திங்கள், 26 அக்டோபர், 2015

"திங்க"க்கிழமை 151026 ::தக்காளி சிம்பிள் சூப்!



இப்போதெல்லாம் கடைகளிலிருந்து மேகி, நார் சூப் ரெடிமேட் பாக்கெட் வாங்கிச் செய்கிறார்கள்.  உடனடி சூப்!   நாங்களும் செய்திருக்கிறோம். 

ஆங்காங்கே தெருமுனையில் ஐஸ்க்ரீம் கடை போலக் குடை அமைத்து, அதில் இரண்டு மூன்று பாத்திரங்களை (அடுப்பின்மேல்?) வைத்து காளான் சூப், வாழைத்தண்டு சூப், வெஜிடபிள் சூப் என்றெல்லாம் விற்குமிடத்தில் வாங்கியும் குடித்திருக்கிறேன்.



கார்ன்ஃப்ளேக்ஸ் மேலே மிதக்கவிட்டுத் தருவார்கள்.


ஆனால் சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போல எளிமையான தக்காளி சூப் வீட்டிலேயே அவ்வப்போது செய்து சாப்பிடுவதுண்டு.. மன்னிக்கவும், குடிப்பதுண்டு! 

Image result for bangalore tomato images    Image result for small onion  images  Image result for garlic  images 


வயிறு 'டம்'மென்றிருக்கும் நேரங்களில் இதை அவ்வப்போது தயார் செய்து குடிப்போம்.






மூன்று அல்லது நான்கு பேர்கள் குடிக்க வேண்டிய அளவு.


இரண்டு சாதாரண அளவுள்ள தக்காளி.  நாங்கள் பெங்களுரு தக்காளிதான் உபயோகிக்கிறோம்.  இருமுறை சிறுநீரகக் கல்லால் அவதிப்பட்டபோது, எங்கள் மருத்துவர் நாட்டுத் தக்காளி உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.



நான்கு பேர் குடிக்கக் கூடிய அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்திலிட்டு, அதில் தக்காளியை நான்காக, எட்டாக நறுக்கி லேசாகப் பிசைந்து விட்டு, ஏழெட்டு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிச் சேர்த்து, இரண்டு பல் நாட்டுப் பூண்டு நசுக்கிப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.   மிளகு சீரகப் பொடி சேர்க்கவும். வடிகட்டிக் குடிப்பார் என் பாஸ்.  நான் ஸ்பூனும் கையுமாக அப்படியே குடிப்பேன்!







இந்தமுறை ஒரு மாறுதலுக்கு வெங்காயம், பூண்டு, தக்காளியை மிக்ஸியில் அரைத்து விட்டேன்.  ஒரு பெரிய வெங்காயத்தை பூவாய் நறுக்கித் தூவி விட்டேன்.  ஆனால், இதை விட முதல் மாடல்தான் நன்றாயிருந்தது!


 
இதில் அவரவர்கள் விருப்பப்படி, கேரட், பீன்ஸ் போன்றவை துருவிப் போட்டு சூப்பில் சேர்க்கலாம்.  கொத்துமல்லி, புதினா சேர்ப்பதும் அவரவர் விருப்பம்.  நான் சேர்ப்பதில்லை.  இவ்வளவுதான்.  இது குடித்த அரை மணியில் கபகபவென்று பசிக்கும் (என்று நினைத்துக் கொள்வேன்)

31 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    மிகஅருமை...ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அட.. நீங்களும் 'சூப்'பரா? நானும் ஒரு 'சூப்'பன்! எந்த நாள் ஓட்டலுக்கு சென்றாலும் எனக்காய் என் பிள்ளைகளோ மனைவியோ என்னை கேட்காமலேயேஎனக்காக செய்யும் முதல் ஆர்டர் சூப் தான்! அதிலும் மும்பை ஹோட்டல்களில் மிக சுவையான வகைகள்.

    தெளிவான ரசத்தை சுடச்சுட ஒரு சின்ன டம்ளர் குடிப்பது கூட எனக்குப் பிடிக்கும். நாக்கை அறுக்க.... !!

    பதிலளிநீக்கு
  3. சிம்பிள் என்றாலும் சூப்பர் டேஸ்ட்:)

    பதிலளிநீக்கு
  4. //நாக்கை அறுக்க....//

    நாக்க முக்க நாக்க முக்க அப்படின்னு பாடிக்கொண்டே குடித்தால் இன்னமும் மஜா தான்.

    பச்சத்தக்காளி யை அதிகம் பயன் படுத்தவேண்டாம் ப்ளீஸ்.

    சூப்பு தாத்தா.
    நோ. நோ.
    இது
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் கொதிக்க வைச்சுடறோமே... அப்புறம் எப்படி பச்சை தக்காளி?

      நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  5. தக்காளி ரசமா . ரொம்பவே நீர்த்து இருக்குமே நானும் தெளிவான ரசத்தை சூப்பாகக் குடிப்பேன்

    பதிலளிநீக்கு
  6. நான் குடிச்சதே இல்லை! இனியாச்சும் குடிச்சு பார்க்கிறேன்! முதல் செஞ்சு பார்க்கனும்!!!! நன்றி

    பதிலளிநீக்கு
  7. இன்னிக்கே செஞ்சு பாத்துட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  8. தக்காளி சூப்பில் தக்காளியை கொஞ்சம் ஸ்டீம் செய்து விட்டுத் தோலை அகற்றிவிட்டு நன்றாக மசித்துச் செய்து பாருங்கள் ஸ்ரீராம்..மற்றதெல்லாம் ஓகே....அதே. செய்வதுண்டு..

    கொஞ்சம் வேலைமெனக்கிடும் தக்காளி சூப்: தக்காளி, வெங்காயம் (பெரிது), சின்னத் துண்டு பட்டை, பே லீஃப் சிறியது, பூண்டுப் பல் 2,3 இதை எல்லாம் இட்டு ஸ்டீம் செய்துவிட்டு(செய்யும் போது வெண்ணை சிறிது போட்டும் செய்யலாம்...நான் போடுவதில்லை), மிக்சியில் இட்டு அரைத்து பெரிய ஓட்டையுள்ள வடிகட்டியில் வடிகட்டி, பின்னர் அதில் நீர் சேர்த்து மிளகுத் தூள், உப்பு போட்டுச் சிறிதுக் கொதித்ததும், கொஞ்சமாக கார்ன்ஃப்ளார் கரைத்துவிட்டுக் கொதித்ததும் (பச்சை வாசனை போக வேண்டுமே)..இறக்கிவிட்டு முடிந்தால் ப்ரெட் ஸ்லைஸ் மொற மொறவென்று சப்பாத்திக் கல்லிலோ இல்லை டோஸ்டரிலோ டோஸ்ட் (எண்ணை, வெண்ணை எதுவுமில்லாமல்) செய்து, துண்டுகளாக வெட்டிச் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள் ...ஹோட்டல் சூப் போல...(அப்படினு சொல்லிக்குவோம்..!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அட கடவுளே. நான் எழுதிய சூப் எல்லாம் படிக்கலையா. :) விதம் விதமா சூப் செய்வேனாக்கும்.

    ஆனா நீங்க சொன்ன க்ளியர் சூப்தான் பெஸ்ட். அரைச்சு விட்டா கஷ்டகாலம் கொசகொசன்னு இருக்கமாதிரி இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  10. சூப்... எனக்கும் பிடிக்கும்! :) என்ன கொஞ்சம் பொறுமை வேணும்! பயங்கர சூடா இல்ல கொடுப்பாங்க! அவசரமா அப்படியே ஒரு ஸ்பூன் எடுத்து வச்சு நாக்கை சுட்டுக்கொண்ட அனுபவம் உண்டு! :) சூப்பன்... :)))

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் பிடித்த என்னைப் பிடித்த சூப்!
    அருமை!

    பதிலளிநீக்கு
  12. ஹூம், சூப் செய்முறை தில்லையகத்து கீதா எழுதி இருக்காங்க. நானும் நாட்டுத் தக்காளியில் தான் செய்வேன். ஆனால் அதைத் தோல் நீக்க கொதிக்கும் வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைத்தால் தோலை அப்படியே உரிக்கலாம். தக்காளி முழுதாகவே இருக்கும். நாட்டுத் தக்காளியின் விதைகள் தான் அகற்றப்பட வேண்டும். மற்றபடி நாட்டுத் தக்காளியில் தான் சுவை, சத்து. நிறம், மணம், குணம் எல்லாமுமே. தக்காளி+உருளை காம்பினேஷனில் உருவான பெண்களூர்த் தக்காளி என்னைப் பொறுத்தவரை ம்ஹூம், தான்! தக்காளி சூப் என ரயிலில் கொடுப்பது கெச்சப்பில் வெந்நீரை விட்டு விளாவி மிளகு பொடி தூவிக் கொடுப்பது தான். தக்காளி சூப் செய்வதெனில் கொஞ்சம் இல்லை நிறையவே மெனக்கெடணும். :)

    பதிலளிநீக்கு
  13. வெள்ளை சாஸும் கட்டாயமாய் வேணும். :) அது இல்லைனால் எந்த சூப்பும் சூப்பே இல்லை. :)

    பதிலளிநீக்கு
  14. சிம்பிள் சூப்.. சூப்பர்ப் சூப். பசிக்குமென நினைத்துக் கொள்வீர்களா:))?

    பதிலளிநீக்கு
  15. எனக்குப் பிடித்த சூப் கார்ன் சூப் தான். கொஞ்சம் திக்காக இருந்தாலும் நடுநடுவில் கார்ன் வாயில் வரும் அது ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் அதிகம் செய்வதில்லை. ஆனால் வெளியில் போனால் கார்ன் சூப்புடன் தான் ஆரம்பிப்போம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!