தேவையான பொருட்கள்:
பொருள் |
அளவு |
மாம்பழம் (நன்கு பழுத்தது) |
2 (அல்லது 1 கப் மாம்பழ ப்யூரி) |
சீனி |
1/2 முதல் 3/4 கப் (மாம்பழத்தின்
இனிப்புக்கு ஏற்ப) |
ரவை (சூஜி ) |
1/4 கப் (சிறு ரவை ) |
நெய் |
3–4 மேசைக்கரண்டி |
ஏலக்காய் தூள் |
1/4 டீஸ்பூன் |
முந்திரி, திராட்சை |
விருப்பப்படி |
தண்ணீர் |
1 கப் (ரவை வேக வைக்க) |
செய்முறை:
1. மாம்பழத்தை தயார்
செய்தல்.
(படத்தில் உள்ளது 'மல்லிகா' வகை மாம்பழம். பெங்களூரில் இதன் விலை ஒரு கிலோ ரூ 140.)
மாம்பழத்தின் தோலை அகற்றி, சதைப் பகுதியை மட்டும் சிறு துண்டுகள் ஆக்கவும்.
பின்பு அந்தத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துப் ப்யூரி (puree) (பழக்குழம்பு ) செய்யவும்.
(அல்லது ஏற்கெனவே தயார்
ஆன மாம்பழ ப்யூரி இருந்தால் பயன்படுத்தலாம்)
2. ரவையை வறுக்கவும்
ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி நெய்
ஊற்றி, ரவையை வறுக்கவும்.
வாசனை வரும்போது தனியே எடுத்து வைக்கவும்.
3. முந்திரி, திராட்சையை வதக்கவும்
அதே வாணலியில் மீதி நெய்யில் முந்திரி, திராட்சையை வதக்கி எடுத்து வைக்கவும்.
4. அல்வா தயாரிப்பு
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வறுக்கப்பட்ட ரவையை சேர்த்து கிளறவும்.
ரவை சிறிது வெந்து வந்ததும், அதில் மாம்பழ ப்யூரி சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.
சீனி சேர்த்து, நன்கு தொடர்ந்து கிளறி
வேக வைக்கவும்.
5. நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்தல்
நெய் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
கலவை வாணலியில் ஒட்டாமல் வந்ததும், ஏலக்காய் தூள், வதக்கிய முந்திரி,
திராட்சை சேர்க்கவும்.
6. அல்வா தயார்!
கலவை வாணலியில் ஒட்டாமல் உருண்டு வந்ததும், அதை நெய் தடவிய தட்டு ஒன்றில் ஊற்றி
வைத்துவிட்டால் சுவையான மாம்பழ அல்வா தயார்.
குறிப்புகள்:
ரவை வகை (fine
semolina) என்றால் நன்றாக இருக்கும்.
தேவைப்பட்டால், ஹல்வா நிறம் வர 1 சிறிது கேசரி கலர் சேர்க்கலாம்.
மாம்பழம் அதிகமா இனிப்பானதாக இருந்தால் சீனியை குறைக்கவும்.
செய்முறை நன்று. இரண்டு சந்தேகங்கள்.
பதிலளிநீக்குஇது மாம்பழ கேசரி செய்முறை மாதிரின்னா இருக்கு? ரவைக்குப் பதிலாக கோதுமை மாவைச் சேர்த்து (இதே செய்முறையில்) கிளறினால் மாம்பழ அல்வா வரும் என நினைக்கிறேன்.
மல்லிகா மாம்பழம் 80-100 ரூபாய்தான். ஆனானப்பட்ட மல்கோவாவே 100 ரூபாய்க்கு விற்கிறது. இந்த முறை, திராட்சை சீசன் களைகட்டவில்லை. மாம்பழ சீசன் நல்ல விளைச்சல் என்று தோன்றுகிறது.
தகவல்களுக்கு நன்றி. மாம்பழம் விலை ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகிறது.
நீக்கு// இது மாம்பழ கேசரி செய்முறை மாதிரின்னா இருக்கு? // இது CGSenu செய்த குறும்பு. டேய் ஐயம்பேட்டை ! நீ அறிவுடைநம்பி இல்லை. அறிவு இல்லாத தம்பி.
நீக்குஆமாம் இது நெல்லை சொன்ன மாதிரி மாம்பழ கேசரி யாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குகர்நாடகாவும் ஆந்திராவும் மாம்பழ சண்டை போடுவது உங்களுக்கு தெரியாதா? ஆந்திராவில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் கர்நாடகாவில் இருந்து மாம்பழங்கள் வாங்கி கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் கர்நாடக மாம்பழம் கிலோ 4 ரூ இல் இருந்து 6 ரூ வரை தான். ஆந்திர மாம்பழம் கிலோ 8 ரூ MSP.
Jayakumar
கிலோ 4 முதல் 6 ரூபாயா! ஆச்சரியமா இருக்கு.
நீக்கு
நீக்கு தோத்தாபுரி,ஒட்டு,கிளிமூக்கு, சேலம் என்ற மாம்பழம் தான்.
https://www.hindustantimes.com/cities/bengaluru-news/whats-the-issue-between-karnataka-and-andhra-pradesh-over-totapuri-mangoes-explained-101749791444073.html
Jayakumar
நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் மாம்பழ அல்வா செய்முறை நன்றாக உள்ளது. ரவை சேர்த்தால் கேசரி என்ற உணர்வு உண்ணும் நாவுக்கு வருமே..! ஆனாலும் மாம்பழத்தின் சுவை அதை சிறிது மாறுபடுத்தி காண்பிக்குமோ? செய்து பார்க்கிறேன். படங்கள் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
"யாரு பெத்த பிள்ளையோ..! இந்த ஐயம்பேட்டை அறிவுடை நம்பி" அவர் வாழ்க. ஹா ஹா ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பின்னூட்டம் அருமை, டணால் .... பாணியில்!
நீக்கு:))))) நன்றி.
நீக்கு:))) நன்றி.
நீக்கு😀😀
நீக்குசெய்முறை நல்லாருக்கு, கௌ அண்ணா.
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் பொருட்கள் பார்க்கும் போது அல்வா என்பதுதான் யோசிக்க வைக்கிறது. பரவால்ல....
அல்வா என்றாலே கோதுமை அல்லது மைதா அலல்து அரிசிமாவு தேங்காய்ப்பால் சேர்த்துச்செய்யும் வகைகள் தான் நினைவுக்கு வருது.
நான் மாம்பழ கோதுமை அல்வா (மாவு) செய்ததுண்டு. பரீட்ச்சார்த்தங்கள் பல செய்து பார்த்த வயதில் வருடங்களில். நல்லாருக்கும். அதெல்லாம், கல்லூரியில் ஒருவார canning and food preservation அப்படினு ஒரு கோர்ஸ் மதுரைகாமராஜர் பல்கலை நடத்தியப்ப ஆர்வத்துடன் சேர்ந்து கற்ற போது அவங்க கொய்யா டாஃபி ஒன்று செய்ய சொல்லிக் கொடுத்தாங்களா விடுவமா அப்பதான் மாம்பழம் வீட்டிலேயே உண்டே. அப்ப கோதுமை மாவு சேர்த்துச் செய்தது.
நீங்க கொடுத்திருக்கும் செய்முறையில் பைனாப்பிள் கேசரி, மாம்பழ கேசரி, ஆப்ப்பிள் கேசரி, உலர்பழங்கள், உலர்பருப்புகள் கேசரி என்று செய்ததுண்டு.
கீதா
தகவல்களுக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஹான் சொல்ல விட்டுப் போச்சு, அந்த ஒரு வார கோர்ஸ் இலவசம்!!! இல்லைனா வீட்டுல நல்லா விட்டிருப்பாங்க!
பதிலளிநீக்குஒரு வாரம் வகுப்புப் பக்கமே போகலை!!!
கீதா
!!!! :))))
நீக்குஎனக்கெல்லாம் அந்த மாதிரி கோர்ஸ் படிக்கணும்னு ரொம்பவே ஆசை. சிலருக்கு அந்த வாய்ப்புல்லாம் கிடைக்கிறது
நீக்குநெல்லை, அது ஃபீஸ் வாங்கிருந்தாங்கனா கத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனா இப்ப கூட நீங்க கத்துக்கலாம். பைசா கொடுக்காமலேயே.
நீக்குஉண்மையாவே, நெல்லை, யுட்யூப்ல நல்லா சொல்லித் தரும் சானல்ஸ் இருக்கு. வழக்கமா நம்ம மக்கள் போடுவதைச் சொல்லலை....இப்படி கோர்ஸ் tutorials இருக்கு சானல் இருப்பதை சொல்கிறேன்.
கீதா
தில்லு முல்லு கதாபத்திரம் ஐயம்பேட்டை அறிவுடை நம்பி பாத்திரம் ஏற்ற கௌ அண்ணா!!!!
பதிலளிநீக்குகீதா
:))))
நீக்குநான் வாங்கிய மாம்பழம், பையன் வீட்டில் மரத்தில் பழுத்த மாம்பழம் என்று நிறைய சேர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று செ நுவிடம் கேட்டேன். அது சொன்ன ஐடியா மாம்பழ அல்வா. செய்முறை கேட்டேன். அது கொடுத்த செய்முறைதான் இது!
பதிலளிநீக்குஎனக்கும் இந்த முறை நிறைய மாம்பழங்கள் சேர்ந்துவிட்டன. சில வீணாகிறது (மார்க்கெட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் நிறைய பழங்கள் வாங்குவேன்). மேங்கோ லஸ்ஸி செய்யலாமா (செய்து அனுப்பலாமா) என்று நினைப்பேன். மாம்பழம் சாப்பிடுவதால் நிறைய வெயிட் போடுகிறது. அது சரி.. இந்த மாம்பழ கேசரி நல்லா இருந்த்தா?
நீக்குஇன்னும் பண்ணிப் பார்க்கவில்லை.
நீக்குஆரம்பத்தில் படிக்கும்போது எனக்கும்
பதிலளிநீக்குமாம்பழக்கேசரி என்றே தோன்றியது.
எதுவாக இருந்தாலும் மாம்பழ இனிப்பு சுவைக்குமே. :)
ஆம். அதே, அதே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குமாம்பழ அல்வா செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமல்லிகா மாம்பழம் பேர் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.ஐயம்பேட்டை அறிவுடை நம்பி செய்முறையை கெளதமன் சார் செய்து காண்பித்து இருக்கிறார் .
:))) நன்றி.
நீக்கு