2) “It
was just a simple idea. We didn’t expect it to be so successful. It has
been about 16 years and I receive at least two to three queries every
day even now. I have rented out thousands of pieces of equipment,” says Falguni. வாடகை? ஒரு ரூபாய்!
3) முகம் தெரியாத, பெயர் தெரியாத இந்த மனிதரின் அனுபவங்கள் அவரின் எண்ணங்களையே மாற்றி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பகைமைக்கு அடுத்த படியாகப் பார்க்கப்படுவது இந்தப் பகைமைதான். அதை மாற்றியது சில நல்ல அனுபவங்கள்தானே?
7) நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும். முயற்சியைப் பாராட்டுவோம். பெட்ரோல், மின்சாரம், 'சோலார்' ஆகிய 3 எரிபொருளிலும் ஓடும் 'பைக்'.
9) தாயைப்போன்ற நதியில் கழிவுகளை
கலக்கும் நகரத்து நாகரீகத்தை பின்பற்றி உங்கள் கிராமத்து ஏரிகளில்
கழிவுகளை கலக்க வேண்டாம்,மழைக்கு ஆதாரமான மரங்களை வெட்ட வேண்டாம், எந்த
நிலையிலும் உணவு தரும் விவசாய நிலத்தை விலை பேச வேண்டாம், முன்பின்
தெரியாவிட்டாலும் முகம் மலர வரவேற்று அமுது படைக்கும் குணத்தை விட்டு விட
வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக மது அரக்கனை உள்ளே விடவே வேண்டாம் என்றும்
சொல்லிவந்தார். தெரிந்து கொள்வோம் திரு செல்லத்துரை பற்றி.
11) இந்தர்பால் சிங்கும், கமல்ப்ரீத் சிங்கும்.
12) இப்பள்ளியின் முன், சுற்றுச்சுவர் இன்றி, திறந்தவெளி கழிவுநீர் ஓடையால், மாணவ, மாணவியருக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. சுவர் கட்ட முடிவானாலும், போதிய நிதியில்லாததால், குறைந்த செலவில் சுவர் கட்டுவது குறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில செயல்வழி கற்றல் முறை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை உமா மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியை சசிரேகா ஆகியோர், பிளாஸ்டிக் பாட்டில்களால் சுவர் கட்ட திட்டமிட்டனர்.
13) வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி...
**********************************************************************************
**********************************************************************************
அன்புள்ள ஆறுமுகம் - ஆறு.
அஞ்சு : "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த தீபாவளிதான் என்னுடைய குதூகல தீபாவளி!..... வழக்கம் போல ..... பட்டுப்புடவை உண்டுதானே ?"
ஆறு : "புடவையா? தாவணி மாதிரி இருக்கு. ஆனா அதிலேயும் ஒரு வித்தியாசம் இருக்கு! "
அஞ்சு: "எனக்கு எதுக்குங்க பாவாடை, தாவணி எல்லாம்? எனக்கு என்ன பதினாறு வயசு பால்யம் திரும்பிகிட்டு இருக்கா?"
ஆறு: "அட உனக்கு எவன் பாவாடை, தாவணி, பட்டுக்குஞ்சலம் எல்லாம் வாங்கித் தரேன்னு சொன்னான்? "
அஞ்சு: " நீங்க எனக்கு என்னவெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னீர்களோ அதற்கு எங்கள் ப்ளாக் வாசகர்கள் சாட்சி. ....." என்று சொல்லியவண்ணம் அருகில் வந்து ஆறுமுகம் படித்துக் (பார்த்துக்) கொண்டிருந்த புத்தகத்தையும், படத்தையும் பார்த்து, "என்னங்க இது? யாரு இந்தப் பொண்ணு? ஏன் அவ படத்தை இவ்வளவு நேரமா உத்து உத்துப் பாத்துகிட்டு இருக்கீங்க?"
(தொடரும்)
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம் நன்றி நண்பரே
தம 2
பதிலளிநீக்குதெரிவு செய்து பகிர்ந்தளித்த விதம் அருமை. ஒவ்வொருவரும், ஒவ்வொரு செயலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. வாழ்த்துக்கள். பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html வருக.
பதிலளிநீக்குதகவல்கள் நன்று போற்றப்படக்கூடியவர்கள்.
பதிலளிநீக்குதகவல்கள் அருமை....
பதிலளிநீக்குதகவல்கள் அருமை....
பதிலளிநீக்குரின்டு ஆச்சரியப் படுத்துகிறார். எடுத்து இடுவதற்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குஉதாரண புருஷர்களை பாராட்டுகின்றேன்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநல்லவர்களை பற்றி அறியத்தரும் பாஸிட்டிவ் செய்திக்கு நன்றி அண்ணா....
பதிலளிநீக்குதொடர்கதை முடிவுக்கு வந்தாச்சு போல...
நிறைவுப் பகிர்வுக்கு ஆவலாய்...
கழிவுகளைக் கொண்டு சுற்றுச் சுவரா ?சபாஷ். பள்ளிக்கும், திட்டமிட்டு ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும், செய்து முடித்த பிள்ளைகளுக்கும் பாராட்டுக்கள்.:)
பதிலளிநீக்குதொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள். ஒவ்வொரு இணைப்பாக படித்துக் கொண்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பதிலளிநீக்குபணம்அறம்
நன்றி
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குபாஸிட்டிவ் செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி. தொடர்கதை இதன் முந்தைய பகுதிகளையும் விடாமல் படித்தேன். அஞ்சு ஆசைபட்டதெல்லாம் வேறு யாருக்கோ போகப் போகிறதா.? இல்லை, அவள் ஆசைபட்டதெல்லாம், புத்தகத்தில் உள்ள பெண் அணிந்திருக்கிறாளா.? முடிவு நாளை தெரிந்து விடுமே...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பல் வகைச் செய்திகளை தங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பேன்! இடையில் சில நாள் வர இயலவில்லை!உடல் நலம் குறைவு!
பதிலளிநீக்குஅனைத்து + செய்திகளும், முக்கியமாகக் குழந்தையைக் காப்பாற்றிய டாக்டரும், மரங்களைக் குழந்தைகளாக வளர்க்கும் பாக்கியலக்ஷ்மி அம்மாவுக்கும் மிக நன்றி.
பதிலளிநீக்குஅனைத்து பாசிட்டிவ் செய்திகளும் அருமை.. கழிவுகள் சுற்றுச் சுவராவது அட! , தமிழ் மக்களைப் பற்றி பெருமையைக் கேக்கும் போது மகிழ்வாக இருக்கின்றது..வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது உண்மைதான்...குழந்தையைக் காப்பாற்றிய டாக்டர்.(படித்த அறிவை விட சமயோஜித அறிவு மிக மிக முக்கியம் என்பதைச் சொல்லியது)..மரங்களைக் குழந்தைகளாக வளர்க்கும் பாக்கிய லஷ்மி அம்மா....அனைத்தையும் வாசித்து விட்டோம்...விரிவாகக் குறிப்பிய முடியவில்லை...
பதிலளிநீக்குகதை ..அப்போ அந்த படத்திற்கும் அஞ்சுவின் ஆசைகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு....இதோ முடிவைப் பார்க்கின்றோம்...
சாக்லேட் முகநூலில் பார்த்தேன்.
பதிலளிநீக்குவீல்சேர் விஷயம் புதுசு
எங்களுக்கு பெண்களூரில் வீடு வாங்கும் எண்ணமும் அங்கேயே இருக்கும் எண்ணமும் இருந்தது. இந்தச் சண்டையால் தான் யோசனை! அப்புறமா வேணாம்னு விட்டுட்டோம்.
மருத்துவர் தெரிந்தது
காவல் நிலையச் செய்தி அசத்தல்
ஆசிரியர் பற்றிக் கேட்டிருக்கேன்.
பைக் வரட்டும் பார்க்கலாம்
ஹூம், கையில் இன்ஹேலர் இல்லாமல் கிளம்புவதே இல்லை
செல்லத்துரை அசத்துகிறார். காந்தியின் பெயருக்கு இன்னமும் மரியாதை இருப்பது ஆச்சரியமே!
பாக்கிய லட்சுமிப் பாட்டியைப் பற்றிக் கேள்விப் பட்டேன். பாட்டில்களால் சுவரெழுப்பிய ஆசிரியைகளுக்கு ஒரு ஓ
பாவம், எங்கள் ப்ளாக் வாசகர்கள் சாட்சியாக இருந்தும் அஞ்சுவுக்கு ஒண்ணும் மிஞ்சலை போல! :)
பதிலளிநீக்கு