அன்பின் சுகந்தம்
- துரை செல்வராஜூ -
நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்த அறைக்குள் பால் வண்ணத்தில் ஒளி பரவியிருந்தது.. மலர்க் கட்டிலில் இளந்தம்பதியர்.. அவர்கள் திருநிறைவான சபரீஷ் - லதா.. காலையில் தான் திருமாங்கல்யதாரணம்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல இளந்தம்பதியரின் நெஞ்சங்கள்..
அந்நேரத்தில்
ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதற்கு மொழியேதும் இல்லை.. பார்வை ஒன்றே போதுமே என்பது போல நிமிடங்கள் ஓடிக் கொண்டிருக்க - அறைக்கு வெளியே வழிநடையில் பட்டுக்கோட்டை தாத்தாவின் குரல்..
" அவங்க அவங்க சாப்பிட்டாச்சுன்னா ஆளுக்கு ஒரு பக்கமா பெஞ்சில கெடந்து ஒறங்கலாமில்லே... "
" அது ஆரு அங்கே நாட்டாம?... பட்டுக்கோட்டையாரா.. "
" என்னா.. முத்துப்பேச்சி ஒனக்குமா இன்னும் ஒறக்கம் வரலை!?.. ஒறங்க வேண்டியது தானே!.. "
முத்துப்பேச்சி - பாலாவின் கணவருக்கு தூரத்து சொந்தம்.. மதுரைக்கு அந்தப் பக்கம்.. அத்தை முறை...
வாயைத் திறந்தால் போதும்... ஊர் நியாயம்... உலக நியாயம் என்று எல்லாவற்றையும் கற்று கொள்ளலாம்..
" நாங்க ஒறங்காமக் கெடந்தா ஆருக்கு என்னவாம்... "
முத்துப்பேச்சியிடம் இருந்து எதிர்க் கேள்வி..
" அந்தக் காலத்துல பத்து நாள் கழிச்சி நல்ல நாள் பார்த்து வீடு கூடுவாங்க... இப்ப தான் அப்படி இல்லையே.. "
" நீங்க ஒங்களோட இருவது வயசிலயே இன்னமும் இருக்கீக.. காலம் அப்படியேவா இருக்கு?.. அதோ சொர்ணத்தக்கா சிவகாசியில இருந்து வந்திருக்காக... இதோ செல்லக்கிளி செங்கல்பட்டு ல இருந்து வந்திருக்கா... இந்தப் பக்கம் தஞ்சாவூர் சீமையில கல்யாணத்துக்கு வந்தமா மக்க மனுசாளைப் பார்த்தமா... பேசிக்கிட்டமா ன்னு இருக்கு ... நாலு பஸ் ஏறி அவங்க ஊருக்குப் போறதுக்குள்ளே மூட்டு முடுக்கு எல்லாம் கடகடத்துப் போகுது.. "
" ஏன் ரயில்ல போலாம் ல.. "
" ரயில்ல போலாம் தான்.. ஆனா அதுல டிக்கிட்டு எடுக்க நமக்குத் தான் ஏலலை.. என்னா செய்யிறது?.. "
ரெண்டு பேர் அந்தப் பக்கம் சிரித்து வைத்தார்கள்..
" நாஞ் சொல்ல வந்தது என்னான்னா...."
" நீங்க சொல்ல வந்தது என்னான்னு நல்லாவே தெரியும்... சளச்சள ன்னு பேச்சு சத்தம் இருந்தா சின்னஞ் சிறுசுங்களுக்கு சங்கடமா இருக்கும்.. ங்கறது தானே!.. "
"ஆமா... ஆமா!.."
" இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்... நாங்க பாத்துக்கறோம்.. வெசனப்படாம நீங்க போய் ஒறங்குங்க...ஒன்னுந் தெரியாம இருந்ததெல்லாம் ஒங்கக் காலம்!..."
மேலும் சிரிப்புச் சத்தங்கள்..
" லாட்ஜ் ல தங்கி இருக்கறவங்களுக்கு எல்லாம் வேன் ரெடியா இருக்கு.. "
வெளியூர் உறவுகள் ஆசுவாசமாக ஓரிரு நாட்கள் தங்கியிருப்பதற்காக இருவீட்டார் தரப்பிலும் லாட்ஜ்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டன.. அந்த வகையில் அங்கே செல்வதற்கான பொது அழைப்பு... ஒரு சிலர் கிளம்பிச் சென்றதும் வெறிச் என்றிருந்தது முன் வாசல் கூடம்..
அன்றைக்கு வைகாசி முதல் தேதி செவ்வாய்க்கிழமை என்று ஜோதியின் வீட்டுக்கு பாலா குடும்பத்துடன் கிளம்பி வந்ததில் இருந்தே இரண்டு பக்கமும் கல்யாணக் களை வந்து விட்டது... ஆடிக்கு முன்னால் மேளம் கொட்டி விட வேண்டும் என்று முனைப்பாக இருந்ததில் எல்லாருக்கும் திருப்தி..
மணமக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்ததை விட இருதரப்பு சொந்தங்களும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்ட சந்தோஷமே அதிகம்..
சுருங்கச் சொல்வது எனில் கல்யாண மண்டபமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது..
' எங்க வீட்டுக்கு வரணும்... எங்க வீட்டுக்கு வரணும்...' என்று கல்யாண மேடையிலேயே வெற்றிலை பாக்கு வைத்து விட - பயணத் திட்டத்தில் ஆழ்ந்தனர் - மாப்பிள்ளையும் பெண்ணும்..
********
நெற்றிச் சுட்டி சூரிய சந்திர வில்லைகள் ஜிமிக்கி கஜலக்ஷ்மி ஆரம் இவற்றைக் கழற்றிக் கொண்டிருந்த லதா விழிகளால் கேட்டாள் ..
இதைச் சொல்வதா... அதைச் சொல்வதா... சபரீஷ் திண்டாடினான்..
" ஏன் கழற்றுகின்றாய்?.. "
" அம்மா தான் கழற்றிடச் சொன்னார்கள்... "
இத்தனை நாட்களில் எதுவுமே பேசாது இருந்து விட்டு இப்போது விடிவதற்குள் எல்லாவற்றையும் பேசியாக வேண்டும் என்கிற மாதிரியான சூழலில் (!?) மேற்கொண்டு எதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்று யோசனை அவனுக்குள்...
" கவிதை எல்லாம் எழுதுவீங்களாமே.. என்னப் பற்றி கூட எழுதினீர்களாமே அத்தை சொன்னார்கள்... "
" உன்னப் பற்றி எழுதினது அவங்களுக்கு எப்படித் தெரியும் !?.. "
" எப்படியோ தெரியும்!.. பெத்து வளர்த்தவங்களுக்கு புள்ளயோட தரம் தெரியாதா!.. " - புன்னகைத்த லதா தொடர்ந்தாள்..
" அதென்ன பாக்கு நாக்கு சேலை சோலை ன்னு எழுதிக்கிட்டு?.. ஸ்மார்ட்டா எழுதுங்களேன்... "
" எழுதலாமே!... " - மெலிதாகப் புன்னகைத்த சபரீஷ் - வலக்கையை நீட்டினான்.
கொஞ்சமாக வெட்கப்பட்ட லதா தன்னுடைய வலக்கையை அவன் கை மீது வைத்தாள்..
சுட்டு விரலில் மட்டும் நெளி மோதிரம்.. மற்ற மூன்று விரல்களில் கல் மோதிரங்கள் மினுக்கிக் கொண்டிருந்தன.
அப்படியே குனிந்த சபரீஷ் மெல்லியதொரு முத்தத்துடன் கணகளில் ஒற்றிக் கொண்டான்.. லதாவின் உடம்பு சிலிர்த்துக் கொள்ள - மறு விநாடி உள்ளங்கையைத் திருப்பிப் பார்த்தான்..
மெல்லிய ரேகைகள் உள்ளங்கையை அழகாக்கி இருக்க - அந்த அழகை மேலும் அழகாக ஆக்கியிருந்தது மருதாணி..
ஜோதியின் விருப்பம் மருமகள் மருதோன்றி தான் வைத்திருக்க வேண்டும்.. அதைவிட முக்கியமாக கல்யாணத்தன்று மஞ்சள் தான் முகத்துக்குப் பூசியிருக்க வேண்டும்..என்று...
ஒருநாளைக்குத் தானே என்று எங்கிருந்தும் எவ்வித எதிர்ப்பும் இல்லை..
கல்யாண நாளன்று விடியற்காலை மஞ்சளில் குளித்து விட்டு கண்ணாடியில் முகம் பார்த்த லதா நினைத்துக் கொண்டாள் இனிமேல் மஞ்சள் தான் என்று..
உள்ளங்கையின் மருதாணி மனதில் ஓடிக் கொண்டிருக்க -
" இனிமே காலம் எல்லாம் உனக்கு நான் தான்... எனக்கு நீ தான்... " - என்று முணுமுணுத்தான் சபரி..
" இதைத் தான் காலையில சொன்னீர்களே!... "
" எத்தனை தடவை வேணாலும் சொல்லலாம்... தப்பே இல்லை லதா.. "
லதாவின் விரல்களுடன் விளையாடிக் கொண்டிருந்தன சபரியின் விரல்கள்..
" அன்னிக்கு கேசரியும் போளியும் தவள வடையும் செஞ்சு காஃபியும் கொடுத்து விட்டது இந்தக் கைதானே!.. "
சபரிக்கு பரவசம்...
" காஃபி மட்டும் தான் நான் பில்டர் பண்ணினேன்... மத்ததெல்லாம் அம்மாவும் அத்தையும் செஞ்சாங்க.. "
" இருக்கட்டுமே... இப்படி எல்லாம் அன்பு - யார் மனசுல வரும்?.. "
" யார் மனசுல வரும்?.. " - லதா வியப்புடன் வினவினாள்..
" அன்பான மனசுல இருந்து தான் அன்பு வரும்!.. " - சபரி இதழ் குவிக்க அதை நெற்றி முகட்டில் ஏந்திக் கொண்டாள் லதா..
" இருந்தாலும் இவ்ளோ சீக்ரம் கல்யாணமா ன்னு எல்லாருக்கும் ஆச்சர்யம்... "
லதாவிடம் வியப்பு..
" எங்க சொந்தத்துலயும் ரெண்டு பேரு விடாப்பிடியா நின்னாங்க... அது எப்படி.. இது எப்படி.. ந்னு கேள்வி கேட்டுக்கிட்டு.. ஒத்தக் கால் ல நின்னாங்க.. கல்யாணம் எப்படியாவது கலைஞ்சு போயிடணும்... "
" இதுல அவங்களுக்கு என்ன சந்தோஷம்?.. "
" கல்யாணத்தைக கலைச்சு விடறதுக்கும் ரொம்ப முயற்சி செஞ்சாங்க..அவங்களுக்கு அதுல தான் டா சந்தோஷம்!.. "
" நல்ல வேளை.. எங்க அம்மா அன்னிக்கு சொன்னாங்க.. வைகாசி முதல் தேதி செவ்வாய்க் கிழமையா இருக்கு... ஜோதி வீட்டுக்குப் போய் விளக்கு ஏத்திட்டு வருவோம்..ன்னு.. அப்பா வுக்கு ஒரே குழப்பம்.. இதெல்லாம் சரியா ன்னு... ' இவளுக்கு சபரி.. சபரிக்கு இவ.. ன்னு ஆகிடுச்சு.. இனிமேல் எது நடந்தாலும் சரிதான்.. சபரி தான்!... ' ன்னு அம்மா சொன்னதும் அப்பா ஜாலியா கெளம்பிட்டாங்க... அந்த சரவணன் அண்ணனுக்கும் ரொம்ப ஹேப்பி... சரவணன் பெஸ்ட் .. அந்த அண்ணனுக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்துருக்காங்க தெரியுமா!... "
சபரீஷுக்கு இது மகிழ்ச்சி..
' நாளைக்கு நாம் ஒரு செட் எடுத்துக் கொடுப்போம்...' - என்று இப்போது தோன்றியது..
லதா தொடர்ந்தாள்..
" உங்க வீட்டுக்கு வந்ததும் உங்க வீட்லயும் சந்தோஷம்... அத்தை குங்குமம் வச்சு விட்டதும் அப்படியே மேகத்துக்கு ஊடால பறக்கற மாதிரி இருந்திச்சு.. எலே மக்கா... இதாம் ல நெசமான சந்தோஷம்!.. கேட்டியா வே!.. " லதா உற்சாகத்துட்ன் பூரித்தாள்...
" ஆகா!... தேரிக் காட்டுக்கு குடி வந்தாச்சு லே!.. "
சபரீஷ் கைகளை விரிக்க லதா நாணத்துடன் அவன் நெஞ்சில் முகம் பதித்துக் கொண்டாள்..
" ஏளா.. இளந்தாரிகளா... இன்னங் கெடந்து ஒறங்கலையாக்கும்?.. "
" ஆச்சி.. இதோ ஒறங்கியாச்சுல்ல!.. "
அந்தப் பக்கம் யாரோ சிரித்தார்கள்..
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
பதிலளிநீக்குஎன்புதோல் போர்த்த உடம்பு..
தமிழ் வாழ்க..
வாழ்க தமிழ் !
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
இறைவனிடம் நல்லருள் வேண்டுவோம்.
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாழ்க , வாழ்க!
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்குஇன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..
நன்றி.. நன்றி..
நீக்குகண் கவரும் ஒளிப் படங்களுடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇந்தக் கதைக்கு மட்டும் என்ன மூன்று படங்கள்?...
பதிலளிநீக்குஅதானே! எனக்கும் அப்படித் தோன்றியது.
நீக்குஇளந்தாரிகளை ஒறங்கச் சொன்னதுக்காக சிரிச்சு வச்சது இந்தப் பொண்ணு தானா!?...
பதிலளிநீக்குஆனால் இந்தப் பொண்ணு சிரிப்பது - இதழ் பிரியாமல், சத்தம் இல்லாத சிரிப்பா இருக்கே!
நீக்குஅதானே!...
நீக்கு:))))
நீக்குகல்யாணக் கோலாகலம் அற்புதம்...
பதிலளிநீக்குயாரங்கே?..
அந்தப் பொற்கிழியை எடுத்து வாருங்கள்!..
யாரங்கே? அரசர் கூப்பிடுவது காதில் விழவில்லையா? அல்லது பட்ஜெட் சமர்ப்பித்த பிறகுதான் கொண்டுவருவீர்களா?
நீக்கு:))
நீக்குகஜானா காலியாகீது கௌ அண்ணே!! சல்லிக் காசில்ல. இன்னும் வரிப் பணம் எதுவும் உள்ளார வர்ல....எல்லாம் பதுக்கி வைச்சிருக்கானுங்க! எப்படிக் கொண்டாரதுன்னு ஒரே பேஜாரா கீது.
நீக்குகீதா
அரசர் கேட்டதற்காக, ஒரு மரியாதைக்கு, நாலஞ்சு பொற்காசுகளாவது சில்லறையா மாத்தி கொண்டு வந்து கொடுக்கலாமில்லை!
நீக்குநல்ல வேடிக்கை..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
(மன்மதப் பாண்டியன் மனதின் குரல்)
பதிலளிநீக்குசோலி இல்லாத பயலுவ எடுத்து வந்து கொடுத்துறப் போறனுவோ!...
இருக்கறதே ஒன்னுதான்!?..
:))))
நீக்கு"பொற்கிழி இல்லை மன்னா... காலியாயிடுச்சி... மூங்கில் கழி கீது... கொண்டாரவா?"
நீக்குஆ அவ்வ் ஓடிப்போயிடறேன்!
நீக்குஆ! மேலே கமென்ட் போட்டு வந்தா இங்க ஸ்ரீராமும் அதையே சொல்லிருக்காரே! மூங்கில் கழிய காமிச்சு மன்னரை பயமுறுத்தவா!!!!
நீக்குகீதா
நல்ல புள்ளயா தெரியறாளே...
பதிலளிநீக்குநம்ம செல்லப் பாண்டியனுக்கு கேப்போமா!..
அடுத்த கதை தயாராகிறதா! ஆவலுடன் ..
நீக்குஹாஹாஹா துரை அண்ணா இந்தக் கதைல சரவணன்லா வாராரு அவருக்கு பாக்க முடியாதோ!!
நீக்குகீதா
பார்த்துடுவோம்...
நீக்குபார்த்துடுவோம்...
நீக்குஅப்படியா..
நீக்குபார்த்துடுவோம்...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குலெக்கின்ஸ், ஷார்ட் ன்னு வராம பொண்ணுக்க எல்லாரும் பொடவையில வந்துருக்காங்களே... அந்த மட்டுக்கு சந்தோஷம் ஐயா!..
பதிலளிநீக்குசந்தோஷம்..
நீக்குலெக்கின்ஸ், ஷார்ட் ன்னு வராம பொண்ணுக்க எல்லாரும் பொடவையில வந்துருக்காகளே...
பதிலளிநீக்குஅந்த மட்டுக்கு சந்தோஷம் ஐயா!..
சரி....
நீக்குலெக்கின்ஸ், ஷார்ட் ன்னு வராம பொண்ணுக்க எல்லாரும் பொடவையில வந்துருக்காகளே...
பதிலளிநீக்குஅந்த மட்டுக்கு சந்தோஷம் ஐயா!..
சரி சரி.. சந்தோஷம்... புரியுது,, இருங்க,,, இதோ கேஜிஜியை பதில் சொல்லக் கூப்பிடறேன்.. அடுத்த வாட்டிக்கு அவர் வந்துடுவார்!
நீக்குலெக்கின்ஸ், ஷார்ட் ன்னு வராம பொண்ணுக்க எல்லாரும் பொடவையில வந்துருக்காகளே...
பதிலளிநீக்குஅந்த மட்டுக்கு சந்தோஷம் ஐயா!..
து செ நடத்தும் கல்யாணம் என்பது அவங்களுக்குத் தெரிந்திருக்கு - அதனால் பாங்காக பாரம்பரிய உடை அணிந்து வந்திருக்கிறார்கள்!
நீக்குகாஞ்சி பட்டுடுத்தி, கஸ்தூரி பொட்டு வைத்து, தேவதை போல நடந்து வருகிறார்கள்!
நீக்குகதை ஓகே... பலவற்றைப் புரிந்துகொள்ளும்படியாகச் செல்கிறது.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..
நீக்குமகிழ்ச்சி..
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..
நீக்குமகிழ்ச்சி..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குகதையின் தலைப்பும் கதையும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகதைக்கு பொருத்தமாக தேர்வு செய்து போட்ட
படங்கள் நன்றாக இருக்கிறது.
சிறுகதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது தொடர் சிறுகதை போல....!
நீக்குஅப்படியும் இருக்குமோ...
நீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓஹோ! லதா சபரீஷ் கதை தொடருதா! தொடர் கதையை ஒவ்வொரு பாகமா சிறு சிறு கதையாக்கிக் கொடுக்கறீங்களா துரை அண்ணா? அப்ப அடுத்து தொட்டிலா இல்லை அதற்கு இடையில் அக்குடும்பத்தில் ஏதேனும் சம்பவங்களா?!
பதிலளிநீக்குகீதா
இது வரைக்கும் ஒன்றும் யோசனையில்லை..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கௌ அண்ணா, படம் நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
எல்லோரும் காலை 5 மணியிலிருந்தே. கருத்துக்களை. பகர்கிறார்களே. அப்படி
பதிலளிநீக்குஆவலுடன் பார்க்க வைக்கிறது. எங்கள் ப்ளாக்.
நன்றி கே ஜி ஜி அவர்களே
கே. சக்ரபாணி
நன்றி.
நீக்குசக்ரபாணி அவர்களுக்கு நன்றி..
நீக்குமகிழ்ச்சி..
திருமண வீட்டின் மாலைநேர நிகழ்வு ரசனை ஜி
பதிலளிநீக்குஆமாம்!
நீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
சிறுகதை மிகவும் நன்று. தேர்ந்தெடுத்து கேஜிஜி அவர்கள் இணைத்த படங்களும் நன்று. தொடரட்டும் மனதைத் தொடும் சிறுகதைகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
சிறுகதை தெரியும், தொடர்ந்து தெரியும் இது தொடரும் சிறுகதையா?
பதிலளிநீக்குஇந்த வாரத்தில் ஓவியர் அதிகம் ஸ்கோர் செய்து விட்டார்.
சாதாரணமாக துரை செல்வராஜு சார் குழந்தைகளும் படிக்கும்படியாகத்தான் எழுதுவார்.
நேற்றைய கொடிப்பசலை பனீர் கூட்டிற்கு நான் போட்ட பின்னூட்டம் மட்டும் காணவில்லையே... :((
பதிலளிநீக்குஸ்பாமிலும் இல்லை, மாடரேஷனிலும் இல்லை. நீங்கள் பப்ளிஷ் -வெளியீடு பொத்தானை அமுக்க விட்டிருப்பீர்கள். அல்லது சரியாக க்ளிக் ஆகி இருக்காது!
நீக்குகதை நன்றாகச் செல்கிறது. படங்கள் தெரிவு கவர்கிறது வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு