வெள்ளி, 26 ஜூலை, 2024

மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது... மலர் தந்த மணம் கொண்டு வந்தது

 யாரோ ஒரு நல்லவர்

எழுதிய பாடலுக்கு T M சௌந்தரராஜன் தானே இசை அமைத்தோ,   அல்லது வேறொரு இசை  அமைப்பாளர் இசை அமைக்க, இவர் பாடி இருக்கிறார்.

ஸ்ருதி மேலே செல்லாமல் ஒரு மாதிரி நடுவாந்தரத்திலும், கீழேயும் சுற்றும் பாடல்.

செல்வாண்ணா இதை தமிழ்நம்பி எழுதிய பாடல் என்று சொல்லி இருக்கிறார்!


உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா


====================================================================================================

முதல் வசந்தம் என்று ஒரு படம்.

25 வாரங்களுக்கு ஓடிய மணிவண்ணன் இயக்கிய படம். சத்யராஜ், மலேஷியா வாசுதேவன், பாண்டியன் , ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம்.

அந்தப் படத்தில் இரண்டு மூன்று பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் ஒன்று இந்தப் பாடல். தலைவர் பாடியது. கங்கை அமரன் பாடலை எழுதி இருக்கிறார். இசை அவர் அண்ணன் இளையராஜா.

ரம்யா கிருஷ்ணனின் ஆரம்ப காலப் படம். ஒருவேளை இதில்தான் அறிமுகமே ஆனாரோ என்னவோ... பார்க்கவில்லை. இப்போது படையப்பா, பாஹுபலி போன்ற படங்களில் நடித்ததைப் பார்த்த பிறகு பாண்டியனுக்கு அவர் ஜோடியாக நடித்திருக்கிறாரே என்று எண்ணத்தோன்றும்! !! அதாவது ஜோடியாய் நடிப்பது பாண்டியன். பாண்டியன் மார்க்கெட் படம் வெளிவந்த சமயம் கொஞ்சம் டல்லடித்ததில் மணிவண்ணன் வில்லன்களில் ஒருவரான சத்யராஜை கிளைமேக்சில் ஹீரோ ஆக்கி விட்டாராம்! விவரம்தான்!

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூமேனி
பருகத் துடிக்கும் நான் தேனீ
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தங்க முகம் இந்த முகமே
தெய்வம் சேர்த்த நம் கைகள்
சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல்
சொர்க்கம் தேடுது
இது இளமை…இனிமை…புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள்
மங்கை தந்தது
அங்கம் கூறும் மோகங்கள்
தங்கம் போன்றது
இனி இனிமையின்…கனவுகள்…உதயம்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்
நீ தந்தது என்றுமே இன்பமே

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

 

47 கருத்துகள்:

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. திரு. தமிழ் நம்பி அவர்கள் எழுதிய பாடல் அது..

    பதிலளிநீக்கு
  5. /// தானியா அல்லது வேறொரு சினை அமைப்பாளரோ ///

    !!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரம்... கஷ்டம்! இப்போது சரி செய்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  6. இரண்டாவது பாடலை எவ்வளவு யோசித்தும் கேட்டமாதிரித் தெரியலை. பாடலை ஓடவிட்டதில் இதுதான் முதல்முறை கேட்பது என்று தோன்றியது. வெகு சுமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  உங்களுக்கு அவ்வளவாக ரசிக்கவில்லையா?  சரணங்களில் தெரியும் ஒருவித ஏக்கம் கலந்த சோக உணர்வு..  SPB நன்றாக பாடி இருப்பார்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
    அடுத்த பாடல் கேட்ட நினைவு இல்லை. இன்று கேட்டேன்.
    கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் சின்ன வயதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...   கவுண்ட்டருக்கு ஜோடியாக எந்தப் படம் என்று நினைவில்லை.

      நீக்கு
    2. "ராஜா எங்க ராஜா "என்ற படம் எனக்கும் பேரு நினைவு இல்லை.
      கூகுள் மூலம் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  9. முதல் பாடலைப் பார்த்தபோது ஏவிஎம் குமரன் அவர்களது அனுபவங்களைக் கேட்டது நினைவுக்கு வந்தது. எப்படி டிஎம்எஸ் முருகன் பாடல்கள் ஸ்பெஷலிஸ்டோ அது போன்று நடந்த சம்பவம். சரஸ்வதி ஸ்டோர்ஸ் (ஏவிஎம் முதன் முதலில் கிராமபோன்கள் விற்ற கடை) இன்சார்ஜாக இருந்த குமரனுக்கு, தாங்களும் பக்தி கிராம்போன் வெளியிடணும் என்ற எண்ணம் தோன்ற, கண்ணதாசனிடம் பேசுகிறார். எப்போ பாடல்கள் எழுதி இசையமைத்து ரெடி பண்ணணும் என்ற திட்டம் எனக் கண்ணதாசன் கேட்டதற்கு, அன்றே என்று சொல்லவும் கண்ணதாசன், சரி நாளைக்கு என் திருமண மண்டபத்துக்கு வாங்க, எழுதுகிறேன், ஆனால் பணம் உடனே தந்துவிடவேண்டும், ஒரு அவசியத் தேவை இருப்பதால் என்று சொன்னாராம். மறுநாள் குமரன், விசுவநாதன் மற்றும் சில இசைக்கருவி வாசிக்கும் விசுவநாதன் அவர்களின் குழுவோடு கவிதா திருமண மண்டபத்திற்குப் போனபோது, கண்ணதாசன் பாயில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாராம். (உண்ட மயக்கம்). உடனேயே எல்லோரும் தயாராகி, கண்ணதாசன் இரண்டு வரிகள் எழுதி உடனே மெட்டுப் கோட்டு இரண்டு மணி நேரத்தில் முழுவதுமாகத் தயாரானது புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல். (கண்ணதாசனுக்கு சில நிமிடங்கள்தாம் தேவைப்பட்டனவாம்). அனைத்துப் பாடல்களும் தயாராகி மறுநாள் பாடகர்களைப் பாடவைத்து மூன்றாவது நாள் கிராமகோன் ரெடியாம். நகேட்கவே வெகு வியப்பாக இருந்தது.

    கண்ணதாசனுக்குப் புகழும், ஏவிஎம்முக்கு மிகுந்த பொருளும் சம்பாதித்துத் தந்த கிருஷ்ண கானங்கள் போலவே டிஎம்எஸ் அவர்களுக்கு பல முருகன் பாடல்கள் சாகாவரம் தந்திருக்கின்றன. அவற்றில் இன்றைய பாடலும் ஒன்று.

    டி எம் எஸ் முருகன் பாடல்கள், சீர்காழி விநாயகர் பாடல்கள், கண்ணதாசன் கிருஷ்ணகானம், எல் ஆர் ஈஸ்வரியின் மாரியம்மா பாடல்கள்., வீரமணியின் சரணம் ஐயப்பா பாடல்கள்.. இவைகள் இல்லாமல் தமிழகத்தில் விழாக்கள் களைகட்டியிருக்கின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் விளக்கி இருக்கும் குமரன் காணொளியை நேற்றுதான் நானும் பார்த்தேன்!

      நீக்கு
    2. அவ்வளவு ஈடுபாடோடு எவ்வளவு நேர்த்தியாக விவரித்திருக்கிறார், நெல்லை! அதற்கு நீங்கள் ஒத்த வரியில் பதிலென்ற பெயரில் ஒரு
      பின்னூட்டமிடலாமா?
      நீங்களும் அதற்கு ஈடாக அதே மாதிரியான கண்ணதாசன் பற்றிய இன்னொரு நிகழ்வை விவரித்திருந்தால் அதையும் வாசித்து ரசித்திருக்கலாமில்லையா?

      நீக்கு
  10. முதல் பாடல் எனது ஃபேவரிட் பாடல் ஜி.

    இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன்.

    ரம்யா கி நெற்றிக்கண், முதல் படம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.  விக்கியில் பார்த்து வந்தேன்.  வொய் ஜி மகேந்திராவுடன் நடித்த வெள்ளை மனசு (1985) படம்தான் தமிழில் முதல்.  மலையாளத்தில்தான் முதன்முதலில் நடித்திருக்கிறார்...'நேரம் புலரும்போல் என்னும் படம்.  அப்போது அவருக்கு வயது 15  ஆனால் அது வெள்ளை மனசுக்குப் பின்தான் ரிலீசானதாம்! 

      ரொம்ப முக்கியமான விவரங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்!

      நீக்கு
  11. 74 களில் வெளியான பக்திப் பாடல்களின் தொகுப்பு அது. ஒரே இசைத்தட்டில் முன்னும் பின்னுமாக பத்துப் பாடல்கள்..

    இந்தத் தொகுப்பில் தான் மண்ணானாலும் திருச்செந்தூரில் , உன்னையும் மறப்பதுண்டோ, அன்று கேட்பவன் அரசன் மறந்தால், எனக்கும் இடம் உண்டு - போன்ற பாடல்கள்..

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். முதல் வசந்தம் படம் வெளிவந்த சமயத்தில் ஹிட் ஆன பாடலும் கூட. ஆறும் அது ஆழம் இல்ல, மானாட கொடி பூவாடும் ஒரு சோலை ஆகிய மற்ற இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள் வரிசையில் இருந்தன ஒரு காலத்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இந்தப் படத்தில் அந்த மூன்று பாடல்கள்தான் எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  13. முதல் பாடல் கேட்டதுண்டு ஸ்ரீராம்.

    இரண்டாவது பாடல் கேட்டதே இல்லை. இப்பதான் முதல் முறையாகக் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    எஸ் பிபி யின் உணர்வு கலந்த பாடல் மெட்டிற்கும் இசைக்கும் அதாவது இன்டெர் லூட், பின்னணி - என்னவோ பொருத்தம் இருப்பது போல இல்லை. இளையராஜா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட பாட்டு.  ஆனாலும் SPB பின்னி இருக்கிறார்.  உணர்வுகளை நமக்குள் இறக்குகிறார்.

      நீக்கு
  14. எஸ்பிபி பாடல் ராகம் அந்த மெட்டு நல்லாருக்கு ஆனா என்னவோ ஒரு குறை

    படமும் இப்பதான் தெரிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்ப்பாட்டமான பாடல் இல்லை என்பது வேண்டுமானால் குறையாக இருக்கலாம்.

      நீக்கு
  15. முதல் பாடல்:

    'உனைப்பாடும் தொழிலன்றி'...

    தொழிலா? ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்.... நல்லவேளை... ஜீவி சார், இது ஒரு தொழிலா என்று கேட்காமல் போனார்

      நீக்கு
  16. பாண்டியன் மட்டுமில்லை.. பாரதிராஜாவின் அறிமுகங்கள் எதுவுமே சோடை போனதில்லை
    நீங்க எப்னடா என்றால் போயும் போயும் ர.கிருஷ்ணனை உயர்த்திப் பேசுவதற்காக...

    அது சரி, படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் யாருக்கு ஜோடி?.. வார்த்தை அமைப்பில் எங்கையோ இடிக்கற மாதுரி இல்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விக்கியில் சொல்லி இருப்பதை, நடந்ததைச் சொன்னேன்.  ரம்யாவை உயர்த்துவதற்காக பொய் சொல்லவில்லை.  

      பாரதிராஜாவின் அறிமுகங்களில் யாருமே சோடை போகவில்லையா?  காதல் ஓவியம் கண்ணன்?  புதுநெல்லு புது நாத்து ஹீரோ பெயர் கூட நினைவில்லை.  என் உயிர்த் தோழன் பாபு?  கல்லுக்குள் ஈரம் அருணா?  வெறும் ராதிகா, ரத்தி, ஸ்ரீதேவி சுதாகரை நினைத்து சொல்கிறீர்கள்! 

      நீக்கு
    2. பாரதிராஜா அவரே நடிப்பில் இறங்கிப் பார்த்து ஒதுங்கினார்.  அவர் மகன் மனோஜ் பயங்கர பிளாப்.

      நீக்கு
  17. வழக்கமாக கிழட்டுக் கதா நாயகர்களையே பார்த்து வந்த கண்களுக்கு புதுமைபெண்ணில் பாண்டியனை பாரதிராஜா அறிமுகத்தில் பார்த்த பொழுது மனத்திற்கு அத்தனை இதமாக இருந்தது. அவரும் நன்றாய்த் தான் நடித்திருந்தார். இந்த நாயகர், நாயகிகள் அறிமுக விஷயத்தில் பாரதிராஜா கில்லாடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியனுக்கு நடிப்பு என்பது வராது.  ஏதோ கொஞ்ச காலம் சினிமாவில் நடிப்பதாக  பேர் பண்ணினார்.   அவ்வளவே. மேலும் பாண்டியன் ரேவதியோடு அறிமுகமான படம் மண்வாசனை.

      நீக்கு
    2. ஒரு நடிகன் ஆரம்பப் படங்களில் நடிப்புத் திறமையோடு இல்லாமல் இருந்தாலும் பிறகு கற்றுக்கொள்ளலாம் (ஆமாம் சிவகுமார் நல்ல நடிகரா?). ஆனால் இந்த திரையுலக அல்லக்கைகளும், திடீர் பணம் கொட்டுவதால் பாண்டியன் போன்றவர்களும் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை இழந்துவிடுகிறார்களே அதுதான் கஷ்டமாக இருக்கிறது. பாருங்க... நல்ல திறமைசாலிகளையெல்லாம் மதுவுக்கு அடிமையாக்கி தொழிலிலிருந்து வெளியேற்றுவது இந்த அல்லக்கைகள்தாம்.

      நீக்கு
  18. அப்படியே சென்ற வியாழக்கிழமைக்கு கொஞ்சம் வாங்க.

    பதிலளிநீக்கு
  19. முதலாவது பாடல் மிகவும் பிரபலமானது .
    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் நல்லபாடல்.

    பதிலளிநீக்கு
  20. முதல் பாடல் மிகவும் அருமையான பாடல். முருகா முருகா என்று சொல்லும் போது நம் மனது உருகிவிடும் அளவிற்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார் டி எம் எஸ்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. இரண்டாம் பாடல் ஏனோ என்னை அவ்வளவாகக் கவரவில்லை.

    படத்தைப் பற்றிய தகவல்கள் 25 வாரம் ஒடியது, பாண்டியன் மார்க்கெட் டல்லானதில் சத்யராஜ் கடைசியில் ஹீரோ ஆகியது இதை வாசித்ததும் நீங்கள் சொல்லியிருப்பது போல் நல்ல விவரமான ஆள் என்று தோன்றியது. சுவாரசியமான தகவல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!