வியாழன், 25 ஜூலை, 2024

கண் மூடி இருக்கும் கன்னி..

 

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 


அயன் பட பாணியில் உணவை மறுத்த ஏர் இந்தியா பயணி கைது செய்யப்பட்டார்.  உணவை மட்டுமல்ல தண்ணீரைக் கூட அந்த ஐந்தரை மணி நேரப் பயணத்தில் அவர் மறுத்தே வந்தது பணிப்பெண்களுக்கு வினோதமான இருக்க, அவர்கள் மூலம் அந்த நபர் பிடிபட்டிருக்கிறார்.

​- ஏர்-இந்தியாவில் 1000+ பணியிடங்களுக்கான தேர்விற்கு நேரில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து மும்பையில் திரண்ட 15000+ இளைஞர்கள்.

- நம் நாட்டில் எளிய மக்கள் பயன்படுத்தும் வார் வைத்த ரப்பர் செருப்பு குவைத்தில் 45,000 ரியாலுக்கு அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த செய்தி இண்ஸ்டாவில் வைரலானது. இந்த வகை காலணிகளை இப்போது இந்தியர்கள் கழிவறைக்குச் செல்லவே பயன் படுத்துகிறார்கள் என்றும் சிலர் இண்ஸ்டாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

- பெரிதும் வெறுக்கத்தக்க உணவுகளில் முதலிடம் பிடித்திருப்பது ஜல் ஜீரா.  இதைத் தொடர்ந்து கஜக், தேங்காய் சாதம், பண்டா பட், ஆலு பைங்கன், *தண்டை, மிர்சி கா சலன், மால் புவா இதைத் தொடர்ந்து உப்புமா:)).

- பெரிதும் விரும்பப்படும் உணவுகளில் மாங்கோ லஸ்ஸி இடம் பிடிக்கிறது. அதைத் தொடர்ந்து மசாலா சாய், கார்லிக் நான், தந்தூரி ரொட்டி போன்றவை இடம் பிடிக்கின்றன.  கேள்வியேபடாத இந்த உணவுகள் எந்த மாநிலத்திற்குரியவை என்பது தெரியவில்லை. அதன் சரியான உச்சரிப்பும். தெரிந்தவர்கள் கூறுங்கள்.

- புது டில்லி: உ.பி. அரசுப் பள்ளிகளில் 'கற்றுப் பார்' என்று ஒரு கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மாணவர்கள் கல்வியோடு சுய தொழிலையும் கற்கலாம் என்னும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு டீ தயாரிப்பது, பக்கோடா போடுவது, பஞ்சர் ஒட்டுவது, பழச்சாறு தயாரித்தல், விவசாயம், தச்சு வேலை போன்றவற்றை ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்திற்கு இவை உதவும்.

- பெங்களூரு: 2004 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் நடந்த அறுவை சிகிச்சையின் பொழுது பத்மாவதி என்னும் பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த தீபக் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தார். இருபது வருடங்கள் கழித்து இப்போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு ₹500,000 வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த தவறை செய்த இரு மருத்துவர்களும் அந்த பெண்ணிற்கு தலா ₹50,000 கோர்ட் செலவுகளுக்காக தர வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

-  



==============================================================================================

திறமைக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை.  அனுபவங்கள் அதை நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்திய வண்ணமே உள்ளன.  நாம்தான் உடனடியாக அவற்றை மறந்து விடுகிறோம்.

மாத்தி யோசிக்கும் கலை மட்டுமல்ல, பிரச்னை பற்றிய தெள்ளிய அறிவு..

சில கதைகளை நினைவு படுத்துகிறேன், நீங்களும் படித்திருப்பீர்கள்.

ஒரு சிறிய பாலத்தின் அடியில் சுமை ஏற்றிவந்த ஒரு லாரி மாட்டிக்கொள்ள, பாலத்தின் உயரம் பற்றி தெரியாமல், அளவெடுக்காமல் அடுக்கி விட்டார்களே என்று விவாதம் நடக்கிறது.  பாலத்தில் பாதி மாட்டிக் கொண்டிருக்கும் லாரியை எப்படி விடுவிப்பது என்று மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்.  சுமையை உருவி உருவி எடுத்து உயரத்தை குறைக்கலாம் என்கிறார் ஒருவர்.  பாலத்தின் மேல்பகுதியை சீவி விடலாம் என்கிறார் ஒருவர்.  முடிவெட்டாமல் முடிவெடுக்காமல் திண்டாடும் நிலையில் அங்கு வந்த ஒரு எளிய கிராமவாசி சொல்லும் யோசனை சிறந்ததாகப் படுகிறது.  வெற்றியும் பெறுகிறார்கள்.  

அவர் சொன்னது லாரியின் நான்கு டயர்களிலும் கொஞ்சம் காற்றைக் குறைத்து விடுங்கள் என்பதாகும்.  இதே காற்றிறக்கும் யோசனையை ஒரு புகழ்பெற்ற கார் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த காரை கம்பெனி கேட் தாண்டி வெளியில் எடுக்க முடியாத நிலை வரும்போதும், அங்கு ஒரு தொழிலாளி இதே போல யோசனை சொல்வதாகவும் படித்திருக்கிறோம்.

இன்னொரு கதை, பங்ச்சரான டயரை ஸ்டெப்னி கொண்டு மாற்றும் ஒருவர், டயரை மாட்டும் சமயம் அதன் ஸ்க்ரூஸ் அருகிலுள்ள ஆழமான ஓடையில் விழுந்துவிட, அங்கு வந்த ஒரு கிராமத்து ஆளை (இங்குமா?  கிராமத்து ஆள் என்றால் எவ்வளவு இளப்பமாக பார்க்கிறார்கள் பாருங்கள்!) ஓடையில் குதித்து திருகாணிகளை எடுத்துத் தரச்சொல்ல, அவர் மறுத்து அவரும் ஒரு எளிய யோசனையைச் சொல்கிறார்...  

மற்ற மூன்று டயர்களிலிருந்தும் திருகாணிகள் இரண்டிரண்டு கழற்றி இதில் மாட்டி, அருகிலுள்ள மெக்கானிக் ஷாப் வரை சென்று, அங்கு சரி செய்து கொள்ளலாம் என்கிறார்.  'இது ஏன் எனக்கு தோன்றாமல் போயிற்று?' என்று யோசிக்கிறார் அவர்.

'வாட்ஸாப்'பில் வந்த நகைச்சுவை கதை ஒன்று...  ஒரு பாய் தனது வலதுகால் பச்சை நிறமாய் மாறிப்போவதாக ஒரு மருத்துவரை அணுகுகிறார்.  ஏதேதோ மருந்து கொடுத்து .பார்க்கிறார் மருத்துவர்.  பிரச்னை அப்படியே இருக்க, வலது காலை முழங்கால் வரை வெட்டி எடுத்து விடுகிறார்.  நிம்மதி.  அது கொஞ்ச நாள்தான்.  மறுபடி இடது காலில் அதே மாதிரி வருகிறது.  மருத்துவர் இடது காலையும் முழங்கால் வரை எடுத்து விடுகிறார்,  கொஞ்ச நாள் சென்று மறுபடி பாய் பிரச்னையோடு வர, மருத்துவர் வலது தொடையை வெட்டும் முன் யோசிக்கிறார்.  அப்போதுதான் அவருக்கு விஷயம் விளங்குகிறது..   "பாய்..  நீங்கள் உடுத்தும் பச்சை கைலி சாயம் போகிறது ..  அதுதான் பிரச்னை" என்கிறார்.  இது அசாத்தியம் என்று தோன்றலாம்.  ஆனால் அபப்டியும் இருக்கிறார்கள். 

எனக்கு ஒற்றைத் தலைவலி பாடாய்ப் படுத்தியபோது மருத்துவரைப் பார்க்கச் சென்றேன்.  நான்கைந்து கேள்விகள் கேட்டதுமே அவர் என்னை ஸ்கேன் எடுக்கச் சொல்லி விட்டார்.  முதலில் மூளையில் டியூமர் இருக்கிறதா என்பதை ரூல் அவுட் செய்து கொள்கிறாராம்.  நமக்கும் அதைச் செய்யாமல் இருக்க மனம் துணியாது.  ஆனால் ஸ்கேன் எடுத்ததில் ஒன்று உறுதியானது.  எனக்கு மூளை இருக்கிறது என்பது!

காசு பார்க்கும் உத்தி என்றும் சொல்லலாம்.  கன்னாபின்னா வைத்தியம் என்றும் சொல்லலாம்!

எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் தண்ணீர் ஒரு பிரச்னை.  ஏற்கெனவே இருந்த கிணறு நாற்றம் வருகிறது என்று பல்வேறு ரிப்பேர் முயற்சிகளுக்குப் பின் மூடிவிட்டு, போர்வெல் போட்டோம்.  எனக்கு அதிலேயே அதிருப்தி உண்டு.  தற்சமயம் Bபோர் போட்டு ஒன்றரை வருடம் ஆன நிலையில் தண்ணீர் கொஞ்சம் கலராகவும் விட்டு விட்டும் வந்தது.  குழாயில் அடைப்பு எடுக்க முயற்சித்தோம்.  (B)பில்டர் இந்தப் பக்கம் மூன்று வீடுகளுக்கு ஒரு காமன் கனெக்ஷனும், அந்தப் பக்கம் மூன்று வீடுகளுக்கு தனி காமன் கனெக்ஷனும் கொடுத்து சிக்கனம் பார்த்திருந்தார்(ன்). 

எங்கள் பிளம்பர் ஒரு முறை அந்த குழாய் வழியில் ஆசிட் அடித்து அடைப்பெடுத்தார்.  ஆனாலும் மறுபடி கொஞ்ச நாளில் இதே போல ஆனது.  மறுபடி  என்றால் ஃபில்ட்டர் போடலாம், மற்றவர்கள் ஒத்துவரவில்லை என்றால் தனி கனெக்ஷன் எடுத்து ஃபில்ட்டர் போடலாம், (B)போரையே தூக்கி வருடத்துக்கொருமுறை மண்ணெடுக்க  வேண்டும், மண் சரிந்திருக்கும், மூடியிருக்கும், மண்ணோடு வரும்  என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.  சுமார் 25,000 வரை   பட்ஜெட்டும் சொன்னார்.  நாங்கள் ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தோம்.  ஆறு வீடுகள் சம்பந்தப் பட்ட அப்பார்ட்மெண்ட் என்பதால் எல்லார் சம்மதமும் பெறவேண்டிய சூழல்.  நான் மட்டும் தனியாக ஒரு கனெக்ஷன் எடுத்து வசதி செய்து கொள்ளலாம் என்றாலும் 25,000 செலவாகும்.  அதை நான் மட்டும் கட்டவேண்டும்!

அவரை பிடிப்பது வேறு பெரும் சிரமமாயிருந்தது.  பெரும்பாலும் ஃபோன் செய்தால் எடுக்க மாட்டார்.  எடுத்தாலும் தவணை வாங்குவார்.  ஆனால் வந்தால் பொறுப்பாக வேலை செய்து கொடுப்பார்.  ஆனாலும் சில சமயங்களில் இவர்களுக்கெல்லாம் ஒரே மாதிரி யோசித்து முன்னர் சொன்ன கதைகள் மாதிரி கூர் மழுங்கி இருக்கும்  அல்லவா...

கடந்த வாரம் தண்ணீர் வரா ஒரு நாளில் நான் வெடிக்க, கீழ் வீட்டுக்காரர் அவருடைய ஆஸ்தான ப்ளம்பரை அழைக்க, திருப்பம் நிகழ்ந்தது. 

"தண்ணீர் மெயின் டேங்க்கிலிருந்து கீழே வரும் வழியில் உள்ள ஜங்க்ஷன் இடத்தில் அடைத்துக் கொண்டிருக்கலாம், அதை பார்ப்போம், அதுதான் எப்பவுமே முதல் படி, அப்படி இருந்தால் சட்டென முடிந்து விடும்.  பெரும்பாலும் இதிலேயே சரியாகி விடும் இல்லாவிட்டால் என்ன செய்யலாம் என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக பார்க்கலாம்" என்றார்.  

பைப்பையோ அறுத்துப் பார்த்ததில் அங்கே மண் கல்லாக இறுகி தண்ணீர் கீழே வராமல் மெலிதாக வருவது தெரிந்தது, அடைப்பு இருந்ததும் புரிந்தது.  அந்த யூனியன் பைப்பைவால்வோடு மாற்றியதும் சரியாகி விட்டது!

அப்பா...டி...   எவ்வளவு ரிலீஃப் தெரியுமா?  ஜஸ்ட் 1800 ரூபாயில் வேலை முடிந்தது!  இப்போது தடையில்லாமல் தண்ணீர் வருவதில் உள்ள  சுகம், நிம்மதி...

சுபம்.  சுகம்.

============================================================================================

வண்ணதாசன் என்ன சொன்னார் என்றால்.....


யார் யாரிடம் எதைப் பற்றி எவ்வளவு பேச வேண்டும் என்று சிலர் கணக்கு வைத்திருப்பார்கள். அதில் தப்பு ஒன்றும் கிடையாது. ஒரு வகையில் அது ஒரு கெட்டிக்காரத்தனம் தான் . இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் எனக்கு ரொம்ப வேண்டியவர்கள் கூட, என்னிடமும் அப்படியே இருப்பது மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் எதிர்பார்க்கிறது போல், என்னிடம் பேசுவதற்கு, உப்புப் புளியைத் தவிர வேறு  சரக்கு  இல்லாமல் இருக்கலாம். ஆனால் விஷயம் தெரிந்து  நல்லாப் பேசுகிறவர்களின் பேச்சை,  ஒரு சொட்டுக் கூடச் சிந்தாமல் அப்படியே வாங்கிக்  கொள்கிறேனே அது உண்மையா இல்லையா?

இவ்வளவு தூரம் இப்படியே தான் வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச தூரம் தானே பாக்கி. இதில் எதுக்கு எனக்கு வேண்டாத கவலை எல்லாம்?

-வண்ணதாசன் - 

=============================================================================================

இணையத்தில் பார்த்து ரசித்த படம்...

கண்ணை மூடி இருக்கும் கன்னி - 

வழியும் 
தண்ணீருக்காகவா, கண்ணீருக்காகவா?
எதற்காக, எதை மறைக்க 
கண்மூடி இருக்கிறாள்?
பாவங்களா, சுய பரிதாபங்களா 
எவை தண்ணீருடன் 
வழிந்து கரைந்து போகும்
என்று நினைக்கிறாள்?


"சோப்புத்தண்ணி கண்ல போகாம இருக்க நீ கூடத்தான் கண்ண மூடிப்பே..  உடனே ஏதாவது கவிதைன்னு கிளம்பி வந்துடுவீங்களே...!!"


============================================================================================

பைரப்பா என்ன சொல்கிறார் என்றால்.....


சமகாலத்தில் ஒன்றைப் பற்றி எழுதும்போது எழுத்தாளன் தகவல்களுக்காக தேடி அலையத் தேவையில்லை.  அவனை அறியாமல் அவனுடைய அனுபவத்தோடு இரண்டற கலந்துவிட்ட விவரங்கள் படைப்புக்கு தகுந்த வகையில் தாமாக பொங்கி வந்து விழுந்து விடும்.  ஆனால் சரித்திர பூர்வமான விஷயங்கள் அந்த அளவு அனுபவத்தோடு நெருக்கமாக வைப்பதில்லை.  ஆனால் ஆய்வுக்கு உகந்ததாக இருக்கிறது.  

- எஸ் எல் பைரப்பா -

==============================================================================================

வலையில் படித்தது...  "ஞிமிறு"  இந்த வார்த்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 

'ஞ' எழுத்து வரிசையில் தொடங்கும்  எத்தனை வார்த்தை அறிவோம் நாம்? ஞானம், ஞாலம், 

சிலபேர் நியாயம் என்பதை பேச்சுவழக்கில் 'ஞாயம்' என்பார்கள்!!!

வட இந்தியா முகலாய ஆட்சியால், ஹிந்து ராஜாக்கள் அரசவைகளின் ஆதரவால்  புத்தம்புதிதான ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டுக் கடைசியில் இருந்து தோன்றலாயின. அவற்றில் ராகமாலா ஓவியங்கள் என்பவை உண்டு. அளிமகிழ்வு (Bee-Joy) என்னும் ராகத்தின் (< அராகம் = செம்மை. ராகங்களுக்கு வர்ணம் உண்டு. உ-ம்: Blues என்கிறோமே) ஓவியங்கள், பாரதியின் "ஞிமிறென இன்புறு" வாக்கியத்தை விவரிக்கும் எனக் கருதுகிறேன்.

ஞகார எழுத்து தமிழின் சிறப்பு எழுத்து. இது வடமொழியில் சேர்த்துள்ளனர். ஆனால், பல வடநாட்டாருக்கு ஞ- வருக்கம் உச்சரிக்க வராது. ஞானம் க்யான் ஆகிவிடுகிறது அல்லவா?

ஞிமிறு என இன்புறு - மேலும் பார்ப்போம்,
நா. கணேசன்


********************************************************************************************************************************************

ஞிமிறென இன்புறு

ஞிமிர்தல் என்றால் ரீங்கரித்தல் என்று பொருள். ஆங்கிலத்தில் இதனை Humming, Buzzing என்பர். தேனீ, வண்டு ஆகிய பூச்சிகள் இவ்வகையான ஒலியை எழுப்புவதால் அவற்றுக்கு ஞிமிறு என்று பெயர். வண்டினங்களின் சிறகுகள் காற்றில் வேகமாக அதிர்வதால் இவ்வகை ஒலி உண்டாகிறது.

ஒரே மாதிரியான ஒலியை வண்டுகள் இடையறாது இசைப்பதால் அவை பாடுவதைப் போன்ற மயக்கம் நமக்கு ஏற்படுகிறது. கம்பர் கூட , ' தேம் பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட' என்று எழுதுகிறார்.  பாடுதல் என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும். உள்ளம் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் போது உதடுகள் தன்னியல்பாக ஒரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கவிடும். இவ்வாறு பாடுவதையும் ஆங்கிலத்தில் Humming என்ற சொல்லால் குறிப்பர்.

வண்டுகள் எப்படிக் கவலையின்றி, பாடிக்கொண்டே, மலர்கள் தோறும் சென்று, தேன் சுவைத்து மகிழ்ச்சியாகச் சுற்றித் திரிகின்றனவோ , அதே போல மனிதர்களும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. அதனால் தான் ஞிமிறென இன்புறு என்கிறார்.

இந்த ஆத்திசூடியை இன்னொரு கோணத்திலும் அணுகலாம்.

தேனீக்கள் உழைப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் போனவை. ஒரு துளி தேனைச் சேகரிப்பதற்காக தொலை தூரம் பறப்பவை. தேனீக்கள் வாடித் தளர்ந்திருப்பதை நாம் ஒருபோதும் கண்டதில்லை.

'எப்போதும் பாடுபடு. எப்போதும் சுகப்பட்டுக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது' என்று பாரதியார் எழுதுகிறார். எனவே, தேனீயைப் போல் உழைப்பதில் இன்பம் கொள் என்னும் பொருள்பட "ஞிமிறென இன்புறு" என்று பாரதியார் எழுதியிருக்கலாம்.  "The process is more important than the result. The result is just a by-product of the process. Take care of the process. Eventually you will get the desired result" என்ற கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் கூற்று இங்கே நினைவுகொள்ளத்தக்கது. ~நிரஞ்சன்

N. Ganesan அவர்கள் பக்கத்திலிருந்து - நிரஞ்சன் என்பவருக்கு அவர் அளித்த பதிலில்...


=========================================================================================

இணையத்தில் படித்ததுதான்...   புதன் கேள்வி பதில் பகுதியில் பதில் கிடைக்குமா?!!


===========================================================================================

பொக்கிஷம்  :- 

ஆஸ்திகள் 1 கோடிக்கு மேல் இருந்தால் இன்ஷ்யூரன்ஸ்...   அந்தக் காலத்திலேயே 1 கோடி..  அம்.....மாடி!


ஓவியம் யார் என்று தெரிகிறதா?  எந்தத் தொடருக்கு என்று கண்டுபிடிப்பது சிரமம்தான்..  சிரமம் என்ன, யூகிக்க முடியாதுதான்!


தேடாத இடமெல்லாம் தேடினேன்....


எந்த பிறந்தநாள் என்று சொல்லாததால் ஜோக் பூர்த்தி ஆகவில்லை!


'ராலே' சைக்கிள் தெரியும்...  "ராலே சைக்கிள் நல்ல தரமானது.." என்று ரேடியோ விளம்பரம் கூட வரும்.  'ஹெர்குலிஸ்' சைக்கிள் தெரியும்..  Bபார் எல்லாம் உறுதியாக இருக்கும் என்று நம்பிய காலம் உண்டு!  பிலிப்ஸில் சைக்கிள் கேள்விப்பட்ட நினைவு இல்லை!  அப்புறம் 'ஹீரோ' சைக்கிள் கூட வந்ததது.

128 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

    தமிழ் வாழ்க

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. ///சமகாலத்தில் ஒன்றைப் பற்றி எழுதும்போது எழுத்தாளன் தகவல்களுக்காக தேடி அலையத் தேவையில்லை. அவனை அறியாமல் அவனுடைய அனுபவத்தோடு இரண்டற கலந்துவிட்ட விவரங்கள் படைப்புக்கு தகுந்த வகையில் தாமாக பொங்கி வந்து விழுந்து விடும். ///


    நாங்க இப்டில்லாம் சொன்னா ஒத்துக்குவோமா!!..


    மசாலாத்தனம் வேணும்ன்னு சத்தம் போடுவோம்...

    அவுங்கள மாதிரி
    இவுங்கள மாதிரி ந்னு கதி கலங்க அடிப்போம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அனுபவங்கள் எழுத்தில் கலக்கும் - முழுவதும் அல்ல!

      நீக்கு
  5. அயன் பட பாணியில் உணவை மறுத்த ஏர் இந்தியா பயணி கைது செய்யப்பட்டார். உணவை மட்டுமல்ல தண்ணீரைக் கூட அந்த ஐந்தரை மணி நேரப் பயணத்தில் அவர் மறுத்தே வந்தது பணிப்பெண்களுக்கு வினோதமான இருக்க, அவர்கள் மூலம் அந்த நபர் பிடிபட்டிருக்கிறார்.//

    அயன் படம் எல்லாம் பாத்ததில்லை இந்தச் செய்திலருந்து தெரிஞ்சது ஓ இப்படி ஒரு சீன் இருக்கு போலன்னு.

    இப்படியான செய்திகள் வியப்பாக இருப்பதோடு கேள்வியும் எழுப்புது! வியப்பு என்பது அந்த நபர் செய்த செயல் இல்லை. நம்ம ஊர்ல கோடிக் கணக்குல ஆட்டைய போட்டுட்டு குற்றம் புரிஞ்சவங்க வெளிநாட்டுல போய் செட்டில் ஆயிடறாங்க!!!! அவங்களும் மறைமுகமாக குற்றங்களை சுமந்துட்டுதான் போறாங்க!! 69 லட்சம் ஜுஜுபி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  அயன் படத்தில் சூர்யாவுக்கான காட்சிகள் கடத்தல் விஷயங்களில் இவ்வளவு முறை இருக்கிறதா என்று வியக்க வைக்கும்.  படமும் சுவாரஸ்யமாக இருக்கும். 

      கதாநாயகி தமன்னா... மன்னா....ன்னா...  னா.....

      நீக்கு
  6. பக்கோடா போடுவது, பழச்சாறு தயாரித்தல்,

    இதெல்லாம் இருக்கட்டும்...

    பக்கோடாவைத் தின்று பழச்சாறு குடித்து காலி செய்வது யார்?..

    பதிலளிநீக்கு
  7. /// பசங்களுக்கு பஞ்சர் ஓட்டுவது///

    நம்பி வண்டியில் ஏறலாமா?..

    பதிலளிநீக்கு
  8. செருப்பு - செய்தி அதே! இந்த வார் வைத்த ரப்பர் செருப்பு நல்ல பயன்பாடு காலுக்கும் இதமாக இருக்கு அதிலேயே இப்ப ortho செருப்புன்னு வருது. பெரிய விலையும் இல்லை. ஒரே ஒரு மைனஸ் என்னன்னா மழைக்காலத்தில் தண்ணிய அடிச்சுவிடும் துணில... பின் பக்கம். (தண்ணி அடிக்கும் னு எழுதிட்டு ஆ! அர்த்தமே வேற மாதிரி ஆகுதேன்னு)

    கீதா



    பதிலளிநீக்கு
  9. ஆச்சரியமா இருக்கே கஜக் Kachak என்பது கடலைமிட்டாய் டைப் தானே! கடலைமிட்டாயை கொஞ்சம் பொடித்துச் செய்வது.

    பண்டாபட் மட்டும் என்னனு தெரியலை.
    ஆலு பைங்கன் - உருளையும் கத்தரியும் கலந்த மசாலா. தண்டை ठंडाई என்பது ஒரு குளிர்பானம் ஹோலி சமயத்தில் வட இந்தியாவில் செய்வது பாதாம், ரோஸ் இதழ்கள் எல்லாம் போட்டு சில விதைகள் கலந்து செய்யப்படும் பானம் இனிப்பு என்பது தவிர மற்றபடு நல்ல பானம் தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கஜக் //

      எனக்கு போக்கிரி வடிவேலுதான் நினைவுக்கு வருகிறார்!

      நீக்கு
    2. இதோடு கீதா ரங்கன்(க்கா) எப்போதும்போல், எங்க ஊர் தில்லியில் நாங்கள் இருந்தபோது.... என்ற வரியை ஏன் சேர்க்கவில்லை?

      அதுபோல தேப்லா என்ற பெயரைப் பார்த்தாலே எனக்கு கீதா சாம்பசிவம் மேடம் நினைவுக்கு வந்துவிடுவார்.

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா நெல்லை., சேர்த்துக்கிட்டா போச்சு!

      கீதா

      நீக்கு
  10. மசாலா சாய், கார்லிக் நான், தந்தூரி ரொட்டி//

    இதுவுமா கேள்விப்பட்டதில்லை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஜக், பண்டா பட், தண்டை, மிர்சி கா சலன், இவைகள்தான் கேள்வி பட்டதில்லை. நான்பாட்டுக்கு எழுதிவிட்டு பெயர்கள் தவறு என்று யாராவது சொல்லக்கூடாதே.
      தந்தூரி ரொட்டி, மசாலா சாய் இவையெல்லாம் தெரியாமல் இருக்குமா? ஆலு பைங்கன் அடிக்கடி செய்வேன். மால்புவா ரொம்ப பிடிக்கும்.

      நீக்கு
    2. நான்பாட்டுக்கு எழுதிவிட்டு பெயர்கள் தவறு என்று யாராவது சொல்லக்கூடாதே.//

      ஹாஹாஹா பானுக்கா...இது உங்க செய்தியா?!!! நான் ஸ்ரீராம் செய்தியோன்னு நினைச்சேன்!!! சிலது அவர் சேர்ப்பதுண்டே அப்படி!

      கீதா

      நீக்கு
  11. /// ஹா.. ஹா.. ஹா... அனுபவங்கள் எழுத்தில் கலக்கும் - முழுவதும் அல்ல!///

    எழுத்தில் கலக்குவது வேறு..

    எழுதினவனையே கலக்குவது வேறு!...

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. நியூஸ் ரூம் முதலில் வந்து இருக்கிறது இந்த வாரம்.
    நாங்கள் படிக்கும் போது கைத்தொழில் ஆசிரியர் உண்டு. ( அரசு பள்ளி)

    கைத்தொழில் ஆசிரியர் தையல், மர வேலைப்பாடு எல்லாம் சொல்லி தருவார்.
    பாட்டு வாத்தியார், உடற்பயிற்சி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் உண்டு.
    வாரம் ஒரு நாள் உனவு தயாரித்தல் உண்டு. கோவை ரெங்கநாதர் பள்ளியில் படிக்கும் போது. ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் சொல்லி தருவார். எளிமையாக உடனே செய்வது சொல்லி தருவார்கள்.

    அவை சின்ன இலையில் வைத்து கொடுப்பார்கள் நாமே செய்து நாமே சாப்பிடுவது மிகவும் ஆனந்தமாக இருக்கும். எட்டாவது வகுப்பிலிருந்து சொல்லி தரப்படும்.

    மகன் படிக்கும் போது கூட ,ஓவிய ஆசிரியரும், தச்சு தொழில் ஆசிரியர் உண்டு. தச்சு வேலையில் முதல் பரிசு, ஓவியத்தில் முதல் பரிசு வாங்கி இருக்கிறான்.

    தோட்டம் போடுவது உண்டு, கீரை பாத்தி, கத்திரி, வெண்டைச் செடி மலர்ச் செடிகள் வைப்பது தண்ணீர் விடுவது உண்டு. குழுவாக பிரித்து கொடுத்து விடுவார்கள். மாலை நேரம் அந்த குழு பள்ளி விட்டதும் விட்டுக்கு ஓட முடியாது, தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட பின் தான் வீட்டுக்கு போக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நியூஸ் ரூம் முதலில் வந்து இருக்கிறது இந்த வாரம். //

      சும்மா ஒரு மாறுதலுக்கு!

      நீக்கு
  14. //மாத்தி யோசிக்கும் கலை மட்டுமல்ல, பிரச்னை பற்றிய தெள்ளிய அறிவு..//

    ஆமாம், மாற்றி யோசிப்பது, சரியாக யோசித்து செயல் படுவது ஒரு கலைதான். தண்ணீரும் வருகிறது, பணமும் மிச்சம், நிம்மதி தான்.

    //"தண்ணீர் மெயின் டேங்க்கிலிருந்து கீழே வரும் வழியில் உள்ள ஜங்க்ஷன் இடத்தில் அடைத்துக் கொண்டிருக்கலாம், அதை பார்ப்போம், அதுதான் எப்பவுமே முதல் படி, //

    முதல் படியிலேயே பிரச்சனையை கண்டு பிடித்து சரி செய்து விட்டார்.
    திறமையானவர் தான். உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் எடுத்து பகிரவேண்டும் என்று நினைத்து நினைத்து ...  ஹிஹிஹி...  மறந்து விட்டது!

      நீக்கு
    2. உங்களுக்கும் பணம் மிச்சம், நிம்மதி என்று எழுதியது காணவில்லையே!

      நீக்கு
    3. பின்னூட்டம் வாக்கியம் முழுமை அடையாமல் அரைகுறையாய் நின்றிருக்கிறது என்று நானும் பார்த்தேன்.  வேகமாக டைப் செய்யும்போது எனக்கு கூகுள் சிலவற்றை சேமிக்காமல் விட்டு விடும்.  அதுபோல அல்லது காபி பேஸ்ட்டில் விடுபட்டிருக்கும் என்று நினைத்தேன்.  நான் ஒன்றும் செய்யவில்லை அக்கா...!  செய்யவும் முடியாது!!!  :))

      நீக்கு
  15. கவிதையும் நானே! கேள்வியும் நானே! என்பது போல படத்தைப்பார்த்து கவிதை எழுதி

    //"சோப்புத்தண்ணி கண்ல போகாம இருக்க நீ கூடத்தான் கண்ண மூடிப்பே.. உடனே ஏதாவது கவிதைன்னு கிளம்பி வந்துடுவீங்களே...!!"//

    இப்படி கேள்வியும் கேட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. வண்ணதாசன் அண்ணாச்சி சொன்னது, மற்றும் பல செய்திகளும் பொக்கிஷ பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. வண்டுகள் ரீங்கரிப்பதை, தமிழில் முரல்தல் என்றும் சொல்லலாம்.

    வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
    கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
    அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்னா
    மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின்னீரே

    என்பது திருமாலையில் உள்ள பாசுரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான பாசுரம். பாசுரங்கள் யாவற்றையும் மனதில் மனனம் செய்து வைத்திருக்கும் உங்கள் போன்றோரிடம் எனக்கு பொறாமை உண்டு. ஆனால் முயற்சி கிடையாது!!!

      நீக்கு
    2. என் ஞானம்...  பாசுரம் படிக்கும்போது ஹரிஹரன் பாடிய 'சோலைக்குயில் பாடும் சொல்லிக் கொடுத்தது யாரு' பாடல் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    3. இந்தப் பாசுரத்தில் உள்ள முரல்தல், ஆல்தல், மிண்டர், அணவுதல், கொண்டல் போன்ற வார்த்தைகள் தமிழ் மொழியில் மறைந்துவிட்டதைக் கண்டீர்களா?

      நீக்கு
  18. குவைத்தின் தினாருக்கும் சௌதியின் ரியாலுக்கும் வித்தியாசம் தெரியாத செய்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கே அப்டீன்னா...!

      நீக்கு
    2. இணைய த்தில் இது மாதிரி இன்னும் பல உளறல்கள்..

      நீக்கு
    3. அவரவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எழுதி விடுகிறார்கள் 

      நீக்கு
  19. பாண்டியன் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, விபத்துக்கான இழப்பீட்டைக் கொடுக்கும் அளவு கோடி ரூபாய்க்கு மேல் ஆஸ்திகள் உள்ள கம்பெனி என்று விளம்பரம் சொல்லுவதாகப் புரிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படவேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்!

      நீக்கு
  20. சுய தொழில் கற்றுக் கொடுப்பது நல்ல விஷயம்.

    காப்பீட்டுத் திட்டம் செய்தி சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கண்ணை மூடியிருக்கும் பெண்ணின் ஓவியம் மிக அருமை.

    இதை வாங்கி வந்து வீட்டில் வைக்க, நடு ரவில் பாத்ரூம் போவதற்காகச் செல்லும்போது ஓவியத்தில் இருக்கும் பெண் கண்ணைத் திறந்து நம்மைப் பார்த்தால் நமக்கு எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ) மன்னன் ரஜினி குஷ்பூவிடம் உளறுவது போல இருக்கும்!!


      ஆ) வெட்கமாக இருக்கும்


      இ) பயம் + திகிலாக இருக்கும்


      ஈ) புன்னகைத்து விட்டு தாண்டிச் சென்று விடலாம்.

      நீக்கு
  22. திறமைக்கும் நம் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு புறம்...நாம் படித்த படிப்பிற்கான வேலையில் நமக்குத் திறமையும் இருக்கும் ஆனால் அப்படியான வேலை அமைவதும் எல்லோருக்குமில்லை ஒரு சிலருக்கே என்பதும் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்த படிப்பிற்கான வேலை என்று ஒன்று உண்டா என்ன? அனைத்துமே வேலை பார்க்கும்போது கற்றுக்கொள்வதல்லவா? (கேடரிங் கூட, நாம் எல்லாவற்றையும் செய்வதில்லையே)

      நீக்கு
    2. நெல்லை சொல்லி இருப்பதை இல்லை என்று சொல்லி விட முடியாதுதான்!

      நீக்கு
    3. படித்த படிப்பிற்கான எனும் போது நாம் படிக்கும் போது வைட் கவரேஜ் இருக்கும் உதாரணத்திற்கு பொருளாதாரம் படித்தால் அதில் பப்ளிக் ஃப்னைன்ஸ் வரும், சிலருக்கு காஸ்டிங்க் படிப்பு கூட இருக்கும்....சிலருக்கு புள்ளியியல் இருக்கும். வைட் கவரேஜில் ஏதேனும் ஒன்ற்று அப்ளை ஆனாலும் போதுமே...நெல்லை

      துளசி போன்றவர்கள் ஆங்கில இலக்கியம் படிச்சாங்க அதிலேயே ஆசிரியராக இருக்கவும் செய்யறாங்க.

      ஆனா சிலர் படிச்சது அறிவியல் ஆனா பள்ளியில் படிப்பிப்பது ஆங்கிலமாக இருக்கும்!!

      கீதா

      நீக்கு
    4. நான் Indian Economic Service எழுதினேன். மிக மிகச் சிறிய கிராமத்திலிருந்து எந்தவித உதவியும் இல்லாமல், அதற்கான கோச்சிங்க் எதுவும் செல்லாமல் முதல் அட்டெம்ப்டிலேயே பாஸ் செய்தேன். அடுத்த அட்டெம்ப்டில் ரேங்கிற்குள் வந்துவிடலாம் என்று படிக்கத் தொடங்கினேன். எனது நிர்வாகத்திறன் மீதான தன்னம்பிக்கை... ஆனா நடந்ததே வேற...இப்ப எந்தத் திறனும் இல்லை!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    5. அடடா....தொடர்ந்திருந்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.  இங்கெல்லாம் வந்து எட்டிப்பார்க்கக் கூட உங்களுக்கு நேரமிருக்காது!

      நீக்கு
  23. சீன அழகியின் படம் அழகு. அது சரி... சீனப் பெண்கள் அழகானவர்களா?

    குழந்தை வளர்ப்பில் அவங்கதான் உலகில் நம்பர் ஒண்ணு என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரைந்தவர் யார் என்ற கேள்வியை வசதியாய் மறந்து விட்டீர்கள்!

      நீக்கு
  24. மாற்று யோசனை பகுதி நல்லாருக்கு ஆனா என்ன கதைகள் என்பது தெரியலையே.

    ஒரே ஒரு டவுட்....அவ்வளவு பாரத்தைச் சுமக்கும் லாரியின் டயரில் காற்று கொஞ்சம் குறைந்தால் பாலத்தைக் கடக்கும் அளவு லாரி நகர முடியுமா? ஒரு வேளை சரக்கின் பாரம் குறைவாக இருந்தால் ஓகே என்று தோன்றுகிறது.

    ஒரு முறை நான் கார் ஓட்டிக் கொண்டிருந்த போது இப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென மூளையில் உதிக்கும் எளிதான யோசனைகளுக்கான கதைகளாக படிப்பதுதான்!

      நீக்கு
  25. எல்லோருக்குமே மாற்றி யோசிக்கும் திறனும் பிரச்சனைக்குத் தெளிவான தீர்வும் எடுக்கும் திறன் இருந்திட்டா ஆஹா தான்....மருத்துவர்களுக்கு மாற்றி யோசிக்கும் திறன் இருப்பது மிக மிக அவசியம்...ஏனா நம்ம உயிர் முக்கியமாச்சே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம்,ஆபத்துங்க...  கைக்கு பதிலா மாத்தி கால்னு யோசிச்சுட்டா நம் கதி?

      நீக்கு
    2. ஹா இதை அடுத்தாப்ல சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க..

      நாம சோதனை எலிகளா மாறிட வாய்ப்புண்டே!!!!

      கீதா

      நீக்கு
  26. "தண்ணீர் மெயின் டேங்க்கிலிருந்து கீழே வரும் வழியில் உள்ள ஜங்க்ஷன் இடத்தில் அடைத்துக் கொண்டிருக்கலாம், அதை பார்ப்போம், அதுதான் எப்பவுமே முதல் படி, //

    யெஸ் முந்தைய ப்ளம்பர் இங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.

    ஆனால் அதற்கு முன் அந்தக் கிணற்றுக்கு ஒரு தீர்வு காண வேண்டாமோ? அந்தத் தண்ணி மீண்டும் கலக்க வாய்ப்பு இருக்கும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  27. வண்ணதாசனின் வரிகளை அப்படியே ஏற்கிறேன்....

    எனக்கு அடிக்கடி தோன்றும் ஒன்று அதுவும் சமீபகாலமாக...- //ஆனால் எனக்கு ரொம்ப வேண்டியவர்கள் கூட, என்னிடமும் அப்படியே இருப்பது மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது.//

    வாட்சப் க்ரூப் வந்தாலும் வந்தது, தனிப்பட்ட முறையில் பேச்சு ரொம்பவே குறைந்துவிட்டது குடும்ப உறுப்பினர்கள் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணதாசன் வாட்ஸாப் காலத்துக்கு முன்னால் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  28. கற்றுப்பார் திட்டம் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை நினைவூட்டுகிறது. இந்த கல்வி திட்டம் தான் திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணம்.
    நான் படிக்கும் காலத்தில் I FORM முதல் PT வகுப்பு போல் ஒரு கிராப்ட் வகுப்பும் இருந்தது. நெசவு, ஊதுவத்தி தயாரித்தல் போன்ற பாடங்கள் இருந்தன.

    //இவ்வளவு தூரம் இப்படியே தான் வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச தூரம் தானே பாக்கி. இதில் எதுக்கு எனக்கு வேண்டாத கவலை எல்லாம்?//
    நல்ல வாழ்க்கை தத்துவம். ஆனால் கவலை எல்லாம் வாழ்வைப் பற்றி இல்லாமல் வாழ்வின் முடிவைப் பற்றி அல்லவா இருக்கிறது.

    //ஆனால் சரித்திர பூர்வமான விஷயங்கள் அந்த அளவு அனுபவத்தோடு நெருக்கமாக வைப்பதில்லை. ஆனால் ஆய்வுக்கு உகந்ததாக இருக்கிறது. // இதைத்தான் பைரப்பா வலியுறுத்துகிறார். அதாவது சரித்திர கதைகள் பலவும் உண்மை எது கற்பனை எது என்று ஆராய தூண்டுகின்றன. கல்கியும் காலச்சக்கரமும் முரண்பட எழுதியவற்றை நன்றாக ஆராயாமல் ஒத்துக்கொள்ள முடியாது.

    பாட்டுக்கு பாட்டு.

    நீரில் நனைந்தது ஒரு பாதி
    திகைத்து உறைந்தது மறுபாதி
    பெண் பாதி கண்ணீரில்
    ஆண் பாதி வியப்பில்
    மாதொரு பாகனோ
    அல்ல
    ஆணொரு பாக மாதுவோ?
    துயரமும் மகிழ்ச்சியும்
    ஒரே வாழ்வின் இருபக்கமல்லவா?

    என் கண்ணில் சோப்பு தண்ணீர் விழாமல் எழுதியது.

    விதையில்லாத கேள்விகள் இல்லை. ஆனால் சரியான விடை என்பது எது என்பதிலே தான் குழப்பங்கள்.

    பிலிப்ஸ் என்றில்லை. ஈஸ்டர்ன் ஸ்டார், சாம்பியன்,BSA என்றெல்லாம் பல பிராண்டுகள் உண்டு. அப்பா 1960இல் பாண்டி சென்று 165 ருக்கு ஒரு சாம்பியன் சைக்கிள் வாங்கி அங்கிருந்து கடலூருக்கு ஒட்டிக்கொண்டு வந்தார். அந்த சைக்கிள் சுமார் 40 வருடம் உபயோகத்தில் இருந்தது. அந்தக்காலத்தில் சைக்கிளில் அலுவலகம் செல்வது என்பது ஒரு அந்தஸ்து.

    Jayakumar


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணதாசன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார்!

      பைரப்பா சொல்வது சரி.  என்னிடம் ஒரு கலெக்ஷன் இருக்கிறது.  வரலாற்று நாவல் ஆசிரியர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள்.  அமுதசுரபி தொகுப்பு.  முடிந்தால் பகிர முயற்சிக்கிறேன்.

      உங்கள் கவிதை மிக நன்றாய் இருக்கிறது.

      விதையில்லா கேள்விகளா, விடையில்லா கேள்விகளா?  
      ஆம், நீங்கள் சொல்ல்லி இருக்கும் சில மாடல்கள் எழுதும்போது நினைவுக்கு வரவில்லை.

      நீக்கு
  29. கவிதைக்கு பதில் கவிதை தந்தது இரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
  30. விமானத்தில் பறக்கும்போது வயிற்றுக்கு சரியில்லா விட்டாலும் அவர்கள் கொடுக்கும் உப்புமாவை சாப்பிட்டே தீரவேண்டும் போலயே...

    பதிலளிநீக்கு
  31. Gகஜக்k - எள்ளு மிட்டாய் தான் இது! தண்டாய் - பாலில் கசகசா சேர்த்தும், Bபாங்க் எனப்படும் கஞ்சா இலைகள் சேர்த்தும் செய்யப்படும் ஒரு Bபானம் - பொதுவாக ஹோலி சமயத்தில் செய்யப்படும்.

    கார்லிக் நான் - பூண்டு சேர்த்த நான் (Naan) - மைதா கொண்டு தயாரிக்கப்படுவது.

    தந்தூரி ரொட்டி - தந்தூர் எனும் மண் அடுப்பில் சுடப்படும் ரொட்டி!

    மிர்ச்சி கா சலன் - பிரியாணியுடன் வழங்கப்படும் சைட் டிஷ் - மிளகாய் சேர்த்து செய்வது.

    மற்ற தகவல்களும், விஷயங்களும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கங்களுக்கு நன்றி. நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. நன்றி வெங்கட்! தண்டாய் என்பதை பாங்க் என்றும் சொல்வார்களோ? ஹோலி அன்று பெண்கள் கூட அதைப் பருகுவார்கள்.
      யாரங்கே? நல்ல தகவல் அளித்த வெங்கட்டிற்கு ஒரு கோப்பை பாங்க் வழங்குங்கள். அதை எந்த மூடில் பருகுகிறார்களோ அதே மூடில் இருப்பார்களாம். எழுதும் மூடில் அருந்தி, நிறைய எழுதட்டும் ;))

      நீக்கு
  32. ஸ்ரீராம் கவிதை நல்லாருக்கு.

    றாள் என்பதற்குப் பதில் றாய் ன்னு வந்தா இன்னும் நல்லாருக்குமோ!?

    கீதா

    பதிலளிநீக்கு
  33. எஸ் எல் பைரப்பா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்!! என்றாலும் ஒரு சில வரலாற்றுக் கதைகள் நம்மையும் அதற்குள் இழுத்துவிடும். நமக்கும் அதில் ஆர்வம் இருந்தால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென கதைக்குள் நுழைந்து விட்டால் ஓகே...  இழுத்துக் கொண்டே போனால் Bபோர்.  சாண்டில்யன் விதிவிலக்கு!

      நீக்கு
  34. பாரதியின் "ஞிமிறென இன்புறு" //

    நான் சிறிய விளக்கம் கொடுக்க நினைத்த போது கணேசன் அவர்களின் பதிவில் அவர் சொல்லியிருப்பதைப் பார்த்துவிட்டேன்.

    கல்லூரியில் என் தமிழ் பேராசிரியர் இப்படியான விளக்கத்தைக் கொடுத்தது நினைவு வந்தது.

    ஆனால் ஆத்திச்சூடிக்கும் சொன்னது புதியது எனக்கு. அட என்று தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு கணேசன் பக்கங்கள் எப்பவுமே சுவாரஸ்யம்.

      நீக்கு
    2. ஆமாம்...அதே..அவர் பக்கங்கள் வாசிப்பதுண்டு அவ்வப்போது

      கீதா

      நீக்கு
  35. ஸ்ரீராம், கேள்விகள் 6 லும் இந்த 6 வது தான் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. பாலத்திற்கு அடியில் கார் மாட்டிக் கொண்டதும், அதன் டயர்களலிருந்து காற்றை கொஞ்சம் வெளியேற்றி காரை நகர்த்தும் யுத்தியை சுஜாதா ஒரு கதையில்(சில்வியா..?) எழுதியிருப்பார்.
    அதே போல கார் சக்கரத்தின் screw கழன்று விழுந்ததும், மற்ற சக்கரங்களிலிருந்து இரண்டிரண்டு திருகாணிகளை கழற்றி இந்த சக்கரத்தில் மாட்டுவதையும் சுஜாதா lateral thinking பற்றி ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஸலாம். இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட நானும் கீதாவும் எதற்கோ பேச்சு வந்தபோது உங்கள் நினைவுத்திறன் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

      நீக்கு
  37. ஓவியம் யார் வரைஞ்சதுன்னு தெரியவில்லை...கண்ணைப் பார்க்கறப்ப மாசெ?

    சைனா பெண் வரும் ஏதாவது வரலாற்றுக் கதையா இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம் அந்தப் பிறந்த நாள் 60 வது இரண்டு வகையா யோசிக்கலாம் சிலர் 60 கொண்டாடிட்டு அப்புறம் சஷ்டியப்த பூர்த்திய 60 முடிஞ்சு 61 தொடக்கத்துல கொண்டாடுறதுண்டே!!!!! இல்லைனா 60 வது பிறந்த நாள் ஆங்கிலத் தேதி கொண்டாடிட்டு அப்படியே சஷ்டியப்தபூர்த்தி நட்சத்திரம் அன்று....அப்படியும் வைச்சுக்கலாமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிலர் 60 கொண்டாடிட்டு அப்புறம் சஷ்டியப்த பூர்த்திய 60 முடிஞ்சு 61 தொடக்கத்துல கொண்டாடுறதுண்டே!!!!! //

      ஜோக்குக்கு அது குறைச்சலான காலம்தானே!

      நீக்கு
    2. பாருங்க ஜோக்க கூட உங்கள் வரி என்னை சீரியஸா யோசிக்க வைச்சிருச்சு!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  39. ஆஹா சைக்கிள் - எனக்கு ஓட்டறா மாதிரி இருந்தா சொல்லுங்க ஸ்ரீராம்...ஹைட் கம்மியா.....நான் பாத்துக்கிட்டிருக்கேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கீதா?  கடையில் உயரத்துக்கு தகுந்தாற்போல கிடைக்குமே...  அடஜஸ்ட் செய்தும் கொடுப்பார்கள்.  ரெடிமேடாகவும் கிடைக்கும்.

      நீக்கு
    2. ஹைட் அட்ஜஸ்ட் செய்வது போல கிடைக்கும் தான் ஆனா அது குழந்தைங்க ஓட்டுவது போல ஹைட்டுக்கு அட்ஜஸ்ட் பண்ண முடியாதே!!!!!! செக் பண்ணிட்டேனே! ஹாஹாஹாஹா

      இப்போதைக்கு ஒரு செகன்ட் ஹான்ட் போதும்!

      கீதா

      நீக்கு
    3. தமிழ் நாட்டில் பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் தருகிறார்கள். சிலர் அதை விற்கிறார்கள். வாங்கி பெங்களூருக்கு ட்ரைனில் புக் செய்துகொண்டு போகலாம். ஆனால் இதற்கு ஆகும் செலவு சில சமயம் புதிய சைக்கிள் விலையைக் காட்டிலும் கூடலாம்.
      Jayakumar

      நீக்கு
    4. உண்மைதான்.  ஆனால் பள்ளிப்பிள்ளைகளுக்கு இன்னமும் இலவச மிதிவண்டி தருகிறார்களா என்பது சந்தேகமாய் இருக்கிறது.

      நீக்கு
  40. நியூஸ்ரூம் பல தகவல்கள் ,படக் கவிதை நன்று , புதனுக்கு உரிய கேள்விகள் வந்துவிட்டன காத்திருக்கிறோம்.

    உருளைக் கிழங்கு ஹா....ஹா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. புதனில் இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா, தெரியவில்லை!!!

      நீக்கு
  41. மருத்துவர் ஆனாலும் சரி ப்ளம்பர் ஆனாலும் சரி சிலருக்கு மட்டுமே பிரச்சனைகளை சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியும். மருத்துவரிடம் மாட்டிக் கொண்டால் நம் உயிர் மற்றும் பணம். ப்ளம்பரிடம் மாட்டிக் கொண்டால் பணம் மற்றும் சில இழப்புகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  42. ஞிமிறு - ஞிமிறென இன்புறு

    எல்லாமே எவ்வளவு அருமையான விளக்கம். கணேசன் அவர்களுக்கு மிக்க நன்றி. அதைப் பகிர்ந்த ஸ்ரீராம் உங்களுக்கும் மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. உங்கள் கவிதையை ரசித்தேன். கூடவே அதற்குக் கீழே நீங்கள் கொடுத்திருக்கும் வரி சிரிப்பை வரவழைத்துவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. அன்றைய காலத்து இன்சுரென்ஸ் ஆச்சரியம்.

    விடையில்லா அல்லது மாற்றி யோசிக்க வேண்டிய கேள்விகள்

    பைரப்பா அவர்கள் சொல்லியிருப்பது போல் நம் அனுபவங்களை நாம் ஒன்றரக்கலந்து எழுதும் போது நன்றாக வந்துவிடும் தான். வாசகர்களுக்கும் ஒன்றி வாசிக்க இயலும்தான்.

    பொக்கிஷப்பகுதி நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. அந்தக் காலத்திலேயே 'பாண்டியன்' என்று பெயர் கொண்ட இன்ஷூரன்ஸ் கம்பெனியைப் பாராட்டுவோம்.

    சோழன், பாண்டியன் போன்ற பெயர்கள் கொண்ட விரைவு ரயில்களின் பெயர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் அதை வன்மையாகக் கண்டிப்போம்.

    தமிழகம் தனது முந்தைய காலத்து அடையாளங்களை இழந்து விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் தஞ்சாவூர் பக்கங்களில் சோழன் போக்கு வாரத்துக் கழகம், மதுரைப் பக்கங்களில் பாண்டியன் போக்குவரத்துக் கழகம், சென்னையில் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்றெல்லாம் இருந்தனவே,,,  வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்.  பழமையை ஒழித்ததில் முதல் பெருமை திராவிட அரசுக்குதான்!

      நீக்கு
    2. நீங்களெல்லாம் திருப்பித் திருப்பி உச்சரித்து எழுதி
      அது வரலாற்று உண்மை போல
      திராவிட அரசாகி விடப்போகிறது!

      நீக்கு
    3. நான் சொல்ல வந்தது
      தற்காலத்து மோகமாய் 'இந்தி'யில் மாற்றிப் பெயரிடுதல் பற்றி.

      நீக்கு
    4. // திராவிட அரசாகி விடப்போகிறது! //

      ஆகாது. கவலை வேண்டாம்!

      நீக்கு
    5. இந்தியில் மாற்றி பெயரிடுதல்? அபுரி.

      நீக்கு
    6. இந்தியா தான் இந்துஸ்தான்..
      இந்துஸ்தான் தான் இந்தியா என்பது
      மாதிரி மாற்றி உச்சரித்து இந்துஸ்தானை புழக்கத்தில் கொண்டு வர நினைப்போருக்காக.

      நீக்கு
  46. ஆஸ்திகள் ஒரு கோடிக்கு மேல் இருந்தால் இன்ஷூரன்ஸ் என்று இல்லை.
    அந்த நிறுவனத்தின் ஆஸ்திகள் ஒரு கோடிக்கு மேலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  பதிவில் மாற்றிப்பார்த்தேன்.  மேலே நெல்லைக்கும் பதில் சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  47. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  48. (தொடர்ச்சி) நம்மிடையே வாழும் மிக மூத்த கன்னட எழுத்தாளர். அவரது இந்த அனுபவ கருத்து மிக ஆழ்ந்த பொருள் கொண்டது. அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டத்தில் முதல் பகுதியை அகற்றி விட்டீர்கள்.  இதை தொடர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்!  பைரப்பாவின் புத்தகம் 'பருவம்'  கைகளில் இருக்கிறது இப்போது.

      நீக்கு
    2. பைரப்பா யாரென்று அவர் எழுத்திறமை என்னவென்று அறியாதவர்களுக்கு அவர் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

      'அவுங்களை'ப்பற்றியெல்லாம் தெரிந்து
      தன் எழுத்துத் திறமையை செம்மைபடுத்திக் கொள்வது தேவையில்லாத விஷயம் என்று நினைப்போரைப் பற்றித் தெரிய வந்து நீக்கி விட்டேன். அவ்வளவு தான்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!