ஞாயிறு, 7 ஜூலை, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 27 : நெல்லைத்தமிழன்

 

அக்பருக்கு ராஜபுதன இளவரசியான ஜோதா Bபாய்தான் பிடித்த மனைவி. அவளுக்குப் பிறந்தது மூன்று பையன்கள். மூத்தவன் சலீம், அதற்குப் பிறகு முராத், தானியேல். மூவருமே ஓபியம் மது போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகித்தவர்கள். அதனால் முராத் மற்றும் தானியேல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இறந்தார்கள். அதனால் சலீமை விட்டால் அக்பருக்கு வேறு வாரிசு கிடையாது. ஆனால் சலீமுக்கோ அடங்கி இருக்கும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை. தனக்கு 30 வயது ஆகிவிட்டது ஆனால் தந்தையோ நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார், என்றுதான் தான் மன்னனாவது என்ற கவலை. தந்தையோ எப்போது பார்த்தாலும் தன்னை வாழ்க்கையை அனுபவிக்க விடாமல், போர், கலவரம் என்று நாட்டின் ஒவ்வொரு புறத்திற்கும் அனுப்புகிறார் என்று தந்தை மீது இடைவிடாத கோபம் வெறுப்பு. அக்பருக்கோ, தான் சொல்வதைக் கேட்காமல் நடந்துகொள்கிறானே, வயதானாலும் பொறுப்பே வரவில்லையே என்று கோபம்

வங்காளத்தில் அக்பருக்கு எதிராக புரட்சி செய்யக் கிளம்பிய ஆஃப்கானியத் தளபதியை அடக்க, சலீம் தலைமையில் படை கிளம்பட்டும் என்று ஆணையிட (அப்போது அக்பர் தெற்கே படையெடுப்பில் இருந்தார்), அலஹாபாத்தில் படையுடன் இருந்த சலீமோ, இவருக்கு எப்போது பார்த்தாலும் எடுபிடி போல என்னை அனுப்புவதுதான் வேலை என்று சொல்லி வங்காளத்திற்குக் கிளம்பவில்லை. பீஹாரிலிருந்து வந்த வரிப்பணம் முப்பது லட்ச ரூபாயை தானே எடுத்துக்கொண்டு, அதில் தன் பெயரில் நாணயம் அச்சடித்தார். சக்ரவர்த்தியைத் தவிர வேறு யாரும் நாணயம் அடிப்பது பெரும் குற்றம். அக்பர், ஆக்ரா திரும்பியவுடன், அவருக்கே இந்த நாணயத்தை சலீம் அனுப்பினார். அதுவும் தவிர சலீம் தன் படையுடன் அக்பருக்கு எதிராக வருவதாகச் செய்தி கிளம்ப, அக்பருக்கு கடும் கோபம்

தெற்கே படைத் தளபதியாக இருந்த தன் நம்பிக்கைக்குரிய அப்துல்ஃபஸலுக்கு கடிதம் எழுதி என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்க, அவரோ, மகன் என்றும் பாராமல் சலீமை கைது செய்வதே சரி, பாதுஷா ஆணையிட்டால் தானே அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதாகச் சொல்ல, உடனே அக்பரும் அப்துல் ஃபஸலை தில்லிக்குப் போகச் சொல்கிறார். அதுமட்டுமல்ல, சலீமை விட, சலீமின் மகன் குஸ்ரூ, இளவரசனாக இருக்கப் பொருத்தமானவர் என்று வேறு சொல்லிவிட்டாராம் அப்துல் ஃபஸல். ஒற்றர் மூலம் இந்தத் தகவல் சலீமுக்கு வந்து சேர, ராஜபுதன சிற்றரசருக்கு அப்துல் ஃபஸலை வஞ்சனையாக கொலை செய்யச் சொல்லிவிடுகிறார்

அப்துல் ஃபஸல் கொலை செய்யப்பட்டதை அறிந்த அக்பருக்கோ சொல்லவொண்ணாத துக்கம். இதற்குப் பதில் சலீம் என்னைக் கொன்றிருக்கலாமே என்று அரற்றினாராம்அவர்களது உறவுமுறையே சீராக இல்லை. அரச பதவிக்குப் பொருத்தமில்லாதவன் என்று அக்பர் சலீமை நினைத்தார். சலீமோ, தன் தந்தை தன்னை எப்போதுமே மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்தார். திடுமென்று ஒரு நாள் அக்பர் வயிற்றுவலியால் சிரமப்பட்டு, இரண்டு நாட்களிலேயே இறக்கும் நிலைமைக்கு வந்தபோது, அரண்மனைப் பெரியவர்கள் சலீமை மெதுவாக அக்பர் முன் கொண்டுவர, சலீம் தலை வணங்க, அக்பர், தன் கிரீடத்தை சலீமின் தலையில் வைக்கச் சொன்னாராம், கூடவே பரம்பரையாக வந்த குறுவாளையும் கொடுத்தாராம். சலீம் ஜஹாங்கீராக பட்டம் ஏற்றவுடன் அக்பர் உயிர் பிரிந்தது.

இயற்கையிலேயே ரசனை மிக்க ஜஹாங்கீர், தன் மகன் குஸ்ரூவின் கண்ணைப் பிற்காலத்தில் பறித்ததும்ஜஹாங்கீரின் ஆசை மனைவி நூர்ஜஹான், குஸ்ரூவின் தம்பி குர்ரம் (பிற்காலத்தில் ஷாஜஹான்) என்று அவர்கள் இருவரின் அரசியல் விளையாட்டுகளும் சுவாரசியம் நிரம்பியது.

பெரிய மரக்கதவுகள்

அக்பரின் (பிற்பாடு ஜஹாங்கீரின்) அரண்மனை

அக்பர்/ஜஹாங்கீர் அரண்மனை நுழைவாயில். இந்துக்களின் கோலங்கள்.

அரண்மனையின் உட்பகுதி (நடுவில் வெட்டவெளி. சுற்றிவர அறைகள்)

இங்குதான் அக்பரின் மனைவியான ஜோதாபாய் (ராஜபுதன இளவரசி), தனக்குப் பிரியமான கிருஷ்ணன் கோவிலை வைத்திருந்தார். அந்த அறையையும் பார்த்தேன். பிற்காலத்தில் அது அழிந்துபட்டது.

இந்தப் பகுதிதான் ஜோதாபாய் தன்னுடைய இடமாக, சிறிய கிருஷ்ணன் கோவிலை வைத்திருந்தார் என்றார் வழிகாட்டி.

சிவப்புக் கல்லினால் ஆன இந்த அரண்மனைப் பகுதி முழுவதுமே அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்தையது. ஜஹாங்கீருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஷாஜஹானுக்கு வெள்ளைப் பளிங்கின் மீதான காதலால், தன்னுடைய அரண்மனைப் பகுதியை முழுவதும் வெள்ளைப் பளிங்கினால் அமைத்துக்கொண்டார். தன்னுடைய இரு மகள்களுக்கான சிறு அரண்மனையையும், தனக்கான சிறிய மசூதி மற்றும் சுற்றுப்புறங்களையும் வெள்ளைப் பளிங்கினால் கட்டிக்கொண்டார்.

மேல் விதானத்தில் இருந்த டிசைன்



நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் விதானங்கள்

அக்பர் அரண்மனையின் அழகிய கதவுகள்

 







செங்கற்களால் முழுவதும் கட்டப்பட்டது என்பது தெரியும். அதன் மீது சிவப்பு நிறம்.

அலங்காரங்கள் மிக நேர்த்தியாக இருக்கிறது.

உள்ளே சுட்ட செங்கற்கள்.

அக்பர்/ஜஹாங்கீர் அரண்மனை முற்றம். அங்கிருந்த நீரூற்று

ஜஹாங்கீர் அரண்மனை முற்றத்தில் நீரூற்று




நிறைய அரண்மனைப் பகுதிகள், கட்டிடங்கள் அழிந்துபட்டிருக்கலாம்.

 


அரண்மனையின் வடக்குப் பகுதியிலிருந்து பார்த்தால் தூரத்தில் தாஜ்மஹல். எவ்வளவு அழகாகத் தெரிகிறது பாருங்கள்.

இனி நாம் ஷாஜஹானின் அரண்மனைப் பகுதியை நோக்கிச் செல்லப் போகிறோம். அக்பர் பகுதி சிவப்பு நிற அரண்மனைகள்/கட்டிடங்கள் என்றால், ஷாஜஹான் அரண்மனைப் பகுதிகளோ வெள்ளைப் பளிங்குக் கட்டிடங்கள். அதனை அடுத்த வாரம் காண்போம்.

(தொடரும்)

70 கருத்துகள்:

  1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப் பொருளின் மீதுள்ள பற்றை விட்டுவிடுகிறானோ, அந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் வருவதில்லை. உண்மையாகவா?

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. படங்கள் வித்தியாசமான கோணங்களில் தெளிவாக, நுணுக்கமான வெளிப்பாடுகளையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளதை பாராட்டுகிறேன். முக்கியமாக கூரைப் படங்கள். படுத்துக்கொண்டு எடுத்ததைப்போல் போகஸ், லைட், மற்றும் ஆங்கிள் சரியாக உள்ளன. பிளாஷ் உபயோகித்தீர்களா? உபயோகிக்க அனுமதி உண்டா?

    சரித்திர பாடம் பள்ளிப் பாடஙக்ளில் இல்லாதது. விவரங்கள் புதியவை. நன்று, நன்றி. கையைப் பிடித்துக் கொண்டு வருகிறேன். விட்டு விடாதீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வெளிப்பாடு என்பதை வேலைப்பாடு என்று திருத்திக்கொள்ளவும்.

      நீக்கு
    2. வாங்க ஜெயகுமார் சார்... ஒரு தடவைதான் எழுதப்போகிறோம் என்பதால் எடுத்த படங்களில் நன்றாக வந்தவைகளை இங்கு பதிவில் சேர்த்துக்கொண்டுவிட்டேன். ஃப்ளாஷ் கிடையாது.

      சரித்திரத்திற்கு வருவதுபோல கோவில்களுக்கும் வாங்க.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு என்பதால் தாமதமா இல்லை இன்னும் நீரைப் பிடித்துச் சேமித்துவைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறதா கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே.

      அது தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எப்போது 24 மணி நேரமும் முன்பு போல் வீட்டு குழாய்களில் தண்ணீர் வரப் போகிறதோ தெரியவில்லை. நேற்று மாலையும் வெளியே செல்லும்படி அமைந்து விட்டமையால் இன்று கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தேன். காலையிலிருந்து வெளியே செல்லும் வேலைகள். அதனால் இப்போது வந்தவுடன் உங்கள் பதிவை படிக்கத் துவங்குகிறேன். அதனால் பதிவுக்கு என் கருத்தும் இன்று தாமதந்தான் மன்னிக்கவும். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. வரலாற்றின் பக்கங்கள்..

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  7. ////இயற்கையிலேயே ரசனை மிக்க ஜஹாங்கீர், தன் மகன் குஸ்ரூவின் கண்ணைப் பிற்காலத்தில் பறித்ததும், ////

    ஆகா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கெல்லாம் காரணம், பகையை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற ராஜ நீதிதான். அப்படிச் செய்யாதவர்கள் வரலாற்றில் வெகுவாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், தன் தந்தையார் தன்னை உயிரோடு விட்டதுபோல, குஸ்ரூவையும் உயிரோடு விட்டிருக்கலாம்.

      பாபர் (முதன் முதலில் இங்கு ராஜ்யம் ஸ்தாபிக்க வந்தவர்) தன் மகன் ஹுமாயூனிடம் தான் இறக்கும் தருவாயில் ஒரு வாக்குறுதி வாங்கிக்கொண்டார், எந்தக் காரணம் கொண்டும் சகோதரர்களுக்குத் துன்பம்-மரணம் விளைத்துவிடக்கூடாது என்று. அதனால் ஹுமாயூன் நிறைய கஷ்டங்களைப் பெற்றார்.

      நீக்கு
  8. ///இயற்கையிலேயே ரசனை மிக்க ஜஹாங்கீர், தன் மகன் குஸ்ரூவின் கண்ணைப் பிற்காலத்தில் பறித்ததும், ////

    கோவாலு என்னய்யா இதெல்லாம்?...

    ஈவு எரக்கமே இல்லியா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தான் ரசித்த காட்சிகளை பிறர் ரசிக்கக் கூடாது என்ற எண்ணமோ...  நல்லவேளை...  அந்தக் கண்களோடு நிறுத்தினாரே...   இரக்கம் மிகுந்தவர்.

      நீக்கு
    2. கலியுகத்திற்கு முன்புதான் கருணை என்பது இருந்தது. கண் தெரியாத திருதராஷ்டிரனை, அவன் ஆசைப்பட்டான் என்பதற்காக அரசனாகப் பதவி கொடுத்தது.

      மற்றபடி அங்கஹீனம் அடைந்தவர்கள், அதிலும் கண் தெரியாதவர்கள் அரசராக முடியாது. அதனால்தான் கண்ணைப் பறிக்கும் வைபவம்.

      நீக்கு
    3. அது சரி துரை செல்வராஜு சார்... நாம் 40களில் இருக்கும்போது, நமக்குக் கிடைக்கவேண்டிய பதவியோ இல்லை சொத்தோ, நம் பையனுக்குக் கிடைக்கும்போது, நாம் அடைவது ஆனந்தமா இல்லை பொறாமை/கோபமா?

      நீக்கு
  9. ஈவு எரக்கமே இவனுங்க சரித்திரத்துல இருந்தது இல்லை!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரக்கம் சரி, ஈவுன்னா இன்னா சார்? 

      நீக்கு
    2. எந்தா சாரே ஏதும் மனஸ்ல ஆகலையோ..

      எரக்கம் ன்னா மனிதாபிமானத்த நாலா எட்டா வகுக்கறது...

      ஈவு ந்னா மிச்சம் மீதி கிடக்குறது...

      எறச்சிக் கடை ஏவாரம் முடிஞ்சதுக்கு அப்புறம் நாய் கடிக்காத எலும்பு கெடக்குமே அது மாதிரி...

      நீக்கு
    3. பினாயில் விட்டு கழுவ வேணும்...

      நீக்கு
    4. ஈவிரக்கம் இருந்ததால்தான் உயிரை அப்போது எடுக்கவில்லை.

      நீக்கு
  10. படங்களும் பகிர்வும் யாத்திரையும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தை ஜெயகுமார் சார்... ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க. நலமா?

      நீக்கு
  11. உலகில் கோடானு கேடி மக்களை கடவுள் படைக்கிறார்
    ஆனால் இந்த இருவருக்கு மட்டும் தனிச்சிறப்பு. கடவுள்
    தந்துள்ளார்

    எல்லோரும் எல்லா கேள்விகளுக்கும் சென்று தரிசனம் செய்ய இயலாது
    எனவே திரு. நெல்லை தமிழன்
    அவர்களை. படைத்து எல்லா
    கோவில்களையும் தரிசித்து
    துல்லியமாக படங்கள் எடுத்து
    வரலாற்று கதைகளுடன்
    திரு. கௌதமன் என்பவர் மூலமாக மின்நிலாவிலும்
    ப்ளாக் பகுதியிலும். வெளியிட்டு மக்களை சந்தோஷப்படுத்துங்கள்
    என்று படைத்தார்.
    அந்த தொழில் திர. நெல்லை தமிழன் அவர்களும் திரு. கௌதமன் அவர்களும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறீர்கள்
    கடவுள் அருளால் மேலும் மேலும். நிறைய எழுதி மக்களை மகிழச்செய்யுங்கள்.

    அனைவரின் சார்பிலும்
    நல்வாழ்த்துக்கள்

    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்ரபாணி சார்... இறை அருளால் 106 வைணவத் தலங்களுக்கும் யாத்திரை செல்ல முடிந்தது. பலவற்றிர்க்கு நிறைய தடவைகள் சென்றிருக்கிறேன். முன்பு எங்கள் பிளாக்கில் ஞாயிறு பகுதி பட உலாவாக வந்துகொண்டிருந்தது. அந்த இடத்தில் யாத்திரை என்ற தலைப்பில் நிறைய படங்களோடு வெளியிட அனுப்புகிறேன். இந்த ஐடியா சரியாக இருந்தது என்று கருதியதால் ஞாயிறை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டேன்.

      சில சமயங்களில், இவற்றைப் படிப்பார்களா என்றும் தோன்றும். அதனால் முடிந்த அளவு அளவுக்கு மீறிய செய்திகள் இல்லாமல் (புராணக் கதைகள், பாசுரங்கள் போன்று) படங்களுடன் எழுதுகிறேன். நன்றி

      நீக்கு
  12. எல்லா கேள்விகளுக்கும் என்பதை எல்லா. கோவில்களுக்கும் என்று படிக்கவும்

    சிலசமயம். நாம் டைப் செய்தபிறகு மாறிவிடுகிறது
    மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும்போதே புரிந்துவிடுகிறது சக்ரபாணி சார்

      நீக்கு
  13. வரலாற்று தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. பெரும்பாலும் தமிழக அரசர்களில், மகனுக்கும் தந்தைக்கும் பிரச்சனை ஏற்பட்டதில்லை, தார்மீக ரீதியான ஒழுக்கம் இருந்தது. இது இந்து கலாச்சாரம் என்று சொல்லலாம். இதிலும் விதிவிலக்குகள் இருந்திருந்தன (சகோதரர் போட்டியில், ஒருவன் முஸ்லீம் அரசருடன் சேர்ந்துகொண்டு மொத்த பாண்டிய அரசையே முஸ்லீம்களுக்குக் காவு கொடுத்தது போல). அதுபோல பாண்டிய அரசன், பழி வாங்க, சோழ அரசரின் அரண்மனையை முற்றிலும் அழித்தது போல.

    ஆனால் உறவு முறைகளில் குழப்பங்கள், அனர்த்தங்கள் நேர்ந்ததில்லை. (நம் கலாச்சாரத்தில்). ஆனால் அந்நிய கலாச்சாரம், அத்தகைய செயல்களைத் தவறு என்று சொல்லவில்லை, அன்னையை மாத்திரம் மணந்துகொள்வதை அந்த மதம் ஒத்துக்கொள்வதில்லை. மற்றபடி வேறு எதுவும் தவறல்ல.

    பதிலளிநீக்கு
  15. அரண்மனை படங்கள் எல்லாமே அட்டகாசம், நெல்லை!

    விதானத்து நுணுக்கமான கலை வடிவங்கள் வாவ்!

    வரலாறு இப்படி நானும் தெரிந்து கொண்டதுண்டு எங்க வரலாறு டீச்சர் வரலாறு வகுப்பை சுவாரசியமாக, பாடத்துல உள்ளத சொல்லிட்டு அதுல அல்லாததை தனியாகக் கதை போல சுவாரசியமா சொல்லுவாங்க. ஆனா மறந்து போனவை இந்த அரண்மனைய பார்க்கறப்ப குறிப்பா ஜோதா வணங்கிய கிருஷ்ணர் கோயில் அது அப்பவே கொஞ்சம் சேதமாதான் இருந்தது., அதைப் பார்த்தப்ப நினைவு வந்தது இப்ப நீங்க சொல்லியிருக்கறத வாசிச்சப்ப மீண்டும் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). ஞாயிறு நீங்களும் உலா போய்விட்டீர்களோ என்று நினைத்தேன்.

      அது சரி... மனைவியை, அவர் சார்ந்த மதத்தைத் தொடரச் செய்யும் கணவர்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் மீது மதத்தைத் திணிக்கிறார்கள்? அதன் காரணம் என்னவாயிருக்கும்?

      நீக்கு
    2. நீங்க வேற இப்பலாம் உலா போறது இல்லை. வர வாரம், வெள்ளி சனி, நான் லீவு!

      ஜோதாவை வைச்சுக் கேட்கறீங்களா? ஹாங்க் பிள்ளைங்க வாரிசுல்லா? தன் வம்சம் பிறழக் கூடாதே!

      எல்லாரும் மனைவிய அவங்க சார்ந்த மதத்தைத் தொடர விடுவதில்லை. மதம் மாறினாத்தான் கல்யாணம்னும் இருக்கே இப்பவும்.

      ஜோதா வாரிசில்லை. ஆனா பாருங்க அதுவே எனக்கு ஆச்சரியம் தான். எப்படி அனுமதி கொடுக்கப்பட்டதுன்னு!!

      கீதா

      நீக்கு
    3. அந்த கண்டிஷன்லதான் அந்த ரஜபுதன இளவரசி அக்பரை திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்திருப்பாராயிருக்கும். இதற்கே அரசரின் சகாக்கள், சமய ரீதியானவர்களுக்குப் பிடிக்கவில்லையாம். என்ன இது, அரண்மனையில் இந்துத் திருவிழாக்கள் என்று எரிச்சலாகச் சொன்னார்களாம். அதனால்தான் அக்பருக்குப் பிறகான காலத்தில் அந்த இடம், கோவில் அழிந்துபட்டதாம்.

      நீக்கு
  16. பூங்கதவே தாழ் திறவாய்!!!! போல அழகான மரக்கதவுகள். அப்ப பார்த்தவை ஒரு முறைதானே அதுவும் ஓடி ஓஒடி வேகமாக நடந்து போய் பார்த்தது.

    அரசவை முற்றம் சூப்பர் படம். அது போல வாயில் அந்த ஃபோட்டோவும் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் முற்றங்களில் வடாம் காய வைத்திருந்திருப்பார்களா? அரச மகளிர்களுக்கும் பொழுதுபோக்கு, வம்புப் பேச்சுகள் இருந்திருக்காதா? காவலர்கள் எங்கும் நிறைந்திருந்திருப்பார்களே... என்றெல்லாம் இந்த இடங்களைக் கண்டபோது நான் யோசித்தேன்

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நானும் இப்படி நினைச்சதுண்டு ஊருக்கே வத்தல் போடலாம்! மசாலா பொருட்கள் காய வைச்சிருப்பாங்களோன்னு நெல்லு , கோதுமை எல்லாம்.

      அது போல அங்க டான்ஸ் கேளிக்கைகள் நடக்கரப்ப கீழ வெராண்டாக்களில் மக்கள், அரசவை கடை ஊழியர்களும் மேலே பால்கனில சுத்திலும் கொஞ்சம் பொறுப்புகளில் இருப்பவங்களும் மண்டபம் போல இருக்கறதுல அரச குடும்பம், தளபதிகள் இப்படி அமர்ந்து பார்த்திருப்பாங்களோன்னும் தோணும். பால்கனினா டிக்கெட் இருந்திருக்குமோ!!!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை, வம்புப் பேச்சுகள் எல்லாம் அரண்மனைக்கு வெளியே பேசியிருப்பாங்க. உள்ளார எங்க இடுக்குல எந்தக் காது இருக்கோன்னு யாரும் பேசியிருக்கமாட்டாங்க! மாட்டிக்கினா அம்புட்டுத்தேன் வெட்டிப்புடமாட்டாங்க?!

      கீதா

      நீக்கு
    4. //அங்க டான்ஸ் கேளிக்கைகள் நடக்கரப்ப// அந்த அரண்மனையில் அவ்வப்போது நடப்பது அரச மகளிர்களால் நடத்தப்படும் வியாபாரக் கடைகள் (ஏதோ ஒரு முக்கிய தினத்தை முன்னிட்டு). அப்படிப்பட்ட ஒரு சமயத்தில்தான் ஜஹாங்கீர் தன் மனைவியை (அடுத்தவன் மனைவியை) கண்டெடுத்தார்.

      நீக்கு
    5. நம்மதான் க்ரைம் படங்கள் சீரியல்களில் (தமிழ் அல்லது தென்னிந்திய மொழி சீரியல்கள் அல்ல. இவங்களுக்கு யோசனையே கிடையாது) பார்த்திருக்கிறோமே. இரண்டு பேரும் இரண்டு திசையைப் பார்த்துக்கொண்டு பேசுவார்களே... அதுபோலவா?

      நீக்கு
    6. இரண்டு பேரும் இரண்டு திசையைப் பார்த்துக்கொண்டு பேசுவார்களே... அதுபோலவா?//

      ஹாஹாஹாஹா நிறைய க்ரைம் திரில்லர் பார்க்கறீங்களோ நெல்லை!! சங்கேத பாஷைல கூடப் பேசலாம். ஏதாச்சும் வேலை செய்து கொண்டே காஷுவலா பேசறாப்ல பேசலாம்....தனி இடத்துல கூடப் பேசலாம்

      கீதா

      நீக்கு
    7. அதில் இன்னொருவர் எதிர் முகாமிற்கு உளவு சொல்பவராக இருந்திருந்தால்? ரஷ்யால மனைவிட்ட கூட நம்பிக்கையுடன் பேச முடியாதுன்னு சொல்வாங்க

      நீக்கு
  17. விதானத்து டிசைன்களும் அதன் கீழே உள்ள படங்களில் இருக்கும் டிசைன்களும் நம்ம ஊர் கலை போலவே இருக்கு.

    இந்தச் சுட்ட செங்கல் நா அப்ப பார்த்தப்பவும் தெரிந்தது.

    இந்த ஓட்டை ஓட்டையா இருக்கும் சாளரம் போன்றதுல எல்லாம் சிலந்தி குளவி எல்லாம் கூடு கட்டாம பார்த்துக்கணுமே!!! பராமரிப்பு ரொம்பக் கடினம்.

    அது போல உள்ளே போறப்ப யாராச்சும் கூட போணும் இல்லைனா வழி தப்பவும் சான்ஸ் உண்டு. இல்லைனா ஊகத்தோடு நடக்கணும் எப்படு நுழைஞ்சோம் எப்படி வெளிய வரோம்னு...பல இடங்கள் கொஞ்சம் இருட்டாதான் இருந்தது அப்ப.

    நடக்க தெம்பில்லாதவங்களோட போனா முழுவதும் பார்க்க முடியாது.

    உங்க படங்கள் எல்லாம் பார்த்ததும் மீண்டும் போய் பார்த்து படங்களா எடுத்து வரணும்னு ஆசை வருகிறது. பெங்களூருக்குள்ளயே போகமுடியாம இருக்கு இதுல ஆக்ராவா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பு கடினம்தான், அதற்கான நிதி ஒதுக்குவதிலும் சுணக்கம் இருக்கும். காரணம் நுழைவாயில் வரவு எல்லாம் சம்பளத்தில் போய்விடுமே

      நீக்கு
    2. பெரும்பாலும் வழி தப்ப வாய்ப்பு இல்லை. எப்போதுமே நமக்கு மனதில் எந்தத் திசையிலிருந்து நுழைந்தோம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறோம் என்ற புரிதல் இருந்தாலே போதும்.

      இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லும்போது, கண்ணில் அதிசய கருப்பு மையைப் பூசிக்கொண்டால் (இமையில்தான் ஹா ஹா), பூமிக்குக் கீழே இருக்கும் புதையல் தெரியவந்தால் எப்படி இருக்கும்?

      நீக்கு
    3. ஆக்ராவுக்குப் போகமுடியாவிட்டாலும் -- நம்ம அகரா போகலாம் என்று பார்த்தால், அங்கே இன்று ஜகன்னாதர் கோவில் ராதா யாத்திரை என்று சொல்கிறார்கள்!

      நீக்கு
    4. நானும் இன்னும் அகரா ஜெகன்னாதர் கோவிலுக்குச் சென்றதில்லை. விரைவில் செல்லணும்

      நீக்கு
  18. பதில்கள்
    1. 6 கருத்துகள் ஒளிந்து கொண்டிருந்தன.  காதைப் பிடித்துத் திருகி இழுத்துக் கொண்டுவ் வந்து விட்டேன்!

      நீக்கு
  19. வரலாறும் அருமை, படங்களும் அருமை.
    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கோணத்தில் எடுக்க பட்டு அரண்மனையின் அழகை எடுத்து காட்டுகிறது.

    ஜஹாங்கீர் அரண்மனை முற்றத்தில் நீரூற்று படம் , மற்றும் அகபர் அரண்மனை கதவுகள், மேல் விதானம், தூண்களின் படம் எல்லாம் அருமை. ரசித்துப்பார்த்தேன்.

    ஜஹாங்கீர் அழகு உணர்ச்சி உடையவர் , ஆடம்பர வாழ்க்கை மேலும், வாழ்க்கையை ரசித்து வாழவும் விருப்பம் உடையவர் என்றும், இவரின் ஆட்சி காலத்தில் நீதி சங்கிலி அமைத்து நீதி வேண்டுவோர் அந்த மணியை அடித்ததும் நீதி வழங்கபட்டது என்று படித்து இருக்கிறேன்.

    ஜஹாங்கீர் தோட்டம் மிக அழகாய் இருக்கும்.

    நாங்கள் போன போது எடுத்த படங்களும் ஒரு ஆல்பம் முழுவதும் இருக்கிறது. டெல்லியில் ஒவ்வொரு சுற்றுலா தளத்திலும் அப்போது ஆல்பம் விற்பார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். வெகு சில இடங்களில்தான் ஆல்பம் விற்கிறார்கள். நாமே படங்கள் எடுத்துக்கொள்ளலாம் எனும்போது ஆல்பம் எதற்கு?

      ஜஹாங்கீர் நீதிச் சங்கிலி வரும் என நினைக்கிறேன்.

      நன்றி

      நீக்கு
    2. அவர்கள் எடுத்து வைத்து இருக்கும் ஆல்பம் இல்லை நெல்லைத் தமிழன், முன்பு பிலிம் ரோல் காமிராவில் எடுத்தவைகளை ஒட்டி வைத்து கொள்ளும் ஆல்பம். நாங்கள் எடுத்த படங்களை ஒட்டி வைத்து இருக்கிறோம்.

      நீக்கு
    3. ஓஹோ... அப்படி படங்களை ஒட்டிவைத்த ஆல்பங்கள் உங்களிடம் நிறையவே இருக்குமே... ஆனால் பழைய படங்களில் காலத்தினால் தெளிவின்மை ஏற்பட்டுவிடும். அது ஒன்றுதான் பிரச்சனை.

      நீக்கு
  20. படம் எடுக்கிற கலை நெல்லைக்குக் கைவந்திருக்கு. குறிப்பாக அந்த விதான படப்பிடிப்பு. கிடைக்கறதையெல்லாம் அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்ட அழகு. பிரமாதம் நெல்லை.

    பதிலளிநீக்கு
  21. // நாம் 40களில் இருக்கும்போது, நமக்குக் கிடைக்கவேண்டிய பதவியோ இல்லை சொத்தோ, நம் பையனுக்குக் கிடைக்கும்போது, நாம் அடைவது ஆனந்தமா இல்லை பொறாமை/கோபமா?.. //

    இதென்ன?..

    தம்மின் தம் மக்கள் - என்று குறள் இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... அருமையாக, எனக்கு சட் என்று தோன்றாமல் போன குறளைக் காட்டியதற்கு நன்றி துரை செல்வராஜு சார்.

      Zee Tamil சரிகம ப நிகழ்ச்சியில் ராகதர்ஷினி (வர்ஷினி?) என்ற பெண் மிக அருமையாக பல பாடல்கள் பாடினார். அவரின் தந்தையும் நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தார். அவர், தான் பெரிய இசைக்கலைஞனாக ஆகணும் என்ற கனவு நிறைவேறவில்லை, மகள் மூலம் நிறைவேறப் பாடுபடுகிறேன் என்றார். இது நம் கலாச்சாரம்.

      ஆனால் அரசர்களுக்கான, அரசியல்வாதிகளுக்கான நீதி வேறல்லவா?

      நீக்கு
  22. ////எந்தப் பொருளின் மீதுள்ள பற்றை விட்டுவிடுகிறானோ, அந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் வருவதில்லை. உண்மையாகவா?///

    மது அருந்தாதவனுக்கு மதுவினால் துன்பம் எப்படி வரும்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பற்றுதலுடன் இருந்த பொருளின் மீதுள்ள பற்றை விட்டுவிட்டால், அதனால் அந்தப் பொருளால் துன்பம் வருவதில்லை.

      எப்போதும் மது அருந்தாதவர்களால் நாட்டுக்கும் கேடு. வீட்டுக்கும் கேடு. இதுதான் இன்றைய தமிழக நிலைமை. ஹா ஹா ஹா.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    அக்பர், மற்றும் அவரது மகன்களை பற்றிய விபரமான கதைகளும், சரித்திரம் படித்து, அது காலப்போக்கில் லேசாக மறந்து போன காலங்களை தட்டி எழுப்புகிறது.

    படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. அத்தனைப் படங்களையும் ரசித்து, உங்கள் விளக்கமான கட்டுரையும் படித்த பின்னர் எத்தனை விஷயங்கள் நடந்துள்ளது என்பதை ஆச்சரியத்துடன் நினைக்கிறேன்.

    தன் மகனையை வெறுத்த முகலாய பேரரசர்களின் விநோத குணங்கள் வியப்பைத் தருகின்றன.

    /அரண்மனையின் வடக்குப் பகுதியிலிருந்து பார்த்தால் தூரத்தில் தாஜ்மஹல். எவ்வளவு அழகாகத் தெரிகிறது பாருங்கள்./

    ஆம்.. எத்தனை அழகு. காண கண்கொள்ளா காட்சி. நல்ல குணங்களில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களின் கலை கண்ணோட்டங்கள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. தங்களுடைய அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. அடுத்தப் பகிர்வுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் விளக்கமான கருத்திற்கு நன்றி.

      எனக்குமே, அரசன் என்ற பதவிப் பொறுப்பில் இருந்தாலும், பையன்கள் மீதான அன்பு விட்டுப்போகுமா என்று தோன்றியது. ஆனால் முகலாய அரசர்கள் பரம்பரையில் பாசத்திற்கெல்லாம் இடமில்லையே

      நீக்கு
  24. விரிவான தகவல்கள், படங்கள் என அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  25. அரண்மனை படங்கள்,கதவுகளின் வேலைப்பாடுகள், அரசர்களின் சரித்திரம், என நிறைந்த படங்களூடனும் விளக்கங்களுடன் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!