ஞாயிறு, 21 ஜூலை, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 29 : நெல்லைத்தமிழன்


 ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்ட வெள்ளைப் பளிங்கு மாளிகைப் பகுதியைப் பார்க்க ஆரம்பித்த நாம், ஷாஜஹானின் அரண்மனையைப் பார்க்காமலா விடப்போகிறோம்அதிசயத்தால் அரச பதவிக்கு வந்து, தன் வீரத்தால் தக்கவைத்துக்கொண்ட ஷாஜஹானையும் விதி சும்மா விட்டுவைக்குமா? என்ன ஆனது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்.

அதை நோக்கிச் செல்லும்போது, முகலாயர்களின் அரண்மனை கஜானா எங்கிருந்தது என்று வழிகாட்டி சொன்னார். அதனைத் தொடர்ந்து ஷாஜஹான் அரண்மனையை நோக்கிய நடை தொடர்ந்தது.

அக்பர், இந்த மாளிகைக்குக் கீழே (அதாவது அவரது அரண்மனைக்கு அருகில்) கிட்ட த்தட்ட 5000 பெண்கள் (வேலைக்காரிகள் உட்பட) இருக்கும் அறைகள் இருந்தனவாம். அங்கிருந்து ஏணிகள் மற்றும் வழிகள் மூலம் அரண்மனையின் எல்லா அறைகளுக்கும் செல்ல முடியுமாம். இவர்களில் அனேகமானவர்கள் அக்பருக்காக வேவும் பார்த்தவர்களாம். இவர்கள் இருந்த பகுதிக்குக் கீழே இருந்த பாதாள அறையில் முகலாய அரசின் பொக்கிஷங்களின் பெரும்பகுதி (நாணயங்கள் தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் முதலியவை) பாதுகாப்பாக இருந்தனவாம். தற்போது இந்த இரண்டு பகுதிகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முழுவதுமாக மூடப்பட்டிருக்கின்றன.


சின்னச் சின்ன பிறைகள் போல் இருக்கும் இடத்தில் என்ன இருந்திருக்கும்? சுவர் அலங்காரங்கள் மிக அழகாக இருக்கின்றன

விதானத்தின் டிசைன்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்



ஷாஜஹானின் அரண்மனை

ஷாஜஹானின் மூத்த மகள் ஜஹானாராவின் அரண்மனையை ஒட்டி ஷாஜஹான் அரண்மனை அமைந்துள்ளது. இது அறுகோண அமைப்பில் உள்ள அரண்மனை.

ஜஹானாராவின் அரண்மனையை ஒட்டி உள்ள பகுதியில்தான், அரசர் வெளிப்புறமாக நின்று (யமுனை ஆற்றின் பகுதி) காலையில் தரிசனம் தருவார். இது பல காலமாக நடக்கும் ஒரு நிகழ்வு. பொதுமக்கள் (குறிப்பாக பிராமணர்கள்-இப்படித்தான் வரலாற்றில் எழுதியிருக்கிறது) காலையில் குளித்த பிறகு அரச தரிசனம் செய்ய அந்தக் கரையில் வருவார்கள். அரசரைப் பார்ப்பது கடவுளைப் பார்ப்பது போல என்பது ஐதீகம்இது ஔரங்கசீப் காலத்தில்தான், சுத்த பைத்தியக்காரத்தனமான ஐதீகம் என்று சொல்லி நிறுத்தப்பட்டது. அது நிகழ்ந்த இடம் முதல் படம்அதை ஒட்டித்தான் அறுகோண வடிவில் வெள்ளைப் பளிங்கில் ஷாஜஹான் அரண்மனை உள்ளது. அதன் வெளிப்புறம் பால்கனி போல, பளிங்குத் தூண்களுடன் உள்ளதை இரண்டாவது படத்தில் காணலாம். அங்கு நின்றுகொண்டு பார்த்தால் தாஜ்மஹல் தூரத்தில் தெரியும்.

என் கண்ணுக்குத் தெரியும் தாஜ்மஹல் உங்கள் கண்ணிற்குத் தெரிகிறதா? அகழி, அதனை அடுத்து சாலை, அதனை அடுத்து மரங்களடர்ந்த பகுதி (தற்போது அதன் பல இடங்கள் வயல்களாக உள்ளன. அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம்), அதன் பின்னர் தாஜ்மஹல், அதனை ஒட்டி யமுனை நதி.

ஷாஜஹான் அரண்மனை மற்றும் கஸ் மஹல் (இரு மகள்களின் அரண்மனைக்கு நடுவே இருப்பது) இரண்டும் 1900களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில்

ஷாஜஹானின் அரண்மனை (வீடு என்று சொல்வது பொருத்தம்)



வீட்டின் பகுதியாக, வீட்டின் முன் அறையில் நீரூற்று (இதெல்லாம் எப்படியிருந்திருக்கும்?)

இந்தப் பால்கனி வழியாகத்தான் அவரால் வெகுதூரமுள்ள தாஜ்மஹலைப் பார்க்க முடியும். அவரது கடைசி 8 வருடங்கள் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் (ஔரங்கசீப், அவரது அரண்மனைக்கு எதிரே இருந்த பரந்த வெளி அறைகளில், ஷாஜஹானுடைய நூற்றுக்கணக்கான ஆசை நாயகிகளையும் வைத்துக்கொள்ள அனுமதி தந்தாராம். (ஒற்றை மனைவியை வைத்துக்கொண்டு நாங்கள் படும் பாடு…. என்று ஆண்கள் மனதுக்குள் எண்ணுவது எனக்குக் கேட்கிறது)

பால்கனியின் தோற்றம். அதன் அலங்காரங்கள்

காற்றுக்கு ஒரு குறைவும் இருந்திருக்காத மாளிகை அது.


ஷாஜஹானின் அரண்மனை முழுவதுமாகத் தெரிகிறதா? (இவங்களுக்கெல்லாம் சாப்பாடு எப்படி தயார் செய்திருப்பார்கள், எப்படிக் கொண்டுவந்திருப்பார்கள், வழியில் விஷம் கலக்காமல் எப்படிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? யோசிக்க யோசிக்க, அரசர்களை எப்படியெல்லாம் பாதுகாத்திருப்பார்கள் என்று வியக்கிறேன்)

முதம்மன் பர்ஜ் என்று சொல்லப்பட்ட மாளிகை (அறுகோண  கோபுரம்/மாளிகை)


இந்தப் படத்தில் ஷாஜஹானின் அரண்மனை, கோட்டைச் சுவர்கள், சிறிது தூரத்திலேயே பரந்து விரிந்த யமுனை ஆறு தெரியும். இந்த ஆற்றிலிருந்துதான் தண்ணீர், அரண்மனைக்கு வந்ததுநீரை மேல் தொட்டியில் ஏற்றி, அங்கிருந்து தாமிரம் மற்றும்  ஒழுகாத களிமண் பைப்புகள் வழியாக பல அறைகளின் சுவற்றின் வழியே பாய்ந்ததாம். இந்த system மிகவும் நவீனமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.



பளிங்குக் கல்லில் பலவித அலங்காரங்கள்.


வீட்டின் அலங்காரங்கள் மிக அழகாக இருக்கிறது அல்லவா? அவர் பாரத தேசம் முழுவதையும் இந்த வீட்டிலிருந்துதான் கட்டி ஆண்டார்.

தங்கக் கூண்டாக இருந்தால் என்ன? வீட்டுச் சிறை வீட்டுச் சிறைதானே

ஆமாம் இவ்வளவு அழகான மாளிகையில் ஷாஜஹான் ஏன் சிறை வைக்கப்பட்டார்யாரிடமாவது போரில் தோற்றுவிட்டாரா?

நாம் நம் குழந்தையிடம் தோற்றுவிட்டால், அதனை வெற்றி என்றுதான் நினைப்போம். ஆனா பாருங்கஅரசருக்கான சட்டங்கள் நியாயங்கள் வேறு அல்லவா? பதவியில் அமர்ந்துவிட்டால், அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவது என்பது அரசர்களுக்கு இயலாத ஒன்று. அதனை அடுத்த வாரம் பார்க்கலாமா?

(தொடரும்) 

56 கருத்துகள்:

  1. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றுச் செய்திகள் சிறப்பு..

    படங்கள் அழகு..

    சிந்திப்பதற்கு ஏராளம்...

    வாழ்க பாரதம்...

    பதிலளிநீக்கு
  5. /// எதிரே இருந்த பரந்த வெளி அறைகளில், ஷாஜஹானுடைய நூற்றுக் கணக்கான ஆசை நாயகிகளையும் வைத்துக்கொள்ள அனுமதி தந்தாராம்... ///

    சரியான தண்டனை!..

    ஔரங்கசீப்பா
    கொக்கா!?...

    பதிலளிநீக்கு
  6. /// எதிரே இருந்த பரந்த வெளி அறைகளில், ஷாஜஹானுடைய நூற்றுக் கணக்கான ஆசை நாயகிகளையும் வைத்துக்கொள்ள அனுமதி தந்தாராம்... ///

    சரியான தண்டனை..

    ஔரங்கசீப்பா..
    கொக்கா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... சிரிக்க வைத்த பின்னூட்டம். மதிப்பிழந்த, பதவியில் இல்லாத நேரத்தில் ஆசைநாயகிகள் அவரை மதித்திருப்பார்களா என்ன?

      நீக்கு
    2. ரெண்டும் ரெண்டு ஆப்பை (அகப்பை) ரெண்டும் கழண்ட ஆப்பை...

      என்றொரு சொல் வழக்கு இருக்கின்றது...

      அர்த்தம் யோசித்துக் கொள்ளவும்...

      நீக்கு
  7. சும்மா கெடந்து பொழுது ஓட்ட வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி பொழுது போயிருக்கும்? ஐந்துவேளை தொழுகை தவிர?

      நீக்கு
  8. ஏன் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருக்கின்றன? அங்கு எதிரிகள் யாராச்சும் புகுந்துருவாங்க இல்லைனா நம் மக்களே ஆர்வம் மிகுதியால் புகுந்து விட்டு வெளிய வரத்தெரியாம குணா குகை போல அவ்வளவு ஆபத்தான இடமா? நெல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம மக்களை நம்பி எதையும் திறந்துவைக்க முடியாது. திருப்பதி கியூவில் நின்றுகொண்டே தங்கள் விசிடிங் கார்ட்/பிஸினஸ் கார்டுகளை அங்கே சொருகி வைப்பது, தங்கள் பெயரைச் செதுக்குவது என்று செய்பவர்கள், இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை உருப்படியா வைத்திருப்பார்களா என்ன? பாதுகாப்புக் காரணங்களுக்காகவும்தான்.

      நீக்கு
  9. சுவர் அலங்காரங்கள் மிக அழகு. பிறைகளில் விளக்கு தான் வைச்சிருப்பாங்கன்னு தோணுது நெல்லை. இல்லைனா கண்ணுக்குப் புலப்படாத ஆயுதங்கள்?

    பெண்கள்னா அதுல சீப்பு, வாசனைத் தைலம் திரவியங்கள் இதெல்லாம் அடுக்கி வைச்சிருந்திருப்பாங்க!!!!!

    விதானம் டிசைன் செம அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பிறைகளிலும் விளக்குகள் இருந்தால் யார் இரவில் அணைத்திருப்பார்கள்? ஆங்காங்கே ஆயுதங்களையும் வைத்திருந்திருப்பார்கள்.

      சீப்பு, வாசனைத் திரவியங்கள், அழகிய உடைகள்.... கற்பனைக்குத்தான் எல்லையில்லை.

      நீக்கு
  10. ஜஹானாராவின் அரண்மனையை ஒட்டி உள்ள பகுதியில்தான், அரசர் வெளிப்புறமாக நின்று (யமுனை ஆற்றின் பகுதி) காலையில் தரிசனம் தருவார்.//

    இந்தப் படம் செம ஷாட்! பால்கனி யிலிருந்து தெரியும் காட்சி என்ன அழகு இப்பவே இப்படினா அப்ப அந்தக் காலத்துல?!!! எவ்வளவு அழகா இருந்திருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப அழகா இருந்திருக்கும் கீதா ரங்கன். ஆனால் கீழ நின்றுகொண்டிருப்பவர்களுக்குத்தான் நிற்பது அரசரா இல்லை அரசர் வேடம் தரித்த வேலைக்காரனா என்பது தெரிந்திருக்காது.

      நீக்கு
  11. நுட்பமான வேலைப்பாடு, பதிக்கப்பட்ட கல் வேலைப்பாடா அல்லது வரையப்பட்ட சித்திரம்களா என்று ஒரு டவுட். சித்திரங்கள் ஆக இருந்தால் பிழையாக வாய்ப்பு உள்ளது. இந்த inlay வேலைப்பாடு முகலாயர்களுக்கு மட்டுமே கை வந்த கலை என்று நினைக்கிறேன். கோயில்களில் இத்தகைய inlay வேலைப்பாடுகளைக் கண்டதில்லை.

    நேரில் பார்ப்பதை விட புகைப் படங்கள் நுட்பமான வேலைப்பாடுகளை எடுத்து காட்டுகின்றன.
    படங்கள் துல்லியமாகவும் விவரணங்கள் பொருத்தமாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... இந்த மாதிரி பளிங்கில் வேலைப்பாடு என்பது பாரசீகர்களின் கலை. பஹ்ரைனில் என் கம்பெனி ஓனரின் பெரும் பங்களாவிற்குச் சென்றிருக்கிறேன். சந்தனம் மிஞ்சினால் ...... தடவிக்கொள்வார்கள் என்று சொல்வதைப் போல, மிலியன்கள் செலவழித்து பாரசீகத்திலிருந்து ஆட்களை வரவழைத்து இந்த மாதிரி இழைத்து இழைத்து தன் வீட்டைச் செதுக்கிக்கொண்டிருந்தார் (இப்படி எல்லாம் செலவழித்து கம்பெனியின் கதையை முடித்துவிட்டார்). அந்தப் படங்கள் ஒரு ஞாயிறு பகிர்கிறேன்.

      நன்றி

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... காவிரி பொங்கி உங்கள் வீட்டுத் தண்ணீர் பிரச்சனை தீரப் ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  13. பிரம்மாண்டம் - ஒரே வார்த்தையில்!

    பாதுகாப்பு காரணம் கருதி கஜானா அறை இருந்த இடத்தின் பக்கம் யாரையும் விடுவதில்லை என்றால் இன்னமும் அங்கே பொக்கிஷங்கள் இருக்கிறதா என்ன?!!  (நம்ம கவலை நமக்கு!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி அறைகளையோ இல்லை பாதாள வழிகளையோ அடைத்துவிடுகிறார்கள். பாதுகாப்பு மற்றும் பூச்சிபொட்டுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். காஞ்சி பரமேச்வர விண்ணகரத்திலும் பாதாள வழியை அடைத்திருப்பதைக் காட்டினார்கள்.

      நீக்கு
    2. பிரம்மாண்டம்.. ஆம்... ஆனாலும் பயம் இருந்திருக்கும். என்னுடைய வீட்டில் (சிறிய வீடு அது) வாடகைக்கு 10 வருடங்களாக இருந்தவர், அவருடைய சொந்த வீட்டைச் சரி செய்து போனார்கள் (சில வாரங்களுக்கு முன்பு). என்னுடையது ட்யூப்ளெக்ஸ் என்று சொல்லப்படும் வகையிலான தனிவீடு. அவர் சொன்னது, இந்தச் சின்ன வீட்டில் எனக்கு பயமே இருந்ததில்லை. இப்போது 1 கிரவுண்ட் இடத்தில் அமைந்திருக்கும் பெரிய வீட்டுக்குப் போக பயமாக இருக்கிறது, கணவர் இல்லாதபோதும் இங்கு தனிமை தெரியாது, அங்கு எப்படி இருக்குமோ என்றார்.

      பெரிய அரண்மனை என்பது அரசர்களுக்கும் பயமாக இருந்திருக்காது?

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்படி எப்பவாவது வருகிறேன். போகிறேன். அனைவரும் மன்னிக்கவும். மகன் வந்திருப்பதால், வேலைகள் சரியாகப் போகிறது.( வீட்டு தினசரி வேலைகள் உட்பட, வீட்டில் டைல்ஸ் மாற்றுவது. விடுமுறை நாட்களில் வெளியில் செல்வது என பலதும், இடையில் காலை, மாலை மூன்று மணி நேரம் மட்டுமே வருவது என தீராதிருக்கும் தண்ணீர் பிரச்சனை வேறு. ) இன்றும் பதிவை நன்றாக படித்தப் பின் பிறகுதான் வர முடியுமென நினைக்கிறேன். இருப்பினும் என்னை மறவாதிருக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மகன் வந்திருக்கும்போது அதுதான் முக்கியம். எங்கள் மகனும் ஒரு மாத விடுமுறையில் வந்தவன் ஆகஸ்டில்தான் போவதாகத் திட்டமிட்டிருக்கிறான் (ஆவணி அவிட்டத்திற்குப் பிறகு). ஆனால் நாங்கள் இதை எதிர்பார்க்காமல் பல பிரயாணங்களைத் திட்டமிட்டுவிட்டோம், பலதும் தவிர்க்க முடியாதவை. அதற்கே இந்த மாதிரி மகன் நம்முடன் இருக்கும் வாய்ப்பு இனி வருவது கஷ்டம் என்பது புரிந்ததால் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.

      நீக்கு
    2. காவிரி தண்ணீர் வேண்டும் எனத் தீர்மானம் போட்டவர்கள், உங்கள் தண்ணீர் கஷ்டத்தையும் மனதில் வைத்திருக்கட்டும்.

      டைல்ஸ் மாற்றுவது நச்சுப் பிடித்த வேலை, அதீத சப்தம், புகைப் படலம், தூசு என வீடே களேபரமாக ஆகிவிடும்.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. ஷாஜஹான் அரண்மனை படங்கள் அனைத்தும் மிக அருமை.மிக அழகாய் எடுத்து இருக்கிறீர்கள். கஜானா அறை வரலாறு பகிர்வும் அருமை.
    //ஜஹானாராவின் அரண்மனையை ஒட்டி உள்ள பகுதியில்தான், அரசர் வெளிப்புறமாக நின்று (யமுனை ஆற்றின் பகுதி) காலையில் தரிசனம் தருவார்.//

    படம் மிக அழகாய் இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். மிக்க நன்றி

      நீக்கு
    2. வரலாற்றில் எழுதியிருப்பது... பிராமணர்கள் காலையில் யமுனையில் குளித்துவிட்டு ஈர உடையுடன், அரச தரிசனத்திற்காக வருவார்களாம். காலையில் அரச தரிசனம் என்பது ஈச்வர தரிசனம் என்பது அவர்கள் நம்பிக்கை. ஔரங்கசீப், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று சொல்லி அந்த வழக்கத்தை நிறுத்திவிட்டானாம்

      நீக்கு
  17. தூரத்தில் தாஜ்மஹல் தெரிகிறது கீழே யமுனையும் கொஞ்சம் தெரிகிறதே நெல்லை.

    அகழி, அதனை அடுத்து சாலை, அதனை அடுத்து மரங்களடர்ந்த பகுதி (தற்போது அதன் பல இடங்கள் வயல்களாக உள்ளன. அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம்),//

    ஆமாம் காடுகளாக இருந்திருக்கும். யமுனை இன்னும் பெரிதாக அகலமாக இருந்திருக்கும்!

    ஷாஜஹானின் பங்களாவில் (கேரளத்தில் சொல்வது போல தரவாடு!!) அந்த டிசைன் அழகு.

    ஆஹா ஹால் நடுவில் நீரூற்று!!! ராஜ போகம். அப்ப இப்படி எல்லாம் அப்பவே வைத்திருந்தாங்களா? எப்படி வைச்சிருப்பாங்க? ப்ரெஷர் பம்பு? மின்சாரம் கிடையாதே. கிராவிட்டி ஃபோர்ஸ் னால மேடான இடத்திலிருந்து தாழ்வான இடத்தில் அந்தத் தண்ணிய மேலே கொண்டு வந்து விழ வைத்திருக்கும் அப்படி வடிவமைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நல்ல ப்ளானிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). ஷாஜஹானின் அரண்மனை/வீடு அழகுதான். ஆனால் பாருங்க... அவங்களுக்கு ப்ரைவசியே இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆமாம் இவ்வளவு பெரிய அரண்மனையில் எங்கு டாய்லெட் வசதி? இதை கைடிடம் கேட்க விட்டுப்போய்விட்டது.

      நீரூற்று எப்படி அமைத்திருப்பார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த மாதிரி நீரூற்றுக்களை அரண்மனையின் இரண்டு இடங்களில் பார்த்தேன்.

      நீக்கு
  18. ஆ நூற்றுக்கணக்கான ஆசை நாயகிகள்!! போரடிச்சிடாது? இத்தனை பேரை வைத்துக் கொண்டு அப்புறம் எதுக்கு தாஜ்மஹல்! முரண்!

    பால்கனியின் தோற்றம் மற்றும் அலங்காரப் படங்கள் வாவ்! எப்பவோ பார்த்தது இப்ப மீண்டும் பார்த்து நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

    அங்கு பல அறைகளில் ஜன்னல் ரொம்பப் பிடித்தது . இப்ப உங்க ஃபோட்டோவிலும் அது தெரிகிறது. நல்ல காற்றோட்டம்.

    இத்தனையும் பராமரிக்க நிறைய ஆட்கள் இருந்திருப்பாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரண்மனை சார்ந்த பணிப்பெண்களை ஒரு 'கிக்'குக்காக ஆசை நாயகிகள் என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.. அது சரி, சோக்ஷ பாண்டிய அரசர்களின் அரண்மனைகளில் இந்த மாதிரி பணிப்பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும் என்று எண்ணம் ஓடுகிறது.

      நீக்கு
    2. ஜீவி சார்... நான் எழுதியிருப்பது வரலாறு. அதில் கதைகள் கற்பனைகள் கிடையாது. அங்கு பணிப்பெண்களாக இருந்தவர்கள் அலிகள் மாத்திரமே (அனேகமாக). அவர்கள்தாம் பெண்கள் பகுதிக்குக் காவல் வீரர்கள் மற்றும் உளவுபார்ப்பவர்கள். ஆசை நாயகிகள் என்பவர்கள் அரசனின் உபயோகத்திற்காகவும், பணிந்த அரசர்கள் அழகிகளை அரசனின் அரண்மனைக்கு அனுப்பியதாலும் சேர்ந்தவர்கள்.

      நீக்கு
    3. ஆசை நாயகிகள் போரடிக்காது என்பது பெண் பார்வையில் உங்கள் கேள்வி. ஹா ஹா ஹா... ஆண்கள் பார்வையில் யாரேனும் கேள்வி கேட்க முயன்றிருந்தால், அவ்வளவுதானா? ஆயிரக்கணக்கில் இல்லையா? என்று கேட்டிருப்பார்கள் (சமீபத்தில் ஆயிரம் முடித்துக் கொண்டாடிய மோஹன்லால் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்களே)

      நீக்கு
    4. மும்தாஜ், ஷாஜஹானின் மனதுக்கு மிகுந்த நெருக்கமாயிருந்திருக்கலாம். அது சரி... அரசர்களுக்கு புத்திசாலியான மனைவி அமைவது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அதுபற்றியும் எழுத ஆவல், ஆனால் வரலாறாகப் போய்விடுமே என்று தோன்றுகிறது

      நீக்கு
  19. நீரை மேல் தொட்டியில் ஏற்றி, அங்கிருந்து தாமிரம் மற்றும் ஒழுகாத களிமண் பைப்புகள் வழியாக பல அறைகளின் சுவற்றின் வழியே பாய்ந்ததாம். இந்த system மிகவும் நவீனமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.//

    வியக்க வைக்கும் தொழில் நுட்பம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய காலத்தில் இது வியக்கவைக்கும் தொழில் நுட்பம்.

      ஆனால் பாருங்க... ஷாஜஹானைப் பணிய வைக்க ஔரங்கசீப், ஆக்ரா கோட்டைக்கு நீர் வரும் வழித்தடத்தை அடைத்து, மூன்றே நாட்களில் அனைவரையும் பணியவைத்தான்

      ஆனால் கோல்கொண்டா கோட்டையில், கோட்டைக்கு உள்ளேயே ஏகப்பட்ட நீர்நிலைகளை அமைத்திருந்தார்கள், அதனால் ஔரங்கசீப்பால் ஆறு மாதங்களாகியும் அவர்களைப் பணியவைக்க முடியவில்லை

      நீக்கு
  20. அருமையான படங்களும் செய்திகளும், கேள்விகளும்.

    படங்கள் வியக்க வைக்கின்றன. அனைத்து படங்களும் பல சிந்தனைகளை எழுப்புகின்றன. அழகான மஹல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார். எனக்குமே நிறைய எண்ணங்கள் உருவாகின

      நீக்கு
  21. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    வரலாற்று தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  22. இப்பொழுதும் இவ்வளவு அழகாக இருக்கும் மாளிகை அக்காலம் எவ்வளவு பளீரென இருந்திருக்கும்.

    அந்த பலகனிகளும் யமுனை தரிசனமும் அழகிய வியூ.

    ஆகா! நிலவறையில் பொக்கிசங்கள் இப்பொழுதும் மூடிவைத்திருப்பது ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ தொல்லியல் துறை வசம் வந்தபிறகு மாளிகைகள் அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன என்று தோன்றும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கவனிப்பாரற்றுக் கிடந்திருக்கும். ஆனால் அரசர்கள் வாழ்ந்த காலங்களில் மிகப் பிரம்மாண்டமாக பளிச் என்று விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பெற்று மிக மிக அழகாக இருந்திருக்கும்.

      நீக்கு
  23. ஏதோ இட்டுக்கட்டிய கதையை டூரிஸ்ட் கைடுகள் சொல்ல கேட்கிற மாதிரி இருக்கிறது. மிஞ்சிப் போனால் ஷாஜகானின் காலம் 1640 வாக்கில் தான். வரலாற்று சான்றுகளுடன் கூடிய ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதுமில்லையா, நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... எல்லாமே ஆதாரங்கள் உடைய தகவல்கள்தாம். சும்மா வருடம், நிகழ்வு என்று எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்று நினைத்து ரொம்பவே சுருக்கமாக எழுதியிருக்கிறேன். நாள் கணக்கு கூட நடந்த நிகழ்வுகளுக்கு உண்டு. உங்களுக்குத் தெரியுமா, sheer luck என்று சொல்வார்களே... அப்படித்தான் ஜஹாங்கீர் (சலீம்) பிழைத்து பிறகு அரசனானது, அதுவும் அக்பரின் மரணப்படுக்கையில். அதுபோலவே ஷாஜஹானும், அதிலும் மிக ஜாக்கிரதையாக ஜஹாங்கீரின் (அப்பாவின்) மனைவி நூர்ஜஹானிடம் நடந்துகொண்டதால், இவனால் நமக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லை என்று நம்பவைத்து பிறகு பட்டத்துக்கு வந்தார். பட்டத்துக்கு வந்த பிறகு நூர்ஜஹானுக்கு மிக அதிக அளவில் வருடாந்திர ஓய்வூதியம் (2 லட்சம்?) கொடுத்து, ரொம்ப அரசியலில் தலையிடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

      நீக்கு
    2. ஆதாரபூர்வமான தகவல் - இவைகள் எழுதுபவர்களின் கண்ணோட்டத்துடன் எழுதப்படுபவை ஆதலால், கொஞ்சம் ஜால்ரா சப்தமும் இருக்கும். உதாரணமாக, அக்பர் கொடூரமாகக் கொலை செய்யவில்லை, எதிராளியின் கழுத்தில் கத்தியை வைத்தார், பைராம்கான் கொன்றார் என்றெல்லாம் வரலாற்றில் படிக்கலாம்.

      நீக்கு
  24. நிறைய கலைநுட்பம் மிகுந்த கட்டிடங்கள் - தில்லியிலும் இப்படியான கட்டிடங்கள் உண்டு. என்ன பல கட்டிடங்கள் அதன் பொலிவை இழந்துவிட்டன.

    தகவல்கள் சொல்லிப் போன விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட்.... தில்லியில் நீங்கள் அனைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குத்தான் அதற்கான வாய்ப்போ வேளையோ இன்னும் வரவில்லை.

      By the by, அடுத்த முறை தில்லி வந்தால் இரண்டு நாட்கள் தங்கி சாந்த்னி சௌக் சென்று அனைத்து உணவையும் ருசி பார்க்க நினைத்திருக்கிறேன். சந்தேகம் வந்தால், உங்களையும் கூட்டிச் செல்லலாம் என்று எண்ணம்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!