உளுந்தூர்பேட்டை ஷண்முகம் இயற்றி, டி கே புகழேந்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள 'மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி' பாடல் இன்று..
அப்பாடா.. பாடலை இயற்றியவர் பெயர், இசை அமைத்தவர் பெயர் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். வாழ்க..
மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி
மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கயற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி [மங்களம்]
திங்களை சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ் பாவை
திங்களை சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை [மங்களம்]
சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதை கொடுப்பவள் சக்தி [மங்களம்]
தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரை குளத்தைச் சார்ந்தவள் சக்தி
தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரை குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக்கு ஒரு மாபெரும் சக்தி
மாமதுரைக்கு ஒரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவ சக்தி ஓம் [மங்களம்]
==============================================================================================
1959 ல் வெளியான யானை வளர்த்த வானம்பாடி என்கிற படத்திலிருந்து ஒரு பாடல். நிதானமான, மென்மையான அழகான தாலாட்டுப் பாடல். இப்போது பாடினாலும் குழந்தைகள் அமைதியாக உறங்குவர்.
கு மா பாலசுப்ரமணியம் பாடலுக்கு பிரதர் லக்ஷ்மன் இசை. சுப்பிரமணியம் இயக்கத்தில் ஸ்ரீராம், நம்பியார் முதலானோர் நடித்த படம். சீர்காழி கோவிந்தராஜனின் அமைதியான குரலில் பாடல்..
இந்தப் பாடலைக் கேட்கும்போது கட்டாயம் இன்னொரு பாடல் நினைவுக்கு வரும். அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
பொன்னே உன்னெழில் புன்னகை போதும்
பூவே தாமரை கண்ணுறங்காயே...
தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
ஓடையின் நீரில் ஆடிடும் மீன் போல் - என்
உள்ளத்திலே துள்ளி ஆடுகின்றாய்
வாடாத பூவாக சூடாத முத்தாக
மாயம் காட்டிடும் கண்மணியே
காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
நாட்டின் மனிதர்கள் மூட்டிடும் தொல்லை
நம்பிக்கை மோசங்கள் இங்கேதும் இல்லை
காட்டு விலங்கும் வேடிக்கைக் காட்டும்
களங்கமில்லா அன்புக்கு ஈடுமில்லை
நாட்டிய மாடிடும் மாமயிலைக் கண்டு
கானம் பாடும் குயிலும் உண்டு
காராம் பசு தந்த பாலமுதுண்டு
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
பதிலளிநீக்குவாழ்க குறள்
வாழ்க..
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குமங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
பதிலளிநீக்குஅங்கயற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி..
ஓம் ஓம் ஓம்..
வணங்குவோம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇன்று பகிர்ந்து இருக்கும் இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமெர்ரிலாண்ட் சுப்பிரமணியம் அவர்களிடம் என் தாய் மாமா பணி புரிந்தார்கள்.
மெர்ரிலாண்ட் சுப்பிரமணியம் தயாரித்து இயக்கிய யானை வளர்த்த வானம்பாடி படத்திலும் யானை வளர்த்த வானம்பாடியின் மகன் என்ற படத்திலும் என் தாய் மாமா எம்,கே நாதன் அவர்கள் (காந்திமதி நாதன்) பணி புரிந்து இருக்கிறார்கள். யானை வளர்த்த வானம்பாடியின் மகன் படத்தில் நடிகர்களுக்கு காட்சி அமைப்புக்கு ஏற்ற வசனம் சொல்லிகொடுப்பது போல் உள்ள படங்கள் மாமா வீட்டில் இருக்கும். அவர்கள் தயாரித்த சுவாமி ஐயப்பன் திரைபடம், படம், சுவாமி ஐயப்பன் தொலைக்காட்சி தொடர்களில் மாமா வசனம் எழுதி இருக்கிறார்கள். என் மாமாவின் நினைவை தந்த பாடல் .
//இந்தப் பாடலைக் கேட்கும்போது கட்டாயம் இன்னொரு பாடல் நினைவுக்கு வரும். அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?//
பராசக்தியில் வரும் கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே பாடலா?
இரண்டாவது படத்தில் ஒரு SPB பாடல் உண்டு. கூடவே ஒரு ஸ்ரீதேவி டூயட் பாடலும் உண்டு!
நீக்குஇது நாள்வரை கேட்காத பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குஅருமையான தாலாட்டுப் பாடல்...
பதிலளிநீக்குஆம்.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமை!
பதிலளிநீக்குஅதுவும் ' கண்ணே வண்ணப்பசுங்கிளியே' பாடல் எத்தனை மாமாங்கம் ஆயிற்று கேட்டு! நினைவூட்டியதற்கு அன்பு நன்றி!
' சின்ன சின்ன மூக்குத்தியாம் சிகப்புக்கல்லு ' பாடல் கிட்டத்தட்ட இந்த ராகத்தில் வரும். அது தானா நீங்கள் குறிப்பிடுவது?
வாங்க மனோ அக்கா... மிகச்ச சரியாக கண்டு பிடித்தீர்கள். ஆம். அந்தப் பாடல்தான் இந்தப் பாடல் கேட்கும்போது நினைவுக்கு வரும்.
நீக்குஆ! மனோ அக்கா சொல்லிருக்காங்களே...நீங்க எல்லாம் டக்குனு சொல்லிடுவீங்க மனோ அக்கா, ஸ்ரீராம், கோமதிக் அக்கா எல்லாம்.... நமக்கு டக்குன்னு வார்த்தைகள் கிடைக்காது... எல்லாம் கூகுள் உதவி இல்லாம சொல்ல முடியாது ஹிஹிஹி
நீக்குகீதா
:))
நீக்குஇரண்டும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி
பதிலளிநீக்குஸ்ரீராம், நம்பியார் முதலானோர் நடித்த படம்
அட...
ஆம். அப்படி ஒரு நடிகர் அந்தக் காலத்தில் உண்டு.
நீக்குஇரண்டும் கேட்டதில்லை. என் மாமாவும் தாத்தாவின் நண்பரான ஜெமினி நாயுடுவிடம் வேலை செய்தார். என் அம்மாவின் மாமா டைரக்டர் சங்கரிடம் வேலை செய்தார். இப்போதுள்ள சங்கர் இல்லை. ஜெமினி பிக்சர்ஸ் படங்களூக்குப் பாஸ் வரும்னு தெரிஞ்சிருக்குமே. அப்படி வந்து தாத்தாவோடு வாழ்க்கைப் படகு படம் போயிட்டு இஃகி,இஃகி,இஃகி, தாத்தா ஒரே திட்டு மழை!
பதிலளிநீக்குஆமாம். பழைய டைரக்டர் சங்கர் நினைவிருக்கிறது.
நீக்குஇதை எல்லாமா பார்க்கறீங்கனு எங்களூக்கும் திட்டு. இப்போப் படங்கள் பார்த்தால் என்ன சொல்வாரோ?;)
பதிலளிநீக்கு:)))
நீக்குஇரண்டு பாடல்களுமே கேட்டு ரசித்த பாடல்கள். இரண்டாவது பாட்டு கேட்டு பல பல பல வருடங்கள் ஆச்சு. இப்ப கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள் இரண்டுமே.
கீதா
அதற்குதானே பகிர்வது... நன்றி கீதா!
நீக்குரெண்டாவது பாட்டு நீங்க சொல்லிருக்காப்ல வேற பாட்டு மனசுல ஓடியது ஆனால் வார்த்தைகள் கிட்டியில்லா..வழக்கம் போல. அப்புறம் ட்யூன் மனசுக்குள்ள பாடி பாடி மூக்குத்தின்னு வருமேன்னு ........
பதிலளிநீக்குகேட்டால் அள்ளிக் கொடுக்கும் - நமக்குத் தேவை இல்லாததையும் சேர்த்து - கூகுள் பூதத்திடம் கேட்க அதோட உதவியுடன் எடுத்து நீங்க கேட்டது இதுவாக இருக்குமோன்னு சொல்றேன் சின்ன சின்ன மூக்குத்தியாம் சிகப்புகல்லு மூக்குத்தியாம் பாட்டோ? ஸ்ரீராம்?
கீதா
ஆமாம். அதே பாட்டுதான். மேலே சொல்லி இருக்கேன் பாருங்க..
நீக்குஎன்ன அழகான தாலாட்டுப் பாடல் இல்லையா? ஸ்ரீராம். மீண்டும் கேட்டு ரசித்தேன்...
பதிலளிநீக்குசாமா ராகமோ?
கீதா
காமா சோமான்னு ராகம் பேர் எழுதறாங்களே இந்த கீதா ரங்கன்
நீக்குசாமா ராகமா... சங்கராபரணத்தில் வரும் மானஸ சஞ்சரரே சாமா என்று நினைவு. அப்புறம் தேடியதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் ஆராதனாவின் ரூப் தேரா மஸ்தானா சாமா ராகமாம். மௌனத்தில் விளையாடும் (நூல்வேலி ) நான் பாடிக்கொண்டே இருப்பேன் (சிறை), கண்ணிலே குடியிருந்து கருணை தரும் (இமயம்) பாடல்களும் சாமாவாம்.
நீக்கு