உருவே தேவியே
மரகத மயில் உருவே தேவியே தவத்திரு
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா


======================================================================================================

1974 ல் வெளிவந்த திரைப்படம் எங்கம்மா சபதம்.  இது தெலுங்கு, கன்னடம், என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மறுபடி தமிழில் 1994 ல் வனஜா கிரிஜா என்று எடுக்கப்பட்டதாம்.

முத்துராமன், சிவகுமார், ஜெயசித்ரா நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு இசை விஜயபாஸ்கர்.   இன்று பகிரும் பாடல் கண்ணதாசன் எழுதியது.

S P பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் பாடியுள்ள இந்தப் பாடல் வெகு பிரபலம்.

சாதாரணமாக பெரும்பாலும் பாடலில் பல்லவி ஆரம்பிப்பதும், சரணங்களிலும் இருவருக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு வரும்படி பாடல்களை அமைப்பார்கள்.  முதல் சரணத்தை ஆண் ஆரம்பித்து பெண் தொடர்வது போலவும், இரண்டாவது சரணத்தை பெண் ஆரம்பித்து ஆண் தொடர்வார்.  அவ்வப்போது சில வித்தியாசங்கள் காட்டுவதுண்டு.   இந்தப் பாடலில் இரண்டு சரணமும் பெண்ணாலேயே தொடங்கப்படுகிறது.  ஆணால் தொடரப்படுகிறது.  சரணத்தை முடிக்கையில் இரண்டாவது சரணத்தில் ஒரு வரி அதிகம் சேர்கிறது!

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ

எனது மயக்கம் தெளிந்ததோ
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு

வா மஞ்சமே பார் நெஞ்சமே

புதிய உலகம் திறந்தது

பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

23 கருத்துகள்:

  1. இன்றைய இரு பாடல்களும் அருமை.

    முதல் பாடல் படிக்கும்போதே பி சுசீலாவின் குரல் காதில் ஒலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மங்கம்மா சபதம் என்றால் எங்கம்மா சபதம். எப்படியெல்லாம் சினிமா தலைப்புகள் உருவாகின்றன என்பது கூட சுவாரஸ்யமான பொழுது போக்காய் இருக்கும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபற்றி முன்னர் நான் ஒரு பதிவு எழுதியிருந்த நினைவு...

      நீக்கு
  3. அது என்ன அர்த்த ராத்திரி சொன்ன தேதி?
    இடையே சேதி, தேதியான குழப்பம் வேறே. அல்லது சேதி, தேதி இரண்டுமேவா?

    பதிலளிநீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!..

    இன்றைய தேவை இது தான்!..

    சிறப்பான பாடல்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. அன்பு மேகமே
    பல முறை கேட்டு கேட்டு ரசித்தப் பாடல்

    பதிலளிநீக்கு

  7. இரண்டாவது பாடலில் அந்த காலத்து சீரணி அரங்கம்..

    ஏன் இடித்துத் தள்ளி விட்டார்கள் என்று தெரிய வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே இந்த மாதிரிப் பாடல்களைப் படம் பிடித்ததால் இருக்குமோ?..

      நீக்கு
    2. நிலவு தூங்கும் நேரம் என்றெல்லாம் இந்த இடத்தில் தாலாட்டினார்களே!..

      நீக்கு
    3. என்ன காரணமோ.. என்ன துவேஷமோ...

      நீக்கு
    4. உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்..

      நீக்கு
  8. இரண்டும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    நெல்லை அருள்மணி இப்படி எல்லாம் பாடலாசிரியர்கள் இருந்தும் திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லையே... காரணம் என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடையும் இடையும் நடையும் தொடையும் - என்றெல்லாம் அவர்களது பேனாவுக்கு எழுத வருவதில்லை..

      நீக்கு
  9. காட்சிதந்து என்னை.. இந்தப் பாடலைப் பாடியது சுசீலா என்று இப்போதுதான் அறிகிறேன். குன்னக்குடியின் இதமான இசை.

    இரண்டாவது பாடலின் வரிகளைப் படிக்கையில் இதை நான் கேட்டதில்லை என நினைத்தேன். கேட்டவுடன் ஆமா.. இதை அடிக்கடி அப்போது கேட்டிருக்கோமே என்றது மனம்.

    இரண்டுமே இனிமை.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் இனிமையானது.
    முதல் பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!