கால் கிலோ பச்சை மிளகாயை அலசி எடுத்துக் கொண்டோம்.
கொஞ்சம் புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொண்டோம்.
பற்ற
வைத்த அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம்,
ரெண்டு உ.ப, ரெண்டு க.ப வுடன் பெருங்காயம் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை வாணலியில் போட்டு வதக்கினோம்.
ரெண்டு
சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, புளித் தண்ணீரை
அதில் ஊற்றி கொதிக்க வைத்தோம். கொஞ்சூ......ண்டு வெல்லம் போட்டோம்.
கெட்டியாக வந்ததும் இறக்கி விட்டோம்.
அவ்ளோதான்...
மோர் சாதமா, தோசையா.. என்ன இருக்கு? கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.
ஆனால்....
வயிறு
பத்திரம். அளவாய்ச் சாப்பிட வேண்டும். தைரியமிருப்பவர்கள் செய்து
சாப்பிடலாம்! முதல் மூன்று நாட்கள் இருக்கும் காரம் அப்புறம் குறைந்து
விடும்!
மேலே பாத்திரத்தில் இருப்பது பத்து நாட்களில் பாதிக்கும் மேல் காலியான
நிலையில் எடுத்த படம். தினமும் சாப்பிடும்போது மட்டும் வெளியே எடுத்து,
பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடுவோம்.
ஆலோசனை சொன்ன கீதா மேடத்துக்கு நன்றிகள்.
ஆலோசனை சொன்ன கீதா மேடத்துக்கு நன்றிகள்.
என் அம்மா கெட்டியான புளித் தண்ணீரில் பச்சையாகவே மிளகாயை ஊறப் போட்டு வெயிலில் வைத்து விடுவார். அது காயக் காய டேஸ்ட். அப்புறம் அதை எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுவோம்.
அருமை
பதிலளிநீக்குதம 2
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குபார்த்தாலே நா ஊறுகிறது! தயிர் சாதத்துக்கு அருமையாக இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபார்க்கும்போதே காரம் நாக்கில் உணர முடிகிறது..... :) வடக்கில் பச்சை மிளகாய் ஊறுகாய் போடுவார்கள். அலுவலகத்தில் நண்பர்கள் கொண்டு வருவார்கள். சாப்பிட்டதுண்டு....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇது எங்களது பேவரைட் ஐட்டம் இதை நான் அடிக்கடி செய்து 2 வாரங்களுக்கு குறையாமல் வைத்து சாப்பிடுவேன். நான் செய்வது உங்கள் முறையில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும். கடந்த வாரம் செய்தது நேற்றுதான் காலியாகியது
பதிலளிநீக்குஎனது முறையில் மிளகாயை நீள வாக்கில் கட் செய்து அதனுடன் வெங்காயத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி தண்ணிர் மிக குறைவாக வேக வைத்து அதன் பின் நீங்கள் சொன்னபடி செய்து விடுவேன். தயிர் சாதத்திற்கு ஏற்றது கோடை காமோ குளிர் காலமோ இதை அடுத்து கொள்ள வேறு ஏதும் இல்லை
நன்றி நண்பர் மதுரைத் தமிழன்.
நீக்குஅடே அப்பா.புளிமிளகாய் பார்க்கவே சூப்பர்.
பதிலளிநீக்குநாங்கள் கடுகோடு நிறுத்திக் கொள்வோம். கடலைபருப்பு, மத்ததெல்லாம் கிடையாது.
பெருங்காய வாசனை தூக்கலாக இருக்கும்.
இப்ப யாரும் செய்வதோ சாப்பிடுவதோ இல்லை.
நன்றி வல்லிமா. இங்கும் பெருங்காயம் தூக்கலாகத்தான்.
நீக்குநானும் அடிக்கடி செய்வேன்,,,,,
பதிலளிநீக்குஎன்ன க.ப உ.ப போடுவது இல்லை,,,,,
சூப்பரா இருக்கும்,,,
பகிர்வுக்கு நன்றி.
நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.
நீக்குகடைசியாகச் சொன்னது கேள்விப்பட்டிருக்கிறேன்
பதிலளிநீக்குநன்றி GMB ஸார்.
நீக்குநமக்கு ஒத்துக்காது! மதிப்பெண் விழவில்லையே!
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா!
நீக்குகாரம்ன்னு வாசிச்சாலே காதில் புகை வரும் என் போன்ற ஆட்கள் காரம் குறைவான மிளகாயில் செய்து பார்க்க வேண்டியதுதான் :-)
பதிலளிநீக்குநன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.
நீக்குஅட.. பார்க்கவே வாயூறும் பகிர்வு!
பதிலளிநீக்குஇப்படி ஒருபோதும் செய்து பார்த்ததில்லை சகோதரரே!
நாங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் நல்ல புளிச்ச மோரில் இப்படிக் கீறிய மிளகாயை உப்பும் இட்டு 3 நாட்களுக்கு ஊறவைத்து வெய்யிலில் நன்றாகக் கலகலன்னு வரும் வரை காயவைத்து எடுத்து வைத்துவிட்டு
அவ்வப்போது பொரித்து எடுத்து எடுத்துக்கொள்வோம்.
அதற்கு மோர்மிளகாய்ன்னு பெயர்!
எல்லாம் ஊரில் இருந்த மட்டுமே..:(
இங்கே காய வைக்க அப்படி வெய்யிலுக்கு எங்கே போவோம்..?
நல்ல பகிர்வு. பச்சைமிளகாய் வாங்கி இப்படிச் செய்துவிடுகிறேன்.
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
த ம +1
ஆஹா... செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க சகோதரி இளமதி. நாங்களும் மோர்மிளகாய் போடுவோம் தஞ்சாவூர் குடைமிளகாய் வைத்து.
நீக்குபச்ச மிளகாய் பார்த்தாலே...வயிறு..பகீரெனகிறது....சாமியோவ்..
பதிலளிநீக்குபச்ச மிளகாய் பார்த்தாலே...வயிறு..பகீரெனகிறது....சாமியோவ்..
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கன்.
நீக்குஅருமையான காரப்பதிவு!
பதிலளிநீக்குத ம 7
நன்றி நண்பர் S. P. செந்தில் குமார்.
நீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குஸூப்பர் ஐயிட்டம் நண்பரே..
பதிலளிநீக்குஎன் உச்சி மண்டைல சுர்ருங்குது!
பதிலளிநீக்குநன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குநா ஊற வைக்கிறது!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்.
நீக்குபருப்பு தாளிப்பதில்லை. ! மிகவும் பிடித்த ஐட்டம் எங்களுக்கு. அதே போல கேரளத்தில் புளி இஞ்சி என்று செய்வதுண்டு. இதே தான் அதில் இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். எங்கள் வீட்டில் சில சமயம் வெங்காயம் சேர்த்தும் செய்வதுண்டு..அதுவும் நல்ல ருசி....தயிர் சாதம், தோசை/...ஸ்பாஆஆ......
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி கீதா. புளி இஞ்சியும் எங்கள் ஃபேவரைட்.
நீக்குகொஞ்சம் வெல்லம் சேர்த்து மிளகாய்ப் பச்சடி. ஒருகாலத்தில் சாப்பிட முடிந்திருக்கிறது. உப்பு,காரம்,புளிப்பு எல்லாம். அந்புடன்
பதிலளிநீக்குநன்றி காமாட்சி அம்மா.
நீக்குஇதனுடன் நாங்கள்(நானும் சங்கரும் மஸ்கட்டில்)இஞ்ஞியை சின்ன சின்ன தாக கட் பன்னி சேர்த்து பன்னுவோம் அருமையாக இருக்கும். சுந்தரராஜன்
பதிலளிநீக்குஇதனுடன் நாங்கள்(நானும் சங்கரும் மஸ்கட்டில்)இஞ்ஞியை சின்ன சின்ன தாக கட் பன்னி சேர்த்து பன்னுவோம் அருமையாக இருக்கும். சுந்தரராஜன்
பதிலளிநீக்குஇதனுடன் நாங்கள்(நானும் சங்கரும் மஸ்கட்டில்)இஞ்ஞியை சின்ன சின்ன தாக கட் பன்னி சேர்த்து பன்னுவோம் அருமையாக இருக்கும். சுந்தரராஜன்
பதிலளிநீக்குஆமாம், அதுவும் சுவையாக இருக்கும். உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுந்தரராஜன்.
நீக்குகார சாரமா இருக்கும் போலிருக்கே ! ட்ரை பண்றேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரி ஏஞ்ஜலீன்.
நீக்கும்....!!! பார்க்க ஆசையாத்தான் இருக்கு...!!!
பதிலளிநீக்குசைட் எஃப்பெக்டை நினைச்சா, பயம்....மா இருக்கு.....!!!!
அளவாகப் போட்டுச் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. நன்றி பாரதி.
நீக்குநேத்தே பார்த்துட்டேன். உபருப்பு, கபருப்பு எல்லாம் போட்டதாலே பேசாமல் போயிட்டேன்! :) வெறும் கடுகு, வெந்தயம் மட்டும் தாளிப்பேன். மாமியார் வீட்டில் வெல்லம் சேர்ப்பாங்க. எங்க பிறந்த வீட்டில் சேர்க்க மாட்டோம். நான் ரங்க்ஸின் மூடைப் பொறுத்து வெல்லம் சேர்த்தோ, சேர்க்காமலோ பண்ணுவேன். அநேகமாய் வெல்லம் போடுவதில்லை மோர் சாதத்துக்கு, அன்றே அரைத்து அன்றே வார்க்கும் தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் கஞ்சிக்கும் நல்ல துணை! கஞ்சி நாங்க மோர் விட்டுத் தான் சாப்பிடுவதால் இது இருந்தால் நன்றாக உள்ளே இறங்கும். இஞ்சி சேர்த்தும் பண்ணுவதுண்டு.
பதிலளிநீக்குஅப்பாடி..... காணோமேன்னு பார்த்தேன் கீதா மேடம்.... நீங்க இல்லாமல் அரட்டை களை கட்டவில்லை! பருப்புகள் சும்மா நிஜமாகவே ரெண்டு ரெண்டுதான் போட்டோம். போலவே வெல்லமும் மிகச்சிறிய அளவு. தெரியவே தெரியாது!
நீக்குபச்சை நாரத்தங்காயை இதே போல் இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்துப் புளிவிட்டுச் செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாசம் உபயோகிக்கலாம். அந்த நாரத்தங்காய் தொட்டுக் கொண்டு மோர்சாதம் சாப்பிட்டால் தேவலோகம் தான்!
பதிலளிநீக்குப.நா யில் செய்ததில்லை. நன்றி கீதா மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குபுளி மிளகாய் செய்முறை நாக்கில் நீர் ஊறுகிறது. நானும் முன்பெல்லாம் அடிக்கடி செய்வேன். இப்போது காரம் குறைப்பிற்கு பின் இந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை. ஆனாலும் தினமும் ஒரு பச்சை மிளகாய் உணவோடு சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்ற தகவல் எங்கோ படித்துள்ளேன். தங்கள் பதிவை பார்த்ததும் ஒருமுறை புளி மிளகாய் செய்ய வேண்டும் போல் உள்ளது. கீதா மேடம் சொல்வது போல், அரைத்தவுடன் உடன் வார்க்கும் தோசைக்கு நல்ல துணை இது. பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ரசனைக்கு நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
நீக்குபச்சை நாரத்தங்காய் ஒன்று இருந்தாலே போதும். அந்த நாரத்தங்காயைச் சாப்பாட்டில் கடைசியாகச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட அஜீரணமும் சரியாகும். நாரத்தங்காய் தினம் சாப்பிட்டதும் துளி வாயில் போட்டுக் கொண்டாலே போதும். அஜீரணமே இருக்காது.
பதிலளிநீக்குசிறந்த பச்சை மிளகாய் வதக்கல்
பதிலளிநீக்குபதப்படுத்தல் நன்றே கூறி
நாவூறும் உணவுண்ணல் நினைவூட்டி
செய்கின்ற வழியும் காட்டி
நன்றே பகிர்ந்தீர் நன்றி!
தொடருங்கள்
'நல்லவேளை இதைப் பார்த்தேன். எனக்கு புளிமிளகாய் ரொம்பப் பிடித்தமானது. ஒரு ரெசிப்பி போடலாம் என்று நினைத்திருந்தேன். கடுகும், பெருங்காயமும், நல்லெண்ணெயும் மட்டும்தான் இதில் சேர்ப்பேன். பண்ணும்போது மூக்கு எரியும் என்பதால் இப்போல்லாம் 'வாய்மூடி' போட்டுக்கொண்டுதான் செய்வேன். மோர்சாதம், கெட்டியான தோசை (ஊத்தாப்பம், இலுப்புச்சட்டி தோசை வகையறா) இவைகளுக்கு ரொம்ப நல்லா இருக்கும். ஆனா நாளாயிடுத்துனா வாசனை போயிடும். வெல்லம் சேர்க்கமாட்டோம். வயித்துக்கு புளிமிளகாய் எப்போதும் ஆபத்துதான்.
பதிலளிநீக்குமுன்னெல்லாம் நாட்டு மிளகாய் என்று சின்னச் சின்னதாய்க் கிடைக்கும். அந்த ரகப் பச்சை மிளகாயில் பிஞ்சாக வாங்கி வந்து இந்தப் புளி மிளகாய் செய்வதுண்டு. அவ்வளவு காரமெல்லாம் இருக்காது. இப்போ வரும் பச்சைமிளகாய் ஒவ்வொன்றும் சுமார் அரை அடி நீளம் இருப்பதோடு காரமும் அதிகம்! இந்த ஹைபிரிட் மிளகாயில் எல்லாம் எப்படிச் செய்தாலும் ருசி இருப்பதில்லை! :(
பதிலளிநீக்கு