ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 13

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 13

 

வைரமுடி யாத்திரையில், மேல்கோட்டை (திருநாராயணபுரம்) நோக்கிச் சென்றுகொண்டிருந்த நாங்கள், வழியில் ஹொசஹொலாலு கோவிலுக்குச் சென்றோம். ஹொய்சாளர்களின் சிற்பத் திறமைகள் நிறைந்த இக் கோவிலின் வெளிப்புறச் சிற்பங்களைக் கண்டுகொண்டிருக்கிறோம்.









கல்லின் அடிப்பகுதியை மாத்திரம் close-upல் எடுத்துள்ளேன். குதிரையில் பயணிக்கும் வீரர்கள்.








இந்தக் கோவிலை, ஹொய்சாளர்களின் மிகச் சிறப்பான கட்டிடக் கலை இல்லை என்று பலர் அபிப்ராயப்படுகின்றனர். நட்சத்திர வடிவில் கீழ்த்தளம் இருந்தபோதும், ஆறடுக்குப் பகுதி கோவில் முழுவதும் இல்லை. கருவறையும் முன் மண்டபமும் சேரும் இடத்தில், ஆறு வரிசை இல்லாமல், நான்கு வரிசையாகவும் அமைந்துள்ளது. மற்றபடி சிற்பங்கள் மிகச் சிறியதாகவும், நுண்ணிய அழகியலைக் கொண்டும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.







கிருஷ்ணர் பிறப்பு மற்றும் வசுதேவர்-கழுதை சம்பந்தப்பட்ட பகுதி. கிருஷ்ணர் விஷ்ணுவின் அம்சம் என்பதைக் காட்டியுள்ளார்கள்குழந்தை பிறந்த தை அறிந்து கழுதை கத்திக் குரல் கொடுப்பதற்காகக் கம்சன் கட்டிவைத்திருந்தான் எனவும், கிருஷ்ணர் பிறக்கும்போது, கத்திக் காட்டிக்கொடுத்துவிடாதே என்று வசுதேவர் கழுதையிடம் வேண்டுவதாகச் சிற்பம்.


அடுத்த வாரமாவது கோவிலின் உள்ளே செல்லுவோமா? தெரியவில்லை. பார்க்கலாம்.


(தொடரும்) 

 

50 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் ஜீவி சார். நேற்று மூன்றாம் சுழி தளத்தில் சில பதிவுகளைப் படித்தபோது (அப்பாதுரை நிறைய ஏடாகூடக் கதைகளை எழுதியிருக்கிறாரோ?) உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு, எழுத்து இவற்றின் ரசிகர் நீங்கள்.

      நீக்கு
    2. எழுதிச் சொல்லும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்து பழக்கமாகி விட்டது, நெல்லை. எல்லாம் ரா.கி.ர., ஜராசு, எஸ்.ஏ.பி.
      குழு கற்றுக் கொடுத்த பாடம். இந்தக் கலை மட்டும் கைவசப்பட்டு விட்டால் எதையும் சுவாரஸ்யமாகச் சொல்லி வாசகர்களை வளைத்துப் போட்டு விடலாம்.

      நீக்கு
    3. உண்மைதான் ஜீவி சார்... இருந்தபோதும் நல்ல கருத்துகள் நிரம்பிய எழுத்துகள் மாத்திரமே காலத்தைக் கடந்து நிற்க இயலும்

      நீக்கு
  2. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளின் கண்கொள்ளா காட்சி.
    ஆழ்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாது போலிருக்கு.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நின்று நின்று சிற்ப அழகுகளைப் பார்க்கிறார்களா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய கோவில்களில் நான் கண்டது, பக்தர்கள் மெக்கானிக்கலாக சன்னதிகள் அல்லது மூலவரைத் தரிசித்துவிட்டு அடுத்த கோவிலை நோக்கி விரைகிறார்கள் என்று. இதில் சிற்பமாவது அழகியலாவது. சில கோவில்களில் நம் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அங்கிருப்பவர்களே நிறைய விளக்குவார்கள். இந்தக் கோவில் அர்ச்சகர் கோவில் உள் சிற்பங்களை நிறைய விளக்கினார்.

      நீக்கு
  3. மேல்கோட்டை -- தமிழ் வழக்கு பெயர் மாதிரியே இருக்கே --- இந்தப் பகுதியில் என்ன மொழி பேசுகிறார்கள்? தமிழ் பேசினால் புரியுமா?

    தங்கள் முயற்சிக்களுக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேல்கோட்டையில் தமிழர்கள் ஏராளம். உண்மையில் கர்நாடகாவில் புகழ்பெற்ற இடங்களில் தமிழ் பேசுபவர்கள் அதிகம். இதைப்பற்றி பிறகு எழுதுகிறேன். திவ்யப் பிரபந்தங்கள் ஒன்றே அவர்களையும் (பெரும்பாலும் வைணவர்கள்) தமிழகத்தையும் இணைக்கின்றன. மனதால் கன்னடத்தவர்கள் அவர்கள்.

      நீக்கு
    2. திருநாராயணபுரம், திருவனந்தபுரம், திருப்பதி -இப்படி எந்தெந்த ஊரெல்லாம் திரு-வில் ஆரம்பிக்கிறதோ, அதெல்லாம் உடனே தமிழ்நாட்டில் சேர்க்கப்படவேண்டும். ஆனால்... தமிழ்நாட்டுக்குள் வந்தவுடன், விடியலுக்குள், உண்டியல்கள் காணாப்போய்விடுமே..! சரி, இருக்கிற மாநிலத்திலேயே இருந்துவிட்டுப்போகட்டும். நாம் அங்கே போய் கும்பிட்டு வருவோம்

      நீக்கு
    3. //அதெல்லாம் உடனே தமிழ்நாட்டில் சேர்க்கப்படவேண்டும்.// - நல்லவேளை..இத்துடன் நிறுத்தாமல் விட்டீர்களே. திருப்பதி ஆந்திராவில் இருப்பதால் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. கேரளக் கோவில்கள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. தமிழக கோவில்களும் அவற்றின் வருமானங்களும் சூறையாடப்படுகின்றன என்றே பலரும் அவதானிக்கிறார்கள். உண்டியலில் போட்ட பணத்தில் அதிகாரிகள் குடும்பம் சுற்றுலா போக கார்களா?

      நீக்கு
  4. இன்று மதியத்துக்கு மேல்தான் வர இயலும். வீட்டில் முக்கிய நிகழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நல்ல விருந்தாக இருக்கும்.. வடிவாச் சாப்பிட்டுப்போட்டு நித்திரையாகிடாதையுங்கோ.. பதிலைப் போட்டிட்டு நித்திரை கொள்ளலாம் ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. நாம் ஒரு function நடத்தி, ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்தால் நம் கவனம் விருந்தினர்களை கவனிப்பதில்தான் இருக்கும்.சாப்பாட்டில் மனம் செல்லாது.

      நாளை தான் பதில் தருவேன்

      நீக்கு
  5. சாண்டில்யனோ, விக்ரமன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன், யாராவதோ ஹொய்சாளர்கள் பற்றி ஏதாவது கதை எழுதி இருக்கிறார்களோ ஜீவி ஸார்?

    பதிலளிநீக்கு
  6. ஹொய்சாளர்கள் பற்றி
    பாஷ்யம் ஐயங்கார் எழுதி வாசித்த நினைவு இருக்கிறது, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாபகமில்லை. ஹொய்சாள விஷயமும் மெயின் இல்லாமல் பிரஸ்தாபிக்கிற அளவில் இருக்கும் என்ற நினைவு.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. // என் மீது நீங்கள் அனைவரும் வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை..//

    நேற்றைய பதிவில் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அளித்திருந்த பதிலின் ஒரு பகுதி..

    ஒருவருக்கொருவர் அன்பின் வலைப்பட்டிருப்பதில் என்ன கைமாறு செலுத்த முடியும்?..

    உங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி.. குடும்பத்தில் நிலவுகின்ற சூழ்நிலை விரைவில் நலமாகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  9. படங்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைவிட பிள்ளையார் கொழுக்கட்டை எங்கெல்லாம் கிடைக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  11. விடியக் காலைல இருந்து - டீவியில

    ஹேப்பி விநாயகர் சதுர்த்தி ன்னு இங்கிலிபீசுல கத்திக்கினு இருக்கானுங்க..

    ஒண்டுமே புர்யலே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் அந்த டிவிய விடறதாயில்ல. அப்ப, அவிங்களோட இங்கிலீசு, டமிளு, வெளக்கம், வெவாதம் எல்லாத்தயும் ரசிக்க வேண்டியதுதான்...!

      நீக்கு
  12. மீண்டும் கலைப் பொக்கிஷகமான பதிவு..

    அருமையான விளக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான கலை நுணுக்கங்கள்.
    அவர்களின் கலைக்கு சான்று .

    கண்டு களித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி... சிற்பிகளின் கற்பனைத் திறனும் கலைத்திறனும் அவர்களுடைய திறமைக்குச் சான்றுகள்

      நீக்கு
  14. எனக்கொரு டவுட்டூஊஊ.. விநாயகர் சதுர்த்தி நாயிறோ திங்களோ? திங்கள் தான் நாம் எல்லாம் கொண்டாடப்போகிறோம்... இந்த ரெண்டு பஞ்சாக்கத்தாலதான் பல குழப்பங்கள் நிகழ்கின்றன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு கொண்டாடினால், வீட்டின் பெண்கள் விடுமுறையை அனுபவிக்க முடியாமல், கொழுக்கட்டை செய்வதில் நேரம் போய்விடும். திங்கள் கிழமைதான் கொண்டாட்டம் என்றால் நல்லது அல்லவா?

      நீக்கு
  15. போன முறைபோட்ட சிற்பப் படங்களுக்கும், இம்முறை போட்டிருக்கும் சிற்பப் படங்களுக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை, உருவங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம். அதிலும் எல்லாமும் ஒரே நிறமாக இருப்பதால், உற்றுப்பார்த்தாலும் ஒண்ணும் பிரியல்லே:)).

    நேரில் எனில் கண்கொள்ளாக் காட்சிதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தில் உண்மை இருக்கிறது அதிரா (கண்ணன் தொட்டிலை ஆட்டிவிட்டு, கண்ணனைக் கிள்ளிய அதிரா என்றும் பெயர் வைத்துக்கொள்ளலாம் தப்பில்லை)

      நீக்கு
  16. பாம்பைத் தைரியமாகக் கழுத்தில போட்டு, மரச்செருப்போடிருப்பவ, திருமாலின் மனைவிதானே.. நடுவில் இருப்பவர் திருமாலாகத்தான் இருக்கோணும் ஏனெனில் இருபக்கமும் மனைவிமார் இருக்கின்றனரே ஹா ஹா ஹா.. முருகனாக இருக்க இக்கோயிலில் வாய்ப்பில்லை:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி... யமுனை ந்தியில் தைரியமாக நீராடிய அதிரா என்ற டைட்டிலை எதிர்பார்க்கலாமா?

      நீக்கு
  17. கிருஷ்ணர் பிறந்தது வளர்ந்தது பற்றிப், பட்டி மன்றம் மற்றும் மேடைப்பேச்சுக்களில்தான் கேட்டறிஞ்சிருக்கிறேன், அவரின் கதை படிச்சதில்லை, இதோ படிக்கத் தொடங்கப் போகிறேன் கிருஸ்ணர் வரலாறு...:)..... "கிருஷ்ணர் வரலாறு படிச்ச அதிரா"... என ஊர் சொல்லுமே வருங்காலத்தில்:))).

    ஆனால் அந்த ஜெயிலை நேரில் பார்த்த பின்பு, எப்படித்தான் குழந்தையைக் கடத்தினார்களோ அவ்ளோ பாதுகாப்பிலிருந்து எனத்தான் எண்ணத் தோணுது. இக்காலத்தில பசியில ஒரு ராத்தல் பாணைக் களவெடுத்தால்கூட, கமெராவில பிடிச்சிடீனம் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதோ படிக்கத் தொடங்கப் போகிறேன் கிருஸ்ணர் வரலாறு.// எமன் ஒருவனது உயிரை எடுக்க வந்தபோது, அவன், இந்த ஒரு வேலையை முடித்த பிறகு என் உயிரை எடுத்துக்கொள் என்றானாம். அதுபோல, அதிராவுக்கு (இப்போ ஸ்வீட் 17தான்) 71 வயது ஆகும்போது, 'பொ.செ' நாவல்களை முடித்த பிறகு 'கிருஷ்ணர் வரலாறு' படிக்கப்போகிறேன். இந்த இரண்டும் முடித்தபிறகு உன்னுடன் வருகிறேன் என்று சொன்னால், 711 வயது ஆனாலும், பொ.செ நாவல்களையே முடித்திருக்க மாட்டார் இந்த அதிரா.

      நீக்கு
  18. கடவுளே கிருஷ்ணா!! கிருஷ்ணா!!!... வெளிப்படங்கள் போட்டது போதும், கதவைத்திறந்துகொண்டு கோயில் உள்ளே நுழைஞ்சிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கே பயமாக இருக்கிறது அதிரா...அடுத்த வாரமாவது கோவிலின் உள் எடுத்த படங்கள் வரவேண்டுமே...இன்னமும் வெளிப்புறப் படங்களையே அனுப்பியிருக்கிறேனோ என்று

      நீக்கு
  19. நுண்ணிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் அழகு.
    நிறைய கதைகள் சொல்லும் சிற்பங்கள்.
    அனைத்தையும் ரசித்துப்பார்த்து , நிறைய படங்கள் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.

    படங்கள் நிறைய கதைகள் சொல்கிறது. மரசெருப்பு அணிந்து பாம்பை கழுத்தில் போட்ட பெண் திருமாலாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    திருமால் மோகினி அவதாரம் எடுத்து அரக்கர்களை அழிக்க
    அழகிய தோற்றத்தில் வந்த கதை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... அப்படி இருக்கக்கூடுமா? சந்தேகம்தான்

      நீக்கு

  20. மரசெருப்பு அணிந்து பாம்பை கழுத்தில் போட்ட பெண்
    சும்ப, நிசம்பர்களை அழித்த துர்கையாக இருந்தாலும் இருக்கலாம்.
    தலைமேல் கையை வைத்து இருப்பது போன்ற நடன பாவம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்..நீங்கள் சொன்னது சரியாக இருக்கக்கூடும்

      நீக்கு
  21. படங்களால் நிரம்பி இருப்பதால் திறக்க நேரம் ஆகுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.... பாருங்க...இணையச் சேவையைக் குறை சொல்லாமல், பிளாக்ஸ்பாட்டைக் குறை சொல்லுகிறீர்கள்

      நீக்கு
  22. கமலா ஹரிஹரன் அவர்கள் வீட்டினரும் விரைவில் ஆரோக்கியமடைந்து, விரைவில் கமலா ஹரிஹரன் அவர்கள் இணையத்துக்கு வரணும்.

    கீதா சாம்பசிவம் மேடம் இணையத்துக்கு வருவது குறைந்துவிட்டது. நிறைய எழுதுவதும் குறைந்துவிட்டது. தி பதிவுகளில் டீ போடுவதைப் பற்றி எழுதினாலும் பலவித கருத்துகளை (நாக்பூரில் இருந்தபோது ஆரஞ்சுத் தோலை வைத்து டீ போட்டது, மண்குவளையில் டீ போடுவது, மோர் மிஞ்சிவிட்டால் அதிலிருந்து எப்படி தேநீர் போடுவது என) விதம் விதமா எழுதுவாங்க. அதாவது ஆக்டிவா எழுதுவாங்க, அனுபவம், திப்பிசம் என கலந்துகட்டி இருக்கும். ஆனால் அதிலிருந்து விலகி அத்தி பூத்தாற்போல் எழுதறாங்க. அதனால் அவர் எழுதுவது குறைந்துவிட்டது பழகிவிட்டது. ஆனாலும் ஒரு வாரம் எந்தக் கருத்துகளும் எழுதலைனா என்னாச்சு என்று தேடுவோம்.

    பதிவைவிட, பூங்காவில் தினமும் எல்லோரும் சந்திக்கும் உணர்வை எங்கள் பிளாக் தருவதால்தான், அவரவர் கருத,துகளை இங்கு எதிர்பார்க்கிறோம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!