சுஜாதாவின்
கதை முதன் முதலில் படமானது 'அனிதா இளம் மனைவி' என்று நினைக்கிறேன். 'இது
எப்படி இருக்கு?' என்ற பெயரில் படமானது. அதில் ஜெய்சங்கர்தான் லாயர்
கணேஷ். (இளையராஜா இசையில் கே ஜே யேசுதாஸ் - ஜானகி குரலில் ஒரு மிக அருமையான
பாடல் ஒன்று இருக்கிறது. ஆரம்ப ஜானகியின் குரலிலிருந்து, இளையராஜாவின் பின்னணி இசை வரை மிக மிக ரசிக்க வைக்கும் பாடல்)
கணையாழியில் அவர் எழுதிய 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' தொடரிலும் நிறைய சினிமாக்களைக் கிண்டலடித்திருக்கிறார். (தன்னைத் தானேயும் அவர் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது க.க.பக்கங்களை எழுதுவது இவர்தான் என்று நிறைய பேருக்குத் தெரியாது)
அவை 'மேற்கே ஒரு குற்றம்', 'மேலும் ஒரு குற்றம்' போன்ற கதைகள்.
ப்ரியாவைத் தொடர்ந்து அவர் எழுதிய 'உன்னைக்
கண்ட நேரமெல்லாம்' என்ற கவித்துவமான தலைப்பு கொண்ட கதையில் கணேஷும்,
வசந்த்தும் உரையாடுவது போல 'ப்ரியா' படமாக்கல் சம்பந்தமாகத் தன் எதிர்ப்பைப்
பதிவு செய்திருந்தார்.
வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.
ஏராளமான
காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து
பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
"எந்த ஆள்? எந்த கேஸ்?"
"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
"என்ன படம்?"
"ப்ரியா."
"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
"அவுங்க
என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி
ஆயிடும். பாதில ஹீரோயின் காணாமப் போயிடறா. எவ்வளவு நாழிதான் ஒரு
லாயரையும் போலீஸ்காரங்களையும் காண்பிக்க முடியும்? இதபார் வசந்த்!
சினிமாங்கறதே வியாபாரம். அதன் விதிகள், இயக்கங்கள் எல்லாம் வேற. அந்த
கணேஷ், வசந்த் ரெண்டு பெரும் நாம் இல்லை. வேற ஆசாமிகள்.. பாடத் தெரியணும்.
ஓடத் தெரியணும். இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத்
தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி
இருக்காங்களாமே?" கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
"என்ன இருந்தாலும் எனக்கு சாமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."
இப்படி எழுதித் தன் ஆத்திரத்தை, ஆதங்கத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கதையிலும் ப்ரியாதான் நாயகி.
பின் நாட்களில் சுஜாதா அதே திரையுலகில் இயக்குநர் ஷங்கர், கமல் போன்றவர்களுடன் கலந்து அந்த மாய உலகின் ஜோதியில் கலந்ததும் ஒரு நகை முரண்தான்!
படங்கள் : நன்றி இணையம்.
எந்த ஒரு நாவலும் திரைப்படம் ஆக்கப்படும்போது அத்தனை நன்றாக இருப்பதில்லை. குறிப்பாக நாவலைப் படித்தவர்களுக்கு.....
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் வெங்கட். நன்றி.
நீக்குGodfather இதற்கு விதிவிலக்கு. படத்தை நாவலை வெகு ஒட்டி எடுத்திருப்பார்கள்..
பதிலளிநீக்குஅப்படியா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி bandhu sir.
நீக்குஇதையும் கொஞ்சம் படியுங்கள். நான் நொந்து போய் எழுதியது http://ramaniecuvellore.blogspot.in/2013/11/blog-post_6115.html
பதிலளிநீக்குநன்றி திரு ராமன். உங்கள் பதிவையும் படித்துக் கருத்திட்டு விட்டேனே...
நீக்குநண்பர் வெங்கட் ஜி கருத்தே என்னுடையதும் நண்பரே...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்கு***பின் நாட்களில் சுஜாதா அதே திரையுலகில் இயக்குநர் ஷங்கர், கமல் போன்றவர்களுடன் கலந்து அந்த மாய உலகின் ஜோதியில் கலந்ததும் ஒரு நகை முரண்தான்!**
பதிலளிநீக்குNot just Sujatha, nobody is an exception to it, I believe. It will get uglier only when one tries to justify that. Pleading guilty is the best policy..We are all hypocrites. Who is n't??
உண்மை வருண். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குதமிழ் சினிமாவில் யதார்த்தம் வெகு குறைவு. நம்பும்படியாகக் காட்சிகள், வசனங்கள் இருக்காது! :( சில படங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
பதிலளிநீக்குஉண்மை கீதா மேடம். கேரளத் திரைப்படங்கள் தவிர்த்து பெரும்பாலான மொழித் திரைப்படங்கள் அப்படித்தான்.
நீக்குகையிலே காசு ,வாயிலே தோசை ,சினிமா உலகம் யாரைத்தான் விட்டது :)
பதிலளிநீக்குசரிதான் பகவான்ஜி.
நீக்குகையிலே காசு ,வாயிலே தோசை ,சினிமா உலகம் யாரைத்தான் விட்டது :)
பதிலளிநீக்குபிரியா கதை படித்ததோ படம் பார்த்ததோ நினைவில்லை. பிரியா படம் எடுக்க இவர் என்ன சன்மானம் வாங்கி இருந்தார்.? என்னென்ன விதிகள் எதுவுமே தெரியலியே
பதிலளிநீக்குஅதையெல்லாம் நமக்குச் சொல்ல மாட்டார்கள் GMB ஸார். ஆனால் தனது படைப்பைச் சிதைத்து எடுக்க எந்த படைப்பாளியும் தயாராக இருக்க மாட்டார் இல்லையா?
நீக்குபடம் பார்க்கவில்லை.... தொலைக்காட்சியில் வரும்போது பார்க்க வேண்டும்....
பதிலளிநீக்குபடம் பார்க்கவில்லை.... தொலைக்காட்சியில் வரும்போது பார்க்க வேண்டும்....
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கன்.
நீக்குசினிமா ஆசை யாரை விட்டது?!
பதிலளிநீக்குநன்றி 'தளிர் ' சுரேஷ்.
நீக்குபடம் எடுக்க அனுமதித்தபின் நொந்து என்ன பயன்;!இழப்பீடு முதலிலேயே கிடைத்து விடுகிறதே
பதிலளிநீக்குஅனுமதி கொடுத்தபின் அவர்கள் அந்தக் கதையில் செய்யும் மாற்றங்களை இவரிடம் சொல்லியிருப்பார்களா? நன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குநான் கேட்க வேண்டும் என்று நினைத்ததை நீங்களே இறுதி வரியில் சொல்லிவிட்டீர்கள். பிரியா கதை சரியாக எடுக்கப்படவில்லை என்ரும் அதே போல் கரையெல்லாம் செண்பகப்பூவும் எடுக்கப்படவில்லை என்றும் சுஜாதா ஆதங்கப்பட்டதுண்டு. அப்படிப்பட்டவர் எப்படி அப்புறம் சங்கரின் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார்..அவரது ஜுனோ தான் ரோபோ..எந்திரனாக வந்தது என்றும் பேசப்பட்டது. அச்சமயம் தானே அவர் இறந்ததும். ஜுனோவிற்கும் எந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை...
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் சொன்னாலும் மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதா...
கீதா
ஜீனோதான் எந்திரன் என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் பாதிப்பு அதில் இருக்கும். நிறைய வசனங்களிலும் சுஜாதா டச் தெரியும். நன்றி சகோதரி கீதா.
நீக்குதங்களைப் பதிவர் விழாவில் எதிர் பார்த்து ஏமாந்தேன்!
பதிலளிநீக்குஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஎன்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்
சிறுகதை-நாவல் வேறு, திரைக்குக் கதை என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டேன் எனும் பாணியில்தான் சுஜாதா சொல்லியிருந்தார். அதே காரணமாகத்தான் பொன்னியின் செல்வன் எவர் நடித்து எவர் எடித்தாலும் வெற்றி பெற முடியாது. பார்த்திபன் கனவு விளங்காமல் போனதும் அப்படியே. தயாரிப்பாளர் இயக்குனர்களைக் குறை சொல்வதற்கில்லை.
பதிலளிநீக்கு