ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 14

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 14

 

கோவிலின் வெளிப்புறத்தில் இருந்த சிற்பங்களின் தொகுதி இந்த வாரத்தோடு நிறைவு பெறும். எதையும் விட்டுவிடக் கூடாது என்று பல பகுதிகளையும் புகைப்படமெடுத்திருந்தேன். அவைகளை உங்களுடன் இதுவரை பகிர்ந்துகொண்டேன். இந்த வாரம் மிகுதி சிற்பங்களையும் காண்போம்.


















வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு, கடலைக் கடைந்த நிகழ்ச்சியை விஸ்தாரமாக சிற்ப வடிவில் நான்காவது வரிசையில் காணலாம். இதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்து கிடைத்த குறைந்த அவகாசத்தில் தேடினேன். சட் என்று கண்ணில் படவில்லை. ஆனால் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்த பிறகுதான், அவற்றில் இதனையும் எடுத்திருக்கிறேன் என்று கண்டுகொண்டேன். அந்த அளவு அடர்த்தியாகவும் மிகச் சிறிய வடிவிலும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

 

இரண்டு மூன்று வரிசைகளில் இராமாயண, மஹாபாரத, பாகவதக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உயரம் ½ அடிதான். கூர்ந்து கவனித்து நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதில், வாசுகி என்ற பாம்பால், மந்தர மலையை தேவர்களும் அசுரர்களும் கடைந்தது சிற்ப வடிவில் உள்ளது. அதுபோன்று, தளத்தின் கடைசி வரிசையில் யானைகளும், அதற்கு மேல் குதிரையில் போர் வீரர்களும் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.

 

ஒவ்வொரு சிற்பமாகப் போட்டு (கண்ணன் பிறப்பு, பூதனையைக் கொல்வது, ஹனுமான் சண்டையிடுவது என்று பலவிதச் சிற்பங்கள்) விளக்கினால் அயர்வைத் தரும் என்று விட்டுவிட்டேன். அனேகமாக எல்லாச் சிற்பங்களையும் இங்கு கொண்டுவந்துள்ளேன். இதே கோவில் மேனாட்டில் இருந்திருந்தால், ஒவ்வொரு சிற்பத் தொகுதியையும் தனித் தனியாகக் காட்சிப்படுத்தி ஒரு மியூசியத்தையே அமைத்துவிடுவான். நம் நாட்டில், சிதைவுறாமல் இவை இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டுமே என்ற எண்ணம் எனக்கு வந்ததுஇந்தச் சிற்பங்களை ஒவ்வொன்றாகப் படமெடுத்து ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாகப் போட்டால், எல்லோரும் புரிந்துகொண்டு காண வசதியாக இருக்கும் என்பது என் எண்ணம். பாரிஸ் லூவர் மியூசியத்தில், பல்வேறு முக்கியமான சிற்பங்கள், ஓவியங்கள், காட்சிப்பொருட்கள் ஆகியவற்றை புத்தகமாக விளக்கத்துடன் போட்டிருந்தார்கள். அதை நான் வாங்கி, அதில் போட்டிருந்தவைகளைப் பெரும்பாலும் நான் பார்த்துவிட்டேனா என்று சோதித்துக்கொண்டேன். பார்க்காதவற்றை அடுத்த முறை கண்டேன். (லூவர் மியூசியம், பிற மியூசியங்களுக்குச் சிலவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அவர்களே லூவர் மியூசியம் என்று சில பல நாடுகளில் அமைத்துள்ளார்கள். அதுவும் தவிர, பராமரிப்பு என்ற பெயரில் சில இடங்களுக்குச் செல்ல இயலாது. அதனால் சில முக்கியமான சிற்பங்கள், ஓவியங்களைக் காண இயலாது). இவற்றையெல்லாம்தான் நாம் இந்தியாவில் implement செய்யணும். இதில் போடப்படும் பணம் முதலீடு என்ற எண்ணம் வரவேண்டும். நிறைய வெளிநாட்டுப் பார்வையாளர்களை இவை ஈர்க்கும்.

 

மிகச் சிறந்த திறமைசாலிகளின் திறமையைக் கண்ட மகிழ்வோடு அடுத்தது கோவிலின் உள்ளே செல்லவேண்டியதுதான். அடுத்த வாரம் பார்ப்போமா?

 

ஆமாம்..பதிவில், ருக்மணி த்வாரகை கோவில் பற்றிச் சொல்லியிருந்தேனே. அதன் சிற்பங்களில் சிலவாவது பகிர வேண்டாமா?



ருக்மணி த்வாரகை கோவில் வெளிப்புறச் சிற்பங்கள். 

 


உப்புக் காற்றினாலும், மாற்று மதப் படையெடுப்பாலும் சிதைந்த சிற்பங்கள் (பின்பு நான் பஞ்சத் துவாரகை யாத்திரை பற்றி எழுதும்போது இவற்றைப் பார்க்கலாம்)



அடுத்த வாரம் நிச்சயம் கோவிலின் உட்புறத்துக்குச் சென்றுவிடுவோம்.

(தொடரும்) 

 

46 கருத்துகள்:

  1. அனைத்துப் படங்களும் அழகு....ரசித்துப் பார்க்க நினைக்கிறேன் நேரம் டைட்டோ டைட்.

    மந்தாரமலை கடைதல் நன்றாகத் தெரிகிறது நெல்லை. அது போல சின்ன சின்ன சன்னதிகள் போல அமைத்திருப்பது, கிளி அசுரன் வடிவங்கள் எல்லாமே வியக்க வைப்பவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். சிறிய சிற்பங்கள் நிஜமாகவே வியப்புக்குரியவை. நான் மிகச் சிறிய பாலியல் சிற்பங்களை அஹோபிலம் யாத்திரையில் ஒரு பெரிய கோவிலில் பார்த்தேன். இங்கு அவற்றைப் பகிரவில்லை (பகிர்ந்தால், இந்த வேலையைச் செய்தது மாற்று மதத்தினர் என்று சிலர் சொல்வர், அதில் உண்மை இல்லாதபோதிலும்)

      நீக்கு

  2. ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுவர் முழுதும் சிற்பங்கள். அதுவும் சின்னச் சின்ன சிற்பங்கள். இச்சிற்பங்களை செதுக்க எவ்வளவு கான்சன்ட்ரேசன் தேவை. புகைப்படங்கள் தெளிவாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு கோவிலை அமைக்கவேண்டும் என்று நினைத்த அரசனின் எண்ணமும் எனக்கு வியப்பாக இருக்கிறது. நன்றி ஜெயகுமார் சார்

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. புராணக் கதைகள் பலவும் சிற்பங்களாய்...அப்படினா இப்படி ஒவ்வொன்றாக நாம் ஆராய்ந்தால் எப்போது புராணக் கதைகள் இப்படி அமைக்கப்பட்டன என்பதும் தெரிந்துவிடும் இல்லையா? அதாவது நடனத காலகட்டம் போன்ற விஷயங்கள்.

    ஆமாம் வெளிநாட்டில் அப்படியே ம்யூசியம் ஆக்கிடுவாங்க...இந்தப் படங்களில் கூட ஒன்றில் கொஞ்சம் உடைந்திருப்பது தெரிகிறது...அந்த சின்ன சின்ன சன்னதி போலன்னு சொல்லிருக்கற படத்தின் இடப்பக்கம்...

    இந்தக் கருத்து அடிச்சுட்டுருக்கும் போதே அழைப்புகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பிஸியாக இருப்பது சந்தோஷம்தான்.

      புராணக் கதைகள் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்தக் கோவில்கள் எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்டவைதாம்.

      நீக்கு
  5. நெல்லை நீங்க எடுத்திருக்கற படங்களை நீங்க சொல்லிருக்காப்ல புத்தகமா போடுங்க...ஆனா படங்கள் நல்ல தெளிவா வழ வழன்னு பேப்பர் வருமே அப்படியாக....விலை கூடுதலோ? நீங்க அதிகம் அச்சிடாமல் நல்ல பெரிய நூலகங்களுக்கு அல்லது ம்யூசியங்களுக்குக் கொடுக்கலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்.... இது என்ன என் காசுக்கு வேட்டுவைக்கப் பார்க்கறீங்க?

      நீக்கு
  6. அதுவும் இப்படி நுணுக்கமாக ஒவ்வொரு இஞ்சையும் பயன்படுத்திச் செதுக்கி இருக்கும் அவர்களின் திறமையை கண்டிப்பாக வெளி உலகிற்குத் தெரிய வைக்கணும். ஆனால் எதிர்காலத்தில் இவை அழியாமலும் இருக்கணுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திறமையை கண்டிப்பாக வெளி உலகிற்குத் தெரிய வைக்கணும். // இந்த நல்ல எண்ணத்திற்காகத்தான் கொள்ளையர்கள், மதுரை மதன கோபாலஸ்வாமி கோவில் மண்டபத்தையே பெயர்த்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டனர்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. அவன் கல்லில் வடித்தான்..
    இவன் கல்லால் அடித்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா..... வெளிநாட்டினருக்கு, அவர்கள் மதம் தவிர மற்றவை பெரிதல்ல. அதனால் உடைப்பது என்பது அவர்கள் மதம் அவர்களுக்குப் போதிப்பது.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. நேற்றைக்கு ஒரு புத்தர் சிலையை (மிகப் பெரியது) இணையத்தில் ஒரு தளத்தில் பார்த்தபோது எனக்கு பாமியான் புத்தர் சிற்பங்கள் நினைவுக்கு வந்தது. பயங்கரவாதிகளுக்கு மதமேது.

      நீக்கு
  11. இங்கே இருக்கறவன் தனக்குத் தான் தெரியும் ன்னு இண்டு இடுக்கு என்று எல்லா இடத்திலும் கலை கலை என்று கல்லில் அடித்து வைத்தால் கொள்ளையடிக்க வந்த கும்பல் கலை கலை என்று கல்லால தான் அடிக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு எங்கெங்கெல்லாம் தங்கம் பதுக்கியிருக்கிறார்களோ என்ற எண்ணம்தான். காமவெறி பிடித்தவனுக்கு சித்தியாவது சித்தப்பாவாவது என்பது போலத்தான். இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்பின்போது எவ்வளவு தங்கம் கொண்டுபோகப்பட்டது என்பதைப் படித்தால், நம் நாட்டின் கோவில்களில் எவ்வளவு தங்கம் இருந்தது என்று தெரியும். தஞ்சை பெரிய கோவில் கோபுரமே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. இரண்டாவது 'கலை', ஜெயிலர் படத்தில் ரஜினி சொல்லும் 'கலைச்சுப் போட்டுடுவேன்' தானே

      நீக்கு
    2. நீங்கள் சொல்கின்ற படத்தைப் பார்க்க எனக்கு விருப்பம் ஏதும் இல்லை..

      கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு!..

      நீக்கு
    3. படங்களை ரசிப்பதில் (திரைப்), நான் பெரும்பாலும் C Class ரசிகன். ஜெயிலர் படத்தை நான் இரண்டு முறை எங்கள் வீட்டிற்கு அடுத்து இருக்கும் தியேட்டர் காம்ளக்ஸிலும், ஒரு முறை OTTயிலும் பார்த்தேன். (இரண்டு வாரங்களில்).

      'கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு' - ம்ஹ்ம்... நிறைய சந்தர்ப்பங்களில் அது வீணாவது கண்டு மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். பசங்களுக்குத் தெரியுமா அதன் அருமை?

      நீக்கு
  13. ஹொசஹொலாலு, மாண்ட்யா கோவில் படங்கள் எல்லாம் மிக அருமை.

    //இந்தச் சிற்பங்களை ஒவ்வொன்றாகப் படமெடுத்து ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாகப் போட்டால், எல்லோரும் புரிந்துகொண்டு காண வசதியாக இருக்கும் என்பது என் எண்ணம்.//

    செய்யலாம். நீங்களே கூட செய்யலாம். நன்றாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.

    நீங்கள் சொல்வது போல தனி தனியாக படம் எடுத்து போட்டு கதைகளை சொல்லலாம்.

    ருக்மணி த்வாரகை கோவில் வெளிப்புறச் சிற்பங்களும் நன்றாக இருக்கிறது.
    சென்ற வருடம், இந்த வருட படங்களும் நன்றாக இருக்கிறது.
    கலைக்கோவில் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவணப்படுத்தி, இந்தக் கோவிலில் இந்த இந்தச் சிற்பங்கள் என்று எழுதும்போது அந்த அந்தக் கோவில்களுக்குப் பிரயாணம் செய்து அவற்றைக் காணும் ஆசை வரும் என்று தோன்றியது. (லூவர் மியூசியத்தில் வாங்கிய புத்தகத்தின் சில பக்கங்களைப் பிறகு பகிர்கிறேன்)

      நீக்கு
  14. தகவல்கள் சிறப்பு
    படங்கள் வழக்கம் போல அழகு

    பதிலளிநீக்கு
  15. அரிய சிற்பங்கள். அவற்றை உணர்ந்து போற்றி பாதுகாத்தால் வரும் சந்ததி அறிய உதவும் .

    பதிலளிநீக்கு
  16. கலைப் படைப்பினை - கலைப் படைப்பாக காண்பதற்கே கண்கள் வேண்டும்..

    மிக அழகாகத் தந்திருக்கின்றீர்கள்..

    அந்த அரசனின் அமைச்சரவையில்
    கலைத்துறை தங்களிடம் இருந்ததோ!..

    (இருக்கலாம்.. நமக்கெதுக்கு ஊர் வம்பு?..

    உணவுத் துறையில் இருந்தது யார் என்று வேறொரு கேள்வி வந்தாலும் வரும்!..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கலைப் படைப்பினை - கலைப் படைப்பாக// - இது கொஞ்சம் கஷ்டம் துரை செல்வராஜு சார்... பொதுவான சிற்பங்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. இதற்காகச் சில கோபுரச் சிற்பங்களைப் பகிர நினைக்கிறேன். (சில கோவில்களில் நான் பார்த்த சிற்பங்களை படமெடுக்க முடியவில்லை)

      நீக்கு
  17. என்னுடை பின்னூட்டங்கள் எங்கே போச்சு கீதாவுக்கு அடுத்து போட்டேன் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அப்போ காணாமல் போகும். எபி ஆசிரியர்கள் எடுத்துப் போடுவார்கள். இது சகஜம்தான்

      நீக்கு
  18. வெளியானதை பார்த்தேன், இப்போது காணவில்லையே!

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டங்களை தேடி போட்டு விட்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  20. இத்தனை அழகாக அரை அடிக்குள்ளாகச் சிற்பங்கள் எப்படித்தான் செதுக்கினார்களோ! மத்தவங்க எப்படியோ நெல்லை நன்கு ரசித்துப் பார்க்கிறார். பகிரவும் செய்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்...... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தச்சிற்பிகள் அந்த இடத்தில் அரூபமாக அமர்ந்திருக்கிறார்கள் என்று. அவங்களோட திறமையினால் விளைந்த சிற்பங்களை ரசிக்காமல் நேரே கோவிலுக்குள் போய் இறைவனை/இறைவியை மாத்திரம் தரிசித்துவிட்டு வந்தால், அவங்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா? இப்போதெல்லாம் சென்ற கோவிலுக்கே திரும்பச் செல்லும்போது, மற்ற கோவில்களின் சிற்பங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகளை மனது ஆராயும்

      நீக்கு
  21. எத்தனை பொறூமை வேண்டும் இப்படிச் செதுக்க. அதை அழகாகவும் வரிசைப்படுத்தி இருக்காங்க. எத்தனை வருடங்கள் ஆகின்றனவோ இவற்றூக்கெல்லாம். நம் நாட்டில் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. ;( அரசையும் சேர்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நம்முடைய பொக்கிஷம், இந்துமத எதிர்ப்புணர்வாலும், பிராமண எதிர்ப்பு என்ற விஷ எண்ணங்களாலும், கவனிப்பாரற்றுதான் இருக்கிறது என்று தோன்றும். அப்போ எல்லா சமூக மக்களுக்கும் வேலை இருந்துகொண்டே இருந்ததால், விஷப் பிரச்சாரத்திற்கான ஆட்களே இருந்திருக்காது ஹா ஹா. நான் நினைத்துக்கொள்வேன், இப்போது சிற்பங்கள் சிலைகள் செய்பவர்களின் முன்னோர்கள்தாம் அவர்களாக இருக்கும் என்று.

      நீக்கு
  22. /// சிற்பிகள் அந்த இடத்தில் அரூபமாக அமர்ந்திருக்கிறார்கள்.. ///

    உண்மை.. உண்மை..

    ராஜராஜேஸ்வரத்துக்குச் செல்லும் போதெல்லாம் சிற்பிகள் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு வருவேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முதன் முதலில் பெரிய கோவில் சென்றபோது, ரொம்பவே உணர்ச்சிகரமாக இருந்தது. தொல்லியல் துறை நன்றாக வைத்துள்ளார்கள். கோவிலின் வலது புற (நமக்கு) வாசலில்தான் ராஜராஜ சோழன் நுழைவானாம். தமிழர் வரலாற்றைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கும் இடம் அது. (அந்தச் சமயத்தில் லண்டன் ஒரு சிறிய மீன்பிடி கிராமம்)

      நீக்கு
  23. அருமையான படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!