பால் வாழைக்காய்
வாழைக்காயில் வறுவல், பொரியல், பொடிமாஸ், பஜ்ஜி எல்லாம் பொதுவாக செய்வதுண்டு. நல்ல கனமான கச்சல் இல்லாத வாழைக்காயை புளிக்குழம்பில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது வாழைக்காய் கோளா, கட்லட் என்று நவீனக்குறிப்புகளும் வந்து விட்டன. என் அம்மா பால் வாழைக்காய் என்ற ஒரு பக்குவம் செய்வார்கள். தேங்காய்ப்பால் சேர்த்து மிகவும் ருசியாக இருக்கும். ஒரு முறை 2005ம் வருடம் என்று நினைக்கிறேன், நானும் திருமதி ரேவதி ஷண்முகமும், திருமதி கலைவாணி சொக்கலிங்கமும் நடுவர்களாக இருந்த ஒரு சமையல் போட்டியில் அதே பால் வாழைக்காய் குறிப்பைப்பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட நானும் இப்படியே தான் செய்வேன். இந்தக்குறிப்பிற்கு இரண்டாம் பரிசு கொடுத்தோம்.
நல்ல வாழைக்காயும் தரமான தேங்காயும் கிடைத்து விட்டால் இதன் ருசி அபாரமாக இருக்கும்.
தேவை:
வாழைக்காய்-3
சிறிய தேங்காய்-1
சின்ன வெங்காயம்-8
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய்-2
நல்லெண்ணெய்-கால் கப்
கறிவேப்பிலை
கடுகு- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
செய்முறை:
தேங்காயைத்துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுக்கவும். வாழைக்காய்களை சிறு துண்டுகளாய் அரிந்து இரண்டாம் பாலில் மெதுவான தீயில் வேக வைக்கவும். மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், 4 சின்ன வெங்காயங்கள் அனைத்தையும் மசிய அரைக்கவும். வாழைக்காய் பாதியளவு வெந்ததும் அரைத்த விழுது, முதலாம் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும். காய் வெந்ததும் 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி கிளறி தீயை அணைக்கவும். பாக்கி நல்லெண்ணெயை காயில் பரவலாகக் கொட்டி கிளறாமல் மூடி வைக்கவும். பரிமாறும்போது நன்கு கிளறி உபயோகிக்கவும். கூட்டு போல இந்த கறி சற்று தளர இருக்க வேண்டும். புளிக்குழம்பு, ரசம் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஇன்றைக்கு எனது குறிப்பை வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!!
பதிலளிநீக்குபடமே ஆசையை தூண்டுகிறது. செய்முறை விளக்கம் சுலபமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
நீக்குபுதிய சமையல் குறிப்பு... அருமை...
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு8 நன்றி தனபாலன்!
நீக்குவாழைக்காயின் துவர்ப்பு உடலுக்கு நல்லது..
பதிலளிநீக்குசிறப்பான செய்முறை..
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!
நீக்குஇதுவரை கேள்விப்படாத சமையல் குறிப்பு. இனிப்போ என தலைப்பைப் பார்த்ததும் நினைத்தேன். நிச்சயம் செய்துபார்க்கணும்.
பதிலளிநீக்குஅவசியம் செய்து பாருங்கள் நெல்லைத்தமிழன்!
நீக்குநன்று. நீங்கள் கூறியது போல சுவையானது. நாங்களும் செய்வோம். எங்கள் நாட்டில் தேங்காய் பால் சமையல்கள்தான் அதிகம்.
பதிலளிநீக்குமாதேவி! நீங்களும் வாழைக்காயில் இது போல செய்வது மகிழ்வைத்தருகிறது! நானும் இலங்கை சமையல் குறிப்புகளை அடிக்கடி செய்து பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்!!
நீக்குரேவதி ஷண்முகம் கவியரசர் புதல்விதானே? சமையல் போட்டியில் அவருடன் சேர்ந்து நடுவராக இருந்திருக்கிறீர்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். இது போன்ற போட்டிகளில் "சுவை"யாக ஏதாவது நடந்திருக்குமோ... அந்த அனுபவங்களை எழுதுங்களேன்..
பதிலளிநீக்குதிருமதி ரேவதி ஷண்முகம் கவியரசர் கண்ணதாசன் புதல்வி தான். திருமதி கலைவாணீ சொக்கலிங்கம் அவர் தங்கை தான்! நிறைய சமையல் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நீங்கள் சொன்னது போல சுவையாக அனுபவமும் கிடைத்தது உண்மைதன் ஸ்ரீராம்! பிரிதொரு முறை அதை பகிர்ந்து கொள்கிறேன்!!
நீக்குநல்லதொரு சமையல் குறீப்பு. கிட்டத்தட்ட வாழைக்காய் எரிசேரி போல இருக்கு. நல்லெண்ணேய்க்குப் பதில் தே. எண்ணேயில் தாளீதம் போன்றவை செய்யலாம்.
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
பதிலளிநீக்குநாங்களும் செய்வோம் வாழைக்காய் பால் கூட்டு என்று. தேங்காய் எண்ணெய் தாளிப்போம். அம்மாவுக்கு திருவனந்தபுரம் என்பதால் தேங்காய் பால் தேங்காய் இல்லா உணவே கிடையாது.
பதிலளிநீக்குநீங்கள் சமையல் போட்டிக்கு நடுவராக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
அருமை
பதிலளிநீக்கு