கில்லர்ஜி :
திருமண நிகழ்வுகளில் இப்போது ஃபோட்டோ ஸூட் என்ற பெயரில் மாப்பிள்ளை பெண்ணை மிகவும் கேவலமாக உடையுடுத்தி, நீச்சல் உடையிலும், (லிப்லாக்) முத்தம் கொடுப்பது போன்றும், ஆதாம் ஏவாள் போன்று வாழையிலையில் மறைத்துக்கொண்டு நிற்பது இப்படி புகைப்படம் எடுத்து அதை இணையத்திலும் வெளியிடுகின்றார்களே... இதன் முடிவு எதில் போய் நிற்கும் ? பெரியவர்களும் இதை ஆர்ப்பரித்து ஊக்குவிப்பது சரியா ?
# முற்றிலும் தவறு. நம் திருமணக் கொண்டாட்டங்கள் அநாவசிய ஆடம்பரங்களால் சீரழிந்து வருகின்றன. அதில் ஆபாசமும் கலந்தால் விபரீதம்தான்.
& கீழே உள்ளது கூட போட்டோ shootதான் ! ஆனா கிராமிய மணத்துடன், அந்தக் கால பொங்கல் வாழ்த்து அட்டை போல இருக்கே!
= = = = = =
எங்கள் கேள்விகள்:
கீழே சில சினிமா பெயர்கள் உள்ளன. ஆனால் நேரடியாக சொல்லப்படவில்லை. க்ளூ மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்டுள்ள க்ளூவில் உள்ள முதல் எழுத்து சினிமா பெயரின் முதல் எழுத்து; க்ளூவிண் கடைசி எழுத்து = சினிமா பெயரின் கடைசி எழுத்து.
க்ளூவில் உள்ள வார்த்தைகள், சினிமா பெயரில் உள்ள வார்த்தைகள். கவனிக்க : எழுத்துகள் அல்ல; வார்த்தைகளின் எண்ணிக்கை மட்டுமே.
உதாரணமாக :
க்ளூ : "நெசமா பாசாகவில்லை"
சினிமா பெயர் : 'நெ' என்று ஆரம்பித்து 'லை' யில் முடியும் இரண்டு வார்த்தை சினிமா.
" நெஞ்சம் மறப்பதில்லை"
பார்த்தீர்களா ! ரொம்ப ஈசி!!
இப்போ இதோ சில க்ளூ.:
1) மாலை வாங்க மதியம் போறாளே ! ( மா .. ளே ; 4 வார்த்தைகள்)
2) காலம்பர நித்திரை
3) நீயும் சாப்பிடு கொத்சு
4) நெல்லையில் தூங்காதே
5) மக்கு பையனை மடக்கு
சரியான பதில்கள் எழுதுவோர், கருத்துரையில் இதே போன்று க்ளூ கொடுத்து கேள்வி கேட்கலாம்.
யாருக்குமே பதில் சொல்ல இயலாத க்ளூ கொடுப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.
= = = = = = =
KGG பக்கம் :
நஞ்சநாடு பள்ளிக்கூடம் பற்றி போனவாரம் சொன்னேன்.
அந்தப் பள்ளியில் அந்த 1962-63 காலகட்டத்திலேயே ஆசிரியர்கள் யாரும் மாணவர்களை அடித்தது இல்லை. யாரும் எந்தக் கடுமையான தண்டனையையும் மாணவர்களுக்கு கொடுத்தது இல்லை. பெஞ்சு மேலே ஏறி நிற்கும் சாதாரண தண்டனைகள் கூட கிடையாது.
என்னுடைய ஏழாம் வகுப்பு ஆசிரியர் பெயர் நஞ்சுண்டன். அட்டிபாயில் என்னும் ஊரிலிருந்து வருவார். மிகவும் உயரமான ஆசிரியர் என்பதால், அவருக்கு பையன்கள் 'நெட்டையன்' என்று பெயர் வைத்திருந்தனர். நான் வசித்த எமாரால்ட் காம்ப் பகுதியிலிருந்து பார்த்தால், எமரால்ட் டாமுக்கு அருகில் இருக்கும் அட்டிபாயில் மலை நன்றாகத் தெரியும். சில விடலைப் பையன்கள், அட்டிபாயில் பக்கம் பார்த்து ' அட்டிபாயில் நெட்டையா!' என்று விடுமுறை நாட்களில் சத்தம் இடுவது உண்டு. அந்த ஆசிரியர் ஆங்கிலம் மற்றும் சமூக பாடம் போதித்தார்.
நன்றாக பாடம் நடத்திய ஆசிரியர். ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்ல டிக்ஷனரி போல நேரடி அர்த்தம் சொல்லமாட்டார். சில வாக்கியங்களில் அந்த வார்த்தையை பயன்படுத்தி உதாரணங்கள் மூலம் சொல்லி புரியவைப்பார். உதாரணமாக 'disappoointed ' என்னும் வார்த்தைக்கு பல வகையிலும் உதாரணங்கள் சொன்னார். " I see emerald bus coming. I rush up from school towards bus stop from school ( Our school was in valley and the bus route will be visible from school ) I shout 'stop, stop' and run. But the driver did not see me coming up and he drives away. Then, I am disappointed. " இப்போ சொல்லுங்க disappointed என்பதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்பார். மாணவர்கள் சரியான பதில் சொல்லும்வரை உதாரணங்கள் தொடரும்.
நிலக்கரி பற்றிய பாடம்.
வகுப்புக்கு வந்தவுடன், " நிலக்கரி என்பது செடியில் காய்க்கின்ற ஒரு காய் " என்பார். எல்லோரும் சிரிப்பார்கள். " இல்லையா? எது சரி ? நீங்கள் சொல்லுங்கள் " என்பார். மாணவர்கள், ' நிலக்கரி மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பொருள்" என்று சொல்வார்கள். 'அதை அப்படியே உங்கள் நோட்டில் எழுதிக்கொள்ளுங்கள்' என்பார். இவ்வாறு ஒவ்வொரு முக்கிய விவரங்களையும் மாணவர்கள் வாயாலேயே சொல்லவைப்பார். அப்படிக் கற்றுக்கொண்ட விவரங்கள் எல்லாம் இன்னும் என்னுடைய நினைவில் இருப்பது அந்த ஆசிரியரின் திறமையால்தான்.
நிலக்கரியின் பயன்கள் பற்றிச் சொல்லும்பொழுது - நீராவி இஞ்ஜின், ரயில் பற்றி சொன்னார். அப்பொழுது வகுப்பு மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார். " 'ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா?' ஒவ்வொருவராக பதில் சொன்னோம். வகுப்பில் இருந்த மொத்த மாணவர்களில் ரயிலை பார்த்திராத மாணவர்கள் மூன்றில் ஒரு பங்கு இருந்தனர். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ரயிலில் பயணம் செய்தவர்கள் வகுப்பில் என்னையும் சேர்த்து நான்கைந்து பேர்கள்தான்!
= = = = = = =
அப்பாதுரை பக்கம் :
விட்டகுறை: 2001 ஒரு விண்வெளிப் பயணம்.
இருபத்திரண்டாம் வயதில் என் வாழ்க்கையில் முதல் தடவையாக பல காரியங்கள் செய்தேன். அவற்றில் ஒன்று குப்ரிக் இயக்கிய 2001 a space odyssey பார்த்தது. (உதிரி: சென்னை ப்லூ டைமண்ட் அல்லது எமரெல்ட் தியேட்டர் அல்லது கஸினொ தியேட்டராவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் சபையர் வளாகத்துக்கு போனால் ஏதோ மேலைக்குப் போன பரவசம் கிட்டும். இடைவேளையில் காணக்க்கிடைத்த காபி மெஷின், வெஜிடபில் puff வைத்திருந்த grille... கெச்சப் புட்டி கூட அதிசயமாக இருக்கும்.) இடை வருடங்களில் இதே படத்தை குப்ரிக் திரைப்பட விழாவில் பார்த்தேன். சமீபத்தில் என் மகனின் இருபத்திரண்டாவது பிறந்த நாளில் அவனுடனும் என் மகளுடனும் மீண்டும் படத்தைப் பார்த்தேன்.
நான் முதலில் பார்த்த போது கதை எனக்கு அதிகம் புரியவில்லை. பிள்ளைகள் பரவாயில்லை. சில இடங்களை மட்டும் விளக்க வேண்டியிருந்தது. பிறகு ஒரு விளையாட்டு விளையாடலாமென்றேன். படக்காட்சிகளில் வரும் பொருட்களில் எத்தனை இன்றைய அன்றாட நடைமுறையில் புழங்குகின்றன அல்லது இன்னமும் புழக்கத்துக்கு வரவில்லை என்பதைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு (1950களின் கதை, 1967ல் படமானது நினைவிருக்கட்டும்). பில் கேட்ஸ், ஆண்டி க்ரோவ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் தங்களுடைய ஐடியாக்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். நாமும் பார்த்தால் நமக்கும் ஏதாவது ஐடியா கிடைக்கும் எனறேன். மகன் சரியென்றான். மகள் இடியெனச் சிரித்தாள். இளவலைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு சட்டென்று காணாமல் போனாள்.
சிறிதும் பெரிதுமாக இருபத்தொன்பது பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன என்று கணக்கிட்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்கதென்று நான் நினைத்தவை:
1. பன்னாட்டு விண்வெளி நிலையம் (ISS): நாமெல்லாம் விஜயவாடா ஜங்ஷன் தாண்டுவது போல சர்வ சாதாரணமாகப் படத்தில் வந்து போகும் விண்வெளி சந்திப்பு தான், இன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான அனுபவ முன்னோடி. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல் பட்டாலும் இனிமேல் தான் ISSக்கு முக்கியத்துவமே என்கிறார்கள் பேஸோஸ், மஸ்க், ப்ரேன்ஸன் போன்ற தனியார் விண்போக்குவரத்து நிறுவன முதலாளிகள். ISS போல நூற்றுக்கணக்கில் நிறுவி அவற்றை விண்பயண ஓய்வகங்களாகவும், வணிகக் கிடங்குகளாகவும், பிற கிரகங்களுக்குச் செல்ல எரிவாயு நிறப்புமிடங்களாகவும் பயனுக்குக் கொண்டுவரத் திட்டம் போட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை நம்பினால் முன்னேற முடியாது என்று தனியார் நிறுவனங்கள் நினைக்கின்றன. அமெரிக்காவில் இது முடியும். பிற நாடுகளில் (ஜெர்மனி உள்ளிட்ட) விண்வெளி என்பது அரசாங்க உடைமையாகவே இன்னும் இருக்கிறது.
2. ஆப்பில் நிறுவனப் பொருட்கள்: முதன் முதலாக வந்த மேகின்டாஷ் கணினி, அதைத் தொடர்ந்து வந்த மனித-எந்திர இணைமுக (HMI) ஆக்கங்கள், ஐபாட், ஐபோன் எல்லாமே இந்தப் படத்தின் பல காட்சிகளில் தென்படுகின்றன. ஐபேட் அப்பட்டமாக இந்தப் படத்தில் பயன்படும் ஒரு கருவியின் பிரதியெனலாம். ஒரு காட்சியில் ஐபோன் போன்ற கருவியில் சாப்பாடு ஆர்டர் செய்கிறார்கள் பணிக்குழுவினர். இன்னொரு காட்சியில் தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசு விண்கலனிலிருந்து ஆர்டர் செய்கிறார் ஒரு பயணி. அமெஸான், இன்ஸ்டமார்ட், ஸ்விகி, டோர்டேஷ் நினைவுக்கு வருகிறதா?
3. இண்டர்னெட் மற்றும் wifi: இன்றைய இணைய முன்னோடி படமாகும் நாளிலேயே இருந்தது என்றாலும் படத்தில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்புவதும், சர்வர் போல மையமான கருவியும், எதிரெதிரே அமர்ந்து கணிணி போல் கருவியில் படம் அனுப்புவதும், பூமியில் ஆறு வயது மகளுடன் விடியோவில் பேசுவதும்... இன்றைய text,sms, விடியோ கால் போன்றவற்றை நினைவூட்டுகின்றன. ஹேல் புட்டுகிட்டதும் 'சர்வர் டௌன் - தகவல் தொடர்பு இல்லை' என்று குழுத்தலைவன் டேவிடுக்கு செய்தி வருவது சுவாரசியம்.
4. Ergonomy என்பதற்கு பணிச்சூழலியல் என்கிறது கூக்ல். அதாவது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யப் பயன்படும் மேசை நாற்காலி வகையறாவை உடல் நலத்துக்கேற்ப வடிவமைக்கும் கலை. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இதான். பல ergonomic furniture நிறுவனங்கள் இன்றைக்கும் இந்தப் படக்காட்சிகளை மாடல் செய்கின்றன. ஐடி நிறுவனங்களின் திறந்த அலுவலக அமைப்பு இந்தப் படக்காட்சியிலிருந்து சுட்டது தான்.(nasa முதலில் சுட்டார்கள். அங்கிருந்து அனைவரும்). படத்தில் வரும் மேசை நாற்காலிகளின் வடிவங்களும் வண்ணங்களும்.. ஆகா!
5. கெடா உணவு: படத்தில் பால் காய்கறி முட்டை மீன் இறைச்சி என்று அத்தனையும் பலவித சிறிய cartridge tray வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த விஷயத்தில் நாம் மிக முன்னேறியிருக்கிறோம். Bio degradable food pouch, edible food pouch என்று சாப்பாட்டுத் தட்டையே சாப்பிடும் அளவுக்கு வந்துவிட்டோம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சாப்பாடு எல்லாருக்கும் freeze dried micro உருண்டைகளில் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஓட்டல் சென்று சூடா ரெண்டு இட்லி வடை சாம்பார் கொண்டா என்று கேட்டால் சிறிய குப்பியில் சில்லென்று மூன்று கோலிகள் அடைத்துத் தருவார்கள். குப்பி தான் சாம்பார். Keurig மாதிரி மிஷினில் decompose and reconstruct செய்து சாப்பிடலாம். இன்றைய ஸ்விகி டோர்டேஷ் விலைகளை கொடுத்துக் கட்டுப்படியாகுமா?
6. மருத்துவ சுய சோதனை: படத்தில் விண்பயணிகள் அனைவருக்கும் கணிணி தான் மருத்துவர். ரேகை கண்பார்வை நாவின் எச்சில் என்று பலவற்றை தட்டு போன்ற ஒரு கருவி வழியாகக் கணினி சோதனை செய்கிறது. (வியாழனுக்கு பயணமாச்சே? கூடவே டாக்டர் தமன்னா எம்பிபிஎஸையா கூட்டிட்டு வரமுடியும்?). இங்கே நாம் அதிகமாகவே முன்னேறி இருக்கிறோம். மஸ்க் கம்பெனி ஒரு சிறிய நுண்கலனை நம் ரத்த நாளங்களுக்குள் செலுத்தி ஆட்டோமேட்டிக் இருதய சிகிச்சை செய்ய முதல்கட்ட FDA அனுமதி கிடைத்துவிட்டது என்கிறது. பல் தேய்க்கும் செயலில் இருந்து (எச்சிலில் DNA) ஸ்மார்ட் டூத்பிரஷ் வழியாக நாடி பார்த்து ராசி பலன் போல அன்றைய உடல்நலம் மற்றும் வரக்கூடிய வைரஸ் ஜுரம் வியாதி பற்றி எச்சரிக்கும் நுட்பத்தை மோடரோலா நிறுவனம் சந்தைக்குக் கொண்டு வரத் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இன்சூரன்சு அடாவடி முதலைகள் தடுக்கின்றன. சாதாரண டாக்டர் படிப்பு அத்தனை எடுபடுமா தெரியவில்லை.
7. உலகப் பொதுப்பணம்: விண்கலனில் வேலை பார்க்கும் ஊழியர் இன்னொரு கிரகத்தில் இருக்கும் குடும்பத்துக்குப் "மின்பணம்" அனுப்ப வேண்டும் என்பார் ஒரு காட்சியில். டிஜிடல் பண விஷயத்தில் நிறைய முன்னேறினாலும் உலகப் பொதுப்பண விஷயத்தில் நாம் இன்னும் குவாகுவா. பிட்காயின் வந்தவேகம் என்ன.. அடக்கிவிட்டார்கள் உலகச் செல்வந்தர்கள். (கமல்ஹாசன் சொன்ன கருஞ்சங்கிலித் தொழில் நுட்பம்.. ஹிஹி.. அடக்கஷ்டமே.. அது black chain இல்லை விக்ரமு..) அடுத்த ஐம்பது வருடங்களுக்குள் blockchain போன்ற நுட்ப அடிப்படையில் decentralized உலகப் பொதுப்பணம் நிச்சய சாத்தியம். உலக நாடுகளின் நாணயக் காப்பீட்டினால் ஓங்கி நிற்கும் தங்கத்தின் மதிப்பு சட்டென்று விட்டுப் போகும் அபாயமும் சாத்தியம்.
8. சேவைக்கணினி: படத்தில் பல காட்சிகளில் கணினி தோழனாகவோ தோழியாகவோ மந்திரியாகவோ குருவாகவோ நடந்து கொள்கிறது. வீட்டு வேலை ரோபோக்கள் கணிசமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன, என்றாலும் கோவிட் நம்மை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளது. மருத்துவர்கள் நர்ஸுகளை விடுங்கள்.. ஒபன்ஹைமர் படத்துக்கு ரோபோ துணைகள் அறிமுகம் செய்த வேகத்தில் புக் ஆகினவாம். சில வருடங்களில் ஸ்டெல்லா, ராகினி, தமன்னா, தனபாக்கியம், லட்சுமணன், புருஷ், சுந்தரமூர்த்தி.. என்று (மனித) உணர்வுக்கணினிகள் இனி நமக்கு 'இனிய கம்பேனி' தரும்.
இன்னும் புழக்கத்துக்கு வராதவை:
1. அறிவுப் பரிணாமம்: படத்தில் மனிதன் இருபதாம் நூற்றாண்டு இறுதியில் தன்னறிவு முதிர்ச்சி பெறுவதாக வருகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் எங்கே இருக்கிறோம்? ம்ம்ம்.. ஸ்டாலின் தான் வாராரு.. விடியல் தான் தாராரு.. விஜய் படத்துக்கு பாலாபிஷேகம்..
2. ஒரே சக்தி அல்லது கடவுள்: கடவுள் என்ற சொல் படத்தில் வரவே இல்லை. ஆனால் ஆதிசக்தி (first power) என்ற பொதுவான அண்ட சக்தி மேல் நம்பிக்கை படத்தில் எல்லாருக்குமே இருப்பதாகத் தெரிகிறது. அந்த நம்பிக்கையே மனிதம் முதிர்ந்து தன்னறிவு பெற ஏதுவாகிறது. இன்னமும் நாம் யாதும் ஊரே, எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம், கற்றதினாலாய பயனென்.. என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். (ஆர்வீஎஸ் என்று ஒரு பதிவர்.. டச் விட்டுப்போனது.. இந்த ஜல்லியடிப்பது அவரிடம் கற்ற சொல்). தன்னறிவுப் பாதையில் போக "சக்தி" நம்பிக்கை அவசியம். அத்தனை வளர்ச்சியிலும் கடைசியில் மனித ஆன்மா நிறைவு பெற இணை அல்லது இன்னொரு பரிமாணத்தில் சக்தியுரு துணையாக வருவது போல் படத்தை முடித்திருக்கிறார்கள்.
வால்:
நிறைவு பெற்ற மனிதம் கடவுளாவது போல் படம் முடிகிறது. இது வெறும் கற்பனை தான் என்பது புரிந்தாலும்.. அத்தனை பிற கற்பனைகள் நடைமுறைக்கு வந்தாலும்... தொடர்பில்லாமல் நாம் இன்னும் தொடக்கத்திலேயே இருப்பதாக நினைக்கிறேன். "நானே சிவம்" என்று ஆதி சங்கரர் நிர்வாண ஷடகம் என்ற தன் சிறு நூலில் சொல்லியிருப்பது, படம் முடியும் பொழுது ஏனோ நினைவுக்கு வந்தது.
வௌவால்:
மனிதம் பக்குவமடையவும் தன்னைத்தேடவும் உதவி புரிந்த இரண்டாம் ஆதிசக்தி செவ்வகத்தை மனிதர்கள் சந்திரனின் தென்முனையில் கண்டதாகப் படத்தில் வருகிறது.
= = = =
இந்த மாதிரி க்ளூ கொடுத்து நெஞ்சத்தைக் கிள்ளாதே
பதிலளிநீக்கு:)))
நீக்குஇங்கும் முதல் + கடை எழுத்துக்களா...!?
பதிலளிநீக்குஆம்.
நீக்குமக்கு பையனை மடக்குனு சினிமா இல்லையா?
பதிலளிநீக்குநாம எடுத்தாத்தான் உண்டு !
நீக்கு4) நெஞ்சத்தை கிள்ளாதே
பதிலளிநீக்கு5) மனம் ஒரு குரங்கு
சூப்பர்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
2) காசி யாத்திரை
பதிலளிநீக்குகூத்தாடிகள்னு கோப்ப்படுகிற கில்லர்ஜி, டக்கு டக்குனு விடைகள் எழுதறாரே. திரையின் தாக்கம் அப்படிப்பட்டது.
நீக்குதமிழருக்கு...
நீக்குவிடயங்கள் அறிந்து கொள்வது தவறில்லை. அது நம்மை ஆளாமல் பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
அரசியல்வாதிகள் பிடிக்காது என்பதற்காக அரசியல் தெரிந்து கொள்ளாமல் வாழ்வதா ?
நியாயமான கேள்வி; நியாயமான பதில்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண!
நீக்கு/// ஆதாம் ஏவாள் போன்று வாழையிலையில் மறைத்துக்கொண்டு நிற்பது.. ///
பதிலளிநீக்குஇது நமக்கு ஒத்துவராத விஷயம்..
கூடிய சீக்கிரம் கலாச்சாரக் காவலர்கள் வாழை இலைக்கும் விடை கொடுத்து விடுவார்கள்..
ஜாலி தான்!..
:))
நீக்கு..அத்தனை வளர்ச்சியிலும் கடைசியில் மனித ஆன்மா நிறைவு பெற இணை அல்லது இன்னொரு பரிமாணத்தில் சக்தியுரு துணையாக வருவது போல் படத்தை முடித்திருக்கிறார்கள். //
பதிலளிநீக்குஐயோ பாவம்!
வளர்க்கத் தெரிந்த அசடுக்கு
முடிக்கத் தெரியவில்லை.
தொலைநோக்கி.. தொலைநோக்கி..
பாழாய்ப்போன மூளை ..
உறைந்துபோய்விட்டது
ஊரைச் சுத்தி வந்தாலும் உக்காறது திண்ணை தான் என்பார் என் தாத்தா.
நீக்கு:)))
நீக்குஇனிவரும் காலங்களில் கல்யாண சுவரொட்டிகள் எப்படி இருக்குமோ..
பதிலளிநீக்குஇப்பொழுதே மாணவர்கள் கள்ளத் தந்தை ஆகின்றார்கள் என்று பற்பல செய்திகள்..
பரிதாப நிலை.
நீக்குஅப்பாதுரை ஐயா அவர்களது ஆக்கத்தைப் படித்து விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன்..
பதிலளிநீக்குநன்றி..
நீக்குஃபோட்டோ ஷூட் - மனதில் கடுகடு எனத் தோன்றினாலும், அனுமதிக்கவேண்டியிருக்கு கில்லர்ஜி. போட்டோ எடுக்கும் இடத்தைக் கடப்பதற்கே நமக்குச் சங்கடமாக இருக்கிறது. இலைமறைவு காய்மறைவு என்று எனக்கு முந்தைய தலைமுறை சொல்வார்கள். கேன்டுட் போட்டோ என்றெல்லாம் பலவித வார்த்தைகள் சொல்றாங்க. நம்ம கல்யாண ஆல்பமே நாம் மூன்று தடவைகளுக்கு மேல் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மாதிரி போட்டோக்களை, எடுத்துக்கொள்பவர்களே எத்தனை முறைகள் பார்ப்பார்கள்? மத்தவர்களிடமும் காட்ட முடியாது.
பதிலளிநீக்குஇந்தச் சங்கடங்களையெல்லாம், ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்குள் அடக்கிவிடுகிறோம்.
:((
நீக்குகேஜிஜி பக்கம்.... அந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ளவை சாதாரணம். மற்றவர்களுக்கு அந்த அனுபவம் கிட்டியிராது. எனக்கு பட்டுப் பூச்சி வளர்ப்பு, பட்டு நூல் எடுப்பது வரை, நான் பார்த்திருப்பதால் சாதாரணம். ஆனால் முந்திரி தயாரிப்பு தெரியாது. கடலூர் கார்ர்களுக்கு முந்திரி தயாரிக்கும் முழு cycleம் சாதாரண விஷயம். நான் பாளையங்கோட்டையில் படித்தபோது, தினமும் பள்ளிக்கு ஓரிருவர் (அல்லது பலர்), நெல்லை வரை இரயிலில் வந்து, பஸ்ஸில் பள்ளிக்கு வருவாங்க. அது ஆச்சர்யம். ஒரு தலை ராகத்தில் காண்பிப்பதுபோல மாயூரம் பகுதியைச் சேர்ந்தவங்களுக்கு அது சாதாரணம்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு..டச் விட்டுப்போனது.. இந்த ஜல்லியடிப்பது அவரிடம் கற்ற சொல்). //
பதிலளிநீக்குசுஜாதா அடிக்கடி பயன்படுத்தினாரே.. மறந்துட்டீங்களே !
ஆர்விஎஸ் சுஜாதா பிரியர். சுஜாதா கிட்டேயிருந்து அவருக்கு ஒட்டிக்கிச்சோ என்னவோ?
நீக்குஜல்லியடிப்பது, பேந்தா வேலை - எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.
நீக்குபேந்தா வேலையா?
நீக்குஆம். பேந்தா என்பது கோலி விளையாட்டு வகைகளில் ஒன்று.
நீக்குஅவனுங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக திருநீறு தரித்துக் கொள்ளாமல் வாழ்வதா ?..
பதிலளிநீக்குஅவனுங்களையே ஒதுக்கி வைத்து விட்டால் சரியாகி விடுகின்றது!..
கல்யாண ஃபோட்டோ ஷூட் நீங்கள் காண்பித்திருப்பதுபோல் பாரம்பர்ய மணத்தோடு வெளிப்பட்டால், ரசிக்கலாம்.. பாராட்டலாம்தான்.
பதிலளிநீக்குஆனால் கில்லர்ஜி சொல்வதுபோன்ற திருமண ஃபோட்டோ ஷூட்கள் பெரும்பாலும் ட்ரெண்டாகி வருது. நாகரீகம் நாசமாப்போக எனச் சொல்லவைக்குதே...
ஆம். என்ன செய்வது!
நீக்குஇது வரை இந்தியாவில் இது போல் photo shoot பார்க்கவில்லை. ஆனால் அமெரிக்க திருமண விழாக்களில் எதை பார்க்கவில்லை என்று யோசிக்கிறேன்...
பதிலளிநீக்குநான் திருவஞ்சிக்களம் என்னும் கிராமத்திலேயே (கேரளா) பார்த்திருக்கிறேன். எனக்கென்னவோ இந்த ஃபோட்டோ ஷூட்கள் பிடிப்பதில்லை.
நீக்குஃபோட்டோ ஷூட்கள் இல்லாத கல்யாணங்களே இல்லையே!
நீக்குரயில் பயணம் சுகமானது. சிறுவயதில் பாம்பன் பாலத்தில் நூறு முறைகள் பயணித்து இருப்பேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகில்லர்ஜியின் கேள்வி சரியேம்...
பதிலளிநீக்குஎனக்கும் ஒப்புதல்/உடன்பாடு சுத்தமாகக் கிடையாது. நேரம், பணம், டாம்பீகம் ஆடம்பரம் அது எப்படியான ஷூட் ஆக இருந்தாலும். கல்யாணத்திற்கு ஆடம்பரம் தேவை இல்லை என்பது அது என் தனிப்பட்ட கருத்து. நம் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றாலும் அடுத்த தலைமுறை அப்படிச் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது, அந்தக் குடும்பத்து பெரியவர்கள் ஒன்றும் சொல்ல இயலாது அல்லது அவங்களும் ஓகே என்று சொல்பவகளாக இருக்கலாம் என்பதுதான் யதார்த்தம். நல்ல காலம் நம் வீட்டில் அப்படி இல்லை. அடுத்த தலைமுறைக்கும் ஆர்வமும் இல்லை.
அடுத்த வீட்டில் அவங்க அப்படிச் செய்தால் அது அவங்க குடும்ப விஷயம். அவங்க வீட்டுப் பெரியவங்க பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அதைக் கேள்வி கேட்பது சரியா என்று தெரியவில்லை. சரியில்லை என்பதே என் கருத்து.
நானும் ஒரு திருமணம் குறித்து எழுதிய போது சொல்லியிருந்தேன் அதுவும் சில வருடங்கள் முன்பு. ஆனால் அது அவங்க பாடு. ஆனால் அதைப் பார்த்து மற்றொரு ஜோடி/குடும்பமும், நட்புகளுக்கு இடையில் அதே போன்று அல்லது அவர்களை விட இன்னும் கூடுதலாகச் செய்து காட்ட வேண்டும், ஸ்டேட்டஸ் என்ற மனப்பான்மை, போட்டி மனப்பான்மை - Mass psychology உருவாகி வருகிறது என்பதும் உண்மைதான்.
அவங்களுக்குப் பணம் இருக்கு நேரம் இருக்கு, விருப்பம் இருக்கு, பெரியவங்களும் பச்சைக் கொடி காட்டறாங்கன்னா நாம் என்ன செய்ய முடியும்? அவங்க குடும்பம்... செய்து கொள்ளட்டும். இதில் நாம் சொல்வதற்கு, கோபம் கொள்வதற்கு ஒன்றுமில்லை.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌ அண்ணா, நீங்க கொடுத்திருக்கற க்ளூக்களே படண்களின் பெயர்கள் போல இருக்கிறதே!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு4. நெஞ்சத்தைக் கிள்ளாதே
2. காசி யாத்திரை
எனக்கு சி கே - ரொம்பக் குறைவு. தெரிஞ்சாலும் டக்குனு மனசில் வராது. பணிகள் வேற ...ஸோ ஓடுறேன்
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதிரைப்பட அறீவே இல்லை. அதான் எதுவும் சொல்லலை.
நீக்குஎங்கள் ஊருக்கு ரயில் பாதை ரயில் எல்லாம் வரும் முன் (வந்த பிறகும் கூட) சொல்லப்படும் ஒரு வாசகம் உங்க ஊர்ல ரயிலைப் பார்க்காமலேயே எம் ஏ, இஞ்சினீர்!!! படிச்சவங்க நிறைய போலன்னு
பதிலளிநீக்குஉங்கள் ஆசிரியர் அருமையான ஆசிரியர் கௌ அண்ணா, சும்மா போர்ட்ல எழுதிப் போட்டு, பொருள் சொல்லிட்டு எழுதிக்கோங்கன்னு சொல்லி கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு இடையில் யோசிக்க வைத்த ஆசிரியர்! சூப்பர்.
கீதா
எனக்கு மிகவும் பிடித்த பயணம் ரயில் பயணம்.
நீக்குகீதா
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஎங்கள் ஆசிரியரெல்லாம் அப்படித்தான் பாடங்கள் எடுத்திருக்கார்.
நீக்குஅப்பாதுரை ஜி - ஒப்பீடு....நல்லாருக்கு. ஒரு வேளை அதைப் பார்த்துதான் இதெல்லாம் வந்திருக்குமோ?!
பதிலளிநீக்குஇன்னும் புழக்கத்துக்கு வராதவை: இதுல இரண்டாவது சித்தாந்தத்துல இருக்கறவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க. ஆனா பெரும்பான்மை அதே.
இந்தக் கான்செப்ட் ரொம்பப் பிடிச்ச விஷயம். //ஆதிசக்தி (first power) என்ற பொதுவான அண்ட சக்தி மேல் நம்பிக்கை. அந்த நம்பிக்கையே மனிதம் முதிர்ந்து தன்னறிவு பெற ஏதுவாகிறது. தன்னறிவுப் பாதையில் போக "சக்தி" நம்பிக்கை அவசியம். //
மனிதம் பக்குவமடையவும் தன்னைத்தேடவும் உதவி புரிந்த இரண்டாம் ஆதிசக்தி செவ்வகத்தை மனிதர்கள் சந்திரனின் தென்முனையில் கண்டதாகப் படத்தில் வருகிறது.//
அட! நம்ம சந்திராயன் தெக்கதானே லேன்ட் ஆச்சு. ஆனா இப்ப அது வேலை முடிச்சு தூங்கிடுச்சு. அடுத்து அனுப்பினா இதுவும் சாத்தியமோ?
கீதா
ஹிஹி.. முதல் பதிவுல யாரும் கண்டுக்கல னு தானே இரண்டாவதா இவ்ளோ பெரிய பதிவா போட்டது.. (நியாயமானரிங்களா?)
நீக்குபடத்தை (கலைஞர்களின் கற்பனையை) பார்த்து இவையெல்லாம் வந்ததா என்றால் சாத்தியம் இருக்குனு சொல்வேன். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கற்பனை அவசியம். கவிஞர்கள் கதாசிரியர்களிடம் கற்பனை அதிகம். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ராமாயணம் மகாபாரதத்தில் இருந்து நிறைய ஐடியாக்கள் இன்றைக்கு சாதாரணமாக பழக்கத்தில் உள்ளன. நகைச்சுவை எழுத்தாளர்களின் கற்பனை கூட தொழில் நுட்பமாகி இருக்கின்றன. p.g.wodehouse ஒரு கதையில் இப்படி சொல்வார்.
நீக்கு: jeeves, have you felt that you are being watched?
: sir?
: i don't mean in the context of supreme being watching over us, but within our walls, right here, that we are being watched?
: sir?
: stop saying sir
: sir?
: i think this house is haunted
: sir?
: you see, the toilet flushes itself
இன்றைக்கு என் வீட்டிலேயே இந்த வசதி இருக்கிறது. :-)
..அணு சக்தியால ஆயுள் விருத்தி பண்ண போறேன்
நீக்கு..பஞ்ச கிழவன் தன்னை பால பருவமாக்கி நாடடைக் காக்க
..ஒரு கவிய பாடி காத்தும் மழையும் காட்ட போறேன்
..பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைங்க போகாம படிக்க கருவி..
..படடன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும் காபி நம்ம பக்கத்தில் வந்திடனும்
எல்லாமே வந்தாச்சு இப்ப :-)
:)))
நீக்குமணமக்களை ஊர் ஊராக அழைத்து போகிறார்கள் ஃபோட்டோ ஸூட் செய்ய சினிமா போல் எடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குதிருமணம் என்று இல்லை எல்லா விழாக்களும் இப்போது மாற்றம் கண்டு இருக்கிறது.
KGG சார் பக்கம் பள்ளி பருவ நிகழச்சிகள் அருமை.
சிறு வயதில் ரயில் பயணம் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள பயணம்.
நிறைய பேர் ரயில் பயண்ம செய்தது இல்லை என்பது வருத்தம் தான்.
கலைவாணரின் ரயிலே ரயிலே பாடல் நினைவுக்கு வருகிறது(கிந்தன் சரித்திரம்)
அப்பாதுரை சார் பக்கம் விண்வெளி பயணம் நன்றாக இருக்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு