புதன், 31 ஜூலை, 2024

சலூன் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை ஏன்?

 

ஜெயகுமார் சந்திரசேகரன்: 

சலூன் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை ஏன்? வெள்ளி விடுமுறை கூடாதா?

# வெள்ளியன்று தயாராகி மாலை பயணம்  புறப்படும் மக்களை உத்தேசித்து இருக்கும்.

& செவ்வாய் என்பதை தெலுங்கு, இந்தி உட்பட்ட மொழிகளில், மங்களவாரம் / மங்கள்வார் - என்று குறிப்பிடுவார்கள். அந்தக் கிழமையில், அமங்கலமான விஷயங்கள் செய்யாமல் ஒதுக்கிவைப்பார்கள். முடி 'வெட்டுதல்',  நகம் 'வெட்டுதல்' எல்லாமே அமங்கலமான விஷயமாக முன்னோர்கள் கருதினர். அதனால் சலூன் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை என்று ஆதி காலத்திலிருந்து இருந்து வருகிறது. 

எல்லோருக்கும் ஞாயிறு விடுமுறை என்பதால், ஞாயிற்றுக் கிழமைகளில்தான் எப்பொழுதும் சலூன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், சலூன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை கிடையாது. சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கள் காலையில் சலூன் விஜயம் செய்வதால், திங்களும் விடுமுறை விட இயலாது. ஆக செவ்வாய் விடுமுறை என்பது எல்லா வகையிலும் பொருந்தி வருகிறது. 

= = = = = = = = =

KGG பக்கம் : 

வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில், சென்னையில் என்னுடைய நேரம் எப்படி செலவானது என்று நினைத்துப் பார்க்கிறேன். 

வாரநாட்களில், அண்ணன், அண்ணி, தங்கை எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்க்கக்  கிளம்பிச் சென்றுவிடுவார்கள். 

நான் மட்டும் வீட்டில் இருப்பேன். 

அண்ணன் வீட்டில், ஏகப்பட்ட பழைய புத்தக binding - இருந்தன. வீட்டில் நான் மட்டும் இருந்த சமயங்களில், அந்த பைண்டிங் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் படித்துமுடித்தேன். 

பொன்னியின் செல்வன் முழு தொகுப்பையும் முதன்முதலாக அந்த சந்தர்ப்பத்தில்தான் படித்து முடித்தேன். அதற்கு முன்பு சரித்திரக் கதைகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்தது இல்லை. பொன்னியின் செல்வன் படித்த பிறகுதான் சரித்திரக் கதைகளையும் இவ்வளவு சுவாரசியமாக சிலரால் எழுதமுடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். 

கதைப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன் என்றால், பெரும்பாலும் என்னுடைய கவனம் முழுவதும் கதையில்தான் இருக்கும். 

சென்னையில், நாங்கள் இருந்த இடம் சந்தடிகள் நிறைந்த ஒரு தெரு. சுந்தரம் பிள்ளை தெரு. ஒரு வீட்டின் முதல் மாடியில் எங்களையும் சேர்த்து ஐந்து குடித்தனங்கள். புத்தகம் படிக்கும்போது, கீழே தெருவிலிருந்து வருகின்ற சில சப்தங்கள் கவனத்தை ஈர்க்கும். 

ஆரம்ப நாட்களில் என்னை அப்படி யோசிக்க வைத்த ஒரு சத்தம், இருபது வினாடிகளுக்கு ஒருமுறை அமானுஷ்யமான - ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாத ஒரு குரலில், " ட் ட் டீ ப் " என்று ஒரு சத்தம் ! அதில் 'டீ' என்பது மட்டும்தான் வெளியே கீச்சுக் குரலில் பெரிதாகக் கேட்கும்.  அது என்னவாக இருக்கும் என்று பலமுறை யோசித்தேன். 

நாங்கள் இருந்த போர்ஷனில் இருந்து தெருவில் செல்பவர்களை ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாது. எவ்வளவு எட்டிப் பார்த்தாலும் வீதியின் அந்தப் பக்கத்து நடைபாதை மட்டுமே தெரியும். பிரதான வீதியில் நடந்து செல்பவர்களின் தலை மட்டும் சில சமயம் தெரியும். 

'டீ ப்' - சப்தம் செய்பவர் 'டீ' விற்பவரோ என்று சந்தேகம் வந்தது. தெருவில் செல்பவரைப் பார்ப்பதற்கு, ஒரு ஐடியா செய்தேன். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை ஜன்னலுக்கு வெளிப்புறமாகப் பிடித்து, சற்று கீழ் நோக்கித் திருப்பி, அதன் மூலம் தெருவில் செல்பவரை ஒரு கருடப் பார்வை பார்க்கலாம். அப்படி பார்த்ததில் இந்த 'டீ .. ப் ' ஆசாமி, தன்னுடைய தோளில் ஒரு சாக்குப்பையுடன் நடந்து செல்வது தெரிந்தது. 

சாக்குப் பையில், குடிக்கும் டீ கொண்டுவர இயலாது என்பதால், டீ விற்பவர் இல்லை என்று தெரிந்துகொண்டேன். 

ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், எல்லோரும் வீட்டில் இருக்கும்போது இந்த 'டீ .. ப்' வந்தார் என்றால் அப்போது வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். 

சற்று நேரம் கழித்து தெருவிலிருந்து, வேறு ஒரு  குரல். " ஏம்மா சாமா இருக்காரா ?" 

சரி - யாரோ அலுவலகம் செல்பவர், அவருடைய நண்பர் சாமா, வீட்டில் இருக்காரா என்று வீதியிலிருந்தே யாரையோ கேட்டு விடை தெரிந்துகொண்டு செல்கிறார் என்று நினைத்தேன். ( மனதுக்குள் ஒரு சிறு பெண் வீட்டிலிருந்து ஜன்னல் வழியே பார்த்து, ' இல்லையே மாமா - அவர் ஆபீஸ் போய்விட்டார் ' என்று சொல்லியிருக்கலாம் என்றும் யூகித்தேன்.) 

சற்று நேரம் கழித்து மீண்டும், " ஏம்மா சாமா இருக்காரா ?" 

சரிதான் - கேட்டவர் பதிலை ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறார் என்று நினைத்தேன். 

சற்று நேரம் கழித்து தெருவில் தொலைவிலிருந்து " ஏம்மா சாமா இருக்காரா ?" 

இந்தப் புரசவாக்கத்தில் எவ்வளவு சாமா இருப்பார்கள்? அப்படியே இருந்தாலும் எல்லோரும் ஒரே தெருவில் குடி இருப்பார்களா? அப்படியே இருந்தாலும், ஒரே ஆளுக்கு நண்பர்களாக இருப்பார்களா? என்றெல்லாம் சந்தேகம் வந்தது. 

அந்த வார ஞாயிற்றுக்கிழமையில், என்னுடைய சந்தேகங்களை தங்கையிடம் சொன்னேன். தங்கைக்கு சென்னை அனுபவம் என்னைவிட ரொம்ப அதிகம். 

நான் சொன்ன தகவல்களைக் கேட்டு, தங்கை கூறிய விளக்கங்கள் :

1) " டீ .. ப் " ஆசாமி - பழைய புட்டிகள் வாங்கிக்கொண்டு அதற்கு பைசா தரும் வியாபாரி. அவர் " பு .. ட் .. டீ " என்பதில் முதல் இரண்டு எழுத்துகளை முழுங்கி, முதல் எழுத்தின் பாதியை  மூன்றாவது எழுத்துக்குப் பிறகு உச்சரித்து , அமானுஷ்ய ஒலி எழுப்பி குழப்பியுள்ளார்! 

2) இரண்டாவது ஆசாமி குடை, பூட்டு போன்ற சிறிய சாமான்கள் பழுது பட்டு இருந்தால், அதை பழுது நீக்கி சரி செய்து கொடுப்பவர். அவர் எழுப்பும் சத்தம் : " ஏம்மா - சாமான் ரிப்பேரா ? 

= = = = = = = = =

ரீட்டா & மீட்டா 02 

சென்ற வாரம் : : ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம். 

========== 

மிரட்டல் கடிதம் பார்த்து, கோபமாக இருந்த ஆனந்த், ரீத்திகா வருவதைப் பார்த்தவுடன், சகஜ நிலைக்குத் திரும்பினான். 

" வாட் ஈஸ் த மேட்டர் ஆனந்த் ?" 

" நத்திங் டார்லிங் - லெட்டர் ஃப்ரம் மை  ஃப்ரெண்ட் இன் சென்னை " ரீட்டாவின் கடிதத்தைக் காட்டினான். ரீத்திகாவுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. 

" வாட் இஸ் தட் bmw - இன் ஹிஸ் நேம்? " 

" ஹி இஸ் வொர்கிங் இன் bmw ஷோ ரூம் " 

' வாழ்த்துக் கடிதத்தில் , நம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, தற்சமயம் கொஞ்சம் பணக் கஷ்டம், நான் உதவமுடியுமா என்று கேட்டிருக்கிறான்' 

" ஓஹோ" 

= = = = = = = = =

ஒரு வாரம் கழித்து, ரீட்டாவிடமிருந்து மேலும் ஒரு கடிதம் .. 

டியர் ஆன் ! 

நீ உன் காதல் கடிதங்களுக்கு விலை நிர்ணயிப்பதைவிட, நானே ஒரு விலை நிர்ணயித்துவிட்டேன். மொத்தமாக ஒரு பத்து லட்சம் அனுப்பினால் போதும். உன்னுடைய கடிதங்களை உனக்கே அனுப்பிவைக்கிறேன். நான் என்னுடைய ஃபோன் மாற்றியது போல, நீயும் உன் ஃபோன் மாற்றிவிட்டாய் என்று நினைக்கிறேன். என்னுடைய அக்கவுண்ட் எண் விவரங்கள், நமக்குத் தெரிந்த ரகசிய பக்கத்தில் பார்க்கவும். 

BMW ரீட்டா. 

(தொடரும்) 

= = = = = = = = =

50 கருத்துகள்:

  1. இந்த வாரக் கேள்விக்கும்
    பதிலுக்கும் ஒரு 'ஹி...ஹி..'

    பதிலளிநீக்கு
  2. கேள்வி என்னவோ ஒண்ணு தான்.

    அந்த 'ஒண்ணு'க்கு ஏன் ரெண்டு, சில சமயங்களில் மூணுன்னு
    பதில் கொடுத்து ஆத்லே ஒரு கால் -- சேத்திலே ஒரு கால்ன்னு பெண்டுலம் கணக்கா இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஜகா வாங்கற மாதிரி பதில்களை அமைக்கறீங்க?

    இது அடுத்த புதனுக்கு அல்ல, இந்த புதனுக்கே பதிலுக்கான கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் கேள்விக்குமே நிரந்தரமான / உறுதி, இறுதியான  பதில் என்று ஒன்று இருக்குமா ஸார்?

      நீக்கு
    2. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும்.

      நீக்கு
  3. சாமா(ன்)ன்னு கேட்டது இல்லே.... மெட்ராஸ்லே ஜாமான்..னு தான் கூவி கேட்டிருக்கிறேன்.

    இது மாம்பலம் கூவல்ன்னா, புரசைக் கூவல் சாமா(னோ)?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட உச்சரிப்புகள், மாறுபட்ட இடங்கள்...  ஆஃப்டர் ஆல் ஐந்து விரல்களே ஒன்றாய் இருப்பதில்லை!!!

      நீக்கு
    2. ஐந்து விரல்களே!
      கேண்மின்.. நீங்கள்
      ஆஃப்டர் ஆலா?..
      அநியாயமல்லவோ
      இது?..

      நீக்கு
  4. அடுத்த வார புதனுக்கான கேள்வி..

    2026- சட்டசபை தேர்தல்லே திமுகவும் பாஜாகவும் பெருந்தலைவர்
    வாஜ்பாய் அவர்கள் வழிகாட்டியது போல
    கூட்டணி அமைக்கலாம்.

    ஊஹூம். அதெல்லாம் நடக்காது என்பது உங்கள் பதிலாக இருந்தால் ஆணித்தரமான காரணங்கள் குறைந்த பட்சம் நான்காவது சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதெல்லாம் நடக்காது என்பது உங்கள் பதிலாக இருந்தால் //

      ஊஹூம்.  இது எங்கள் பதிலாய் இருக்காது என்றே நம்புகிறேன்.  அரசியலில் எதுவும் சாத்தியம்.  அடுத்த நொடி நடப்பதையே கணிக்க முடியாத நாம் எப்படி இரண்டு வருடம் கழித்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்?!!

      நீக்கு
    2. வர வேண்டிய நேரத்தில் வராமல் இந்த நெல்லை எங்கே போனார், தெரியலியே!..

      அடுத்த புதனாவது தவறாது ஆஜராகி விடுவார் என்று நம்புவோம்.

      நீக்கு
  5. ரீட்டா & மீட்டா

    கதையில் ரீத்திகாவுக்கு
    தமிழ் எழுத படிக்க மட்டுமல்ல, பேசவும் தெரியாதா என்ன? ஆங்கிலத்திலேயே
    "வாட் ஈஸ் த மேட்டர் ஆனந்த்?" என்கிறாளே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து கதாசிரியர் வரும்வரை ஒத்தி வைக்கப்படுகிறது!

      நீக்கு
    2. ஆனந்த் ரீத்தி இருவருக்கும் நன்கு தெரிந்த பொது மொழி ஆங்கிலம். எனவே சகஜமாக அதில் உரையாடுகிறார்கள்.

      நீக்கு
    3. ரீத்திக்கு தமிழில் பேச வருமா, வராதா என்பதைத் தான் அறியக் கேட்டேன். இது கதையின் போக்கு சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால் கேள்வி முக்கியமாகிறது.

      நீக்கு
    4. ரீத்திக்கு தமிழில் பேச வராது. தெலுங்கு, ஆங்கிலம், இந்திதான் பேச வரும்.

      நீக்கு
    5. நம்புங்கள். இந்த 'ஓஹோ'. ரீத்தி
      சொன்னது தான்!

      நீக்கு
  6. எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கேள்வியும், பதிலும் அருமை.
    சென்னையில் நேரம் நன்றாக போய் இருக்கிறது. கதை புத்தகம் வாசித்தல்.
    பழைய புட்டி வாங்குபவர், சாமான் பழு பார்ப்பவர் பேச்சை புரிந்து கொள்வது என்று நன்றாக பொழுது போய் இருக்கிறது.

    கதை நன்றாக போகிறது.ரீத்திகாவிடம் சொல்லி விடலாம், ரீட்டாவுக்கு
    10 லட்சம் கொடுப்பதற்கு பதில் என்று ஆனந்த் நினைப்பாரா ரீட்டாவுக்கு பணம் கொடுப்பாரா?

    /வாழ்த்துக் கடிதத்தில் , நம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, தற்சமயம் கொஞ்சம் பணக் கஷ்டம், நான் உதவமுடியுமா என்று கேட்டிருக்கிறான்' //

    இப்படி சொல்வதை பார்த்தால் பணம் கொடுப்பார் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான புதன் பதிவு..

    வாட் ஈஸ் த மேட்டர் ஆனந்த் ?.."

    " நத்திங் டார்லிங்!.."

    பதிலளிநீக்கு
  11. செவ்வாய்க்கிழமை விடயம் மிகச்சரியான பதில் ஜி

    பதிலளிநீக்கு
  12. ரீ....சர்மா....ரசித்தோம்.

    போயும்போயும் பத்துலட்சமா? இன்னும் கூட கேட்டிருக்கலாம் சினிமா பாணியில் :) ஆனந்த் என்ன செய்கிறார் .....பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  13. கௌ அண்ணா உங்கள் சென்னை அனுபவங்கள் அதுவும் புதியதாய் சென்னைக்குள் நுழைஞ்சிருக்கறப்போ இதெல்லாம் ரொம்பவே சுவராசியமாக இருந்திருக்கும்.

    அது சரி அப்போதைய சென்னை காலநிலைக்கும் இப்ப - இப்ப நீங்க குளு குளு ஊரில் இருக்கீங்க. இருந்தாலும் சென்னைக்குப் போய் வருவீங்களே...- உள்ள சென்னைக்கும் காலநிலை வித்தியாசம் தெரிகிறதா?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ரீட்டா தொடங்கிட்டா அவ ஆட்டத்தை. ரீத்திகாவுக்குத் தமிழ் தெரிந்தும் தெரியாதது போல நடித்து போட்டு வாங்க ட்ரை பண்ணறாளோ? ரீத்திகாவும் ரீட்டாவும் சேர்ந்து போடும் ப்ளானாகவும் இருக்கலாமோ

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கௌ அண்ணா நேற்றைய பதிவில் சொல்ல விட்டுப் போனது....அந்தக் கதைக்கு அலமேலுவை ஒரு நகைச்சுவை சித்திரமா போட்டிருக்கலாமோ! முன்ன எல்லாம் வருமே அப்படி....தேவன் கதைகள், அப்பு சீதாபாட்டி கதைகளில் எல்லாம் வருமே அப்படி. அடுத்த வாரம் அப்படி ஒன்று முயற்சி செய்யுங்க அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அலமேலுவை ஒரு நகைச்சுவை சித்திரமா போட்டிருக்கலாமோ!///

      இதை நான் ஆட்சேபிக்கின்றேன்...

      என்னைப் பொறுத்தவரை
      அந்தப் பெண்ணின் பதற்றம் இயல்பானதே...

      நீக்கு
    2. கேலிச் சித்திரம் போல வேண்டாம்...

      நீக்கு
    3. கோடு சித்திரம் கொஞ்சம் கஷ்டம். மீட்டா தரும் சித்திரம் சுலபம்.

      நீக்கு
  16. ரீட்டா - வை தொடர்கிறேன்! அட ரீட்டா பற்றிய தொடரை தொடர்கிறேன் என்று சொல்ல வந்தேன்.

    கேஜிஜி பக்கம் - இப்படி தெருக்களில் கூவி வரும் ஆட்கள் இப்போதும் சில இடங்களில் இருக்கிறார்கள். இங்கே கபாடிய்ய்ய்ய்ய்ய்ய் என்று இப்போதும் கத்திக் கொண்டு ஒரு பெரியவர் வருகிறார்.

    கேள்வி - பதில் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!