ஒருமுறை சிவாஜி கணேசன் ஒரு வெளிநாட்டுக்
கார் வாங்கி விட்டு, அதை யாரும் தொடக் கூடாது, அப்படி, இப்படி என்று பந்தா
பண்ணிக் கொண்டிருந்தாராம். இந்த பந்தா ஓவராகப் போவதாக நினைத்த எம் ஆர்
ராதா அதே வெளிநாட்டுக் காரை, தானும் வாங்கி, அதில் வைக்கோல், சாணம்,
கன்னுக்குட்டி, மாடு என்று ஏற்றிக் கொண்டு சிவாஜி கணேசன் கண்ணில் படும்
வகையில் ஒட்டிக் கொண்டு போனாராம்.
உண்மையோ, பொய்யோ.. உண்மையாயிருந்தால் சிவாஜி வெறுத்துப் போயிருப்பார். அப்புறம் சிவாஜி என்ன செய்தாரோ?
பொய்யாயிருந்தாலும் சுவாரஸ்யமான கற்பனைதான். அவரவர் குண
நலத்துக்கேற்றவாறு கற்பனை செய்ய முடிகிறது அல்லவா?
சந்திரபாபு
உச்சத்திலிருந்தபோது காரை நேராக மாடிக்கே ஒட்டிக் கொண்டு போவது போல வீடு
கட்டியிருந்தாராம். சந்திரபாபு எம் ஜி ஆரை நம்பி படம் எடுக்க நினைத்து,
முதலில் ஒத்துக்கொண்ட எம் ஜி ஆர் பின்னர் கை விட்டதால் ஏழையாகிப் போனார் என்று சொல்வார்கள். அவர் எடுத்த படத்தின் பெயர் கூட 'மாடி வீட்டு ஏழை'. அதிலும் இரண்டு கருத்து உண்டு. சந்திரபாபு எம் ஜி ஆரை 'மிஸ்டர் ராமச்சந்தர்' என்றுதான் கூப்பிடுவார் என்றும், அதை விரும்பாத எம் ஜி ஆர் இப்படிச் செய்து விட்டார் என்பார்கள். சந்திரபாபு திரையுலகில் எம் ஜி ஆருக்கும் சீனியர், அவர் எல்லோரையுமே பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார் என்பது ஒருபுறம் இருக்க,
இதே சம்பவத்துக்கு இன்னொரு பக்கத்தையும் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் சொல்லி இருந்தார். அதாவது சந்திரபாபு 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதைப் பார்த்த எம் ஜி ஆர் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் 'மாடி வீட்டு ஏழை' படத்தில் நடிக்கும் வாய்ப்பிலிருந்து நழுவி விட்டார் என்பார்கள். ஆனால் அந்த 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தில் சந்திரபாபு பாடும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
"கண்மணி பப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என சொன்னது தப்பா...
கண்மணி பப்பா...கோழி பிறந்தது முட்டையில் என்று சொன்னது தப்பா...."
கண்மணி பப்பா...கோழி பிறந்தது முட்டையில் என்று சொன்னது தப்பா...."
எதையோ சொல்ல வந்து எங்கேயோ வந்து விட்டேன். சந்திரபாபு காரை வீட்டுக்குள்ளேயே மாடிக்குக் கொண்டு போகும் விஷயத்தைப் படித்தபோது எனக்கு 'எங்கள் தங்க ராஜா' படக் காட்சி நினைவுக்கு வந்தது.
வணக்கம் நண்பரே இராமநாதபுரம் ராஜா லண்டனில் ரோல்ஸ் ரோய்ஸ் கார் ஷோரூமுக்கு போகும் பொழுது காரின் விலை கேட்டதற்க்கு பட்டிக்காட்டானுக்கு எதற்க்கு ? எனக்கேட்டதற்காக உடனே 4 கார்கள் வாங்கி அவர் உபயோகப்படுத்தாமல் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவதற்க்கு உபயோகப்படுத்த அதன் பிறகுதான் கார் உலக அளவில் புகழ் பெற்றது என்றும் உடனே கம்பெனிக்காரர்கள் மன்னிப்பு கேட்டவுடன் காரை மாட்டு தொழுவத்திலிருந்து எடுத்தாராம் என்றும் சொல்வார்கள் இது பழைய சரித்திரம்.
பதிலளிநீக்குமாடி வீட்டு ஏழை திரைப்படம் எம்ஜியாரால் பாதிக்கப்பட்டு படம் நின்று போனது பிறது 30 வருடம் கழித்து சிவாஜி கணேசன் நடித்து வெளியானது
எனது கருத்துரை இரண்டு பேருமே தமிழர் கிடையாது 80 குறிப்பிடத்தக்கது வந்தாரை வாழ வைத்தது தமிழகம்.
நன்றி கில்லர்ஜி. முதல்முறையாக நீண்ட பின்னூட்டம் உங்களிடமிருந்து.
நீக்குஅந்த மாடி வீட்டு ஏழையும், சிவாஜி நடித்து வெளிவந்த மாடி வீட்டு ஏழையும் வெவ்வேறு கதைக்களம் என்று நினைக்கிறேன். நன்றி.
எங்கயோ தொடங்கி எங்கயோ முடிச்சிட்டீங்க!
பதிலளிநீக்குகலக்கல்
நன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குதட்டுங்கள் திறக்கப்படும்
பதிலளிநீக்குதட்டுங்கள் திறக்கப்படும்
பதிலளிநீக்குஎதை, எங்கு கேஜிஜி? ரெண்டு வாட்டி வேற வலியுறுத்தி சொல்றீங்க....
நீக்கு:))))))))
அறியாத பல செய்திகளை வழங்கியுள்ளீர்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குஎம் ஆர் ராதா அப்படி செய்திருக்கலாம் என்றே நம்புகிறேன் :)
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி.
நீக்கு....... /அந்தக் 'கேளுங்கள் தரப்படும்' படத்தில் சந்திரபாபு பாடும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ///
பதிலளிநீக்குஅச்சச்சோ... கேஜிஜி... இங்கே சொல்வதற்கு பதில் அங்கேயே திருத்திடலாமே... நான் வேற உடனே கணினி பக்கம் வரமுடியாது!
நீக்குகேஜிஜி.. திருத்தி விட்டேன். ஆனால் க் விட்டு விட்டேன்!
நீக்குபழைய வரலாறுகளை படிக்கையில் சுவாரஸ்யம்தான்! பகிர்வுக்கு நன்றி! கண்மணி பப்பா பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்! சந்திரபாபு திறமையான மனிதர்! கெட்ட பழக்கங்களால் அழிந்து போனார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
நீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
நீக்குநல்ல பதிவு. எழுதியதற்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசிவாஜி வாங்கியது இம்பாலா கார். அதை வைத்து அவர் செய்த அலப்பரையைக் கண்ட எம் ஆர் ராதா தானும் அதே இம்பாலா கார் வாங்கி இப்படி செய்ததாக தகவல் உண்டு. சிவாஜி அதன் பிறகு மனம் வருந்தியதாக (ராதா அண்ணன் இப்படி செய்திட்டாரே என்று) படித்திருக்கிறேன்.
ரோல்ஸ் ராய்ஸ் பற்றி கில்லர்ஜி சொல்வது மிகையாகத் தோன்றுகிறது. அப்படியெல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார் எல்லோருக்கும் விற்கப்படுவதில்லை. அந்தக் காரை வாங்குவதற்கு பணம் மட்டும் முக்கியமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ரோல்ஸ் ராய்ஸ் ஒரு ஸ்டேடஸ் சிம்பல். பணம் இருந்தாலுமே அத்தனை விரைவில் அதனை வாங்கிவிட முடியாது. அவர் குறிப்பிட்டதுபோல எம் ஜி ஆர் பிறப்பால் ஒரு மலையாளி. இருந்தும் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர். ஆனால் சந்திரபாபு தமிழர்தான். சிலர் அவரை ஒரு ஆங்கிலோ இந்தியன் என்று சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் இருவருமே தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டவர்கள். இங்கே இந்த இன அடையாளம் அவசியமில்லை என்று நினைக்கிறேன். இப்படியெல்லாம் பார்த்தால் நாம் ஜெயலலிதாவையும்,ரஜினிகாந்தையும், அஜித் குமாரையும் விரட்ட வேண்டியிருக்கும். கருணாநிதி கூட தெலுகு வம்சாவழி வந்தவர் என்று சொல்கிறார்கள்.
நன்றி காரிகன் ஸார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
நீக்குரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றியும் நீங்கள் சொல்வது போலத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கே இன அடையாளம் தேவையில்லை என்னும் கருத்திலும் எனக்கு உடன்பாடே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவாஜி எம்.ஆர்.ராதா ஒருமுறை லிப்ட் கேட்டபோது இது வெளிநாட்டுக்கார் என்று கூறி தர மறுத்து விட்டதால், “என்னா பெரிய வெளிநாட்டுக்கார். எல்லாக் காரும் தகரத்துக்குப் பெயிண்ட் அடிச்சு ஓடறதுதானே..” என்று தன் ஸ்டைலில் கமெண்ட்டிய எம்.ஆர்.ராதா அவரை வெறுப்பேற்ற அப்படிச் செய்தார் என்பது நான் படித்த நூலின் மூலம் அறிந்த செய்தி. அதேபோலத்தான் மாடிவீட்டு ஏழை திரைப்படம் பற்றியதும். எம்ஜிஆரின் கால்ஷீட் கேட்கச் சென்றபோது அவரின் அண்ணன் சக்ரபாணி ஒரு கெட்ட வார்த்தையைச் சிதறவிட, மீனவக் குடும்பத்திலிருந்து வந்த சந்திரபாபு அந்த வார்த்தையைய் பொறாமல், அவரினும் மேலாகக் கெட்ட வார்த்தையில் திட்டி, அடிக்கக் கை ஓங்கிவிட, அதன் விளைவாய் எம்ஜிஆரின் அபிமானத்தை இழந்து படத் தலைப்பாக அவரே மாறிப் போனார் என்பதும் வரலாறு.
பதிலளிநீக்குமேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணேஷ்.
நீக்குபானுமதியம்மா கூட அவரை மிஸ்டர் எம்ஜிஆர் என்றுதான் கூப்பிடுவாங்களாம். எல்லாரின் பெயரையும் ஒரு மிஸ்டர் சேர்த்துப் பேசும் சந்திரபாபுவின் பழக்கம் நிச்சயம் வாத்யாரை சினத்துக்கு உள்ளாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆஹா... எங்கள் தங்க ராஜா நான் மாணவப் பருவத்தில் பார்த்த படம். அந்த கார் சீன் இப்போது நீங்கள் சொன்னதும் அப்படியே நினைவில் ரீவைண்ட் ஆகிறது. அதுபோலவே மன்னவன் வந்தானடி படத்தில் சிவாஜி குதிரையில் வரும் பாடலும்.
பதிலளிநீக்குவருகைக்கும் சிலாகிப்புக்கும் நன்றி பாலகணேஷ்.
நீக்குநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...
பதிலளிநீக்குபகிர்வு அருமை அண்ணா...
திரு காரிகன் அவர்களின் கருத்து உண்மை...
நன்றி குமார்.
நீக்கு/வெளிநாட்டுக் காரை, தானும் வாங்கி, அதில் வைக்கோல், சாணம், கன்னுக்குட்டி, மாடு என்று ஏற்றிக் கொண்டு//
பதிலளிநீக்குஇந்தக் கதையை ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம் ஒருத்தருக்குல்ல நடந்ததாச் சொல்வாங்க... ரோல்ஸ் ராய்ஸ் வாங்கணும்னு கேட்டப்போ அந்த கம்பெனிக்காரங்க, அதெல்லாம் அந்தஸ்தா உள்ள பெரிய மனுஷங்களுக்குத்தான் விப்பேன்னு சொல்லி மறுத்ததாகவும், அவர் பின்னர் வாங்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்த தெருகூட்டவும், குப்பை அள்ளவும் பயன்படுத்தி ரோல்ஸ் ராய்ஸ்காரங்களை வெறுப்பேத்தியதாகவும்... அவங்க இவர்கிட்ட எங்க மானமே போகுதுன்னு கெஞ்சியதாகவும்...
https://www.youtube.com/watch?v=OhX3kkUzg98
நன்றி ஹுஸைனம்மா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி.
நீக்குசுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனிதர்தான்
பதிலளிநீக்குசுவாரசியமான செய்திகள்.எம்.ஆர்.ராதா அதிரடியான மனிதர்தான்
பதிலளிநீக்குநன்றி முரளிதரன்.
நீக்கு"ஙே"
பதிலளிநீக்குஅவ்ளோதானா கமெண்ட்? நன்றி கீதா மேடம்.
நீக்குஇதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப்படும் என்பது....??????
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கன்.
நீக்குஇதிலிருந்து தெரிவது உண்மையும் ஒருநாள் கற்பனையாக்கப்படும் என்பது....??????
பதிலளிநீக்குநானும் அநாளில் கேள்விப் பட்ட செய்தியே ! நினைவு வருகிறது!
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
நீக்குமுதல் செய்தி உண்மை. ஆனால், இம்பாலா கார். ராதா அவர்கள், சாப்பாடு எடுத்து வருவதற்காக சிவாஜியிடம் படப்பிடிப்புத் தளத்தில் கார் கேட்டபோது, 'அது இம்பாலா' அதனால் தரமுடியாது என்று சொன்னதால், ராதா, புது இம்பாலா வாங்கி, அதில் வைக்கோல் ஏற்றிவந்து சிவாஜியை வெறுப்பேற்றினார்.
பதிலளிநீக்குசந்திரபாபு, மாடியில் நேராக வரும்படியாக வீடு கட்டினார். ஆனால் சொந்தப் படம் எடுத்து ஏழையாகி வீட்டை விற்க வேண்டிவந்தது. இது எம்.ஜி.யாரால் வந்ததப் போன்று செய்தி இருக்கிறது. அது உண்மையில்லை. சந்திரபாபுவும், கண்ணதாசன் படத்தை ஒப்புக்கொண்டு, கண்ணதாசன், அவரைப் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்ல கண்ணதாசனே அவர் வீட்டுக்கு வந்தபோது, அவரைக் காக்க வைத்து, வீட்டுப் பின்பக்கமாக ஓடிவிட்டார். (கவலை இல்லாத மனிதன் படம்). அன்றுதான் கண்ணதாசன், தன் நிலையை எண்ணி அழுதேன் என்று அவரது மன வாசத்தில் எழுதியுள்ளார்.
நன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள், பின்னூட்டங்களிலும் :).
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பல செய்திகள் தெரிந்து கொண்டோம். வியப்பாகவும் இருந்தது...
பதிலளிநீக்குமைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் தன கார் தன் பெட் ரூம் வரை போகும்படி வீடு அமைத்திருக்கின்றார் என்று வாசித்ததுண்டு....
காரில் வைக்கோல் எல்லாம் ஏற்றிச் சென்றது யார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல காலம் அப்துல் கலாம் என்று சொல்லவில்லை யாரும்! இப்போதெல்லாம் இதைப் போலக் கதை என்றால் பாவம் அவரை இழுத்துவிடுகிரார்கள்.
பதிலளிநீக்குசந்திரபாபுவின் எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட பாடல்களே அவர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று ஒருவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். எப்படியோ, நல்ல திறமைசாலி சரியாகக் கவனிக்கப்படாமல் மறைந்து விட்டார்.