செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ரீட்டா & மீட்டா பகுதி 08.

 

ரீட்டா & மீட்டா கதை, அடுத்து ஒரு முக்கிய திருப்பத்தை நோக்கிச் செல்வதால், இந்த வாரம் முதல், புதன் பதிவிலிருந்து செவ்வாய் பதிவாக பதவி உயர்வு பெற்றுள்ளது. (நன்றி:  எ பி ஆசிரியர்கள் + மற்றும் வரிசையில் காத்திருக்கும் எ பி யின் மற்ற சிறுகதை எழுத்தாளர்கள் ) 

கதை முடிவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு, வாசகர்களுக்கு, இந்தக் கதைத் தொடர்பாக ஒரு பரிசுப் போட்டிக் கேள்வி வர இருக்கின்றது. பரிசுப்போட்டியில் பங்குபெற விரும்பும் வாசகர்கள், இந்தக் கதையின் முன் பதிவுகளை - முதல் ஏழு பகுதிகளைப் படிக்கும் வகையில் - இங்கே ஒவ்வொரு பகுதியின் கதைச் சுருக்கமும், அதற்கான சுட்டியும் கொடுத்துள்ளோம். 

பங்கு பெறுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்! 

= = = = = = = = = = =

1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம்.   (ஜூலை 24, 2024 பதிவு) 

2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா.   (ஜூலை 31, 2024 பதிவு) 

3) ஆனந்த் பத்து லட்ச ரூபாயை, ரீட்டாவுக்கு அனுப்புகிறான். ஆனந்த் எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் ரீட்டா. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம், ரீட்டாவிடமிருந்து !   ( ஆகஸ்ட் 07, 2024 பதிவு) 

4) மேலும் இருபது லட்ச ரூபாய் கேட்கிறாள் ரீட்டா. 'மீட்டா'வின் ஆலோசனைப்படி, 'வேறு வழியில்லை - ரீட்டாவைக் கொல்வதுதான் ஒரே வழி' என்று முடிவு எடுக்கிறான் ஆனந்த்.  (ஆகஸ்ட் 14, 2024 பதிவு) 

5) தடயம் இல்லாமல் நடந்த கொலைகள் பற்றி - மீட்டா சொல்லும்போது CV235 பற்றி குறிப்பிடுகிறது.   (ஆகஸ்ட் 21, 2024 பதிவு) 

6) ஆனந்த், 'ரீத்திகா கெமிக்கல்ஸ் - சென்னை' சார்பில் CV235 ஆர்டர் செய்துவிட்டு, அதை வாங்குவதற்கு சென்னை கிளம்பினான். (ஆகஸ்ட் 28, 2024 பதிவு) 

7) சென்னையில் CV235 விஷ ஜாடியை வாங்கிக்கொண்ட ஆனந்த் அதை ஊரப்பாக்கம் நர்சரியில் ஒரு ரோஜாத் தொட்டியில் கூழாங்கற்களுக்கு நடுவே மறைத்து வைத்து, அந்தத் தொட்டியை ரீட்டாவின் விலாசத்திற்கு அனுப்பச் சொல்கிறான்.   (செப்டெம்பர் 4, 2024 பதிவு) 

இனி .. பகுதி 08. 

ஆனந்த், ஹைதராபாத் வந்து சேர்ந்த  மறுநாள் தன்னுடைய அலுவலகமாகிய ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகம் - தலைமை அதிகாரி - அறையில் உட்கார்ந்து, வேலை + டீ வி + அலுவலக நூலகத்திற்கு வரும் தமிழ் செய்தித்தாள்கள் எல்லாவற்றையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். 

சில நாட்கள் ஒன்றும் விஷேஷமான செய்திகள் கண்ணில் படவில்லை - அல்லது அவன் பார்க்கவில்லை. 

ரீட்டா என்ன ஆனாள்? ஏன் ஒரு தகவலும் இல்லை? நான் அனுப்பிய CV235 தொட்டி என்ன ஆயிற்று? என்று நினைத்துக் குழம்பினான். 

மூன்று நாட்கள் கழித்து, தினமலர் செய்தித்தாளில் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி அவனுடைய கவனத்தை ஈர்த்தது. 

இளம்பெண் மர்ம மரணம். 

சென்னை:  ஊரப்பாக்கம், வர்தமான் நகரில், ஒரு பங்களாவில் இளம்பெண் ஒருவர்  மர்ம மரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. 

மரணம் அடைந்த இளம் பெண்ணின் உறவுப் பெண்மணி கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றனர், மரணம் அடைந்தவரின் உடலை,  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளம்பெண்ணின் பங்களாவில் தடயவியல் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

மரணத்திற்குக் காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி போலீசார் புலன் விசாரணை செய்துவருகின்றனர். 

செய்தியைப் படித்த ஆனந்துக்கு இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் வலி  ஏற்பட்டது போல இருந்தது. 'அவசரப்பட்டு ரீட்டாவை கொன்றுவிட்டேனோ? அவளுடைய மிரட்டல் கடிதங்களை அலட்சியம் செய்து கிழித்துப் போட்டிருக்கலாமோ? ஹூம் - இப்போ அதைப் பற்றி நினைத்து என்ன பயன்?'  

அப்பொழுது, ஆனந்தின் மேஜையில் இருந்த local தொலைபேசி மென்மையாக சத்தம் எழுப்பியது.  தொலைபேசியில் receptionist பேசினாள். " சார் உங்களைப் பார்க்க ஒருவர் வந்துள்ளார். விசிட்டிங் கார்ட் கேட்டால், கொடுக்கமாட்டேன் என்கிறார். பெயரை ஒரு காகிதத்தில் எழுதி, என்னிடம் கொடுத்து அதை உங்களுக்கு அனுப்பச் சொல்கிறார். அந்தக் காகிதத்தை உங்களுக்கு, பியூனிடம் கொடுத்து அனுப்பட்டுமா?" 

" அனுப்பு" 

பியூன் கொண்டு வந்து கொடுத்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்த ஆனந்த், அதிர்ச்சியில் உறைந்து போனான். 


(தொடரும்) 

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. பரிசுக் கதை , முன் கதைகளை படித்து கேட்கும் கேள்விகள் பரிசு
    நல்ல அறிவிப்பு.
    ரீட்டா சாகவில்லை, அதுவரை நிம்மதி.
    ஆனந்த் பாவம் மீண்டும் ரீட்டாவின் மிரட்டல் தொடரும்.
    இப்போது நேரில் வேறு வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த வாரம் மீட்டா படம் போடவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன்பும் கூட போட்ட ஞாபகம் இல்லை.

      நீக்கு
    2. அதாவது, இந்தக் கதைக்கு meta ai படம் போடவில்லை. இனிமேல் போடும் என்று எதிர்பார்ப்போம்.

      நீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. சாட்டையடி சந்திரகாந்தா - Gun fight காஞ்சனா ஆகி விட்டாள்...

    நல்லா ருந்தா செரி..

    (நன்றாக இருந்தால் சரி..)

    பதிலளிநீக்கு
  7. இனிமேல் என்னைப் போன்ற மழு மட்டைகளுக்கு செவ்வாய் எட்டாக்கனியோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப்பட்டு எந்த முடிவிற்கும் வந்து விடாதீர்கள். ஆண்டவன் உங்க பக்கம்தான் இருக்கிறார். ரீட்டா மீட்டா விரைவில் முடிந்துவிடும். அதிக பட்சம் இன்னும் ஐந்து வாரம். அதுவரை பொறுத்தருள்க.
      அதற்கு முன்பே முடிக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு வாரமும் ' கதை சுத்த போர். ' என்று கருத்துரை இடுங்கள். கதையாசிரியர் ஓடிவிடுவார்.

      நீக்கு
    2. துரை அண்ணா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. இப்படியான வார்த்தைகள் எதுவும் சொல்லாதீங்க. நமக்கு நாமே எதிரியாவோம்!!!!!! இந்த வரி உங்கள் மனச்சோர்வை வெளிப்படுத்துகிறது. உடல் நலக் குறைவால் ஏற்படும் மனச்சோர்வு.

      நீங்க அனுப்பினால் எபி ஆசிரியர்கள் போடாமலா இருப்பாங்க சொல்லுங்க!!!!! இடையில் ஓரிரு வேறு கதைகள் வந்தால் நல்லாருக்குமேன்னு மாற்றி மாற்றி போடுவாங்க என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  8. அதற்கு முன்பே முடிக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு வாரமும் ' கதை சுத்த போர். ' என்று கருத்துரை இடுங்கள். கதையாசிரியர் ஓடிவிடுவார்.//

    ஹாஹாஹாஹா....கௌ அண்ணா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இப்ப ரீட்டா உயிரோடு இருக்கிறாளா இல்லையா!! வந்திருப்பது யார் என்று தெரிந்து கொள்ள தொடர்கிறோம்,

    கௌ அண்ணா நீங்க கேட்டுக் கொண்டதுனால என் மண்டைக்குள்ள குதிரைப் பாய்ச்சல்ல ஓடுறது எதையும் சொல்ல முடியாம போவுதே!!! சிந்துபைரவியில் வரும் ஜனகராஜ் கேரக்டர் போல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நினைப்பதை எல்லாம் தாராளமாக எழுதலாம். வரவேற்கிறேன். இந்தக் கதையின் முடிவை யாராலும் யூகிக்க முடியாது. இது ஒரு சவால்.

      நீக்கு
  10. /// ஒவ்வொரு வாரமும் ' கதை சுத்த போர். ' என்று கருத்துரை இடுங்கள். கதையாசிரியர் ஓடிடுவார்.///

    அட.. டா

    நீங்க தான் வாத்தியார்!..

    பதிலளிநீக்கு
  11. ஒன் எழுத்தை எல்லாம் படிக்க வேண்டி இருக்கே.. ன்னு தலை லே அட்சிக் கிட்டு

    கருத்து உரை இட்டாலும்

    கதாசிரியர் ஓடியே போய்டுவார்...

    !?...

    பதிலளிநீக்கு
  12. ஆஹா.....ரீட்டா வந்துவிட்டாளா?......அவள் உருவில்யாரும்?......

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதன் செவ்வாயானது குறித்து மகிழ்ச்சி. கதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. இந்த கொலை முயற்சி தெரிந்த வேறு யாரோ இப்படி ஆள்மாறாட்டத்துடன் வருகிறார்களோ ? பார்க்கலாம்.! இன்னும் ஒரிரு வாரத்தில் கதை நெருங்க நெருங்க ரீட்டாவின் உண்மை முகம் புரித்து விடும்மென நினைக்கிறேன். பரிசுகளுக்கான கேள்விகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஆனாலும்
    ( "சொக்கா.. எனக்கு பரிசு கிடைக்காது. வேறு எவரோ, வேறு எவரோ பரிசை தட்டிச் செல்லப் போகிறர்கள்..! என்று புலம்புவதை விட பரிசை எதிர்பாராமல் இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.. :)) )

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசு உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

      நீக்கு
  14. தொடர்கிறேன். செவ்வாயில் வரும் மற்ற கதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!