வண்டி இயக்கத்தில் இருக்கும் போது தூளி ஆடி குழந்தை இடித்துக் கொள்ளுமே என பதறுகிறது. வேலைக்குப் போன அம்மா வண்டி இயக்கத்தில் இருக்கும்போது கூட இருந்தால் நல்லது!
வண்டிக்கு இப்ப ரெஸ்ட் நேரம்.குழந்தையின் அப்பா வண்டி டிரைவராகவோ ,க்ளீனராகவோ,லோடு ஏற்றுபவராகவோ இருக்கலாம்! இப்படி யோசித்துப் பாருங்களேன்.சும்ம நிற்கிறதே என்று வண்டியில் குழந்தையைப் போட்டு விட்டு தாய் அருகில் கட்டிட வேலைக்குப் போயிருக்கிறாள்.லோடு ஏற்றி வந்த ட்ரைவர் குழந்தை இருப்பது தெரியாமல் ஓட்டிச் சென்று விடுகிறான்;ஒரு கதை பிறக்கவில்லை?!
அந்த வண்டியைக் கடந்து செல்பவர்களும் வண்டிக்குள் குழந்தை தூளியில் தூங்குவதைப் பார்த்துவிட்டு வண்டி ஓட்டுநரிடம் சொல்ல மாட்டார்களா என்ன? ஆனால் குழந்தையைப் போட்டுவிட்டு யாரும் பக்கத்தில் இல்லை என்பதைப் பார்த்தால் இது வழக்கமான ஒன்றாக இருக்குமோ என்னும் எண்ணமும் தோன்றுகிறது. இல்லை எனில் இப்படிக் குழந்தையைப் போட்டுவிட்டுத் தாய் எங்கும் செல்ல மாட்டாள். அதுவும் வண்டி ஓடும்போது தூளி ஆடிக் குழந்தைக்கு மண்டையில் எங்காவது அடி பட்டால்? ஆகவே தாய் பக்கத்திலேயே இருப்பாள். கணவன், மனைவி இருவருமாகவே வண்டியோடு பாரம் ஏற்றிக் கொண்டு வந்திருப்பார்கள். பாரத்தை இறக்கிவிட்டுக் கீழே எங்கோ வண்டிக்கு அருகேயே மர நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கலாம்; அல்லது சாப்பாடு சாப்பிடலாம். வண்டியின் மேலும் ஒரு கண் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.
சென்னைப்பித்தன் என்றாலே ஹப்பா கதைதான் சூப்பர்! எங்களுக்குத் தோன்றியது அதே செபி சார்... சைட்ஓபன் ஆகி வரும் போது செபி சாரின் கருத்துதான் வந்து நின்னுக்கிட்டு சுத்தோ சுத்தோன்னு சுத்திச்சு.....நாங்க கருத்து போடவே முடியல....அப்ப பார்த்தது
அந்த வண்டியில் வேலை ஆட்கள் வந்திருப்பார்கள். இப்போதெல்லாம் வேலை ஆட்களை இது போன்று வண்டிகளில் கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கேயே இருந்து மீண்டும் மாலை கூட்டிக் கொண்டு சென்று ஏற்றிய இடத்த்ல் விடுவது வழக்கமாகி வருகின்றது. அப்படித்தான் இருக்கும் இந்தக் குழந்தை தூளியில் ஆடுவதும்...
நல்ல தூக்கத்தின் காரணமாக தூங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தை திடீரென்று விழித்துக் கொண்டு , கீழிறங்கி நடந்தோ, தவழ்ந்தோ ஏதேனும் அசம்பாவிதமாக நடந்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் கண்டிப்பாக ஒரு தாய்க்கு இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே அருகிலேபே ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டபடி அந்த குழந்தையின் மேல் கவனமாகத்தான் இருப்பாள். அப்படியே இருக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்போம். வேறு விதமாக எதையும் யோசிக்க மனம் நடுங்குகிறது...
தற்காலிகத் தொட்டில். மரக்கிளையை விட இங்கே பாதுகாப்பு என நினைத்திருக்கலாம். ஓட்டுநருக்கும் தெரிவித்து விட்டே செய்திருப்பார், அருகிலேதான் வேலையாக இருப்பார் என நம்புவோம்.
அட...!
பதிலளிநீக்குஇன்னிக்கு இந்த வண்டி.
பதிலளிநீக்குஎன்னிக்கு அந்த வண்டி ?
சுப்பு தாத்தா.
வண்டி இயக்கத்தில் இருக்கும் போது தூளி ஆடி குழந்தை இடித்துக் கொள்ளுமே என பதறுகிறது. வேலைக்குப் போன அம்மா வண்டி இயக்கத்தில் இருக்கும்போது கூட இருந்தால் நல்லது!
பதிலளிநீக்குவண்டிக்கு இப்ப ரெஸ்ட் நேரம்.குழந்தையின் அப்பா வண்டி டிரைவராகவோ ,க்ளீனராகவோ,லோடு ஏற்றுபவராகவோ இருக்கலாம்!
பதிலளிநீக்குஇப்படி யோசித்துப் பாருங்களேன்.சும்ம நிற்கிறதே என்று வண்டியில் குழந்தையைப் போட்டு விட்டு தாய் அருகில் கட்டிட வேலைக்குப் போயிருக்கிறாள்.லோடு ஏற்றி வந்த ட்ரைவர் குழந்தை இருப்பது தெரியாமல் ஓட்டிச் சென்று விடுகிறான்;ஒரு கதை பிறக்கவில்லை?!
அந்த வண்டியைக் கடந்து செல்பவர்களும் வண்டிக்குள் குழந்தை தூளியில் தூங்குவதைப் பார்த்துவிட்டு வண்டி ஓட்டுநரிடம் சொல்ல மாட்டார்களா என்ன? ஆனால் குழந்தையைப் போட்டுவிட்டு யாரும் பக்கத்தில் இல்லை என்பதைப் பார்த்தால் இது வழக்கமான ஒன்றாக இருக்குமோ என்னும் எண்ணமும் தோன்றுகிறது. இல்லை எனில் இப்படிக் குழந்தையைப் போட்டுவிட்டுத் தாய் எங்கும் செல்ல மாட்டாள். அதுவும் வண்டி ஓடும்போது தூளி ஆடிக் குழந்தைக்கு மண்டையில் எங்காவது அடி பட்டால்? ஆகவே தாய் பக்கத்திலேயே இருப்பாள். கணவன், மனைவி இருவருமாகவே வண்டியோடு பாரம் ஏற்றிக் கொண்டு வந்திருப்பார்கள். பாரத்தை இறக்கிவிட்டுக் கீழே எங்கோ வண்டிக்கு அருகேயே மர நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கலாம்; அல்லது சாப்பாடு சாப்பிடலாம். வண்டியின் மேலும் ஒரு கண் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குபணிக்குச் செல்வோர் போகும் வண்டி. தாய் ஒரு வேளைக் குழந்தையை மறந்து விட்டாளோ.
பதிலளிநீக்குசென்னைப்பித்தன் என்றாலே ஹப்பா கதைதான்
பதிலளிநீக்குசூப்பர்! எங்களுக்குத் தோன்றியது அதே செபி சார்... சைட்ஓபன் ஆகி வரும் போது செபி சாரின் கருத்துதான் வந்து நின்னுக்கிட்டு சுத்தோ சுத்தோன்னு சுத்திச்சு.....நாங்க கருத்து போடவே முடியல....அப்ப பார்த்தது
ஓடா வண்டியில் உன்னை உறங்கவைத்து
பதிலளிநீக்குஒற்றைக்கண்ணை உன்மேல் ஒட்டவைத்து
ஓடுகிறது கண்ணே ஒவ்வொருநாளும் எம்பிழைப்பு…
நடைபாதைக் கடையைக் கட்டும்வரையோ…
நடையைக்கட்டச்சொல்லி நாட்டாமை வரும்வரையோ…
தூசுதும்பு அண்டாது, துர்தேவதை கனவிலும் அண்டாது
குலதெய்வமெல்லாம் உன்னைக் குழுமியிருக்க…
பயமில்லாது உறங்குவாயென் பைங்கிளி..
அந்த வண்டியில் வேலை ஆட்கள் வந்திருப்பார்கள். இப்போதெல்லாம் வேலை ஆட்களை இது போன்று வண்டிகளில் கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கேயே இருந்து மீண்டும் மாலை கூட்டிக் கொண்டு சென்று ஏற்றிய இடத்த்ல் விடுவது வழக்கமாகி வருகின்றது. அப்படித்தான் இருக்கும் இந்தக் குழந்தை தூளியில் ஆடுவதும்...
பதிலளிநீக்குதூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே...
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல தூக்கத்தின் காரணமாக தூங்கிக் கொண்டிருக்கும் தன்
குழந்தை திடீரென்று விழித்துக் கொண்டு , கீழிறங்கி நடந்தோ, தவழ்ந்தோ ஏதேனும் அசம்பாவிதமாக நடந்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் கண்டிப்பாக ஒரு தாய்க்கு இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே அருகிலேபே ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டபடி அந்த குழந்தையின் மேல் கவனமாகத்தான் இருப்பாள். அப்படியே இருக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்போம். வேறு விதமாக எதையும் யோசிக்க மனம் நடுங்குகிறது...
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட நடமாடும் வீடு ஸூப்பர்
பதிலளிநீக்குமரங்கள் காணாமல் போனதாலோ....இல்லை மரத்தடியில் தூளி கட்டி வைத்தால் குழந்தைத் திருட்டு பயமோ....
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குஆ"சிரி"யர்கள் எல்லோரும் சுண்டல் "திங்க"றதிலே மும்முரமா இருக்கீங்க போல! இன்னிக்கு எங்களுக்கு ஒண்ணும் "திங்க"க் கொடுக்கலை! :)
பதிலளிநீக்குதற்காலிகத் தொட்டில். மரக்கிளையை விட இங்கே பாதுகாப்பு என நினைத்திருக்கலாம். ஓட்டுநருக்கும் தெரிவித்து விட்டே செய்திருப்பார், அருகிலேதான் வேலையாக இருப்பார் என நம்புவோம்.
பதிலளிநீக்கு