வெள்ளி, 12 ஜூலை, 2024

மலைமீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலைவீசும் கடல்போல தமிழ்பாடும் கொடியே

 அன்னைதாசன் எழுத்தி, இசையமைப்பாளர் V. குமாரின் இசையில் S P பாலசுப்ரமணியம் பாடிய 'தேவாதி தேவா பாடல்...

1971 ல் ரெகார்ட் செய்யப்பட்டது என்று அந்த ரெகார்டிலேயே எழுதி இருப்பது வசதி!

கேட்டு பல வருடங்கள் ஆன போதும் பாடப்பாட மனதில் வரிகள் சட்சட்டென அந்தந்த இடத்தில் வந்து விழ, எனக்கே ஆச்சர்யம்.

தேவாதி தேவா திருமலை வாசா 
பாடினேன் உன்னை ஸ்ரீ வெங்கடேசா ஸ்ரீ வெங்கடேசா 
தேவாதி தேவா திருமலை வாசா 
பாடினேன் உன்னை ஸ்ரீ வெங்கடேசா ஸ்ரீ வெங்கடேசா 

ஏழுமலை ஏறி உந்தன் புகழ் பாடி 
வாழ வரம் கேட்டு வந்தேன் உன்னை நாடி 
ஏழுமலை ஏறி உந்தன் புகழ் பாடி 
வாழ வரம் கேட்டு வந்தேன் உன்னை நாடி 
உன்னிடம்தான் என் சிந்தனைகள் உன்னிடம்தானே என் விழிகள் 
அருள்தரவேண்டும் உன் கோவில் வரம் தர வேண்டும் உன் வாசல் 
பாடினேன் உன்னை ஸ்ரீ வெங்கடேசா ஸ்ரீ வெந்கடேசா   -  தேவாதி தேவா 

கலியுக தெய்வம் எங்கள் ஸ்ரீநிவாஸா 
கடைக்கண் பார்த்து குறை தீர்க்கும் ஈஸா 
கலியுக தெய்வம் எங்கள் ஸ்ரீநிவாஸா 
கடைக்கண் பார்த்து குறை தீர்க்கும் ஈஸா 
பொன்முகம் சிந்தும் புன்னகைகள் என் முகம் பார்க்கும் நல்வழிகள் 
உன்னிடம்தானே என் இதயம் உயிருள்ளவரையில் சரணடையும் 
பாடினேன் உன்னை ஸ்ரீ வெந்கடேசா ஸ்ரீ வெங்கடேசா  -  தேவாதி தேவா

 
===============================================================================================

இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும்.  அவர் பாடிய பாடல்கள் வரிசையிலிருந்து இன்று ஒரு பாடல்.  இதே பாடலை P. சுசீலா அம்மாவும் பாடி இருக்கிறார் என்றாலும் இன்று இளையராஜா குரலில் ஒலிக்கும் பாடலையே பகிர்கிறேன்.

இன்றைக்கு 3சரியாக 5 ஆண்டுகளும் சுமார் இரண்டு மாதங்களுக்கும் முன்னால் வெளியான திரைப்படம் நினைவுச்சின்னம்.  பிரபு, ராதிகா நடித்த இந்தப் படத்தில் நடித்ததற்காக ராதிகாவுக்கு தமிழ்நாடு விருது கிடைத்தது.

இனிமையான பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் 'சிங்காரச் சீமையிலே' எனும் இந்தப் பாடலையும் பி சுசீலா குரலில் இதே டியூனில் ஒலிக்கும் ஏலே இளங்கிளியே எனும் பாடலையும் இளையராஜாவே எழுதி இசை அமைத்திருக்கிறார்.  அவரே பாடியும் இருக்கிறார்.

படையப்பா படத்தில் நகைச்சவை நடிகராக நடித்த அனுமோகன்தான் படத்தின் இயக்குனர்.

அவ்வப்போது வந்து விழும் புல்லாங்குழல் இசைத்துளிகளுடன் தென்றல் போல தவழ்ந்தாடி வரும், தாலாட்டும்  பின்னணி இசை.

சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன 
செந்தூர செங்கலிலே கோவில்கட்ட நேர்ந்ததென்ன 
சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன 
செந்தூர செங்கலிலே கோவில்கட்ட நேர்ந்ததென்ன
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க 
தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே 
ஏலே இளங்கிளியே  இன்னும் உறக்கமென்ன 
பாலே பசுங்கொடியே இங்கே வருத்தமென்ன 

 தாயன்பு காணாது து தனியாக வாட 
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட
தாயன்பு காணாது து தனியாக வாட 
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட 
யாரடி உன்னைப் படைத்தார் 
அன்னையும் தந்தையும் இல்லை 
கூறடி என்னைக் கெடுத்தார் தெய்வமா நம்பவும் இல்லை 
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன 
உண்மைதான் சொல்லடி முல்லையே மயங்காதே - சிங்கார சீமையிலே 

மலைமீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே  
அலைவீசும் கடல்போல தமிழ்பாடும் கொடியே
மலைமீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே  
அலைவீசும் கடல்போல தமிழ்பாடும் கொடியே 
மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டுவிடுமே  
பாடடி பாசக்கவிதை நெஞ்சம்தான்  கெட்டுவிடுமே 
என்றைக்கோ  எழுதி வைத்தான் இன்றைக்கே நடப்பதெல்லாம் 
உண்மைதான் முல்லையே என்னையே நான் மறந்தேன்  - சிங்கார சீமையிலே 

22 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் எஸ். பி. பி. அவர்கள் பாடிய முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். பாடல் அருமை. "தணிகை வாழும் முருகா" என்ற அவரது பாடலும் பிரசித்தம். அதையும் இதுவரை நீங்கள் பகிர்வில்லை என்றால், என்றாவது ஒரு நாள் தயவு செய்து எனக்காக பகிருங்களேன்.

    இரண்டாவது பாடல் பற்றிய விளக்கங்கள் அருமை. இளையராஜா அவரின் குரலில் பாடிய பாட்டுக்கள் நன்றாக இருக்கும். இந்தப்பாடல் இதற்கு முன் கேட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. கேட்டு விட்டு பிறகு வருகிறேன். இரண்டுமே அருமையான பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://engalblog.blogspot.com/2022/06/blog-post_10.html

      தணிகை வாழும் முருகா 2022 ஆம் வருடம் ஜூனில் பகிர்ந்திருக்கிறேன்.  SPB பாடிய தணிகை வாழும் முருகா மற்றும் நல்ல தமிழ்ச் சொல்லாலே இரண்டு பாடல்களும் முன்னரே பகிர்ந்து விட்டேன்.  இதுதான் இதுவரை பகிரவில்லை.   முடிந்தவரை பாடல்களை பகிர்வதற்கு முன் ஒரு முறை ஏற்கெனவே பகிரப்பட்டிருக்கிறதா என்று சோதித்தே பகிர்கிறேன்.

      நீக்கு
  5. முதல் பாட்டை பல வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்கின்றேன்...

    இரண்டாவது பாடலைக் கேட்டதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் இளையராஜா குரலில் அருமையாய் இருக்கும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. முதல் பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு. முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். அருமையான பாடல், கேட்டேன்.
    அடுத்த பாடல் கேட்ட நினைவு இல்லை. இன்றுதான் கேட்டேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. முதல் பாடல் அருமை எனக்கென்னவோ இதனுடைய இசை இஸ்லாமிய இசையை கேட்பது போன்று இருக்கிறது.

    அதாவது நாகூர் ஹனிபா பாடல் போல....

    பதிலளிநீக்கு
  9. 'தேவாதிதேவா திருமலைவாசா..... மிகவும் அருமையாக இருக்கும் கேட்டிருக்கிறேன்.

    இளையராஜா பாடலும் கேட்டிருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  10. ஜீவி சாருக்கு வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் ஆரோக்கியத்துடன் நெடுங்காலம் வாழ ப்ரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!