புதன், 3 ஜூலை, 2024

மனைவியிடம் பொய்சொல்லிமாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

 

கே. சக்ரபாணி சென்னை 28: 

 நீங்கள்   மனைவியிடம்  பொய்சொல்லிமாட்டிக்கொண்ட அனுபவம்  உண்டா?

# பொய் சொல்வது உண்டு. மாட்டிக் கொள்ளாதபடிக்கு சொல்லத் தெரியும் என்பதால் இதுவரை பிரச்சினை இல்லை.

& ரொம்ப யோசித்துப் பார்த்தேன். பொய் சொன்னது உண்டு; ஆனால் அதில் மாட்டிக்கொள்ள எதுவும் இல்லை! அது என்ன பொய் என்று கேட்கிறீர்களா? 

" உலகத்தில் நீ ஒருத்திதான் ரொம்ப அழகு " 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பெரும்பாலும் மக்களுக்கு 50 வயதிற்கு பிறகுதான் முறையான உணவு, உடற்பயிற்சி இவைகளில் ஆர்வம் வருகிறது. காரணம் என்ன?

முன் பாதி (வயது) கல்லையும் ஜீரணிக்கும்!

உடல் தவறான வகையில் மாறி வருகிறதோ என்ற கவலை 50க்கு மேல்தான் இயல்பாக வருகிறது.

& பிறந்தது முதல், படிப்பு முடிக்கும் வரையில் அம்மாவின் உணவுக் கட்டுப்பாட்டு திட்டத்தில் வளர்கிறோம். அம்மா, நமக்கு எது பிடிக்கும், எப்படி இருந்தால் பிடிக்கும், எது உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் என்றெல்லாம் பார்த்து அதற்கேற்ப நமக்குக் கொடுத்து வளர்க்கிறார்கள். 

வேலை பார்க்க ஆரம்பித்தவுடன், சூழ்நிலைக்கேற்ப - சுவைக்கேற்ப நமக்குக் கிடைப்பதை சாப்பிட்டு வளர்கிறோம். 

கல்யாணத்திற்குப் பிறகு, கணவன் அல்லது மனைவிக்குப் பிடித்தவை என்று முன்னுரிமை மாறுகிறது. 

குழந்தை(கள்?) பிறந்த பிறகு அவர்களின் நலன் முன்னுரிமை பெறுகிறது. 

நம்முடைய ஐம்பது வயதில் குழந்தைகள் தலையெடுத்து, அவர்கள் வேலை பார்க்க ஆரம்பித்தவுடன் நமக்கு முறையான உணவு, உடற்பயிற்சி - இவற்றின் மீது ஆர்வம் வருகிறது. 

ஆக - அந்தந்த வயதில் - இந்த உணவு / உடற்பயிற்சி வழக்க சுழற்சி இயற்கையானதுதான்! 

(என்னுடைய பையன், அவனுடைய முப்பதாவது வயதிலிருந்தே, அவனுடைய அம்மா & அப்பா, குழந்தைகள் எல்லோருக்குமே ஜங்க் ஃபுட் சாப்பிட தடா போட்டுவிட்டான்!  அவனும், மருமகளும் கூட ஜங்க் ஃபுட் சாப்பிடுவதில்லை!) 

காந்தி, இந்திரா காந்தி இருவருக்கும் ஒற்றுமை,வேற்றுமை at least  one சொல்ல முடியுமா?

& முடியும். இதோ :

ஒற்றுமைகள் : 

1) பெயர். 

2) இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். 

3) இருவரையும் கொன்ற நபர், தங்களுடைய மதநம்பிக்கைகளுக்கு / கொள்கைகளுக்கு எதிராக இறந்தவர் செயல்பட்டதால் அவரை சுட்டதாக நம்பப்படுகிறது. 

4) இருவரும் உயிரிழந்த ஆண்டு எண்களில் 1,4,8,9 என்ற எண்கள்! மாத எண்ணில் 0 & 1 ; தேதி 3x ! மாதக்கடைசி.  

மகாத்மா சுடப்பட்டது 1948 (01 - "ஜனவரி" மாதம் 30 ஆம் தேதி )  

இந்திரா காந்தி சுடப்பட்டது 1984 (10 - "அக்டோபர்" மாதம் 31 ஆம் தேதி )

வேற்றுமை :

ம காந்தி : அஹிம்சை! 

இ காந்தி : ஹிம்சை :(( 

= = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) நீங்கள் சமீபத்தில் மகிழ்ச்சி அடைந்த நிகழ்வு எது? 

2) நீங்கள் சமீபத்தில் கோபம் கொண்ட நிகழ்வு எது?

3) நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஏமாற்றம்?

4) சமீபத்து ஆச்சரிய நிகழ்வு எது? 

= = = = = = = = = =

KGG பக்கம் : 

வந்தது ஆகஸ்ட் 16 - 1971! 

வீட்டில் இருந்த சுவாமி படங்களை எல்லாம் பார்த்து மனமார வேண்டிக்கொண்டு, CNT பாலிடெக்னிக் - ரண்டால்ஸ் ரோட் ( சில வருடங்களுக்குப் பிறகு இந்த ரோட் ஈ வி கே சம்பத் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) -  வேப்பேரி - சென்னை 7 - நோக்கி நடந்து சென்றேன். ஆமாம் - நான் இருந்த வீட்டிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம்தான்! 

அந்த பாலிடெக்னிக் வளாகத்தில் அன்று பெரிய கூட்டம் காத்திருந்தது! சுமார் நானூறு பேர் அன்று முதல் batch எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் என்னுடன் படித்த நான்கைந்து மாணவர்களும் வந்திருந்தனர். காலை, மதியம், மாலை - என மூன்று batch எழுத்துத் தேர்வுகள் நடந்தன என்று பிறகு தெரிந்துகொண்டேன். ( 3 X 400 = 1200!) 

சரியாக காலை 9 மணிக்குத்தான் எங்களை ஜூப்ளி ஹால் உள்ளே விட்டார்கள். 

ஒவ்வொருவராக தங்களுக்கு வந்த எழுத்துத் தேர்வு கடிதத்தைக் காட்டி, உள்ளே சென்று, ஆளுக்கொரு  தனி மேஜைக்குப் பின்னால் உள்ள தனி ஸ்டூலில் அமர்ந்துகொண்டோம். 

வினாத்தாள்களை ஏந்தி வந்த ஒரு ஆஜானுபாகு ஆங்கிலோ இந்தியர் 'தஸ் புஸ்' என்று ஆங்கிலத்தில் உரையாற்றினார். 

சாராம்சம் இதுதான்: 

யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூடாது. 

யாராவது ஒருவரையொருவர் பார்த்து காபி அடிக்க முயன்றால், இருவருடைய தேர்வுத்தாள்களும் பறிமுதல் செய்யப்படும். இருவரும் பரிட்சை ஹாலை விட்டு வெளியேற்றப்படுவார்கள். 

கேள்வித்தாள்கள் மேஜை மீது கவிழ்த்து வைக்கப்படும். 

முதல் மணி அடிக்கும்வரை அதை யாரும் தொடக்கூடாது, கையில் எடுக்கக்கூடாது; பார்க்கக்கூடாது; படிக்கக்கூடாது ! 

முதல் மணி அடித்தவுடன் வினாத்தாளைக் கையில் எடுத்து முதல் பக்கத்தின் மேல் வலது மூலையில் பெயர் மற்றும் எழுத்துத் தேர்வு அழைப்புக் கடிதத்தின் reference எண் ஆகியவற்றை எழுதிவிட்டு, விடைகளை வினாக்களின் கீழேயே உள்ள பகுதியில் எழுதவேண்டும். 

மொத்தம் 50 கேள்விகள். 

பரிட்சை நேரம் : 45 நிமிடங்கள். 

இரண்டாவது மணி அடித்ததும் எழுதிய கேள்வி / பதில் தாளை முன்பு இருந்தபடியே மேஜை மீது கவிழ்த்து வைத்துவிட்டு எல்லோரும் அறையை விட்டு வெளியேறவேண்டும். 

முதல் மணி அடிக்கப்பட்டது. 

வினாத்தாளை ஆவலுடன் எடுத்து பெயர் , reference எழுதி - வினாக்களை மேலோட்டமாகப் பார்த்தேன். 

பெரும்பாலான கேள்விகள் CSR புத்தகத்தில் நான் பார்த்த வகை கேள்விகள். 

ஒரு உதாரணத்திற்கு .. இந்த வகை கேள்விகள் :

1. Which of the following words is opposite in meaning to "Fast"?

a) Quick

b) Slow

c) Rapid

d) Speedy

2. Choose the correct analogy:

a) Doctor : Hospital :: Teacher : ?

a) School

b) College

c) University

d) Library

1. If A > B and B > C, then which of the following is true?

a) A > C

b) A

c) A = C

d) None of these


2. Which of the following statements is a valid conclusion from the given premises?

a) All men are mortal. Socrates is mortal. Therefore, Socrates is a man.

b) All men are mortal. Socrates is a man. Therefore, Socrates is mortal.

c) Some men are mortal. Socrates is mortal. Therefore, Socrates is a man.

d) None of these

1. If x + 5 = 8, then what is the value of x?

a) 3

b) 5

c) 7

d) 9

2. If a train travels 200 km in 4 hours, how many km does it travel per hour?

a) 50

b) 60

c) 70

d) 80


1. Which of the following shapes is a mirror image of the given shape?

a) Shape A

b) Shape B

c) Shape C

d) Shape D

( 4 shapes given )

2. Which of the following patterns comes next in the series?

a) Pattern A

b) Pattern B

c) Pattern C

d) Pattern D

( 4 patterns given ) 

.. .. 

இவற்றோடு பல முக்கோணங்கள் ஒருங்கிணைந்த படத்தைக் கொடுத்து எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன 

எது எடை அதிகம் - சம அளவு கொண்ட இரண்டு வாளிகளில் ஒன்றில் தண்ணீர் விளிம்பு வரை உள்ளது - மற்றொன்றில் விளிம்பு வரை ஆப்பிள் பழங்கள் உள்ளன. 

குதுப்மினாரைக் கட்டியவர் யார்? 

The phenomenon - where a substance can have different physical properties but with same chemical properties is known as ----------------.

Who is the vice chancellor of West Germany?

இப்படி சுற்றிச் சுற்றி கேள்விகள் இருந்தன. 

எல்லாவற்றையும் சமாளித்து, பதில்கள் எழுதி முடித்தேன். 

குறைந்த பட்சம் 45 கேள்விகளுக்காவது சரியான பதில்கள் எழுதினேன் என்று ஞாபகம்.  

அப்புறம்? 

= = = = = = = = = =

54 கருத்துகள்:

  1. & ரொம்ப யோசித்துப் பார்த்தேன். பொய் சொன்னது உண்டு; ஆனால் அதில் மாட்டிக்கொள்ள எதுவும் இல்லை! அது என்ன பொய் என்று கேட்கிறீர்களா?

    " உலகத்தில் நீ ஒருத்திதான் ரொம்ப அழகு " //

    சிரித்துவிட்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பெரும்பாலும் மக்களுக்கு 50 வயதிற்கு பிறகுதான் முறையான உணவு, உடற்பயிற்சி இவைகளில் ஆர்வம் வருகிறது. காரணம் என்ன?//

    & பதில் சூப்பர். நான் சொல்ல நினைத்தது.

    பொதுவாக பெண் குழந்தைகள் வளர்க்கப்படுவதன் பின்னணி.

    எனக்குச் சிறு வயதிலிருந்தே விளையாட்டு, உடற்பயிற்சி ஆர்வம் உண்டு. அதன் பின் வளர்ந்த பிறகு உணவின் மீது அதுவும் விதம் விதமாகச் செய்வதில் ஆர்வம் சுவைப்பதில் ஆர்வம் இருந்தாலும், திருமணம் ஆன பின்னும் அது தொடர்ந்தாலும் ஆரோக்கியம் முக்கியம் என்ற எண்ணம் வந்துவிட்டது. குறிப்பாக என்னைச் சுற்றியிருந்தவர்களின் மரணம், அவர்களோடு மருத்துவமனையில் இருந்ததாலும் மருத்துவக் கட்டுரைகள் படித்ததாலும் அந்த அனுபவத்தால். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி நம் ஆரோக்கியம் முக்கியம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. (என்னுடைய பையன், அவனுடைய முப்பதாவது வயதிலிருந்தே, அவனுடைய அம்மா & அப்பா, குழந்தைகள் எல்லோருக்குமே ஜங்க் ஃபுட் சாப்பிட தடா போட்டுவிட்டான்! அவனும், மருமகளும் கூட ஜங்க் ஃபுட் சாப்பிடுவதில்லை!) //

    பாராட்டுகள்! சொல்லிடுங்க கௌ அண்ணா. மிக மிக நல்ல விஷயம். என் மகனும் இதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காந்தி, இந்திரா காந்தி இருவருக்கும் ஒற்றுமை,வேற்றுமை at least one சொல்ல முடியுமா?

    & முடியும். இதோ ://

    ஒற்றுமைகளில் ரசித்தது அந்த தேதி வைச்சு சொல்லியிருக்கீங்க பாருங்க அட! போட வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அனுபவம் கிட்டத்தட்ட இதேதான் எனக்கும். ஆனால் நான் எழுதியது வேலைக்கான தேர்வுகள்! கேள்விகளும் இப்படித்தான் டிரிக்கி கணக்குகள், ரீஸனிங்க் என்று கேள்விகள் இருந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க

    பதிலளிநீக்கு
  8. இந்த வார முதல் கேள்வியும் அதற்கான பதிலும் சூப்பர்.
    ஜங்க் புட் என்று நீங்கள் குறிப்பிடுவது எதை?
    உடலுக்கு தீங்கு செய்யாதவை, செரிக்கக்கூடியவை, சாப்பிடக்கூடியவை எல்லாமே உணவு தான்.
    ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    காந்தி, இந்திரா ஒப்பு சிறப்பு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஜங்க் ஃபுட் (குப்பை உணவு!) என்பது அதிக கலோரிகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகளைக் குறிக்கிறது. இந்த உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டு தொகுக்கப்படுகின்றன, மேலும் அவை செயற்கையான சேர்க்கைகள், பாதுகாப்புகள் மற்றும் சுவையை அதிகரிக்கும்.

      குப்பை உணவுகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

      1. பிரஞ்சு பொரியல், வறுத்த கோழி, மற்றும் டோனட்ஸ் போன்ற வறுத்த உணவுகள்
      2. ஹாட் டாக், தொத்திறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
      3. மிட்டாய், குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற சர்க்கரை தின்பண்டங்கள்
      4. வெள்ளை ரொட்டி, சர்க்கரை தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்
      5. சீஸ் மற்றும் முழு பால் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்
      6. சோடா, விளையாட்டு பானங்கள் மற்றும் ஆற்றல் பானங்கள் போன்ற அதிக சர்க்கரை பானங்கள்

      அதிகப்படியான குப்பை உணவை உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, அவற்றுள்:

      1. உடல் பருமன் மற்றும் எடை தொடர்பான பிரச்சினைகள்
      2. வகை 2 நீரிழிவு நோய்
      3. இதய நோய் மற்றும் பக்கவாதம்
      4. சில வகையான புற்றுநோய்கள்
      5. ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள்

      "ஆரோக்கியமானது" என்று சந்தைப்படுத்தப்படும் உணவுகளில் கூட இன்னும் சர்க்கரைகள், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், எனவே லேபிள்களைப் படித்து, முடிந்தவரை முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

      நீக்கு
    3. //சீஸ் மற்றும் முழு பால் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்// இது எப்படி ஜங்க் ஃபுட் ஆகும்?

      எல்லா மைதா கலந்த பண்டங்களும் ஜங்க் ஃபுட் தான். அதைவிட சுலபமாக, நம் மண்ணின் பாரம்பர்ய உணவு அல்லாதது எல்லாம் ஜங்க் ஃபுட் என்று சொல்லிவிடலாமே

      நீக்கு
  9. மனைவியிடம் பெரும்பாலும் பொய் சொன்னதில்லை, மற்றவர்களிடமும்தான். பொய் சொல்வதின் பெரும் பிரச்சனை, ஞாபகம் வைத்துக்கொண்டு அப்படியே எப்போதும் சொல்லணும். ஒரு தடவை தவறினாலும் நம்பிக்கையின்மை வந்துவிடும். அதுவும்தவிர பொய் எதற்குச் சொல்லவேண்டும்? போலி பிம்பத்தை வடிவமைக்க. அதனால் யாருக்கும் பிரயோசனமில்லை.

    இயல்பானது இல்லாது செய்வதும் கொய் என்ற கணக்கில் வரும் என்றால், அப்போ அப்னோ பாராட்டுவது. இது எனக்குப் போலியாகத் தோன்றுகிறது. காரணம் பாராட்டும் குணம் இல்லாத்தால். தாடிக்கார்ர் சொன்ன பொய்மையும் வாய்மையடத்து என்பதை நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  10. நான் மனைவியிடம் இறுதி வரையில் உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்.

    ஆனால் மனைவி நம்பியதே இல்லை .
    எங்கள் வாழ்க்கை அப்படி

    குறிப்பு- எனக்கு பொய் சொல்லும் பழக்கம் கிடையாது.

    பதிலளிநீக்கு
  11. உலகத்தில் நீ ஒருத்தி தான் ரொம்ப அழகு - ஹாஹா....

    பொய் சொல்வதில் இருக்கும் பிரச்சனை - சொன்ன பொய்யை நினைவிலும் வைத்துக் கொள்ள வேண்டும்!

    இந்த வார கேஜிஜி பக்கம் - நன்று. குறைந்த பாசம் 45 - குறைந்த பட்சம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைந்த பட்சம் - என்பது சரி. திருத்திவிட்டேன், நன்றி.

      நீக்கு
  12. இன்றைய பதிவு அருமை...

    கௌதம் ஜி அவ்ர்களுக்கு பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  13. எல்லாரிடத்தும் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

    உண்மையை மறைத்து ஒன்றைச் சொன்னதில்லை..

    ஏதோ ஒன்றைச் சொல்லி அதனால் ஆதாயம் அடைந்ததும் இல்லை...

    ஆக,
    வாய்மையாளன்...

    பதிலளிநீக்கு
  14. ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், அந்தரங்கம்..

    இதுபற்றி யாரிடத்தும் பேசக்கூடாது என்பது நீதி..

    இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?...

    பதிலளிநீக்கு
  15. யாதொன்றும் தீமை இலாத சொல்..

    இதுவே வாழ்வியல் நெறி..

    பதிலளிநீக்கு
  16. /// ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், அந்தரங்கம்..

    இதுபற்றி யாரிடத்தும் பேசக்கூடாது என்பது நீதி..

    இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?... ///

    நீ வேற ஏண்டா கொழப்புறே?..

    உண்மையையும் பேசணும்... நீதியும் தவறக் கூடாது...

    மதில் மேல பூச்சை (பூனை) தெரியுமா!..

    தெரியுமே... கண்ணு நல்லாத் தான இருக்கு..

    அது எந்தப் பக்கமா குதிக்கும்?..

    அதான தெரியாது!...

    அதான் டா வாழ்க்கை...

    நம்ம ஜிவாஜி நட்ச்ச பயாஸ் கோப்பா!?...

    பதிலளிநீக்கு
  17. நலம்தானே,
    நீண்ட நாட்களுக்குப் பின் இணையத்திற்கு வருகிறேன். தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  18. 'நீதான் அழகி" . ரசனை.

    காந்தி ஒப்பிடூதல் நன்று.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு (உணவு கட்டுப்பாடு) தாங்கள் தந்த பதிலை மிகவும் ரசித்தேன். உண்மை. சிறு வயதிலிருந்து ஓடியாடி விட்டு நின்று நிதானிக்கும் போதுதான் நம் வயதை ஐம்பதை கடக்கிறது என்பதை கணிக்கிறோம். அதன் பிறகு இயற்கையாகவே உடல்நல பிரச்சனைகள் வரும் போது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கவனம் கொள்ளச் செய்கிறது.

    தங்கள் மகனின் உணவு கட்டுப்பாட்டிற்கு (நல்ல பழக்கத்திற்கு) மனமார்ந்த வாழ்த்துகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. @ அன்பின் நெல்லை..

    /// நம் மண்ணின் பாரம்பர்ய உணவு அல்லாதது எல்லாம் ஜங்க் ஃபுட் என்று சொல்லி விடலாமே.. ///

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  21. எங்கள் கேள்விகள் 4 - யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை!

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும், பதில்களும் அருமை.
    கெளதமன் சாரின் தேர்வு அனுபவம் அருமை.

    நம் பாரம்பரிய உணவு முறையை கடைபிடித்தல் எப்போதும் நல்லது.
    அளவோடு உண்டு வளமோடு வாழ வேண்டும்.

    நம் உடம்புக்கு ஒத்துக் கொள்வதை சாப்பிட வேண்டும். ஒருவருக்கு ஒத்துக் கொள்வது நமக்கு ஒத்துக் கொள்ளாது. உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு எடுத்துக் கொள்வது நல்லது. வயது ஆகும் போது உடல் உழைப்பு குறைகிறது, அப்போதும் பழைய மாதிரி உணவை உண்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.

    வாரியார் சொல்லுவார் இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, போதும் என்று எழுந்துவிட வேண்டும் என்று.
    உணவு வீணாக போகிறதே என்றும் சாப்பிட கூடாது.

    பதிலளிநீக்கு
  23. கே ஜி ஜி பக்கத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போன்ற தேர்வுகள் எழுதிய அனுபவம் இல்லை. என் ட்ராக் வேறாக இருந்ததால். ஆங்கில இலக்கியம், எம்ஃபில், ஆசிரியர் பயிற்சி என்ற பாதையில் பயணித்ததால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. நம் குடும்பங்களில் காலம் காலமாக உண்ணும் உணவு முறையைக் கடைபிடித்தாலே நல்லது. எங்கள் பகுதியில் பேக்கரி உணவு கூடுதல். அங்கிருந்து முன்பு வாங்கிவந்து சாப்பிட்டதுண்டு டீ குடிக்கும் போது. இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீ / காபி போன்றவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  25. 71ல் எழுதிய தேர்வில் வந்த வினாத்தாளைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா? இல்லை நினைவிலிருந்தா? அதிசயம் தான். அருமை உங்கள் நினைவுத்திறன்.

    அந்த வினாத்தாள் இப்படி என்று பார்த்து தெரிந்து கொண்டேன். எனக்கு அனுபவம் இல்லையே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வித்தாளின் மாதிரியைத்தான் கொடுத்துள்ளேன். ஞாபகத்தில் இருந்த சில கேள்விகளை கொடுத்துள்ளேன். அப்பொழுது கொடுக்கப்பட்ட வினாத்தாள்தான் விடைத்தாளும் ! அதனால் எதையும் வெளியே கொண்டுவர இயலாது. வினாத்தாளில் விடையை வினாவுக்குக் கீழேயே எழுதிக் கொடுத்துவிடவேண்டும்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!