தமிழ்நம்பி பாடல். இசையமைத்து பாடி இருக்கிறார் TMS
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரய்யா
செந்தூர் கந்தையா
அருள் சேர்க்கும் குமரய்யா
நீ வந்தால் முருகையா
நான் வாழ்வேன் வேலையா
தாய் அய்யா புவி எல்லாம் தாங்கும் நீ முருகையா
தூயோன் உன் திருவடியை தொழுகின்றேன் வேலையா
தொழுகின்றேன் வேலையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரய்யா
வேத மலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா
முருகா
வேதமலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா
பாதமலர் போதும் அதை பணிகின்றேன் வேலையா
பணிகின்றேன் வேலையா
முருகா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரய்யா
காற்றடித்து என் வாழ்வு கலைந்து விட்டால் முருகையா
போற்றும் உன் பொன்னடியில் பூவாவேன் வேலையா
பூவாவேன் வேலையா
முருகா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரய்யா
நீ வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரய்யா
முருகா முருகா முருகா முருகா
===================================================================================================
K S கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளியான படம் கண்கண்ட தெய்வம். இந்தப் படத்திலிருந்துதான் என்று தெரியாமல் நாகேஷ் வழக்கறிஞராக வந்து நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளை சிறு காட்சிகளாக முகநூலில் சுவாரஸ்யமாக பார்த்து ரசித்திருக்கிறேன்.
S V ரங்காராவ், பத்மினி, நாகையா, நாகேஷ், சிவகுமார் நடித்திருக்கும் இந்தப் படத்திலிருந்து ஒரு ஜாலியான பாடல் இன்று... பாடல் வாலி அல்லது உடுமலை நாராயணகவி. அநேகமாக வாலிதான்.
ஜாலியான பாடல் என்பதால் வாலி என்று நினைத்தாலும், இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் உடுமலையும் எழுதுவார்.
TMS பாடும் இந்தப் பாடலில் ஒரு விசேஷம் நீளமான இந்தப் பாடலில் இடையில் பெரிய இசை எதுவும் கிடையாது. பல்லவியில் தொடங்கி. தொடர்ந்த பல சரணங்களுக்குப் பின் பல்லவியில் முடியும். இசை கே வி மகாதேவன்.
காட்சியில் சிவகுமார், விஜயராணி.
தென்னைமரத்துல குடியிருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சிகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா
நான் தென்னைமரத்துல குடியிருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சிகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சு பாப்பா
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சு பாப்பா
கொடுங்கோடையிலே குளுகுளுங்கற குமரி பாப்பா
எங்க குமரி பாப்பா
பனிவாடையிலே வெதுவெதுங்கற
வயசு ப்பாப்பா நல்ல வயசு பாப்பா
கொடுங்கோடையிலே குளுகுளுங்கற குமரி பாப்பா
எங்க குமரி பாப்பா
பனிவாடையிலே வெதுவெதுங்கற
வயசு ப்பாப்பா நல்ல வயசு பாப்பா
என் ஆசையெல்லாம் நீதான்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா அறிவு பாப்பா
நல்ல அழகு பாப்பா
என் ஆசையெல்லாம் நீதான்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா அறிவு பாப்பா
நல்ல அழகு பாப்பா
நான் இறங்கிவந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு என்னை கேப்பா
நான் இறங்கிவந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு என்னை கேப்பா
நான் அக்கம்பக்கம் பார்க்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாய பாப்பா
என் வாய பாப்பா
நான் அக்கம்பக்கம் பார்க்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாய பாப்பா
என் வாய பாப்பா
நான் போட்டுக்கவா.. அதை போட்டுக்கவா
நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்த்தான் போட்டுக்கோன்னு கழுத்த நல்லா நீட்டி பாப்பா
கழுத்த நீட்டி பாப்பா
நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்த்தான் போட்டுக்கோன்னு கழுத்த நல்லா நீட்டி பாப்பா
கழுத்த நீட்டி பாப்பா
பாப்பா பாப்பா யப்பா பாப்பா யப்பப்பப்பப்பா..
நான் தென்னை மரத்துல குடியிருப்பதை
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாழ்க... வாங்க செல்வாண்ணா..
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம்
வாழ்க..
வாழ்க..
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா .. .வணக்கம்.
நீக்குமுதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன்.
தென்னைமரத்தில் நின்று ஆடிய அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் சிவக்குமார் சொன்னார்.
நன்றி கோமதி அக்கா. சிவகுமார் சொல்லியிருப்பதை நான் கேட்டதில்லை. இந்தக் காட்சியில் நடித்திருப்பது சிவகுமார் என்பதே இதைப் பகிர எடுத்தபோதுதான் தெரியும்!
நீக்குஇரண்டு பாடலும் நான் கேட்டு இருக்கிறேன் ஜி
பதிலளிநீக்குநல்லது ஜி.
நீக்குமுதல் பாடலை முதல் முறையாக கேட்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் காட்சியில் நடிப்பதற்காக நிஜமாகவே தென்னை மரத்தில் ஏறி பயிற்சி எடுத்துக் கொண்டு உடம்பை சிராய்த்துக் கொண்டாராம் ஜோதிகாவின் மாமனார். மறுநாள் அவர் உடல் காயங்களைப் பார்த்த இயக்குனர்,"நீங்க ஏன் இப்படியெல்லாம் கஷ்டப்படறீங்க? நாங்க ஏணி வைத்து ஏற்றி விடுவோம்" என்றாராம்.
நானும் இந்தச் செய்தியைப் படித்திருக்கின்றேன்..
நீக்குஎனக்கு இதெல்லாம் செய்தி பானுக்கா, செல்வாண்ணா
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇரண்டு பாடலும் கேட்டு இருக்கிறேன். முருகப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்...
கிடைத்திடட்டும்... நன்றி வெங்கட்.
நீக்குஇன்றைய பாடல்கள் இரண்டுமே சிறப்பானவை...
பதிலளிநீக்குஅருமை..
மகிழ்ச்சி..
நன்றி செல்வாண்ணா
நீக்குஅனைவருக்கும் இனிய காலை
பதிலளிநீக்குவணக்கம்.
இன்று ஆடி வெள்ளிக்கிழமை.
அம்மனை போற்றுவோம்.அம்மன் அருளை பெற்றிடுவோம்
கே. சக்ரபாணி
வோம்.... வோம்... ஓம்..... ஓம்....
நீக்குநன்றி சக்ரபாணி ஸார்.
இரண்டு பாடல்களுமே ஒரே பீட்டில்(beat) அமைந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஎனக்கும் தோன்றியது.
நீக்குகொஞ்சம் ஆனா முதல் பாட்டு கொஞ்சம் ஸ்லோ டெம்போ போல் தோன்றுகிறது.
நீக்குஇரண்டு மூன்று தடவை கேட்டா சொல்லிடலாம்.
கீதா
முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் ஆனால் அதிகம் இல்லை.
பதிலளிநீக்குஅழகான பாடல் ஆட வைக்கும் பாடல்!! கேட்டு ரசித்தேன்.
கீதா
ஆமாம். மெல்ல ஆடவைக்கும் டியூன். "தில்லா டாங்கு டாங்கு " என்று...
நீக்குஇரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். இரு பாடல்களுமே ஒரே ராகம் அடிப்படையில் போன்று தோன்றுகிறது. தாளம் முதல் பாடல் கொஞ்சம் ஸ்லோ டெம்போ....
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா.
நீக்குஅருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்குஆமாம். நன்றி நண்பரே..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாவது பாடல் முன்பு கேட்டிருக்கிறேன். படம் கூட முன்பு எங்கள் அம்மாவுடன் சென்று பார்த்ததாக நினைவு. ஆனால் படத்தின் கதையெல்லாம் அவ்வளவாக நினைவில் இல்லை.
இன்று இரு பாடல்களுமே டி. எம். எஸ் பாடியிருப்பது மட்டுமின்றி, ஒரே மெட்டில் ஆரம்பிப்பதாகவும் எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டுந்தானா எனத் தெரியவில்லை. நல்ல பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல் பாடல் கேட்டதில்லை என்பது வியப்பு. இரண்டாவது பாடல் படமே பார்த்திருக்கிறீர்கள் என்பதும் வியப்பு, மகிழ்ச்சி.
நீக்குமுதலாவது முருகன் பாடல் கேட்டதில்லை. இப்பொழுதுதான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடல் கேட்கும்போது சிரித்துவிடுவேன்.
முதல் பாடல் கேட்டதில்லையா? இரண்டாவது பாடல், ஆம், சற்றே நகைச்சுவை கலந்த பாடல்... நன்றி மாதேவி.
நீக்கு